வசந்தம் -23

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தஞ்சாவூர் ரயில் நிலையம்...... மூன்றாம் வகுப்பு குளிர் சாதனப்பெட்டியில் அமர்ந்திருந்தனர் நிகில் மது நிலா....

பாலா "பார்த்து போய்ட்டு வாங்க... அங்க போனதும் போன் பண்ணுங்க... "

நிலா ஜன்னல் கம்பியில் தலை சாய்த்தவாறு கண்களை மூடியிருந்தாள்... மதுவும் பாலாவை பார்க்காமல் வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்...

நிகில் பாலாவிடம் நிலாவிடம் பேசுமாறு கண் ஜாடை காமித்தான்.. ஆனாலும் பாலா பேசவில்லை... ரயில் கிளம்பும் சத்தம் கேட்டது....

"சரிடா ட்ரெயின் கிளம்ப போகுது... போய்ட்டு வீட்டு நம்பர்க்கு கூப்பிடுங்க (பாலாவின் போன் தான் உடைந்து விட்டதே ).... என்று கூறிவிட்டு இறங்கி விட்டான்...

சிறிது தூரம் சென்றபின் மது பாத்ரூம் சென்றாள்.... அவள் பின்னாடியே போன நிகில் கதவின் அருகில் சென்று நின்று கொண்டான்.... மது வரும் வரை காத்திருந்தவன் வெளியே வந்ததும் அவள் கையை பிடித்து கை கழுவும் இடம் அருகில் அழைத்து வந்தான்...

"விடு நிகில்... எதுக்கு இப்படி இழுத்துகிட்டு வர்ற.. அங்க நிலா தனியா இருக்கா.. நான் போகணும்... "

"ஏன் பொண்டாட்டிக்கு என் மேல என்ன கோவம்... ஏன் என்கூட பேச மாட்டிங்கற... "

" உங்க மேல இல்லை.. உங்க பிரண்ட் மேல கோவம்...... அதென்ன... நிலா வேண்டாம்னு விலகி போறப்ப அவளை நல்லவள்னு விரட்டி விரட்டி காதலிக்கறது... அதுவே பாலாவுக்காக அவனை ஏத்துக்கிடவளை எப்படி பேசிருக்காரு தெரியுமா.. நான் பாலாகிட்ட நிஜமா இதை எதிர்பாக்கல... ஏன் நிலாவும் கூடத்தான்... அவ எப்படி துடிச்சி போய்ட்டா தெரியுமா.... நைட் பூராவும் தூங்காம அழுதுட்டே இருந்தா...."

"பாலாவும் கூட அதே நிலைமையில் தான் இருந்தான்... நான் கொஞ்சம் லேட் ஆகி போயிருந்தாலும் அவன் கைய அறுத்துகிட்டு ஹாஸ்பிடல்ல இருந்திருப்பான்.... "

"என்ன நிகில் சொல்ற "

நேற்று பாலா நிலாவை பேசியது அதற்கான காரணம் எல்லாவற்றையும் நிகிலிடம் கொட்டியிருந்தான்... அதை நிகில் மதுவிடம் கூறினான்...

"ப்ச் இது தெரியாம நானும் பாலாவை தப்பா நினைச்சிட்டேன் நிகில்.... இவங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டு கொடுத்துட்டு இருக்காங்க.... இவங்கள கடவுள் தான் சேர்த்து வைக்கணும் நிகில் .."
என்று கூறி கண் கலங்கியவளை ஆதரவாய் அணைத்து கொண்டான்.. "

மூவரையும் ரயிலில் ஏற்றி விட்டுவிட்டு
வீட்டுக்கு வந்தவன் முதல் வேலையை சென்றது நிலா தங்கியிருந்த அறைக்கு தான்.... அங்கு நிலாவின் நியாபகங்களே நிறைந்து இருந்தன... அங்கு அலமாரி மெத்தை பால்கனி எல்லாவற்றையும் தேடினான் நிலா உபயோக படுத்திய பொருள்கிடைக்குதா என்று... இறுதியாக மெத்தையின் அடியில் அவளுடைய துப்பட்டா ஒன்றும் கிடைக்க அதை எடுத்து கொண்டு மண்டியிட்டு அமர்ந்தான்... அதில் தன் முகத்தை பதித்தான்....

"என்னை மன்னிச்சிரு தேனும்மா... நான் வேணும்னே தான் அப்படி நடந்துக்கிட்டேன்.. எனக்கு வேற வழி தெரியலடா... என்னால நீ குற்ற உணர்ச்சில தவிக்கறத நான் எப்பிடிடா பாத்துகிட்டு இருக்க முடியும்... நான் என்ன அவ்ளோ சுயநல வாதியா... " என்று நிலாவிடம் பேசுவது போல் அரற்றி கொண்டிருந்தவன் அருகில் வந்து அமர்ந்தார் கோதை...

"என்ன சாமி என்னாச்சு காலைல இருந்து உங்க முகமே சரியில்லை.. என்னாச்சுபா.. "

அவர் மாடியில் படுத்து கொண்டவன்,
நேற்று நிலாவிடம் பேசியதை சொன்னான்..

"ஏன் சாமி அப்படி பேசுன.. அந்தப்புள்ள துடிச்சு போயிருக்குமே... "

"எனக்கும் வேற வழி இல்லமா... அவ எனக்காக நான் வேதனை படறேனு அவ மனச மாத்திக்கிட்டு எங்க காதலை ஏத்துக்கிட்டா.. ஆனால் அவ கண்ணுல அவங்க அப்பாக்கு துரோகம் செய்யறோம்ங்கற குற்றஉணர்ச்சி இருந்து கிட்டே இருக்குமா... நேத்து அவங்க அப்பாகிட்ட எங்க காதலை சொல்ல சொன்னேன்மா.. அவளும் மறுக்காம அவருக்கு போன் பண்ணா... ஆனால் அவள் கைகள் நடுங்கிட்டு இருந்துச்சு..

நான் மட்டும் நேற்று தடுக்கலனா கண்டிப்பா அவங்க அப்பா கிட்ட பேசிருப்பா.. ஆனால் வாழ்நாள் முழுக்க அந்த குற்ற உணர்ச்சி அவகிட்ட இருந்துட்டே இருக்கும்மா....என்னால என்னோட தேனுவ அந்த நிலமைல நிறுத்த முடியாது... அதனால் தான் அவள் மேல வெறுப்பு இருக்கற மாதிரி பேசி அனுப்பிட்டேன்..

இப்போ அவள் நான் பார்த்தேனா அவள் கண்ணுல இருக்கற வலிய தாங்க முடியாம மனசு மாறிடுவேன்... அதனால் தான்மா ரெண்டு வாரம் லீவு போட்டுருக்கேன்.. இங்க இருந்து என் மனச நிலாவை எதிர்கொள்ள தயார் படுத்திட்டு தான்மா சென்னை போகணும் "

"உன்னை நினச்சு பெருமையா இருக்கு சாமி.....உங்களோட நல்ல மனசுக்கு கண்டிப்பா நல்ல இருப்பீங்க.. சரி வா சாமி இன்னும் நீ சாப்பிட கூட இல்லை.. "

"இல்லைமா... நீங்க போங்க நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்.. "

"சரி என்று செல்ல முற்பட்டவர் கண்களில் தட்டுப்பட்டது அந்த கடிதம்.. மெத்தையில் இருந்த தலையணையின் அடியில் இருந்தது அந்த கடிதம்.... அதை எடுத்து பாலாவிடம் கொடுத்தார்...

அது நிலா எழுதியிருந்த கடிதம்....

அன்புள்ள பாலா....

"நீங்க ஏத்துக்கிட்டாலும் இல்லாவிட்டாலும் உங்கள் மேல் நிறைய அன்பு காதல் எல்லாமே இருக்கு..... அதே அன்பு எங்க அப்பாவின் மேலும் இருக்கு பாலா...

அப்பாவுக்கு நான்னா ரொம்ப புடிக்கும்.. நான் ஆசைப்படற எதையுமே நான் வாய் தொறந்து கேட்கறக்கு முன்னமே வாங்கி குடுத்துருவாரு...

எனக்கு சென்னை வந்து வேலை செய்யணும்னு ஆசை.. ஆனால் கேம்பஸ் இன்டெர்வியூ எதுவும் அட்டென்ட் பண்ணல.. ஏன்னா ஒருவேள நான் அதுல செலக்ட் ஆகிட்டு அப்பாக்கு விருப்பம் இல்லாம எனக்காக அனுப்பி வைக்கற நிலைமை அவருக்கு குடுக்க கூடாதுனு நினச்சேன்

ஆனால் அப்பா நான் படிச்சு முடிச்சதும் என்னை தனியா சென்னைக்கு வேலை தேட அனுப்பி வச்சாங்க... அம்மா விடவே மாட்டின்டாங்க... ஆனால் அப்பா அப்ப என்ன சொன்னாரு தெரியுமா....

என் பொண்ணு இந்த ஊருக்குள்ளயே முடங்கி போக கூடாது... வெளி உலகத்தை சுதந்திரமா எதிர்கொள்ள கத்துக்கணும்.. அப்டின்னாரு...

நான் சென்னை வரும்போது எங்க அப்பா சொன்னது இது தான் பாலா,,,

"நிலாக்குட்டி உன் விருப்ப படி சென்னைக்கு அனுப்பறேன்... உனக்கு ஒரு மாதம் டைம்... அதுக்குள்ள நல்ல வேலை தேடிக்கோ... அதுக்கும் மேல உன்னை நீ கஷ்ட படுத்திக்க கூடாது..

அப்புறம் நட்புல ஆண் பெண் வித்யாசம் இல்லமா.. ஆனால் உன்னோட நட்பு அடுத்தவங்க மனதை பாதிக்க கூடாதுடா.. நான் சொல்றது உனக்கு புரியுது தான.. "

கடைசியா அப்பாக்கு ஒரே ஒரு ஆசை தாண்டா..... சின்ன வயசில இருந்து உன் கண் பார்த்து உன்ன தெரிஞ்சு கிட்டவன்.. அதே மாதிரி உனக்கு ஏத்த நல்ல பையனா பாத்து அப்பா உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்கணும்.. இந்த ஆசைய மட்டும் நீ நிறைவேத்தி வைக்கணும்டா.... "

எங்க அப்பா கிட்ட நான் அவரோட ஆசைய நிறைவேத்துவேன்னு வாக்கு கொடுத்திருக்கேன் பாலா... அதையும் மீறி என் மனதுக்குள்ளே எப்படி உன்னை ஏத்துக்கிட்டேன்னு தெரில.... நானும் விலகி போகணும்னு தான் நினச்சேன்... ஆனால் நீ படர வேதனையையும் என்னால பாக்க முடில....

அதனால் தான் உன் கிட்ட நெருங்கி வந்தேன்... ஆனால் நீ எனக்கு நல்லா புரிய வச்சுட்ட.. நீ சொன்ன மாதிரி நான் இனி உன் கண்ணிலேயே பாட மாட்டேன்.... உன் உணர்வுகளோடு விளையாண்டதற்கு என்னை மன்னிச்சுடு பாலா..

கடைசியா ஒரு தடவை மாமான்னு கூப்பிடுகிறேன்....

"ஐ லவ் யூ மாமா "

இப்படியாக கடிதத்தை முடித்திருந்தாள்..
அந்த கடிதத்தை படித்து முடித்த பாலா கோதையிடம் அதை குடுத்து விட்டு மீண்டும் அவர் மடியில் தஞ்சம் புகுந்தான்....

கடிதத்தை படித்த கோதையின் மனதும் பாரமானது... தன் மடியில் ஈரத்தை உணர்ந்தவர் கண்களிலும் கண்ணீர் வந்தது... மெல்ல பாலாவின் தலை கோதி அவனை நன்கு அழ விட்டனர்.... அப்படியாவது அவன் மனதின் வலி குறையட்டும் என்று......

சென்னை சென்ற நிலாவின் எண்ணத்தில் கூட பாலா கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம் தான் இருந்தது..... அதற்கு அவள் எடுத்த முடிவுதான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு செல்வது.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN