🌹மையலுடைத்தாய் மழை மேகமே-பாகம் 9🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாள் பிள்ளைகள் மூவரும் காலேஜிற்கு கிளம்பி விட்டனர். காலேஜ் டாப் ரேங்க்கர் நம்ப ருத்ரன் தான். மதனிகாவும் நன்றாக படிப்பாள். இதில் கொஞ்சம் தடுமாறுவது நம்ப அக்கா மயூரா தான். பல சமயங்களில் அவளுடைய அசைன்மென்ட் எல்லாம் அந்தரன் தான் செய்து கொடுப்பான்.

மயூரா விளையாட்டுத்தனமாகவே தான் இருப்பாள். அன்று அப்படி தான், பிரேக் டைம்க்கு தன் தோழி பூரணியுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்துக் கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தாள். மதனிகா அந்தரனுடன் லைப்ரரி சென்றிருந்தாள். தூரத்தில் இருந்தே ருத்ரன் வருவதை மயூரா கண்டுக் கொண்டாள்.

ருத்ரன் அருகில் உரசினாற்ப் போல் வந்து கொண்டிருந்தது ஆல்ரா அழகி ரோஜா. ருத்ரனின் கிளாஸ்மெட் மற்றும் ஒருதலையாக அவன் மேல் காதல் கொண்டு திரிபவள்.அவனோடு ரோஜா வருவதை பூரணியும் பார்த்தாள்.

"ஏண்டி மயிலே இந்த ரோசா புள்ள உன் மாமன் கூட இந்த ஒரசு ஒரசிட்டு வருது. உனக்கு பொறாமையா இல்லையா? அவளை பாரு எப்படி மினுக்கிட்டு வாரானு, நீ என்னானா ஒரு ஜீன்ஸ் ஒரு குர்த்தி, நெத்தி நெறைய பட்டை, அள்ளி முடிச்ச கொண்டைனு சாமியார் மாதிரி இருக்க, இப்படினா எவன் உன்னை சைட் அடிப்பான்? உன் மாமன் கூட உன்னை திரும்பிப்பார்க்க மாட்டான் பாரு '' பூரணி அலுத்துக் கொள்ள, மயூராவோ ரோஜா ருத்ரனுடன் பேசிக்கொண்டு வருவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி அங்கேயே பார்த்துட்டு இருக்க'' பூரணி மயூராவை இடிக்க..

"இல்லடி பூவே, இந்த ரோசாப்பூ வும் அந்த நெட்ட கொக்கும் அப்படி என்னத்த பேசி பேசி சிரிக்காரங்கனு தெரியலடி, அதான் உத்து உத்து அதையே பார்த்துட்டு நிக்கறேன் ''

"எனக்கு என்னமோ இந்த நெட்ட கொக்கு அவகிட்ட "என்ன ஷாம்பு யூஸ் பண்ற ரோஜா, வாசனை ஆளை தூக்குதேனு கேக்கறான் போல, அதுக்கு இந்த அம்மணி,

"நோ நோ ஷான்ப்பூ மிஸ்ட்டர். நெட்டக்கொக்கு, உனக்கு புடிக்கும்னு நானு புலி மார்க் சியாக்காய் தூள் தான் தலைக்கு தேய்ச்சு தேய்ச்சு குளிக்கறேன், ஆனா பாரு இந்த மசுருதான் வளர மட்டேங்குது '' மயூரா ரோஜாக்கு டப்ப்பிங் வாய்ஸ் குடுக்க,

அதே சமயம், ரோஜா காற்றில் கலைந்த முடியை கைகளால் தடவிக் கொடுக்க, காட்சியும், மயூராவின் வாய்ஸ்சும் கச்சிதமாய் பொருந்தி தொலைய, பூரணி அடக்க மாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"ஐயோ மயிலே அந்த வாய்ஸ் டப்பாவை சாத்தி தொலை, ரோசா காதில் விழுந்தால் அவளுக்காக உன் மாமன் வந்து உன் மண்டையை பிளப்பான்.அவன் கொட்டி கொட்டியே உன் மூளை பாதி கரைஞ்சு வெளியாடுச்சு, அப்புறம் மீதியும் போய்டுச்சுனா அவ்வளவுதான். சாத்து சாத்து.'' பூரணி மயூராவின் வாயைப் பொத்தினாள்.

நல்லவேளை, அவர்கள் அந்த பக்கமாக வரமால் வேறு பக்கம் சென்று விட்டனர்.மயூரா பூரணியின் கையை உதறும் வேளை, பூரணி மயூராவின் இடது கை மணிக்கட்டில் இருந்த பச்சையை கவனித்தாள். சூரியனின் ஒளி கிரணங்கள் சிவனின் சூலமும் சேர்ந்தாற்ப் போல் குத்தப்பட்டிருந்த அந்த பச்சை நூதன அழகோடு அவள் மணிகட்டில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

"இது என்ன மயிலே பச்சை குத்தியிருக்க.உன் கைக்கு அழகா இருக்குதே.எங்க எப்படி எனக்குத் தெரியாமல் போய் இத குத்திட்டு வந்தே நீ? '' பூரணி கேள்வியோடு மயூராவின் கையை வருடினாள்.

"ஓ இதுவா? இது நா சின்ன வயசிலில் யாரோ குத்திய பச்சை, சரியா நினைவு இல்லை பூவே, ருத்ரன் வலது கையில் கூட இது மாதிரி தேவியின் சூலத்துடன் மயிலிறகு பின்னின மாதிரி டாட்டூ இருக்கும். அம்மாவை இது பத்தி கேட்டு இருக்கேன்,யாரோ பச்சைக் குத்திற குறத்தி எங்க ரெண்டு பேருக்கும் நாங்க அடம் புடிச்சு கேட்டதால் குத்தி விட்டதா சொன்னாங்க. மது இது மாதிரி கேக்கலயாம், அதனால் எங்க இருவருக்கும் மட்டும்தான் இந்த டாட்டு இருக்கும்.லாங் ஸ்லீவ் போடறது னாலே இது யாருக்கும் தெரியாது பூவே '' மயூரா பச்சையை வருடியவாறு கூறினாள்.

பூரணிக்கு ஏதோ புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது. அப்போது அவர்களைக் கடந்து ஒரு ஜூனியர் காதல் ஜோடி கடந்து செல்ல,

"இங்க பாரு, காலேஜ் வந்ததும் காதலும் வந்துடுது இதுங்களுக்கு.நீயும் தான் இருக்கியே, சாம்பிராணி சாம்பிராணி.உனக்காய் ஒருத்தன தேட திறமை இல்லை, அப்படியும் உன் அலங்கோலத்தைப் பார்த்து அந்த அபூர்வன் ப்ரபோஸ் பண்ணான். அவனை காய்ச்சு காய்ச்சு கந்தல் ஆக்கி அனுப்பிட்ட. நீ லைப் லாங் சாமியார் தாண்டி. தத்தி தத்தி'' பூரணி மயூரா தலையில் குட்டு வைக்க '

"ஐயோ வலிக்குது பூவே, நான் என்ன பண்ண அவனும் சீயக்காய் யூஸ் பண்றியா ஷாம்பு யூஸ் பண்றியானு என்கிட்ட வழிஞ்சா, எனக்கு இதெல்லாம் புடிக்காதுனு உனக்கு தெரியாதா? இப்ப என்ன நான் லவ் பண்ணனும். அவ்வளவு தானே? பண்ணிட்டா போச்சு. நீ பார்த்து கை காட்டுற ஆளை நான் லவ்வி காமிக்கிறேன். அது காட்டு பன்னியா இருந்தாலும் சரி, வீட்டு பூனையா இருந்தாலும் சரி.எவ்ளோ பெட் வைக்குற?''மயூரா சவால் விட,

பூரணியும்"அட கிறுக்குபய புள்ள,நீ ஜூவில் இருக்க வேண்டியவள்.என் கிரகம் உன்னை வெச்சு மார் அடிக்கிறேன்.நீ எந்த பன்னியையும் விரும்ப வேண்டாம்.நம்ப காலேஜ் ரோமியோ,அதான் உன் நெட்ட கொக்கு மாமனை லவ் பண்ணி காமி பார்க்கலாம். அப்படி எண்ணி ஒரு மாசத்தில் நீ இந்த பெட்ல வின் பண்ணிட்டா அடுத்த ஒரு வருசம் உன் அசைன்ட்மென்ஸ்லாம் நானே செஞ்சி தரேன்.இது இந்த பாண்டா கரடி மேல் சத்தியம் '' மரத்தின் அருகில் இருந்த கரடி சிலை மேல் பூரணி சத்தியம் வைத்தாள்.

இப்பொழுது மயூராதான் அதிர்ந்து விட்டாள்."என்னது அந்த சிடுமூஞ்சி நெட்ட கொக்கை நான் காதலிக்கறதா? அடியே பூவே என்னை தவிர அவன் மித்தவங்கள் கிட்ட இளிச்சு இளிச்சு பேசுவான். என்னை பார்த்தால் மட்டும் அவன் பல்லுக்கு என்ன கேடு வருமோ தெரியாது. சும்மாவே அவன் கொட்டி கொட்டி மூளை வேற முக்கால் பங்கு டேமேஜ் ஆயிடுச்சு, இருக்கறத்துக்கும் ஆப்பு வைக்கிறயா நீ, கிராதகி '' மயூரா பொரிய ஆரம்பித்தாள்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது, நீதான் ஆரம்பிச்ச, நான் சொல்லிட்டேன், வாக்கு மீறனே, பாண்டா கரடி உன்னை கொதறிடும் ஆமா'' பூரணி மல்லுக்கு நிக்க , மயூரா அவளை பரிதாபமாய் பார்த்தாள்.

என்றாலும் இது மானப் பிரச்னை அல்லவா, தலையை சிலிர்த்துக் கொண்டு," ஓகே டீல், எண்ணி ஒரே மாசம் உன் கண்ணு முன்னாடி நெட்டக் கொக்கை போரபோஸ் பண்ண வைக்கிறேன் பாருடி என் ஜிங்க்லீ '' மயூரா அலட்டலாய் சொன்னாள்.

அவள் வார்த்தையின் விபரீதம் புரியாமல் பேச , அதுவரை அவளைக் கண்டுக் கொள்ளாத காதல் விதி அங்கனமே அவள் விதிக்கணக்கை புரட்ட ஆரம்பித்தது.தைரியமாக வெளியே சொல்லி விட்டாலும் உள்ளுக்குள் ருத்ரனை நினைத்தால் அவளுக்கு உதறலெடுத்தது.

இனி விதியாடும் சதிராட்டம் பார்ப்போம்..
 

Author: KaNi
Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே-பாகம் 9🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN