வசந்தம் -12

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

ரூம் போட்டு யோசிப்பது... அப்டினு சொல்லுவோமே அது போல தான் நிலா செய்ததும்.... அப்படி யோசித்து தனக்கு இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் உள்ள மூளையை கொஞ்சமாக உபயோகித்து ஒரு வழியாக பாலாவை விட்டு தள்ளி இருக்கும் முடிவை எடுத்து பாலாவின் தலையில் குண்டை போட்ட முடிவு பண்ணி இருந்தாள்...

இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையிலேயே விதி சோதித்து பார்க்கும் என்று அவள் கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை...

இன்று கோவிலுக்கு சென்றால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று கோவிலுக்கு கிளம்பியிருந்தாள்.. மதுவும் தன் அலுவலகத்திற்க்கு கிளம்பி சென்றிருந்தாள்...

அப்போது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு யாராக இருக்கும் என்று யோசித்தவாறே கதவை திறந்தவள் முன் நின்றது அவள் சற்றும் எதிர் பாரத நபர்...

ஆம் சாட்சாத் நம் பாலாவே தான்....

இவன் இந்த நேரத்தில் ஆபீஸ்க்கு போயிருக்கணுமே... இங்க என்ன பண்றான்.. என்ற யோசனையை கலைத்தது பாலாவின் குரல்....

"என்ன தேனும்மா.. உனக்கும் நம்ம விருந்தோம்பல் பழக்கம் எல்லாம் மறந்து போச்சா... நான் வேணும்னா உங்க அம்மாவிடம் போன் பண்ணி கேட்கட்டுமா? "

அவனின் தேனும்மா வில் சிலையானவள் அவன் கடைசி வாக்கியத்தில் உயிர் பெற்றாள்... உடனே சற்று சுதாரித்து,

" இல்லை... சாரி பாலா ... உள்ள வா... வாங்க.... "

நிலாவின் விளிப்பில் வருந்தியவன்.. இப்பதான் வந்துருக்கோம் பொறு பாலா என்று தன்னை நிலை படுத்தினான்...

"எங்கயாச்சும் கிளம்பி இருக்கியா தேனு.."

"ஆமாம்"

" எங்க தேனு... நானும் வரேன் ரெண்டு பேரும் போலாம் "

"முதலில் என்னை தேனுண்ணு கூப்பிடாதீங்க... நான் எங்கயும் வரல... " அவன் தேனுவின் அழைப்பில் உருகும் தன் மனதின் மேல் உள்ள வெறுப்பு பாலாவின் மேல் கோபமாக மாறியது...

" ஓகே ஓகே... கூல்... நான் அப்படி கூப்பிடல... சரி நாமதான் எங்கயும் போகலேயே.. கொஞ்சம் உக்காந்து பேசலாம்.. "என்று சோபாவில் அமர்ந்தவாறே கூறினான்... நிலாவும் வேறு வழியின்று பல்லைக்கடித்துக் கொண்டு அமர்ந்தாள்...

"சரி நிலா அன்னைக்கு ஏன் நீ சொல்லாம கூட வந்துட்டா... நானே எல்லா ஒர்க்-ஐயும் செய்யவேண்டியதா போச்சு.. " என்று ஒன்னும் தெரியாதவன் போல கேட்க,

எருமை எருமை அப்டியே ஒன்னும் தெரியாதவன் மாதிரி பேச்சு என்று மனதிற்கு திட்டிக்கொண்டு" அப்டியா சாரி... எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை "

" சரி அத விடு.. அப்புறம் நான் ஒரு பொண்ண லவ் பன்றேன்னு சொன்னேன்ல... "

அவன் இப்படி விசயத்திற்கு வருவான் என்று எதிர்பார்க்காத நிலா படபடப்புடன் சற்று கோவமாக "அதுக்கு இப்ப என்ன... "

"அந்த பொண்ணு பேர்கூட என்கிட்ட கேட்டுட்டே இருந்தயே... அது யாருன்னு நான் சொல்லலாம்னு இருக்கேன் " என்றதும்தான் தாமதம்........நிலா சட்டென எழுந்து கொண்டாள்... பின் தன் பதட்டத்தை மறைக்க முகம் கோப முலாம் பூசிக்கொண்டது....

"எனக்கு இப்ப எதுவும் தெரிய வேண்டாம் " என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து வேகமாக சென்றவளின் கைகளை பிடித்து தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்.. அவளை சற்று அணைத்தவாறே பேச ஆரம்பித்தான்.

"தேனும்மா மாமா உன்னை ரொம்பவும் லவ் பண்றேன்டா.. இந்த மாமாவை உனக்கு பிடிச்சிருக்கா... என்னய கல்யாணம் பண்ணிக்கறயா..... " என்று காதோரம் உரசி ரகசியம் போல பேசினவன் காதலில் உருகி கரைந்து அவன் கைகளில் தோய்ந்து போனாள்..

சட்டென அவனின் அணைப்பு இருக்க தன் நெற்றியில் பதிந்த அவன் இதழ் சுகந்தத்தில் மேலும் புதைந்து போனாள்..

இருவரின் மெய்மறந்த நிலையை கலைக்கவென வந்த பாலாவின் கைபேசி அழைப்பில் உயிர் பெற்றாள்... தான் பண்ணிய தவறு புரிந்து சட்டென அவனை விட்டு விலகியவள் பாலாவை நிமிர்ந்தும் பாராது தன் அறைக்குள் சென்று கதவை அடைத்தாள்...

அவளின் இந்த செயலில் பாலாவின் மோன நிலை கலைந்தது... நிலாவின் அறைக்கதவின் அருகே சென்றவன் நிலாவின் விசும்பல் சத்தம் திகைக்க வைத்தது....

"தேனும்மா ஏன்டா அழற... சாரிடா என்னையும் அறியாமல் கொஞ்சம் ஓவரா போய்ட்டேன்.. அதுக்காக நீ ரெண்டு அடிகூட அடிச்சுக்க...நீ அழாத... "

"பாலா ப்ளீஸ் இங்க இருந்து போய்டுங்க... நா உங்களை லவ் பண்ணல..பண்ணவும் மாட்டேன். நான் தனியாக இருந்ததை நீங்க யூஸ் பண்ணிடீங்க.. இங்க இருந்து போங்க.. என்று வேண்டுமென்றே பாலாவிற்கு கோபம் வருவது போல் பேசினாள்....

இதை கேட்ட பாலாவிற்கு வந்த கோவத்தில் அங்கு இருந்த எதையோ உடைத்து விட கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டது.........
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN