மாயம் 33

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னவென்று
சொல்வேன்
என்காதல்
என்னுள்
வேரோடி
உன்னை
என்வசமாக்க
துடிப்பதை???

"சொல்றேன் அம்லு... மூன்றாவது அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல்... அதோட அர்த்தம் இணையோடு மனதால் இணையும் தருணத்தை மகிழ்ந்து ஏற்றல்... இதுல நான் உனக்கு டெடிகேட் பண்ணப்போற குறள்

“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு...”

இந்த குறள் உன்னை நான் அந்த ரெஸ்டோரண்டில் வைத்து இரண்டாவது தடவையா உன்னை அணைத்தபோது எனக்கு நியாபகத்தில் வந்த குரல்..”

“என்னது இரண்டாவது தடவையா??? அப்போ அதுக்கு முதல்லயே என்னை கட்டிபிடிச்சிருக்கீங்களா??”

“ஆமா... உன்னை போலிஸ் ஸ்டேஷனில் இருந்து அழைச்சிட்டு வர நான் அங்க வந்திருந்தபோது என்னை கண்டதும் நீ ஓடி வந்து என்னை கட்டிப்பிடிச்சி அழுதியே.... உனக்கு நியாபகம் இல்லையா??”

“நிஜமாவா அய்த்தான்..??? எனக்கு நியாபகமே இல்லையே??? அந்த நேரத்துல நடந்த எதுவுமே என்னை அறியாம நடந்தது..”

“சரி.... இப்போ இந்த குறளுக்கான அர்த்தத்தை கேளு...”

“சொல்லுங்க...”

“இந்த குறளோட அர்த்தம் காதலர்கள் ஒருவரை மற்றொருவர் காற்றுகூட உட்புகுமுடியாத அளவு இறுக்கி அணைத்து மகிழ்தலே பெரும் மகிழ்ச்சி... என்னோட அம்லுவை யாருமில்லாத அந்த ரெஸ்டோரன்ட் பால்கனியில் என்னோட மனசிலிருந்த மொத்த காதலையும் தெரியப்படுத்தனும்னு அணைத்தபோது உன்கிட்ட இருந்தும் அதுக்கு சமனான அளவு அணைப்பை கிடைச்சப்போ எனக்கு அப்படியொரு சந்தோஷம்.... நம்ம மனசுக்கு பிடிச்சவங்ககிட்டயிருந்து கிடைக்கிற அணைப்பு கூட எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும்னு அந்த நிமிஷம் உணர்ந்தேன்....பா... இப்போ கூட அதை நினைக்கும் போது ஏதோ வானத்துல பறக்குற மாதிரி ஒரு பீல்....”

“ம்ம்ம்.... இப்போ தான் புரியிது அய்த்தான்....”

“என்ன அம்லு புரிஞ்சிது??”

“பயபுள்ள கிடைத்த ஒரு சான்சை கூட மிஸ் பண்ணாமயிருக்க தீவிரமா வேலை செய்திருக்குனு..”

“என்ன பண்ணுறது அம்லு??? யாராவது ஒருத்தர் தெளிவா இருக்கனும்ல???”

“நான் தெளிவில்லனா சொல்லுறீங்க..” என்றுவிட்டு அவளை அடிக்கத்தொடங்கியவளை தடுத்தவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு

“என்ன அம்லு உண்மையை சொன்னா அடிக்கிற?? அத்தான் பாவமில்ல...”

“யாரு நீங்க பாவமா??? வள்ளுவர் உலக நன்மைக்காக எழுதுன குறள்களை ப்ரபோஸ் பண்ண யூஸ் பண்ண அறிவாளியாச்சே நீங்க... நீங்களா பாவம்..??”

“1330 குறளையும் யூஸ் பண்ணுவேன் அம்லு.... ஆனா நீ டென்ஷனாகிடுவியேனு தான் விட்டுட்டேன்...”

“இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு கிலோ கணக்குல கூடிபோயிருச்சி அய்த்தான்... சரி மீதி இருக்க மூன்று குறளையும் சொல்லுங்க...”

“ம்.... அடுத்த அதிகாரம் நலம் புனைத்து உரைத்தல்... அதாவது காதலியின் அழகை ரசித்து உரைத்தல்னு அர்த்தம்... இதுல உனக்கான குரல்

“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.”

இந்த குறளோட அர்த்தம் காதலியின் ஒளி வீசும் சாந்தமான முகத்திற்கும் நிலவிற்கும் வித்தியாசம் தெரியாமல் விண்மீன்கள் தடுமாறி தத்தளிக்கிறது... என்பது தான்.

நீ கடலலையில் காலை நனைத்துக்கொண்டே கண்மூடி அதனை ரசிச்சிட்டு இருக்கும் போது உன்னோட முகத்துல தோன்றுகின்ற அந்த அமைதியும் சந்தோஷமும் ஒரு பிரகாசத்தை கொடுக்கும்...அதுல அவ்வளவு தேஜஸ் இருக்கும்... அப்போ உன்னோட மூக்குத்தியும் அதுக்கு ஈக்குவலா ஜொலிக்கும் போது ஒரு நிமிஷம் இது பூலோகம் தானா அப்படீங்கிற சந்தேகமே வந்திடும்.. நிலவோட வெளிச்சம் குளுமையை தான் தரும் ... ஆனா உன்னோட முகத்துல தோன்றுகின்ற அந்த ஒற்றை சிரிப்பு என்னை அப்படியே தலைகீழா கவிழ்த்திடும்.. அதுவும் நீ கண்மூடி ரசித்து காற்றை சுவாசிக்கும் போது அவ்வளவு அழகா இருக்கும்... வானத்துல உள்ள நட்சத்திரமெல்லாம் உனக்கு பாடிகாட்டா இருந்தா என்னனு கூட சில நேரம் தோன்றும்...வளர்ந்து தேய்கிற நிலவுக்கு பதிலாக எப்போதுமே முழுநிலவாக ஒளிவீசுகின்ற உன்னை அந்த நட்சத்திரங்கள் தங்கள் கூட்டத்தின் தலைவியாக இருத்தினால் என்னனு தோன்றும்...... இப்படியே........” என்று தொடர்ந்தவனை

“ஸ்டாப்... ஸ்டாப்... உனக்கு ஏன் அய்த்தான் இந்த விபரீத ஆசை.. இப்படி என்னை மாட்டிவிட எங்க ரூம் போட்டு யோசிச்ச???”

“நீ எதை சொல்லுறனு புரியலை அம்லு....”

“வானத்துல உள்ள நட்சத்திரத்தையெல்லாம் எனக்கு பாடிகார்ட்டா போடப்போறியா??? ஏற்கனவே ரவி, சுந்தர்னு ரெண்டு என்னை பாடாபடுத்துது... இதுல வானத்துல உள்ள நட்சத்திரம் வேறயா?? ஐயோ... இந்த விளையாட்டுக்கு நான் வரலை....”

“என்ன அம்லு பசங்க ரொம்ப படுத்திட்டாங்களோ???”

“கொஞ்சமா நஞ்சமா?? ஒருத்தனை கலாய்க்க விடமாட்டாய்ங்க... நமக்கு தான் வாய் சும்மா இருக்கதே... ஏதாவது எடக்கு முடக்க சொல்ல அதை பிடிச்சிக்கிட்டு பக்கம் பக்கமா லெக்சர் அடிப்பாய்ங்க... அந்த கொடுமையை கேட்டு சாப்பிட்டதெல்லாம் செமிச்சி மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிரும்.... பசிக்கிதுடானு சொன்னா இன்னும் நாலுபக்கத்துக்கு பேசுவானுங்க....ப்பா....”என்றவளது பாவனையில் சிரித்த ரிஷியை முறைத்தாள் ஶ்ரீ.....

“என் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா??”

“ஊருல உள்ள எல்லாத்தையும் நீ கஷ்டப்படுத்துவ... உனக்கே அது உல்டாவாகுனத நினைச்சிப்பார்த்தேன்... சிரிச்சேன்...”

“நக்கலு..”

“சேசே.. நான் அப்படி செய்வேனா??”

“செய்யாட்டி தான் அதிசயம்... சரி கிளம்பலாம்... இல்லைனா மம்மி கேப் விடாம கால் பண்ணி டார்ச்சர் பண்ணும்...”

“அடிப்பாவி... அத்தை கால் பண்ணுறத டார்ச்சர்னா சொல்லுற???”

“பின்ன என்ன.... வந்துட்டு இருக்கேன்னு சொல்லிட்டு காலை கட் பண்ணி இரண்டு நிமிஷத்துல மறுபடியும் கால் பண்ணி எங்க இருக்கனு கேட்டா கடுப்பாகுமா இல்லையா??? போனை அட்டென்ட் பண்ணாட்டி போனே ஹாங் ஆகின்ற அளவுக்கு மிஸ்ட் கால் இருக்கும்..”

“ஹாஹா... அது உன் மேல உள்ள அக்கறையில அப்படி செய்றாங்க...”

“நானும் அப்படி தான் இவ்வளவு நாள் நினைச்சிருந்தேன்...ஆனா அவங்க சொன்ன காரணத்தை கேட்டு எனக்கு ஹார்ட் அட்டாக் வராதது தான் அதிசயம்....”

“அப்படி என்ன காரணம் சொன்னாங்க அம்லு..”

“நான் ரோட்டுல நடமாடுறது ஊருல உள்ள பசங்களுக்கு ஆபத்தாம்... அதுனால தான் சீக்கிரம் என்னை வீட்டுக்கு வரவைக்கிறதுக்காக இப்படி கால் பண்ணுறாங்களாம்... என்னை மோகினி பிசாசு ரேன்ஜிற்கு டாமிஜ் பண்ணிட்டாங்க அய்த்தான்..”

“ஹாஹா... அப்படி என்ன செய்த அம்லு..??”

“பெரிசா ஒன்னும் இல்லை அய்த்தான்.. ஒரு தடவை எங்க ஏரியால ஒரு பையன் என்னை கலாய்க்க ட்ரை பண்ணான்... நான் வேற ஒரு டென்ஷன்ல இருந்தேனா...அவன் ஆரம்பிச்சதும் மொத்த டென்ஷனும் கடுப்பாய் மாறி அவன் மேல திரும்ப கீழ கிடந்த ஒரு கனமான கல்லை எடுத்து அவன் மண்டையை உடைச்சிட்டேன்...வழமையா கலாய்ச்சா திருப்பி குடுத்துட்டு வருவேன்... அன்னைக்கு டென்ஷனுல கல்லை எடுத்து அவனோட மண்டையை உடைச்சிட்டேன்...அவனோட பிரண்ட்ஸ் மூன்று பேரையும் துரத்தி துரத்தி வெளுத்துகட்டிட்டேன்... அதுல இருந்து எங்க ஏரியா மட்டும் இல்லை... பக்கத்துல உள்ள இரண்டு ஏரியாவிலும் என்னை கண்டா பசங்க தலைதெறிக்க ஓடி ஒளிஞ்சிருவானுங்க...... அது தான் எங்க மம்மி அப்படி சொல்லிச்சு...”

“ஹாஹா... இவ்வளவு சாகச வேலை பார்த்திருக்கியா அம்லு...இருந்தாலும் நீ கெத்து தான் அம்லு...”

“சரி வாங்க கிளம்பலாம் அய்த்தானா... ஐஸ்கிரீம் பார்லரும் போகனும்மே... சீக்கிரம்...” என்று ரிஷியை கிளப்ப

“உலகமே இடிஞ்சி விழுந்தாலும் இவ வேலையில இவ கவனமா தான் இருப்பா..” என்று முனங்கியபடி ரிஷி ஶ்ரீயை அழைத்து சென்றான்...

ஐஸ்கிரீம் பார்லர் சென்று ஒரு கட்டு கட்டிவிட்டு ஶ்ரீயை வீட்டில் இறக்கிவிட்டான் ரிஷி...

மறுநாள் காலை விடுமுறை தினமென்பதால் காலை பத்து மணியளவில் ஶ்ரீயின் வீட்டிற்கு வந்திருந்தான ரித்வி. அவனை வரவேற்ற ராதா அவனுக்கு குடிக்க கொடுக்க அப்போது சேலையில் தயாராகி வெளியே வந்தாள் ஹேமா..
நெடுநாட்களுக்கு பிறகு அவளை சேலையில் பார்த்த ரித்வி இமைக்க மறந்து பார்த்திருக்க ஹேமாவோ அப்போதுதான் அவன் வந்ததை கவனித்தவள் அவனை வரவேற்றாள்.

“வாங்க ராஜ்.... எப்போ வந்தீங்க...??”

“இப்போ தான் ஹேமா... எங்க கிளம்பிட்ட ஹேமா...???”

“ஹாஸ்பிடலுக்கு ராஜ்... இன்னைக்கு செக்கப்பிற்கு வரசொல்லி டேட் குடுத்திருக்காங்க... அதான் கிளம்பிட்டேன்... இந்த ஶ்ரீ பாத்ரூமிற்கு போனவ வெளியில வந்த பாடில்ல...” என்று ஹேமா கூற ராதாவோ

“ஐயோ இன்னைக்கு சண்டே ஆச்சே... பாத்ரூம்ல ஒரு மணிநேரம் படுக்கையை விரிச்சிருவாளே.... இப்போதைக்கு மகராசி வெளியில வரமாட்டாளே... ஏன் ஹேமா அவளை முதல்லயே குளிக்க அனுப்பியிருக்கலாமே.... இன்னைக்கு நீ செக்கப்பிற்கு போன மாதிரி தான்..” என்று ராதா புலம்ப ரித்வியோ

“விடுங்க அத்தை... நான் ஹேமாவை செக்கப்பிற்கு கூட்டிட்டு போறேன்.. ஶ்ரீ பொறுமையா குளிச்சிட்டு வரட்டும்.. ஹேமா நாம கிளம்பலாமா??”

“இல்லை பரவாயில்லை... நான் தனியா போய்க்கிறேன்.. நீங்க எதுக்கு சிரமப்படனும்...?”

“ஹேமா தனியா போக வேண்டாம்.. தம்பியை துணைக்கு கூட்டிட்டு போ... இல்லைனா கொஞ்சம் வெயிட் பண்ணு நான் துணைக்கு வர்றேன்.. நீ தனியா போகாதா..” என்று ராதா எழுந்து செல்ல முயல அவரை தடுத்த ஹேமா

“இல்லை ஆண்டி... நான் ராஜ்கூடவே போறேன்... வாங்க ராஜ் போகலாம்...” என்று மெடிக்கல் ரிப்போட்டுக்களுடன் தயாராகியவள் முன்னே செல்ல ரித்வியோ ராதாவிடம் அர்த்தம் பொதிந்த ஒரு சிரிப்புடன் விடைப்பெற்றுவிட்டு ஹேமாவை பின்தொடர்ந்தான்...

ஹேமா ஏறுவதற்கு வாகாக காரின் முன்புற கதவை திறந்துவிட்டவன் அவள் ஏறியதும் கதவை சாற்றிவிட்டு ட்ரைவர் சீட்டில் ஏறி காரை எடுத்தான்..
கார் வீட்டிலிருந்து புறப்பட்ட சத்தம் கேட்டதும் குளியலறையிலிருந்து வெளியே வந்த ஶ்ரீ ஹாலிற்கு வந்தாள்.

அங்கு அமர்ந்திருந்த தன் அன்னையிடம்
“எங்கமா ஹேமா கிளம்பிட்டாளா??”

“ஆமா தான்யா.. ஒருமாதிரி ரித்வி கிளப்பி கூட்டிட்டு போயிட்டான்.... ஆனாலும் இவளை சரிக்கட்ட முடியும்னு எனக்கு தோணலை தான்யா....”

“நீ கவலை படாத மம்மி அதை ரித்வி அத்தான் பார்த்துபாரு... அவருக்கு தான் அவளை சரியா ஹேண்டல் பண்ண முடியும்.. நாம சொன்னா நிச்சயம் முரண்டு தான் பிடிப்பா...”

“அது உண்மை தான் தான்யா... ஆனா எதுக்கு இவ்வளவு அவசரமா ரித்விக்கும் ஹேமாவுக்கும் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுற???”

“எல்லாம் அவ சேப்டிக்கு தான்மா... இவளோட அதிஷ்டமோ அந்த அயோக்கியனோட துரதிஷ்டமோ தெரியலை அவன் மேரேஜை லீகலி ரெஜிஸ்டர் பண்ணலை.... அவன் மறுபடியும் இவளுக்கு ஏதாவது தொல்லை கொடுக்காம இருக்கனும்னா ஹேமா அத்தானை மேரேஜ் பண்ணிக்கனும்... அதோடு குழந்தையோட உரிமையும் அண்ணாவுக்கு மட்டும்தான்னு இவ சைன் பண்ணி குடுத்திட்டா வேற எந்த லீகல் இஷூசும் வராது.. அந்த அயோக்கியன் ஏதாவது இல்லீகலா செய்ய ட்ரை பண்ணா அதை ரித்வி அத்தானும் ரிஷி அத்தானும் கவனிக்க வேண்டிய முறையில கவனிச்சிக்குவாங்க... அதுனால தான் சீக்கிரம் இவங்க மேரேஜை முடிக்கனும்னு சொல்லுறேன்...”

“எல்லாம் சரி தான்டி... அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தா எனக்கு அதைவிட ஒரு சந்தோஷம் வேற எதுவும் இல்லை... ஆனா அவ சரினு சொல்லனுமே....”

“சொல்லுவாமா... நீ கவலைப்படாத... அத்தான் பார்த்துப்பாரு...”

“எல்லாம் நல்லபடியா முடிந்தா சந்தோஷம் தான்... சரி வா சாப்பிட எடுத்து வைக்கிறேன்...” என்று ராதா எழுந்து செல்ல அவர் பின்னேயே சென்றாள் ஶ்ரீ.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN