ஆழி சூழ்ந்த உலகிலே... 10

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
" அம்மா... நான் மகிமா வீட்டுக்கு போயி நோட்ஸ் வாங்கிட்டு வரேன்மா..." வீட்டில் நடக்கும் எதுவும் அறியாத அர்ச்சனா வெளியே கிளம்ப தயாராகி வர அவள் கூறியதில் அச்சமுற்ற லட்சுமி,

"நீ எங்கயும் போகவேண்டாம் அச்சு... நோட்ஸ் தான... நான் போயி வாங்கிட்டு வந்து தரேன்..." கண்டிப்பாக கூறிய அன்னையை புரியாமல் பார்த்த அர்ச்சனா,

"மா... கொஞ்சம் டவுட்டும் கேட்கனும்மா... நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்..."

"இல்ல... இனி நீ எங்கயும் போகக்கூடாது... ஸ்கூல்கு போகும் போது நான் உன்ன ட்ராப் பன்னரேன்... எக்ஸாம் முடிக்கிற வரைக்கும் அங்க இருந்து உன்னை கூட்டிட்டு வரேன்..." கண்டிப்புடன் கூறிய தாய் அவளுக்கு புதிது தான். எப்பொழுதும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்காமல் வீட்டின் உள்ளேயே அடைத்து வைத்து, இதை செய், அதை செய்ய என்று கட்டுப்படுத்தும் ரகம் லட்சுமி இல்லை. அதனால் அர்ச்சனா சந்தேகம் கொண்டாள்.

"அம்மா... என்னம்மா ஆச்சு உனக்கு... நீ இவ்வளவு ரூட்டா பேசி நான் பார்த்ததே இல்லையே..."

"இனி இப்படி தான் இருப்பேன்... உங்கள ப்ரீயா விட்டா தான் அம்மா அப்பாவ ஏமாத்திடரீங்களே..."

"அம்மா என்ன ஆச்சுன்னு ஒழுங்கா சொல்லுமா... அப்பா நீங்களாவது எதாவது சொல்லுங்க..." தன் அன்பு தந்தையிடம் உதவியை நாடிய அர்ச்சனாவை, அவர் அவரின் அருகில் அமர்த்திக் கொண்டு தலையை வருடி விட்டு மெல்ல விசாரிக்க ஆரம்பித்தார்.

"அச்சு... நீ யாரையாவது லவ் பன்னறீயா... உண்மைய சொல்லும்மா... நாங்க உன்னை ஒன்னும் சொல்ல மாட்டோம்...‌" என்று அவர் பாசமாக கேட்க, அர்ஜூன் ஒருமுறை தான் காதலிக்கும் விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல அதை உடனே ஏற்றவர்கள் தன் காதலையும் ஏற்று கொள்வார்கள் என்று நினைத்து அந்த சின்ன பெண் உண்மையை ஒப்புக்கொண்டாள். அவளுக்கு அப்போது நினைவில் வரவில்லை அர்ஜூனின் காதல் தோல்வி.

"ஆமாம்பா... நான் ஒருத்தங்கள லவ் பன்னரேன்... ஒன் சைடா தான்... அவங்க ஓகே சொன்னதும் நான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்..." என்று அப்பாவியாக கூறிய மகளின் நிலை நினைத்து ராஜரத்தினம் வருந்த, வெகுண்டு எழுந்த லட்சுமி அர்ச்சனாவின் கண்ணத்தில் அறைந்து இருந்தார்.

லட்சுமியை தடுத்த ராஜரத்தினம் அழும் மகளை தேற்றி ஆறுதல் கூறி அருகில் அமர வைத்து கொண்டு யார் என்று விசாரிக்க அவள் வாயை திறந்தபாடில்லை. இம்முறை உசாரானவள் அழுத்தமாக அமர்ந்து இருந்தாள்.

ப்ரீத்திக்கு ஏற்ப்பட்ட நிலைமை தன் மகளுக்கு ஏற்பட கூடாது என்று நினைத்த ராஜரத்தினம் ராக்கி மற்றும் ப்ரீத்தி கதையை யாரிடமும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டு கூற, அர்ச்சனா அதை நம்பவும் முடியாமல் புறக்கணிக்கவும் முடியாமல் தவித்தாள்.

இக்கதையையும் பெற்றோரின் உணர்வு பூர்வமான ஆலோசனைகளும் அவளின் காதலை மொட்டாக இருக்கும் போதே வாட செய்தது.‌ தன் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசிவிட்டு அவர்களுக்கு சத்தியம் செய்து விட்டு தன் தோழியை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனாவை சோதிக்கும் விதமாக சக்தி அவளின் எதிரிலேயே நின்றான்.

*************
தன் வீட்டில் நடப்பது எதுவும் அறியாமல் தனது நினைவில் உழன்று கொண்டு இருந்த சிவரஞ்சனியை தட்டி எழுப்பியது லட்சுமியின் குரல்தான்.‌ அவரின் ஆர்ப்பாட்டமான வரவேற்பு குரல் கேட்க வெளியில் வந்து பார்த்தவள் அர்ஜூன் தன்னுடன் யாரையோ அழைத்து வந்து இருப்பது தெரிந்து சம்பிரதாயமாக அவளும் அழைப்பு விடுத்தாள்.

புதிதாக வந்தவன் ராஜரத்திடம் அவரின் உடல்நிலையை பற்றி விசாரிக்க சமையல் அறைக்குள் சென்ற சிவரஞ்சனி பழச்சாறு செய்து வந்து புதிதாக வந்தவனுக்கு கொடுக்க அர்ஜூன் தன் அருகில் இருக்கும் இடத்தை கண்களால் அவளுக்கு காட்டினான். அவன் கூற வருவது புரியாமல் விழித்தவளின் கைகை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்தவன் தொடர்ந்து நண்பனுடன் பேச ஆரம்பித்தான்.

"முகி... இவ சிவரஞ்சனி. என்னுடைய மனைவி. ரஞ்சு... இவன் முகில்வதனன். அசிஸ்டன்ட் கமிஷனரா இருக்கான். ராக்கி விஷயத்தை நல்லபடியா சால்வ் பன்னிட்டான்... இனி பயம் இல்லை..." அர்ஜூன் கூறியதை கேட்ட சிவரஞ்சனி மகிழ்ச்சியுடன் நன்றியாக முகில்வதனனை பார்க்க அவனே நடந்ததை விளக்கினான்.

" சிஸ்டர்... நான் ஜஸ்ட் வினோத்கிட்ட லைசன்ஸ் இல்லாததால அரஸ்ட் செய்து அவன் திங்ஸ்லாம் பிடிங்கி கிட்டு உள்ள தள்ளினேன். எவ்வளவு விசாரிச்சாலும் வாய திறக்க மாட்டிங்குறான். பாஸ்வேர்டு கூட சொல்ல மாட்டிங்குறான்... அழுத்தமா இருந்தான்... சின்ன பையன்கிறதால அடிக்க கூட முடியல... நம்ம அர்ஜூன் தான் நொம்ப நேரமா அவன் லேப்டாப், மொபைல்லாம் நோண்டி வீடியோஸ டிலிட் பன்னான்... ரவின்னு ஒரு ரவுடிக்கு மட்டும் அந்த வினோத் விடியோவ ஷேர் பன்னி வச்சு இருக்கான். அவனை அரஸ்ட் பன்னி விசாரிச்சதுல அவனுடைய ப்ளான் தான் இது எல்லாம்னு தெரிஞ்சது. வினோத் அந்த பொண்ண ஒன் சைடா லவ் பன்னிட்டு இருக்கும் போது அதை தெரிஞ்சிகிட்ட ரவி வினோத்தை இப்படி ஏத்தி விட்டு இருக்கான். வினோத் அவளை அடஞ்சதும் பழிய அவன் மேல போட்டுட்டு அந்த பொண்ண மும்பைல வித்து காசு பார்க்க ட்ரை பன்னி இருக்கான் ரவி... இப்போ ரவிய பழைய கேஸ் ஒன்னுல அரஸ்ட் பன்னியாச்சு... ஆனால் இந்த வினோத் பெரிய இடத்து பையன். அதனால அவனை வெளிய விடவேண்டியதா போச்சு...." என்று முகில் கூறியதும் அவன் கூறுவதை எல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த ராஜரத்தினம் கவலையாக,

"முகி அந்த வினோத்தால இனி அவங்களுக்கு திரும்பவும் எதாவது பிரச்சனை வந்துடுச்சுனா..." என்று கேட்க அவருக்கு புன்னகையை பரிசாக அளித்த முகில், தன் நண்பன் அர்ஜூனை அர்த்தமுள்ள பார்வை பார்க்க அவனும் முகிலை பார்த்து மென்னகை அளித்து கொண்டு தான் இருந்தான்.

"அப்பா ஒரு பழமொழி கேள்வி பட்டு இருக்கீங்களா... சோழியன் குடுமி நம்ம கைலன்னு... அந்த வினோத்தோட குடுமி இப்போ நம்ம கைல இருக்கு... இனி நாம ஆட்டர மாதிரி தான் அவன் ஆடியாகனும்..." என்ற முகில் அர்ஜூனை பார்க்க அர்ஜூன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ஐபோன் எடுத்து காட்டினான்.

"வினோத்தோட மொபைல்... இதுல இருக்குற விடியோஸ்லாம் அவனுடைய அப்பாட்ட காட்டினோம்னா சொசைட்டில அவருடைய ஸ்டேடஸ் போய்டுமேன்னு வினோத்த கொன்றாலும் கொன்னுடுவாரு..." என்று அர்ஜூன் கூறியதும், வீட்டார்க்கு பிறகே நிம்மதி வந்தது.

"ரொம்ப சந்தோஷம்பா... லஞ்ச் டைம் ஆகிடுச்சு... வா வந்து சாப்பிடு முகி... சாப்பிட்டே பேசுவோம்..." லட்சுமி சந்தோஷமாக அவனை அழைக்க

"அம்மா... எனக்காக மித்து சமைச்சு வச்சு இருப்பாம்மா... நான் சாப்பிடலைன்னா வருத்தப்படுவா. நாங்க இரண்டு பேரும் கண்டிப்பா ஒருநாள் வரோம். விருந்தே சாப்பிடரோம்... இப்போ நான் கிளம்பரேன். அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னான். அதான் உடனே வந்தேன்... நான் வரேன்..." என்றபடி முகில் விடைபெற அர்ஜூனும் இனிதான் அலுவலகம் செல்ல வேண்டும் என்று அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

அவனை வாசல் வரை வழி அனுப்ப வந்த சிவரஞ்சனி "அவனிடம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..‌. நான் எதிர் பார்க்கவே இல்லை. இவ்வளவு சீக்கிரம் இந்த பிரச்சினை முடிஞ்சிடும்னு. ரொம்ப சந்தோஷமா இருக்கு..." என்று புன்னகையுடன் கூறிய சிவரஞ்சனியிடம் சம்பிரதாயத்திற்கு கூட புன்னகை இல்லை. தன் மொபைலில் என்னவோ நோண்டிக் கொண்டு லிஃப்டிற்காக காத்து கொண்டு இருந்தான்.

அவனை கண்டு மனதில் அர்ச்சனை செய்தவள் அவனை முறைத்து பார்க்க எங்கே அவன் நிமிர்ந்தாள் தானே அவள் முறைப்பதை தெரிந்து கொள்ள...

லிஃப்ட் திறந்ததும் அதன் உள்ளே சென்றவன் தன் காரை எடுக்க அடித்தளம் செல்ல -1 என்ற குறியீட்டை அழுத்தினான். அது தானாக மூட வரும் போது அதன் கதவை கையால் தடுத்து மூடவிடாமல் செய்த சிவரஞ்சனி, அவன் தற்போது அவளை கேள்வியாக பார்க்கவும் "அந்த வீடியோவ நீங்க பார்க்கல இல்ல..." என்று கேட்க அவளை ஆழமாக பார்த்தவன் "பார்க்காமல் எப்படி டிலிட் பன்ன முடியும்..." என்று கூறினான்.

"பொய் சொல்லாதீங்க... நீங்க பார்த்து இருக்க மாட்டீங்க... எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு..." என்று நம்பிக்கையுடன் கூறியவள் ஏதோ வகையில் அவனை அசைக்க "ராக்கிதான் பார்த்தான்..." என்று கூறியவன் அவள் கையை எடுத்து விட கதவு தானாக மூடிக்கொண்டது.

உதட்டில் உறைந்த புன்னகையுடன் சிவரஞ்சனி வீட்டினுள் செல்ல, சிறிய விஷயமே ஆனாலும் தன்மீது நம்பிக்கை வைத்த தன் மனைவியையும், எதற்கும் தன்னை நம்பாத தன் முன்னாள் காதலியையும் ஒப்பிட்டபடி நடந்தான் அர்ஜூன்.

***********
தனது கருப்பு நிற வெஸ்பாவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த அர்ச்சனாவை வழிமறைத்து நின்றது ஒரு R15. சடன் பிரேக் அடித்து யார் என்று பார்க்க எதிரில் நின்று இருந்தவன் சக்தியே தான்.

"அச்சு... என்ன வீட்டுல இருந்து படிக்காமல் வெளிய சுத்திட்டு இருக்க..." என்று கேட்ட சக்தியை பார்க்கவே தயங்கிய அர்ச்சனா "ப்ரன்ட்ட நோட்ஸ் வாங்க வந்தேன்..." என்று கூறிவிட்டு ஸ்கூட்டியை கிளப்ப முயல, பைக்கில் இருந்து இறங்கி வந்தவன் ஸ்கூட்டி சாவியை எடுத்து கொள்ள அவனை தற்போது பார்த்தவள் "ப்ளீஸ் சாவிய கொடுங்க... வீட்டுல என்னை தேடுவாங்க..." என்றாள்.

அவளை பார்த்து மனம் இறங்கியவன் சாவியுடன் ஒரு பார்க்கர் பேனாவை நீட்டி "நீ இதுல தான் எக்ஸாம் எல்லாத்தையும் எழுதனும்... ஆல் த பெஸ்ட்..." என்று கூறி கொடுக்க, தான் செய்த சத்தியத்தை மறந்து அவனை மகிழ்ச்சியாக பார்த்தவள் அதை வாங்கி கொண்டு "அப்போ உங்களுக்கு ஓகேவா..." என்று ஆர்வமாக கேட்க "நான் எப்போ அப்படி சொன்னேன்..." என்று கூறியவன் அங்கிருந்து அகன்றான்.

சக்தி அங்கிருந்து சென்றதும் அந்த பேனாவின் மூடியை திறந்தவள் உள்ளங்கையில் S என்ற ஆங்கில எழுத்தை எழுதி பார்த்து விட்டு பின் பேனாவை மூடி பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு சென்றாள்.

அவர்கள் இருவரையும் இவ்வளவு நேரம் கோபத்துடன் நோக்கி கொண்டு இருந்த ஒரு ஜோடி கண்கள் வெறுப்புடன் தன் வேலையை தொடர சென்றது...

- இப்பகுதி உங்களுக்கு பிடித்து இருந்தால் தவறாமல் உங்கள் வாக்குகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளவும். அடுத்த அத்தியாயம் வரும் செவ்வாய் அன்று பதிபிக்கப்படும். தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே...
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே... 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN