ராஜேஷ்குமார் ஐயாவின் அறிவுரை

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு முறை ராஜேஷ்குமார் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு அந்த எழுத்துலக சக்கரவர்த்தியின் பதில்.

என் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?

ஒரு துறையில் பேரும் ,புகழும் பெறவேண்டும் என்று விருப்பப்படுகிறவர்கள், அந்தத் துறையைச் சேர்ந்தவர்களிடம் போய் பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும் .
ஆனால்.....
ஒரு எழுத்தாளரை அப்படி பயிற்சியின் மூலம் உருவாக்கி விட முடியாது.
எழுத்தாளன் என்பவன் தனக்குள் சுயமாக உருவாக வேண்டும் .
அவனே குருவாகவும் சிஷ்யனாக இருந்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் எழுதிய கதை பிரசுரம் ஆகாவிட்டால் ,
சோர்ந்து போய் விடக்கூடாது.
தோல்வியை ஒப்புக் கொள்ளக்கூடாது.
விடாப்பிடியாக தொடர்ந்து எழுத வேண்டும்.

அப்புறம்.....
ஒரு முக்கியமான விஷயம்.

உங்களுக்கு கதை எழுத வருகிறது என்றால் அது ஒரு வரம்.
அந்த வரத்தை சோம்பலுக்கு பலி கொடுத்து விட வேண்டாம்.
உங்கள் எழுத்தை ஒவ்வொரு நிமிடமும் காதலித்து எழுதுங்கள்.
தினசரி 5 பக்கமாவது எழுதி விரல்களை
பேனாவுக்கு பழக்கப்படுத்துங்கள்.

சொல்ல வேண்டிய விஷயத்தை, வித்தியாசமாக யோசித்து ,
புதுமையான முடிவை வாசகர்கள் எதிர்பாராத ஒன்றை கொடுங்கள்.
எந்த ஒரு கதையை எழுதினாலும்
அதில் ஒரு நேர்மறையான தாக்கம், ஒரு நீதி , ஒரு பொயட்டிக் ஜஸ்டிஸ் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து எழுத... எழுத எழுத்து உங்களுக்கு வசமாகி
மூளைக்கு நண்பனாக மாறி
புதுப்புது கருக்களை உருவாக்கி கொடுக்கும்.

இந்த யோசனையை செயல்படுத்தி பாருங்கள்.

நாளைய எழுத்து நட்சத்திரம் நீங்கள்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN