வசந்தம் -11

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

நிலாவிற்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அவகாசம் தேவைப்பட்டது... அதனால் அலுவலகத்திற்க்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள்.... ஓரளவு மனதை சமன் படுத்தியிருந்தாள்....

பாலாவின் நிலை தான் மோசமாக இருந்தது.. முதல் இரு நாட்கள் அவளுக்கு யோசிக்க தனிமை வேண்டும் என்று பொறுமையாக இருந்தான்.... இரவு நேரங்களில்

"என்னடா தேனுமா மாமாவை பார்த்தால் பாவமா இல்லையா..... எதுக்கு என்னய இப்படி காக்க வைக்கறீங்க...
எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்குடி...."

என்று சோக கவிதை வாசித்தான்.... பாலா இப்படி தாடி வளர்க்காத தேவதாஸ் போல அலைவதை பார்த்த நிகில் அலுவலகத்தில் ஒரு நாள் தனியாக கேன்டீன் அழைத்து வந்தான்....

"மச்சி என்ன ப்ரோப்லம்...நிலாவும் ஆபீஸ் 5 டேஸ் லீவு போட்ருக்கா... நீயும் ஒரு மாதிரியாவே அலையற.... என்ன ஆச்சு? "

பாலாவும் அன்று நடந்த அனைத்தையும் சொன்னான்... பிறகு,

"நானும் நிலாவுக்கு டைம் குடுக்கணும்னு அதுக்கு அப்பறம் நான் அவகிட்ட ஏதும் பேசலடா... ஆனாலும் பாக்காம பேசாம கஷ்டமா இருக்கு நிகில்..."

"எதுக்கும் பேசி பாரு பாலா.... அப்புறம் நீயும் இப்படியே இருக்காத... எல்லாரும் உன்ன கவனிக்கிற மாதிரி நடந்துக்காத... ஒருவேளை நிலா நோ சொல்லிட்டா என்ன பண்ணுவ பாலா... "

"கஷ்டமா தான் பாலா இருக்கும்... ஆனால் கண்டிப்பா நிலாவை போர்ஸ் பண்ணமாட்டேன் நிகில்.... ""ஆனால் நிலவுக்கும் என் மேல லவ் இருக்குன்னு நினைக்கறேன் நிகில்... "

"எப்டியோடா நல்லது நடந்தா சரி... சரி வா போகலாம்... "

வீட்டிற்கு வந்த பாலா நிலாவின் போனிற்கு கூப்பிட்டான்... ஆனால் நிலா அவன் நம்பரை பிளாக் செய்திருந்தாள்... ஏனோ கோவம் கோவமாக வந்தது...

ப்ளீஸ் கண்ட்ரோல் பாலா... இதுக்கே கோவப்பட்டா ஒன்னும் பண்ண முடியாது.. நாம பேஸ் பண்ணவேண்டியது இன்னும் நிறைய இருக்கு....

மதுவிற்கு போன் செய்தான்... நார்மல் ஆக சில வார்த்தை பேசிய பின் மதுவிடம்,

" மது நிலா எப்படி இருக்கா? "

"நல்லார்க்கா பாலா... பட் இதுக்கும் மேல அவளை பத்தி ஏதும் கேக்காதீங்க என்னால சொல்ல முடியாது... சாரிண்ணா..... நான் அவளுக்கு ப்ரோமிஸ் பண்ணிருக்கேன்... "

"பரவாயில்லை மது..." என்று சொல்லிட்டு போனை வைத்துவிட்டான்....

நிலவே நீ மேகத்தில் மறைந்து

இருந்தாலும்

உன் வெளிச்சம் மறைவதில்லை...

தேனே உன் காதலை மறைத்தாலும்

உன் நெசப்பூவின் வாசம்

என்னை வீட்டு நீங்குவதில்லை.....


என்ற கவிதையினை டைரியில் எழுதிவிட்டு... தேனும்மா நாளைக்கு மாமா உன்னை பாக்க வரேன்.... இப்போதைக்கு கனவுல தான் டூயட் ஆட போறேன்.... என்று வழக்கம்போல் தலையணையை அணைத்து படுத்துகொண்டான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN