வசந்தம் -5

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாலாவின் நெற்றியில் கை வைக்க நெருப்பாய் சுட்டது.
"என்ன பாலா, இவ்ளோ காய்ச்சல் அடிக்குது. நான் வந்தப்பவே உன்னோட முகத்தை பார்த்து காய்ச்சல்னு தான் நினனச்சேன். நீ வெளியவே நிக்கவச்சு பேசுனதும் கோவத்துல நான் பாட்டுக்கு இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்துட்டேன். வா டாக்டர் கிட்ட போகலாம் . "
"அதெல்லாம் வேண்டாம் நிலா. லேசான காய்ச்சல் தான். மாத்திரை போட்டுட்டா சரியாகிடும்."
"சரி சாப்டியா? "
"இல்.... இனி..... ஆஹ் சாப்பிட்டேன் நிலா." என்று உளறி கொட்ட, நிலா பாலாவை முறைத்தாள். பேசாமல் எழுந்து சமையல் அறைக்கு சென்றாள். அங்கு சமைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.
தன் பின்னாலேயே வந்த பாலாவிடம், "என்ன சாப்பிட்ட உடனே எல்லாத்தையும் கழுவி கமித்திட்டயா. வரவர ரொம்ப பொய் பேசற பாலா "
என்று வருத்தத்துடன் கூற,
"சாரி நிலா. நான் இப்ப தான் எந்திரிச்சேன். இனிமேல் தான் சமைக்கணும். "
"சரி நீ போய் லைட்டா ஃபிரெஷ் அப் ஆகிட்டு வா. நான் கொஞ்சம் கஞ்சி வச்சு தரேன். காய்ச்சல்க்கு அதுதான் நல்லது. கஞ்சி சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்குனா சரி ஆகிடும். "
"வேண்டாம் நீ ஆபீஸ் போ. நான் நிகில் இல்லனா ஹரியை வர சொல்றேன். "
" அவங்களுக்கும் இன்னைக்கு மீட்டிங் இருக்கு. அதுவும் இல்லாம உனக்கு பதிலா அவங்களாச்சும் கண்டிப்பா அங்கேயே இருந்தாகணும். அதோட நான் நாம்ம ரெண்டு பேருக்கும் லீவு சொல்லிக்கறேன். " என்று சொல்லிவிட்டு கஞ்சி வைக்க எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தாள்.
இதற்குமேல் நிலாவிடம் பேசி பயனில்லை என்று உணர்ந்து தன் வேலையை பார்க்க சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு ஹாலிற்கு வந்தான் பாலா.
நிலா கொடுத்த கஞ்சியை குடித்துவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டான். பிறகு நிலா பாலாவிடம்" ஏன் பாலா ஆன்ட்டி தனியா அங்கே இருக்காங்க. நீயும் இங்க தனியா இருக்க. பேசாம அவங்கள இங்க கூட்டிட்டு வந்துடலாமே."
"நானும் எவ்ளவோ கூப்பிட்டு பார்த்துட்டேன் நிலா. ஆனா அம்மா வரமாட்டேன்னுட்டாங்க. அப்பாவோட வாழ்ந்த வீடு நிலா. அப்பா இறந்ததுக்கு அப்புறம் அந்த வீடு தான் அம்மாக்கு அப்பாவோட நினைவுகளின் மிச்சம். அதோட அந்த இயற்கை சூழல்ல இருந்துட்டு சென்னைலாம் அம்மாக்கு ஒத்து வராது நிலா. "
"நீ சொல்றதும் சரிதான் பாலா. சரி நீ பொய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் உன் லேப்டாப்லேயே கொஞ்சம் ஒர்க்க பார்க்கறேன். "

பாலாவும் சரி என்றுவிட்டு தூங்க சென்றான். தன் அறைக்கு சென்ற பாலாவிற்கு ஏனோ நீண்ட நாள் கழித்து சந்தோசமாக இருந்தது. அந்த நிம்மதியிலேயே நன்றாக உறங்கினான்.
பிறகு பாலா எழும் போது மணி நான்காகி இருந்தது. ஹாலிற்கு வந்தான். மிளகு ரசத்தின் வாசம் பசியை தூண்டியது. நிலா மடிக்கணனியில் ஏதோ செய்து கொண்டிருந்தவள் பாலாவை பார்த்ததும்,
"வா பாலா சாப்பிடலாம் "என்று அழைத்தாள்.
"நீ சாப்டியா நிலா "
"இல்லை. உன்கூட சாப்பிடத்தான் வைட்டிங். உனக்கு காய்ச்சல் இப்ப எப்படி இருக்கு. "
"காய்ச்சல் விட்ருச்சு நிலா. வா போய் சாப்பிடலாம். ரசம் வாசம் தூக்குது."
இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிக்கொண்டே சாப்பிட்டனர். பாலாவிற்கு இது எப்போதும் தொடராதா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் நிலாவை பார்த்து
" நிலா ஒருவேளை நான் உனக்கும் பிடிக்காததை ஏதாச்சும் பண்ணா என்னை மன்னிச்சுரு. எந்த காரணம் கொண்டும் என்னோட பிரண்ட்ஷிப் மட்டும் வேண்டாம்னு சொல்ல கூடாது. ஏன்டா இப்டி பன்னேனு ரெண்டு அடிகூட அடிச்சுக்க. ஆனால் பேசாம இருக்க மாட்டேன்னு எனக்கு ப்ரோமிஸ் பண்ணு" என்று கையை நீட்டினான்.
"என்ன பாலா லூசு மாதிரி பேசற. நான் எதுக்கு உன் கூட பேசாம இருக்க போறேன்"
"நீ ப்ரோமிஸ் பண்ணு "
"ஓகே ஓகே....ஐ ப்ரோமிஸ்... உன் பிரண்ட்ஸிப்பை எப்பவும் எதுக்காகவும் விட மாட்டேன் போதுமா... சரி இப்ப சொல்லு உனக்கு என்ன பிரச்சனை? "
"ஹ்ம்ம்...அது வந்து.....நான்... நீ கோவிச்சுக்க கூடாது.... "
"நான் ஏன்டா கோவிச்சுக்கறேன்" (கொஞ்சம் கடுப்பாகிற நேரங்களில் மரியாதை காணாமல் போய்விடும் )

"பாரு இப்பவே கோவிக்கற "
"இப்ப நீ சொல்லல அடி கொன்றுவேன். சொல்லித்தொலை "
'ஐயோ இப்ப சொன்னாலும் கொள்ளுவா. சொல்லாவிட்டாலும் கொன்றுவா.எப்டியோ பாலா உனக்கு டெத் கான்பார்ம்' என்று மனதிற்குள் புலம்பிகொண்டே வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு ஒருவழியாக,
"நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் நிலா "என்று ஒரு வழியாக சமாளித்துவிட்டான்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN