👀2👀

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீ யாரென்று தெரியாமலே! நான், உன் நிழல் தேடி வருவதை அறிவாயா சிம்டாங்காரா?


🌹🌹🌹🌹🌹



அடுத்தடுத்து வந்த இரண்டு நாட்களும் மேகன் எந்த முடிவும் எடுக்காமலிருக்கவும். அன்று மாலை மேகனிடம் பேசிவிடவேண்டும் என்ற தீர்மானத்துடன் காத்திருந்தனர் அந்த முதிய தம்பதிகள்.


மாலை கடற்கரை யை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மேகனின் கண்கள் யாரையோ தேடியது. அன்று பார்த்தது, அந்த பெண்ணை! அன்றிலிருந்து தினமும் கடற்கரைக்கு வருகிறேன். ஆனால் அந்த பெண் வரவே இல்லை. ஒருவேளை என்னைப்போல் ஏதாவது மனக் கஷ்டம் னா மட்டும் வருவாளோ? ச்சே! ஏன் இப்படி ஆயிட்டேன். அந்தப் பெண் முகத்தைக் கூட சரியா பாக்கல. வாழ்க்கையில முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரத்தில, சுத்தமா அத மறந்துட்டு அவளைத் தேடும் அளவு ஆயிட்டேனே?' என்று தனக்குள் புலம்பியபடி பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த வண்டியை நோக்கி நடந்தான். அப்பொழுது " தம்பி! தம்பி!" என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பியவன் மேல் யாரோ மோதியதும், "ஏய்!" என்றவாறு திரும்பியவன் அதிர்ந்தான். இத்தனை நாட்களாக யாரை அவன் விழிகள் தேடியதோ அந்தப் பெண்!


"Please, please, please! என்னை காப்பாத்துங்க!" என்று கூறி அவன் முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டாள்.


"என்ன ஆச்சு?" என்று பதற்றமாக கேட்டான்.


அவள் தூரத்தில் வரும் இரு இளைஞர்களைக் காட்டி, ஓடிவந்ததால் மூச்சு வாங்க, " அவங்க! அவங்க! " என்று மட்டும் கூறியவாறு ஆள்காட்டி விரலால் தன்னையும், அந்த இரு இளைஞர்களையும் மாற்றி மாற்றி காட்ட, அவளைக் காப்பாற்றும் நோக்கில், " என்னோடு வா! " என்று கூறி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வண்டியை நோக்கி ஓடினான். அந்தப் பெண்ணிடம்,"வண்டியில் ஏறு!" என்று கூறி அவனுடன் யமஹா வை கிளம்பினான். அவள் மறுப்பாக தலையசைத்து விட்டு, வண்டிக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு மெல்ல மெல்ல எட்டி அந்த இளைஞர்களைப் பார்த்தாள். அவர்கள் இருவரும் சுற்றிலும் தேடியவாறு வந்து கொண்டிருந்தனர். மேகன் அவள் தெரியாதபடி நன்றாக மறைத்து நின்றான். அந்த இளைஞர்கள் மேகனைக் கடந்து சென்றனர்.


" என்னடா இந்த பக்கம்தானே வந்தா? அதுக்குள்ள எங்க போயிருப்பா?"


" நாந்தான் முதல்லயே சொன்னேன் ல? அவள நெருங்கி ஓடு னு. நீ தான் எவ்வளவு தூரம் அவளால ஓட முடியும் னு சொன்ன… இப்ப பாத்தியா நம்ம கண்ணுல யே மண்ண தூவிட்டா. .." என்று அலுத்தவாறு, கூறினான்.


மேகன் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான். தலையெல்லாம் கலைந்து வேர்த்து கொட்டி பாவமாக அமர்ந்திருந்தாள். அப்படியிருந்தும் மேகனுக்கு அவளைப் பிடித்திருந்தது. அதிகம் மேக்கப் போட மாட்டா போலிருக்கு! என்று நினைத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவள் விழிகள் விரிந்து இன்னும் நன்றாக மறைந்து கொள்ளவும், மேகன் அவள் கண்கள் போன திசையைப் பார்த்தான். அந்த இரு இளைஞர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மேகன் நின்றுகொண்டிருந்த பக்கம் கூட திரும்பவில்லை இருவரும்.


" ச்சே! அவள கண்டுபிடிக்க முடியல டா. எனக்கு ரொம்ப அசதியா இருக்கு. இப்படியே உட்காருவோம்." என்று கூறியவாறு மேகனைக் கடக்க, சட்டென்று பின்னாடி இருந்து,


"ஹே! நாந்தான் ஜெயிச்சேன்! " என்று கத்தியவாறு அந்த பெண் எழுந்ததும், மேகனுக்கு மட்டுமல்ல அந்த இரு இளைஞர்களுக்குமே தூக்கி வாரிப் போட திரும்பி பார்த்தனர்.


மேகனை, " கொஞ்சம் தள்ளிக்குங்க! என்று சிரித்தபடி கூறிவிட்டு, அந்த இரு இளைஞர்களை நோக்கி ஓடினாள்.


'இவளுக்கு என்ன ஆச்சு?' என்று நினைத்தவன் அவள் பின்னாடியே ஓடி, "ஹேய்! என்ன? நீயா போய் மாட்டிக்குற?" என்று கூறி தடுத்தான். அதற்குள் அவர்களை நெருங்கிவிட்ட அந்த இளைஞர்கள்,


" யாரு நீ?" என்று மேகனிடம் கோபமாக கேட்க,


" அண்ணா! அண்ணா! இவர் நல்லவர். இவர்தான் நான் மறைஞ்சுக்க உதவி பண்ணினார்." என்று அவள் கூறவும்,


" ஹ! அண்ண்ணா வா? !! "இங்க என்ன நடக்குது?" என்று அந்தப் பெண்ணிடம் மேகன் கேட்க,


"ஏன்? எங்கட்ட கேக்க மாட்டீங்களோ? இவ எங்க தங்கச்சி, எங்களுக்குள்ள ஒரு போட்டி! இவள எங்களால கண்டு பிடிக்க முடியலைனா, அவ கேக்குறத நாங்க வாங்கிக் கொடுக்கனும். அவ்வளவுதான் போதுமா?" என்று சற்று கடுப்புடன் கூறிவிட்டு,


"உனக்கு அறிவில்ல? தெரியாத ஆளுங்கட்ட போய் உதவிகேட்டிருக்கியே?" என்று அவளுக்கும் மண்டகப்படி வாசித்தவாறு அழைத்துச் சென்றனர்.


மேகனுக்கு சூழ்நிலை புரிய, தான் அவளிடம் ஏமாந்ததை எண்ணி, "இவ, இந்த கடற்கரையில் இருப்பவர்களை பைத்தியமாக்கவே இங்கே வர்றா ளா?' என்று நினைத்து சிரித்துக் கொண்டே தன் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். பின்னால் யாரோ ஓடி வருவது போலிருக்க, திரும்பிப் பார்த்தான். அவள் கையை அசைத்தவாறு மேகனை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள்.


" இவ ஏன் வர்றா? இப்ப என்ன வில்லங்கமோ?' என்று நினைத்தபடி அவள் அருகில் வருவதை பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் வந்தவள்,


"சாரி! எங்க அண்ணா நீங்க யாருன்னு தெரியாம இப்படி பேசிட்டாங்க. .."


'உனக்கு மட்டும் நான் யாருன்னு ரொம்ப தெரியுமோ?' என்று நினைத்தவாறு அவளையே பார்த்தான். இடையில் என்ன பேசினாளோ? தெரியவில்லை.

Screenshot_2020-07-12-10-49-57-1.png
​

" மறுபடியும் நன்றி! நீங்க தான் என்னை ஜெயிக்க வச்சீங்க! ஓகே! நான் வர்றேன்.." என்றவளிடம்,


" எப்ப வருவ? " என்று அவன் குறும்பாக கேட்டதும்,


முதலில் புரியாது விழித்தவள், புரிந்ததும் நின்று அவனை மேலும் கீழும் பார்த்தாள்.


" எத்தனை மார்க் தேறுவேன்? " என்றான் மீண்டும் குறும்பாக.


" ம்ம் உடம்பு எப்படி இருக்கு?"


" ம்ம்ம் நல்லாதான் இருக்கு." என்று அவளை மேலும் கீழும் பார்த்தவாறு கூறியவனிடம்,


"இப்ப உனக்கு என்ன வேணும்? ஹாங்!"


"கேட்டதும் குடுத்துடுவியா? இல்ல எனக்கும் போட்டி வைப்பாயா?"


'ஆஹா இவன் பேச்ச வளர்கிறான்!' என்று நினைத்தவள் ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தாள்.


" இவ்வளவு தூரம் பழகிட்டு பேர சொல்லாம போனா எப்படி?" என்று கேட்டான்.


" எவ்வளவு தூரம் பழகிட்டு?" என்று சண்டைக்கு வந்தவள் அவன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து விட்டு,


" ம்ம்ம்? ஒரு டைப்பா தான் இருக்க!" என்று கூறிவிட்டு நடந்தவளிடம்,


"இன்னும் பேர சொல்லலையே? " என்றான்.


'விட மாட்டான் போலிருக்கே? என்று நினைத்தபடி திரும்பி பார்த்து,


"சிவ காஆஆஆஆம சுந்தரி!" என்று நீளமாக இழுத்துக் கூறி விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.


அவள் போவதையே சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன், " யார் இவ?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே,


" யாரது யாரது யாரது யாரது
யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என்கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது


நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது
தெளிவாகக் குழம்ப வைத்தது


யாரது யாரது யாரது யாரது
யாரது யாரது யாரது யாரது "



" ஹேய் என்னடா இது? சிட்சுவேசன் சாங் கா! தானா நடக்குதா? இல்ல யாரும் சொல்லி வச்சு பாடுதா? ' என்று கலாய்த்தவன், அதே பாடலை பாடியவாறு வண்டியை வீட்டை நோக்கி விட்டான்.


இந்த சிவகாம சுந்தரி யார்? அவள் மேகன் கண்களில் படுவது எதார்த்தமாக நடப்பது தானா?


அடுத்தடுத்த அத்யாயங்களில் பார்ப்போம்.



--------- ********* ---------
 

Author: meerajo
Article Title: 👀2👀
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN