சாக்லட் கேக் (கப் அளவு)/chocalate moist cake with cheese topping

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சாக்லட் கேக் (கப் அளவு)

தேவையான பொருட்கள்

(A)
1.கொக்கோ பவுடர்-1கப்
2.தண்ணி பால்@condenser milk-1கப்
3.கெட்டி பால்@milkmaid-1கப்
4.சமையல் எண்ணெய்-1கப்
5.சீனி-1கப்

(B)
6.கோதுமை மாவு-1 1/2கப்
7.பேக்கிங் பவுடர்-1 தே/கரண்டி
8.சமையல் சோடா-1தே/கரண்டி

(C)
9.முட்டை-3

10.OVELLET-1தே/கரண்டி


Topping: (D)
1.CREAM CHEESE-250GM
2.தண்ணி பால்@condenser milk-1/4 CUP
3.கெட்டி பால்@milkmaid-4 Tb/spoon


செய்முறை


1. (A+C) பொருட்களை மிக்சியில் கொடுத்து இரண்டு சுற்று அடித்துக் கொள்ளவும்.

2.கோதுமை மாவை (B) சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

3.மிக்சியில் அடித்து வைத்த கொக்கோ கலவையை கோதுமை மாவுடன் கலந்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

4.Steamer @
இட்லி பாத்திரத்தில் நீர் நிரப்பி கொதிக்க விடவும்.

6.கலந்து வைத்த கேக் கலவையை அதற்கு தோதான பேக்கிங் பான்
அல்லது பாத்திரத்தில் ஊற்றி 1 மணி நேரம் வேக விடவும்.

7.பாத்திரத்தின் மேல் மூடி அல்லது அலுமினிய தாளைக் கொண்டு மூடி விடவும்.இது நீராவி கேக் மேல் படாமல் இருக்கச் செய்யும்.

8. (D)-பொருட்களை மிக்சியில் 3 சுற்று அடித்து கேக் வெந்தவுடன் அதன் மேல் அழகாக ஊற்றி ப்ரீசரில் வைத்து குளிர்ந்தவுடன் பறிமாறவும்.
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Woww 😋😋😋😋
செய்து பார்த்துட்டு சொல்றன் ப்பா💝💝
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN