இரவு உணவுக்குப் பிறகு ராஷிகநகுலன் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க, அதே நேரம் அவன் கைப்பேசி ஒலித்தது. தன்னவளிடமிருந்து வந்த அழைப்பு என்றதும், ‘இந்த நேரத்திலே எதற்கு அழைக்கிறா?’ என்ற கேள்வியுடன் பால்கனி பக்கம் ஒதுங்கியவன் அழைப்பை ஏற்க,

“ஏன்னா, தூங்கிட்டேளா?” என்று கேட்டது மயூரசகஸ்வினியின் குரல்.

“அடி ஏய் மாமி, உனக்கே இது அழிச்சாட்டியமா தெரியலையாடி? நைட் பதினோரு மணிக்குப் போன் செய்து தூங்கிட்டேளானு கேட்கிற!” இவன் கேலி செய்ய

சற்று நேரம் மறுபுறமோ மவுனமாக இருந்தது, பின், “ஏன்னா...” என்று பிசிறு தட்டிய குரலில் அழுகையுடனே அவள் மறுபடியும் அழைக்கவும்

“ஏய் மயூ, என்ன டி... என்ன ஆச்சு? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு.. எதுக்கு அழற?” இவன் பதற

“பதறாதிங்கோ னா... நேக்கு ஒண்ணும் இல்ல. உங்களைப் பார்க்காம என்னாலே தூங்க முடியல னா...” என்றவள் அழுகையின் ஊடே கேவ

“ஹா... ஹா... என் அழகு மாமி! காலையில் தான் ஊருக்கு கிளம்பி வந்தேன். இதோ சாயந்திரம் ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை உன் கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். இதுக்கே உன் அக்கப்போர் தாங்கலையே, பிறகு நான் எல்லாம் மிலிட்டரிக்கு போனா நீ என்ன டி செய்வ?” என்ன தான் அவன் குரலில் கேலி இருந்தாலும் தன்னவளின் காதலில் குழையவும் செய்தது.

அங்கு மூக்கை உறிஞ்சியவளோ.. “அது நீங்க அப்போ போகும்போது பார்க்கலாம். சாயந்திரத்திலேயிருந்து போனில் தான் பேசுனேள். உங்க முகத்தையா காட்டினேள்? வீடியோ கால் வாங்கோ னா… இப்போ நான் உங்க முகத்தை பார்த்தே ஆகனும்” பிடிவாதத்துடன் அவள் சிணுங்க...

இவனுக்குள் உல்லாசம் பொங்க, “மயூ, இங்க வேணாம் டி. பசங்க எல்லாம் தண்ணீ அடிச்சிட்டு இருக்கானுங்க. நான் தோட்டத்துப் பக்கம் வந்திட்டு உன்னை மறுபடியும் அழைக்கிறேன்” என்றதும்

“ம்ம்ம்... சரின் னா” குரலில் உற்சாகத்துடன் அவள் அழைப்பைத் துண்டிக்கயிருந்த நேரம்

“மயூ….” என்று இவன் காதலோடு அழைக்க

“என்ன னா?” ஒரு வித உற்சாகத்தோடும்.. எதிர்ப்பார்ப்போடும் அவள் கேட்க

“மயூ, ஐ லவ் யூ டி!” இவன் காதலோடு சொல்ல

“மீ டூ னா”என்றாள் அவளும் இவனுக்கு நிகரான அதே காதலோடு.

உற்றத்தார் சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் நிறைந்திருக்க, கீழே ரோகினிக்கு வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது, யாரோ ஏதோ கேட்டார்கள் என்று மயூரா அதை எடுத்துத் தர மேலே வர, அவளையே வால் பிடித்தபடி மேலே வந்தான் நகுலன்.

அவள் ஒரு இடத்தில் குனிந்து மும்முரமாய் எதையோ தேட, சத்தமில்லாமல் அவளின் இடையில் கை கொடுத்து தன் புறம் திருப்பியவன், “மடிசாரியில் என்னைக் கொல்ற டி மாமி” என்ற படி இவன் அவள் இதழைச் சிறை செய்ய, அவளும் பாந்தமாகவே அவனுடன் ஒன்றினாள்.

அவனுக்கு வேண்டும் வேண்டும் என்ற அளவுக்குத் தன்னவளின் இதழில் தன்னைத் தொலைத்து விட்டு இவன் நிமிர, “என்ன னா, புதுசா என்னை இன்னைக்கு தான் மடிசார்ல பார்க்கிற மாதிரி சொல்றேள். நாம ஏழு வருஷமா லவ் பண்றோம். அப்பொழுதிருந்து எத்தனை முறை நான் மடிசார் கட்டி இருக்கேன்? இன்று என்ன புதுசா?”

“நீ எத்தனை முறை கட்டி நான் பார்த்து இருந்தாலும் சரி, என் கண்ணுக்குப் நீ புதுசா தான் டி தெரியற” என்றவன் தன்னவளை சுவற்றோடு சாய்த்து சற்றுத் தள்ளி நின்று அவளின் அழகை ரசித்தவன் தன்னவளின் முகத்தில் மென்மையாய் ஊதி.. காதலோடு அவளின் முக வடிவை கை விரல்கள் மிக மிக மென்மையாய் அளக்க.. அவனின் காதலில் கரைந்தவளோ

“சும்மா சும்மா இப்படி என்னை பார்த்து வைக்காதேள் னா. உங்க அத்தை சொல்றாங்க… கல்யாணத்துக்கு முன்னமே உங்களை நான் என் முந்தானையில் முடிஞ்சிக்கிட்டேனாம். பிறகு உங்க குடும்பத்தில் இருக்கிறவாளையெல்லாம் வசியம் செய்திட்டேனாம். இன்னும் நம்ப இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலை.. திருமணம் முடித்து நான் இங்க வந்தா... இன்னும் என்னவெல்என்னவெல் செய்யப் போறோளோன்னு ஜாடை பேச்சில் திட்டுறா” இவள் இயல்பாய் சொல்ல

“என் வீட்டில் இருக்கிற வேண்டாத பொருளில் அதுவும் ஒண்ணு டி. சீக்கிரமே அதைத் தூக்கி நான் வெளியே போடப் பார்க்கிறேன். கல்யாணத்துக்குப் பிறகும் என் பொண்டாட்டியை இப்ப விட அதிகமாய் காதல் செய்வேன்.. ஏன் என் தலையில் தூக்கி வைத்து கூட சுற்றுவேன்… இதுக்கு என்னவாம்?” என்றவன் மீண்டும் காதலோடு அவளிடம் நெருங்கி அவள் இதழில் தன்னைத் தொலைக்க, காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து சளைக்காமல் அவன் கொடுக்கும் இதழ் முத்தத்தையும், சீண்டலையும் வாங்கிக் கொள்பவள் ஆயிற்றே! இப்போதும் தன்னவனுடைய அருகாமை அவளுக்குக் கசக்குமா என்ன?

அவர்கள் இருவரையும் அங்கு பார்த்து விட்டு, “சித்தப்பா, சித்தியை என்ன செய்ற?” அங்கு வந்த நவீன் அதிகாரமாய் கேட்க

அந்த ஐந்து வயதுப் பொடியன் குரலில் இருவரும் பதறி விலகியவர்கள், “ஹீம்... உன் சித்திக்கு பல்லு வலிக்குதாம். அதான் ஆ காட்டச் சொல்லி உனக்கு இருக்கிற மாதிரி சொத்தப் பல் எத்தனை இருக்குன்னு எண்ணிட்டு இருக்கேன் டா” அந்த பெரிய மனுஷனுக்கு இவன் பதில் தர

“பொய் சொல்லாத... டார்ச் வைத்து தான் பல்லை பார்ப்பாங்க. நீ வேற ஏதோ செய்திட்டு இருந்த... bad சித்தப்பா”

மயூரா சிரிக்க, “குட்டி சாத்தான்... இந்த வயசுல என்ன பேச்சு பேசுறான் பாரு டி” அண்ணன் மகன் தலையில் ஒரு கொட்டு கொட்டியவன், “எங்க வீட்டில் எனக்கு வில்லனே இவன் தான் டி. இவனை manufacturing பண்ண நேரத்திற்கு என் அண்ணன் மல்லாக்கப் படுத்து...” மேற்கொண்டு அவன் சொல்ல முடியாத படி இவள் அவசரமாய் தன்னவனின் வாயைத் தன் கையால் அடைக்க, கண்ணில் சிரிப்புடன் அவள் கையை விலக்கியவன், “மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்து இருக்கலாம்னு சொல்ல வந்தேன் டி. நீ என்ன நினைத்த?” என்று பல்வரிசை தெரிய சிரித்தபடி அவன் கேலி செய்ய, அவளோ அவனுக்கு நாலு அடியைக் தந்து விட்டு அங்கிருந்து ஓடிப் போனாள்.

கோகிலா எதையோ கேட்க, தன் ஐந்து மாத வயிற்றுடன் மெல்ல நடந்து வந்து மயூரா அவரிடம் அதைக் கொடுக்க, “ஆடி அசைந்து வரா பாரு. யாரும் ஊர் உலகத்தில் குழந்தை பெத்துக்கலையா? கல்யாணமான கொஞ்ச மாதத்திலே புருஷனை முழுங்கிட்டா... சரி இனி நீ வீட்டை விட்டுப் போயிடுவேன்னு நான் பார்த்தா... குழந்தை தங்கிடுச்சின்னு காரணம் சொல்லி சட்டமா இங்கேயே தங்கிட்ட. க்கும்... உனக்கு வந்த வாழ்வு டி” என்று நொடித்தவர், அவள் கையிலிருந்த தாம்பூல தட்டை வெடுக்கென்று பிடுங்க, மயூராவின் உடலோ பிடிமானம் இல்லாமல் சற்றே தள்ளாடியது.

உடனே அங்கிருந்த மேஜையை இவள் பிடிக்கப் போக, அதற்கு முன்பே அவளைத் தாங்க வந்தது ஒரு கை. அதை உணர்ந்தவளாக இவள் சற்றே தன் உடலைக் குறுக்கி விலக...

“ப்ப்ப்பா! என்ன மாய் மாலம் செய்வாளோ தெரியல? இவ புருஷன் இறந்தும் புள்ளையைப் பறி கொடுத்த துக்கம் இல்லாம இவளைத் தாங்குறாங்க. இதோ இந்த வீட்டுக்குப் பாதுகாப்புக்கு என்று வந்த இந்த கமாண்டோ பயலும் இவளை தான் தாங்குறான். இவன் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்தானா இல்ல இவளைப் பாதுகாக்க வந்தானா? எந்த நேரமும் இவ பின்னாலேயே சுற்றிட்டு இருக்கான்” போகிற போக்கில் நாலு வார்த்தையை நெருப்பாய் கொட்டி விட்டு அவர் போக, துடித்துப் போனாள் ராஷிகநகுலனின் மனைவியான மயூரசகஸ்வினி.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.