எனதழகி

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் விழியிரண்டும்
இமைக்க மறந்து
விரிந்து நிற்பது
நான் நிதம் காணும் அழகு
மென்மை தீண்டலை
கூட தாங்காது
சிவந்திருக்கும் உன் கன்னங்கள்
என்னை கட்டியிழுக்கும் அழகு
கவிதையை கூட
வார்த்தைகளின்றி
நளினமாய் வரித்தெடுக்கும்
உன் இருபுருவங்கள்
என்னை சிறைபிடிக்கும் அழகு
ஒட்டி உறவாடி
இணைந்து பிரியும்
உன் சிவந்த அதரங்கள்
என்னை போதையேற்றும் அழகு
உன் கோபத்தை
வியர்வைத்துளிகளை
ஏந்தி கோடிட்டு காட்டும்
உன் கூர் நாசி
என்னை வசமிழக்கச்செய்யும் அழகு
தினமொரு வண்ணத்தால்
ஆபரணப்படுத்தப்பட்டிருக்கும்
கார் மேக கூந்தலால் மறைந்திருக்கும்
உன் செவியிரண்டும்
என்னை கிறக்கமூட்டும் அழகு
பஞ்சுப்பாதம் நிலத்தில் பதிய
உன் கருங்கூந்தல் சந்தத்திற்கு
ஜதி வாசிக்க
உன் இடையசைவு
லாஸ்யத்தின் பாகமாய்
சித்தரிப்பதாகிட
ஒற்றையபடிப்பாதையில்
சிவப்பு நிற தாவணியில்
கையிரண்டிலும் வளையல்
கலகலக்க
கையில்
முளைவிடுத்தொடங்கியிருந்த புல்லினை
அங்குமிங்குமாய் நீ
ஆட்டிச்செல்லும்
நளினத்தினை விட
வேறு அழகு
என்னை
மண்டியிடச்செய்யுமா??


View attachment 8
 
Back
Top