வசந்தம் -6

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

பாலாவின் பதிலை கேட்ட நிலாவிற்கு திகைப்பும் படபடப்பும் தான் வந்தது. அது சட்டென கோவமாக மாறியது.
"ஓ !அதனால் தான் சார் எங்க கிட்ட கூட பேச நேரமில்லாம பிஸியா திரிஞ்சிங்களா.. ஒரு நிமிஷம் நீ எல்லார்கிட்டயும் ஓரளவு பேசிட்டு தான் இருந்த.என்னய பாத்து தான் தெறிச்சு ஓடுன.. புரிஞ்சுடுச்சு... என்கிட்ட பேச கூடாதுனு உன் லவ்வர் சொல்லிட்டாங்களா.. அவ சொன்னா நீ பேச மாட்டியா.... "என்று அவள் பாட்டுக்கு பேசிகொண்டே செல்ல
"ஐயோ நிலா ! நான் அவளை லவ் பண்றது அந்த பெண்ணுக்கே தெரியாது... "
"ஹான்ன்... என்ன பாலா சொல்ற. நீ இன்னும் ப்ரொபோஸ் பண்ணலயா? "
"இன்னும் இல்லை. அதான் ஒரே டிஸ்டர்பிங்கா இருக்கு. நீ சொல்லு நிலா.. என்னை அந்த பொண்ணு அக்ஸப்ட் பண்ணிக்குமா...என்கிட்ட ஏதாச்சும் குறை இருக்கா. நான் கேட்டா வேண்டாம்னு சொல்லாது தான? " 'இப்ப எப்படியும் நீ ஓகே சொல்லிடுவ தேனு செல்லம் ' என்று சந்தோச பட்டுக்கொண்டான்.
ஆனால் நிலாவோ அவனது கேள்வியை கேட்டு கடகடவென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
பாலாவோ மனதிலே' நான் இப்போ என்ன கேட்டேன்னு இப்படி சிரிக்கறா ' என்று நொந்து கொண்டான்.
ஒருவழியாக சிரிப்பை நிறுத்தியவாறே,"நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? இந்த கதைல சினிமால வர மாதிரி, ஹீரோ போய் தன்னோட லவ்வர் கிட்ட லவ்வ சொல்ல தைரியம் இல்லாம அவள் கிட்ட போய் நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். பட் அவளுக்கு என்ன பிடிக்குமான்னு தெரியல. அவ என்னை வேண்டாம்னு சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுனு சொல்லி பீல் பண்ணுவான்.
அதுக்கு அந்த பொண்ணு உன்னை போய் பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா. நீ எவ்ளோ நல்ல பையன்னு சொல்லுவா. உடனே அவன் அதேயே சாக்கா வச்சு அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லிருவான்". அப்படி இருக்கு நீ சொல்றது.
'அடிப்பாவி !ஆனாலும் தேனும்மா! நீ இம்புட்டு அறிவாளியா இருக்க கூடாது' என்று மனதிற்குள் புலம்பினான்.......

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN