வசந்தம்- 23

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர்... பாலா எடுத்து வந்த துணிகளை சாமி படத்திற்கு முன் பூஜை செய்து விட்டு அனைவர்க்கும் தந்திருந்தார் கோதை ...

பாலாவும் நிகிலும் வேட்டி சட்டையில் அசத்தினர்.... எல்லாரும் தயாராக இருந்தனர்..... நிலா மதுவிற்காக காத்திருந்தனர்....

"இந்த பொண்ணுங்க ஏன் தான் ரெடி ஆக இவ்ளோ லேட் பண்றங்கனே தெரிலடா... "

"நாம என்னடா வேட்டி சட்ட போட்டு தலையை ஜஸ்ட் ஓதுக்கிட்டு வந்தர்ரோம்... ஆனால் அவங்கள யோசுச்சு பாரு அவ்ளோ நீள புடவைய நீட்டா கட்டிட்டு வர வேண்டாமா... பொறுமையா இரு வருவாங்க.... " என்று சொன்னவன் அப்போது தான் நிகிலை பார்க்க அவன் ஆவென்று எதையோ பார்த்து கொண்டிருக்க

"எதை இப்படி பார்க்கிறான் " என்று தான் பார்வையை திருப்பியவனுக்கு இமை மூடி திறக்க கூட மறந்தவனாகி போனான்..

அங்கு நிலாவும் மதுவும் தயாராகி வந்தனர்... அதை பார்த்து தான் இவர்கள் இப்படி நின்று கொண்டிருந்தனர்...

மது மயில் கழுத்து கலரில் ரோஜா நிற பார்டர் வைத்த புடவையும் நிலா மஞ்சள் கலரில் ரோஜா நிற பார்டர் வைத்த புடவையும் கட்டியிருந்தனர்...

நிலா வெள்ளையும் ரோஸ் நிற கற்கள் பதித்த ஆரமும் அதற்கு மேச்சாக கற்கள் வைத்த ஜிமிக்கியும் போட்டிருந்தாள் மல்லிகை சரம் அவள் நீண்ட கூந்தலை அலங்கரித்தது.... காதோரத்தில் மஞ்சள் ரோஜா ஒன்றும் அலங்கரித்தது....

மதுவும் அவள் புடவைக்கு பொறுத்தமான நகைகளுடன் ஜொலித்தாள்...

இருவர் கண்களும் தான் இணையின் கண்களோடு உறவாட மறக்கவில்லை..

நால்வரும் கோதையின் அழைப்பில் தங்களை மீட்டனர்.... பிறகு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்...

பிறகு கோவிலில் வான வேடிக்கை பூத்தட்டு.... எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தனர்....

நிலா அவ்வப்போது பாலாவின் கையை பிடித்தால் அவன் உதறிவிட்டு சென்று விடுவான்.... நிலா பாலாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்...

இரவு அன்னதானம் சாப்பிட்டனர்.. பின் முத்து மாரியம்மன் தெருக்கூத்து நாடகம் போட விருப்பதால் கோதை பார்க்கலாம் என்று சொன்னதால் மேடையின் முன்பு இருந்த மணலில் பாய் விரித்து அமர்ந்தனர்..

நடுவில் கோதை எடுத்து பாலா பாலாவின் அருகில் நிலா மற்றோரு புறம் நிகில் மது அமர்ந்திருந்தனர்....

நாடகம் ஆரம்பித்து சில நேரம் கழித்து பாலா விருட்டென எழுந்து நின்றான்...

"ஏன்பா எழுந்துட்ட"

"எனக்கு தலை வலிக்குதுமா.. நான் வீட்டுக்கு போறேன்... "

"சரிப்பா பாத்து போ "

"அத்தை நானும் போறேன்... எனக்கு தூக்கம் வருது... "

பாலா "அப்ப வாங்க எல்லாரும் போலாம் "

"ஆமா போலாம்" என்று எழ முற்பட்ட நிகிலை இழுத்து அமர்த்திய மது, "நாங்க இந்த மாதிரிலாம் பார்த்தது இல்லை பாலா.. அம்மாவும் ஆசை படறாங்க நாங்க இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வரோம் நீங்க முன்னாடி போங்க "

"அப்போ நானும் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து உங்களோடயே போய்க்கறேன்.. "

"ப்ச் பாலா தலைவலியோட இருந்தா வலி இன்னும் அதிகம் ஆகும் நீங்க போங்க "

சரியென்று பாலா நிலாவை அழைத்து கொண்டு சென்றான்....

வீட்டிற்கு சென்று ட்ரைவரை திருப்பி கோவிலுக்கு அனுப்பி விட்டு உள்ளே வந்தான்..

நிலா பாலாவிற்காக டீ போட சமையல் அறை சென்றாள்...

டீ போட்டுவிட்டு பாலாவின் அறைக்கு சென்றாள் அங்கு அவன் இல்லை.. வீடு முழுதும் தேடிவிட்டு இறுதியாக மொட்டை மாடிக்கு வந்தாள்..

சிலு சிலுவென்று வீசிய காற்று அந்த நேரத்தில் இதமாக இருந்தது.. பௌர்ணமி ஆதலால் நன்று வெளிச்சமாக இருந்தது....


பாலா அங்குதான் இருந்தான்... வெறும் தரையில் மல்லாக்க படுத்துக்கொண்டு இரு கைகளையும் மடக்கி தலையின் கீழ் வைத்து கொண்டு வானத்தில் இருந்த நிலவினை வெறித்திருந்தான்...

அவன் அருகில் சென்ற நிலா அவன் அருகில் குத்து காலிட்டு அமர்ந்தாள்... அப்போது தான் அவள் வரவை உணர்ந்தவன் திடுக்கிட்டு எழுந்தான்..

"ஏய் இங்க என்ன பண்ற "

"தலை வலிக்குதுன்னு சொன்னில.. அதான் டீ கொண்டு வந்துருக்கேன்.. இந்த பாலா.. "

"எனக்கு எதும் வேண்டாம்... நீ கீழே போ "

"என்ன மாமா.. எதுக்கு இப்ப கத்தற " என்று கூறிவிட்டு அவனை இடித்து கொண்டு நநெருங்கி அமர்ந்தாள்"

"இங்க பாரு... நான் உனக்கு மாமா இல்லை புரியுதா... "என்று நகர்ந்து அமர்ந்தான்...

"நீ எனக்கு மாமாதான்... நான் அப்படி தான் கூப்பிடுவேன்.... "என்று கூறி நெருங்கி அமர்ந்தாள்...

அவளை பிடித்து தள்ளியவன்.. " என்னடி புதுசா மாமானு உருகற... இப்ப மட்டும் எப்புடி உன்னால லவ்வ ஏத்துக்க முடியுது... இப்ப உன்னால உங்க அப்பா கிட்ட நம்ம காதலை சொல்ல முடியுமா "

அவள் முடியும் என்பது போல் தலையசைத்தாள்...

"அப்ப இந்தா போன்.. இதுல இப்பவே உங்க அப்பா கிட்ட பேசு.. "என்று போனை நீட்டினான்..

அதை கைகள் நடுங்க வாங்கியவள் நடுங்கும் விரல்களால் ராகவனின் நம்பரை அழுத்தி காதிற்கு கொண்டு போன நொடி.... அந்த போன் தரையில் விழுந்து நொறுங்கி கிடந்தது...

ஆம் பாலா தான் அதை பிடுங்கி உடைத்தான்.... அவன் செயலில் திகைத்து நின்றவள் முன் நெருங்கி அவளின் தோளை இறுக பற்றியவன்,

"நீ எனக்கு ஒன்னும் பாவப்பட்டு எதையும் செய்ய வேண்டாம்... இன்னைக்கு எனக்காக பாவம் பார்த்து உங்க அப்பாவுக்கு எதிரா நிப்ப... நாளைக்கே உங்க அப்பாவுக்காக என்னய விட்டுட்டு போக மாட்டினு என்ன நிச்சயம் சொல்லு " என்று அவள் தோள்களை உலுக்க நிலாவிடமிருந்து கண்ணீறே பதிலாக வந்தது.....

அவள் கண்ணீரை கண்டவன் "ச்சே " என்று விடுவித்து அவள் முகத்தை பார்க்காமல் திரும்பி நின்றான்..

"இங்க பாரு... எனக்கு எனக்காகவே எதையும் செய்யற பொண்ணு தான் வேனும்... அதையும் அவ முழு மனசோட செய்யணும்... உன்னை மாதிரி இஷ்டத்துக்கு மனச மாத்திக்கிட்டு திரியற பொண்ணு தேவை இல்லை.. தயவு செஞ்சு என்ன விட்டு என் வாழ்க்கைய விட்டு போயிரு... உன் முகத்தை பார்க்கவே எனக்கு இஷ்டம் இல்லை... என் லைப்ப விட்டு நிரந்தரமா போயிரு " என்று ககூறிவிட்டு தன் அறைக்கு வந்தவன் தன் கைகளாலே தன் கன்னத்தில் அறைந்து கொண்டான்...

சுவற்றில் பலம் கொண்ட மட்டும் குத்தினான்.. "என்ன மன்னிச்சுடு தேனும்மா "என்பதையே தான் கூறிக்கொண்டிருந்தான்.. ....

ஒரு கூறிய பொருளால் கையை கிழிக்க முற்பட்டவனை நிகில் வந்து தடுத்து அவன் கன்னத்திலேயே அறைந்தான்...

கையில் இருந்த பொருளை பிடுங்கி தூர போட்டவன் பாலாவை அணைத்து கொண்டான்... அவன் கண்ணீர் நிகிலின் சட்டையை நனைத்தது...

மற்றோரு புறம் நிலாவை காணாத மது மேலே வந்து பார்க்கும் பொழுது பாலா போகும்போது எந்த நிலையில் இருந்தாளோ அப்படியே இருந்தாள்..

மது அவளின் அருகில் சென்று அமர்ந்து தோளை தொட மதுவின் மடியில் படுத்து கதறி அழுதாள் ... மதுவின் எந்த சமாதானத்திற்கும் பலனில்லை... நிலாவின் இந்த நிலைமையை கண்ட மதுவின் கண்களிலும் கண்ணீர் வந்தது..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN