இறுதி பாகம்

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல் என்ற
வார்த்தைக்கு
அர்த்தம்
கற்பித்தவளும் நீதான்
பிரிவின் கொடுமையை
எனக்கு உணர்த்தியவளும்
நீதான்.....

இரு கிழமைக்கு பிறகு இரவு தங்களறையில் துயில் கொண்டிருந்த ரிஷியை எழுப்பினாள் ஶ்ரீ...
அத்தனை நேரம் குழந்தை உறங்காமல் விழித்திருக்க ஶ்ரீயை உறங்கச்சொன்னவன் குழந்தையை தூங்க வைக்க முயன்றான்... ஆனால் குழந்தையோ உறங்காது தன் தந்தையோடு விளையாடிக்கொண்டிருக்க அதன் செயலில் நொந்தவன்
“ஏஞ்சல்... தூங்குங்க செல்லம்... அப்பா பாவமில்லையா...??” என்று கேட்க குழந்தையோ தன் கை கால்களை ஆட்டி ஏதோ சொல்ல
“ஏஞ்சலுக்கு தூக்கம் வரலையா?? சரி அப்பா உங்களை பாட்டு பாடி தூங்க வைக்கிறேன்...நீங்க கண்ணை மூடிக்கோங்க... “ என்றவன் தனக்கு தெரிந்த பாடலை முணுமுணுத்தபடி குழந்தையை உறங்கவைக்க முயல குழந்தையோ சற்று நேரம் எந்த அசைவுமில்லாமல் அமைதியாயிருக்க ரிஷியோ என்னவென்று பார்க்க அப்போது அவனது சட்டையில் ஈரத்தை உணர்ந்தான்...
“ஹாஹா ஏஞ்சல் உங்களுக்கு சேட்டை கூடிப்போச்சு.. அப்பா மேல உச்சா போக தான் இப்படி அமைதியா நல்லபிள்ளை மாதிரி இருந்தீங்களா??? இருங்க உங்களுக்கு நாப்கீன் மாற்றி விடுறேன்...” என்றவன் குழந்தையை படுக்கையில் கிடத்திவிட்டு அதற்கு நாப்கீன் மாற்றிவிட்டவன் தானும் சென்று உடை மாற்றி வந்தான்....
பின் குழந்தையோடு கதைபேசி கொஞ்சியபடியே குழந்தையை தாஜா பண்ணி உறங்க வைத்தவன் தானும் உறங்கிவிட்டான்..
அப்போது தான் கண்ணசந்த ரிஷியை ஶ்ரீ எழுப்ப
“அம்லு... இப்போ தான் தூங்குனேன்மா... டிஸ்டர்ப் பண்ணாத..” என்றவன் மறுபுறம் திரும்பி படுக்க அவனை மறுபடியும் எழுப்பினாள் ஶ்ரீ..
“என்ன வேணும் அம்லு...??”
“நீ என்கூட எழும்பி வா...”
“எங்கமா???”
“நீ வா அத்தான் நான் சொல்லுறேன்...”
“ஏஞ்சல் தனியா இருப்பாங்களே...”
“குட்டிமா.. அத்தை ரூம்ல இருக்கா... நீ வா.. அத்தான்.” என்று கூறியவள் அவனை இழுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள்...
அங்கே எதுவுமில்லாமல் இருக்க ஶ்ரீயை கேள்வியாக பார்த்தவன்
“எதுக்கு அம்லு இங்க கூட்டிட்டு வந்த??”
“சொல்றேன் அத்தான்.. வெயிட்...” என்றவள்
“கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ... பைவ், போர், த்ரீ,டூ, வன்...ஹாப்பி பர்த்டே அத்தான்...” என்று ஶ்ரீ உரக்க சத்தமிட அதே நேரத்தில் எங்கிருந்தோ பலூன்கள் பறந்து “Happy Birthday Hubby” என்ற வார்த்தைகளோடு வானில் மேலெழும்பி நின்றது...
வானை ஆக்கிரமித்திருந்த பலூன்களை விழிவிரித்து பார்த்திருந்தவனது மார்பில் தஞ்சமடைந்தவள் அவனை இறுகக்கட்டிக்கொண்டு
“ஹாப்பி வெடிங் ஆன்வசரி அத்தான்...” என்றவள் எக்கி அவன் கன்னத்திலும் முத்தமிட்டாள்...
முதலில் அவள் செயலுக்கான காரணம்புரியாதவன் பின் அன்று என்ன நாள் என்று நியாபகம் வர அவளை இறுகக்கட்டிக்கொண்டு அவள் முன்னுச்சியில் இதழ் பதித்தவனது அதரங்கள்
“விஸ்.... யூ த சேம்டி.. ஸ்வீட் ஆன்ட் நாட்டி பொண்டாட்டி... “என்று அவளுக்கு தெரிவித்தவன் அவள் தலையில் செல்லமாக முட்டியவன்
“இதுக்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டமா??”
“பின்ன... நம்ம லைப்பில் எவ்வளவு முக்கியமான நாள்... இதை செலிபிரேட் பண்ண வேண்டாமா???”
“ஆமாஆமா.. ரொம்ப முக்கியமான நாள்.. நீ என்னை திருட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள்...” என்று ரிஷி சிரிக்க அவனை முறைத்தவள்
“ஆமா நான் மட்டும் தானே பண்ணிக்கிட்டேன்... நீங்க பண்ணிக்கல தானே..” என்று ஶ்ரீ சிலிர்த்துக்கொள்ள அவனோ அவளது செல்லக்கோபத்தில் மதிமயங்கியவன் கலகலவென சிரித்தபடி
“பார்டா... என்பொண்டாட்டிக்கு கோபமெல்லாம் வருது...”
“சரிசரி ரொம்ப ஓவரா பண்ணாத... வா கேக் கட் பண்ணலாம்...” என்றவள் அங்கிருந்த ஒரு அறையிலிருந்து ஒரு ட்ராலியை தள்ளிக்கொண்டு வந்தாள்... அதில் இரண்டு கேக்குகள் இருக்க அதை கண்ட ரிஷி
“அம்லு.. எதுக்கு இரண்டு கேக்??”
“ஒன்னு உனக்கு.. இன்னொன்னு நமக்கு..” என்று ஶ்ரீ கூற ரிஷியோ
“என்னடி குழப்புற??”
“இதுல என்ன குழப்பம்?? ஒன்னு உன்னோட பர்த்டே கேக்... இன்னொன்னு நம்ம ஆன்வசரி கேக்..” என்று கூற
“ம்ம்.. சூப்பர்.. வா கட் பண்ணலாம்..”
“எதுக்கு அவசரப்படுற அத்தான்..?? வா முதல்ல ஒரு செல்பி எடுத்துக்கலாம்...” என்று கூறி தன் மொபைலை எடுத்து வந்த ஶ்ரீ ரிஷியுடன் செல்பி எடுத்துக்கொண்டாள்..
பின் முதலில் “ஹாப்பி பர்த்டே ஹபி” என்று எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த கேக்கை வெட்ட கூறியவள் அதில் ஒரு துண்டை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள் ஶ்ரீ..
பின் இருவரும் ஒன்றாக “ஹாப்பி ஆன்வசரி..” என்று எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டினர்..
ஒருவருக்கு மற்றவர் ஊட்டி முடித்ததும் ஶ்ரீ ரிஷியிற்கென்று தான் வாங்கியிருந்த ரொலெக்ஸ் வாட்ச் பாக்சினை பரிசாக கொடுத்தாள்..
அதை பெற்றுக்கொண்டவன் அவளிடம் நன்றியுரைக்க அவளோ
“எனக்கு என்ன வாங்கி வச்சிருக்க அத்தான்...???”
“சாரி அம்லு.. அத்தான்... உனக்கு எதுவும் வாங்கலை... நான் இன்னைக்கு என்ன நாள்னே மறந்துட்டேன்...” என்று ரிஷி முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கூற ஶ்ரீயோ சிரிக்கத்தொடங்கினாள்...
அவளது சிரிப்பில் குழம்பியவன் என்னவென்று விசாரிக்க அவளோ
“அத்தான்.. உனக்கு இந்த ஆக்டிங் எல்லாம் எந்த காலத்துலயும் செட்டாகுது.. அதனால உண்மையை சொல்லு... என்ன வாங்குன??” என்று ஶ்ரீ கேட்க ரிஷியோ சத்தியம் செய்யாத குறையாக
“நிஜமாக தான் அம்லு.. நான் மறந்துட்டேன்..”
“ஓ.. அப்படியா?? அப்போ நேத்து ஈவ்வினிங் போனில் யாருக்கிட்டயோ ஆன்வசரி கிப்ட் அப்படினு ஏதோ பேசிட்டு இருந்தியே... அது என்னதாம்?? அதுவும் நாளைக்கு கொடுத்து சப்ரைஸ் பண்ணபோறேன்னு ரொம்ப ஹாப்பியா சொல்லிட்டு இருந்தியே.... அது என்ன மேட்டர்...” என்று ஶ்ரீ லாவகமாய் அவனை கண்டுபிடித்துவிட ரிஷியோ
“சிக்கிட்டேனா... சப்ரைஸ்னு எதை நினைச்சாலும் கண்டு பிடிச்சிடுறாளே... எப்படி அம்லு இப்படி???”
“அதெல்லாம் அப்படி தான்.. நீ கிப்ட்டை தா..”
“ம்ம்..தரேன் வா..” என்றவன் அவளை அங்கிருந்து தங்கள் அறைக்கு அழைத்து சென்றான்....
அங்கு கபோர்ட்டில் வைத்திருந்த அந்த பொதியை எடுத்தவன் அதை ஶ்ரீயின் கையில் கொடுக்க அவளும் ஆசையோடு அதை பிரித்து பார்த்தாள்...
அதனுள் இருந்த பரிசை பார்த்தவளது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி....
அதனுள் அவள் இத்தனை நாளாய் தேடியலைந்த வாக்மன் இருந்தது..
“அத்தான்.... எப்படி அத்தான்...? நான் எத்தனை கடை ஏறி இறங்கினேன் தெரியுமா??? நான் கேட்ட கலரில் நான் கேட்ட மாடலில் மட்டும் கிடைக்கவே இல்லை... உனக்கு எப்படி கிடைச்சது...??”
“அதெல்லாம் எதுக்கு உனக்கு?? உனக்கு பிடிச்சிருக்கு தானே??”
“ஆமா...... ரொம்ப பிடிச்சிருக்கு...லவ் யூ சோ மச் அத்தான்...” என்றவளிடம் ஒரு கேசட்டை நீட்டியவன்
“இந்த கேசட்டை கேளு...”
“இதுல என்ன இருக்கு அத்தான்??”
“உன்ன பார்த்தும் என்னோட மனசுல ஓடுன பாட்டு இது தான்... இதை தான் உனக்கு பிடிச்ச இந்த வாக்மனில் முதல்முதலாக நீ கேட்கனும்.... இது இந்த அத்தானோட ஆசை... நிறைவேத்துவியா அம்லு??” என்று ரிஷி கேட்க அந்த கேசட்டை உடனே அந்த வாக்மனில் இட்டு இயங்கச்செய்தாள்.. அதுவும் அந்த பாடலை பாடியது..
ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது
இதயமே…ஓ.
இவளிடம்…ஓ
உருகுதே…ஓ…ஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே…
அது தூங்கும் போதிலும்
தூங்காதே…
பார்க்காதே…ஓ..என்றாலும் ஓ..
கேட்காதே .ஓ ஹோ ஓ…

என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ..
பொல்லாதது…..
புரிகின்றது…..ஓ..ஹோ ஓ..

ஓ….ஓ….கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே

மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்…
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ….ஓ…

இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே…..
அது தூங்கும் போதிலும்
தூங்காதே

ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது…

என்ற பாடலை கேட்டவளுக்கு அந்தபாடல் ரிஷி தனக்காக பாடியதாக ஒரு ப்ரம்மை... அந்த குரல் தாங்கி நின்ற காதலை வார்த்தைகளால் கூட வர்ணிக்கமுடியவில்லை...
அந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் காதலனின் ஏக்கத்தை வார்த்தைகளால் சொல்ல அதன் இசையும் அதற்கு நிகராக காதல் உணர்வு வெளிக்காட்டியது....
அந்த பாடல் தந்த மயக்கமோ ரிஷியின் பார்வை தந்த கிறக்கமோ பெண்ணவளை சிவக்கச்செய்து வெட்கத்தில் நாணிக்கோணச்செய்தது.. அவளது முகச்சிவப்பையும் வெட்கத்தையும் ரசித்திருந்தவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளை தன்புறம் இழுத்து அவளை பின்புறமிருந்து அணைத்துக்கொண்டான்..
“என்ன அம்லு.. திடீர்னு சைலண்டாகிட்ட...” என்று தன் அதரங்களால் அவள் காதில் முத்தமிட்டபடி ரிஷி கேட்க அவன் ஸ்பரிசத்தில் மேலும் சிவந்தவள்
“அது... அது.. “ என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.. காதல் ஒருபுறம், மோகம் ஒருபுறம், வெட்கம் ஒருபுறமென்று அவளை வாட்ட அதிலிருந்து மீளும் வழி தெரியாது தன்னவனின் அணைப்பில் அடங்கிக்கிடந்தாள்...
மன்னவனோ தன் முத்த ஊர்வலத்தை தொடங்க அங்கொரு அழகிய கூடலொன்றிற்கு அடித்தளமிடப்பட்டது...
கூடல் அழகாய் அரங்கேறி முடிய இருவரும் களைப்பிலும் மகிழ்விலும் தூக்காது கண்மூடியிருந்தனர்... அப்போது ஶ்ரீ அவன் மார்பின் மீது படுத்தபடி அவனை சுரண்ட என்னவென்று விசாரித்தவனிடம்
“அத்தான் நான் டாக்டர் ரேகா வீட்டுல இருந்தது உங்களுக்கு எப்படி தெரியும்...?? உங்களுக்கு தெரியும்னு ஹேமா சொன்னா.... ஆனா நீங்க ஏன் வந்து என்னை பார்க்கலை...??” என்று கேட்டவளுக்கு அன்றைய நாள் நடந்ததை கூறத்தொடங்கினான் ரிஷி..
ரிஷியிடம் அனு பேசியதை கேட்ட ஶ்ரீ ரிஷியை பிரிய முடிவெடுத்தாள்.. ஆனால் அதற்கு முன் தன் உடல்நிலையை பற்றி அறியவேண்டுமென்று முடிவெடுத்தவள் தனது ரிப்போர்ட்டினை ரேகாவிடம் காட்ட அவளும் அதையே கூறினாள்.. அந்நேரத்தில் ரேகாவிற்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்து பேசியவள் தன் வேலைகளை பதிவு செய்ய ஐ.டி அறிவுள்ள ஒருவர் தேவைப்படுவதாக அந்த அழைப்பில் இருந்தவரிடம் கூறினாள்.. அதை கேட்டிருந்த ஶ்ரீ அந்த வேலையில் தான் சேர்வதாக முடிவெடுத்தவள் அதை ரேகாவிடம் தெரிவிக்க அவளும் சரியென்று விட்டாள்... தனக்கொரு தங்குமிடமும் தேவை என்று ஶ்ரீ கூற ரேகாவும் அதற்கு உதவுவதாக கூறினாள்..
பின் ஶ்ரீ ரிஷியுடனான தனது ஜாயின்ட் அக்கவுண்டிலிருந்த இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை மீள எடுத்தவள் அதை தனது பர்சனல் அக்கவுண்டில் டிபார்சிட் செய்துவிட்டு ரிஷியிற்கு ஒரு மெயில் அனுப்பியவள் வீட்டினரிடம் சொல்லாமல் அனைவரும் அசந்திருந்த நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாள்...
ஆபிஸில் வேலையாக இருந்த ரிஷி மாலையே ஶ்ரீயின் மெயிலை கவனித்தான்..
அதில் ஶ்ரீ தான் அவனை பிரிந்து போவதாதவும் தன்னால் இனி அவன் வருந்தவேண்டாமென்றும் கடவுளின் கிருபையிருந்தால் தானும் குழந்தையும் மீண்டு வருவோமென்றும் இல்லையேல் குழந்தை உங்கள் கைகளுக்கு வந்து சேரும் என்று குறிப்பிட்டிருந்தவள் எந்த காரணம் கொண்டும் தன்னை தேடி யாரும் வரக்கூடாதென்றும் குறிப்பிட்டிருந்தாள்... தனக்கு ஏதாவது நடந்தால் குழந்தைக்கு ரிஷியே எல்லாமுமாக இருக்க வேண்டும்.. இதுவே தன்னுடைய இறுதி ஆசையென்றும் குறிப்பிட்டிருந்தாள்..
இதை வாசித்த ரிஷியிற்கு இந்தநொடிவரை நம்பமுடியவில்லை.... தான் கேட்டது கண்டது அனைத்தும் கனவாக இருக்கக்கூடாதா என்று அவன் மனம் விரும்பியது... ஆனால் நிஜத்தில் நடந்ததை கனவாய் மாற்றும் வலிமை மனிதனிடம் இல்லையே... ஆனாலும் எப்படி இது நடந்தது..... எதற்காக இத்தனை நாட்கள் வேதனைகள் கொட்டிக்கிடந்த போதிலும் போலியாயொரு முகமூடியணிந்து மகிழ்ச்சியாயிருப்பதுபோல் நாடகமாடினானோ அதற்கு பலனில்லாமல் போய்விட்டதே... எந்த விஷயத்தை மறைக்க இத்தனை நாட்கள் போராடினானோ அந்த விடயம் யாருக்கு தெரியக்கூடாது என்று நினைத்திருந்தானோ அந்த நபருக்கு எப்படி தெரிந்தது... இனிமேல் அடுத்து என்ன செய்வது??? வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது??? என்று யோசித்தவனுக்கு வேதனையும் வலியும் மட்டுமே பதிலாக மிஞ்சியது...
மீண்டுமொருமுறை அந்த மெயிலை படித்தவனுக்கு அதிலிருந்த ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று புரிந்தது... இருந்தும் அதை உறுதி செய்வதற்காக சிலரை தொடர்பு கொண்டான்... அவர்களும் அத்தகவலை உறுதி செய்ய முற்றாக உடைந்துவிட்டான் ரிஷி....

இனி என்ன??? என்று அவன் மனம் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதிலில்லை...

ஆனால் ஏதாவது செய்யமுடியாதா என்று கலங்கியவனை கலைத்தது அவனது அலைபேசி அழைப்பு...

புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்க அதனை கவனிக்காதவாறு எடுத்து காதில் வைத்தவனுக்கு அந்தப்புறம் சொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியூட்டியது....
மறுபுறம் பேசிய ரேகா “அண்ணா நான் ரேகா பேசுறேன்..”
“சொல்லுமா...”
“அண்ணா உங்ககிட்ட உங்க மிசஸ் பத்தி கொஞ்சம் பேசனும்..”
“சொல்லுமா..”
“உங்க மிசஸ் இப்போ என்னோட வீட்டுல தான் இருக்காங்க..”
“என்னமா சொல்லுற?? நீ சொல்றது உண்மையா??”
“ஆமா அண்ணா.” என்ற ரேகா ஶ்ரீ தன்னிடம் வேலைக்கு சேர்ந்ததை கூறியவள்
“எனக்கு உங்க மிசஸ் தான் தான்யானு தெரியாது... தினேஷ் தான் தான்யாவை ஆஸ்பிடலில் பார்த்துட்டு இவங்க எதுக்கு இங்கனு கேட்கும் போது தான் எனக்கும் தான்யா யாருனு தெரிய வந்தது..”
“இப்போ அவ எப்படிமா இருக்கா??”
“நல்லா இருக்காங்க அண்ணா..”
“சரி அவ துணைக்கு யாரு இருக்கா???”
“இப்போதைக்கு யாரும் இல்லை அண்ணா.. ஆனா யாராவது ஒருத்தரை அவங்க துணைக்கு அரேன்ஜ் பண்ணனும்..”
“அதை நான் பார்த்துக்கிறேன் மா... டெலிவரி டைம் வரைக்கும் அவ உன்கூடவே இருக்கட்டும்.. அவ இப்படி உன்கூட இருக்கானு எனக்கு தெரியும்னு அவளுக்கு எப்பவும் தெரியக்கூடாது.. அப்படி தெரிஞ்சா அவ அங்க இருக்கமாட்டா...இந்த மாதிரி நேரத்துல அவளை ரொம்ப கஷ்டப்படுத்த கூடாதுனு டாக்டர் சொன்னாங்க... அவ இஷ்டம் போலவே இருக்கட்டும்.. நீயும் என்னை தெரிஞ்சமாதிரி காட்டிக்காத... மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்று ரிஷி கூற அதன்படியே ரேகாவும் செய்தாள்...
“உனக்கு துணைக்கு இருந்தாங்களே காமாட்சி அம்மா.... அவங்க நான் வேலைக்கு அமர்த்துன ஆள் தான்.. நீ தூங்கும் போது அவங்க எனக்கு கால் பண்ணுவாங்க.. நானும் வந்துட்டு சத்தமில்லாமல் உன்னை பார்த்துட்டு போயிருவேன்...உன்னோட ஒவ்வொரு அசைவையும் நான் கண்காணிச்சிட்டு தான் இருந்தேன்... ஆனா உன் கண்ணு முன்னால வரலை... எங்க நான் வந்தா நீ வேற எங்காயாவது கிளம்பி போயிருவியோனு பயந்தேன்....”
“அப்போ நான் எங்க இருந்தேன்னு தெரியுமா?? அப்போ டாக்டர் ரேகா தான் உங்களுக்கு ஸ்பை வேலை பார்த்திருக்காங்களா??”
“என்னோட ப்ரெண்ட் தினேஷ் மட்டும் ரேகாகிட்ட நீ என்னோட வைய்ப்னு சொல்லியிருக்காட்டி நீ எங்க இருக்கனு தெரியாமலே போயிருக்கும்..”
“சாரி அத்தான்...”
“விடு அம்லு.. முடிந்ததை பேசுறதால எதுவும் மாறப்போறதில்லை....”
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல... சாரி அத்தான்...”
“ஹேய் விடு... அதான் இப்போ எல்லாம் சரியாகிடுச்சில்ல..”
“ஆனா எனக்கு இப்போ ரொம்ப கஷ்டமாக இருக்கு... எனக்கு ஏதாவது பனிஷ்ட்மண்ட் தா...நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்...”
“அதெல்லாம் பழைய கதை அதை விடு..”
“இல்லை நான் தப்பு பண்ணிட்டேன்.. எனக்கு பனிஷ்ட்மண்ட் கொடு..”
“இப்போ என்ன உனக்கு பனிஷ்ட்மண்ட தானே வேணும்.. இப்படி கிட்ட வா...” என்று ரிஷி அவளை இன்னும் அருகில் அழைக்க அவனருகே சென்றவளிடம்
“உனக்கு ஸ்வீட்டா பனிஷ்மண்ட் வேண்டுமா இல்லை ஸ்பைசியா பணிஷ்மண்ட் வேணுமா??”
“அது என்ன பணிஷ்மண்ட்..”
“ஸ்வீட் பணிஷ்மண்ட் னா நான் உன்னோட கன்னத்துல கிஸ் பண்ணுவேன்.. ஸ்பைசியானா உன்னோட லிப்சை என்னோட லிப்ஸ் டேஸ்ட் பண்ணும்.. உனக்கு எந்த பனிஸ்மண்ட் வேணும்??”
“எனக்கு ஸ்வீட்டான பனிஷ்மண்டே போதும்... நீ பனிஷ்மன்ட்னு எதுக்கு அடித்தளம் போடுறனு தெரியிது..”
“இது என்னடா வம்பா போச்சு... சும்மா இருந்தவனை பனிஷ்ட்மண்ட் கொடுனு நச்சரிச்சிட்டு இப்போ என்னை குறை சொல்லுறியா?? இதுக்காகவே உனக்கான பனிஷ்மண்டை மாத்துறேன்..” என்ற ரிஷி அவளை இழுத்து அவள் இதழ்களை கவ்விக்கொண்டான்..
இவர்களது இல்லறம் இதே போல் ஊடலும் கூடலுமுடன் இனிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு நாமும் விடைபெறுவோம்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN