குட்டிக்கதை

Bharathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குட்டிக்கதை
எப்போ வேணா புள்ள பொறக்கற நிலைமல இருக்கு , எந்த தைரியத்துல செக் அப் க்கு தனியா வர நீ? எதாச்சும் ஆச்சுனா யார் பதில் சொல்றது ? பத்திரமா வீட்டுக்கு போய்டுவியா ? அடுத்த முறை இப்படி வராத. இப்படியாக அந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியின் அக்கறை கலந்த வசவுகளையெல்லாம் புன்னகையோடு கேட்டுக் கொண்டு மென்னடை போட்டாள். பேருந்து நிலையத்திற்கு செல்ல 10 நிமிடங்கள் மண் சாலையில் நடந்தாக வேண்டும்.நிறைசூலிக்கே உரிய சோர்வை உணரும் போது கருவிலிருக்கும் சிசு இன்னும் புவி வாசம் படரா தன் பிஞ்சு பாதங்களால் மெதுவாக நிமிண்டியது. சோர்வு கூட பின்னுக்குச் சென்று இரண்டு மாதங்கள் முன்பு வரை உயிரோடிருந்த கணவனின் நினைவுகள் மனதில் எழ நின்ற இடத்திலேயே இமைகளை மூடி சமன்படுத்த முயன்றாள். பெரு மழைக்கு ஒத்திகை பார்க்கும் சாரல் போல இரு துளிகள் கண்களில் திரண்டு கண்ணம் வழிந்தன.மேலிருந்த அந்த சிவுப்புக் கென்றை மரம் அந்நேரம் ஒற்றை மலரை அவள் மேல் உதிரச்செய்தது.ஆசீயாகவும் இருக்கலாம்.பிரிந்த கணவனின் முத்தமாகவும் இருக்கலாம்.இயல்பான ஒன்று என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள் அவளிடம் ❤
 

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிஜமாகவே இது தான்கா குட்டிக்கதை.... குறுகிய நேரத்தில் பல உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கீங்க😍😍👏👏👏
செம்ம அக்கா😘😘
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN