மாயம் 26

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் நிலை
கண்டு கதறியழும்
என் உள்ளம்
அமைதியடையும் நாள்
எப்போது??

மூன்று மாதங்கள் ஹேமாவின் பிரிவால் வருந்திய ரித்விக்கு அவளது தற்போதைய நிலை அவனுள் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு வலியை உருவாக்கியிருந்தது..
அவளை மயங்கிய நிலையில் பார்த்த கணத்திலிருந்து காதல் கொண்ட மனமோ இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது... தங்கத்தட்டில் தாங்கி சீராட்ட எண்ணியிருந்தவள் வீதியில் ஆதரவற்று அடிபட்டு மயங்கியிருந்ததை கண்டவனுக்கு இதயம் இரண்டாய் பிளந்ததாய் உணர்ந்தான்...

அவளது வாடிய தோற்றமும் முகத்தில் தெரிந்த தெளிவின்மையும் அவள் ஏதோவொரு இக்கட்டில் இருப்பதை அவனது காதல் உள்ளம் உணர்த்தியிருந்தாது... அவளை காணும்வரை அவள் மீதிருந்த வருத்தம் அவளை கண்ட நொடியிலிருந்து கவலையாய் மாறியிருந்தது... காரணமில்லாமல் பிரிவை அறிவிக்காமலே காணாமல் போனவள் இப்போது வாழ்க்கையை தொலைத்துவிட்டதாய் வந்து நிற்க அதனை காதல் கொண்ட உள்ளத்தால் ஜீரணிக்கமுடியவில்லை... அவளை இந்நிலைக்கு ஆளாக்கியவனை தேடிப்பிடித்து கொல்லத்துடித்தது காதல் மனது. எப்போதும் மலர்ந்திருக்கும் குழந்தைத்தனம் ததும்பும் அந்த அழகிய வதனத்தின் மகிழ்ச்சியை சூறையாடி நாசம் செய்ததவனை வதைக்க துடித்தது காதல் மனம்... ஹேமா மீது ரித்வி கொண்டிருந்த காதல் அவளை துன்புறுத்தியவனை தேடிப்பிடித்து தண்டிக்கும் வெறியை அதிகரித்திருந்தது. அதுவும் ஶ்ரீ ஹேமா கூறி அழுததாக கூறியதை கேட்டதிலிருந்து அவனது கோபம் கட்டுக்கடங்காது அதிகரித்தது...

ஹேமாவின் கணவனை பற்றி விசாரிக்கச்சொல்லியிருந்த டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தும் தன் நண்பன் விமலை அழைத்தான் ரித்வி... அவனிடம் அந்த கயவனை பற்றி விபரம் கேட்க விமல் கூறிய தகவல் அவ்வளவு உவப்பானதாய் இல்லை.... அதுவும் அவன் ஹேமாவை திருமணம் செய்த சந்தர்ப்பத்தை கூற கேட்டவனுக்கு அவனது கோபத்தை அதிகப்படுத்தியது.... அவனது முழுவிபரத்தையும் தனக்கு அனுப்ப கூறிய ரித்வி ஹேமாவின் அம்மா அப்பா பற்றியும் விசாரித்து தெரிவிக்க சொன்னவன் அழைப்பை துண்டித்துவிட்டு தன் அண்ணன் ரிஷியை காண அவனது அறைக்கு சென்றான்....

“அண்ணா...”

“வாடா ரித்வி...”

“அண்ணா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..”

“சொல்லுடா... என்ன விஷயம்??”

“அண்ணா ஶ்ரீ பேசுனாளா??”

“ஆமாடா.. ஹேமா..”

“ஆமா அண்ணா... ஹேமா இப்போ ஶ்ரீ வீட்டுல தான் இருக்கா...” என்று நேற்று நடந்த முழுவிபரத்தையும் கூறியவன் தன் நண்பன் கூறிய தகவலையும் கூறினான்...

“அண்ணா.. ஹேமாவை அசிங்கப்படுத்தி அந்த அயோக்கியன் கல்யாணம் பண்ணியிருக்கான் அண்ணா... ஹேமாவுக்கும் அவனுக்கும் ஏதோ பிரச்சனையிருந்திருக்கும் போலயிருக்கு... ஹேமா ஊருக்கு போகும்போதெல்லாம் அவன் வாலாட்ட இவ ஒருநாள் எல்லாரும் இருக்கும் போது அவனை திட்டியிருக்கா...இவன் அதை மனசுல வச்சிருந்து அவளை பழிவாங்க நினைச்சிருக்கான்... அவனுக்கு ஹேமாவோட உறவுக்கார பொண்ணை மேரேஜ் பண்ண முடிவு பண்ணி ஹேமா அவங்க மேரேஜிக்கு போயிருக்கா.. அவன் இவளை பழிவாங்குறதுக்காக கல்யாணத்துக்கு முதல்நாள் நைட்டு ஹேமாவை அவ ரூம்ல தனியா படுக்கிறமாதிரி ஏற்பாடு பண்ணிட்டு இவன் அந்த ரூம்ல போய் படுத்துட்டான்...ஹேமாவுக்கும் அவளுக்கு தெரியாம அவ சாப்பிட்டுல ஏதோ கலந்து கொடுக்க அவளும் மயக்கத்துல இருந்திருக்கா.. காலையில ஹேமாவும் இவனும் ஒரு ரூம்ல இருந்ததை வீட்டுல உள்ளவங்க பார்த்து இவ ரெண்டு பேருக்கும் ஏதோ தப்பான உறவு இருக்குனு சொல்ல இவனும் ஆமா... நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம்... அவ நேத்து என்னை வரச்சொன்ன... அப்படினு கதைசொல்ல ஊருல உள்ளவங்க எல்லாரும் அவன் சொல்லுறது உண்மைனு நம்பிட்டாங்களாம்..... ஹேமாவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நானும் ஹேமாவும் விரும்புறது தெரிஞ்சதாலயும் ஹேமாவுக்கும் அவனுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்தது தெரிஞ்சதாலேயும் அவங்க ஹேமாவுக்கு சப்போர்ட்டா பேசி சண்டை பிடிச்சிருக்காங்க... ஆனா ஊருல அந்த அயோக்கினம் பெரிய தலை அப்படிங்கிறதால அவனுக்கு சப்போர்டா பேசி ஹேமாவையும் அவ அம்மா அப்பாவையும் ரொம்ப தப்பா பேசியிருக்காங்க... ஊர்காரங்க பேசுனதை தாங்க முடியாமல் ஹேமா அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா.. அவ அம்மா அப்பா எவ்வளவோ சொல்லியும் அவ கேட்காம என்னால நீங்க அசிங்கப்பட வேண்டாம்னு சொல்லிட்டு அந்த அயோக்கியன் கையால தாலி வாங்கிக்கிட்டா......”

“ ஒரு பொண்ணு அசிங்கப்படுத்துனா அந்த அயோக்கியனும் அவளை இப்படியா பழி வாங்கனும்?? ஹேமாவும் கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருக்கலாம்.. அவ அம்மா அப்பாவே அவளுக்கு சப்போர்ட்டா இருந்தப்போ அவ ஏன் இப்படியொரு முட்டாள்தனமான முடிவெடுத்தா?? கடைசியில அந்த அயோக்கியனோட பழிவெறி இவளோட வாழ்க்கையை காவு வாங்கிருச்சே...”

“ஹேமாகிட்ட ஒரு பழக்கம் இருக்குனா.. எந்த காரணத்தைக்கொண்டும் அவளை பெத்தவங்க யாருகிட்டயும் தன்னால தலைகுனிந்து நிற்கக்கூடாதுனு உறுதியா இருப்பா.. அந்த அயோக்கியனும் அதை தெரிஞ்சிக்கிட்டு தன்னோட ஆட்களையே செட் பண்ணி அவ அம்மா அப்பாவை தப்பா பேச சொல்லியிருக்கான்.. இவளும் அதுக்காக இப்படி அந்த அயோக்கியன் கையில சிக்கியிருக்கா..”

“சே... என்ன மனுஷன்டா அவன்... ஒரு பொண்ணை இப்படியா பழிவாங்குறது??”

“அந்த ராஸ்கலுக்கு பொண்ணுங்க சகவாசமும் இருந்திருக்கு... குடியும் குடுத்தனமாக தான் இருந்திருக்கான்...ரௌடிசம் கட்டப்பஞ்சாயத்துனு அவன் செய்யாத விஷயம் எதுவும் இல்லை... அவனை எதிர்க்கிறவங்க யாரும் அந்த ஊருல உயிரோட இருக்கமாட்டாங்களாம்.... போலிஸ்ல இருந்து பஞ்சாயத்து வரைக்கும் இவன் சொல்லரது தான் பைனல் டிசிஷனாம்... அந்த பொறுக்கி ராஸ்கல் ஏதோ காரணத்துக்காக ஹேமா.....ஹேமாவுக்கு..... பித்து.... பிடிச்சிருக்குனு அவனோட வீட்டுக்கு பின்னாடி இருந்த குடோன்ல அடைச்சி வச்சிருந்திருக்கான்...” என்று கூறியவனுக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை... தொண்டையில் வார்த்தைகள் சிக்க கண்களிரண்டும் கலங்கியது ரித்விக்கு....

அவனது வேதனையை உணர்ந்த ரிஷி ரித்வியை அணைத்துக்கொண்டான்... ஹேமாவிற்கு நிகழ்ந்த கொடுமையை காதால் கேட்டவனுக்கு அதை அனுபவித்தவளின் வலி உணரநேர்ந்த போது அது சொல்லொண்ண துக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.... பழிவாங்குவதற்காக ஒரு பெண்ணை இவ்வளவு தூரமா வதைப்பது என்று வருந்தியவனுக்கு ஹேமாவின் கணவன் மீது கட்டுக்கடங்காமல் கோபம் கொப்பரித்தது.

“அவனை கண்டுபிடிக்கனும் அண்ணா... ஹேமா பட்ட அத்தனை கஷ்டத்தையும் அந்த அயோக்கியன் அனுபவிக்கனும்... என்னோட தேவதையோட சந்தோஷத்தை நாசம் பண்ணவனுக்கு அவன் கனவிலயும் நினைத்து பார்க்கமுடியாதபடியொரு தண்டனை கிடைக்கனும். .. என்னோட தண்டனையில அவன் இனிமே யாரையும் பழிவாங்கனும்னோ எந்த பொண்ணுகிட்டயும் தரக்குறைவா பேசவோ நடந்துக்கவோ கூடாது... அதை பத்தி நினைக்கக்கூட முடியாத மாதிரி அவனுக்கு ஒரு தண்டனையை நான் அவனுக்கு கொடுப்பேன்... அதுக்கு நீங்க தான் அண்ணா உதவி பண்ணனும்... உங்க இன்ப்ளூவன்சை வைத்து அவனை உருதெரியாம அழிக்கனும்... என்னோட ஹேமா அவனை பத்தி பயப்படாம நிம்மதியா இருக்கனும்....”

“அவனை நான் பார்த்துக்கிறேன்... நீ அவனோட டீடெய்ல்ஸை மட்டும் அனுப்பு.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்....”

“இல்லணா... அவனை நான் தான் தண்டிக்கனும்.... நான் தான் அவனுக்கு எமன்... நீங்க எனக்கு உதவியா மட்டும் இருங்க.. அது போதும்...”

“சரிடா அவனை பார்த்துக்கலாம்... ஹேமா எப்படி அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தா??”

“அது தெரியல அண்ணா... விமல் ஒரு நாள்ல இவ்வளவு டீடெய்ல்ஸ் தான் கலெக்ட் பண்ணமுடிஞ்சதுனு சொன்னான்... இதை கேட்டதுமே எனக்கு மனசு செத்துபோச்சு.... எதுக்கு அந்த ராட்சசன் இப்படி எங்க வாழ்க்கையில விளையாண்டான்..?? அவன் மட்டும் வராம இருந்திருந்தா நானும் அவளும் சந்தோஷமா இருந்திருப்போம்... அவ நைட்டு ஶ்ரீகிட்ட என்னை அவன்கூட அனுப்பிடாதனு சொல்லு அழுதுருக்கா.. அதை கேட்டதும் இன்னும் நொந்து போய்ட்டேன்.... ஒருநிமிஷம் சே.. ஏண்டா இன்னும் உயிரோட இருக்கோம்னு தோனிருச்சி...அவ்வளவு வலிக்குதுணா..”

“ரித்வி நீயே இப்படி பேசுறது சரியா?? இப்போ ஹேமாவுக்கு நாம சப்போர்ட்டா இருக்கனும்... அவளுக்கு இப்போ தேவை பாதுகாப்பு... அதை நாம தான் அவளுக்கு குடுக்கனும்... அந்த பொறுக்கி நடமாடிட்டு இருக்கும் வரை ஹேமாவுக்கு பாதுகாப்பில்லை... அதுக்கு முதல்ல ஒரு வழி பண்ணனும்... மற்றதை பிறகு பார்த்துக்கலாம்....”

“அண்ணா உங்களுக்கு ஹேமா மேல கோபம் ஏதுமில்லையே???”

“கோபமெல்லாம் இல்லை... வருத்தம் தான் இருந்துச்சு... அதுவும் திடுதிடுப்புனு கல்யாணம் பண்ணிட்டு உன்னை ஏமாற்றிட்டாளே அப்படீங்கிற வருத்தம் தான்...அதுவும் உன்னோட நிலைமையை பார்த்ததும் ஜாஸ்தியாகிருச்சு... நீ அப்படி வாழ்க்கையையே வெறுத்தவன் மாதிரி எதுலயும் பற்றில்லாமல் கவலையோட சுத்திட்டு இருந்ததை பார்த்ததும் அவ செய்ததை என்னால மன்னிக்கமுடியல... அதான் உன்னை ரஷ்யாவுக்கு அனுப்புனேன்....இடம்மாற்றம் உனக்கு ஒரு மாறுதலா இருக்கும்னு நினைச்சேன்... ஆனா அங்கேயும் நீ அப்படி தான் இருந்ததா மேனஜர் ராம் சொன்னாரு..... நீயா புரிஞ்சிப்பனு எதிர்பார்த்தேன்... ஆனா நீ அதிலிருந்து மீளமுடியாமல் கஷ்டப்பட்ட..... இப்படி உன்னை மாத்திட்டாளே... அப்படீங்கிற வருத்தம் தான்... மத்தபடி தனிப்பட்ட வகையில் எனக்கு எந்த கோபமும் இல்லை... இப்போ ஹேமாவோட நிலைமையை கேட்டதும் அந்த வருத்தம் இல்லாமல் போயிருச்சி...”

“தேங்க்ஸ் அண்ணா... எங்க நீங்க அவ மேல கோபமா இருக்கீங்களோனு பயந்துட்டேன்...” என்றவாறு ரிஷியை கட்டியணைத்தான் ரித்வி..

பின் இருவரும் சில முக்கியவிடயங்களை பற்றி பேசிவிட்டு தத்தமது வேலைகளை கவனிக்க கிளம்பினர்...
 

Vijayalakshmi 15

New member
ஹேமாவின் வாழ்க்கை பாவம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் ஆகிவிட்டது😭😭😭
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN