நாம்-8

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 8.
இளா பின்பு வாகினி சொன்னதுப் போல் எதுவும் கண்டுக்கொள்ளாமல் தான் இருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் சென்றுக்கொண்டிருந்தது. அன்று வாகினிக்கு உடம்பு சரியில்லாததால் இளா பஸ்சில் தான் சென்று வந்தாள். அமுதன் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் வரவில்லை என்று கூறிவிட்டாள். அவனும் உடம்பு முழுசும் திமிரு என்று எண்ணிவிட்டு விட்டான். அப்போது அதே பேருந்தில் தான் சரண்யாவும் பயணம் செய்துக்கொண்டிருந்தாள்.
எதர்ச்சியாய் அவளைப் பார்த்தவள் அவளின் அருகே சென்று நின்றுக்கொண்டாள். அவளிடம் வேண்டுமென்றே excuse me இந்த பையை கொஞ்சம் வைச்சிக்கறீங்களா என்றாள்.
யாருடா அது என்று அவளை பார்த்தவள் மங்கம்மா என்று சற்று அதிகமாகவே கத்தியவள் எதுவும் கண்டுக்கொள்ளாததுப் போல இளா நின்றுக்கொண்டிருந்தாள். இளாவிற்கு உள்ளூக்குள் சிரிப்பு வந்தாலும் எதும் கண்டுக்கொள்ளாமல் அமைதியாய் நின்றிருந்தாள்.
சரண்யா இளாவையே பார்த்திருந்தாள், கொஞ்சம் இளச்சிப் போயிருந்தாள். முன்பை விட அழகாயிருந்தாள். எப்படி இவ்வளவு அழகா இருக்கா எரும மாடு. பெரிய இவ பேச மாட்டாலாம். நானும் பேசமாட்டேன் என்று நினைத்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
இளா சரண்யாவிடம் நன்றி பா என்றவள் தன் இடம் வந்தவுடன் இறங்கி விட சென்றாள் அவள் பின்னே சரண்யாவும் செல்ல இருவரும் ஒரு சேர இறங்கினர்.அங்கே அமுதன் நின்றுக்கொண்டிருந்தான்...
என்ன இவன் இங்க நிற்கிறான் என்று நினைத்தவள். அவன் அவளிடம் என்ன லுக்கு வா போலாம் என்றான்.
கொஞ்சம் பின்னாடி பாருடா எரும... என்றாள்.
யாரு என்று பார்த்தவன் அங்கே சரண்யா ஏற்கனவே தன் அண்ணனைப் பார்த்த ஆனந்தத்தில் அழுதுக்கொண்டிருந்தாள்.
இவனுக்கு அதற்கு மேலிருந்தது. இளா அமுதன் அழுதுப்பார்த்தது இல்லை ஏன் பானுமதி கூடப் பார்த்திருக்க மாட்டார். அவன் தன் தந்தை இறந்த போதுக்கூட ஒரு துளிக்கண்ணீர் கூட விடவில்லை கொஞ்சம் அழுத்தக்காரன் தான். எதுவாக இருந்தாலும் தனக்குள்ளே வைத்துக்கொள்வான்.
அமுதன் தன் தங்கையைப் பார்த்த நொடி தன்னை மறந்து அவன் கண்ணில் நீர் வந்தது. இருவரும் தங்கள் இடத்திலே நின்றுக்கொண்டிருந்தனர்.
எத்தனை பந்தங்கள் வந்தாலும் இந்த பந்தம் மட்டும் எப்போது தனித்துவமானது தான்ல இளா. இளா பல நாள் ஏங்கியிருக்கிறாள் தனக்கு ஒரு அண்ணன் இல்லையென.
மாமா போய் பேசு போ .போடா பாவம் டா எத்தன நாள் ஏங்கிப் போயிருப்பா போடாஅவ உன்கிட்ட எவ்வளவு closeனு எனக்கு தெரியும் போடா மாமா என்றாள்.
இதற்கிடையே அமுதனுக்கு இளா உணர்ச்சி மிகுதியில் மாமா என்று கூறியது விழவில்லை பாவம் விழுந்திருந்தால் தன் மனதை உணர்ந்திருப்பானோ????!!!!!
அமுதன் இளாவை பார்த்தவன் அவள் போ எனவும் ஓடிச்சென்று தன் தங்கையை அனைத்துக்கொண்டான்.
இருவரும் திட்டதிட்ட 15 நிமிடம் அணைத்தவாரே அழுதிருப்பார்கள். இளாவிற்கே கண்ணீர் வந்துவிட்டது.
அஅஅஅ போதும் போதும் உங்க பாசப் போராட்டம் கொஞ்சம் சீக்கிரம வரீங்களா எனக்கு பசிக்குது என்றவள். இருவரும் ஒரு சேர சாரி என்றனர்.
உங்க சாரி எல்லாம் வீட்ல வந்து வச்சிக்கிங்க வரீங்களா பசிக்குதுடா அமுதா...... என்றவளை ஆஆஆ என பார்த்திருந்தாள்.
அவளுக்குத் தெரியும் தன் அண்ணன் மரியாதையை எவ்வளவு எதிர்பார்ப்பவன் என்று தன் அன்னையிடம் கூட...
சரி நீ வா வீட்டுக்கு போலாம் நாளைக்கு நானே வந்து உன்ன காலேஜ்ல டிராப் பண்ணிடரேன்.
அம்மாட்ட சொல்லாத சரியா ம்ம்ம்ம் என்றவள்.
அண்ணா உங்க பொண்டாட்டி ஓவர பண்ற தெரியுமா பஸ்ல என் பக்கத்துல வந்து என்கிட்ட யாருக்கிட்டயோ பேக் குடுக்கற மாறி behave பண்ணிட்டு இடம் வந்ததும் இறங்கற... கோபம் வந்து அவள திட்ட தான் கீழ இறங்கினேன்என்றாள்.
அமுதன் அவ கிடக்கிற ராட்சஷி என்றவன் ,நீ வா போலாம் என்றான்.
வீடு வந்தும் கூட இளா சரண்யாவிடம் பேசவில்லை. அவளுக்கு பிடித்த மிளகாய் பஜ்ஜியும் கேசரியும் செய்து அமுதனிடம் கொடுத்தவள்.
அண்ணா அவ என்கிட்ட பேசமாட்டாலா என்று கேட்டவள். அமுதன் சரண்யாவிடம் அவக்கிட்ட பேசனும் போலிருந்தா போய் நீ பேசு infact இந்த விசியத்தில ரொம்ப பாதிக்கப்பட்டது இளா தான் சரண். அவ ரொம்ப பாவம் ரொம்ப பட்டுடா எனக்குத் தெரியும் அவளுக்கு உன்ன எவ்வளவு பிடிக்கும்னு.
அன்னைக்கு அவ அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுவதிற்கு முன்னாடி உனக்கு தான் போன் பண்ண நீ கூட அவள நம்புலனு அவளுக்கு கோபம் அவளோ தான். போய் பேசு என்றான்.
சரண்யாவிற்கு மீண்டும் ஒரு முறை ஆஆஆ என்று இருந்தது . இந்த மூன்று மாதத்தில் எவ்வளவு மாறியிருக்கிறான் தன் அண்ணன். அடுத்தவர் மனதிற்கு மதிப்புக்கொடுக்க கற்றுக்கொண்டிருக்கிறான். இளா நீ ஒரு மேஜிக் தான்டி எப்படி இப்படி போற போக்குல இந்த இஸ்பேட் இராஜாவின் இதயராணி ஆயிடுவா போலிருக்கே என்று நினைத்தாள்.
அவள் இளாவைத் தேடி சமையலறைக்கு சென்றாள். அவள் இரவுக்கு சப்பாத்தி மாவு பிசைந்துக்கொண்டிருந்தாள். அவள் அறியாமல் அவள் பின்னே சென்று கட்டிக்கொண்டவள் அவளின் தோல்பட்டையில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள். இளாவிற்கு தெரியும் எப்போதும் சரண் தன்னை பின்னிலிருந்து தான் அணைப்பாள் என்று எதுவும் பேசாமல் இருவரும் அழுதுத்தீர்த்தனர்.
அமுதன் அனைத்தையும் பார்த்து எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சாரிடி மங்கம்மா really sorry எனக்குத் தெரியும் நீ என்ன எவ்வளவு மிஸ் பண்ணியிருப்பனு இனி எப்போதும் இந்த தப்பு நடக்காது டி love you ela. பிளிஸ் எவ்வளவு வேன அடி பட் பேசுடி என்கிட்ட என்றவள் இளா கண்ணீரைத்துடைத்துக் கொண்டு போடி ரங்கம்மா என்னால புரிஞ்சிக்க முடியுது நீ எப்படிப்பட்ட மனநிலைமையில இருப்பனு சாரி டி உன்கிட்ட பேசமா இருந்ததுக்கு என்றாள் இளா.
பசிக்குது என்று இம்முறை இயல்பு நிலையைத்திரும்ப உதவுவது அமுதன் முறையாயிற்று.
மூவருக்கும் எதோ மனபாரம் இறக்கி வைத்ததுப்போலிருந்தது.பின்பு இரவு நல்ல கதைத்துக் கொண்டு சாப்பிட்டனர்.
சரண்யாவிற்கு பல ஆயிரம் அதிர்ச்சியைத் அமுதன் தந்துக்கொண்டிருந்தான்.
இரவு ஒரு மணிப் போல மூவரும் உறங்கச் சென்றனர். அமுதன், சரண்யாவிடம் வேனியும் நீயும் பேட் ரூம்ல படுத்துக்கோங்க நான் இங்க ஹாலில் படுத்துக்கிறேன் என்றான்.
இளாவிற்கு, ஆமா இவன் தினமும் அங்க தான படுப்பான். ஓஓஓ சீன் போடுறான் பரதேசி என்று நினைத்தவள்.அண்ணா, என்றவள் என்ன என்று அமுதன் கேட்டான். இன்னைக்கு நாம மூணுப்பேரும் ஓன்ன படுத்துக்கலாமா ரொம்ப வருஷம் ஆச்சுல இப்படி படுத்து என்றாள் தயங்கி தயங்கி.....
இளாவிற்கு தான் அதிர்ச்சியாய் இருந்தது ஆமா இந்த பக்கிக்கு அவன் அண்ணா கூட தூங்கனும்னா தூங்க வேண்டிதான எதுக்கு என்ன கோத்து விடுது.... என்று நினைத்தவள் இல்ல சரண் நீ போய் படுத்துக்கோ நான் இங்கேயே படுத்துக்கிறேன் என்றாள்.
எனக்குத் தெரியாது நீ என்கூட படுக்கிற என்றவள் அமுதனைப் பார்த்தாள். அவன் எதுவும் பேசவில்லை
பிளிஸ் அண்ணா என்றாள். அவனும் சரி என்றான். அவன் சென்றவுடன் எரும நான் எப்படி வந்து படுக்கிறது அங்க நான் எல்லாம் வர மாட்டேன் என்றாள்.
சரண்யா, நீ மறுபடியும் நான் இங்க வரனும்னா வா என்கூட இல்லனா வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
ச்ச்ச்ச் குடும்பமே இப்படித்தான் போல. சிடுமூஞ்சிங்க எல்லாம் கரக்டா இருக்குங்க.
படுக்கச் சென்றவளுக்கு ஓரே அதிர்ச்சி இரண்டு மெத்தையும் இணைத்து போட்டிருந்தவர்கள். சரண்யா வேண்டுமென்றே சுவரின் ஓரம் படுத்துக்கொண்டாள்.
அமுதன் மறு ஓரம். ஆய்யோ கடவுளே நான் எங்க படுக்க ...... ஏஏஏஏ சரண் இங்க வாடி நான் அங்க படுத்துக்கிறேன் என்றாள் இளா.
எனக்கு பேன் காத்து ஒத்துக்காதுல நீயே படுடி என்றாள் சரண்யா.
இளா சரணை சுட்டெரிக்கும் பார்வைப்பார்த்தவள். சரண் இது எல்லாம் கண்டு கொண்டால் தானே அவன் சுவற்றைப் பார்த்து திரும்பி படுத்துக்கொண்டாள்.
அமுதன் ஏற்கனவே நல்ல உறக்கத்தில் இருந்தான் அவனை எழுப்பவும் முடியவில்லை.
கடவுளே காப்பாத்துப்பா என்று படுத்துக்கொண்டாள் இருவருக்கும் நடுவே இளவேனில்.
அதிகாலையில் கண்விழித்தவன், என்னடா உடம்பெல்லாம் ஒரே வெயிட்டா இருக்கு என்று பார்த்தவனுக்கு கடவுளே இந்த மாடு தானா ,ஏழு கழுத வயசாகுது இன்னும் கால மேல போட்டு தூங்குது பையித்தியம். எல்லாம் என் நேரம் என்று தன்னை திட்டிக்கொண்டான்.
என்ன நினைத்தானோ அவளையே பார்த்திருந்தான்,
இளவேனில் இந்த பெயர் வைத்ததுக்கூட இவன் தான். தன் மாமா தன்னிடம் வந்து மாப்பிள்ள நீ சொல்லுடா இந்த சின்ன குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாமுனு என்றார். இன்னும் நியாபகம் இருக்கிறது இவனுக்கு தான் தமிழில் திணைகளைப் பற்றி படித்தில் பொழுதுகளில் இளவேனில் என்பது இளம் சூரியன் என்று பொருள் படும் என்று ஆசிரியர் கூறினார். அந்த பெயர் அவனுக்கு பிடித்துப் போக தன் மாமாவிடம் கூறினான். அவருக்கும் பிடித்துப்போக அந்த பெயரையே வைத்துவிட்டார்.
அவளிடம் அசைவுத் தெரிய சட்டென கண்மூடிக்கொண்டான். இளா இன்னும் அவனுள் ஆழ புதைந்துக்கொண்டாள். அமுதன் சிரித்துக்கொண்டே தன் எண்ண ஓட்டத்தை சுழலவிட்டான்.
இதே மாறி தான் அவள் தன் பத்து வயது வரை தன்னிடம் இப்படித்தான் கால் போட்டுக்கொண்டு தூங்குவாள். எண்ணி பார்த்தவனுக்கு இதமாய் இருந்தது. தன்னையே சுற்றிக்கொண்டு மாமா மாமா எனக்கு அது வேணும் இது வேணும் என்று அவனின் சட்டையை பற்றிக்கொண்டு சுற்றி வரும் இளா அவனுக்கு மிகவும் பிடித்தம். பனிமலரை விட இளா இவனுக்கு மிகவும் பிடித்தம் முறைப்பெண் என்பதை தாண்டி சரண்யா மாறி இவனுக்கு. அந்த சம்பவத்திற்கு பின்பு தன் நம்பிக்கையை சிதைத்துவிட்டாள் என்ற கோபம் அன்றிலிருந்து அவன் தங்கையிடம் கூட சற்று கடிமாகத் தான் நடப்பான். எனவே தான் இளா வை தன் கண்பார்வையிலே வைத்திருந்தான் மீண்டும் அவள் அந்த தவறு செய்யக்கூடாது என........??????!!!!!!
சரண்யா பாத்ரூம் போக எழுந்தவள் இளா தன் அண்ணனை அணைத்தவாரு படுத்திருந்ததைப் பார்த்தவள் சிரித்துக்கொண்டே சரண் பிளான் சக்ஸஸ் என்று எண்ணி உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். சரண்யாவிற்குத் தெரியும் இளா தூக்கத்தில் கால் மேல் கால் போடுவாள் என்று இரண்டு முறை இவள் மீது போட்டவளை தள்ளிவிட்டவள். அவள் தன் அண்ணனிடம் தஞ்சம் புகுந்துக்கொண்டாள். இளா இளா நீ ஒரு லூசு டி எங்க அண்ணா உன்ன லவ் பண்ண ஆரமிச்சிட்டான். அவன் உடம்பில் oxytocin தன் வேலையை ஆரம்பித்துவிட்டதுடி மாடு என்று நினைத்துக்கொண்டாள்.
எங்க சம்மந்தப் பட்ட இரண்டு பேரில் ஒருத்திக்கு சொல்ல தைரியமில்லை இன்னொருத்தனக்கு என்ன பிலிங்ஸ் இது என்றே வரையருக்கத் தெரியவில்லை எங்க.
தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இரண்டு பேரும் என்ன தான் தன் அண்ணன் இளாவிற்கு தாலி கட்டினது அதிர்ச்சி அளித்தாலும் முதலில் மனதில் சந்தோசம் அடைந்தது சரண்யா மட்டும் தான் . சரண்க்கு பனிய அவ்வளவாக பிடிக்காது ஏன் என்று எல்லாம் தெரியாது அவளிடம் தன் தோழி மாறி ஜாலியாக எல்லாம் பேச முடியாது பனி கொஞ்சம் strict. அப்புறம் இளா அடிக்கடி தன் அன்னையை அவளுக்கு நியாபகம் படுத்துவாள். கடவுளே அம்மாவையும் சீக்கிரமா சமாதானம் படுத்திடு என்று வேண்டிக்கொண்டாள்.
இங்க நம்ம ஹுரோ சார் இளாவையே பார்த்திட்டு இருந்தார். பாவம் இளா இங்க ஒரு ஆளு நம்மள லுக்கு விடரதே தெரியாமல் நல்ல தூங்கிக்கொண்டிந்தாள். என்ன நினைத்தானோ சட்டென அவளின் நெற்றில் தன் இதழ் ஒற்றைப் பதித்தான்.
Second kiss😘😘😘
அவள் சட்டென விழிக்கவும் அமுதனக்குத் தான் அதிர்ச்சியாய் இருந்தது . ஐய்யோ முழிச்சிட்டாளே செத்தோம் என்று நினைத்தவன் சட்டென உணர்சியற்ற பார்வையை வீசினான். அவள் சட்டென இவன் என்ன நம்ம பக்கத்துல படுத்திருக்கான் என்று எண்ணியவள் சட்டென தன் நிலையைப் பார்த்தவள் தன் டீ சர்ட் கீழே இறங்கி தன் பெண்மையின் வளைவுகளைக் காட்டிக்கொண்டிருந்தது.
சட்டென தன் கால்களை அவனிடமிருந்து எடுத்தவள் எழுந்து அமர்ந்துக்கொள்ள அவளின் டீ சர்ட் இன்னும் இறங்கி தன் அழகை அவனுக்கு அழகாய் காட்டிக்கொண்டிருந்தது.
அமுதன் ,அதுவரை அவளின் முகத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான் அவள் எழுந்து அமர்ந்தப்பின்பு தான் அவளின் நிலையைப்பார்த்தவன்.சட்டென முகத்தைத் திருப்பிக்கொள்ள, இளா அவசரமாக தன் டீ சர்ட்டை சரி செய்துக்கொண்டு தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
அமுதனுக்கு தான் ஒரு மாறி ஆகிவிட்டது. சட்டென எழுந்தவன் குளிக்கச் சென்றுவிட்டான் யாரையும் பார்க்காமல்.
இளாவிற்கு ஐய்யோ இளா இப்படி பண்ணிடியே லூசு அவன் ஏற்கனவே உன்ன கேவலமா நினைப்பான் இப்ப இது வேறயா கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது என்று நினைத்துக்கொண்டு தன் அருகே நன்று உறங்கிக்கொண்டிருக்கும் சரண்யாவை பார்த்தவள் எல்லாம் இந்த மாட்டால தான் நான் பாட்டுக்கு இங்க படுக்கவாது செய்திருப்பேன்.
அங்கே அமுதனின் நிலைமை அதற்கு மேல் ஓ காட் இப்ப வரைக்குமே இந்த பொண்ணு குட்டி பொண்ணுத்தான நினச்சிட்டு இருக்கோம். Oh god she is damn hot.... என்று நினைத்தவன்.
அமுதா இது தப்புடா நீ இன்னும் பனிய தான் லவ் பண்ணிட்டிருக்க இவ ரொம்ப சின்ன பொண்ணு குட்டி பொண்ணுடா என்று நினைத்தவன். இனி இந்த மாறி நடக்க கூடாது என்று எண்ணிக்கொண்டான்.
பாவம் அமுதனுக்கு தன் மனதை என்றோ தன்னவள் ஆக்கிரமித்து விட்டாள் என்று தெரியவில்லை. பனி மலரை தான் விரும்பியது எல்லாம் வெறும் சிறு வயதில் தன் பெற்றோர் உனக்கு தான் இவ என்பதில் வந்த பிடித்தம் மட்டுமே மற்றப்படி அவள் தன் குணத்தாலும் உடலாலும் தன்னை ஈர்க்கவில்லை என்பது அவனுக்கு என்று புரியுமோ என்று தெரியவில்லை.........
காதல் என்பது வெறும் மனம் சார்ந்த விசியமில்லை மனமும் உடலும் சார்ந்த ஊடல் சேர்ந்த கூடல் வாழ்க்கையே காதல்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் உணர்ச்சியை துடைத்தவனாக வேனி எனக்கு பசிக்குது சீக்கிரம் குளிச்சிட்டு வந்து எதன பண்ணித்தா என்றான் அவள் முகத்தைப் பார்க்காமல்.....
போச்சி இளா செத்தோம் இப்ப தான் கொஞ்சம் நல்ல பேச ஆரம்பித்தான் அதுவும் போச்சு.எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கனுமா என்று நினைத்தவளுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. எதுவும் கூறாமல் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN