யாசிக்கிறேன் உன் காதலை - 11

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖யாசிக்கிறேன் உன் காதலை - 11 💖

ஒரு நிமிஷம் நில்லுங்க நந்து உன் ஃப்ரெண்டுன்னு ஒரு பையன அழைச்சிட்டு வந்தியே அவன் எங்க??" என்றார். சிறியவர்கள் அதிர்ச்சியுடன் நின்றனர்.


"மேல.. கீழ. வெளிய.. ரூம்ல.. போயிட்டான்.." என்று ஐந்து ஆண்களும் வேகமாக சொல்லிவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தனர்.


"என்னடா உளர்றீங்க?? அந்த பையன் எங்க டா??" என்றார் நேசமணி தாத்தா முறைப்புடன்.


"இருங்கடா நானே சொல்றேன், தாத்தா அந்த பையன் கிளம்பிட்டான்" என்றான் துரு வேகமாக."ஏன்டா??" என்றார் தாத்தா குழப்பமாக.


"அப்புறம் நைட்டு நீங்க எப்படி திட்டுனீங்க அவன் பயந்து ஓடிட்டான்" என்றான் நந்து பொய்யான சலிப்புடன்.


"நீங்களும் ஓட வேண்டியதுதானே!" என்றார் முறைப்புடன்.


"அதுக்கு தான் வழியே இல்லாம போச்சே!" என்றான் ரிஷி மெதுவாக. மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.


"சரி எல்லாரும் கிளம்புங்க" என்று சத்தம் போட்டு விட்டு வெளியே சென்றார். பெரியவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் குணா மட்டும் அங்கே நின்றார்.


"நல்ல வேல கிரேட் எஸ்கேப் பேபி நீ" என்றாள் அபி நேகாவை பார்த்து சிரிப்புடன்.


"ஆமா" என்றனர் மற்றவர்களும். நேகா தூசி தட்டுவது போல் தோளை தட்டிக் கொண்டு இருந்தாள்.

"பேபி டால்" என்று குணா பக்கத்தில் வந்தார்.


"வாட் டாடி??".


"சொல்லுடா குட்டிமா என்ன திருட்டுதனம் பண்ணுன" என்றார் கூர்மையான பார்வையுடன்.


"அது வந்து மாமா... குணாப்பா.." என்றனர் சிறியவர்கள் அபியை தவிர.


"நா பேபி டால் கிட்ட மட்டும் தான் கேட்டேன், சொல்லு டா" என்றார் வெற்று குரலில்.


"டாட் நானும் நைட் ஷோ போனேன்" என்றாள் சிரிப்புடன்.


என்ன இவ சிரிக்கிறா என்பது போல் மற்றவர்கள் பார்த்தனர். "நைட் ஷோ எப்படி இருந்தது??" என்றார் சிரிப்புடன்.


"சூப்பரா இருந்தது டாடி அதுவும் நைட்டு நா எப்படி போனேன்னு தெரியுமா??" என்று அபியின் கையில் இருந்த போனை வாங்கி காட்டினாள்.


"சூப்பர்டா செம்மையா இருக்க" என்றார் சிரிப்புடன்.


"குணாப்பா நாங்க பயந்துட்டோம்" என்றனர் நந்து மற்றும் சந்தோஷ்.


"டாடி எப்போதுமே நம்ம பக்கம்தான்" என்றாள் அபி சிரிப்புடன்.


"குணா நீ என்ன இங்கயே நிக்கிற போய் கிளம்புற வழிய பாரு போ" என்றார் நேசமணி உள்ளே வந்து கட்டளையாக.


"இதோ போறேன் பா" என்று வேகமாக சென்றார்.


சிறியவர்கள் அவரவர் அறைக்கு சென்று குளித்துவிட்டு கீழே வரும்போது பெரியவர்கள் அனைவரும் கிளம்பி சென்றனர். வீடு காலியாக இருந்தது. அபி, சந்தியா, மித்ரா மூவரும் கிச்சனில் காஃபி போட்டுக் கொண்டிருந்தனர். ஆண்கள் ஐந்து பேரும் கிச்சனுக்கு வந்தனர்.


"காஃபிய குடிங்க" என்று அபி அனைவருக்கும் தந்துவிட்டு தாழ்வாரத்திற்கு வந்து,"பேபி டால்" என்று சத்தம் போட்டாள்.


"கமிங் அபி" என்று கீழே ஓடி வந்தாள்."வா" என்று கிச்சனுக்கு அழைத்துச் சென்றாள். நேகா கிச்சன் மேடையில் ஏறி உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டு இருந்தாள்.


"இந்தா காஃபி குடி நேகி" என்று சந்தியா கொடுத்தாள்.


"தேங்க் யூ பேபி" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.


"எச்சு பண்றதே ஒரு வேலையா வச்சுக்கிட்டு இரு" என்று சிரிப்புடன் நகர்ந்தாள்.


"நேகி இந்தா பிஸ்கட்" என்று ரிஷி அவள் பக்கத்தில் வந்து கொடுத்தான்.

"தேங்க்யூ ரிஷி" என்று வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.


அவளை முறைத்துக் கொண்டே நின்றான்."என்ன ரிஷி??" என்றாள் குழப்பமாக.


"ம்ம்.." என்று கன்னத்தை காட்டினான்.


"கன்னத்துல என்ன இருக்கு ஏதாச்சு அடிப்பட்டுருச்சா??" என்றாள் வேகமாக. மற்றவர்கள் சத்தமாக சிரித்தனர்.


"லூசு மண்டையா போடா அந்த பக்கம்" என்று துரு அவன் தலையில் தட்டி விட்டு தோசையை ஊற்ற அடுப்பைப் பத்த வைத்தான்."ரொமான்ஸ் பண்ண விட மாட்டீங்களே!! நேகி நீ இவ்ளோ டியூப்லைட் இருப்பன்னு எதிர்பார்க்கல" என்றான் சோகமாக.


"சந்தோஷ் சட்னி ரெடி பண்ணு" என்றான் விரு.


"இதோ மிக்ஸியில்ல போட போறேன் டா" என்றான்.


"உங்க எல்லாருக்கும் சமைக்க தெரியுமா??" என்றாள் அபி.


"கொஞ்சம் தெரியும் நா ஃபாரின்ல இருந்தப்ப செல்ப் குகிங் தான், இவனுங்க தப்பு பண்ணிட்டு மாட்டிக்கிட்டதுக்கு, அப்பா ஒன் வீக் இவங்களையே சமைச்சு சாப்பிட சொல்லிட்டாரு, அதுல மூணு பேரும் கத்துக்கிட்டானுங்க" என்றான் துரு சிரிப்புடன்.


"எங்கள அசிங்கப்படுத்தாம உனக்கு தூக்கம் வராதே!" என்று விரு அடுப்பை பத்த வைத்து சட்னியை தளித்தான்.


"ஈஈஈஈஈஈ.." என்று இழித்தான்.


"அண்ணா நாங்களும் இன்னும் சாப்பிடல சீக்கிரம் தோசை ஊத்து" என்றாள் மித்ரா பக்கத்தில் வந்து.


"ஓகே! டா செல்லம்" என்று ஊத்த ஆரம்பித்தான். இரண்டு தோசை ஊத்தியதும் மித்ராவுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டான். "டாலு ஆ.." என்று அவளுக்குப் ஊட்டினான்.


"மாமா" என்றனர் மற்ற இரு பெண்களும்.


"உங்களுக்கு தான் ஊட்ட போறேன், நந்து சேர் எடுத்து வந்து போடு" என்றான். நந்து எடுத்து வந்து போட்டதும் அதில் மூவரும் உட்கார்ந்தனர்.


ரிஷி தோசையை ஊத்த ஆரம்பித்தான். துரு நான்கு பெண்களுக்கும் ஊட்டினான்." மாமா.. மாமா பொண்ணுங்களுக்கு ஊட்டிவிட்டே கவுக்குறியா??" என்றான் நந்து கிண்டலாக.


"ஆமா பாரு டா" என்றான் ரிஷி கிண்டலாக.


"தங்கச்சிக்கு ஊட்டுறது கண்ணுக்கே தெரியாதே" என்றான் சிரிப்புடன். சந்தோஷ் துருவின் தட்டில் தோசை வைத்து சட்னியை ஊற்றினான்.

"மாவு இருக்குனு எங்களுக்கே தெரியாது உங்களுக்குல எப்படி தெரிஞ்சது??" என்றாள் சந்தியா சாப்பிட்டு கொண்டே.


"எங்க தாய் குலம் போன் பண்ணி சொல்லி விட்டார்கள்" என்றனர் ஆண்கள் ஐந்து பேரும்.


"எனக்கு போதும் நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நா ஏதாச்சும் வேல பாக்குறேன்" என்று நேகா இறங்க முயற்சி செய்தாள்.


"இன்னும் சாப்பிடு டாலு, ஏய்!! இருடி குதிக்காத" என்று அவன் இடது கையால் அவளை அணைத்தபடி இடுப்பை பிடித்து தூக்கி இறக்கினான். நேகா லேசான அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். டீ-ஷர்ட் இவன் தூக்கியது விலகி அவள் வெற்று இடையை பிடித்ததை நினைத்து நேகாவை பார்த்து முழித்தான். மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் இதனை கவனிக்கவில்லை. வீட்டு போன் அடிக்கும் சத்தத்தில் இருவரும் தன்னிலை உணர்ந்தனர்.


நேகா வேகமாக ஓடிப் போய் போனை எடுத்து,"ஹலோ!" என்றாள்.


"இன்னும் வயலுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும், நா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன் சீக்கிரம் கிளம்பி வாங்க" என்று சத்தம் போட்டு விட்டு தாத்தா வைத்தார்.

"யாரு நேகி??" என்று நந்து வந்தான். தாத்தா பேசியதை சொன்னாள்."இந்த எம்டனுக்கு மூக்கு வேர்த்துடுமே சரி வா சாப்பிட்டு போலாம்" என்று நந்து அழைத்து சென்று தாத்தா சொன்னதை சொன்னான். அனைவரும் வேகமாக சாப்பிட்டனர்.

"நேகி நீ போய் வேற டிரஸ் மாத்திட்டு வா" என்றான் சந்தோஷ்.

"ஏன்??" என்றாள் குழப்பமாக.

"வயலுக்கு இந்த மாதிரி ஸ்காட் டீ-ஷர்ட்டும் போட்டு வந்தா எப்படி அங்க வேலை பார்க்க முடியும்?? சேரும் ஒட்டிக்கும்" என்றாள் மித்ரா.

"இதோ வரேன் வெய்ட்" என்று வேகமாக மாடிக்கு சென்று சுடிதாரை மாற்றிக் கொண்டு வந்தாள். அனைவரும் வயலுக்கு சென்றனர்.


நேகாவும் அபியும் வயலை பார்த்ததும் சேற்றில் இறங்கி விளையாட ஆரம்பித்தனர். வயலில் வேலை பார்ப்பவர்கள் இவர்களை வித்தியாசமாகப் பார்த்தனர். "அட லூசுகளா இங்கதான் நெற்பயிர் நடனும் வாங்க" என்றான் விரு.

"ஆமா வாங்க இரண்டு பேரும்" என்றனர் மற்றவர்களும்.


"நோ.. நீங்களும் வாங்க" என்று இருவரும் சேர்ந்து மற்றவர்களையும் இழுத்து விளையாட ஆரம்பித்தது. வேலை பார்ப்பவர்கள் இவர்களை வேடிக்கை பார்த்து சிரித்தனர்.


"எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? உங்கள எதுக்கு இங்க வர சொன்னேன்?? என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க?? வேலை பாக்காம விளையாடிட்டு இருக்கீங்க, உங்களால வேல பாக்குறவங்களும் வேலை பாக்காம வேடிக்க பாக்குறாங்க" என்றார் தாத்தா கோபமாக வந்து.


"தாத்தா சும்மா தான் தாத்தா, எங்களுக்கு இங்க என்ன வேல செய்யத் தெரியும்?? சொல்லுங்க" என்றான் துரு பாவமாக முகத்தை வைத்து பக்கத்தில் சென்று.


"இப்படியே முகத்த வச்சே என்னைய ஏமாத்திடு டா படவா" என்று சிரிப்புடன் துருவின் கன்னத்தை தட்டிவிட்டு," ஒழுங்கா எல்லாரும் பம்புசெட்டுல போய் குளிச்சுட்டு வீட்டுக்கு போங்க" என சொல்லிவிட்டு சென்றார்."பம்பு செட்டுனா??" என்றனர் அபியும் மற்றும் நேகாவும்.


"வா காட்டுறோம்" என்று சந்தியாவும் மித்ராவும் இழுத்து சென்றனர்.


பெரிய தொட்டியில் மேலே தண்ணீர் பெரிய பைப்பிலிருந்து ஊற்றிக்கொண்டே இருந்தது. அந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வயலுக்கு சென்றது.
"வாவ்..." என்றனர் இருவரும் குதுகலமாக.


"வாங்க நாம இறங்கலாம்" என்று மித்ராவும் சந்தியாவும் இருவரையும் இழுத்து இறங்கினர். நான்கு பேரும் விளையாட ஆரம்பித்தனர்.


"நீங்க நாலு பேரும் இங்கயே விளையாடுங்க நாங்கள் கேணில குளிக்கிறோம்" என்றான் ரிஷி. மற்றவர்கள் ரிஷி பேசிக் கொண்டிருந்த கேப்பில் குதித்தனர்."டேய்!! நானும் டா" என்று குதித்தான். சிறிது நேரம் கழித்து துரு படிக்கட்டு வழியாக மேலே ஏறி வந்தான்.


"ஹேய்!! டாலு எங்க??" என்றான் வேகமாக.


"அவ அந்தப் பக்கம் செட்டுல விளையாட போறேன் போயிட்டா" என்றனர் மூவரும்.


"அவள எதுக்கு தனியா விட்டிங்க??" என்றான் முறைப்புடன்.


"அவ சொன்னா கேட்குற ஆளா??" என்றனர் மூவரும் சிரிப்புடன்.


துரு இடது வலமாக தலையை ஆட்டிவிட்டு அங்கு சென்றான். அது சிறிய தொட்டியும் பைப்பின் வழியாக தண்ணி கொஞ்சமாக ஊத்தி கொண்டிருந்தது. நேகா மட்டும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தாள். "டாலு எதுக்கு தனியா வந்த?? குளிச்சது போதும் வா" என்றான்.


"அது ரொம்ப எனக்கு வழுக்குனது தேவ் இது வலுக்காது, சின்ன தொட்டின்னு சந்தியா சொன்னா அதான் இங்க வந்தேன்" என்றாள் தண்ணீரை அவன் மேலே அடித்தப்படி.

"ஏய்!! என்னடி பண்ற?? போதும் வா போலாம்".


"நா வரனும்னா நீ என் நேம் சொல்லு" என்றாள் சிரிப்புடன்.


"அபிநேகவதி சொல்லிட்டேன் டாலு வா போலாம்".


"இல்ல நீ ஃபுல் நேம் சொல்லக் கூடாது டாலு என் நிக் நேம்" என்றாள் வேகமாக.


"சரி அபி.. நேகா.. நேகி.. வதி.. சொல்லிட்டேன் வா" என்று கையை அவள் பக்கம் நீட்டினான்.


"இது போங்கு ஒரு நேம் சொல்லு தேவ்" என்றாள் பிடிவாதமாக.


"சரி வதி வா போலாம்" என்றான் மீண்டும் கையை நீட்டி.


"சூப்பர்" என்று தண்ணீரை அவன் கையில் ஊற்றி அவன் கையை லேசாக அடித்து விட்டு பிடித்தாள்.


"உன்னலா மேய்க்கிறது ரொம்ப கஷ்டம் தான்" என்று சிரிப்புடன் அவளை தொட்டியில் இருந்து இறங்க உதவி செய்தான்.


"ஹேய்!! மேன் நானே இறங்க மாட்டேன்னா இதுல ஹெல்ப் வேற" என்றாள் கிண்டலாக.


"உனக்கு ஹெல்ப் பண்ணுனேன் பாரு என்னை சொல்லணும்" என்று சலிப்புடன் தலையில் அடித்துக் கொண்டான்.

"ஆமா மேன் மேய்க்கிறதுனா என்ன??" என்று அவனிடம் பேசியபடி பாசனில் காலை வைத்ததும்,"ஆ..." என அலறி பின்னால் விழப்போனாள்‌.துரு அவளை பின்னால் விழாமல் அவள் இடுப்பை பிடித்தான். நேகா பயத்தில் அவன் டீ ஷர்டை இருக்கமாக பிடித்துக் கொண்டாள். துருவ் ஒரு நிமிடம் அவள் முகத்தை பார்த்து தன்னை அறியாமல் அவள் முகத்தை நோக்கி குனிந்தான். நேகா கண்களை திறந்து லேசாக பின்னால் பார்த்துவிட்டு," தேவ் நீ பிடிக்கலைன்னா நா அவுட் தான்" என்றாள் சிரிப்புடன்.


அவள் பேசியதில் சுயநினைவுக்கு வந்தவன், வேகமாக அவளை நேராக நிற்க வைத்தான்.' ஐயோ! என்ன காரியம் பண்ண பார்த்தேன் எனக்கு என்னாச்சு?? இவ குழந்த இவகிட்ட போய் ச்ச...' என்று மனதிலே புலம்பியபடி தலை முடியை அழுத்தி கோதினான்.


"மாமா.. நேகி சீக்கிரம் வாங்க நேகி உன் ஃப்ரெண்ட்ஸ் யாரோ வந்துருக்காங்கலாம்" என்றான் நந்து சத்தமாக.


"என் ஃப்ரெண்ட்ஸா?? கம்மிங்" என்று மற்றவர்கள் நிற்கும் இடத்திற்கு கீழே பார்த்தபடி கவனமாக ஓடினாள். துரு அவள் பின்னால் யோசனையுடன் சென்றான்.


அனைவரும் வீட்டிற்கு வந்தனர். "பேபி டால்... வேது.." என்று இரு பெண்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டனர்.


"எப்ப வந்தீங்க??" என்று இருவரும் பிரிந்தனர். சிரிப்புடன் நான்கு பேரும் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

"நைட் வந்தோம், தாத்தா பாட்டி கூட இருந்துட்டு இங்க வந்தாச்சு, பேபிடால் உன் கண்ணு ஏன் சிவந்த மாதிரி இருக்கு??" என்றாள் ஆதிரா.


"அது ஒன்னும் இல்ல ஆதி, காய்ஸ் இவ ஆதிரா இவ தியா" என்று சிரிப்புடன் அறிமுகம் செய்தாள்.


"ஹாய்" என்றனர்.


"அதான் தெரியுமே! வீடியோ கால்ல பார்த்திருக்கமே!" என்றனர் சந்தோஷ், விரு, ரிஷி மூவரும் கோரசாக.ஆதியும் தியாவும் சிரித்தனர். சந்தியா மற்றும் மித்ராவை இருவரும் அணைத்து விலகினர்.

"மீ அண்ட் டாட் எங்க??" என்றாள் தியா.


"தெரியல" என்றனர்.


"ரவீன் கிட்ட கால் பண்ணி வர சொன்னேன் ஆளையே காணோம்" என்றாள் ஆதி.


"ஆதி டார்லிங் நா வந்துட்டேன்" என்று உள்ளே வந்தான்.


"ரவீன்" என்று இருவரும் பக்கத்தில் ஓடி வந்து லேசாக அணைத்து விலகினர்.


"டிராவல் எப்படி இருந்தது??" என்றான் சிரிப்புடன்.


"நாங்க ரெண்டு பேரும் வந்தனால ஒன்னும் தெரியல" என்றாள் தியா சிரிப்புடன்.


"ஹாய்! செல்ல குட்டிஸ்" என்று குணா உள்ளே வந்தார். இவருக்கு பின்னால் மொத்த குடும்பமும் வந்தது தாத்தாவை தவிர.


"டாடி" என்று இரு பெண்களும் வேகமாக சென்று அணைத்து," மிஸ் யூ டாட்" என்று விலகினர்.


"மிஸ் யூ டூ டியர்ஸ்" என்று இருவரின் நெற்றியிலும் இதழ் பதித்தார்.


"டாடிய பார்த்தா இந்த மீ கண்ணுக்கே தெரியாதே" என்றார் அகிலா கிண்டலாக.


"மீ.." என்று இருவரும் அணைத்து முத்தமிட்டு விலகினர்.


குணா அனைவருக்கும் இருவரையும் அறிமுகம் செய்தார். அம்மாக்கள் கிச்சனுக்கு சென்றனர். மற்றவர்கள் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினர். தாத்தா வந்ததும் இருவரையும் அறிமுகம் செய்தார்‌." துரை பாக்க வந்தான் துரை பொண்ணு தானே நீ" என்றார் ஆதிராவை பார்த்து சிரிப்புடன். ஆதிரா சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்டினாள்.


"சரி எல்லாரும் வாங்க நாம மாடிக்கு போலாம்" என்றாள் அபி.


"ஓகே!" என்று சிறியவர்கள் அனைவரும் மேலே சென்றனர். மாடி ஹால்லில் கீழே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.


"பேபி டால்.. வேது.. ஆதி.. துரு ஹாண்ட்சம்ல" என்றாள் தியா பிரெஞ்சு மொழியில்.


துருவை பார்த்தபடி," ஆமா" என்றனர் சிரிப்புடன் பிரெஞ்சில். இனி சில இடங்களில் மற்றவர்களுக்குப் புரிய கூடாத விஷயங்களை நால்வரும் பிரெஞ்சில் பேசுவார்கள் அதை நாம் தமிழ் பாக்கலாம்.


"நா அவன கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றாள் தியா கிண்டலாக.


"பாரு டா, நீ சொன்ன மாதிரி தேவ் ஹாண்ட்சம் தான் அத விட அவன் கேரக்டர் செம்ம சூப்பர், ஐ லைக் ஹிம்" என்றாள் நேகா சிரிப்புடன்.


மூவரும் அவளை திரும்பிப் பார்த்தனர்." எனக்கும் துருவ பிடிக்கும் பேபி, இது வெறும் லைக் மட்டும் தானா??" என்றாள் அபி கூர்மையாக பார்த்து.


"தெரியலையா இன்னும் நா நெக்ஸ்ட் ஸ்டெப் போல" என்றாள் சிரிப்புடன்.

"ஓ..." என்றனர் மூவரும் கிண்டலாக.

"எத்தன பேர நீ அலையவிட்ட இப்ப நீ இவன் பின்னாடி அலைய போற பாரு" என்றாள் தியா கிண்டலாக. (அவள் சொன்னது தான் ஓர் நாள் பலிக்க போவதை இவர்கள் அறிவார்களா).


"ஏய்!! நிறுத்து நிறுத்து என்ன கசமுசா கசமுசா பேசுறீங்க தமிழ்ல பேசுங்க" என்றான் நந்து முறைப்புடன்.


"ஐ திங்க் நீங்க நாலு பேரும் என்னைய பத்தி தானே பேசுனீங்க" என்று துரு புருவத்தை உயர்த்தினான்.


"ஆளு மட்டுமில்ல மூளையும் செம்மையா வேலை பாக்குது" என்றாள் ஆதிரா பிரெஞ்சில்.


"யா" என்றனர் மற்ற மூவரும்.

"என்ன யா??" என்றனர் மற்றவர்கள்.

"உண்மைய சொல்லுங்க நா கெஸ் பண்ணுனது கரெக்ட் தானே!" என்றான் துரு சிரிப்புடன்.


"ஆமா கரெக்ட் தான் உன்ன ஹாண்ட்சம்னு சொல்லிட்டு இருந்தோம், பேபி டால் நீ ஹாண்ட்சம் மட்டும் இல்ல செம்ம கேரக்டர்னு சொன்னா உன்ன பிடிக்கும்னு சொன்னா, எனக்கும் உன்ன பிடிக்கும்னு சொன்னேன்" என்றாள் அபி சிரிப்புடன்.


துருவின் முகம் மலர்ந்தது,' அபிக்கு என்னைய பிடிக்கும் சொல்லிட்டா நீ தேரிட்ட டா' என்று அவனுக்கு அவனே பாராட்டிக்கொண்டான்.


விரு யோசனையுடன் சந்தோஷை பார்த்தான். அவன் இவனை தான் பார்த்துக்கொண்டிருந்தான். ரவீன் யோசனையுடன் நேகாவை பார்த்தான்."ஹலோ!! நாங்கள ஹாண்ட்சம் இல்லையா ???" என்றான் ரிஷி கிண்டலாக.

"அதானே!" என்றான் நந்து.


"நீங்களும் ஹாண்ட்சம் தான்" என்றாள் ஆதி சிரிப்புடன்.


"ஆமா.. ஆமா.." என்றாள் தியாவும் சிரிப்புடன்.

"அப்ப நாங்க" என்றனர் சந்தியா மற்றும் மித்ரா.


"நீங்க ரெண்டு பேரும் செம்ம பிரீட்டி" என்றாள் அபி மித்ராவின் கன்னத்தை செல்லமாக தட்டி .


"ஆமா வெரி பிரீட்டி" என்றாள் நேகா சிரிப்புடன்.


"பேபி டால்" என்றான் ரவி கூர்மையான பார்வையுடன். மற்றவர்களும் அவனைப் பார்த்தனர்.
"நா உனக்கு நைட் கால் பண்றேன்" என்றான்.


"நா சொன்ன வேலைய முதல்ல பண்ணு ரவீன், டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் நா சொன்னத முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு கால் பண்ணு" என்றாள் அழுத்தமாக.

"ஓகே! ஐ வில் ட்ரை, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா கிளம்புறேன்" என்று எழுந்தான். நேகா கண்களை மூடித் திறந்ததும் ரவீன் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"என்ன மேட்டர்??" என்றாள் மித்ரா.


"அது ஒன்னும் இல்ல, எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா??".


"ஓகே!" என்று கீழே சென்றனர்.

ஆதியும் தியாவும் ஒரே அறையில் தங்குவதாக சொன்னதால் அபியின் பக்கத்து அறையில் இருவரும் தங்கினர். அன்று இரவு பன்னிரண்டரை மணி போல் துரு கிளையண்டிடம் மாடி தாழ்வாரத்தில் நடந்தப்படி பேசிக்கொண்டிருந்தான். நேகாவின் அறையில் முனங்கள் சத்தம் கேட்டதும். போனை கட் செய்துவிட்டு சென்று பார்த்தான். நேகா குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தாள்."டாலு என்னாச்சு??" என்று லைட்டை போட்டு நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் நெருப்பாக சுட்டது. "டாலு உனக்கு ஃபீவரா இருக்கு, இங்க பாரு" என்று அவள் கன்னத்தை லேசாக தட்டினான்.


நேகா முழிக்க முடியாமல் முழித்து," ரொம்ப கசப்ப இருக்கு தேவ், நைட்டு பனில படுத்ததும் வயல்ல குளிச்சதும் ஒத்துக்கல போல" என்றாள் சோர்வுடன் எழுந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து.


"இரு டேப்லெட் கொண்டு வரேன்" என்று வெளியே செல்ல போனான்.

"வேணா அங்க பாரு அந்த கப்போட்டுல என் பேக்ல இருக்கு அத எடு" என்று கஷ்டப்பட்டு பேசினாள்.


"பால் குடிக்கிறியா??".


"வேணா ஏற்கனவே சாப்பிட்டது வாமிட் பண்ணிட்டேன்" என்றாள் சோர்வுடன்.


"நீ இரு நா வரேன்" என்று வேகமாக கீழே சென்று கிச்சனில் பாலை காய்ச்சி, தண்ணீரை சுடுபடுத்தி எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு அவள் சொன்ன மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு பெட்டில் உட்கார்ந்தான்.


உட்கார்ந்தபடி தூங்கியவளிடம்,"டாலு.." என்று கன்னத்தை தட்டினான். என்னவென்று சோர்வுடன் முழித்தாள். அவளை தோளில் சாய்த்து பாலையும் மாத்திரையும் சாப்பிட வைத்து படுக்க வைத்தான். "உனக்கு முடியலனா அத்த கிட்ட சொல்ல வேண்டியது தானே" என்றான் அவள் தலை முடியை கோதி.

"இல்ல இப்ப தான் ஃபீவர் அடிக்குது மீய கூப்பிட முடியல" என்று சோர்வுடன் குறுகிப்படுத்தாள்.


"இன்னைக்கு வயல்ல குளிக்காம இருந்திருக்கலாம் தப்பு பண்ணிட்டோம்" என்று பெட்சீட்டை எடுத்து போட்டு விட்டான்.


"நீ ஏன் தேவ் இவ்ளோ! நல்லவனா இருக்க" என்றாள் லேசான சிரிப்புடன்.


துரு சிரிப்புடன்," தெரியலையே!" என்றான் அவள் தலைமுடியை கோதியபடி.

"நீ ரொம்ப பேட் போ" என்றாள் சிரிப்புடன்.

"நா பேட்டாவே இருக்கேன் நீ தூங்கு" என்று சிரிப்புடன் கோதினான்.சிறிது நேரத்தில் அவள் தூங்கியதும், கலப்படம் இல்லாத அவள் முகத்தை பார்த்து அவனை அறியாமல் அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்துவிட்டு அவன் அறைக்கு சென்றான்.


மறுநாள் காலையில் வீடே பரபரப்பாக இருந்தது. அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். சிறியவர்கள் கலக்கலாக ரெடியாகி பெண்களுக்காக தாழ்வாரத்தில் காத்திருந்தனர்.

பெண்கள் ரெடியாகி கீழே வந்தனர். "வாவ்.. நம்ம வீட்டு பொண்ணுங்களா இதுங்க அபி.. ஆதி.. ஹாஃப் சாரி செம்ம , நேகி நீ என்ன போட்டாலும் அழகுதான், இந்த தபாங்ல செம்மையா இருக்கா" என்றான் ரிஷி சிரிப்புடன்.

"ரிஷி ஹேன்ட் கீ வேணுமா??" என்றாள் தியா கிண்டலாக.


"இல்ல தியா என் கிட்டயே இருக்கு, நேகி வில் யூ மேரிடு மீ " என்றான் கிண்டலாக.


"உன் கிண்டல் நிறுத்து மேன் வீடே ஜொல்லுல முழுகுற நிலமைல இருக்கு இங்க ஒருத்தனால என்ன நந்து" என்றாள் கிண்டலாக.


"நேகி நோ டா" என்றான் வேகமாக.

"ஓகே! மேன் நீ நடத்து" என்றாள் சிரிப்புடன்.

"யாரடா பார்த்து ஜொள்ளு விடுற" என்றாள் மித்ரா குழப்பமாக.


"நீ எப்போதுமே இப்படியே இருக்கனும் டா மித்து" என்றான் இழித்தபடி. மற்றவர்கள் சிரித்தனர்.

"டாலு இப்ப எப்படி இருக்க??" என்றான் துரு சிரிப்புடன்.

"குட் நல்லா இருக்கேன்".

"என்னாச்சு" என்றனர் மற்றவர்கள்.


துரு நடந்ததை சொல்லிவிட்டு," சரி வாங்க கோவிக்கு போலாம்" என்று அழைத்து சென்றான்.

காரில் தியாவும் விருவும் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தனர். "தியா" மெதுவாக.


"என்ன மேன்??" என்றாள் ரகசியமாக.


"நீ ரொம்ப அழகா இருக்க, எனக்காகவே பிறந்த மாதிரி இருக்க" என்றான் கண்ணடித்து.


தியா கிண்டலாக பார்த்தபடி,"ஓ.. வேற".


"நீ ஓகே சொன்னா உன் வீட்ல பேச சொல்றேன்" என்றான் மெதுவாக.


"என்னன்னு??".


"உங்க பொண்ண எங்க பையனுக்கு குடுங்கனு தான்" என்றான் சலிப்புடன்.


"ஓ.. துருக்கா" என்றாள் கிண்டலாக.விரு முறைத்தபடி திரும்பி கொண்டான்." சரி சரி நா எதுவும் சொல்லல" என்றாள் கிண்டலாக. விரு இதை கண்டுகொள்ளாமல் இருந்தான். கோவில் வந்து சேர்ந்தனர். அனைவரும் காரில் இருந்து இறங்கினர். மொத்த ஊரும் அங்கு தான் இருந்தது. அங்கங்கு சாமி ஆடிக்கொண்டு இருந்தனர்.ராஜா(நந்துவின் அப்பா) இவர்களை பார்த்ததும் வேகமாக பக்கத்தில் ஓடிவந்து கோவிலுக்குள் அழைத்து சென்றார்.


உடுக்கை மோள சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.துரையின் குடும்பம் இவர்களுடன் இணைந்துக் கொண்டனர்.முதல் மரியாதைக்காக குணாவிற்கு தலப்பாக்கட்டி மாலை போட்டு பெரிய வாளை கையில் கொடுத்தார் பூசாரி. குணா அதனை வாங்கி கும்பிட்டுவிட்டு பூசாரியிடம் திருப்பிக் கொடுத்தார்.


பூசாரி அம்மனுக்கு தீபாராதனை காட்டி விட்டு அனைவருக்கும் கொடுத்தார். மோள சத்தம் நின்றது.
பூசாரி ஒரு கையில் உடுக்கையை அடித்தப்படி மரத்தடியில் வந்தார். அனைவரும் அவர் பின்னால் வந்தனர்.

நேகா, அபி, தியா, ஆதிரா பயத்துடன் பார்த்தனர். பூசாரி உடுக்கையை கீழே வைத்துவிட்டு சூலத்தை கையில் எடுத்து சாமியாட ஆரம்பித்தார். தாத்தா முன்னால் வந்து நின்றார்." நீ ஆசப்பட்டபடி உன் மகேன் வந்துட்டான், அவன் பிள்ளையும் இந்த மண்ணுக்கு வந்துருச்சு, உன் அடுத்த எண்ணம் நிறைவேறுமான்னு கேட்க வந்திருக்க சரியா??" என்றார் சாமி ஆடியபடி.


"ஆமா சாமி" என்றார் பக்தியுடன்.

"உன் எண்ணப்படி நடக்குமா நடக்காதா என்ன சொல்றது, விதிப்படி எல்லாம் நடக்கும் அதை ஏற்று நடந்துக்க" என்று விபூதியை பூசினார்.

தாத்தா துருவை முன்னால் நிப்பாட்டி வைத்தார். பூசாரியின் காலில் விழுந்து எழுந்தான்.
" நீ ஆசைப்படுவதோ தங்கம், உனக்குக் கிடைக்கப் போறதோ வைரம், பார்த்து கவனமா கையாழு, வைரம் கீழே விழுந்து சுக்குநூறாக உடையாமல் உன் கையிலயே பத்திரமா வச்சு பார்த்துக்கோ", என்று பூசாரி சாமி ஆடியபடி விபூதியை பூசினார். துருவன் குழப்பமாகப் பார்த்தான்.

தாத்தா அபியை முன்னால் அழைத்து காலில் விழ சொன்னார். அவளும் விழுந்து எழுந்தாள்." நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைக்கும், அதுக்கு விலையா நீ கொடுக்க போறது உன் உடன் பிறந்தவளின் இதயம் உடையும் வழியை" என்று சாமி ஆடியபடி விபூதியை வைத்தார்.

"என்ன சொல்றீங்க சாமி??" என்றார் குணா பதறியபடி. "ஒன்னு இழந்தா தான் ஒன்னு கிடைக்கும்".


குணா அவர் காலில் விழுந்து எழுந்து,"இதுக்கு பரிகாரம் எதுவும் பண்ண முடியாதா சாமி" என்றார் வருத்தத்துடன்.


"இல்ல விதிய யாராலயும் மாத்த முடியாது உனக்கு வேற ஏதாச்சும் தெரிஞ்சுக்கணுமா??".

"நா மறுபடியும் அமெரிக்கா போலாமா?? இல்ல இங்கேயே வேற தொழில் செய்யட்டுமா சாமி".


"காடு மலை அலஞ்சி வீடு வந்து சேர்ந்துட்ட இனி போக வேறு இடம் தேடாத" என்று விபூதியை பூசினார்.குணா நேகாவை இழுத்து காலில் விழ சொன்னார். விழுந்து எழுந்ததும்,"நீ நினைச்சது நடக்கும் இதனால் பல கஷ்டங்களை அனுபவிப்ப, மனச தளர விடாத திடப்படுத்திக்கோ! எதா இருந்தாலும் துணிஞ்சு போராடு, போராட்டமே வாழ்க்கைன்னு நினைச்சு பயந்து ஓடாத, உன் மனங்கவர்ந்தவனால தான் உன் மனசு உடையும், எல்லாத்துக்கும் தயாரா இரு" என்று விபூதியை அவர் நெற்றியில் வைத்துவிட்டார்.

"டாட்!! இவங்க என்ன சொல்லுறாங்க?? ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்", என்றாள் நேகா குழப்பமாக. குணா எதுவும் சொல்லாமல் யோசனையுடன் நேகாவை தன் கை வளைவிலே வைத்து கொண்டார்.மற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து கேட்டுக்கொண்டனர். இவர்கள் குடுப்பத்தை பத்தி கேட்டதும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்தனர் தாத்தாவை தவிர."டாடி அந்த தாத்தா என்ன சொல்றாங்க??" என்றாள் நேகா குழப்பமாக.


"ஆமா டாடி எனக்கு ஒண்ணுமே புரியல" என்றாள் அபி.


"அது ஒன்னும் இல்லடா குட்டி நீங்க ஸ்ட்ராங்கா இருக்கணும் சொன்னாரு" என்றார் உண்மையை மறைத்து.


"டாடி லீவ் மீ" என்று விலகி வேகமாக ஓடினாள். மற்ற சிறியவர்களும் குணாவும் அவள் பின்னாலேயே சென்று பார்த்தனர். அங்கு கூடியிருந்த கும்பலை விலக்கி விட்டு நகர்ந்து,"எல்லாரும் நகருங்க இவங்களுக்கு ஏர் ஐ மீன் காத்து வேணும் நகருங்க" என்று மயங்கி விழுந்த பெண்ணை கீழே உக்கார்ந்து பரிசோதித்தாள்.

"இவங்களுக்கு முதல்ல தண்ணி கொடுங்க" என்றாள் சத்தமாக.


"இந்தா மா" என்று ஒருவர் கொடுத்தார்.


அந்த பெண்ணுக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தாள். அந்த பெண் முழித்ததும் அவருக்கு தண்ணீரை குடிக்க வைத்து," சாப்பிடாம என்ன பண்ணுறீங்க??".

"விருதம்மா" என்றார்.


"பல்ஸ் கம்மி ஆயிடுச்சு அதான் மயங்கிட்டீங்க, முதல்ல சாப்பிடுங்க, இனிமே இப்படி பண்ணாதிங்க" என்று எழுந்தாள்.


"பாப்பா எனக்கு கூட தலை சுத்துற மாதிரி இருக்கும்மா" என்றார் வயதான ஒருவர்.

அவர் கையை பிடித்து பல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள். "பாப்பா நீ டாக்டரா" என்றார் ஒரு முதியவர்.


"ஆமா தாத்தா" என்றாள் சிரிப்புடன்."நேகவதி" என்று கத்தினார் தாத்தா. நேகா அவர் கத்தலில் பயந்து போய் திரும்பி பார்த்தாள்.


"என்கூட வா அவங்க கையை விடு" என்று வேகமாக இழுத்து சென்று வண்டியில் உட்கார வைத்து, அவரும் உட்கார்ந்து வண்டியை வேகமாக எடுத்தார்.மொத்த குடும்பமும் பதறி அடுத்தடுத்து காரில் வேகமாக சென்றனர்."என்ன பண்ணிட்டு இருக்க என்ன ஜாதியோ!! என்ன எதுன்னு தெரியாம அவங்க கைய பிடிக்கிற" என்று கோவமாக தாழ்வாரத்திற்கு இழுத்து வந்து கையை விட்டார். அனைவரும் வேகமாக உள்ளே வந்தனர்.

"ஏன் அவங்க கைய பிடிச்சா என்ன?? எனக்கு இந்த ஜாதி மதம்லா தெரியாது, நா ஒரு டாக்டர் என் கண்ணு முன்னாடி அவங்க ஒரு உயிரா தான் தெரியும், உங்க ஜாதி மதத்த நீங்களே வச்சுக்கோங்க" என்றாள் கோபமாக.


"என்ன என்னையே எதுட்டு பேசுற அளவுக்கு வளர்ந்துத்தியா?? நீ இந்த வீட்டோட வாரிசு நீ இப்படித்தான் இருக்கணும்னா அப்படித்தான் இருக்கணும்" என்றார் ஆத்திரமும் கட்டளையுமாக.


"நா அப்படி இருந்தா தான் இந்த வீட்டு வாரிசா இருக்கணும்னா அந்த வாரிசா நா இருக்கல, நாளைக்கு என்கிட்ட கோவில்ல கேட்ட எல்லாருக்கும் மெடிக்கல் செக் அப் பண்ண போறேன்" என்றாள் உறுதியாக.


"என்ன சொன்ன???" என்று அடிக்க கையை ஓங்கினார். நேகா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். தாத்தாவின் கை அந்தரத்தில் நின்றது. தாத்தாவின் கையை ஒருவர் பிடித்தார்.

கையைப் பிடித்தது யார்??? ரவீனிடம் நேகா என்ன வேலை பண்ண சொன்னாள் ?? பூசாரி சொன்னது நடக்குமா?? அடுத்து என்ன நடக்கும்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....


💗யாசித்து தொடரும்💗.............


 

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN