காதலில்.உள்ளச்கள்.பந்தாடுதே பகுதி 23

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Epi 24

அழகிய வெள்ளி நட்சத்திரங்களாக ஆங்கங்கே வர்ண விளக்குகள் ஒளிர்ந்து ஒளி வீசி கொண்டிருக்க கிருபாகரனின் வருகைக்காக மதுவந்தி காத்துக்கொண்டு இருந்தாள்.

'டேய் கிருபா மங்கி போனை எடேன் டா எவ்வளவு நேரம் தான் கால் பண்றது.' என்று அவனை அரச்சனை செய்தபடியே மறுமுறை அவனுக்கு அழைப்பை விடுக்க அது நாட் ரீச்சபல் என்று கூறி நின்றது.

சரி வீட்டுக்கு போன் பண்ணுவோம் என்று நினைத்தாள். 'வேண்டாம் வேணடாம் என்ன ஏதோன்னு அம்மாவும் பயந்துடுவாங்க இன்னொரு முறை அவனுக்கே போன் பண்ணலாம் என்று தனக்குள்ளே பேசியவள்'. அலைபேசியை பார்க்க அதன் பேட்டரி பவர் இப்பவோ அப்பவோ என்று உயிர்போகும் நிலையில் இருந்தது. ஒருவழியாய் மறுபடி அவனுக்கு அழைக்க அது இப்போது ஸ்விச் ஆப் ஆகியது என தகவல் கொடுத்தது.

'மணி 8 ஆக போகுது நான் வரலன்னு அம்மா இன்னும் எனக்கு ஒரு கால் கூட பண்ணல அதிசியமா இருக்கு... ஒரு அரைமணி நேரம் லேட் ஆனாலே கால் பண்ணுவாங்க இதுவரையும் கால் பண்ணல' என்று சந்தேகத்துடனே அன்னைக்கு அழைக்க அது முழு அழைப்பு ஒலித்து அடங்கியது... இது வேலைக்கு ஆகாது என்று ஒரு உள் உணர்வு தோன்ற அங்கயே நின்று கொண்டு இருந்தவள் மெட்ரோவில் செல்லலாம் என சப்வேயை நோக்கி நடந்தாள்.

சப்வேக்குள் நுழைந்ததுமே "ஹாய் மது" என்று பின் இருந்து ஒரு குரல் கேட்டது. அந்த குரலை வைத்தே வந்தது சேம் தான் என்று கண்டு கொண்டவள் அவளுக்கு கேட்காத மாதிரியே விறுவிறுவென நடந்து சென்றாள்.

"ஹேய் டார்லிங்" என்று மதுவின் பின்னே அவளின் நடைக்கு ஈடு கொடுத்து அவளை அழைத்தபடி வந்தான் சேம்.

பார்க்க சற்று உயரமாய் இருந்தவன் நாகரீகம் என்ற பெயரில் கைகளில் கழுத்தில் என்று விதவிதமாய் பச்சை குத்தி இருந்தவனின் கண்களில் அரை போதை நிலையில் இருந்தற்காக அறிகுறிகள் தெரிந்தது.

இவன் தொல்லை இங்கேயுமா என்று அலுத்துக் கொண்டவள் "வாட் சேம் வாட்ஸ் யுவர் பிராப்ளம்.... இப்போ எதுக்கு என்ன பாளோவ் பண்ற" என்று அவனிடம் வல்லென்று விழந்தவள் இன்னும் நடையை துரிதபடுத்தினாள் 'டேய் மங்கூஸ் மண்டையா நீ மட்டும் கரெக்ட் டைமுக்கு வந்து இருந்தா இந்த தேவாங்கு மூஞ்சு வந்து பேசி இருக்குமா' என்று கிருபாவை வறுத்துக்கொண்டே தான் நடந்தாள்.

'ஓ....... ஷிட் மை ஏஞ்சல் நடந்து போறாளே.... வை டியர்..." என்று வார்த்தைகள் குளற அவளை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே கேட்டவனின் கண்கள் ஒருவிதமான வெறியுடன் அவளை பார்த்தது.

'படுபாவி மூஞ்சியா பாரு எப்படி திங்கிறாமாதிரி பாக்குறான்' என்ற கடுப்பில் "ஆங் வேண்டுதல்" என்று பற்களை கடித்தபடி மொத்த ஆத்திரத்தையும் பதிலில் அடக்கி கூறினாள்.

கொஞ்சம் இடைவெளிவிட்டு நடந்து வந்தவன் ஆளில்லாத சப்வே என்று தெரிந்து விட்டதும் நெருங்கி வந்தான். "என்ன பேபி வேண்டுதலா?" என்று கேள்வி கேட்பது போலவே இன்னும் உடலை உடல் உரசுவதுபோல் வந்து அவளின் கைபிடித்துவிட

அவனின் கையை உதரி விட்டவள் பட்டென அவன் கன்னத்தில் தன் கரத்தினை பதித்து அவனை கோபத்துடன் பராத்தாள் "திஸ்ஸிஸ் யுவர் லிமிட் பிளிடி இடியட் என் பின்னாடி வர்ர வேலை வைச்சிக்காத பொறுக்கி... மைன்ட் இட்" என்று அவனை திட்டியவள் செல்ல எத்தனிக்க

ஏற்கனவே அவள் மேல் ஆசை கொண்டவன் மது அறைந்ததும் அவள் மேல் அளவில்லாத கோவமும் சேர்ந்து விட அவளை போக விடாமல் தடுத்து அவளை முரட்டு தனமாய் அனைக்க முற்பட்டான்.

"சேம்... சேம்... என்ன பண்ற.. என்னை விடு சேம்... நீ பண்றது பெரிய தப்பு உன்னை பார்த்தாலே ஈரிடேட்டிங்கா இருக்கு... பீளீஸ் சேம் என்னை விட்டுடு" என்று அவள் கத்தி கொண்டு அவன் கைகளில் இருந்து வெளிவர போறாடினாள்.

அவளை அணைக்க வெறிகொண்டவனின் கைகளில் இருந்து திமிரியவள் அவனை தள்ளிவிட்டு ஓட முற்பட்டாள். அந்த இரவு வேலையில் இரு உருவங்கள் பேசிய படி சப்வேக்குள் நடந்துவந்தவர்களை பார்த்தவன் அவளை துறத்தி பிடிக்க போகும் எண்ணத்தை கைவிட்டு விட இது தனக்கு கடவுளாய் ஏற்படுத்திய சந்தர்ப்பம் என்று நினைத்தவள் தன்னால் முடிந்த அளவு வேகமாய் ஓடினாள். அவள் போவதையே வெறியோடு பார்த்தவன் 'உன்னை விடமாட்டேன் டி' என்று மனதில் வஞ்சகமாய் நினைத்தவன். "இவனுங்களாள நீ தப்பிச்சிட்ட இன்னொரு நாள் நீயா வருவடீ வரவைப்பான் இந்த சேம்" என்று வந்த வழியே சென்று விட்டான்.

அதற்கு முன்னமே இந்த காட்சியை கொஞ்சம் இருட்டில் தெளிவிள்ளாமல் பார்த்திருந்தான் ஜெய். நண்பனுடன் ஊரை சுற்றி பார்த்தவன் இரவு உணவையும் முடித்துக்கொண்டு அவன் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்ல டிரையினை பிடிக்க சப்வேக்குள் நடந்து வந்தவர்கள் இதனை பார்த்து விட அதை தடுக்க போனான் ஜெய்.

அவனை போகவேண்டாம் என தடுத்த ஆல்வின் "வேண்டாம் ஜெயந்த் இங்க லவ்வர்ஸ் கூட இப்படித்தான் நடந்துக்குவாங்க இங்க இது எல்லாம் சகஜம் யாருன்னு என்னன்னு தெரியாம இங்க கைய வைச்ச தப்பாகிடும் வைட்" என்று அவனுக்கு கூறி கொண்டிருந்தான்.

ஆனாலும் ஜெயந்திர்க்கு ஏதோ தவறு இருப்பதாய் தோன்ற அந்த இருட்டிலும் அவர்களையே கண்காணித்தபடி வர அவளின் உடல் மொழியை வைத்து நிலமையை யூகித்தவன் "நிச்சயம் இது லவ்வர்ஸ் மேட்டர் கிடையாது ஆல்வின் சம்திங் ராங் தீ ஸ் இஸ் பிக் பிராப்ளம் கம் பார்ஸ்ட்" என்று நடையை துரிதபடுத்தியவன் தூரம் இருந்தே அவனுக்கு அவர்கள் வருவதை தெரியபடுத்த வேண்டும் என்று சத்தமாய் பேசிகொண்டு நடக்க அவன் நினைத்தது போல் இவர்களை பார்த்ததும் பயத்தில் இவன் ஓடவும் தான் நினைத்ததுதான் நடக்க இருந்ததோ என்று புரிந்து விட்டது.

அவள் யாரென்னு தெரியாமலையே அவளுக்கு உதவினான் ஜெயந்த்.
______________________________________

கல்லூரி வளாகத்தில் மரத்தடியில் பேசியபடி கலகலத்து கொண்டிருந்த ஷீலாவும் தியாவும் காரில் இருந்து இறங்கி வந்த பார்கவியை தூரத்திலிருந்தே பார்த்தவர்கள் அவள் அருகில் வரவும் அவளை இருவரும் ஒரு முறை சுற்றி சுற்றி பார்த்தனர்.

அவர்களின் பார்வையில் என்ன ஏது என்று புரியமல் அவர்களை விச்சித்திரமாய் பார்த்தவள் "ஏய், என்ன பண்றிங்க எதுக்கு பட்டிகாட்டான் மிட்டாய் கடைய பாத்தா மாதிரி சுத்தி சுத்தி பாக்குறிங்க" என்று அவர்களை வலுக்கட்டாயமாக நிறுத்தி கேட்டாள் பார்கவி.

"இல்ல இங்க பார்கவி பார்கவின்னு ஒரு மானஸ்த்தி இருந்தா அதான் அவ இருக்காளன்னு தேடுறோம்" என்று தியா கவியை முன்னும் பின்னும் அவளை திரும்பி பார்க்க

"சீ போ என்று தியாவை தள்ளி நிறுத்தியவள் போங்கடி" என்று சினுங்கியபடி முன்னாள் நடக்க ஆரம்பித்தாள்.

"என்ன டி புது பொண்ணே என்ன முகமெல்லாம் லைட் எரியுது" என்று அவளை ஷீலா கலாய்க்க

"ஹேய் பேசமா இருடீ ரொம்ப ஓவரா பேசுறிங்க அப்படியே லைட் எரியுறா மாதிரி இமெஜின் பண்ணிக்கிறிங்க போங்கடி" என்று அவர்களை மிரட்ட

"இதை இந்தம்மா நம்ப சொல்லுது..." என்று நக்கலாய் பேசியவள் "அக்கா நீங்க இங்க நடந்தத பார்த்திங்க கவிதை... கவிதை... அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
ஒரே லுக்கிங் லுக்கிங் தான் மாமா பேசுறதும் இவ தரைய பாத்து பேசுறதும் ஒரே ரொமேன்ஸ் தான் போ..." என்று தியா அவள் பங்கிற்க்கு வாரினாள்.

"ஏய் தியா எருமை வயசுக்கு ஏத்தமாதிரி பேசுடி இங்க நீ பார்த்த... நாங்க ரொமேன்ஸ் பண்ண..." என்று வியப்புக்குரிய கேள்வியாய் கேட்டு என்று அவளின் வாயை பொத்தினாள்.

தியா அவளின் கையை நறுக்கென கிள்ளியதும் ஆ.. என்று வலியில் கையை எடுத்தவிட போதும், "போதும் உன் ஓட்ட வாய மூடு உனக்கும் எனக்கும் 2 வயசுதான் வித்தியாசம் தான் நான் இன்னும் l.k.g படிக்கிற மாதிரி நினைச்சிகிறது ம்கூம் ஒரு புள்ளைய வளரவிடமாட்டிங்க" என்று முறைத்தாள் தங்கை.

"ஓஓஓஓஓ..... நல்ல சொல்லுறடி டிட்டியலு" என்று அவளை காது பிடித்து திருகிய கவியின் கையை தட்டி விட்டவள்... நீயெல்லாம் ஆதுக்கு செட்டே ஆகாமாட்டா பாவம் எங்க மாமா" என்று கேஷவிற்கு பரிதாபபடுபவள் போல் முகத்தை வைத்து கொண்டாள்.

"உங்கள.... வாங்க போறிங்கடி ரெண்டு பேரும்" என்று அவர்களை அடிக்க துரத்தியவள் பின் சமதனமாகி அவரவர்களின் டிபார்ட்மெண்டை நோக்கி சென்றார்கள்.

பார்கவி வகுப்புக்குள் நுழைந்ததும் "மணமகளே மணமகளே வா வா... உன் வலது காலை எடுத்து வைத்து வா.. வா..." என்று அனைவரும் கோரசாய் பாட ஒருவித கூச்சத்துடனே இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் கவி.

விட்டு போன 10 நாள் கதையும் ஒருவழியாய் பேசி சிரித்து கலகலத்து மிச்ச சொர்ப நேரத்தை பெரிய மனது செய்து வகுப்பு ஆசிரியர்களுக்காக விட்டு கொடுத்து போக மதிய இடைவேளையும் வந்தது

ஹாய் அக்காஸ் என்று தனது லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு எப்போதும் அமரும் இடத்திற்கு வந்து அமர்ந்தவர்கள் அங்கேயும் அரட்டையை தொடர்ந்தபடி உணவினை உண்டு முடித்தனர்.

அப்போதுதான் கவனித்த கவி "ஷீலா எங்கடி உன் ஆளையே காலையில் இருந்து காணும் உன்னை பாக்கமா ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டாரு. நான் வந்ததுல இருந்து பாக்கவே முடியல" என்றாள்ஆச்சர்யமாய்

கணவனை கேட்டதும் ஷீலாவின் முகம் வாடிவிட அதனை கவனித்த கவி "என்ன டீ ஏன் ஒரு மாதிரி இருக்க?" எனும் போதே கண்கலங்கி விட்டது அவளுக்கு.

"ஷீலா என்ன ஆச்சி ஏதாவது மறைக்கிறியா என் கிட்ட?... என்னடி ஏதாவது சொல்லு?" என்று கேட்க

"அவர் என் மேல கோவமா இருக்காரு கவி... என் கூட பேசி ரெண்டு நாள் ஆகுது கவி...." என்று கூறியவளின் கண்களில் இருந்த கண்ணீர் மளுக்கென்னு கன்னத்தில் இறங்கியது.

வீட்டில் நடந்தை அனைத்தையும் கூறியவள் "இது அவர்கிட்ட கண்ணன் சொல்லிட்டார். அதுல இருந்து என் மேல கோவமா இருக்கார்" என்றவள் கவியின் முகம் பார்க்க மேலே சொல் என்பது போல் தலை ஆட்ட "அவருக்கு நான் அங்க எதிர்த்து பேசி அந்த மாமிய கேக்கலன்னு கோவம்" என்று அழதுகொண்டே கூறினாள்.

அவளை ஒரு புருவம் தூங்கி பார்த்து தலையில் அடித்துக்கொண்டவள். "இங்க பாரு... அழத பச்" என்று சலித்தவள் "அழுத கொண்டுவேன். உன் மனசுல என்ன பெரிய தியாகின்னு நினைச்சிட்டு இருக்கியா?? இல்ல உனக்கு பீச் ஓரமா சிலை வைக்க போறேன்னு யாராவது சொன்னாங்காள...?? "என்று அவளை பார்த்து கோபமாய் கேட்டவளின் கைகள் டேபுளை ஒரு குத்து குத்தியது.

அவளை அதிர்ச்சியாய் பார்த்தபடி அமர்ந்திருந்த ஷீலாவும் தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "என்ன பாக்குற அந்த கேழவி பேசின வாயை கிழிச்சி இருக்க வேண்டாமா!!! உன் மாமியாருக்கு மரியாதைதான் கொடுக்க சொன்னேன் மானம் மாரியாதைய விட்டுட்டு இருக்க சொல்லல...." என்று கடுப்புடன் கூறவும் "ராஜீ அவங்க அம்மாவ கேட்கராரோ இல்லையோ நான் கேட்கத்தான் போறேன் அவங்கள... ஆசை பட்டவங்களை சூழ்நிலை காரணமா கல்யாணம் பண்றது அவ்வளவு பெரிய தேச துரோகமா" என்று பொங்கினாள் கவி.

இவள் கோவத்திற்க்கு என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் திருதிருவென முழித்தபடி அமர்ந்திருந்தாள் ஷீலா. "சரி அவங்க உன் மாமியார் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உன்னை புருஞ்சிக்குவாங்க அதை கூட விட்டுடலாம். ஆனா கண்ட கிழவி சொல்லுதுன்னு வாய மூடிக்கிட்டு இருந்த பாரு உன் மேலதான் கோவம் அதிகமாகுது. அந்த கிழவி எங்க இருக்குன்னு சொல்லு அதை உண்டு இல்லன்னு ஒரு வழி ஆக்காம விட போறது இல்லை" என்று கடுகடுவென கூற அந்நேரம் கவி வந்ததை அறிந்து அவளை பார்க்க வந்த ராஜீ அவளின் வார்த்தைகள் கேட்டதும்.

"சொல்லு கவி நல்ல சொல்லு இந்த மரமண்டைக்கு அப்பவாச்சும் ஏறுதான்னு பாக்கலாம் அவளோட சுயத்தை தொலைச்சிட்டு என்ன பண்ண போறான்னு தெரியலை அங்க அவ்வளவு நடந்துருக்கு வாய மூடிக்கிட்டு சும்மா இருந்து இருக்கா நமக்கு ஒன்னுன்னா நாம தானே கேக்கனும்..." என்றவன் அவளை பார்த்து

"நான்தானே உன் பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்ணேன் இந்த காலேஜ்கே தெரியும்..... சொல்ல வேண்டியது தானேடி எங்க அம்மாகிட்ட உன் பையன் தான் நாய் மாதிரி லோ லோன்னு என் பின்னாடி திரிஞ்சான்னு" என்று கேட்டவன் கோவம் அடங்க மறுக்க திரும்பி நடந்தவனின் கையே ஒடி சென்று பற்றியவள் "சாரி சாரி ராஜீ அந்த நிமிஷத்துல என்ன பண்றதுன்னு தெரியல" என்று தேம்ப அவளின் அழுகையில் மனது துவள தன் தோள்வலைவில் சாய்த்துகொண்டான் ராஜீ

இப்போது பார்கவியும் தியாவும் கோரசாய் "இது காலேஜ்... காலேஜ்..." என்று கத்தி சிரிக்க வெட்கத்துடன் ராஜீவிடம் இருந்து பிரிந்தவள் இவர்கள் இருவரையும் துரத்திக்கொண்டு ஓடினாள்.

______________________________________

இரவு உணவினை முடித்து கொண்ட மாணிக்கம் வெளி வாராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் முகம் முழுவதும் யோசனையோடு ஒரு மாதிரியாகத்தான் அமர்ந்திந்தார். உள் அறையில் வேலையாய் இருந்த மஞ்சு கணவர் இன்னும் உள்ளே வராததை கண்டு வெளியே வந்து பார்க்க அவர் அமர்ந்திருப்பதை கண்டதும் "இந்த பனியில இப்படி உட்காந்து அப்படி என்னத்த தான் யோசிக்கிரிங்களோ" என்று சலித்தவர் இருங்க பால் எடுத்துட்டு வந்து தறேன் என்று சொல்லிக்கொண்டே சமயலறை பக்கம் செல்ல

அவரை கை பிடித்து நிறுத்தி பக்கத்தில் அமர வைத்து கொண்ட மாணிக்கம் மனைவியின் முகத்தையே பாத்திருந்தவர் அவரின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு "இது வரைக்கும் நான் உனக்கு ஏதாவது குறை வைச்சிருக்கேனா மஞ்சு" என்று கேட்க
கணவரின் செய்கை வினோதமாக பட "என்னங்க சம்மந்தமில்லாம பேசுரிங்க" என்று பதட்டபடாமல் கேட்க நினைததாலும் குரல் அவரை காட்டி கொடுத்தது

"ஒன்னுமில்லடா பயப்புடாத" என்று மனைவியை சமாதனபடுத்தியவர் "உன்னை சரியா கவனிக்கலையோன்னு எனக்கு வருத்தமா இருக்கு அதான் கேட்டேன்" எனவும்

"இவ்வளவு தானா நான் என்னாமோன்னு ஏதோன்னு நினைச்சி பயந்துட்டேன்ங்க" என்று சிறு புன்னகையை உதிர்த்தவர் "உங்கள விட யாரு என்னை நல்லா பார்த்துப்பாங்க முத்து மாதிரி இரண்டு பொண்ணுங்க இருக்கு என்ன ஏதுன்னு கேக்கரத்துக்கு முன்னாடியே எனக்காக பாத்து பாத்து செய்ய நீங்க இருக்கிங்க என் வாழ்க்கையே நிறைஞ்சா மாதிரி ஒரு உணர்வு" என்று மனதில் இருப்பதை கூற மாணிக்கத்தின் முகத்தில் அத்துனை பிரகாசம்....

'அதுதான் என் கவலையே மஞ்சு நான் இல்லனா நீ எப்படி இருப்ப' என்று நினைத்தவரும் மனைவியின் மீது இருந்த பார்வையை அகற்றாமல் இருந்தார்.

இன்று மாலை கேஷவ் வந்து சென்றது நினைவில் வந்திருந்தது அவருக்கு

அலுவவக வேலையாய் இருந்த மாணிக்கத்தின் அறை கதவினை தட்டி உள்ளே வந்தவனை ஆனந்த அதிர்ச்சியாய் சிரித்தமுகமாய் வரவேற்ற மாணிக்கம் "எப்படி இருக்க கேஷவ்... கவி" என்றவர் "கவிமா வந்து இருக்காளா கேஷவ்" என்றார் ஆர்வமிகுதியாய் .

அவரின் அன்பையும் ஆர்வத்தையும் பார்த்தவன் "அவ தான் மாமா உங்கள பாக்கனுமுன்னு சொல்லி வந்ததே... அத்த கூட பேசிட்டு இருக்கா எனக்கு உங்க கூட முக்கியமான விஷயம் பேசனும் அதான் உள்ள வந்தேன் நாம் கொஞ்சம தனியா பேசலாமா?" என்றதும்

முகத்தில் சிந்தனை படர இருங்க என்றவர் கதவை லக் செய்துவிட்டு வந்து அமர்ந்தார். "இப்போ சொல்லுங்க கேஷவ்.. கவி ஏதாவது" என்று மகளை பற்றியதாய் இருக்குமோ என்ற அச்சத்துடனே கேள்வி தேங்கி நிற்க

"என் மனைவிய பத்தி இல்ல மாமா உங்கள பத்தி தான் பேச வந்து இருக்கேன்".

என் மனைவி என்ற சொல்லே அவனின் அன்பையும் உரிமையும் எடுத்து சொல்ல.... "சொல்லுங்க கேஷவ் என்ன பேசனும்" என்றார் மாணிக்கம்

"மாமா நீங்க என்ன மறைக்கிறிங்க? மந்திரி ஆளவந்தானுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?... அந்த பண முதலைங்க யாரு இதுக்கு எல்லாம் விடை வேணும் மாமா..?" என்றதும் சிறு அதிர்வு அவரிடம் இருந்தும் அதை சுதாரித்தவர்.

"நீங்க சொல்றது எல்லாம் எனக்கு" என சொல்ல அவரின் பேச்சை கத்தரித்தவன் "மாமா உங்களை கொல்ல ஒரு கும்பளையே ரெடி பண்ணி இருக்காங்க என்னதான் நடக்குது??? உங்கள காப்பாத்தவாது எங்களுக்கு இது என்னன்னு தெரிய வேண்டாமா... சொல்லுங்க மாமா?? சொல்லுங்க? என்று அவரை ஊக்க.

அவன் கேள்வியின் நியாயம் விளங்க டேபிள் லாக்கரில் இருந்த சாவியை கொண்டு மரபீரோவின் ஓரமாய் இருந்த சிறிய அளவிளான மகள்கள் இருவரது படத்தையும் விளக்கியவர் ஒரு சிறு அறையை திறக்க அதிலிருந்து ஒரு பேப்பர் பண்டலை எடுத்து "கேஷவ் இந்த இதை பாருங்க" என்று ஒரு டாக்குமெண்டையும் ஒரு கேஸ் கட்டையும் எடுத்து டேபிள் மீது வைத்தார்.

கேஸ் கட்டை பார்க்க கதிர் என்று பெயரை தாங்கி நின்றது அந்த பேப்பர். முழுவதும் படித்தவன் "என்ன மாமா இது ஆட்கொணர்வு மனு போட்டு இருக்குங்கிங்க யார் இவர்" என்று கேட்க

"நியாயம் கேட்டு போனவன் கேஷவ் 15நாளா காணும் அவன் உயிரோட இருப்பானான்னு சந்தேகமா இருக்கு" என்று கண்களை மூடி திறந்தார் அவர்.

"அந்த டாக்குமெண்டையும் பாரு" என்று கூற அதை பிரித்து பார்த்தவன் இது கம்பெனி கொலப்ரேஷன்ஸபோல இருக்கு என்று ஒன்னை காட்டியவன் அடுத்ததை எடுத்து கம்பெனி பிரைம் ரிஜிஸ்டர் சர்டிவிகேட் .....
லீஸ் டிட் பார்ம்... என்று இருக்க அதனை பார்த்தவன். "இது எப்படி மாமா உங்க கையில" என்று கேட்டான்.

"இது வாங்க போன போதுதான் கேஷவ் என் வண்டி ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சி அப்போ தான் நீ வந்து காப்பாத்தின" என்றவர். அந்த டாக்குமெண்ட்டை காட்டி "இது வெறும்நிலம் மட்டும் கிடையாது கேஷவ் காலகாலமா வாழ்ந்துட்டு வர்ர அந்த ஊர் மக்களோட சொத்து தீடீர்ன்னு நீ வாழ்ந்த வரையும் போதும் இடத்தை காலி பண்ணுன்னு மினிஸ்டரோட பவர தப்பா யூஸ் பண்ணி பாரின் கம்பனி குலப்ரேஷன்ல பீர் பேக்டீரி திறக்குறாங்க... இங்க வாழுற மக்களை போக சொன்னா எங்க போவாங்க இடம் தரோம்னு சொன்னாலும் அவங்களோட வாழ்வாதரம் எல்லாம் அந்த மண்ணுல இருக்கும் போது அங்க பீர் ஃபேக்டரி எப்படி திறக்க ஒத்துக்குவாங்க" என்றார் அழுத்தமாய்.

"சரிங்க மாமா அத நீங்க கவர்மென்ட் முலமா மூவ் பண்ணி இருக்கலாமே இது விஷயமா போலீஸ்க்கு கம்பளையன்ட் கொடுத்து இருக்கலாமே" என்று கேட்க

"மந்திரிய எதிரியா வைச்சிக்கிட்டு கவர்மென்ட் கிட்ட போய் என்னன்னு கேட்கறது இதுக்கு ஒரே வழி கதிரை கண்டு புடிக்கனும் அவன் இருக்கானா இல்லை இல்லனாவது தெரிஞ்சிக்கனும்". என்று அவர் தன் கூற்றை வலிறுத்தினார்.

"ஆனா மாமா எனக்கு எனானமோ நாம போலீஸ் ஹெல்ப் கேக்கரது தான் நல்லதுன்னு படுது போலிஸ் கிட்ட போயிடலாம் மாமா " என்று தன் கருத்தை முன் வைக்க

"இன்னும் கொஞ்சம் ஆதாரம் திரட்ட வேண்டி இருக்கு நான் சொல்றேன் கேஷவ்". போலீஸ்.... போலீஸை பார்த்துக்கலாம் சக்தியை ஒரு நாள் மீட் பண்றேன் அவர்கிட்ட பேசனும். என்று அவரின் பதிலை கூற கதவை தட்டி தன் செல்லமகள் உள்ளே வருவதற்கான அனுமதி கேட்க "பீளீஸ் கேஷவ் இதோட இதை முடிச்சிக்காலாம்" என்ற கோரிக்கையை வைத்து எழுந்தவர் அறையை திறந்துவிட்டு "கவி மா எப்படி டா இருக்க?"என்று மகளை அனைத்துக்கொண்டார்.

இதை பற்றியே சிந்தித்து இருந்தவரின் சிந்தனையை கலைத்த மஞ்சு "என்னங்க வாங்க பனி பெய்து உடம்புக்கு ஆகாது எழுந்திரிங்க... ஏதுவா இருந்தாலும் வீட்டு குள்ள வைச்சி கேளுங்க எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்" என்று புன்னகையுடன் பதில் கூறவும் அமைதியாய் மாணிக்கம் உள்ளே சென்றார்.
 

Author: Bhagi
Article Title: காதலில்.உள்ளச்கள்.பந்தாடுதே பகுதி 23
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN