முன் ஜென்ம காதல் நீ - 10

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கடற் போர்...
முதல் தாங்குதல் முடிந்த நிலையில் கடோத்கஜன் சிறிது பயமும் பெரிது குழப்பமும் கொண்டான். இதுவரை வந்த செய்திகளின் மூலம் போர் படையை வழி நடத்துவது இந்திர ராணி என தெரிய வந்தது. ஒரு பெண்ணுக்கு எப்படி இவ்வளவு திறமை தான் தாங்க போகும் இடத்தினை மாற்றி சொல்லியும் எப்படி சரியாக சிந்தித்தாள் என புரியவில்லை. அவள் அருள்வர்மனை விரும்பியவள். அவனும் விரும்பியுள்ளான். ஆனால் பழகிய சில நாட்களில் எப்படி இவளுக்கும் திறமை வந்தது என குழம்பினாள்.
அதுவும் அந்த போரில் பயன்படுத்தப்பட்ட எரியம்பு ஆயுதங்கள். இணையில்லாத போர் பொறிகள் அவை. நிச்சயம் அவற்றை உருவாக்கியது அவனாக தான் இருக்க வேண்டும். என்னிடம் கூட இறுதியாக ஒரு முறை இதனை பற்றி பேசியுள்ளான். " மனித சக்திகளுக்கு மாற்றாக போரில் இயந்திர பொறிகளை பயன்படுத்தினால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் " என கூறியுள்ளான். அவற்றின் செயல் வடிவமே இந்த போரில் பயன்படுத்தப்பட்டன. என உணர்ந்தான்.
மேலும் பல பொறிகள் கூட இருக்கலாம் நாம் நெருங்கி சென்று தாக்கினால் வெற்றியை பற்றி உறுதி சொல்ல இயலுமா? இல்லையா? என்பது கேள்வி. ஆனால் நிச்சயம் உயிரிழப்புகள் பல ஏற்படும். இந்த போரினை உயிரிழப்புகள் இல்லாமல் முடிப்பது எப்படி என சிந்தித்தான். இறுதியாக ஒரு முடிவினை கண்டுபிடித்தான்.
அங்கே இந்திர ராணி தங்களது நாட்டினை சார்ந்த வணிகர்களையும், உணவு பொருள் விற்பவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தி கொண்டிருந்தாள். " நன்றாக கவனியுங்கள் நம் நாட்டின் சேமிப்பு கிடங்குகளில் உள்ள தானியங்களையும் உணவு பொருட்களையும் கணக்கிட்டு முடித்து விட்டிர்களா? " என கேட்க அங்கே ஒருவன் " தேவி உணவு உள்ளது தாங்கள் சிறிது நாட்களுக்கு முன்பே உணவினை அதிகமாக சேமிக்க ஆணையிட்டிர்கள் அல்லவா? இப்பொழுது மொத்தமாக பல ஆயிரக்கணக்கான தானிய மூட்டைகள் உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களுக்கு நம் மக்களுக்கு வழங்கலாம்." என்றான்.
மற்றொருவன் " இன்னும் இரண்டு மாதங்களில் நாம் பயிர் செய்துள்ளவைகளும் சிறிதளவு விளைச்சல் தந்துவிடும். அவற்றையும் சேர்த்தால் மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு மக்களுக்கு கொடுக்கலாம் " என கூறினான். அவற்றை கேட்ட அவள் " நல்லது அப்படியே நடக்கட்டும். சிக்கனமாக பயன்படுத்துங்கள். இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெளியிலிருந்து எந்த உணவும் நமக்கு வராது " என்றாள் உறுதியுடன்.
அடுத்த சில நாட்களில் இருந்து அது தான் நடந்தது. அனைத்து வாயில்களும் கஜவர்மன் படையினால் சூழப்பட்டன. எந்த வாணிக பொருட்களும் உள்ளே வரவில்லை உணவு பொருட்களும் வரவில்லை. உணவினை தடுத்தால் பசி தாங்காமல் எதிரி நாடு சரணடையும் என கஜவர்மன் சிந்தித்து இவ்வாறு செய்து வந்தான். கடல் வணிகத்தையும் தடுக்க ஆறுபது மரக்கலங்கள் கடற்கரையை சூழ்ந்து கொண்டன. அவை கடற்போருக்காக தான் வந்தன. ஆனால் போராட எதிரி கலங்கள் இல்லாத காரணத்தினால் சூழ்ந்து கொண்டன. கடல் வணிகத்தை தடுக்க.
அந்த ஆறுபது மரக்கலங்களும் முத்தூர் கடற்கரையை மொத்தமாக வளைத்து அரை வட்ட வடிவில் நின்று கொண்டன. அந்த கப்பல்களை மீறி எந்த வணிக கப்பலும் துறைமுகத்தை அடையவில்லை. இந்த செய்தி தெரியாமல் வந்த வணிக கப்பல்கள் அனைத்தும் சூழப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. அதன் வணிக பொருட்கள் கடற்படை வீரர்களால் கவறப்பட்டன. ஒரு பொருளும் முத்தூரை அடையவில்லை. முத்தூரின் வணிகம் முற்றிலும் வீழ்ந்தது. பொருளாதரமும் முடங்கியது.
ஆனால் இந்திர ராணி எதற்கும் அசரவில்லை. நடப்பவற்றை எப்படியும் சமாளிக்கலாம் என நம்பினாள். அந்த கடற்படை வீரர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் பெரும் போரை எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அது நடக்காமல் கடற்புறத்தை காவல் காக்கும் வேலை பிடிக்கவில்லை. சலிப்பாக இருந்தனர். ஆகவே வந்த வணிக கப்பல்களை கொள்ளையடிப்பதை ஆர்வமாக செய்தனர். அந்த வணிக கப்பல்களில் ஆயுத பலம் எதுவும் இல்லாத காரணத்தினால் எளிதில் அவர்களிடம் பறி கொடுத்தன. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கோட்டையின் மேல் நின்று இரு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. முகத்தில் புன்முறுவலுடன்.
சில நாட்கள் கழித்து முத்தூரில் இருந்து ஒரு தூதுவன் எதிரி கூடாரத்தை அணுகினான். அவன் ஒரு ஓலையை கஜவர்மனிடம் கொடுத்தான். அதில் " மாமன்னர் கஜவர்மரே நான் மாறவர்மன். தங்களை பணிவுடன் வணங்குகிறேன். எங்கள் சிறுபடையை கொண்டு தங்களிடம் மோதுவது பெரும் அறிவீனம் என பலமுறை எங்கள் இளவரசியிடம் கூறுகிறேன். ஆனால் அவள் ஏற்காமல் போரை தொடர்கிறாள். என்னை போல் இரண்டாயிரம் வீரர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள். அவளுடன் சேர்ந்து போர் புரிவது எங்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. தங்களை பணிந்து வாழ விரும்புகிறோம். ஆகவே நாளை மறுநாள் இரவு உங்களிடம் சரணடைய நிராயுதபாணியாக வர இருக்கிறோம். நீங்கள் எங்களை ஏற்று மன்னித்து அருளுமாறு தங்கள் அடிகளை நாடி கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு படை தலைவர் மாறவர்மன் " என முடிந்திருந்தது. அடியில் அரசாங்க முத்திரையும் இருந்தது.
ஓலையை பல முறை படித்த கஜவர்மன் அதில் நிராதரவான நிலையும் பயமும் காணப்பட்டது தெளிவாக தெரிந்தது. மேலும் ஓலையை கொண்டு வந்த தூதுவனை கஜவர்மன் பல கோணத்தில் விசாரித்தான். அதன் மூலம் அவனை படைத்தலைவர் யாரும் அறியாமல் இரவில் வீட்டிற்கு வந்து தந்ததையும். ரகசியமாக செல்ல கோட்டையின் சுரங்க பாதையை திறந்து விட்டதையும் அறிந்தான். அனைத்தையும் அவர் பயத்துடன் செய்வதையும் உணர்ந்தான். படைவீரர்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டு அவர்களால் கைவிடப்பட்டு பல சாம்ராஜ்யங்கள் சரிந்ததை உணர்ந்திருந்தான். இந்த முத்தூரும் அவ்வாறு வீழ போகிறது என அறிந்தான். இப்படி உயிருக்கு பயப்படும் வீரர்களை எண்ணி இகழ்ச்சியும் அடைந்தான். தன் வெற்றி இலகுவாக கிடைத்து விடும் என எண்ணி மகிழ்ந்தான்.

அந்த படைதலைவன் கூறிய படியே இரண்டாம் நாள் இரவு அரண்மனையில் திட்டி வாசலை திறந்து இரண்டாயிரம் வீரர்கள் பந்தங்களை ஏற்றாமல் சத்தம் எழுப்பாப்பாமல் அமைதியாக வந்தனர். தொடர்ச்சியாக கோட்டையினை கவனித்து இருந்திருந்ததால் அவர்களுக்கு தெரிந்தது. அப்பொழுது வெளியே வந்த வீரர்கள் எதிர்பாராத விதமாக பல அம்புகள் பறந்து வந்து அவர்கள் மேல் விழுந்தன. அடுத்தடுத்து கஜவர்மன் வீரர்கள் சுற்றிலும் இருந்த மரக்கூட்டத்தில் ஒளிந்திருந்து அம்புகளை தொடுத்தனர்.
சில நொடிகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மீதமிருப்பவர்கள் அஞ்சி ஓட தொடங்கினர் அதுவும் எதிரிகள் கூடாரம் நோக்கி முன்னாடி வந்த வீரர்களை கண்ட எதிரி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.எதிரி கூடாரத்தில் அபாய சங்குகள் திடீரென அலறின. அம்புகளை தொடுப்பதை உடனே நிறுத்தினார்கள். அப்பொழுது தான் புரிந்தது. வெளியே வந்தவர்கள் எதிரி நாட்டு வீரர்கள் அல்ல. தங்கள் நாட்டு வீரர்களே என உணர்ந்தார்கள். \m
அவர்கள் முதல் தாக்குதலில் கைது செய்யப்பட்ட வீரர்கள் என புரிந்தது. உடனடியாக தங்கள் தாக்குதலை நிறுத்தி அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ள முயன்றனர். பெரும் குழப்பத்திற்கு பின் வந்த படைவீரர்கள் அவனது படையுடன் இணைக்கப்பட்டது. அந்த நிகழ்வு கஜவர்மனுக்கு பேரிடியாக இறங்கிய்து. தங்கள் தோழர்களையும் உறவினர்களையும் தாக்கியதை எண்ணி வீரர்கள் வேதனையும் வெட்கமும் கொண்டனர். முதலில் கஜவர்மன் அவர்களை அழிக்க சொன்னதையே ஆட்சேபனை செய்தவர்கள் அவர்கள் அவனும் " வருகிற வீரர்கள் சொந்த நாட்டிற்கே துரோகம் செய்தவர்கள் மேலும் அந்த கூட்டத்தில் ஓற்றர்களும் இருக்கலாம் நமக்கு பேராபத்து. அவர்களை நம் நாட்டில் கைதிகளாக வைப்பதும் வீண். நம் படையில் சேர்த்தால் அவர்கள் மனநிலை எப்படியும் மாறலாம் " என எடுத்து சொல்லி தாக்க செய்தான்.
அவர்கள் அனைவரும் அவனுக்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுத்தனர். முத்தூரில் இருந்து வந்தவர்கள் இந்திர ராணியின் நல்ல மனதையும் அவள் தங்களை விடுதலை செய்த சிறப்பையும் பாராட்டினார்கள். தாங்கள் சிறையில் இருந்த காலத்தில் அவள் எதுவும் கொடுமை செய்யாமல் நல் உணவு அளித்து மரியாதையுடன் நடத்தியதையும் அனைவரிடமும் கதை கதையாக சொல்லி பரப்பின.
அதனை கேட்டு பலரும் அவள் புகழை பாடியதையும் கேட்டான். தன் படையே தனக்கெதிராக திரும்பியதை எண்ணி அவமானப்பட்டான். இதற்கு அந்த வீரர்கள் தன்னிடம் வராமல் அவர்களிடமே இருந்திருந்தால் கூட தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது என அறிந்து வருந்தினான். எதிரியின் புகழ் பாடும் படையை கொண்டு தந்திரசாலியான அவளை எதிர்ப்பது சுத்த மடத்தனம் என அறிந்து ஒரு அறிவிப்பினை அறிவித்தான். அதில் போரில் பங்கேற்க விருப்பம் இல்லாதவர்கள் ஊர் செல்லலாம் என கூறினான். சுமார் இருபதனாயிரம் வீரர்கள் ஊர் சென்றனர். அந்த இழப்பிற்கு பின் அவன் பொறுமை பறக்க தாக்க தொடங்கினான். முதல் தாக்குதல் கடற்கரையில் கடற்போராக தொடங்கியது

நகர் என் கையில்

இந்திர ராணியால் பலமாக ஏமாற்றப்பட்டு அடி பட்ட கஜவர்மனின் பொறுமை பறி போனது. அடிபட்ட புலி போல் உலாவிக் கொண்டிருந்தான். சொந்த வீரர்களாலே இகழப்படும் சூழ்நிலைக்கு ஆள்ளானான். முதலில் இந்திர ராணியே அடைந்து முத்தூரை ஆள தன் நண்பனை பொய் சொல்லி அனுப்பி வைத்தது. அவன் போட்டியில் வெற்றிக் கொண்டாலும் அவனது மனதினை இந்திர ராணி எளிதாக வென்றது. அவளையும் அவளது நாட்டையும் காக்க எண்ணி தன்னையே எதிர்க்க தொடங்கியது. தான் செய்த சமாதானம் எனும் சூழ்ச்சியை கண்டறிய வந்து வீரர்களால் தாக்கப்பட்டு அவன் இறந்தது. அவனில்லாத நாட்டை தன்னால் எளிதாக வெல்ல முடியும் என எண்ணி போராடியது.
ஆனால் தன் எண்ணம் எளிதில் நிறைவேற தடையாக இந்திர ராணியின் அறிவும் அதனுடன் தன் நண்பன் உருவாக்கி விட்டு போன எமப் பொறிகளும் வந்து இருப்பதை உணர்ந்தான். எதுவானாலும் சரி அவர்களது வீரர்கள் எப்படி பார்த்தாலும் 30000 பேருக்கு கூட வாய்ப்பில்லை. தனன்னிடம் இப்பொழுது 100000 வீரர்களை கொண்டு அவர்களை அழிப்பது எளிதான விஷயம் தான். என உறுதியாக நம்பினான் அத்துடன் துணைக்காக ஆறுபது கப்பல்கள் உள்ளன. அவர்கள் கப்பல்களை காணவில்லை.
அவர்களது வர்த்தகத்தை முற்றிலும் அழித்து அவர்களை நிராதாரவாக மாற்றியுள்ளோம். ஆகவே இனி வீரர்களை பிரித்து அனுப்புவது எல்லாம் முட்டாள்தனம் என அறிந்து நேரடி தாக்குதலில் இறங்கினான். முதலில் கடற்கரையில் முகாமிட்டுள்ள கப்பல்களை கொண்டு போரை தொடங்க வேண்டும். முத்தூர் படைகள் அவற்றை தாக்க தொடங்கிய பின் தானே தனது மொத்த வீரர்களுடன் சென்று அவர்களை அழிப்பது என திட்டம் போட்டான். அழித்து அந்த ராணியையும் நாட்டையும் தடம் தெரியாமல் அழிக்க செய்ய உறுதி கொண்டான். தனது உபதலைவர்களையும் அழைத்து தனது திட்டத்தை தெளிவாக விளக்கி சொன்னான்.
அப்பொழுது ஒரு உபதலைவன் " மன்னவா! கடலில் எப்படி போரை தொடங்குவது அவர்கள் கப்பல் படை கப்பல்கள் எதுவும் அங்கில்லை. இருபது கப்பல்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. " என்றான். உடனே கஜவர்மன் " தலைவரே முதலில் கப்பல்களில் உள்ள மாலுமிகள் இரவு நேரத்தில் பந்தங்களை கொளுத்தாமல் படகுகளில் இறங்கி கரையே அடைய வேண்டும். சில மாலுமிகள் மட்டும் கப்பல்களில் இருந்து கொண்டு மீதமுள்ள அனைவரும் கரையை அடைய வேண்டும். ஆறுவது கப்பல்களில் 10000 வீரர்கள் உள்ளனர் அவர்களில் 8000 பேர் கரையே அடைய வேண்டும். பின் பெரும் சத்தத்துடன் பந்தங்களை கொழுத்தி கடற்கரை புறம் உள்ள வாயில் முன் சத்தம் செய்ய வேண்டும். அந்த வாயில் கதவுகளையும் உடைக்க முற்பட வேண்டும். இந்த திடீர் தாங்குதலை எதிர்பாராத எதிரிகள் முதலில் குழம்புவார்கள் காரணம். கடற்கரையில் தாக்க யாரும் இல்லை என அலட்சியமாக இருப்பர். பின்னர் தெளிந்து அவர்களை அழிக்க செல்லும். அந்த போரில் அவர்கள் முழ்கியிருக்கும் போது நாம் நமது படை முழுவதும் ஒரே சமயத்தில் மீதமுள்ள இரண்டு வாயில்களையும் உடைத்து கொண்டு உள்ளே புகுந்து உள்ளே சென்று அவர்களை தெற்கு புறம் தாக்க வேண்டும். தெற்கு புறம் தாக்கப்படும் அவர்களை பின்புறம் நாம் தாக்க வேண்டும் வெற்றி உறுதி " என்றான். அனைவருக்கும் திட்டம் புரிந்தது. எதிரிக்கு வேறு புறம் போக்கு காட்டி பின் அவர்களை மொத்தமாக அழிக்க திட்டம் போட்டுள்ளான் என அறிந்தனர்.

அங்கே வரப்போகும் ஆபத்தை உணராமல் கோட்டை சுவரில் உலாவி கொண்டிருந்தாள் இந்திர ராணி. நிலவு புறப்பட்டு சிறிது நேரமே ஆகி இருந்தது. நிலவும் அடுத்து வரப்போகும் ஆபத்திற்கு சாட்சி சொல்லுவது போல் பிறை நிலவாகவே தோன்றியது. முழு நிலவாக அல்ல. விண்மீன்களும் அவ்வப்பொழுது கண்களை சிமிட்டி அடுத்து நடக்கப் போகும் பயங்கரத்தை பற்றி கூறின. இவை அனைத்தையும் கவனித்து அலட்சிய புன்னகையுடன் சுற்றிக் கொண்டிருந்தாள் இந்திர ராணி.
அப்பொழுது இரண்டாம் சாமம் தொடங்கும் சமயம் படைதலைவர் மாறவர்மன் அவளை அணுகி " தேவி கடற்கரையில் உள்ள கப்பல்களில் இருந்து வீரர்கள் இறங்குகிறார்கள் நீங்கள் கடற்புறத்தை கவனிக்க சொன்னதால் எளிதாக கண்டு பிடித்தோம்" என்றார் அச்சம் நிறைந்த குரலில். ஆனால் அச்சம் துளி கூட இல்லாத குரலில் அவள் " இறங்கட்டும் நமது வீரர்களை அழைத்து சென்று மேற்கு வாயில் பக்கம் உள்ள திடலில் மறைய செய்யுங்கள் " என்றாள் உறுதியுடன்.
அவர் எதுவும் புரியாமல் குழப்பத்துடன் " ஏன் தேவி? போர் தெற்கு வாயிலில் தானே ஆனால் தாங்கள் விளையாட்டு திடலில் சென்று மறைய சொல்கிறீர்கள் " என்றார். அவள் உடனே " சொல்வதை செய்யுங்கள் " என்றாள் கடுமையுடன். மேலும் தன் கையில் உள்ள பந்தத்தை கொழுத்தி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள காடுகளை நோக்கி ஆட்டினாள். அந்த பந்தம் சாதாரண பந்தங்கள் போல் அல்லாமல் பச்சை நிறத்தில் எரிந்தது. பதிலுக்கு காட்டு புறம் இருந்து மற்றொரு பந்தம் ஆடியது சிறு புள்ளியாக.
அனைத்தையும் பார்த்த அவர் அவள் எதோ பதில் திட்டம் தீட்டுகிறாள் என உணர்ந்து கொண்டார். அவளது கூரிய அறிவை சில நாட்களாக அறிந்திருந்து ஏன் இப்படி சொல்கிறாள்? அது என்ன திட்டம்? என்பது அவருக்கு புரியவில்லை ஆயினும் அவள் சொன்னபடியே சென்று திடலில் பதுங்கினார் வீரர்களை அழைத்து சென்று. ஆயினும் குழப்பமும் பயமும் இருந்தது அவரிடம். இரண்டாம் சாமம் பாதி முடியும் சமயம் எதிரிகள் கப்பல்களில் இருந்து இறங்கி கோட்டை சுவரை நெருங்கி உடைக்க தொடங்கினர். ஆனால் முடியவில்லை. அப்பொழுது கப்பல்களில் இருந்த மாலுமிகள் பேராபத்தில் சிக்கினர்.

ஆறு மரங்கலங்கள் பெரும் வேகத்துடன் கடற்கரையை நோக்கி வந்தன. முதலில் அவற்றை வணிக கப்பல்கள் என எண்ணி மாலுமிகள் அனுமதித்தனர். பெரும் வேகத்துடன் வந்த கப்பல்கள் பெரும் வேகத்துடன் எதிரிகள் கப்பல்களினாலே அமைந்திருந்த அரணில் மோதினர். அடுத்த சில நிமிடங்களில் அந்த அரணில் இருந்த எதிரி கப்பல்களின் அடிபாகம் ஆழமாக பிளக்கப்பட்டு ஆடின. அந்த ஆறு மரக்கலங்களும் திடீரென பற்றி எரிந்தன. அவற்றுடன் சேர்ந்து அருகே நின்ற பிற மரங்கலங்களும் பற்றி எரிய தொடங்கின. ஆறு மரக்கலங்களில் இருந்த மாலுமிகள் கடலில் குதித்து தப்பிக்க பிற கப்பல்களில் இருந்த மாலுமிகள் எரியும் கப்பல்களுடன் சேர்ந்து அழிய தொடங்கினர்.
சொற்ப மாலுமிகள் இருந்த காரணத்தினால் கப்பல்கள் பிரிக்கம் முடியவில்லை அவர்களை கொண்டு போர் புரியவும் இயலவில்லை. அந்த மரக்கலங்கள் அனைத்தும் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நின்றிருந்த காரணத்தினால் அவ்வளவு எளிதாக நெருப்பு பற்றிய இடத்தை விட்டு நகர இயலவில்லை. அந்த நக்கூரங்களை பிரித்து எடுத்து அவற்றை நெருப்பு பாதையில் இருந்து நகர்த்துவதற்கு முன் நடந்த நாசம் அதிகம். அசைவுறா நிலையில் உள்ள மரக்கலம் நிலத்தில் உள்ள முதலைக்கு சமம் ஆகவே நாசம் அதிகம்.
வந்த ஆறு கப்பல்களில் இருந்த தீ பத்து மரங்களங்களில் பற்றி எரிந்தன. அத்துடன் அந்த ஆறு கப்பல்கள் மூழகுவதற்கு முன்பு இருபது மரங்கலங்களின் அடிகளை பிளந்து நீர் ஏற செய்து முழ்கடித்தனர். இந்த கூச்சல்கள் எல்லாம் அடங்கி அந்த நெருப்பு அணையும் சமயத்தில் பின்னால் தள்ளி பத்து மரக்கலங்கள் வந்தன. அவற்றில் இருந்து எரியம்புகளும் தீப்பந்தங்களும் எதிரி கப்பல்களை நோக்கி பாய தொடங்கினர். அத்துடன் நெருங்கி வந்து பெரிய பெரிய் பாறைகளையும் எதிரி மரக்கலங்களின் மேல் வீசின. பெரும் வேகத்துடன் வீழ்ந்த அந்த பாறைகள் மரங்கலங்களை எளிதாக உடைத்து போட்டன. உடைந்து ஓட்டை விழுந்த அந்த கலங்கள் எளிதாக முழ்கின.
அந்த சமயத்தில் கடற்புறம் கேட்ட பெரிரைச்சல் கொண்டு அங்கே அபாயம் என உணர்ந்த. கோட்டைய உடைத்துக் கொண்டிருந்த கடற் படை வீரர்கள் அங்கே செல்ல முயன்றனர். அப்பொழுது கோட்டை கதவுகள் உடைந்து விழுந்தன. கடற்படையின் கப்பல்களில் நிகழ்ந்த நாசத்தை கண்ட அவர்கள் இந்த சமயத்தில் கப்பலுக்கு போவதை விட உள்ளே சென்று வரும் எதிரி படையுடன் கஜவர்மன் திட்டப்படி போரை தொடங்கி அவர்களுடன் இணைவதே நல்லது என அறிந்து உள்ளே புகுந்தனர்.
உள்ளே சென்ற அவர்கள் அதிர்ச்சியே அடைந்தனர். அங்கே முத்தூர் படை வீரர்கள் ஒருவர் கூட இல்லை மாறாக கஜவர்மன் படை தான் வந்தது. கப்பல்களை இயக்க போதிய ஆள்கள் இல்லாத காரணத்தினால் பல மரகலங்களின் அடிப்பாகம் பிளக்கப்பட்டு முழ்க தொடயங்கியதாலும். எதிரிகளின் மரக்கலங்கள் தீபந்தங்களையும் பெரும் பாறைகளையும் வீசி சில மரக்கலங்களை எரித்தும் உடைத்து விட்ட காரணத்தினாலும்.
கடற்போரில் முத்தூர் எளிதாக வென்றது. அதனை போர் என சொல்வதை காட்டிலும் அழித்தல் என சொல்லுவது பொருந்தும். ஏனென்றால் அந்த முத்தூர் கலங்கள் அவற்றுடன் போராடவில்லை மாறாக அழித்துவிட்டன. பொறுமையாக வீரர்கள் மரங்கலங்களில் இருந்து இறங்கும் சமயம் வரை காத்திருந்து. அவர்கள் இறங்கி வந்த உடன் நிராதரவாக இயக்கம் முழுவதும் தடைப்பட்டு இருந்த கப்பல்களை அழித்தது இந்திர ராணியின் பெரும் தந்திரம் என புரிந்தது கஜவர்மனுக்கு.

ஆயினும் " நீ தவறு செய்து விட்டாய் இந்திர ராணி என் கப்பல்களை சூழ்ச்சி செய்து அழித்தாலும் என் தரைப்படை வீரர்களையும் கடற்படை வீரர்களையும் ஒன்றாக சேரவிட்டு விட்டாய். மேலும் நான் இந்த ஊருக்குள் புகுவதற்கு ஓரே தடையான கோட்டையையும் உடைக்க விட்டுவிட்டாய். வடபுறம் உள்ள கோட்டை கதவுகளை திறந்து விட்டு என் மொத்த படையும் உள்ளே வர வழி கொடுத்து விட்டாய். இப்பொழுது மொத்தம் 110000 வீரர்கள் உன் தலை நகருக்குள்ளே இந்த நகர் என் கையில். இவர்களை எப்படி உன் 300000 வீரர்கள் கொண்டு தடுப்பாய்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN