வசந்தம் -18

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

நேரமும் காலமும் யாருக்காகவும் நீ வா.. நான் வெயிட் பன்றேன்னு சொல்லி நிற்பதில்லை.. அது பாட்டுக்கு ரன்னிங் ரேஸ் கணக்கா ஓடிக்கிட்டு இருக்கு... நாமலும் அது கூட மூச்சு வாங்க கூட ரெஸ்ட் இல்லாம போய்கிட்டு இருக்கோம்...

நிலாவும் பாலாவும் மட்டும் விதிவிலக்கா என்ன.... அவர்களும் ஓடிக்கொண்டு தான் இருந்தனர்... அவர்கள் இருவரும் சாதாரணமாக பழகினாலும் மனதிற்குள் இருக்கும் காதல் ஒருவரை மற்றவர் அறியாமல் வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கிறது....

இப்படி இருக்கையில் ஒரு நாள் மாலை நிலாவின் அம்மாவும் அப்பாவும் வந்தனர்...

அப்போது பாலா நிலாவிடம் ஒரு பைலை கொடுக்க வந்தான்... நிலாவின் அப்பா அம்மாவை பார்த்து நலம் விசாரித்தான்..

"வாங்க அங்கிள்... வாங்க ஆன்ட்டி.. எப்ப வந்தீங்க.... கவி வரலையா (கவி நிலா.. நிலாவின் தங்கை )நீங்க நல்லாருக்கீங்களா?

"நாங்க நல்லாருக்கோம் பாலா ...நாங்க இப்பதான் வந்தோம்பா கவி அவங்க காலேஜ்ல டூர் கூட்டிட்டு போறாங்கனு போயிருக்காப்பா.... நீ எப்படி இருக்க.. ஊருல அம்மா எப்படி இருக்காங்க? "என்று கேட்டார் நிலாவின் தந்தை வீர ராகவன்...

"நான் நல்லாருக்கேன் அங்கிள்... அம்மாவும் நல்லார்க்காங்க....

பின்னர் அனைவரும் பொதுவாக பேசிகொண்டிருந்தனர்.. நிலா பாலாவின் பார்வைகள் மட்டும் ஒருவர் அறியாமல் மற்றவரை தொட்டு மீண்டது..

பிறகு பாலா நிலாவின் தந்தையிடம்
"அங்கிள் எங்க ஊருல அடுத்த வாரம் திருவிழா வருது... அப்பா இறந்ததுக்கு அப்புறம் ரெண்டு திருவிழால கலந்துக்கல. இந்த வருஷம் யாரையும் கூப்பிடல... அம்மா என் பிரண்ட்ஸ் மட்டும் கூட்டிட்டு வர சொன்னாங்க... நான் நிகில் மது கிட்ட கேட்டுட்டேன் வரேன்னு சொல்லிட்டாங்க.. நிலா கிட்ட கேட்கலாம்னு தான் வந்தேன்....
நீங்க சொல்லுங்க அங்கிள் நான் கூட்டிட்டு போகட்டுமா "

ராகவன் சற்று யோசித்தவாறே "எத்தனை நாள் பாலா.. "

"மூணு நாள் அங்கிள்.... நாலு பேரும் ஒண்ணா ட்ரெயின்ல போய்ட்டு திருவிழா முடிஞ்சு ஒண்ணாவே வந்துருவோம் அங்கிள் "

ராகவனும் சற்று யோசித்து விட்டு "சரிப்பா போய்ட்டு வாங்க.... ஆனால் பத்திரமா போய்ட்டு வாங்க... அப்பப்ப எனக்கு போன் பண்ணுங்க... ஓகேவா "

"ரொம்ப தேங்ஸ் அங்கிள்"என்று கூறிவிட்டு சென்றவன் பைலை கொடுக்காமல் கையோடு கொண்டு வந்திருக்க திருப்பி அதை கொடுக்கலாம் என்று சென்றவன் காதில் எதேச்சையாக அவர்கள் உள்ளே பேசிக்கொண்டது கேட்டது....

"என்னங்க நீங்க வயசுப்புள்ளய இப்படி பசங்களோட வீட்டுக்கு அனுப்பி வைக்கலாமா.. யாரகேட்டு அனுப்பி வைக்கறீங்க " என்று நிலாவின் அன்னை கோதாவரி ராகவனை திட்டினார்..

"இங்க பாரு கோதா நண்பர்களுக்குள்ள பசங்க என்ன பொண்ணுங்க என்ன... இப்ப மது கூப்பிட்டுருந்தா அனுப்பியிருக்க மாட்டோமா.... அது மாதிரி தான் இதுவும்... இப்பத்த பசங்களுக்கு நல்லது கேட்டது நல்லவே தெரியும்... பாலாவும் அவங்க அம்மாவும் ரொம்ப நல்ல டைப்.... இது எல்லாத்தையும் விட என் பொண்ண பத்தி எனக்கு தெரியும்.... சும்மா பொறியாத... "என்றவர் நிலா மற்றும் மதுவிடம் " ரெண்டு பேரும் பாத்து போய்ட்டு வாங்க.... பாலா அம்மாவுக்கு இங்க இருந்து ஏதாச்சும் பரிசு வாங்கிட்டு போங்க.. "

"சரிப்பா " என்றனர் கோரஸாக...

நிலாவின் அம்மாவும் பதிலுக்கு " அங்க போய் சும்மா சுத்தாமா அவங்க அம்மாக்கு கூடமாட ஒத்தாசை பண்ணுங்க "என்றார்

அவர்களும் உதவுவதாக சொன்னார்கள்... இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பாலாவிற்கு நிலா மறுப்பதன் காரணத்தின் நூல் கிடைத்து விட்டது போல் இருந்தது... அவனும் வந்த வழியே திரும்பினான் பைலை கொடுக்காமலே... அதே நேரம் நிலாவின் மனதிலும் பாலாவை விட்டு விலகும் உறுதி வந்தது....


💖💖💖

தடக் தடக்..... தடக் தடக்
தடக் தடக்......தடக் தடக்

ரயில் தஞ்சாவூரை நோக்கி சென்று கொண்டிருந்தது... அதில் இருவர் மனங்கள் மட்டும் எதிலும் ஒரு ஈடுபாடில்லாமல் கடனே என்று வெளியே வெறித்துக் கொண்டிருந்தனர்....

நிலாவின் பெற்றோர் வந்து சென்றதிலிருந்து நிலா பாலா இருவருக்கும் இடையே இடைவெளி அதிகம் ஆனது....

முதலில் இதை ஆரம்பித்தது நிலா தான்... பாலாவிடம் நிலா ஒதுக்கம் காமிக்க பாலாவும் ஒதுங்கி போனான்..விருப்பம் இல்லாமல் தான்.... காலம் அனைத்தையும் மாற்றும் என நம்பி அமைதியோடு இருந்தான்...

ட்ரைனில் கூட இருவருக்கும் பேசிக்கொள்ள வில்லை... இவர்கள் இருவரையும் நார்மல் ஆக்குவதற்கு மதுவும் நிகிலும் வம்பிழுத்து கொண்டே வந்தனர்..

நிலா பாலா இருவரும் எதிர் எதிராக ஜன்னல் ஓரமும் நிலாவின் பக்கத்துல மதுவும் பாலாவின் அருகில் நிகிலும் அமர்ந்திருந்தனர்...

"மது வா... நாம அடுத்த ஸ்டேஷன்லேயே இறங்கி சென்னை போயிரலாம் " என்று நிகில் கூற

"வா நிகில் போலாம் " என்று இருவரும் ஒரு அடி எடுத்து வைத்து மீண்டும் பாலாவையும் நிலாவையும் திரும்பி பார்க்க அவர்கள் காதில் விழுந்தது போலவே காட்டி கொள்ளவில்லை...

நிகில் கடுப்பாகி இருவரின் அருகிலும் சென்று மீண்டும் சத்தமாக சொல்ல அதிர்ந்து திரும்பினர் இருவரும்...

" எருமை எருமை எதுக்கு இப்படி கத்துற"
என்று பாலாவும்,

" ஏன் என்னாச்சு " என்று நிலாவும் முழிக்க

" பின்ன என்ன.... ரெண்டு பேரும் எந்த கப்பல் கவுந்து போச்சுன்னு இப்படி இருக்கீங்க... "

மது, "என்ன ரெண்டு பேருக்கும் திரும்ப என்னாச்சு.... ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்களே... திரும்பவும் என்ன பிரச்சனை "

நிலா, "அதெல்லாம் ஒன்னும் இல்ல... சும்மா வெளிய வெடிக்க பாத்துட்டு வரேன் அவ்ளோதான் "

"ஆமாம் ஆமா... வேற ஒன்னும் இல்ல.. நானும் வேடிக்கை பாத்துட்டு தான் வந்தேன்.. எங்குளுக்குள்ள என்ன பிரச்சனை ஒன்னும் இல்லையே.. இப்ப பாரு எப்படி பேசிட்டு வரோம்னு... மது நீ இங்க வா நான் அங்க வரேன்.. " என்று நிலாவின் பக்கத்தில் அமர்ந்தான்..

நிகில் "யப்பா உலக மகா நடிப்புடா... நிலா பையன் இதுதா சாக்குன்னு உன்கிட்ட வந்துட்டான்... " என்று சொல்ல பாலா நிகிலின் காலை மிதிக்க,

"ஐயோ அம்மா.... டேய் பால்கோவா என்னத்துக்கு டா என் காலை மிதிச்ச.... "

நிகிலின் பால்கோவாவில் நிலா சிரித்து விட

பாலா " நீ உன் திருவாயை மூடல உன்ன கொன்றுவேன் "

நிகில் கப்சிப் என்று இருக்கு கைகளாலும் வாயை மூடிக்கொண்டான்... அதை பார்த்த மதுவும் நிலாவும் வாய் வீட்டு சிரித்தனர்...

அப்போது சமோசா விற்று கொண்டு ஒருவர் செல்ல நிகில் பாலா கையை வேகமாக சுரண்டினான்..

" டேய் பிசாசே எதுக்கு இப்போ ரத்த காட்டேரி மாதிரி என்னை பிரண்டற.. "

நிகில் வாயை மூடிக்கொண்டு ம்..ம்.. ம் என்று முனக..

"வாயை திறந்து சொல்லித்தொலைடா "

"மச்சி மச்சி எனக்கு ஒரு சமோசா ப்ளீஸ் ப்ளீஸ்டா "

"அட க்ராதகா... இதென்ன வயிறா இல்ல குடோனா... இப்படி தள்ளிகிட்டே இருக்க "

"வளர புள்ள கண்ணு போடாதடா "

"என்னது வளர புள்ளையா.... அட வளந்து கெட்டவனே ஏற்கனவே நீ பனைமரத்துல பாதி இருக்கவ... இதுக்குமேல வளர்ந்த இந்த ட்ரைன பிச்சுக்கிட்டு தலை வெளியே போயிரும்.. மரியாதையா வாய மூடிக்கிட்டு உட்காரு.... "

ஆனால் நிகிலாவது சமோசாவை விடறதாவது.. மீண்டும் ரெண்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு தான் நிமிர்ந்தான்..

நிலா நிகிலை பார்த்து" இதெல்லாம் திருந்தாத ஜென்மம் "என்று தலையில் அடித்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து நிகில் வயிறு வலிக்குது என்று புலம்ப மது நிகிலின் தலையில் கொட்டி " கண்டதையும் உள்ளே தள்ள வேண்டியது.. இப்ப வயிறு வலிக்குது..... ம.....வலிக்குதுன்னு புலம்ப வேண்டியது..... வா வண்டி இந்த ஸ்டேஷன்ல கிராஸிங் போட்டுருக்காங்க.. எடுக்க லேட்டாகும் போய் சோடா குடிச்சிட்டு வரலாம்... என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.....

நிலாவும் பாலாவும் மட்டும் அமர்ந்திருந்தனர்...

"ஏன் பாலா நீ போகலையா "

"இல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணும் "

"சொல்லு பாலா "

" நீ உங்க அப்பாவுக்காக தான நம்ம லவ்வ வேண்டாம்னு சொல்ற "

நிலா திடுக்கிட்டு பாலாவை பார்த்தாள்.. பின் ஆமாம் என்பது போல தலையசைத்தாள்....

நிலாவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தவன் "நான் அம்மாட்ட சொல்லி அவங்க மூலமா உங்க அப்பாகிட்ட பேசறேன் நிலா... ப்ளீஸ் தேனும்மா உன்னை விட்டு இருக்க முடியும்னு தோணலடி.... "

நிலா மெதுவாக அவன் கையை விடுவிக்க முயற்சி செய்தாள்... பாலா மேலும் இறுக்கமாக பிடிக்க, " ப்ளீஸ் பாலா "
என்று சொல்லிவிட்டு கையைவிடுவித்து கொண்டாள்....

பின் ஜன்னலோரம் திரும்பியவாறு பேச ஆரம்பித்தாள்..

"சாரி பாலா.... நான் எங்க அப்பா கிட்ட பேச முடியாம இல்ல பாலா... நான் கேட்டா எங்க அப்பா மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க பாலா.. ஆனால் என்னால கேட்க முடியாது.... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ...

"பாலா சட்டென எழுந்து கை கழுவும் இடத்திற்கு சென்றான்... குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கோவத்தை சற்று குறைத்து கொண்டான்... பின் எதுவும் பேசாமல் நிலாவின் எதிர்புறம் அமர்ந்து வெளிப்புறத்தை வெறித்தான்...

சோடா வாங்கிட்டு வந்த நிகிலும் மதுவும் இவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN