யாசிக்கிறேன் உன் காதலை - 12
Ramya Anamika
நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நா அப்படி இருந்தா தான் இந்த வீட்டு வாரிசா இருக்கணும்னா அந்த வாரிசா நா இருக்கல, நாளைக்கு என்கிட்ட கோவில்ல கேட்ட எல்லாருக்கும் மெடிக்கல் செக் அப் பண்ண போறேன்" என்றாள் உறுதியாக.
"என்ன சொன்ன???" என்று அடிக்க கையை ஓங்கினார். நேகா பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். தாத்தாவின் கை அந்தரத்தில் நின்றது.
ஓங்கிய கைகளை துரு பிடித்து இருந்தான். அவனைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ந்தனர். "விடு துரு!! இவளுக்கு நாளு அறை விட்டா தான் அடங்குவா, பெரியவங்க பேச்சுக்கு மதிப்பே இல்ல", என்று துருவிடம் இருந்து கையை உதறி மீண்டும் அடிக்க வந்தார்.
நேகா பயத்தில் துருவின் இடது கையைப் பிடித்தாள். அவள் நடுங்குவதை உணர்ந்தவன் இடது கையால் அவளை அணைத்து, வலது கையால் தாத்தாவின் கையைப் பிடித்து, " இந்த அடிக்கிற வேலை எல்லாம் வேணா தாத்தா, அவ ஒரு டாக்டர், அவ இப்படித்தான் இருப்பா, இந்த மாதிரி அவ இல்லனா தான் தப்பு", என்றான் கோபமாக.
"டேய்! என்ன இவளுக்கு வக்காளத்து வாங்கிட்டு வரியா? நமக்குக் கீழே இருக்கிறவங்களோட கையப் பிடிச்சு வைத்தியம் பார்க்குறா, முதல்ல தலை முழுகச் சொல்லு", என்றார் கோபமாக மீண்டும் கையை உயர்த்தி.
"அப்பா!! போதும்! நானே இன்ன வரைக்கும் என் பொண்ண அடிச்சது இல்ல, ஏன் திட்டுனது கூட இல்ல, ஆனா நீங்க என் கண்ணு முன்னாடியே என் பொண்ண அடிக்க வரீங்க!! என் பொண்ண எல்லார் கூடவும் சகஜமா பழகத்தான் சொல்லிக் கொடுத்திருக்கேன், ஜாதி மதம் பார்த்துப் பேச சொல்லித் தரல", என்றார் குணா கோபமாக.
"என்ன சொல்லிக் கொடுத்தியோ?! நீ சொல்லிக் கொடுத்த லட்சணம் தான் தெரியுதே!! யார் கிட்ட எப்படி பழகணும்னு சொல்லிக் கொடுத்திருந்தா இவ இப்படி இருப்பாளா??", என்றார் தாத்தா கோவமாக.
"அப்பா!!!", என்று கோபத்தில் கத்தினார்.
"மாமா!! ரிலாக்ஸ்! தாத்தா!! நீங்க இப்படி இவள தரதரன்னு இழுத்து வந்தீங்களே! ஊர் மொத்தமும் உங்களத் தான் பார்த்தது, இந்த ஊரோட தலைவரே நீங்க தானே! ஒரு தலைவரா இருந்துகிட்டு இப்படி மனிதாபிமானமே இல்லாம நடத்துகுறீங்க?!!", என்றான் துரு கோபமாக.
தாத்தா லேசான அதிர்ச்சியுடன் பார்த்தார்."துரு!! தாத்தா கிட்ட என்ன பேச்சு பேசுற?? மன்னிப்புக் கேளு டா!", என்றார் பார்வதி கோபமாக.
"அவர் பண்ணுறது மட்டும் சரியா??", என்றான் பல்லைக் கடித்தபடி.
"அவர் என்ன வேணாலும் பண்ணிட்டு போகட்டும், நீ பேசினதுக்கு மன்னிப்பு கேளு", என்றார் கட்டளையாக.
துரு இயலாமையுடன் பார்த்தான். பார்வதி கண்களால் கெஞ்சினார். துரு கண்களை மூடித் திறந்தவன்." மன்னிச்சுடுங்க! தாத்தா".
"நீ எதுக்கு மன்னிப்புக் கேட்குற?! அத விடு துருவா, முதல்ல இவளுக்கு சொல்லிப் புரிய வைக்கலாம், இங்க பாரு நேகவதி", என்று அவளை துருவிடம் இருந்து பிரித்தார். நேகா கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
"நீ அமெரிக்கால எப்படி வேணா இருக்கலாம், இங்க நீ பழகுற ஆளுங்களப் பார்த்துதான் பழகணும், வீட்ல வேலை பார்க்குறவங்க கூட உட்கார்ந்து சாப்பிடுறது, அவங்க கிட்ட அவங்க குடும்பக் கதையைக் கேட்குறது, யாரு என்னன்னு பாக்காம கையைப் பிடிக்கிறது, இப்படி எல்லாம் பண்றத முதல்ல விடு! இப்பவே போய்த் தலை முழுகிட்டு வா!!", என்றார் கட்டளையாக.
நேகா கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, " நீங்க சொன்னா நா கேட்கணுமா?? நா ஒன்னும் உங்க அடிம இல்ல நீங்க சொல்றதக் கேக்குறதுக்கு, என் மனசு என்ன சொல்லுதோ அதத்தான் கேப்பேன், நா மாறமாட்டேன், வேணும்னா எனக்கு ஏத்த மாதிரி நீங்க மாறிக்கோங்க, உங்க வறட்டு கௌரவத்த, ஜாதி வெறிய இதோட விடுங்க", என்றாள் கோபமாக.
"சொன்னா கேக்க மாட்டியா?", என்று மீண்டும் கைகளை ஓங்கினார்.
"தாத்தா!! போதும்! நீ வா", என்று துரு நேகாவை மேலே இழுத்துச் சென்றான். தாத்தா கோவமாக வெளியே சென்றார். அவரைச் சமாதானப்படுத்த அவர் தம்பிகள் பின்னாலேயே சென்றனர். குணாவையும் , அழுதபடி இருந்த அகிலைவையும் வீட்டில் உள்ளவர் சமாதானம் செய்தனர். சிறியவர்கள் மேலே சென்றனர்.
துரு பெட்டியில் உட்கார்ந்தபடி நேகாவை அணைத்து, "இப்ப எதுக்கு அழுகுற??".
சந்தோஷ் அவள் முடியை வருடியபடி, " இங்க வா பாப்பு", என்று துருவிடம் இருந்து பிரித்து இடது கையால் அணைத்து அவள் முகத்தை நிமிர்த்தி, " தாத்தாவைப் பத்திதான் தெரியும்ல?! அப்புறம் ஏண்டா அழுகுற? பயந்துட்டியா??", என்றான் கண்ணீரைத் துடைத்து.
"ம்ம்..".
"உன்னப் பார்த்துதான் தாத்தா பயந்து வெளியே ஓடிட்டாரு", என்றான் ரிஷி கிண்டலாக.
"போடா!!", என்றாள் அழுகையுடன் சந்தோஷிடம் இருந்து விலகி.
"நீ செல்லக் குட்டில!! அழாத", என்று விரு அவள் கண்ணீரைத் துடைத்தான்.
"வெரி பேட் தாத்தா! விரு", என்று நின்றவனின் மேல் சாய்ந்தாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். மற்றவர்கள் எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
"பேபிடால்!!", என்று ரவீன் வேகமாக ரூமிற்கு வந்தான்.
"ரவீன்!!", என்று விருவிடம் இருந்து விலகி அவனை ஓடிச் சென்று அணைத்துக்கொண்டு, "தாத்தா என்னைய அடிக்க வந்தாரு ரவீன், வெரி பேட் தாத்தா", என்றாள் அழுகையுடன்.
"தாத்தா உன்ன அங்க இருந்து இழுத்துட்டு வந்த விஷயம் இப்பதான் எனக்குத் தெரிஞ்சது, அதான் ஓடி வந்தேன், இப்படி அழுகுறது பேபிடாலே இல்ல", என்றான் விலகி அவள் கண்ணீரைத் துடைத்து.
"என்னைய அடிக்க விடாம தேவ் தான் தடுத்தான், இல்லனா அவ்ளோ தான், டாடி என்னால தான் தாத்தாகிட்ட ஃபைட் பண்ணுனாரு, அத்த தேவ்வ தாத்தா கிட்ட சாரி கேட்க வச்சாங்க, அப்புறம்..", என்று வேகமாக அழுகையுடன் பேசிக் கொண்டே போனவளைத் தடுத்து,
"போதும்! இப்ப எதுக்கு நீ அழுதுட்டே இருக்க? அவர் என்னமோ பேசிட்டுப் போறாரு, நீ கண்டுக்காம இருக்க வேண்டியது தானே!? அவர்கிட்டப் போய் எதுக்கு வாங்கி கட்டிக்கிற?", என்றான் துரு கோபமாக, அவள் பக்கத்தில் வந்து.
"நீயும் எதுக்கு என்னைய திட்டுற?? நா என்ன பண்ணுவேன்??", என்றாள் அழுகையுடன்.
துரு அவளை இழுத்து அணைத்து,"அழக் கூடாது டாலு!! என்ன இப்படி அழகு மூஞ்சா இருக்க?! இது உனக்கு செட்டாகவே இல்ல", என்றான் அவள் தலை முடியை வருடி.
"நீ தான் என்னைய திட்டுறியே!!", என்றாள் அழுகையுடன். அனைவரும் பாவமாகப் பார்த்தனர்.
"நீங்க எல்லாரும் போங்க, நா இவள சமாதனம் பண்ணி தூங்க வச்சுட்டு வரேன்", என்றான் மற்றவர்களைப் பார்த்து. அனைவரும் கலைந்து சென்றனர்.
"கொஞ்சம் கொஞ்சமா தான் தாத்தாவ மாத்த முடியும், அவரு பண்ணுறது தப்பு தான், இல்லன்னு சொல்லல, அவரு மாற கொஞ்சம் டைமாகும் டா", என்றான் அவள் முகத்தை இரு கைகளில் ஏந்தியபடி.
"ம்ம்..", என்றாள் கரகரத்தக் குரலில்.
"அழக்கூடாது டா அம்மு!", என்று கண்ணீரைத் துடைத்துப் படுக்க வைத்துத் தலை கோதினான். சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.
"என்னங்க! ஏன் இப்படி ரூம்ல வந்து உக்கார்த்திருக்கீங்க?", என்றார் அகிலா குணாவிடம்.
"நா என்ன சொல்லுறது அகிலா? பூசாரி வேற இப்படி சொல்லிட்டாரு, என்ன நடக்குமோன்னு நினைச்சா பயமா இருக்கு, பேசாம நாம யூஎஸ் போயிடலாம்", என்றார் வருத்தமாக.
"ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க? எதா இருந்தாலும் நாம பாத்துக்கலாம்", என்றார் சமாதானமாக.
"பூசாரி நேகா கஷ்டப்படுவான்னு சொல்லி இருக்காரு, இப்பவே அதோட அறிகுறியா என்னன்னு தெரியல அப்பாவுக்கும் அவளுக்கும் சண்ட வந்துருச்சு, இப்ப அவ அழுகுறா, நா என்னப் பண்றது? அவள இப்படி பாக்கவே முடியல அகிலா, ரொம்பக் கஷ்டமா இருக்கு", என்றார் வருத்தமாக.
"எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருக்கு, முதல்ல அவளப் போய்ப் பார்க்கலாம், வாங்க!", என்றார் அகிலா கவலையாக.
"சரி! வா!! நாம முதல்ல அவளப் போய்ப் பார்க்கலாம்", என்று இருவரும் நேகாவின் அறைக்கு வந்தனர்.
துரு உதட்டின் மேல் விரல் வைத்தபடி வெளியே போலாம் என்று சைகை செய்து மாடியில் உள்ள ஹாலுக்கு அழைத்து வந்தான்."டாடி!! பேபிடால் ரொம்ப அழுதா", என்றனர் அபி, ஆதி, தியா மூவரும் அழுகையுடன்.
"இப்பதான் ஒருத்திய சமாதானம் பண்ணிட்டு வந்து இருக்கேன், அடுத்து நீங்க மூணு பேருமா??", என்றான் கிண்டலாக.
"நல்லா சொல்லு டா, இந்த அபி லூசு சண்ட ஆரம்பிச்சதுல இருந்து அழுதுக்கிட்டே இருக்கு", என்றான் சந்தோஷ் சலிப்போடு.
"நீங்க மூணு பேரும் இப்படி அழுதனால தான் உங்க எல்லாரையும் வெளியே அனுப்புனேன்", என்றான் அபியின் கண்ணீரைத் துடைத்து.
"திருவிழா முடிஞ்சதும் யூஎஸ் போலாம்னு இருக்கேன்", என்றார் குணா.
"குணாப்பா..!! மாமா..!! டாடி..!!", என்றனர் அனைவரும் வேகமாக.
"நேகா அபி ரெண்டு பேரும் அழுறாங்க டா, எங்களுக்கு இவங்க அழுகுறதப் பாக்கக் கஷ்டமா இருக்கும்", என்றார் அகிலா வருத்தமாக.
"அவசரப்படாம பொறுமையா இருங்க மாமா அத்த", என்றான் ரவீன் வேகமாக.
"ஆமா மாமா!! தாத்தாவப் பத்தித் தெரியும், நீங்க சண்ட போட்டு வார்த்தைய விடக் கூடாதுன்னு தான் உங்களப் பேசவிடாம நானே பேசுனேன், இத்தன வருஷம் கழிச்சு எல்லாரும் ஒண்ணா இருக்கோம், போக வேணா மாமா, அத்த!! சொல்லுங்க", என்றான் துரு சமாதானமாக.
"ஆமாங்க!! இவ்ளோ நாள் அவங்களே பிரிச்சு வச்சுட்டாங்க, இப்ப நாம போனா நாம பிரிஞ்சு போற மாதிரி ஆகிடும், எல்லாரையும் இங்க விட்டுட்டு நாம அங்க போய் என்ன பண்ணப் போறோம்? வேணாங்க", என்றார் அகிலா கெஞ்சலாக.
"ஆமா டாடி!! இங்கயே இருக்கலாம் தாத்தாவையும் பேபிடாலையும் சமாதானம் பண்ணிக்கலாம்", என்றாள் அபி அவர்களைக் கையைப் பிடித்துக் கெஞ்சலாக.
"குணாப்பா!! நீங்க வர்ரதுக்காக தாத்தா வெயிட் பண்ணுனாறோ இல்லையோ மத்த எல்லாரும் வெயிட் பண்ணுனோம், போகாதீங்க", என்றான் சந்தோஷ் கெஞ்சலாக.
"உங்கள மீட் பண்ண காத்திருந்தோம் மாமா, இப்பப் போய்ப் பிரிஞ்சு போறேன்னு சொல்றீங்களே?! மாமா! வேணா மாமா!", என்றான் விரு கெஞ்சலாக.
"மாமா!! எனக்கு என்ன டயலாக் சொல்றதுன்னே தெரியல, உங்க கால்ல வேணாலும் விழுகுறேன், போகாதீங்க", என்றான் ரிஷி பாவமாக.
குணா சிரிக்க ஆரம்பித்தார். "மாமா!! இப்படி எல்லாம் பேசக்கூடாது, என்னைய மாதிரி விழுந்துறனும், போகாதீங்க குணாப்பா", என்று நந்து காலிலே விழுந்துவிட்டான்.
"எந்திரி டா!", என்றார் சிரிப்புடன்.
"ஆமா மாமா!! குணாப்பா!! போகாதீங்க", என்று சந்தியா மற்றும் மித்ரா காலில் விழுந்தனர்.
"எந்திரிங்க டா", என்று எழுப்ப முயற்சி செய்தார்.
"போக மாட்டேன்னு சொல்லுங்க, அப்பதான் எழுந்திருப்போம்", என்றனர்.
"சரியா!! போகல! எந்திரிங்க", என்று எழுப்பி மூவரையும் அணைத்து விலகினார். அனைவரின் முகமும் மலர்ந்தது.
"சரி!! நாங்க போய் நேகாவப் பார்க்குறோம்", என்றார் அகிலா.
"மாமா!! தாத்தாவ எப்படி சமாதானம் பண்றது??", என்றான் துரு யோசனையுடன்.
"அத நா பாத்துக்குறேன்", என்றார்.
"ஓகே!!", என்றனர்.
மாலை ஐந்து மணி போல் நேகா கண்ணைக் கசக்கிக்கொண்டு, "மீ!!", என்று மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.
"நேகா தானே நீ??", என்றார் ஒருவர்.
கண்களைக் கசக்கியபடி சோபாவைப் பார்த்தாள், அங்கு புதிதாக மூன்று பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் பக்கத்தில் குணா, தனா, ராஜா உட்கார்ந்து இருந்தனர். "பேபிடால்!! கம்!", என்றார் குணா சிரிப்புடன்.
தயங்கி தயங்கி நடந்து வந்தாள். "ஓய்! அவங்க ஒன்னும் உன்னக் கடிக்க மாட்டாங்க, தைரியமா போ", என்றனர் விரு, துரு, ரிஷி சத்தமாக. அவர்களைத் திரும்பிப் பார்த்தாள். சிறியவர்கள் அனைவரும் எதிர் சோபாவில் உட்கார்ந்து இருந்தனர்.
"வாடா மா!! இன்னும் தூக்கம் போகலையா??", என்றார் அதில் ஒருவர். நான்கு பக்கம் தலையை ஆட்டியபடி பக்கத்தில் வந்தாள்.
சிறியவர்கள் சிரிப்புடன் எழுந்து பக்கத்தில் வந்து நின்றனர். விரு தேவநாதனைக் காட்டி, " இவங்க எங்க அப்பா", என்றான் சிரிப்புடன்.
ரிஷி தேவகுமாரனைக் காட்டி, " இவங்க எங்க டாடியோ!", என்றான் கிண்டலாக.
மித்ரா பிரகாஷை அணைத்து ,"இவங்க என் டாடி" . நேகா லேசானச் சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.
"இங்க வாடா", என்று நாதன் (துருவின் அப்பா) பக்கத்தில் அழைத்து, "சாப்டியா?", என்றார் தலை முடியைக் கோதி.
"இல்ல ஆங்கிள்!! இனிமேல் தான், நீங்க எல்லாரும்?".
"சாப்பிட்டோம் டா", என்றார் குமரன் (ரிஷியின் அப்பா).
"எப்ப வந்தீங்க??".
"ஆப்டர்நூன் வந்தோம், நாங்க வந்தப்ப நீ தூங்குறன்னு சொன்னாங்க", என்றார் பிரகாஷ் சிரிப்புடன்.
"இந்தா பால் குடி", என்று அகிலா வந்து தந்தார். அவர் பின்னால் மற்ற பெண்கள் டீ, ஸ்நாக்ஸ் கொண்டு வந்து மற்றவருக்குக் கொடுத்தனர்.
நேகாவைக் குணா தன் பக்கத்தில் உட்கார வைத்து அணைத்தபடி, "பேபிடால்!!", என்றார் மெதுவாக. அபி குணாவிடம் வந்தாள்.
"இங்கே உட்காரு டா", என்று ராஜா நகர்ந்து உட்கார்ந்தார். குணா இரு பெண்கள் தோளில் கையைப் போட்டார்.
"டாடி!! நேரா விஷயத்துக்கு வாங்க", என்றாள் நேகா குடித்துக்கொண்டே.
"டாடி!! சொல்லுங்க", என்று ஊக்கப்படுத்தினாள்.
"தாத்தா இன்னும் கோவமா இருக்காரு, மத்தியானம் சாப்பிடக் கூட இல்ல, அவர் ரூம்லே இருக்காரு, மாமா( துரு ரிஷி மித்ரா அப்பாக்கள்) வந்தப்ப பேசிட்டு மறுபடியும் ரூமுக்குள்ளப் போயிட்டாரு", என்றார் வருத்தமாக.
"டாடி!! நானும் தானே சாப்பிடல", என்றாள் குடித்தத் தம்ளரைக் கீழே வைத்து. அகிலா ஒரு தட்டில் சாப்பாடுடன் வந்து நேகாவிற்கு நின்றபடி ஊட்டினார். மற்றவர்கள் இதனைக் கண்டும் காணாதது போல் பேசிக் கொண்டு இருந்தனர்.
"உனக்கு அடிக்கடி பால் குடுத்தோம் டா", என்றார் குணா பொறுமையாக.
"டிரக்டா சொல்லுங்க டாடி! என்ன பண்ணனும்?? தாத்தாவ எப்படி சமாதானம் பண்றது??", என்றாள் அபி கவலையாக. குணா தன் திட்டத்தை மெதுவாகச் சொன்னார்.
"ஓகே! டாடி!!", என்றனர் இருவரும்.
"சரி! நேகா!! போய் ரெஃபிரஷ் ஆயிட்டு வா", என்றார்.
"சரி!!", என்று மேலே சென்றாள். சிறிது நேரத்தில் மொத்தக் குடும்பமும் தாழ்வாரத்தில் உட்கார்ந்தனர் தாத்தாவைத் தவிர.
மன மோகனா…
ஆஆ மன மோகனா… ஆ
ஆ என் உயிர் கண்ணா..
ஆஹா கார்முகில் வண்ணா..
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ...
என்று நேகா பாட ஆரம்பித்தாள். தாத்தா சத்தம் கேட்டு வெளியே வந்தார். அவள் வந்ததை மற்றவர்களும் கவனித்தனர். அபி அவளுடன் இணைந்து பாட ஆரம்பித்தாள்.
விடை பெற்று
வாராய்... காசி மதுர விடை
சொல்ல வாராய்...
என்று ஆதியும் தியாவும் அடுத்தடுத்த வரிகளில் அவர்களுடன் இணைய ஆரம்பித்தனர்.
பாடல் முடியும்போது ஒவ்வொருவராகப் பாடலை நிறுத்தினர். கடைசியாக நேகா பாடி முடித்தாள். அந்த இடமே பெரும் அமைதி நிலவியது, பிறகு அனைவரும் கைத் தட்டினார்கள்.
"சூப்பர்!!", என்றனர் சிறியவர்கள் குதூகலமாக.
"அருமையா இருந்தது", என்றனர் மற்றவர்களும்.
தாத்தா நான்கு பேர் பக்கத்திலும் வந்தார். நான்கு பேரும் எழுந்தனர்.
"எப்படி இப்படி அருமையா பாடுறீங்க??", என்றார் ஆச்சரியமாக.
"நாங்க கத்துக்கிட்டோம் தாத்தா", என்றாள் அபி சிரிப்புடன்.
தாத்தா பாக்கெட்டில் இருந்த காசுகளை எடுத்து ஒவ்வொருவராகக் கொடுத்து விட்டு கடைசியாக நேகாவிடம் வந்தார். "சாரி தாத்தா!!", என்றாள் காதைப் பிடித்து.
"இவ்ளோ வாழுத்தனம் பண்ற உனக்கு எப்படி இப்படி ஒரு காந்தக் குரல்?!! இந்தா!", என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, "நாளைக்குக் காலைல சிலபேரு மருத்துவம் பார்க்க வருவாங்க, எல்லாருக்கும் சரியா பாரு", என்றார்.
"தேங்க்யூ தாத்தா!", என்று அவர் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
"அட! இந்த எச்சிப் பண்றத நிறுத்தவே மாட்டீயா? ஏன்டா குணா!! இவ்ளோ சொல்லிக் கொடுத்தியே! இப்படி எச்சுப் பண்ணக் கூடாதுன்னு சொன்னியா டா??", என்றார் பொய்யான முறைப்புடன். குணா முழித்தார். மற்றவர்கள் சத்தமாகச் சிரித்தனர்.
"நீ சொன்னனால நா இத ஏற்பாடு பண்ணல, ஊர்த் தலைவரா இருந்துகிட்டு இப்படி பண்ணினா எப்படின்னு துருவா கேட்டான்ல, அதனால தான் பண்றேன்", என்றார் கெத்தை விடாமல்.
"யார் சொல்லி கேட்டா என்ன தாத்தா?? எப்படியோ! நல்லது நடக்குதே அதுவே போதும்", என்றாள் சந்தோஷமாக.
"சரி! வாங்க!! சாப்பிடலாம்", என்று பாட்டி அழைத்துச் சென்றார். சாப்பிட்டு முடித்ததும் தாத்தா பாட்டி சென்று படுத்தனர். மற்றவர்கள் மட்டும் தாழ்வாரத்தில் கீழே உட்கார்ந்தனர்.
"டாடி!! லவ்னா என்ன டாடி?", என்றாள் நேகா குணாவிடம்.
"அடியே! அப்பாகிட்ட கேட்குற கேள்வியாடி இது??!!", என்றான் ரிஷி கிண்டலாக.
"ஹேய் மேன்!! எங்க டாடி எங்களுக்கு ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட், அப்புறம்தான் டாடி, என்ன டாடி?", என்றாள் தியா சிரிப்புடன்.
"ஆமாடா!", என்றார் குணா சிரிப்புடன்.
"டாடி!! லவ்வுன்னா என்ன?", என்றாள் மீண்டும். சிறியவர்கள் ஆர்வமாகப் பார்த்தனர்.
"காதல்ங்குறது அடையக்கூடியது இல்ல, அதுல நாமலே தெலைஞ்சு போயிடனும் டா, காதல்ங்குறது ஒருத்தர் மட்டும் வாழ்றது இல்ல, ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்றதுல இருக்கு, காதல்ல பொய் இருக்காது, கோவம் இருந்தாக் கூடப் பாக்கணும்னு தோணும், காதல்ங்குறது ரெண்டு பேருக்கும் பொதுவானது, நாம புரிஞ்சு நடந்துக்கிட்டா அது என்னைக்கும் குறையாம அதிகரிச்சுக்கிட்டே இருக்கும்", என்றார் பொறுமையாக. சிறியவர்கள் அனைவரும் யோசனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"டாடி!! லவ் வந்துச்சா இல்லையான்னு எப்படி தெரிஞ்சுகிறது??", என்றாள் ஆதி.
"காதல் ஒரு உணர்வு தான் டா, நீ இல்லாம நான் இல்லை, என் வருங்காலம் உன்கூட தான்னு நம்ம மனசு சொல்லும் டா, அப்படித்தான் உங்க மீயப் பார்த்ததும் எனக்கு சொன்னுச்சு", என்றார் காதலுடன் அகிலாவைப் பார்த்து.
"சும்மா இருங்க", என்றார் அகிலா வெட்கத்துடன்.
"ஓ.. ஓஓஓஓ...", என்று சிறியவர்கள் சத்தம் போட்டனர்.
"டேய்! சத்தம் போட்டு உங்க தாத்தாவ வர வச்சுடாதீங்க ", என்றார் நாதன் சிரிப்புடன்.
"ஆமாடா!! வாங்க! போய்ப் படுக்கலாம், டைமாச்சு", என்றார் தனா. அனைவரும் கலைந்து சென்றனர்.
மறுநாள் நேகா ஆசைப்பட்டது போல் முடியாதவர்களுக்கு மருத்துவம் செய்தாள். இப்படியே எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஐந்து நாள் சென்றது. அன்று நேகாவும் ரவீனும் திருச்சிக்குச் சென்றனர். மற்றவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர்.
"இன்னைக்கு நாள் நல்லா இருக்கு, மாப்பிள்ள.. குணா.. துருக்கும் அபிக்கும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க??", என்றார் நேசமணி தேவநாதன் மற்றும் குணாவைப் பார்த்து. அபி, ஆதி, தியா அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
"என்ன மாமா இப்படிக் கேக்கறீங்க?? துரு என்ன டா?", என்றார் நாதன் சிரிப்புடன்.
"அப்பா..!!", என்று இழுத்தான். குணா யோசனையுடன் அமைதியாக இருந்தார்.
"குணா!! என்னடா அமைதியா இருக்க??", என்றார் தாத்தா.
"அப்பா!! அபிக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம், கல்யாணம் பண்ணப் போறது அபியும் துருவும், அவங்களுக்கு சம்மதமான்னு தான் முதல்ல கேக்கணும்", என்றார் அபி மற்றும் துருவைப் பார்த்து.
"துருவா!! மாமா கேட்கிறாங்கல்ல!! அமைதியா இருக்க, உனக்கு சம்மதமா இல்லையான்னு சொல்லுடா", என்றார் பார்வதி.
"எப்பவோ ஓகே!!", என்றனர் சிறியவர்கள் ஆதி மற்றும் தியாவைத் தவிர.
"ஹேய்! கம்முனு இருங்க டா, எனக்கு சம்மதம்", என்றான் சிரிப்புடன் அபியைப் பார்த்தபடி.
அனைவரும் அபியைப் பார்த்தனர். அபி சங்கடமாக முழித்தாள். "அது வந்து.. டாடி!! எனக்கு யோசிக்கக் கொஞ்சம் டைம் வேணும்", என்றாள் தயங்கியபடி.
"நீ யோசி டா, டைம் எடுத்துக்கோ! ஒன்னும் அவசரம் இல்ல, உனக்கு இது அதிர்ச்சியா இருக்கும், ஐ அண்டர்ஸ்டாண்ட்", என்றார் நாதன் சிரிப்புடன்.
"தேங்க்யூ மாமா!! நா மேரேஜ் பத்தி இன்ன வரைக்கும் யோசிக்கல, சாரி", என்று மாடிக்கு வேகமாக ஓடினாள். ஆதியும் தியாவும் அவள் பின்னால் சென்றனர்.
"அவ சின்னப் பொண்ணு தானே!! யோசிக்கட்டும்", என்றார் அபிராமி பாட்டி. பெரியவர்கள் கலைந்து சென்றனர்.
"என்ன அண்ணா? அண்ணி இப்படி சொல்லிட்டுப் போறாங்க", என்றாள் மித்ரா வருத்தமாக.
"அவ யோசிக்கட்டும் டா", என்றான் துரு.
அபி என்ன முடிவெடுப்பாள்?? இந்த விஷயம் நேகாவிற்குத் தெரிந்தால் என்ன நடக்கும்?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....
யாசிப்பு தொடரும் ................................
Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 12
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN