review - சாதி மல்லிப் பூச்சரமே

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவி சிஸ் கொடுத்த விமர்சனம்:love::love::love::love:smile 9smile 9smile 9smile 9smile 9

Hii friends,
இதோ… யுவனிகா sissyயோட
சாதி மல்லிப் பூச்சரமே...
என்ற கதையின் விமர்சனத்தோட வந்துட்டன்.

நாயகன் : மதிவேந்தன்
நாயகி : பூந்தென்றல் @ லிஸ்மிதா

அன்பு.. பாசம்.. பகை.. அழுகை... அரவணைப்பு மற்றும் உணர்வுப் போராட்டங்களுடன் பயணிக்கும் கதையில்... முழு முதல் பிரதானமாக இருப்பது காதல்.. காதல்.. காதல்.. மட்டுமே... ஒரு கதையைப் படித்தால் Calm and good feel வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குடும்பத்து கிராமத்துக் காதல் கதையைப் படிங்க don't miss it...

எல்லா கதையிலும் ஹீரோயின தான் writer வச்சி செய்வாங்க. இந்த கதையில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் மதிவேந்தன வச்சி செஞ்சிட்டாங்க.. யுவனி sis.. ஆனாலும் அவன் கெத்தும், ஆளுமையும் சூப்பர்... அவன் பேசும் வட்டார தமிழ் செம... படிக்காதவன் ஆனா அவன் மனைவி மெத்த படிச்சவ

பூந்தென்றல் படிப்புக்காக தன் மாமன… அதாவது அவ கணவனைத் தூக்கி எறிஞ்சிட்டு போறவ... பின் தன் காதலை உணர்ந்து.. அதே தன் கணவனுக்காக அவள் செய்யும் வேலைகள் எல்லாம் படிக்க... படிக்க... அப்பப்பா... என்ன பெண் இவனு எனக்கு பிரமிப்பா இருந்தது. அப்படி அவள் என்ன செய்தாள் என்பதைக் கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதை விட அவ காதல்.. சொல்ல வார்த்தைகளே இல்ல. கணவனை உச்சியில் வைத்துப் பார்க்கத் துடிக்கும் ஒவ்வொரு மனைவிமார்களும் பூந்தென்றலாகத் தான் வாழ்கிறார்கள்... கடைசி பகுதியில் பிரசவ வலியில் அவளின் துடிப்பும்.. ஐயாருவின் கதறலும்.. படித்த எனக்கே கண்ணீர் வந்தது..

ராஜாத்தி பாட்டியை எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. i love u பாட்டி...
தண்ணீ அடிச்சிட்டு மாமனும்.. மருமகனும்... அடிக்கிற லூட்டி எல்லாம் சூப்பர்... மதிவேந்தன், கந்தமாறன் இருவரின் உறவும் பாத்திர படைப்பும் அப்படியே மனசுல நிக்குது...

நிலவழகி, தர்மா, சாமந்தி, சின்னத்தாய், ஐயாரு... இன்னும் இன்னும் இருக்க… அனைவரின் காதாபாத்திரமுமே அருமை. மொத்ததில் இக்கதையைப் படிக்க படிக்க.. மனதில் உங்களுக்கு பாரதிராஜா படம் பார்த்த effectஐ கொடுக்கும் என்பது உண்மை.

யுவனி sisssy இது உங்களுக்கு....இந்த கதையில் ரொமான்ஸ் கொடுத்த மாதிரி இனி வரும் கதைகளிலும் எங்களுக்காக ரொமன்ஸை அங்கங்கே கொடுக்குமாறு யுவனிகா sissyயை கேட்டுக் கொள்கிறேன்...😁😁😁😁

இதே போல் பல படைப்புகளைப் படைத்து மென்மேலும் வளர வாழ்த்துகள் writer ji💐💐💐💐💐💐💐
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வாணி சிஸ் கொடுத்தது heart beat heart beat heart beat

யுவனிகா சாதி மல்லிப் பூச்சரமே - sentimental romantic story. Nice story sis😍😍😍. Love has no limitation of caste, religion n race. Love is our true essence. You have explained that very nicely.👏👏. Congratulations n my best wishes to you sis💐💐💐
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என் செல்ல தங்கச்சி செல்லம் கொடுத்த ஊக்கம் gift:gift:gift:smilie 18smilie 18smilie 18smilie 18smilie 18

யுவனிகாவின் ஜாதிமல்லி பூச்சரமே ...
எதிலிருந்து ஆரம்பிப்பது ... என் செல்ல யுவனிபேபியிடமிருந்தே ஆரம்பிக்கிறேன் .
முகமறியா முகநூலில் அறிமுகமாகி , யுவனிகாவாய் எந்தவித பந்தாவுமின்றி வீட்டிற்கே வந்து ஆச்சர்யப்படுத்தி , இன்று இங்கே எனக்கு பலப்பல எழுத்தாளர்களையும் , அன்புத்தோழிகளையும் , உறவுகளையும் அறிமுகப்படுத்தியது என் அன்பு யுவனிபேபியே லவ்யூ 😘😘😘
யுவனியின் முதல் கதையை படிச்சபோது எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த கதையோட ஹீரோயின் மித்ராதான் . அவ்வளவு இயல்பான குழந்தைத்தனத்தில் நான் பார்த்தது யுவனிபேபியைத்தான் .
முதல் கதை உன்னுள் என்னைக்காண்கிறேன் 810 பக்கங்கள் காதலே இல்லாத காதல்கதை . அடுத்தடுத்த கதைகளில் தான் எவ்வளவு பிரம்மிக்கதக்கதான மாற்றங்கள் .
இந்த கதை ஐநூறு பக்கங்கள் நெருங்கி வரும்னு நினைக்கிறேன் . ஆனால் பலதரப்பட்ட பாத்திரப்படைப்புகள் , அவர்களின் உணர்வுகளை , குணாதிசயங்களை நெல்லைத்தமிழின் சுவையோடு நமக்கு தொடுத்து கொடுத்திருக்கிறார் .
யுவனியின் கதைகளில் மாற்றமே இல்லாத ஒன்று உண்டெண்றால் அது சமூகத்திற்கு கூறும் கருத்துக்கள் தான் . ஒவ்வொரு கதையிலும் இதில் எதைப்பற்றி சொல்லியிருப்பார் என யோசிக்க வைப்பது யுவனியின் சிறப்பு . இந்தக்கதையில் தலைப்பே சொல்லிவிட்டது .
மதிமாமாவும் அவரின் பாப்புக்குட்டியும் மதிமயக்குகிறார்கள் என்றால் தர்மாவும் அவன்நிலாவும் தங்கள் தன்னலமில்லா காதலில் நம்மை கட்டி வைக்கிறார்கள் . யுவனியின் நாளுக்குநாள் மெறுகேறிய எழுத்துநடை மனதிற்கு மிகவும் நெருங்கிய உணர்வையே தருகிறது .

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் யுவனிபேபி .மென்மேலும் இவ்வெழுத்துலகில் நீ சிகரம் தொட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🎊🎊🎊🎊🎊🎊🍭🍭🍭🍭🍭🍭🍦🍦🍦🍦🍦🍦💃💃💃💃💃💃
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விஜி சிஸ் கொடுத்த review smilie 18 smilie 18 smilie 18

Hi friends,
இன்னைக்கு நான் ஒரு வளரும் எழுத்தாளரான யுவனிகாவோட கதையின் விமர்சனத்தோடு வந்திருக்கேன்.
கதையின் பெயர் :சாதி மல்லிப் பூச்சரமே
நாயகன் : மதிவேந்தன்
நாயகி : பூந்தென்றல்

எல்லாரும் மதிமாமா மதிமாமானு சுத்துறாய்ங்களே.. அப்டி என்னதேன் இந்த கதையில இருக்குனு படிச்சுப் பாத்தேன். ஆத்தி.. பேருக்கு ஏத்த மாதிரி கதையும் சும்மா மணமணக்குது. சுத்தமான அக்மார்க் கிராமத்துக் கதை. திருநெல்வேலி பாஷையில திருநெல்வேலி அல்வா மாதிரி படிக்கப் படிக்க இனிக்குது மொத்த கதையும். படிச்ச எனக்கே அந்த பாஷை ஒட்டிக்கிருச்சுனா பாத்துக்கோங்களேன்..

ஓப்பனிங்கலயே ஜல்லிக்கட்டு வீரனா ஹீரோ entry சும்மா அதிருது.. அப்புறம் ஹீரோ பாப்பு பாப்புனு சின்ன வயசுல இருந்தே துரத்தி துரத்தி ஹீரோயின உருகி உருகி காதலிக்கிறான்.. ஆனா அவளோ கொஞ்சம் கூட கண்டுக்காம நம்மள கடுப்படிக்கிறா. அல்ட்ரா மாடர்ன் வேற.. ஆனாலும் எப்படியோ அதிரடியா கல்யாணமும் முடியுது. அதுக்கப்புறம் தான் twist.. ரெண்டு பேரும் பிரியறாங்க. ஆனா மறுபடியும் ஹீரோயின் re entry. ஆனா இந்த தடவை ஹீரோயினுக்கு ஹீரோ மேல அம்புட்டு லவ்வு. ஆனா அவன் ஒத்துக்கல.. கடைசியா எப்படி ரெண்டு பேரும் ஒண்ணு சேர்வாங்க என்றது தான் கதை. இதுக்கு இடையில தான் ஏகப்பட்ட twist and turn.. ஏகப்பட்ட charecters. ஆனா ஒவ்வொருத்தரும் நம்ம கண்ணு முன்னாடி அப்படியே நடிக்கிறாங்க.. இது நாவலே இல்ல.. ஒரு படம்.. அப்படி தான் படிக்கிற நமக்கு feel ஆகுது. சூப்பரா direct பண்ணியிருக்காங்க director (ஆசிரியர்) யுவனிகா. சாட்டையடி மாதிரி பல வசனங்கள்.. கதையின் போக்கிலேயே கருத்து சொன்னாலும் readers படிப்பாங்க என்றத யுவனிகா நிரூபிச்சி இருக்காங்க.

ஆமா.. நீங்க மட்டும் எப்படி இம்புட்டு அழகா கதைக்கு பேரும் ஹீரோ ஹீரோயினுக்கு பேரும் வெக்கறீங்க..ஒருவேளை இதுக்காகவே நாலு பேர வெச்சிருக்கீங்களோ..

யுவனிகா.. நீங்க அதிகம் romance வெக்க மாட்டீங்கனு பயங்கர complaint.. ஆனா இந்த கதையில அப்படி ஒண்ணும் தெரியலயே.. ஹீரோ காதலோட நெருங்கறதும், ஹீரோயின் காதலோட நெருங்கறதும்னு நெறைய சீன்ஸ் வெச்சிருக்கீங்களே.. குறிப்பா அந்த பம்பு செட் சீன்.. ரெண்டு பேரோட உணர்வுகளையும் எவ்வளவு அழகா காட்டியிருக்கீங்க.. no chance.. ஒருவேளை readers கோரிக்கை ஏத்துகிட்டீங்களோ.. நானும் மதிமாமா மதிமாமானு திரிய ஆரம்பிச்சிருவேன் போல..

தாய்மாமன் பந்தம், கிராமிய பாட்டு, etc.. etc எல்லாமே சூப்பருப்பு
உங்களுக்கு தெரியுமா? அந்த பாட்டு எல்லாம் youTubeல தேடிக் கண்டுபுடிச்சி கேட்டு அதுக்கெல்லாம் fan ஆகிட்டேன்

மொத்தத்துல ஒரு கிராமத்து குடும்பக் கதைய படமா பார்த்த ஒரு திருப்தி.
மன்னிக்கவும்.. கதையில சொல்றதுக்கு இன்னும் நெறைய விஷயமும், நெறைய பேரும் இருக்காங்க.. ஆனா எல்லாத்தையும் நானே சொல்றத விட நீங்களே படிச்சுப் பார்த்தா.. sorry.. படம் பார்த்தா நல்லா இருக்கும்.


வளரந்த எழுத்தாளர விட வளரும் எழுத்தாளரான யுவனிகாவோட கதைக்கு விமர்சனம் குடுத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. பெருமையும் கூட. அவங்க மேலும் இதுபோன்ற பல கதைகள குடுத்து வளரணும்னு இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
 
Last edited:
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காஞ்சனா சிஸ் கொடுத்த review smile 9smile 9smile 9smile 9smile 9

வணக்கம் தோழிகளே
மற்றுமொரு கதையின் விமர்சனத்தோடு வந்துவிட்டேன்.
யுவனிகாவின் “சாதி மல்லிப் பூச்சரேமே”
நாயகன் : மதிவேந்தன்
நாயகி. : பூந்தென்றல்

முழுக்க முழுக்க கிராமத்துக் காதல் கதை. நாயகன் வேந்தன் தன் மாமன் மகளான தென்றலை உருகி உருகி காதலிக்க அவளோ வெறுத்து ஒதுக்கி ஓடுகிறாள்.
ஆனாலும் விதி அவளை வேந்தனோடு சேர்த்து வைக்கிறது. அதன் பிறகு அந்த வாழ்க்கையை அவள் ஏற்றுக் கொண்டாளா இருவரும் மனம் ஒன்று பட்டு சந்தோஷமாக வாழ்ந்தார்களா இல்லையா என்பதே கதைக்களம்.

நெல்லைத் தமிழில் வீரமிக்க காளையாக, தாய் மண்ணைக் நேசிப்பவனாக, பாசத்தில் பொங்குவதுமாக கதை முழுக்க மிளிர்கிறான் நாயகன் வேந்தன். அடுக்கடுகாக அவன் படும் சோதனைகள் நம்மையும் தாக்குகிறது.

வழக்கம் போல் யுவனிகாவின் கதை நாயகி நாயகனுக்கு நிகரான படைப்பு. பெண்களும் ஆண்களுக்கு நிகராக காதலும் , கடமையும் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறாள் தென்றல்.

மிடுக்காக வரும் ஐயாரு, தாய் தாமரை, சினனத்தாய், தாய் மாமன் மாறன், மூர்த்தி, நிலவழகி, நண்பன் தர்மா... இன்னும் முடியவில்லை கதாபாத்திரங்கள். ஏகப்பட்ட உறவுக.. ஆனாலும் அத்தனை பேரும் அழகாக அருமையாக மனதில் நிற்கும் படி வலம் வருகிறார்கள்.

அங்கங்கே அன்பை வெளிப்படுத்தும் அழகான காதல் மனதை ரம்மியமாக்குகிறது. காதல், கோபம், சோகம், அழுகை என நவரசமும் நிரம்பி வழிகிறது கதையில். அடுக்கடுக்காக பல திருப்பங்கள் வைத்து சுவாரசியாக கதையை நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.


கதையில் வரும் இதமான மண் வாசனைப் பாடல்கள் போல மொத்தத்தில் மனதுக்கு நிறைவான கதையைக் கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள். அவர் மென்மேலும் இதுபோன்ற கதைகளைக் கொடுக்க, மென்மேலும் வளர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
 
Last edited:
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜெயந்தி சிஸ் கொடுத்த review Flying kissFlying kissFlying kissFlying kiss எப்போதுமே அவங்க கொடுக்கற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஊக்கத்தை கொடுக்கும் heart beatheart beatheart beatheart beatheart beatheart beatheart beat

சாதி மல்லிப்பூச்சரமே!!! by Yuvanika...

More than a review title will offer u millions reasons to think n connect in a right way....such a fantastic story in Nellai slang with sharp words n narrations that hits our conscience heavily...

MadhiVendan - Sure u will get a pic of village hero with fascinating smile n cute face, basically farmer who loves to do so n guard his family like a SuperMan...but to the contrast he hates to be mentioned by castes...seeing a human as himself will always work for him...he just melts us when he shows his love n affection for his girl....enna love uu daa saamy...more self respect at the same time has a clear understanding of others especially Pappu...
behind a successful woman there will be a man ku right choice...letting her to lead her life n respecting her choice but keeping an eye on her ever shows his abundant love...on the whole he is more like Village God Ayyanar guarding entire village in a right path...I too Luv you MadhiMama😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Poonthendral Madam how to count her avatars first have a big dream of becoming a leading fashion designer n wanna pursue in abroad....but born in a cultured joint family where caste is more than breathe don't allow her...somehow manages n she traps herself for the sake of her dream...again her Mama comes to rescue as usual, getting married n leaving this relationship due to another untoward incident...later realizes n comes back in different Avatar n fulfills all her MamaS dream n get back his respect n faith....such a adament girl she refuses to stay in hospital for her delivery n gains her Mamas fame for what she committed a mistake rejecting him before....perfect pair for MadhiMama🥰🥰🥰

There are bunch of characters to support everyone like Sivaguru, Kandamaran, Nilavazhaghi, Thamarai n Patti...you will be surprised to see the story moving with unexpected turns..real feel lies in reading so stepping here...

Yuvanika Yuvi a bigggggggggg hug for such a fabulous content in Nellai slang with practical situations, narration n the way u try to convey us like how young girls face this world when they r exposed badly n just this body is a bundle of flesh n bones...we have to punish those cowards who dives in disgusting ways n make use of advantage..you deserve high class appreciation Yuvi👏👏👏👏👏👏apart from this how Caste makes a Man n his generation worst n furious has been come out very well...many places u just rocked by ur words it was really a eye opener for those who inclined more to Caste...I could feel the personal connection while reading every epi n their feelings...almost from starting to end u maintained the same spirit n curiosity what gonna happen next...
Congratulations for such a awesome story it was like seeing a block buster village movie....have to mention the songs u played in between the epis....though not a gr8 hit but beautiful songs....happy to hear those songs...Wishing you Good Luck further....Keep rocking like this differently...

Love you Yuvi😘😘😘😘😘😘😘😘😘
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என் கதையை பற்றி சசிகுமார் தம்பியின் அழகான வார்த்தைகள்... நான் எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சி😍😍😍😍😍💜💜💜💜💜💜நன்றி ப்பா..🤗🤗🤗🤗🤗

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கொஞ்ச நாளுக்கு முன்னாடியே போட வேண்டிய விமர்சனம்.. படுச்சு முடுச்சு பல நாள் ஆகிடுச்சு.. இன்னைக்கு தான் டைம் கிடைச்சது..

யுவனிகா சிஸ்டர் எழுதுன ஜாதிமல்லி பூச்சரமே.. சூப்பரான கதை..

மதிவேந்தன் நிதர்சன அழகான க்யூட்டான ஹீரோ.... மாறன் மாமா க்கும் மதிவேந்தனுக்கும் கனெக்ஷன் பாத்து ஆச்சர்யம்...!!!!

நிலவழகி தங்கோ தர்மா சாடிக்கேத்த மூடி....!!!!

தென்றல் எதுவேணூம்ன்னு தெரியாது குழப்பவாதி....... பின்ன ஒத்து சேர்ந்து வாழ்ந்த அப்பா மாமன போல பிடிவாதக்காரி.....!!!!!

அம்மைங்கள்ளாம் அழகான அழகீகள்..!

செண்பகவில்லி கலையரசன்லாம் கட்டத்துரைங்க....

அங்கை கடைசி நேர ஆட்ட ஹீரோயின்.....

நரேன் நவீன் கத்துக்குட்டிங்க....

சாமந்தி கதைய அப்பப்ப கைல எடுத்து மூவ் பண்ணி ஸ்கோர் பண்ண கேரக்டர்.....!!!

ஐயாரு பழமையில் ஊறி கடைசி கதை வழமையா மாறுன ஆள்....!!!

ஆச்சர்யத்துலையும் ஆச்சர்யம் ராஜாத்தி பாட்டிதான்....ஐயாருவுக்கு மூத்த தலமுறை பேரனுக்காக மாத்திக்கிட்டாங்களா மறந்துட்டாங்களோ எதுவோ ஒன்னு அடி தூளோ தூள்....!!!!

எல்லாத்துக்கும் மேலே நாம கேட்டு மகிழ்ந்து கொண்டாடுன ஒன்லீ எய்ட்டீஸ் சாங்ஸ் மட்டுமே வெச்சு சுட்டுவேஷன அழகா க்யூட் ஹேண்டில் பண்ணியிருப்பாங்க.. அந்த ரேஞ்சலயே படம் பாத்து ஒரு ஃபீல்....!!! நெறைய நிதர்சனமான கும்மி பாட்டு நாட்டுபுற பாட்டெல்லாம் எடுத்து கதைக்கு பில்லர் குடுத்து எழுதி நிறுத்தியிருப்பாங்க ...!!!.

நான் படுச்சு ஒருமாசம் இருக்கும்.. லிங்க் ஒருவாரம் இருக்கும்னு சொன்னாங்க... இப்போ சைட்ல இருகானு தெரியலை..

வாழ்த்துக்கள் அக்கா.. இன்னும் இதுமாதிரி நிறைய படைப்புகளை படைக்க..

அன்புடன் சசிகுமார் தங்கவேல்...
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எழுத்தாளர் ஆர்த்தி ரவி சிஸ் கொடுத்த review

🌻சாதி மல்லிப் பூச்சரமே 🌼 🌹யுவனிகா 🌹

முதலில் தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் யுவனிகா. கடந்த வாரம் ஒரு சின்ன பதிவிட்டு விட்டு வருகிறேன் என்று போனவள் என்னவானேன் என்று ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அதன் பிறகு இரண்டு நாட்களில் வாசிப்பு முடிந்ததுமா. பதிவை எழுத முடியவில்லை.

சரி இப்பொழுது கதையைப் பற்றி...

உங்கள் எழுத்தில் என்னுடைய முதல் வாசிப்பு இக்கதை. எப்போதோ இக்கதைக்குரிய ஒரு பதிவினை காண நேரிட்டது. அதில் வந்திருந்த கதையின் ஒரு பகுதி முன்னோட்டம் மனத்தில் தங்கிவிட்டது. அந்த உரையாடல்களின் பேச்சு வழக்கு மற்றும் கிராமத்து கதைக்களம் என்பது ஈர்த்தது.

என் எதிர்பார்ப்பிற்குத் தப்பாத வகையில் கதையும் நன்றாகயிருந்தது. ஒரு திரைப்படம் போலக் காட்சிகளும், அவற்றை விரைவாக நகர்த்திய விதமும் பிடித்தது.

எத்தனை கதாப்பாத்திரங்கள்? அவர்களில் சிலருக்கு முன் கதைகள்... மாறுபட்ட குணாதியசங்கள்... ஒவ்வொருவருக்கும் உள்ள உறவு. நிறைய உழைப்பைக் கொடுத்து எழுதியிருப்பது புரிந்தது. பாராட்டுகள் யுவனிகா! ❤️💐

இப்போதும் கிராமங்களில் சில பின்தங்கிய எண்ணங்களும் உள்ளே ஊறிய பழமையான வழமையும் மாறாமல் இருப்பது உண்மையே. இன்னும் இரண்டு தலைமுறைகள் பிடிக்கும் அவர்கள் மாறுவதற்கு என்கிற எண்ணம் எனக்கும் உண்டு.

ஐயாருவைப் போன்றவர்களை மன்னிப்பது சுலபமல்ல. அவருடைய அம்மா அவரைவிட முன்னோக்கி இருப்பது சற்று ஆறுதல்.

கதையில் வரும் பாடல்கள் அருமை! கிராமியப் பாடல்கள் உங்களுடைய மெனக்கெடலை உணர்த்துவதாய்! சினிமா பாடல்கள் வாசகர்களைப் பின்னோக்கிப் பயணிக்க வைப்பது நிச்சயம். 😍😍😍

கதையில் இரனைக்குரிய சொற்பதங்கள் ஆங்காங்கே மனத்தைக் கவர்ந்தன. புன்னகையுடன் வாசித்தேன்.

உறவுகளின் வார்த்தைகளைத் தண்ணீரில் கலக்கும் உப்புடன் ஒப்பிட்டு வந்த பதம் இப்போது நினைவில் வந்தது.

நான் மிகவும் இரசித்தது கந்தமாறன் மற்றும் மதிவேந்தனுடைய உறவும் பிணைப்பும். அப்புறம் மதிவேந்தனின் காதல், பிறரிடம் அன்புப் பாராட்டும் குணம்.

நிலவழகி, தர்மா வரும் காட்சிகளில் சில கனமாகயிருந்தன.

சின்னத்தாய் உள்ளே வரும் காட்சி! அப்பா... என்ன சொல்ல? அத்தனை தத்ரூபமான வடிப்பு! அந்த இடத்தில் மதிவேந்தனின் உணர்வுகளும். அவனுடைய அம்மையின் உணர்வுகளும் மனத்தை அழுத்தின.

பூந்தென்றல்... என்னவொரு குணாதியசமான பெண்? அவ்வப்போது மாறும் புத்தி, பிடிவாதம், சுயநலம்? வளர்ப்பும் சூழ்நிலையும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இவள் உதாரணம்.

‘ல’ எழுத்துடன் தொடங்கும் பெயர் யார் என்பதை ரொம்ப முன்னமே என்னால் ஊகிக்க முடிந்தது.

நீங்களும் யார் என்று நேரிடையாகச் சொல்லும் பக்கத்தின் சில பக்கங்களுக்கு முன் ஓரிடத்தில் பெயரை மாற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

மதிவேந்தன், கந்தமாறன், ஐயாரு என்று இன்னும் சிலருக்குத் தொடர்ந்து வந்திருந்தது பேச்சு வழக்கு. அழகு!

இதைப் போல மற்றும் சிலருக்குச் சில இடங்களில் இப்பேச்சு வழக்குத் தொடர்ச்சியாக வரவில்லை. இவ்வளவு பெரிய கதை எழுதும் போது எத்தனை கடினம் என்பதை நான்றிவேன். இருந்தாலும், புத்தகம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லையென்றால் திருத்தங்கள் செய்ய இயலும் என்று நினைத்தே குறிப்பிட்டுள்ளேன்.

பல காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது உங்களுடைய எழுத்தின் சிறப்பு.

நல்ல கதை சொல்லி என்று வாசிப்பின் போது பல இடங்கள் எடுத்துக்காட்டின.

உரையாடல்களில் கலக்கி இருக்கீங்க.

திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணம், முக்கியத்துவம், அருகிலுள்ள இடங்களைக் காட்டியது சிறப்பு!

கிராமம், பழக்கவழக்கம், வயல், தோப்பு, குடும்பம், உறவுநிலை, விருப்பு வெறுப்பு, அன்பு, பாசம், நேசம‌், அம்பேத்காரின் சொற்கள் வரை ஒரு பக்கம்.

கேட்வாக், ரேம்ப் மற்றும் மாடலிங் என்று பெங்களூரூ டு பேரிஸ் இன்னொரு பக்கம்.

தென்றலின் அறியாமை, உணர்தல், அதிரடி, பிரியம், நட்பு, காதல், கடைசி வரைத் தொடரும் பிடிவாதம்... இப்படி ஒருவரைக் கதையில் வடிப்பது சிரமம் தான். நன்றாகக் காட்டியிருக்கிறீர்கள் யுவனிகா.

இன்னும் நிறைய சொல்லலாம். வாசிப்பவர்கள் வாசிப்பில் தெரிந்து கொள்ளட்டும்.

முடிக்கும் முன் கலெக்டர் சம்பந்தப்பட்ட ஒன்றிரண்டு காட்சிகள் வெரி வெரி சினிமேட்டிக். கதையில் கடைசியில் வரும் காட்சிகளில் சிலவற்றைக் குறைத்தும் கொஞ்சம் எடிட் செய்தால் மிகவும் அருமையாக வரும்.

இத்தனை நீளமான கதையைப் பொறுமையுடன் எழுதி சுவாரசியமாகத் தந்ததே சிறப்பு! வேந்தன் வாவ்! ❤️👏🏼👏🏼👏🏼

நிறைய எழுதுங்கள் யுவனிகா. வாழ்த்துகள்! 💐

அன்புடன்,

ஆர்த்தி ரவி
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN