ஆர்யா தன்னை காதலிப்பது தெரியவந்த நாள் முதல் ரோஜாவால் இயல்பாக இருக்க இயலவில்லை. குடும்பச்சுமையை தாங்கி நிட்பவளுக்கு இந்த காதல் சுமை அவ்வளவு ஒன்றும் பாரமில்லை தான் ஆனால் அந்த காதலினால் தன்னுடைய கவனம் சிதறிவிடுமோ என்று தான் பயந்தாள். எப்படியோ இதெல்லாம் வேண்டாம் என்று கூறி அவனிடமிருந்து விலகிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தாள். அவனை சந்தித்து பேச ஏற்பாடு ஒருவழியாக செய்தாயிற்று.

அது ஒரு மாலை நேரம் அதுமட்டுமின்றி நீண்ட அகண்ட பிரதான சாலை..அங்கு அவ்வளவு கூட்ட நெரிசல்கள் எதுவும் இல்லை.. கண்ணுக்கு எட்டின தூரம் வரை யாரும் இல்லை என்றாலும் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறியவளாய் அவளே தொடர்ந்தாள்.

"ஆர்யா...எப்படி இருக்கீங்க, நீங்களும் கலையும் ஒரே க்ளாஸாமே காலேஜ்ல..எப்படி போகுது ஸ்டடிஸ்" என்று எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆர்வமானவள் போல் கேட்டு முடிக்க...

"ஆமாம் நானும் கலையும் ப்ரண்ட்ஸ் தான். ஆமாம் கலை உங்கள் கிட்ட எதாவது சொன்னாளா"?

"ம்ம்ம் " என்று மட்டும் சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டாள். அவனோ அவளின் மௌனத்தை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியாமல் தன்னை பற்றி முழுவதுமாக சொல்லி வைத்தான்.

"எனக்கு ஒரு அண்ணன் இரண்டு அக்கா...அப்பா அம்மா பெரியம்மா னு என்னை சுற்றி கூட்டம் அதிகம். ஆனால் அவ்வளவு பேரு இருந்தும் எதையோ மிஸ் பண்ற உணர்வு. அப்போ தான் புரிந்தது நான் உங்களை விரும்புகிறேன் அப்டினு" என்று நேருக்கு நேராக அவனை பார்த்து சொல்லவும் அவளும் தன்னுடைய கருத்தை சொல்ல எத்தனித்தாள்.

"இ...இங்க பாருங்க ஆர்யா..நீங்க சொல்லும்போதே புரியுது உங்களை அன்பாக ஆதரிக்க நிறைய உறவுகள் இருக்கு ஆனால் எனக்கு அப்படியில்லை ஒரு தம்பியும் தங்கையும் மட்டுமே. அதுவும் எனது வழிநடத்துதலில் அவர்கள் வாழ்கிறார்கள். நான் காதல் அது இதுனு நினைப்பை திசை மாத்திட்டா அப்றம் அவங்க வாழ்க்கை பாதிக்கும்" என்று சொல்லவே அவனும் சற்று யோசிக்க செய்தான்.

"என்ன ஆர்யா யோசிக்கிறீங்க"

"இல்லை.. உங்களை இன்னும் ஆழமாய் லவ் பண்றேன். உங்கள் குடும்ப பாரத்தை நானும் சுமக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். உங்கள் பதில் இப்பவும் நோ அப்படினா நான் உங்களுக்கு ஒரு நண்பனாக இருப்பேன். ஓகே னா உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக இருப்பேன் "

எஸ் ஆர் நோ...அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளால் பதில் சொல்லவும் இயலவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. எனவே சற்று கலங்கின அவளது கண்கள்.

குடும்ப பாரத்தை ஒருவன் சுமக்க தயாராகும் போது அது எப்படி சாத்தியமாகும் உண்மையான காதல் இல்லாவிட்டால். ஆம் ஆர்யா தன்னை முழுவதுமாக காதலிக்கிறான் . இதை வேண்டாமென தவிர்த்தல் நல்லதன்று.

"ஆ..ஆர்யா"

"சொல்லு"

"ஐ....லவ் யூ" என்று சொல்லி முடிக்க அது நிஜமா கனவா என்று சோதனை செய்தவன் அது உண்மையே என்று புரிந்து கொண்டு மனம் நிறைந்தவனாய் அவளை விடைப்பெற்று சென்றான்.

ஆராதனா ஆகாஷ் காதல் விஷயம் ஒரு முடிவுக்கு வந்தது. பெரியவர்கள் ஒப்புக்கொண்டு அவர்களுக்கு கோவிலில் திருமணம் செய்துவைத்தனர். அவ்வளவு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதை நினைத்து ஆகாஷ் மனநெகிழ்வில் மூழ்கினான். விரைவில் ஒரு பிள்ளையை பெற்று தன் அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் அத்துடன் கடமையும் ஓய்ந்தது. என்று நினைத்தவன் ஆராதனாவுடன் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். அதற்கு பரிசாக அவள் மூன்றே மாதத்தில் நல்ல செய்தியும் சொல்லிவிட அவளுடைய மாமியாரிற்கு மனம் பூரித்தது.

"ஆராதனா... வா ஜூஸ் சாப்பிட்டு படு"

"சரிங்க அத்தை"

இப்படி பல உபசரிப்பு எல்லாம் நன்றாகவே நடந்தது. இதைப்பார்த்த ஆகாஷிற்கு உலகமே தன் கையினில் வந்துவிட்டது போல ஓர் உணர்வு. ஆராதனாவிற்கோ...லேட் மேரஜ் பற்றின பயமெல்லாம் பறந்தோடியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.

அவள் கருவுற்ற செய்தி எல்லோர் காதுகளுக்கும் தேனாய் பரவியது. பங்கஜமும் ஏழுமாத கர்ப்பிணி என்பதால் ஒரு துணை வேண்டும் என்று பெங்களூரிற்கே வந்துவிட்டாள். ஆகாஷின் வீடோ கலைகட்டியது. மகிழ்ச்சியை தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.