மாலை மயங்கி இருள் கவிழ தொடங்கிய நேரம்....

அன்று விடுமுறை நாள் என்பதால் கடற்கரையில் மக்கள் ஆரவாரம் அதிகமாகவே இருந்தது...

அந்த கூட்டத்திலிருந்து தனியாக ஒதுங்கி அமர்ந்திருந்தனர் நிலாவும் பாலாவும்....

நிலா தன் முழங்கால்களை கட்டி அதன் மேல் தன் முகத்தை தாங்கியவாறு கடலை வெறித்து கொண்டிருந்தாள்... அவளுள் தைரியம் வந்து விட்டிருந்தது.... பாலாவிடம் பேசி புரிய வைத்து விட வேண்டும்.. இதற்கு மேல் அவனுடைய ஆசைகளை வளர விடுதல் தவறு... என்று தன் எண்ணங்களில் முழ்கி இருந்தாள்....

பாலா அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்தான்... என்னதான் அவனின் பார்வை கடலை நோக்கி இருந்தாலும் தன்னவளை ரசிக்க தவற வில்லை....

தலைக்கு குளித்திருந்ததால் கடல் காற்று அவள் முடிகளை கலைத்து விளையாடியது. கொஞ்சம் தளர்வாய் பின்னிய அவள் கூந்தலில் கோவிலில் கொடுத்த சிறு மல்லிகை சரம் இருந்தது. அது அவன் நாசிக்குள் நுழைந்து பரபரப்பை ரத்த நாளங்களில் உண்டாக்கியது... கோவிலில் கொடுத்த குங்குமம் விபூதியோடு நெற்றியில் இருந்த பொட்டோடு போட்டி போட்டு கொண்டு அவளை மேலும் அழகாக்கியது... அவளது முகத்தை எந்த துடித்த கைகளை வலுக்கட்டாயமாக மணலினுள் விளையாட வைத்தான்.... பிறகு பேச ஆரம்பித்தான்..

"சோ... நீ அன்னைக்கு வேணுமின்னே என்னை ஹர்ட் பண்ணிருக்க... "

அந்த கேள்வியில் நிலா தன் சிந்தனையில் இருந்து மீண்டாலும் பாலாவை பார்க்காமலே ஆமாம் என்பது போல மேலும் கீழும் தலையை ஆட்டினாள்..

"சரி ஏன் அப்படி செஞ்ச "

இதற்கு நிலாவிடமிருந்து பதில் இல்லை.

"நான் அதனால் எவ்ளோ ஹர்ட் ஆனேன் தெரியுமா? "

"சாரி "

"என் மனசு சமாதானம் அடையலயே "

"சரி நான் என்ன பண்றது... "

"எதும் பண்ண வேண்டாம்.... உன் காலை மட்டும் கொஞ்சம் நீட்டு "

"ஏன் கால்ல விழ போறீங்களா "

"நீ நீட்டுனா நான் சமாதானம் ஆகிடுவேன்... "

நிலாவும் அப்டி என்ன பண்ண போறான் என்று யோசித்து கொண்டே கால்களை நீட்ட பாலா டக்கென நிலாவின் மடியில் படுத்துகொண்டான்....

இதை சற்றும் எதிர்பாராத நிலா பதறி விலக பார்த்தாள்... ம்ஹும் அசைய முடியவில்லை.. பாலா நிலாவின் கால்களை பிடித்தவாறு படுத்திருந்தான்...

நிலாவிற்கு ஒரு மாதிரி நடுங்கவே ஆரம்பித்து விட்டது... பேச நினைத்தாலும் காற்று தான் வந்தது... எப்படியோ கஷ்டப்பட்டு பாலாவிடம்,

"பாலா ப்ளீஸ் எழுந்திருங்க... பப்ளிக் பிளேஸ்... யாராவது பார்க்க போறாங்க... "

"அதெல்லாம் ஒருத்தரும் பாக்க மாட்டாங்க... சுத்தி பாரு "

அப்போது தான் நிலா சுற்று புறத்தை கவனித்தாள்...இருட்ட துவங்கி விட்டதால் பெரும்பாலானோர் சென்றிருந்தனர்.. அங்கங்கு சில ஜோடிகள் மட்டுமே.... அவர்களின் நிலை இவர்களை விட அதிகம்.... சட்டென்று ஒரு ஜோடி முத்த மிட்டு கொண்டதை கவனித்தவள் முகம் செவ்வானம் ஆனது...

அதை பாலாவிடம் இருந்து மறைக்க நினைத்து அவனை பார்க்க அவன் நிலாவின் மடியில் மல்லார்ந்து படுத்தவாறு அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்..

ஏனோ அந்த மோன நிலையில் நிலாவின் கைகள் அவளையும் அறியாது பாலாவின் கேசத்தை கோதிக்கொண்டிருந்தது...

அவளின் இந்த செயலில் பாலா அடைந்த உணர்வு வார்த்தைகளால் அளவிட முடியாதது...

"தேனும்மா "

"சொல்லு பாலா "

"என்னால நம்ப முடிலடா... இது நிஜந்தானா.... இது தொடரும் தான... எந்த காரணம் சொல்லியும் என்னை மறுத்தர மாட்டியே "

நிலா அவன் முகத்தை பார்த்தாள்... எப்பொழுதும் புன்னகை மின்னும் முகம்.. பார்த்தாலே வசியம் செய்யும் கண்கள்... நான் நேர்மையானவன் என்று சொல்லும் உதடுகள்... அகண்ட நெற்றி... முன் உச்சியில் புரண்டு விளையாடும் மயிற் கற்றைகள்.... இவனை இந்த நேரத்தில் மறுக்க எத்தனை தெம்பு தேவைப்படுமோ தெரியவில்லை...

மூளை வேண்டாம் என்று மறுக்க மறுக்க நிலாவின் முதல் முத்தம் பாலாவின் நெற்றியில் பதிந்தே விட்டது....

நிலாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பாராத பாலா திக்கு முக்காடித்தான் போனான். சட்டென அவள் மடியிலிருந்து எழுந்து நிலாவின் முகத்தை கையில் ஏந்தி அவள் முகமெங்கும் முத்தமிட்டான்...

தடுக்க விளைந்த கைகளை அடக்கி இந்த தருணம் மட்டுமே என் வாழ்நாள் முழுமைக்கும் போதும்.... இதனோடே நான் வாழ்ந்து விடுவேன்... உன்னை தவிர என் வாழ்க்கையில் யாரும் வரப்போவதில்லை..

என்று தான் மனதினுள் சத்தியம் செய்தாள்..

நிலாவின் இதழ் நோக்கி குனிந்த பாலாவை தன் ஒற்றை விரலால் தடுத்து...

பாலா நான் உன்னை ரொம்பவும் விரும்பறேன்... ஐ லவ் யு சோ மச்..... ஆனால் இதை இப்படியே விட்ரலாம்... என்னால உன்னோட காதலை அனுபவிக்க முடில... நான் சுயநலக்காரி.... நான் சில காரணங்களுக்காக என்னோட காதலை என்னோடவே வச்சுக்க விரும்பறேன்.. உன்மேல எனக்கு ஏற்பட்டிருக்கிற காதலை எவ்வளவோ மறைக்க நினச்சேன்.... முடில பாலா.. உனக்கு ஒரு வகையில் நா துரோகம் பண்ணிட்டேன்.. ப்ளீஸ் என்ன மன்னிச்சிரு பாலா... என்று அவனை கட்டிக்கொண்டு அழுதவள் சட்டென்று அவனை விட்டு விலகி ஓடினாள்.....

இவற்றை எல்லாம் சிலையென பார்த்துக்கொண்டு நின்றான் பாலா.........

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.