மாயம் 30

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் கணநேர
பிரிவு கூட
எனக்கு நரகவேதனையே
உணர்த்துவது
ஏன்????

ஹேமாவும் ரித்வியும் என்ன பேசுவதென்று தெரியாமல் வெவ்வேறுபுறம் பார்த்தபடியிருக்க ரித்வியே அந்த அமைதியை கலைக்கவெண்ணி
“இப்போ உடம்பு எப்படி இருக்கு ஹேமா??? காயம் எல்லாம் ஆறிடிச்சா?? டாக்டர்கிட்ட செக்கப் போனியா??” என்று ரித்வி கேட்க ஹேமாவோ பலநாள் கழித்து ஆதரவாய் செவிகளில் விழுந்த அவனது வார்த்தைகளில் விழித்து பார்த்தவளின் கண்களில் அத்தனை மகிழ்ச்சி.. மகிழ்ச்சியோடு அதிர்ச்சியும் போட்டிபோட அவனை பார்த்தவளின் பார்வையில் அத்தனை கேள்விகள்... அவளது சிறு அசைவிலேயே அவளது உள்ளம் புரிந்து நடப்பவனுக்கு இந்த பார்வைக்கான அர்த்தமா புரியாமலிருக்கும்..??

“எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கிறியா?? உனக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ உன்னை ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணது நான் தான்...” என்று ரித்வி கூற அதிர்ச்சியடைந்தவள்

“அப்போ...”

“எனக்கு எல்லாம் தெரியும்... உன் மேல எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை... நீ இப்போ என் கண்முன்னாடி நல்லபடியா இருக்கதே எனக்கு போதும்... “ என்று ரித்வி கூற ஹேமாவின் கண்களோ நீரை சொறிந்தது... அதை பார்த்து பதறியவன்

“ஏன்மா... அழுகுற?? நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா??? ப்ளீஸ் அழாத ஹேமா... இவ்வளவு நாள் நீ அழுததே போதும்... ப்ளீஸ்...” என்றவனுக்கு அவளை அணைத்து ஆறுதல் கூற கைகள் பரபரத்தது... அவளது மனநிலையை சரியாக அறியாது ஏதும் செய்யக்கூடாது என்று அவன் எடுத்த முடிவு அவனது கைகளை கட்டிப்போட்டது.. ஆனாலும் அவளது அழுகையை பொறுக்கமுடியாதவன் அவளது ஒரு கையை தன்னிரு கைகளுக்குள் அடக்கியவன் அவளது கையை தடவியபடி

“ஹேமா... வேணாம்மா... அழுது உடம்ப கெடுத்துக்காத ப்ளீஸ்.. இந்தமாதிரி நேரத்துல நீ எப்பவும் ஹேப்பியா இருக்கதுதான் குழந்தைக்கு நல்லது ப்ளீஸ்..” என்றவனது வார்த்தைகள் உரியவளிடம் வேலை செய்ய கண்களை துடைத்துக்கொண்டவள் அவனது கைகளுக்குள் இருந்த தன் கையினை பார்த்தபடியிருந்தாள்..
அவளது பார்வை நிலைக்குத்தியிருந்த திசையை பார்த்தவன் தன்கைலிலிருந்த அவளது கையிற்கு விடுதலையளிக்க அவனிடம் ஒரு பார்வையை சிந்திவிட்டு கைகளை எடுத்துக்கொண்டாள்..

அவளது பார்வையில் வெறுமை மட்டுமே இருந்தது..அதை பார்த்தவனது மனம் கதறியழுதது.... ஆனாலும் அதை வெளிக்காட்டாது அமைதி காத்தவன் ஹேமாவிடம்
“இங்கபாரு ஹேமா... நடந்தது எதையும் நம்மால மாத்த முடியாது... அதுக்காக அதையே நினைச்சிட்டு இருக்கனும்னு இல்லை.... சோ பழசை மறந்துடு.. இந்த மூனு மாசம் உன்னோட வாழ்க்கையில நடந்ததை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டு ஒரு புது லைப்பை தொடங்கு.... இப்படி அழுவதால எந்த யூசும் இல்லை... இனி உன்னோட லைப்பை நீதான் தீர்மானிக்கனும்.. அந்த ராஸ்கலால உனக்கு எந்த ஆபத்தும் வராம நான் பார்த்துக்கிறேன்... இது இந்த ராஜ்ஜோட ப்ராமிஸ். ஓகேவா.... அதனால இனி என்ன செய்யப்போறனு மட்டும் யோசி... உனக்கு நான் எல்லா விதத்திலயும் எப்பவும் சப்போர்டா இருப்பேன் புரியிதா??” என்று ரித்வி கேட்க சம்மதமாக தலையாட்டினாள் ஹேமா ...

“இது தான் என்னோட ஹேமா... சரி வீட்டுலயே சும்மா இருக்க போறீங்களா??? இல்லை ஶ்ரீயோட மறுபடியும் வர்க்கிற்கு போற ஐடியா இருக்கா....??”

“இன்னும் அதைபத்தி முடிவு பண்ணல ரா...ரித்வி... ஶ்ரீகிட்ட சொன்னதுக்கு நீ ஒன்னும் வேலை செய்து முறிக்க தேவையில்ல.. வீட்டுல ரெஸ்ட் எடுனு திட்டுறா... ஆண்டியும் வீட்டுல இருனு சொல்லுறாங்க... எனக்கு தான் சும்மா இருக்க கஷ்டமா இருக்கு... எவ்வளவு நாளுக்கு ஶ்ரீவீட்டுலயே இருக்கமுடியும்?? எனக்காக அவங்க கஷ்டப்படுவதில் எனக்கு விருப்பமில்லை...”

“இங்கபாரு ஹேமா... இப்போதைக்கு நீ ஶ்ரீ வீட்டுல இருக்கது தான் உனக்கும் குழந்தைக்கும் சேவ்ப்... உனக்கு சும்மா இருக்க பிடிக்கலைனா நான் உனக்கு வீட்டிலேயே இருந்து வர்க் பண்ணற மாதிரி அரேன்ஜ் பண்ணுறேன்... என்னோட கம்பனியில இப்போ வெப் டிசைனிங் போஸ்ட் வேகண்டா இருக்கு.. நீ அந்த வர்க்கை டெலி வர்க்கிங் மூலமா செய்யலாம்.. உனக்கு ஸ்ரெஸ்ஸாவும் இருக்காது.. வீட்டுல சும்மா இருக்கவும் தேவையில்லை.. அதுக்கான சேலரியை ஆன்லைனில் ட்ரான்ஸ்வர் பண்ணிர்றேன்... இது ஓகேதானே....” என்று ரித்வி கேட்க ஹேமாவிற்குமே அது சரியென பட்டது... இப்போது உள்ளநிலையில் சிலகாலத்திற்கு முன்போல் தன்னால் வேலை செய்யமுடியாது.. அதுவும் இந்த இரண்டு வாரங்களாய் ஶ்ரீயே அவளுக்கு தேவையானது அனைத்திற்கும் செலவு செய்கிறாள்.. தனக்கென்று ஒரு வருமானத்தை ஏற்படுத்திக்கொண்டால் அவளை தொல்லை செய்யத்தேவையில்லையே என்று எண்ணியவள் ரித்வியின் யோசனைக்கு சம்மதித்தாள்..

“குட்.. அப்போ நெக்ஸ்ட் வீக்கில் இருந்து நீ வர்க்கில் ஜாய்ன் பண்ணி.. நான் உனக்கு மத்த டீடெய்ல்ஸ் எல்லாம் மெயில் பண்ணுறேன்... இப்போ ஹாப்பியா???”

“இல்லை...”

“மறுபடியும் என்னம்மா??”

“நான் நாளைக்கே ஜாயின் பண்ணுறேனே... எதுக்கு நெக்ஸ்ட் வீக்...”

“மேடம் உங்க ஹெல்த்தையும் கொஞ்சம் கவனிக்கனும்.. உங்களை டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்கசொல்லியிருக்காங்க.... அதுனால இந்த வீக் நல்லா ரெஸ்ட் எடுங்க... அடுத்த வீக்கில் இருந்து வர்க்கை ஸ்டாட் பண்ணலாம்... ஓகேவா..” என்று கேட்வனுக்கு தலையாட்டி சம்மதம் தெரிவித்தவள் திடீரென

“சாரி... ரா..ரித்வி..”

“இங்க பாரு ஹேமா... நான் என்னைக்கும் உனக்கு ராஜ் தான் புரியிதா??? ரித்வினு கூப்பிட்டு டென்ஷனாக்காத ஓகேவா?? சரி இப்போ எதுக்கு சாரி??”

“உ....ங்......க....ள.... உ......ங்......க......கி....ட்...ட....”

“ஹேமா முடிஞ்சதை பத்தி பேசி எந்த யூசும் இல்லைனு நான் ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன்.. சோ ஜஸ்ட் லீவ் தட் டோபிக்.. சரி டாக்டர்கிட்ட செக்கப்புக்கு போனியா??? டாக்டர் என்ன சொன்னாங்க?? குழந்தை ஹெல்தியா இருக்காமா??”

“ஆமா ரா..ரி..”என்றதும் ரித்வி முறைக்க

“ராஜ்... குழந்தை நல்லா ஹெல்தியா இருக்காம்... எந்த ப்ராப்ளமும் இல்லைனு சொன்னாங்க.. நான் தான் ரொம்ப வீக்கா இருக்கதா சொல்லி விட்டமின் டாப்லட்ஸ் ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காங்க... அதோட மார்னிங் சிக்னஸ் இருக்கதால என்னால சரியா சாப்பிடமுடியல.. சாப்பிட்டதெல்லாம் வாமிட் வந்திருது... ஆண்டி தான் ஏதேதோ செய்து கொடுத்து வாமிட்டை கண்ட்ரோல் பண்ண ஹெல்ப் பண்ணுறாங்க..”

“சரி.... நீ அதுக்காக சாப்பிடமா இருந்திடாத... நல்ல ஹெல்தியான புட்டா சாப்பிடு.. அப்போ தான் பாப்பா ஹெல்தியா இருக்கும்.. சரி இந்தா இந்த ஜூசை குடி .. அத்தை உனக்கு குடிக்ககொடுக்க சொன்னதா ஶ்ரீ சொன்னா... இந்தா...” என்று போத்தலிலிருந்த ஜூசை ஹேமாவிற்கு கொடுக்க கொஞ்சம் கொஞ்சமாக குடித்து முடித்தாள்.. அவள் குடித்து முடித்ததும் இருவரும் பொதுவான விடயங்களை பற்றி உரையாடிக்கொண்டிருந்தனர்...இருவருக்கும் அந்த சாதாரண உரையாடலே போதுமென்றிருந்தது... தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாமல் ஹேமா தடுமாற அதை புரிந்துகொண்டு ரித்வி சற்று நடந்துவிட்டு வரலாமென கூற இருவரும் அந்த பார்க்கில் எழுந்து நடக்கத்தொடங்கினர்....

பேச்சு ஸ்வாரஸ்யத்தில் இருவரும் பார்க்கின் வாயிலிற்கு வந்துவிட ஒரு மூன்று வயது குழந்தை அழுதுகொண்டே வீதியை கடக்க முயல அதை கண்ட ரித்வி ஹேமாவை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு அந்த குழந்தையை பாதுகாப்பாய் வீதியிலிருந்து அழைத்துவர வீதியை கடந்தான்...
வாயிலில் நின்றிருந்த ஹேமா தூரத்திலிருந்து படுவேகமாக வந்தபடியிருந்த லாரியை பார்த்துவிட்டு ராஜ் ராஜ் என்று ரித்வியை அழைக்க வீதியில் வாகனம் செல்லும் இரைச்சலால் இவள் அழைத்தது அவனது காதில் விழவில்லை... வேகமாக வந்த அந்த லாரி ரித்வியிற்கு மிக அருகில் வந்துவிட குழந்தையை கையில் ஏந்தியிருந்தவனை பார்த்து ராஜ் என்று அலறியவள் மூர்ச்சையாகிவிட்டாள்.....

இரண்டு மணித்தியாலங்களுக்கு பின் மெதுவாக கண் விழித்தவள் சுற்றும் முற்றும் பார்க்க ஶ்ரீ அருகில் அமர்ந்திருந்தாள்...
அருகிலிருந்த சேலேன் போத்தலும் அறையின் கட்டமைப்பும் அது ஆஸ்பிடல் என்று உரைத்துவிட தான் எப்படி இங்கே என்று யோசித்தவளுக்கு நடந்தவை அனைத்தும் நினைவில் வர
“ராஜ்..ஶ்ரீ.... ராஜிற்கு என்னாச்சு.... அவரு எப்படியிருக்காரு.....எங்கயிருக்காரு... என்னை உடனே அவருக்கிட்ட கூட்டிட்டு போ.. எனக்கு பயமா இருக்கு....” என்று பயத்தில் பிதற்றியவளின் சத்தம் கேட்டு வெளியேயிருந்த ரிஷியும் ரித்வியும் உள்ளே வந்தனர்...

ரித்வியை பார்த்த ஹேமா “ராஜ் உங்களுக்கு ஒன்னுமில்லையே... நீங்க நல்லாதானே இருக்கீங்க...??” என்று கேட்டவளின் கண்களில் நீர் சொட்டத்தொடங்க அவளருகே வந்த ரித்வி அவளை அணைத்துக்கொண்டு

“ஹேய் எனக்கு ஒன்னுமில்லைமா... நான் நல்லாதான் இருக்கேன்... நீ ரிலேக்ஸ் ஆகு.... இப்படி டென்ஷன் ஆகுறது உன்னோட ஹெல்த்துக்கு நல்லதில்லை... காம் டவுண்...”

“அப்போ அந்த..... லா...ரி.... உங்ககிட்ட வந்ததை....”

“அது வந்தப்போ நீ போட்ட சத்தத்துல நான் சுதாரிச்சி விலகிட்டேன்... வந்து பார்க்கிறப்போ நீ கான்சியஸ் இல்லாம மயங்கியிருந்த... உடனே உன்னை ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணோம்....”

“நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்... உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கி கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வந்திருச்சி... அப்புறம் என்ன நடந்துச்சுனு தெரியலை....”

“சரி... இப்போ ரிலாக்ஸாகு... அதான் ஒன்னும் ஆகலையே.. கூல்... இப்படி நீ டென்ஷனாகுறது குழந்தைக்கு சரியில்லைனு டாக்டர் திட்டிட்டு போறாங்க..”

“இல்லை... எனக்கு அப்போ...”

“ஹேமா விடு.... அதைபத்தி பேச வேணாம்.. ஶ்ரீ ஜூஸ் போட்டு தருவ அதை குடிச்சிட்டு தெம்பா வீட்டுக்கு கிளம்பு...” என்று ரித்வி கூற ஶ்ரீயும் அவன் கூறியபடி ஜூஸ் போட்டுக்கொடுக்க அதை வாங்கி குடித்தவள் சற்று தெம்பானாள்...

ஹேமாவின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த ஶ்ரீயிற்கு மகிழ்ச்சி...ரித்வி மீது அவள் கொண்டிருந்த காதல் இம்மியளவும் குறையவில்லை என்று அறிந்து கொண்டவள் ரித்வி பற்றி ரிஷியிடம் பேச முடிவு செய்தாள்...

ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜாகி ஹேமாவை ரிஷியின் காரில் வீட்டிற்கு அழைத்து சென்றாள் ஹேமா... ஹேமாவும் ஶ்ரீயும் முன்னே வர அவர்களின் பின் ரித்வியும் ரிஷியும் வந்தனர்.. அவர்களை வரவேற்ற ராதா மற்றும் ராஜேஷ்குமார் என்னவென்று பார்க்க ரித்வி நடந்ததை கூறினான்..

ராதா ஹேமாவை பார்க்க சென்றுவிட ராஜேஷ்குமார் ரித்வி மற்றும் ரிஷியுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.. பின் இருவரும் விடைபெற்று கிளம்பினர்..
அங்கு ராதா ஶ்ரீயை திட்டிக்கொண்டிருந்தார்.. அவளை காப்பாற்ற முயன்ற ஹேமாவிற்கும் திட்டு விழுந்தது.. எப்போதும்போல் ஶ்ரீ தன் வாயாடலால் அன்னை சமாளித்தாள்..

பின் இருவருக்கும் உணவு எடுத்துவந்த ராதா ஹேமாவிற்கு தேவையானதை கவனித்து விட்டு எப்போதும் போல் ஹாட்பேக்கில் உணவும் நீரும் எடுத்துவைத்துவிட்டு சென்றார்.. அன்றைய நாள் தந்த அயர்ச்சியால் ஹேமா சீக்கிரமாக கண்ணயர்ந்துவிட ஶ்ரீயோ எதைபற்றியோ யோசித்தவள் பின்னிரவிலேயே துயில்கொண்டாள்.....
 

Vijayalakshmi 15

New member
ஹேமாவின் வாழ்க்கை பரிதாபமாக பார்க்காமல் அவளை அதிலிருந்து மீண்டு வர ஸ்ரீ,ரித்விக் மற்றும் அவர்களின் உதவுவது நல்ல நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறது அருமையான பதிவு நன்றி சகோதரி:);):)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN