மண்ணில் தோன்றிய வைரம் 1

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

விமான நிலைய வாசலில் தன் நண்பனின் வருகைக்காக காத்திருந்த வருணின் பொறுமையை சோதிக்கவென அரைமணி நேரம் தாமதமாக தரையிறங்கியது அவுஸ்ரேலியன் எயார்லைன்ஸ். மேலும் ஒரு மணி நேரம் கழித்து தனது பயணப்பொதிகளை தாங்கிய கேரியரை தள்ளியபடி நுழைவாயிலை அடைந்த அஸ்வினை செல்லில் அழைத்தான் வருண்.

"டேய் இன்னும் எவ்வளவு நேரம்டா என்னை இந்த மார்கழி குளிர்ல காயவிட போற? பகல் நேரத்திலேயே குளிர் ஊசி மாதிரி குத்தும். இந்த நடு ராத்திரில என்னை இப்படி நிற்க வச்சிட்டியே???" என்று தன் பாட்டில் பேசிச்சென்ற வருணிடம்

"டேய் மக்கா நான் என்ரன்ஸ் வந்துட்டேன். நீ காரை எடுத்துகிட்டு வா"

"இரு வரேன். உன்னை எல்லாம் வச்சிருக்கதுக்கு இந்த டிரைவர் வேலை பார்க்காதது ஒன்னு தான் குறை"என்று முணுமுணுத்தவாறு ப்ளூடூத் இயக்கியை அணைத்து விட்டு தன் டொயாட்டாவை ஸ்டார்ட் செய்தான் வருண்.
டொயாட்டா வாயிலை அடைந்தவுடன் அதனை நோக்கி நடந்த அஸ்வினுக்கு உதவும் முகமாக காரிலிருந்து இறங்கி பயணப்பொதிகளை டிக்கியினுள் அடுக்க உதவினான் வருண். பின் காரில் ஏறிய தேஜஸ்வினை லெப்ட் அன்டு ரைட் வாங்க தொடங்கினான் வருண்.

"ஏன்டா மாடு மாதிரி வளர்ந்த உனக்கு அந்த கடவுள் மூளைனு ஒரு சாமானை குடுக்க மறந்துட்டாரா இல்லைனா குடுத்ததை வேணாம்னு எங்கயாவது கழட்டி வச்சிட்டு வந்துட்டியா??"

"உனக்கு ஏன்டா இப்படி ஒரு டவுட்?? ஒரு கோல்ட் மெடலிஸ்டை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்குற?? நியாயமா பார்த்தா இந்த கேள்விய நான் உன்கிட்ட கேட்டு இருக்கனும். "

" ஓ சார் பண்ணற வேலைக்கு அது மட்டும் தான் பாக்கி. பிளைட் லேண்டாக லேட் ஆகும்னு சிங்கப்பூரில் லேண்டாகி எனக்கு கோல் பண்ணப்போ சொல்லி இருக்கலாம்ல??? சும்மா இங்க வந்து கொட்டாவி விட்டுகிட்டு கொசுகிட்ட பிளட் டொனேட் பண்ணாம கொஞ்ச நேரம் தூங்கி இருப்பேன். இவ்வோ கஷ்டத்தை குடுத்துட்டு நியாயம் கேட்குறியா???"

"ஹாஹா கூல்டா.. சும்மா உனக்கு ஒரு சப்ரைஸ் குடுக்கலாம்னு தான்"

"ஏன்டா ஒரு மனுஷனை இப்படி அல்லாட வைக்கிறதுக்கு பேர்தான் உங்க ஊருல சப்ரைசா?? எத்தனை பேர்டா இப்படி கிளம்பி இருக்கீங்க??"

" சரியா தெரில மச்சான். இப்போதைக்கு என்னை மட்டும் கணக்குல வச்சிக்கோ" என்று கூலாக பதிலளித்தான் தேஜஸ்வின்.

"இவன் ஒருத்தனை சமாளிக்கிறதுக்கே நான் தலையால் தண்ணி குடிக்க வேண்டி இருக்கு. இதுல இன்னொருத்தனா?? யப்பா சாமி நான் இந்த ஆட்டத்துக்கு வரலை என்னை இதுக்கு போனி ஆக்காத டா..."

"கூல்டா இதுக்கே இப்படி ரிவர்ஸ் அடிச்சா எப்படி?? நீ இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு தம்பி"

"சரி அதை நான் பிறகு பார்த்துக்கிறேன். இப்போ நீ சொல்லு. உன்னோட லைப் எப்படி போது?? இனி என்ன பண்ண போற?? ஏதும் பிளான் வச்சிருக்கியா??"
இது தான் வருண். விளையாடும் போது விளையாடுவான், கோபம் வந்தால் அவனைபோல் சீறுபவரும் யாரும் இல்லை பாசம் காட்டுவதிலும் அவனை மிஞ்ச யாரும் இல்லை.

"வாழ்க்கை சும்மா ஜெட்டு மாதிரி போகுது. பெருசா ஒன்னும் பிளான் இல்லை. இப்போதைக்கு ஒரு ஜாப் தேடிகிட்டா போதும்."

"டேய் உனக்கு ஜாப்பா?? அங்க உன்னோட அப்பா யூ.எஸ் ல எல்லாருக்கும் வேலை குடுத்துட்டு இருக்காரு நீ இங்க வேலை தேட போறியா?? இருந்தாலும் நீ இவ்வளவு வம்பு பண்ண கூடாது டா"

"டேய் உனக்கே தெரியும் நான் வளர்ந்தது என்னோட சித்தி சித்தப்பா கிட்ட தான். என்னா தான் நான் அவங்க அக்கா மகனா இருந்தாலும் என்னை அவங்க தன்னோட சொந்த பிள்ளையா தான் இதுவரைக்கும் பார்க்குறாங்க. சோ நான் அவங்களுக்கு பிள்ளையா இருக்க விருப்புறேன்."

"சரி கூல்டா. எனக்கு ஒரு டவுட். டே டைம் பிளைட் ஏதும் இல்லையா?? எதுக்கு இந்த ராத்திரில வந்து இறங்குன??"

"அதுவா சும்மா வீட்டுல உள்ளவங்களுக்கு ஒரு சப்ரைஸ் குடுக்கலாம்னு தான்"

"ஏன்டா நீ சப்ரைஸ் குடுக்க நான் பலியாடா??"

" நான் என்னடா பண்ண? பட்சி வசமா வந்து சிக்கிச்சி விடமுடியுமா சொல்லு" என்று சிரித்த அஸ்வினை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தான் வருண்.
இவ்வாறு இவர்களது கலாட்டா தொடர்ந்த வண்ணம் இருக்க ஒரு மணிநேர பயணத்தின் பின் அஸ்வினின் வீட்டை அடைந்தது கார்.
இளஞ்சிவப்பு நிற பூச்சினால் வண்ணந்தீட்டப்பட்டு அழகிய குரோட்டன் தாவரங்களை தாங்கிய கறுப்பு நிற பூந்தொட்டிகளை தாங்கியவாறு வாசலை மழையோ வெயிலோ அண்டாதவாறு அரணாய் இருந்த பெல்கனியினை தன் வசமாக்கிய அன்பினால் அலங்கரிக்கப்பட்ட அந்த சிறு கல் மாளிகையே அஸ்வினுடைய வீடு.
பொழுதும் புலராத அந்த காலை வேளையில் அஸ்வின் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தி விட்டு தன் அன்புக்குறியவர்களின் வருகைக்காக நண்பன் சகிதம் காத்திருந்தான்.

கதவினை திறந்த சித்ரா

"கண்ணா நீ எப்படி இங்க?? நீ வருகிறேன் என்று சொல்லவே இல்லையே?? என்னங்க இங்க வாங்க நம்ம அஸ்வின் வந்திருக்கான். கண்ணா உள்ளே வா வெளியில பனி கொட்டுது" என்றவாறு அஸ்வினை உள்ளே இழுத்த சென்ற சித்ராவை தன் குரலால் தடுத்தான் வருண்.

"ஆன்டி நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. இங்க ஒருத்தன் இரவு பகலென்று பார்க்காமல் அவனுக்காக டிரைவர் வேலை பார்த்துட்டு வந்திருக்கேன். என்னை கவனிக்காம சும்மா ஜம்முனு வந்த அவனை மட்டும் உள்ள கூட்டிட்டு போறீங்களா??? நீங்க சுத்த மோசம் ஆன்டி" என்று போலியாய் சண்டை பிடிக்க தொடங்கிய வருணிடம்

"ஐயோ வருண் நீயும் இங்கேயா இருக்க உன்னை நான் கவனிக்கவில்லை பா.. உள்ள வாபா" என்றவாறு இருவரையும் அழைத்து சென்றார் சித்ரா.
ஹோலிற்கு வந்த அஸ்வினை ஆரத்தழுவினார் அவனது அன்னை வழி பாட்டி ஆரவல்லி.

"கண்ணா எப்படிடா இருக்க?? ரொம்ப இளைச்சி போய்ட்ட பா. அங்க வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிட மாட்டியா?? இதுக்கு தான் கிருஷ்ணன் கிட்ட சொன்னேன் பிள்ளையை அவ்வளவு தூரம் அனுப்பாதனு. என் பேச்சை என்னைக்கு கேட்டான்" என்று கவலைப்பட தொடங்கிய பாட்டியை சமாளிக்கும் முகமாக

"ஐயோ பாட்டி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. நான் சும்மா ஜம்முனு ராஜா மாதிரி தான் இருக்கேன். நீங்க உங்க கண்ணாடியை போட்டு பாருங்க"

"டேய் படுவா என் அம்மாவுக்கா கண்ணு தெரியலனா சொல்லுற???"

"சித்தி நான் அப்படியா சொன்னேன்??" என்று கேள்வி கேட்ட நண்பனை பார்த்து

"டேய் அஸ்வின் இது உலக மகா நடிப்புடா சாமி. இதுக்கு ஆஸ்கர் இல்லை அதுக்கு மேல உள்ள அவார்டு தான் குடுக்கனும். இன்னும் எத்தனை வித்தைடா கை வசம் வச்சிருக்க ?? "

"ஹாஹா இப்போ சரி ஐயாவோட திறமையை புரிஞ்சுகோ" என்று தன் காலரை தூக்கி விட்டான் அஸ்வின்.

" கண்ணா நீயும் வருணும் போய் உன்னோட ரூம்ல ரெஸ்ட் எடுங்க. நான் உங்களுக்கு காபி கொண்டு வந்து தரேன்."

"இல்லை ஆன்டி நான் கிளம்புறேன்" என்று கிளம்ப தயாரான வருணை

"வருண் கண்ணா இன்னைக்கு சண்டே தானே இன்னைக்கு ஒரு நாளைக்கு இந்த ஆண்டிக்காக இங்க தங்க மாட்டியா??"

"ஓகே கூல் ஆண்டி. உங்களுக்காக தான் இன்னைக்கு இங்க இருக்கேன். வேற எந்த ஜந்துக்காகவும் இல்லை" என்றவனது பார்வை அஸ்வினை நோக்கியது.

"டேய் அடங்குடா. சித்தி சித்தப்பா எங்க??"

" படுத்திருந்தாருப்பா அவரை கூப்பிட்டேன் ஆனா இன்னும் அவரை காணவில்லை."

"இருக்கட்டும் சித்தி. சித்தப்பா தூங்கட்டும் எழுப்பாதிங்க. நான் லேட்டா வந்து பார்க்கிறேன்" என்றவாறு தன் நண்பனோடு அறையை நோக்கி நடந்தான் அஸ்வின்.
சித்ரா வழங்கிய காபியினை குடித்துவிட்டு உறங்க தொடங்கிய அஸ்வின் மற்றும் வருணை மூன்று மணிநேரத்திற்கு பின் துயில் கலையச்செய்தது கவித்ராவின்

"அண்ணா இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவிங்க" என்ற குரலும் கதவு தட்டப்படும் சத்தமும்.
கண் விழித்த வருண் அஸ்வினை எழுப்ப அவனோ மறுப்பக்கம் திரும்பி படுத்துக்கொண்டான். சரி நாமே சென்று கதவை திறப்போம் என்று கதவை திறந்த வருணை வரவேற்றது கவியின் தண்ணீரபிஷேகம்.

"ஐயோ" என்று அலறிய கவியின் குரலை தொடர்ந்து ஒலித்தது "ஷிட்" என்ற வருணின் குரல்.

"ஹாஹா காலையிலேயே கவி கையால நீராபிஷேகம் வாங்கிட்டியா??" என்று கட்டிலில் இருந்தவாறே சிரித்த அஸ்வினை நோக்கி

"அடப்பாவி தெரிஞ்சி தான் அப்படி திரும்பி படுத்துகிட்டியா? உயிர் கொடுத்தான் நண்பன்னு கேள்வி பட்டுருக்கேன். நண்பன் மொக்கை வாங்க சதி செய்த நண்பனை இன்னைக்கு தான் பார்க்குறேன்."

"சாரி அண்ணா நான் அஸ்வின் அண்ணானு நினைத்து தான் இப்படி பண்ணேன்"

"பரவாயில்லை மா. வா நீ செய்ய நினைத்ததை இப்போ செய்யலாம்" என்றவாறு அஸ்வினிடம் கவியை அழைத்து சென்றான் வருண்.
அவர்களது எண்ணம் அறிந்த அஸ்வின் சட்டென குளியலறையில் புகுந்தான்.

"டேய் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சா தப்பிச்சுட்டதா அர்த்தம் இல்லை. நீ திரும்பி வெளிய வந்து தான் ஆகனும் நீ வெளியே வா அப்போ உனக்கு இருக்கு கச்சேரி." என்றவாறு இவர்களது ரகளை தொடர அதில் வந்து கலந்து கொண்டான் அவ்வீட்டின் குட்டி இளவரசன் மாதவ்.

இரண்டு வாரங்களுக்கு பின் தன்னை இன்டர்வியூவிற்க்கு அழைத்திருந்த "பெஸ்ட் ஓப்ஷன் கன்ஸ்ரக்ஷன்ஸ்" தலைமை காரியாலயத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தான் அஸ்வின். செல்லும் வழி நெடுக அன்றைய தேர்வில் அவன் தேர்வாக வேண்டும் என்பதற்காக தன் குடும்பத்தார் செய்த செல்ல குறும்புகளை நினைத்து சிரித்தவாறு அவனது பயணம் தொடர்ந்தது.

விபூதியை அஸ்வினின் நெற்றியில் வைத்தவாறே அவனது பாட்டி

"கண்ணா நீ பயப்படாம போ. நம்ம பதினெட்டு பட்டி கருப்பண் உனக்கு காவலா இருப்பாரு"

"எங்க பாட்டி கம்பனி வாசலிலா இல்லாட்டி இன்டர்வியூ ரூம் வாசலிலா??"
என்று தன் பாட்டியை வம்பிழுத்தாள் கவி.

"அவ கிடக்குற. நீ கவலைப்படாத கண்ணா இந்த இன்டர்வியூல நீ தான் செலெக்ட் ஆவாய் சித்தி சொல்லுறேனு பார்த்துக்கோ"

" நீங்க எப்ப இருந்துமா ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சீங்க??" என்று தன் அன்னையை வம்பிழுத்தான் மாதவ்.

"டேய் மாதவா கொஞ்சம் பேசாம இரு. ஆல்த பெஸ்ட் அஸ்வின். நல்லபடியா இன்டர்வியூ அட்டன்ட் பண்ணு"

"தாங்யூ சித்தப்பா. தாத்தா எங்க சித்தப்பா?"

"அவர் காலையிலேயே கோவிலுக்கு போய்ட்டாரு. இன்னேரம் வந்திருக்கனும். சரி நீ கிளம்பு உனக்கு லேட்டாகுது"

"அச்சு அண்ணா ஆல்த பெஸ்ட். நீ என்னோட அண்ணானு எல்லாரும் சொல்லி பெருமை படுற அளவுக்கு இன்டர்வியூல பர்போம் பண்ணனும் ஓகேயா?" என்ற கவியிடம்

"உத்தரவு மகாராணி" என்றும்

"அண்ணா சும்மா தெறிக்க விட்டுருங்க" என்று சினிமா பாணியில் வாழ்த்திய தன் தம்பியிடம் விடைப்பெற்றவாறு அவனது அன்றைய நாள் தொடங்கியது.
அங்கே பெஸ்ட் ஓப்ஷன் கன்ஸ்ரக்ஷனில் இன்டர்வியூவிற்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்திருந்தான் அஸ்வின்.
அன்று அசிஸ்டன் மேனேஜருக்கான நேர்முகத் தேர்விற்கு அவனோடு சேர்த்து மேலும் ஏழு பேர் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தனர். இறுதி தேர்வு நாடியான அஸ்வின் நேர்முகத்தேர்வு நடக்கும் அறைக்கு அழைக்கப்பட்டான்.

அறையினுள் நுழைந்த அஸ்வினுக்கு சிறு அதிர்ச்சி. அவனது அதிர்ச்சிக்கான காரணம் அங்கு அவனை பரீட்சிட்க அமர்ந்திருந்தது ஒரு இளம்பெண் என்பது.
தன் முகத்தில் தோன்றிய பாவனையை நொடி நேரத்தில் மாற்றிக்கொண்டு தனது சீட்டை நோக்கி நகர்ந்தான்.
காலை வணக்கத்துடன் ஆரம்பமானது அவனது நேர்முகத்தேர்வு. அவனது ரெசுயூமி ஐ வாங்கி ஆரயத்தொடங்கிய அந்த இளம் பெண் அதிகாரி யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அஸ்வினுக்கு உண்டானது.

ஆனால் அவனது மூளையோ
"டேய் நீ இன்டர்வியூவிற்க்கு வந்துருக்க அந்த பொண்ணு உன்ன இன்டர்வியூ பண்ணுறானா அவளோட டெசிக்னேஷனும் அதுக்கு ஏத்த மாதிரி பெரிசா தான் இருக்கும் அதுனால கொஞ்சம் உன்னோட வாலை சுருட்டிகிட்டு இரு" என்று அறிவுறுத்த ஆர்வமாய் அப்பெண்ணை கவனிக்க தொடங்கிய விழிகள் தற்காலிகமாக அதற்கு விடுதலை விட்டது.

ரெசியூமியை பார்த்து முடித்த அப்பெண் அதிகாரி அஸ்வினின் கல்வித்தகைமை தொடர்பாகவும் அவனது வேலை அனுபவங்கள் தொடர்பான வினாக்கள் என்று சுமார் அரை மணிநேரம் நேர்முகத்தேர்வு நடைப்பெற்றது.

தேர்வின் முடிவில் அப்பெண் அதிகாரி

"வெல்டன் அஸ்வின். யூ ஆர் காலிவைட் இன்னாப் போ திஸ் ஜாப். ஷால் வீ சைன் த கண்ட்ராக்ட்??"

"தாங்கியூ மாம். ட்ஸ் மை பிளஷர்."

"பைன். ஒரு சின்ன கிளரிபிகேஷன். நீங்க அவுஸ்ரேலியா ல மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு அங்க ஒரு மல்டிநெஷனல் கம்பனில வேர்க் பண்ணி இருக்கிங்க. சோ சேலரியும் ஓகேவா தான் இருந்துருக்கும். பட் நீங்க ரிசைன் பண்ணிட்டு இங்க வந்ததுக்கான ரீசனை எஸ் யோர் எம்பிளோயரா நான் தெரிஞ்சிக்கலாமா??"

" ரொம்ப சீரியஸ்ஸா ஒன்றும் இல்லை மேம். கஷ்டமோ நஷ்டமோ குடும்பத்தோட இருக்கனும்னு தோன்றியது. அதான் அங்க இருந்து கிளம்பி வந்துட்டேன்."

"தட்ஸ் குட். நீங்க நாளைக்கே வந்து சார்ஜ் எடுத்துக்கோங்க. அன்ட் ஆல்த பெஸ்ட்"

"ஸ்யூவர்.தாங்ஸ் அகெயன்"
என்றவாறு வெளியேறத்துவங்கிய அஸ்வின் சட்டென நியாபகம் வந்தவனாக,

"எக்ஸ்கியூஸ்மி மேம். சாரி போ இன்டரப்டிங் யூ அகென்.வுட் யூ மைண்ட் டெல்லிங் மீ யூர் டெசிக்னேசன்"

"அயம் த சார் பர்சன் ஒப் திஸ் ஆர்கனைசேஷன்"

"அப்போ நீங்க தான் சாருணியா??"

"ஆமா.."

" தாங்கியூ மாம்" என்றவாறு வெளியேறிய அஸ்வினிற்கு பெருத்த ஆச்சர்யம்.

நேர்முக தேர்விற்கு தயாராகும் போது கம்பனி பற்றி தேடியறிய வேண்டி இருந்தது. அதனை "டெஸ்க் ரிசேச்" என்று அழைப்பர். அந்நேரத்தில் கம்பனி சார்மன் சாருணி என்று கம்பனி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மிஸ் என்று குறிப்பிட்டிருந்ததை வாசிக்க தவறிய அஸ்வின் சாருணி என்பவர் ஒரு வயசான பெண்மணி என்றே நினைத்திருந்தான். ஆனால் ஒரு இளம்பெண்ணே அந்த பெயருக்கு உரியவள் என்று அறிய நேர்ந்த போது அவனிடத்து பெருத்த ஆச்சர்யம். ஒரு சிறு பெண் இப் பெறும் தொழில் சாம்ராச்சியத்தை திறம்பட நடத்துவது பாராட்டப்படக்கூடிய விஷயமே. இதனை இயக்கும் அவளது ஆளுமையும் அறிவும் வியக்கத்தகு விடயமே. இவை அனைத்தும் அஸ்வினை அவளது அன்பிற்குறிய விசிறி ஆக்கியது. ஆனால் அஸ்வின் மதி மயங்கி நின்றது சாருணியின் கூர் பார்வையை கொண்ட விழிகளை தாங்கி நின்ற குழந்தைத்தன்மை நீங்கிய அந்த அழகிய வதனம்.

இவ்வாறு அவனது மனம் தடம்புரண்டு வேறு பாதையில் செல்ல மனதை கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக தன் நண்பனுக்கு அழைத்தான் அஸ்வின்.

"ஹேலோ வருண்"

"சொல்லுடா எப்போ வந்து சார்ஜ் எடுத்துக்க சொன்னாங்க??"

"டேய் என்னடா என்னமோ நீ இன்டர்வியூ பண்ணி வேலை குடுத்த மாதிரி கேட்குற??"

" இல்லைடா எப்படியும் நீ இந்த ஜாப்பிற்கு எலிஜிபள்னு தெரியும்.சோ கட்டாயம் அப்பாய்மன்ட் ஆடர் கிடைத்திருக்கும். அதான் அப்படி கேட்டேன்"

"இருந்தாலும் நீ என்னை இவ்வளவு நம்பக்கூடாது" என்று சிரித்த அஸ்வினை இடைமறித்து

"டேய் மொக்கை போடாம கேட்டதுக்கு பதிலை சொல்லு."

"ஓகே ஓகே கூல்டா. நாளைக்கே வந்து ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க டா. இந்த இன்டர்வியூ ஒரு வித்தியாசமான அனுபவம் டா. நீ சொன்னா நம்ப மாட்ட இன்டர்வியூ பண்ணது ஒரு சின்ன பொண்ணுடா."

"என்னது சின்னப்பொண்ணா?? வழமையா பெரிய போஸ்டுக்கான இன்டர்வியூவை அந்த கம்பனி சார்மன் சாருணி மேடம் தான் செய்வாங்க. அப்போ சாருணி மேடம் சின்னப்பொண்ணா??" என்ற அதிர்ச்சியுடன் கேட்ட நண்பனிடம்

"ஆமாடா எனக்கும் அதே ஷாக் தான்டா. ஆனா ஒன்னுடா அவங்க பயங்கர ஷாப். இன்டர்வியூல அவங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவ்வளவு ஹெவியா இருந்திச்சி. சொல்லி வேளை இல்லடா. இப்படி ஒருத்தரோட அட்மினிஸ்ரேஷனுக்கு கீழே வர்க் பண்ண போறோம்னு நினைத்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு."

"ஓகேடா கன்கிராட்ஸ். நான் பிறகு பேசுறேன். பாய். டேக் கேர்"

"ஓகேடா பாய்" என்றவாறு தன் அலைப்பேசியை அணைத்த அஸ்வின் அட்மிஷன் கடிதத்தை பெற சென்றான்.

அன்று மாலை தான் இன்டர்வியூவில் தேர்வானதை கொண்டாடும் முகமாக அஸ்வின் தன் குடும்பத்தாரை இரவு உணவிற்காக மூன்று நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான்.

அங்கு எதிர்பாராத விதமாக ஒரு கிளையன்டை சந்திப்பதற்கு சாருணியும் அதே விடுதிக்கு வந்திருந்தாள். தனக்கு ரிசவ் செய்திருந்த மேசையில் அமர்ந்து கிளையன்டிற்காக தனது காரியதரிசியும் உற்ற தோழனுமாகிய சஞ்சயுடன் காத்திருந்திருந்த போதே அஸ்வினின் குடும்பம் வருகை தந்தது.
அஸ்வினை கண்டதும் அவனை யார் என்று கண்டு கொண்டாள் சாருணி.

சில நிமிடங்களாக அவர்களையே கவனித்துக்கொண்டிருந்த சாருணியிடம்

"ஹேய் சாரு என்ன அவ்வளவு சீரியசா அந்த குடும்பத்தை கவனிச்சிகிட்டு இருக்க?? உனக்கு தெரிஞ்சவங்களா??" என்று வினவிய சஞ்சயிடம்

"அந்த பாமிலியில் இருக்க ஒருத்தரை இன்னைக்கு காலையில இருந்து தெரியும் தெரியும்"

"அவரு இன்னைக்கு இன்டர்வியூல செலக்ட் ஆன மிஸ்டர் தேஜஸ்வின் தானே??"

"ஆமா அவரு தான். அவரு அவுஸ்ரேலியாவில் இருந்து இங்க வெகேட் ஆகிருக்காறு. அதுக்கு ரீசன் கேட்டப்போ பாமிலி னு சொன்னாரு. இப்போ தான் அவரோட டிசிஷன் சரினு புரிகிறது." என்று சிறு வருத்தத்துடன் கூறிய தன் தோழியை ஆற்றும் முகமாக

"ஹேய் சாரு நீ என்ன நினைக்கிறனு புரிகிறது. நம்ம வாழ்க்கை எப்பவும் இப்படியே இருக்காது. நீ விரும்புற மாதிரி உன்னோட வாழ்க்கை மாறும். இவ்வளவு சின்ன வயதில் யாரும் உன்னளவிற்கு உயர்ந்தது இல்லை. உன்னை ரோல்மாடலாக பல பேர் நினைக்கும் பட்சத்தில் நீ இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட கூடாது. மாற்றம் ஒன்று தான் மாறாது மற்றது எல்லாம் மாறும். சோ நீ இதெல்லாம் நினைத்து மனதை குழப்பிக்காத.."

"நீ சொல்வதெல்லாம் புரியிது. ஆனால் குடும்பத்தின் அன்பு அரவணைப்பு இல்லாம வாழ்வது எவ்வளவு கொடுமைனு அதனை அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்." என்று கண்கலங்கிய சாருவை

"சாரு கூல்மா மிஸ்டர் மேதா வருகிறார் கண்ணை துடைத்துக்கொள்" என்று தன் தோழியின் கவனத்தை திருப்பினான் சஞ்சய்.

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN