பெண்ணே என் வாழ்வில் நீ புயலென நுழைந்தாய்....

என் கனவினை வென்றாய்... அளவிலா காதலை என்

மீது கொண்டாய்...

உன் மீது என் மனம் நேசம் கொண்டதை மறுக்கிறேன்...

அதை நீ அறியாமல் மறைக்கிறேன்...

எனக்கு தாயுமானவளே.....

எந்தன் சேயை சுமப்பவளே....

நான் உன் மீது கொண்ட காதலை வெளிபடுத்த வழி தெரியாமல் தவிக்கிறேன்....

உன் தாயுமானவன்...

டாக்டர் மித்ராவைச் சந்தித்து வந்தது முதலே மயூரி அமைதியற்று காணப்பட்டாள்...

திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்திருந்தாலும் இன்று வரை அவளுக்குப் பிள்ளை வரம் கிடைக்கவில்லை...

அவள் ஏறி இறங்காத கோவிலில்லை.. வேண்டாத தெய்வமில்லை... இருந்தும் அவளது மனக்குமுறலுக்குப் பலன்தான் இன்று வரை கிடைக்கவில்லை...

மயூரியின் கணவன் கௌதம்...

அவளைத் தன் உயிரும் மேல் நேசிப்பவன்...

மயூரியும் கௌதமும் வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் புரிந்தவர்கள்... திருமணத்திற்குப் பின் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தாலும் குழந்தை பேறு இல்லையென்று மயூரி மிகவும் துவண்டு போனாள்...

(வோய் பேபி வோய் அதான் கௌதம் இருக்கான்ல அவனே உனக்கொரு பேபி தான செல்லம்)

அனைத்து வழியும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில்தான் கௌதம் மயூரியை மித்ராவிடம் அழைத்து சென்றான்...

அவர்கள் இருவரையும் பரிசோதித்த மித்ரா கௌதமிடம்தான் பிரச்சனை இருப்பதாகவும் மயூரி தாயாக நூறு சதவிகித வாய்ப்பு உள்ளதாக கூறினாள்...

"மிஸ்டர். கௌதம் உங்களுக்கு ஸ்பெர்ம் கௌன்ட் தேவையான அளவு இல்ல... அதுனாலதான் உங்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்ல... நீங்க குழந்தைய தத்தெடுக்கனும்னா எடுத்துக்களாம்... அப்டியில்ல மிஸஸ் மயூரி தன் கர்பத்துல ஒரு கருவ சுமக்கனும்னு ஆச பட்டாங்கான்ன அதுக்கும் ஒரு வழியிருக்கு...

வேற ஒருத்தவங்க டொனேட் பண்ண ஸ்பெர்ம உங்க கற்பபைல செலுத்தறது மூலமா நீங்க தாய்மை அடையலாம்...", என்றாள் மித்ரா மருத்துவராக...

மித்ராவின் கூற்றைக் கேட்டு கௌதம் முகத்தில் சோகம் இழையோடியது... மயூரி வேறொருவரைத் திருமணம் செய்திருந்தால் குழந்தையை ஈன்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பாள் என பைத்தியகாரதனமாக எண்ணினான்...

தன் காதலால் அவளின் வாழ்வையே சூன்யமாக்கியதாய் துவண்டு போனான்...

அதை மயூரியிடமும் பகிர்ந்துக் கொள்ள அவள் பொங்கிவிட்டாள்...

"இங்க பாரு கௌதம் உன்ன நான் லவ் பண்ணி குடும்பத்த எதிர்த்து கல்யாணம் செஞ்சிகிட்டான்... வாழ்க்கைல என்ன கஷ்டம் வந்தாலும் ஒன்னா சேர்ந்து பேஸ் பண்ணுவோம்ற நம்பிக்கைல தான எனக்கு தாலி கட்டுன... இப்ப உனக்கு ஒரு பிரச்சனைனோ விட்டுடு போயிடுவன்னு நினச்சியாடா... என்மேல நீ வெச்ச நம்பிக்க அவளோதான் இல்ல...

சரி இதே ப்ராபலம் எனக்கு இருந்து நான் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாதுனு சொல்லிருந்தா என்னை விட்டுடு போயிடுவியாடா.... பதில் சொல்லு...", கோவத்தில் மயூரிக்கு சுவாசம் தடைபட்டு போனது... சுவாசிப்பதற்கே திணரினாள்...

கௌதமிற்கு மயூரியைக் காண உள்ளம் கனத்துப் போனது...

தன்னைக் காதலித்த ஒரே காரணத்தால் அவள் எவ்வளவு துன்பங்களைத்தான் எதிர்நோக்குவாள்...

கௌதம் மயூரியை மீண்டும் மித்ராவைக் காண அழைத்துச் சென்றான்... கௌதமின் ஆசைக்காக தானமாய் கிடைக்கப்பெற்ற விந்தனுவின் மூலம் கருத்தறிக்க மயூரி சம்மதம் தெரிவித்தாள்...

இருப்பினும் அவள் மனதை ஏதோவென்று நெருஞ்சி முள்ளாய் கீறி காயப்படுத்தியது...

'பெற்றால் தான் பிள்ளையா...' எனும் கேள்வி வேறு அவளை நொடிக்கொரு முறை தீண்டிச் சென்றது... இப்படியே இரண்டு வாரம் கழிந்தது... சிகிச்சைக்காக அன்றுதான் மித்ராவைக் காணச் செல்ல வேண்டும்... மயூரி ஏனோ பதட்டமாகவே காணப்பட்டாள்...

சிகிச்சையை எண்ணிதான் அச்சம் கொள்கிறாள் போலும் என்று நினைத்தவனாய் கௌதம் மயூரியைத் தனியே விடாது அவளுடனே இருந்தான்... மயூரியோ ஏதோவொரு சிந்தனையில் மூழ்கியிருந்தாள்...

மித்ராவின் அறையை நெருங்கும் பொழுது அவளது இதயத்துடிப்பு அதிகரித்தது...

ஏனோ தவறு செய்வதாய் உள்ளம் கூக்குரலிட்டது...

கௌதமிற்கு சொந்தமான உயிரைத் தவிர்த்து வேரொரு உயிரைச் சுமக்க அவள் மனம் உடன்படவில்லை...

இதை அவனிடம் எப்படி சொல்வதென்றும் புரியவில்லை...

மித்ராவின் அறையில் இவர்கள் நுழையவும் அழகிய இளம் யுவதி ஒருவள் மயூரி மேல் மோதவும் நேரம் சரியாய் இருந்தது...

அவசரகதியில் கீழே விழுந்த தன் மருத்துவ கோப்புகளைச் சேகரித்தவள் அந்த பெண்ணைப் பார்த்து புன்னகையைச் சிந்திவிட்டு சென்றாள்...

மித்ரா தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும் டாக்டர். ஜானகியைச் சென்று காணுமாறு சொன்னது செவிகளைத் தீண்டினாலும் கருத்தில் பதிய மறுத்தது...

மயூரியின் தோற்றத்தில் மாற்றத்தை உணர்ந்து கொண்டவனாய் கௌதம் அவளைத் அந்த மருத்துவமனையிலிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்...

மயூரி சில நொடிகள் கௌதமின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

எப்பொழுதும் போல் அவன் கண்களில் நிறைந்திருந்த காதலில் தன்னைத் தொலைத்தவளாக,

"கௌதம் பெற்றால்தான் பிள்ளையா...", என்றால் தலை குனிந்தபடி...

இத்தனை நாளாய் தன்னை தவிக்க செய்த கேள்விக்கு தன்னவனிடமிருந்து விடைக் காண முயன்றாள்...

கௌதமும் அவளது மனநிலையை புரிந்து கொண்டவனாக

"நீ என்ன நினைக்குறடா", என்றான் மென்மையாக...

அவனது கரிசனத்தில் மயூரியின் கண்கள் பனித்தது...

"நமக்கு இந்த பேபி வேணாமே... நான் ஒரு உயிர சுமந்தா அது உனக்கு மட்டும் சொந்தமானதா இருக்கனும்...", என்றாள் விசும்பிய படியே...

இவளின் செயல் ஏனோ கௌதமின் முகத்தின் புன்னகையை விளைவித்தது... இவளே இன்னும் சிறு குழந்தைதான் இதில் இவளுக்கு இன்னொரு குழந்தையா என்றெண்ணினான்...

"சரி உனக்கிதுல விருப்பம் இல்லனா பரவால. இந்த யோசனைய விட்றலாம்..." அவளின் தலையை கோதியப்படி கூறினான்...

"உனக்கு என்மேல கோவம் வரலையாடா...", என்றாள் பாவமாக

இந்த கேள்வியில் வாய்விட்டே சிரித்தவன்,

"ஏய் லூசு... ஐ லவ் யூடி", என்றான்...

கௌதம் மயூரியின் நிலை இவ்வாறு இருக்க மயூ தன்னுள் நிகழ்ந்த மாற்றத்தை உணர்ந்து கொள்ள தவறினாள்...

தன் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நிலைக் கொள்ளாமல் அலைந்து கொண்டிருந்த அவள் மனது தன்னுள் ஓர் உயிர் ஜனித்ததை புரிந்து கொள்ளவில்லை...

மயூவைப் பரிசோதித்த மித்ரா அவள் தாய்மையுற்றிருப்பதை தெரிந்து கொண்டாலும் அதை உறுதிப்படுத்த எண்ணியே மயூவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தாள்...

மயூ கருவுற்றிருக்க யார் காரணமாக இருக்கும் என்ற யோசனையில் இருந்தவளை களைத்தது அந்த குரல்...

"ஹாய் மித்து... என்ன பண்ணிட்டு இருக்க...", கலகலப்பாக அந்த அறையில் நுழைந்த ஜானகி மயூவைக் கண்டு தன் நடையை நிறுத்தினாள்... ஜானகியின் முகம் யோசனையில் சுருங்கியது...

"மித்து இந்த பொண்ணு மயூரிதான??"

"ஆமாம்.. உனக்கு மயூரிய எப்டி தெரியும்... நீ இங்க வந்ததுக்கு அப்புறம் மயூ இங்க ரெம்ப வரலையே...", என்றாள் மித்ரா யோசனையாக...

"அட என்னப்பா நீ... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பொண்ணுக்குச் தான மருத்துவ முறையில விந்தணுவ செலுத்துனோம்... அதுக்கடுத்து இந்த பொண்ணு செக்கப்க்கு வருவானு பார்த்தன்... பட் அவ வரவே இல்ல..", பேசிக் கொண்டே போனவளின் குரல் மித்ராவின் அதிர்ந்த குரலில் மட்டுப்பட்டது...

"என்னடி சொல்ற... இந்த பொண்ணுக்கு விந்தணுவ செலுத்துனுயா... இவ அந்த மயூரி இல்லடி... இந்த பொண்ணுக்கு இன்னும் கல்யாணமே ஆகல... இவளோ சின்ன பொண்ணு எதுக்கு இப்படி ஒரு சிகிச்ச எடுத்துக்க போறான்னு நீ யோசிக்க வேணாமா??? என்ன ஜானகி...",கோபமாக ஆரம்பித்தவள் துவண்டுபோன குரலில் முடித்தாள்...

ஜானகியோ மித்ராவின் கேள்விகனையில் ஸ்தம்பித்துப் போனாள்... அன்று மயூரி என்ற பெயரைக் கேட்டவுடன் மற்றதைப் பற்றி யோசியாது சிகிச்சையைத் தொடங்கிய தன்னை எண்ணி வெட்கித் தலை குனிந்தாள்...

"மித்ரா..."

"ப்லீஸ் ஜானகி கொஞ்ச நேரம் என்னையும் மயூவையும் தனியாவிடு...", என்றவளின் குரலிலிருந்த உணர்ச்சி போராட்டத்தை அறிந்து கொண்டவளாக ஜானகி சத்தமின்றி அவ்வறையை விட்டு வெளியேறினாள்...

மயூவின் அருகில் அமர்ந்த மித்ராவிற்கு கண்கள் பனித்தது...

"ஐ'ம் சாரிடா. என்னோட கேர்லஸ்னாலதான் இப்ப உனக்கு இப்டி ஆகிருக்கு... இத நீ எப்டி எடுத்துப்பனு தெரியலையே... சின்ன பொண்ணுடா நீ... ஆகாஷ்க்கு நான் என்ன பதில் சொல்றது... இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா அவன் தெளிஞ்சிட்டு வரான்... திரும்பவும் அவனோட கூட்டுக்குள்ளயே சுருங்கிட்டா என்ன பண்றது... கடவுளே நீ தான் எல்லாம் நல்லபடியா நடக்க அருள் புரியனும்...", மித்ராவின் மனம் கடலலை போல் நிலையில்லாமல் தவித்தது...

தன் சிந்தனையின் ஆழத்தில் மூழ்கியிருந்தவளைத் தட்டி எழுப்பியது ஆகாஷின் கடினக் குரல்.

"அக்கா என்னோட கேள்விக்கு பதில் சொல்லிட்டு உன்னோடு கனவுலகத்துக்குப் போ... என்னோட கேள்விக்கு பதில் வேணும்... மயூக்கு என்னாச்சி... அவளோட கர்பத்துக்கு யார் காரணம்... உனக்கு தெரிஞ்சத சொல்லுக்கா... கண்டிப்பா உனக்கு தெரிஞ்சிருக்கும்..." ஆகாஷின் குரல் நடுங்கியது... தன்னவளுக்கு என்னானது என அறிந்து கொள்ளும் தவிப்பு அவன் குரலில் தெரிந்தது...

ஆகாஷிடம் எப்படி இதைப்பற்றி கூறுவது... அவன் இதை எவ்வாறு எடுத்துக் கொள்வான்...

அக்காவே என்றாலும் தன் மீது கோபம் கொண்டால் ஒருவழியாக்கி விடுவானே என மித்ராவினுள் குளிர் பரவியது...

"அது வந்து ஆகாஷ்...அது வந்து...என்னனா..." மித்ராவின் வாய் தந்தியடித்தது...

"அக்கா வந்து போயினு இழுக்காத... என்னனு சொல்லு... அக்காவாச்சேனு பார்க்குறன் இல்லான என்னாவும்னு தெரியும்ல..." ஆகாஷ் அவளை முறைத்துப் பார்த்தான்...

இவனிடமிருந்து இதை மறைத்து என்ன பயன்... ஒருவகையில் இவனும் இதில் சம்மந்தப்பட்டுள்ளான் என்று எண்ணினாள்...

மித்ரா ஆகாஷிடம் நடந்த அனைத்து சம்பவத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக விளக்கி கூறினாள்...

மித்ரா கூற கூற ஆகாஷினுள் பல மாற்றங்கள் வந்து போயின...

(ஹிட்லர் இஸ் பேக் பாவம் மித்து அக்கா நீ உன்ன கைமா பண்ண போறான் இரு

தன் தம்பியின் முகத்தை காண அஞ்சியவளாக தன் கை விரல்களை ஆராயும் பாவணையோடு அனைத்தையும் சொல்லி முடித்தாள்...

ஆகாஷிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லாமல் போகவே அவனை நிமிர்ந்து பார்த்தாள்...

ஆகாஷ் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவது அவனது சிவந்திருந்த கண்களிலே தெரிந்தது...

மித்ரா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு "ஆகாஷ் திட்றதுனா திட்டிரு... இல்ல அடிக்கனும்னா கூட வலிக்காம ரெண்டடி அடிச்சிரு... பட் இப்டி சைலண்டா இருக்காத... பயமா இருக்குல..." என்றாள்...

(செய்றதையும் செஞ்சிட்டு உனக்கு நக்கலு கேட்குது)

ஆகாஷ் ஏதும் பேசாது அவளையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்....

மித்ரா மீண்டும் பேச்சை தொடங்க "ஆகாஷ்"

"கொஞ்சமாவது அறிவிருக்கா அக்கா உனக்கு... நீயெல்லாம் என்னாத்துக்கு டாக்டர்க்குப் படிச்ச..." ஆகாஷ்

"சாரிடா.. அக்கா பாவம்டா.. இப்ப நான் என்னதான் பன்றது..." மித்ரா

"இந்த பில்டிங்ல இருந்து வெளிய குதிச்சிரு..." ஆகாஷ்

"டேய் நான் சீரியஸா பேசிட்டு இருக்கன்... நீ என்னனா கமெடி பண்ணிட்டு இருக்க..." இம்முறை முறைப்பது மித்ராவின் முறையாயிற்று...

"அக்கா வேணா கடுப்படிக்காத... உன் மேல செம கோவத்துல இருக்கன்... மயூகிட்ட இந்த விஷயத்த எப்டி சொல்றதுனு யோசிச்சியா... பாவம்கா அவ... இப்டி பண்ணி வெச்சிருக்கிங்க... சரி அந்த பேபிக்கு அப்பா யாரு... அதுவாது தெரியுமா...", இதை கேட்கையில் அவனுள் பல கலவையான எண்ணங்கள் வந்து போயின...

" அந்த பேபிக்கு அப்பா நீ தான் ஆகாஷ்...", மித்ரா சிறுத்துப்போன குரலில் கூற ஆகாஷ் அதிர்ந்தான்...

"அக்கா என்ன சொல்ல வர...", அவனை பல குழப்பங்கள் சூழ்ந்து கொண்டன...

"அது வந்து ஆகாஷ் மயூக்கு ஸ்பெர்ம் டோனேட் பண்ணது நீ தான்... ஸோ மெடிக்கலி அந்த பேபிக்கு நீ தான் அப்பா...",என்றாள் தயங்கியபடி...

(ஜாலி ஜாலி அமுல் பேபிக்கு குட்டி பேபி வர போது.❤❤)

இனி ஆகாஷ் மயூவின் வாழ்க்கை பயணம் எவ்வாறு அமையும்...

கடந்த கால இருளில் வாழும் மயூ....

அவளோட தன் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள துடிக்கும் ஆகாஷ்...

இவர்களின் உறவுக்கு அஸ்திவாரமாய் குழந்தை...

தாய்மை மிளிரும்... ❤

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 09
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.