உன்னாலே உனதானேன் 8

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மடியில் விழுந்த மனையாள் எகிறி எழும்பும் முன் அவளை வளைத்து அணைத்திருந்தான் வினய்...அவனது திடீர் செயலில் திடுக்கிட்டவள் தன்னிலை அடையும் முன் அவளது செவ்விதழ்களை கவ்வியிருந்தன அவனது அதரங்கள்....
கணப்பொழுதில் நிகழ்ந்து முடிந்திருந்த இந்த நிகழ்வுகளில் நிலை தடுமாறியவளை சிந்திக்கவிடவில்லை வினயின் அதிரடித்தாக்குதல்கள்...
இதழ் முத்தம் அவளை மதியிழக்க செய்ய அவனது இறுகிய அணைப்பும் அவளது மேனியில் ஊர்வலம் வந்த அவனது விரல்களும் அவளை வேறு எதை பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்தது...
கொஞ்சம் கொஞ்சமாக வேறு உலகத்திற்கு சஞ்சரிக்கத்தொடங்கியவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது வினயின் உலுக்கல்...

“ஷிமி என்னாச்சு??? எதுக்கு இப்படி ஜர்க் ஆகி இருக்க???ஆர் யூ ஆல் ரைட்??” என்று அவளது கையை தடவிக்கொடுத்தான் வினய்..

அப்போது தான் இவ்வளவு நேரம் தான் கண்டது கனவு என்று உணர்ந்தாள் ரேஷ்மி....
அவன் தன் கை பற்றி தன் நடையை தடை செய்தது மட்டுமே நிஜம் என்று உணர்ந்த அவளது மனம் சிணுங்கத்தொடங்கியது...எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு கனவிலேயே நாட்களை கழிக்கப்போகின்றாய் என்று அவளது மனம் வசை பாடவும் தவறவில்லை...ஒருமனம் வசைபாட மறுமனம் எச்சரிக்கவும் தவறவில்லை...
மனபோராட்டத்தில் தவித்தவளை கலைத்தது வினயின் குரல்...

“ஷிமி என்னாச்சுமா...” என்று குரலில் ஒரு பரிதவிப்புடன் வினய் கேட்க ரேஷ்மிக்கு அவனது கலக்கம் மிகவும் பாதித்தது...

அவனது கலக்கத்தை பார்த்தவளுக்கு தனது மனப்போராட்டத்தை தீர்ப்பதை விட அவனது பரிதவிப்பை தீர்ப்பதே முக்கியமென தோன்றிய அடுத்த கணம் அவளது கையை பற்றியிருந்த அவனது கரத்தின் மேல் தன்கையை வைத்தவாறு அவனது அருகில் அமர்ந்தவள்

“ஒன்றும் இல்லை....நான் வேறொரு யோசனையில் இருந்தேன்... சரி.... நீங்க எதுக்கு என்னை கூப்பிட்டீங்க...??”

“அது வந்து...உன்கிட்ட மன்னிப்பு கேட்கத்தான் உன்னை கூப்பிட்டேன்....”

“மன்னிப்பா??? எதுக்கு?? அப்படி என்ன தப்பு செய்தீங்க??”

“உனக்கு நான் என்ன தப்பு செய்தேனு நியாபகம் இல்லையா???”

“நீங்க செய்தால் தானே நியாபகம் வருவதற்கு???”

“ஓ மை காட்... என் பொண்டாட்டிக்கு எதுவும் நியாபகம் இல்லையா...???? என்னை மாதிரி ஒரு அதிஷ்டசாலி இந்த உலகத்தில் யாருமே இல்லை.... உலகத்தில் உள்ள எல்லா கணவன்மாருக்கும் இப்படி ஒரு மனைவி கிடைத்தால் எவ்வளவு சூப்பரா இருக்கும்....” என்று விவரம் கூறாது உளறிவனை தடுத்தாள் ரேஷ்மி....

“ஏன் வினய்... எப்பவும் புரியாத மாதிரி தான் பேசுவேன் என்று ஏதும் சபதம் எடுத்திருக்கீங்களா??? இப்படி அடிக்கடி கன்பியூஸ் பண்ணுறீங்க...?”

“ஹாஹா... அப்படி ஒரு சபதம் எடுத்துட்டு நான் இந்த வீட்டில் இருந்துவிட முடியுமா?? நீயும் தான் என்னை சும்மா விட்டுவிடுவாயா??”

“தெரியிதில்ல.. அப்போ எதுக்கு இப்படி பண்ணுறீங்க...???”

“நான் ஒன்றும் பண்ணவில்லை ஷிமி... உண்மையை தான் சொன்னேன்...”

“அப்படி என்ன உண்மையை சொன்னீங்க??”

“பொதுவாக பொண்ணுங்களுக்கு அவங்களோட ஹேர்பின் எங்கே வைத்தார்கள் என்று நியாபகம் இருக்காதாம்... ஆனா அவங்களுக்கு அவங்க லவ்வர் ஏதாவது சொல்லியிருந்தால் அது எப்போ, எங்கே வைத்து, எப்படி சொன்னாங்க என்பது வரை நியாபகம் இருக்குமாம்... அதுவும் மனைவிமார் இன்னும் ஷாப்பாம்... அவங்க சொன்ன டைமில் என்ன கலர் டிரஸ் அணிந்திருந்தார்கள் என்பது வரை தெளிவாக சொல்வார்களாம்... அப்படி உலகம் போய்கிட்டு இருக்கு....ஆனா என் பொண்டாட்டி காலையில் நடந்ததையே மறந்துட்டானா எனக்கு சந்தோஷம் இல்லையா??” என்றவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் ரேஷ்மி....

“ஏன் வினய் இப்படி இருக்கீங்க??? கொஞ்சமாவது ரோஷம் வேண்டாம்...??? இப்படியா நான் ஹார்ஸ்ஸா நடந்துகொண்டதற்கு நீங்க வந்து என்னிடம் மன்னிப்பு கேட்பீங்க...??? சொல்லப்போனால் நான் நடந்துகொண்ட முறைக்கு நீங்க என்னை திட்டனும்.... ஆனா இது வரைக்கும் கோபமா ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லவில்லை... அப்போ நான் செய்தது சரியென்று சொல்கின்றீர்களா??” என்றவளின் கேள்வியில் சிரித்துவிட்டான் வினய்...

“நீ இப்படி கூட பேசுவியா ஷிமி.... எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போயிருச்சே... இப்போ நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்த ரியாக்ஷன் வேறு... ஆனா உன்னோட ரியாக்ஷன் வேறு.... நீயும் என்கூட சேர்ந்து நல்லா தேறிவிட்டாள்...” என்றவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தாள் ரேஷ்மி....

அவளது முறைப்பில் சிரித்தவன் “ஷிமி முறைக்காதமா... இப்போ என்ன நான் உன்னை ஏன் திட்டவில்லை என்று தெரியனும்.... அவ்வளவு தானே... சொல்லுறேன்... நீ உன்னுடைய தவறை ரியலைஸ் செய்தபின் நான் ஏன் உன்னை திட்டனும்.... ??” என்றவனது பதிலில் குழம்பினாள் ரேஷ்மி..

“நான் ரியலைஸ் செய்ததாக உங்களுக்கு யாரு சொன்னா???”

“அதை யாரும் சொல்ல வேண்டியதில்லை....நானே தெரிந்துகொண்டேன்...”

“வினய் கொஞ்சம் புரிகின்ற மாதிரி சொல்லுங்க...”

“சரி சொல்கின்றேன்.... அதற்கு முதல் இந்த கேள்விக்கு பதில் சொல்லு... நீ ஏன் காபி கப்பை எடுத்துக்கொண்டு நம்ம ரூமிற்கு வராமல் ஹாலில் அமர்ந்திருந்தாய்??”

“அது வந்து...”

“என்ன ஷிமி நான் சொல்லவா?? நீ என்னிடம் தேவையில்லாமல் கோபப்பட்டதால் கில்டியா பீல் பண்ணி தான் வெளியே அமர்ந்திருந்தாய்... சரியா???” என்றவனது பதிலில் அதிர்ச்சியடைந்தாள் ரேஷ்மி..எப்படி தன் மனவோட்டத்தை அவன் கண்டுகொண்டான் என்ற கேள்வியில் அவனை பார்க்க

“எனக்கு எப்படி தெரியும் என்று பார்க்கிறாயா??? ஷிமி உன்னோட அனைத்து அசைவுகளும் எனக்கு அத்துபடி.... நான் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவன் மா... இதுகூட தெரியாவிட்டால் எப்படி..??? அதோட இந்த மாதிரி வீட்டிற்கு தூரமாக இருக்கும் நேரங்களில் பொண்ணுங்களுக்கு கோபம் அதிகமாக வரும் என்று கேள்விபட்டிருக்கின்றேன்.... அதான் நானே உன்கிட்ட வந்து சாரி கேட்டேன்...” என்று கூறி புன்னகைத்தவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் ரேஷ்மி...

உலகில் எத்தனை பேர் இப்படி ஒரு புரிந்துணர்வுடன் நடந்துகொள்கின்றார்கள்...?? மனைவியின் மனநிலையை புரிந்து கொண்டு அவளின் நிலையை மனதிற்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்ளும் கணவன்மார்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்??? திருமணமாகி பல வருடங்கள் கடந்த போதிலும் பலரிடம் இந்த புரிந்துணர்வு இல்லாத பட்டசத்தில் திருமணம் முடிந்து இரண்டரை மாதங்களே ஆகியிருக்க தனது கோபதாபங்களை சரிவர புரிந்து தன் மனநிலையை அறிந்து நடந்து கொள்ளும் வினயை பார்க்கும் போது ரேஷ்மியில் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு... இந்த இரண்டரை மாதகாலத்தில் தான் மனதால் அவனை நெருங்காத போதிலும் தன் உணர்வுகளை படித்து அதற்கேற்ப நடப்பவனை கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை... இத்தனை தூரம் தான் அவனை படுத்தியபின்பும் தன்னை கோபித்து கொள்ளாதவனை கண்டவளுக்கு அவளது தந்தையின் நியாபகம் வந்தது.....

அதில் அவளது முகம் சோகத்தை தத்தெடுக்க அதை கண்டுகொண்ட வினய்

“சாரி ஷிமி... நான் உன்னை ஹர்ட் பண்ண எதுவும் சொல்லவில்லை... எனக்கு மனதில் தோன்றியதை தான் கூறினேன்..”

“இல்லை வினய்... எனக்கு அப்பா நியாபகம் வந்துவிட்டது... அவரும் உங்களை மாதிரி தான்... நான் எப்போ கோபப்பட்டாலும் எனக்கு சப்போர்ட்டா தான் பேசுவாரு.. என்னோட கோபம் தப்பென்று தெரிந்தால் நான் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் பொறுமையாக என்னுடைய தவறை விளக்குவார்...” என்றவளது கண்கள் கலங்கத்தொடங்கியது...

அவளது மனநிலையை மாற்ற எண்ணியவன்

“எங்க மாமனாரு வேறு என்ன தான் பண்ணுவாரு... நீ தான் கோபம் வந்தா பத்ரகாளி ஆகிவிடுகிறாயோ... நீ கோபமாக இருக்கும் போது உன்கூட சண்டை போட்டால் ருத்ர தாண்டவம் ஆடிவிட மாட்டாய்?? அதான் என் மாமனாரு நீ காம் டவுன் ஆனதும் வந்து பேசியிருப்பார்...”

“டேய் புருஷா... என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?? நான் உனக்கு பத்ரகாளியா??? இப்போ இந்த பத்ரகாளி என்ன பண்ணுறானு பாரு..” என்றுவிட்டு கட்டிலில் இருந்து எழும்பியவள் சுற்றும் முற்றும் எதையோ தேட அதில் அவளின் எண்ணம் புரிந்தவன்

“அம்மா தாயே... என்னை மன்னித்துவிடு... உன் பக்தன் தெரியாமல் அப்படி சொல்லிட்டேன்...” என்று சிரிப்புடன் கெஞ்சியவனை அடிக்க கட்டிலில் இருந்த தலையணையை எடுத்தாள் ரேஷ்மி.

ரேஷ்மி துரத்துவதற்குள் கட்டிலின் மறு கோடிக்கு சென்று கீழே இறங்கியவன் துவாயை எடுத்துக்கொண்டு குளியலறையை தஞ்சமடைந்தான்...

கையில் எடுத்த தலையணையை கட்டிக்கொண்டவள் ஒரு சிரிப்புடன் கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.

அறையில் அமர்ந்திருந்த ரேஷ்மியை அழைத்தாள் ரியா....வெளியே வந்தவளிடம் ரியா

“ரேஷ்மி இன்னைக்கு என் கொழுந்தனாரு ப்ரீயா??”

“இன்று சன்டே தானே அக்கா... வீட்டுல தான் இருப்பாரு.... ஏன்கா???”

“ஷாப்பிங் போகலாம்னு பார்த்தேன்... நீயும் வந்தா நல்லா இருக்கும்...அப்படியே நம்ம வீட்டுக்காரங்க பர்சையும் காலி பண்ண வசதியாக இருக்கும்... நீ கவினிடம் கேட்டுட்டு சொல்லுறியா???”

“ஹா..ஹா... போவோம் கா..அவரு குளிச்சிட்டு இருக்கின்றார்... வந்ததும் கேட்டுட்டு சொல்றேன்...”

“சரி ரேஷ்மி...நாம ப்ரேக்பாஸ்டை முடித்துவிட்டு ஒரு பதினொரு மணி மாதிரி கிளம்புவோம்...”

“சரி அக்கா...” என்றவள் அறைக்கு வந்து வினயிற்கும் தனக்கும் உடைகளை எடுத்து வைத்தாள்...

குளியலறையில் இருந்து வெளியே வந்த வினயிடம் ரியா ஷாப்பிங் செல்ல அழைத்ததை கூற

“ஷிமி...உனக்கு ஷாப்பிங் போவதில் ஏதும் ப்ராப்ளம் இல்லையே...??? ஐ மீன் ஏதும் சிக்னஸ் இல்லையே....??” என்று அவள் உடல்நிலையை எண்ணி கேட்க

“இல்லை வினய்...ஐயம் ஓகே...”

“அதானே.. பொண்ணுங்களுக்கு புருஷன் பர்சை காலி பண்ணுறதுனா இருக்கின்ற காய்ச்சல் தலைவலி எல்லாம் விடு ஜூட்னு கிளம்பிரும் போல... எப்படிமா ஷாப்பிங் என்றால் மற்றைய எல்லாவற்றையும் மறந்துவிடுகிறீர்கள்???”

“அது அப்படி தான் வினய்.....அதெல்லாம் பொண்ணுங்க விஷயம்...உங்களுக்கு புரியாது...”

“அம்மாடி..எனக்கு மட்டும் இல்லை.... உலகத்தில் உள்ள யாருக்கும் புரியாமல் தான் அவனவன் மண்டையை பிச்சிட்டு அலையுறான்...”

“அதான் தெரியுதில்ல... பிறகு என்ன கேள்வி...?? போய் கிளம்புகின்ற வழியை பாருங்க...”

“சரிங்க மகாராணி...தங்கள் உத்தரவு....”என்றுவிட்டு தனக்கென ரேஷ்மி எடுத்துவைத்திருந்த உடையை எடுத்துக்கொண்டு சென்றவனை பார்த்து சிரித்தவாறு குளியலறைக்குள் புகுந்துகொண்டாள் ரேஷ்மி...

காலை உணவை முடித்துக்கொண்டு வினய் ஜோடியும் அபி ஜோடியும் ஷாப்பிங் கிளம்பினர்...வீரலட்சுமி குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி வீட்டில் இருந்துவிட்டார்... குழந்தையுடன் பாட்டியுடன் இருப்பதற்கு சம்மதிக்கவே இரண்டு ஜோடிகளும் வினயின் காரில் கிளம்பினர்..

ஒரு மணிநேர பயணத்தின் பின் ஒரு மாலின் முன் வினய் காரை நிறுத்த பெண்களிருவரும் இறங்கி முன்னே செல்ல ஆண்களிருவரும் காரை பார்க் செய்துவிட்டு வருவதாக கூற சென்றனர்...

ரியாவும் ரேஷ்மியும் காரிலிருக்கும் போதே வினய் மற்றும் அபியின் டெபிட் கார்டினை கைபற்றியிருந்தமையால் அவர்களுக்காக காத்திருக்காது தம் பர்ச்சசை தொடங்கியிருந்தனர்...
ஒவ்வொரு கடையினையும் புரட்டிபோட்டு அவர்கள் பொருட்களை வாங்க அவற்றை காவிக்கொண்டு அவர்கள் பின்னே சென்றனர் வினயும் அபியும்...

வினயோ

“டேய் என்னடா உன் பொண்டாட்டியும் என் பொண்டாட்டியும் இப்படி பண்ணுறாங்க....?? இப்போ தான் அந்த கடையையே புரட்டிபோட்டுட்டு இங்க வந்தாங்க.... மறுபடியும் அங்க ஏதோ வாங்கனும்னு கூட்டிட்டு போறாங்க... அந்த கடைக்காரன் வேறு இவங்களை ஏதும் சொல்ல முடியாமல் நம்மை முறைத்து பார்க்குறான்...”

“அதுக்கு நாம என்னடா பண்ண முடியும்...இப்போ கடைக்காரனுக்கு நாம பயந்தோம்னா வீட்டிற்கு போனதும் நடக்கும் விபரீதத்தை யாராலும் தடுக்க முடியாது...சோ இப்போ கம்முனு இரு... அப்போ தான் வீட்டிற்கு போனதும் ஜம்முனு இருக்க முடியும்..”

“அப்படி என்னடா விபரீதம் நடக்கும்... எனக்கு புரியலையே..??”

“சரி எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லு... நீ ரேஷ்மியை எத்தனை தடவை ஷாப்பிங்கிற்கு கூட்டிட்டு வந்திருக்கியா???”

“ஒரு தடவை கூட்டிட்டு கூட்டிட்டு வந்திருக்கேன்... “

“என்னடா சொல்லுற?? ஒரு தடவை தான் கூட்டிட்டு வந்திருக்கியா??? டேய் உங்க இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாசம் முடிய போகுதுடா... நீ என்னடானா இப்படி சொல்லுற??”

“இதுல என்னடா இருக்கு?? அவ ஷாப்பிங் போகனும் என்று கேட்கவில்லை.. அதான் நானும் கூட்டிட்டு வரவில்லை...அதோட நான் ப்ராஜட் விஷயமாக கொஞ்சம் பிசியாக இருந்ததால் சண்டேசும் எனக்கு வர்க்... அதான் எனக்கு ரேஷ்மியை கூட்டிட்டு போக டைம் கிடைக்கவில்லை...”

“உடன்பிறப்பே இதெல்லாம் ரொம்ப தப்பு... ரேஷ்மி அப்படீங்கிறதால ஒன்றும் சொல்லாமல் இருக்கா...உங்க அண்ணி திருமணமான புதிதில் ஷாப்பிங் என்கின்ற பெயரில் என்னை என்ன பாடு படுத்தியிருக்கானு தெரியுமா??? திருமணமான புதிதில் நம்ம பொண்டாட்டிக்கு அவள் விரும்புவதை வாங்கிக்கொடுப்போம் என்று பஸ்ட் டைம் அவளை ஷாப்பிங் கூட்டிட்டு போனேன்... டிராஸ்டிகல் எக்ஸ்பீரியன்ஸ்... அதற்கு பிறகு ஷாப்பிங் என்ற வார்த்தையை கேட்டாலே உள்ளுக்குள் உதறி ஆரம்பிச்சிரும்... அதை விட உங்க அண்ணி கேட்டு ஏதாவது வேணாம்னு வந்துட்டா ஐயோ சாமி வீட்டுக்கு போனதும் அன் எக்பெக்டெட் டைமில் வீட்டில் ஒவ்வொரு பொருளாக பறக்கும்... ஸ்பெஷலி பூரிகட்டை....”

“ஹாஹா... என்னடா ஏதோ தமிழ் படத்தில் வருகின்ற டிபிக்கல் ஹஸ்பண்ட் மாதிரி சொல்லுற??” என்று வினய் சிரிக்க

“ஏன்டா சிரிக்க மாட்ட.. உன் அண்ணியை பற்றி உனக்கு சரியா தெரியாது.... லேசுல டென்ஷனாகமாட்டா.. ஆனா ஷாப்பிங் பண்ணும் போது ஏதாவது சொல்லிட்டா அவ்வளவு தான்... தட்ஸ் தி என்ட் ஒப் தி கேம்..”

“ஹாஹா.. அண்ணா செம்ம எக்ஸ்பீரியன்ஸ் போல...”

“ஆமாடா கவின்... இப்போ தானே உனக்கு ஆரம்பித்திருக்கு... இனி போக போக இன்னும் தெரிந்துக்கொள்வாய்...” என்று வினயும் அபியும் பேசியபடி ரியா மற்றும் ரேஷ்மியை தொடர்ந்தனர்....

ஒரு கட்டத்தில் தமக்கு தேவையானதை வாங்கி முடித்த பெண்களிரும் தம் கணவர்மார்களை அழைக்க பைகளுடன் அருகில் வந்தவர்களை தனியே அழைத்து சென்றனர்...

ரியா அபியிற்கு ஒருபுறம் ஆடை தெரிவு செய்ய ரேஷ்மி வினயை அழைத்துக்கொண்டு சென்றாள்....
அங்குள்ள டிசைன்கள் அனைத்தையும் நோட்டமிட்டவளுக்கு எதுவும் பிடிக்காமல் போக ரியாவிடம் சொல்லிவிட்டு வினயை அழைத்துக்கொண்டு வேறொரு கடைக்கு சென்றாள் ரேஷ்மி...

திடீரென வினய்

“ரேஷ்மி ஒரு நிமிஷம்.... வா அந்த கடையிற்கு போய்ட்டு வரலாம்....” என்று வழியில் இருந்த ஒரு கடையினுள் அவளை அழைத்து சென்றான் வினய்...

அது ஒரு பெண்கள் ஆடையகம்... அங்கு அனைத்தும் நவீன ரக நீண்ட ப்ராக் வகை ஆடைகளே இருந்தன...அதில் மென்னீல நிற ஆம்கட் ப்ராக்கை எடுத்தான் வினய்...
அது முன்னே லேடிஸ் காலருடன் இடுப்பு பகுதியில் மெல்லிய சில்வர் நிற பெல்ட்டுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது... ப்ராக்கின் முன்புற அடிப்பகுதி சற்று குட்டையாகவும் பின் புறம் நிலத்தை தொட்டுக்கொண்டும் இருந்தது...

வினய் தெரிவு செய்த அந்த ப்ராக் ரேஷ்மியின் மனதை கொள்ளை கொண்டது... எப்போதும் சிம்பிளான உடைகளையே விரும்பி அணிபவளுக்கு அந்த ஆடை மிகவும் பிடித்திருந்தது.... ஆனால் திருமணத்திற்கு பின் நவீன ஆடைகளை அணிவதை நிறுத்தியிருந்தாள் ரேஷ்மி.... எனவே வினய் என்னவென்று பார்க்க

“ஷிமி... உனக்கு இந்த ப்ராக் செம்மைக்கு சூட்டாகும்னு நினைக்கின்றேன்... நீ பிட்டொன் பண்ணி பாரேன்....”என்று அவன் கேட்க மறுக்க விரும்பாது அதை ட்ரையல் ரூமில் மாற்றிக் கொண்டு வந்து வினயிடம் காட்டினாள் ரேஷ்மி..

“ஷிமி... நோ வேர்ட்ஸ் டு சே.... யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் மா... உனக்கு இந்த ட்ரெஸ் செம்மைக்கு சூட்டாகுது....இரு ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்...” என்றவன் அவனது மொபைலில் அவளை புகைப்படமெடுத்தவன் அந்த உடையை பில் போட சொல்ல ரேஷ்மியோ

“வினய் எதுக்கு இது....??”

“ஏன் ஷிமி உனக்கு பிடிக்கலையா??” என்று வினய் சோகமாக கேட்க

“ஐயோ இல்லை வினய்... எனக்கு அந்த ட்ரெஸ் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு....”

“அப்போ ஏன் ஷிமி வேண்டாம்னு சொல்லுற??”

“இல்லை வினய் நான் இப்போ எல்லாம் மார்டன் டிரஸ் அணிவதில்லை...”

“ஏன்..நீ காலேஜ் டைமில் எல்லாம் உடுத்துவ தானே...”

“இல்லை வினய் அத்தை விரும்புவாங்களோனு தான்...”

“ஷிமி எனக்கு ஒரு டவுட்டு... உன் ட்ரெஸ்ஸிங் ஸ்டைலில் எங்க அம்மா எங்க இருந்து வந்தாங்க... ட்ரெஸ்ஸிங் அப்படீங்கிறது அவங்க அவங்களோட விருப்பத்தை பொறுத்தது... என்னை பொருத்தவரை ஆபாசம் இல்லாத எந்த உடையும் நல்ல உடை தான்... கல்யாணமான சாரியும் சல்வாரும் தான் பொண்ணுங்களுக்கான உடை அப்படீங்கிறது சுத்த முட்டாள் தனம்... உனக்கு உடுத்த விருப்பம் என்றால் உடுத்து... சும்மா அத்தை சொன்னாங்க ஆட்டுகுட்டி சொன்னாங்கனு உனக்கு விருப்பமில்லாத உடையை அணியாதே... நான் ஒன்று சொல்லட்டா உனக்கு இந்த மாதிரி ப்ராக்ஸ் ரொம்ப நல்லா இருக்கும்.. அதோடு அந்த லாங்க ஸ்கர்ட்ஸ் உனக்கு சூப்பரா செட்டாகும்... நீ காலேஜ் டைமில் அந்த ஆடைகளில் ஏஞ்சல் மாதிரி இருப்ப... இப்போ தான் பெரிய மனிஷி மாதிரி எங்க போனாலும் சாரி இல்லைனா சல்வார் அணிகிறாய்....”

“இல்லை வினய் உங்களுக்கு பிடிக்காதோனு தான்...”

“நான் எனக்கு பிடிக்காதுனு எப்பயாவது சொல்லியிருக்கேனா ஷிமி...??”

“சரி கோபப்படாதீங்க... நாம இதை பில் போட சொல்லலாம்...” என்றுவிட்டு பில்போட கொடுத்தவள் வினயின் துணையுடன் குழந்தை அனுவிற்கு உடையும் தன் அத்தை வீரலட்சுமிக்கு புடவையும் எடுத்தாள்... பின் வினயிற்கும் உடைகளை தெரிவு செய்து வாங்கிக்கொண்டு வினயுடன் புட்கோட்டிற்கு வந்தாள்..

மதிய உணவை அங்கு முடித்த இரு ஜோடிகளும் மீண்டும் ஒரு டவுண்டு அந்த மாலை சுற்றிவிட்டு வீடு திரும்பினர்...உன்னாலே உனதானேன் 7
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN