காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 4

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நெடுந்துர பயணம். மனதை கொள்ளை கொள்ளும் பசுமையின் பிறப்பிடம். புற்களின் நுனியில் இருந்த பனித்துளியும் மாயமாகி இருந்தது கதிரவனின் உபயத்தால், மனதையும் உடலையும் தழுவி செல்லும் இதமான காற்று, இவற்றிற்கு மத்தியில் வண்டியை நிருத்தியிருந்தான் கேஷவ்.

அவனின் திடமான உருவத்திற்க்கும், ஆண்மையின் மிடுக்குடன் ஆறடிக்கும் குறையாது இருந்தவனின் மாநிறத்திற்க்கும், எடுப்பாய் நீலநிறத்தில் டீ ஷர்ட்டும் அதற்க்கு தோதாய் கருமை நிற ஜீன்ஸ் பேண்டும் அவனை வசீகரித்து காட்ட கற்றை மீசையின் கீழ் இது வரை கரை படிந்திடாத உதடுகள் என்று பறைசாற்றும் மென்மையான உதடுகளை குவித்து விசிலடித்தபடி பைக்கின் மீது சாய்ந்து அமர்ந்தவாறு , தலையை கலைத்தும் அதை சரி செய்தும் அந்த இடத்தை நோட்டம் விட்டவன் தன் அண்ணனையும் இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி பார்வையால் அளவிட்டான். என்ன இவன் ஒரேயடியா யோசிச்சிட்டு இருக்கான். இவனும் அப்பா போல ஏதாவது சொல்வானோ இவன் யோசிச்சா நமக்கு நல்லதில்லையே என்ற எண்ணம் மேலோங்க ஒரே இடத்தில் பார்வையை பதித்து இருந்த ஜெய்யின் நினைவை கலைக்கும் பொருட்டு "இப்போ சொல்லுடா என்ன விஷயம் இப்படி காடு மேடு தாண்டி கூட்டிட்டு வந்து இருக்க ஏதாவது லவ் மேட்டரா? " என்று அவனிடம் கண்ணடித்தபடி கேட்க

ஜெய் என்ற ஒருவன் இந்த உலகத்தில் இருந்தான் என்ற சுவடே தெரியாமல் சிலையாய் நின்றிருந்தான். ஜெயந்திற்க்கு கேஷவிடம் பேச நிறைய இருந்தது ஆனால் எப்படி ஆரம்பிப்பது எதை முதலில் கூறுவது அவன் எப்படி எடுத்துக்கொள்வான். இது சரிவருமா என்ற யோசனையுடன் கேஷவை பார்த்துக்கொண்டு இருந்தான். இதில் கேஷவ்வின் கேள்வி அவனை திகைப்புற செய்ய பேச்சற்று போயிருந்தான்.

அவனின் கேள்விக்கு விடை இல்லாமல் போகவே "என்னடா நான் எவ்வளவு சிரியஸான விஷயத்தை கேட்டுட்டு இருக்கேன் எதுவும் சொல்லாம என் முகத்தையே பாத்துட்டு இருக்க... நான் கேட்டதுக்கு ஆமா இல்ல அப்படின்னு எதாவது ஒரு பதில சொல்லனும். இல்லையா எதுக்கு கூப்பிட்டனாவது சொல்லனும் நீ பாட்டுக்கு அமைதியா என்னையே வச்ச கண்ணு வாங்காம பாக்குற... நான் அழகுன்னு எனக்கு தெரியும் பட் நீ பாத்திட்டு இருக்கறது எனக்கு வெக்க, வெக்கமா வருதுடா" என்று கேலியாய் பேசி "இதுக்கு தான் என்னை அவசரமா வரச்சொன்னியா?!?"... என்று ஜெயந்தை கடிந்துகொள்ள

பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி மரத்தில் சாய்ந்திருந்த ஜெயந்த் தம்பியின் கேலியில் புன்னகை அரும்பிட தன்னை நிதானபடுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான். "நான் உன்னை வரச்சொல்லிட்டேன். பட் இந்த விஷயத்தை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல!!!" என்றவன் சிறு இடைவெளி விட்டு "இது நம்ம லைஃப் பற்றியது அதான்" என்று இழுக்க ஜெயந்தின் தயக்கத்தை பார்த்த கேஷவ்

"என்னடா அடியெல்லாம் ரொம்ப பலமா போடுற!?!.... லைஃப் பத்தியா??? ஹோ... உன் கல்யாண விஷயமா டா?? அதுக்கு நான் ஹெல்ப் பண்ணணுமா?? அம்மாகிட்ட பேசுனுமா?? இல்ல நீயே பாத்திட்டியா??/ பொண்ணு யாரு??- உன் பின்னாடியே ஒன்னு சுத்திட்டு இருக்குமே மீனுவோட கிளாஸ்மேட் லெட்டர் கூட என்கிட்ட கொடுத்து உனக்கு கொடுக்க சொல்லுச்சே அந்த பொண்ணா பேரு கூட ம்.... அனிதா... அந்த பொண்ணுகிட்ட அவ்வளவு அட்வைஸ் பண்ணியேடா இதுல லவ் வேற புடிக்காதுன்னு சொன்னியே என்னடா மாட்டிக்கிட்டயா?!?". என்று அண்ணனின் திருமணத்தை பற்றி உற்சாகமாய் பேசிக்கொண்டே வண்டியில் இருந்து இறங்கினான்.

ஜெயந்திற்க்கும் கேஷவிற்ககும் 2 வருட இடைவெளி ஜெயந்திற்க்கு 29 வயது வீட்டில் எவ்வளவு வற்புறுத்தியும் அதற்க்கு பிடிக்கொடுக்காமல் தன் பிடியை தளர்த்தி இருந்தவன் லைஃப் என்று கோடிட்டு காட்டியதும் திருமணம் என்று முடிவு செய்துகொண்டு கொண்டாட்டத்துடன் பேசினான். கேஷவ்.

கேஷவ்வின் பேச்சில் அஷ்டகோணலாகியது ஜெய்யின் முகம். அவன் அகராதியில் காதலுக்கு இடமே இல்லை என்ற குறிக்கோளோடு இருப்பவன். பெற்றோர் பார்க்கும் பெண்ணையே மணமுடிக்கும் எண்ணம் கொண்டு இருப்பது தெரிந்தும் காதல் கல்யாணம் என்று கூறியதும். எரிச்சலுற்ற ஜெய் "டேய் டேய்.... போதும் டா உன் கற்பனைல தீய வைக்க... கொஞ்சம் நிறுத்து நீ பாட்டுக்கு பேசிட்டே போற?!?... மனுஷனோட நிலமை புரியாம!! என்னை பார்த்தா எப்படி தெரியுது?? லவ்வே புடிக்காதுன்னு தெரியும் வந்ததுல இருந்து லவ்வா? கல்யாணமான்னு ?கேட்டுகிட்டே இருக்கே....". என்று ஜெய் சிடுசிடுக்க

அதுவரையிலும் விளையாட்டு தனத்துடன் அண்ணனிடம் வம்பு செய்து கொண்டிருந்தவன் இப்போது கர்மசிரத்தையுடன் அவனை கவனிக்க தொடங்கி "சரி சரி ரொம்ப சீன் போடாத போதும் ஏதோ ரொம்ப டென்ஸ்டா இருந்தியே கொஞ்சம் ஜாலி மோடுக்கு கொண்டுவரலாம்ன்னு கேட்டேன். அப்போ வந்து போயின்னு இழுக்காம என்னை கூப்பிட்ட காரணம் சொல்றியா". என்று விஷயத்திற்க்கு வர வைத்தான்.

"கேஷவ் நான் சொல்றது உனக்கு தப்பா தெரியலாம்... பட் வேற வழியும் இல்ல... என்னோட கனவும் இதுல இருக்கு" என்றான் ஜெய்.

என்ன சொல்ற ஜெய்!?!... உன்னோட கனவா? நீ எதையுமே புரியுரா மாதிரி சொல்லமாட்டியா? இப்படி சுத்தி வளச்சி சொல்லாம நேரடியா விஷயத்துக்கு வரியா...". என்று கோபமாய் வார்த்தைகைகள் வெளிபட

தம்பியின் தோள்களின் மீது கையை வைத்தவன். "மலேஷியால நடக்க போற ஏஷியன் அமெச்சூர் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்ல ( ASBC ) கலந்துக்குற சேன்ஸ் கிடைச்சிருக்கு டா... நான் இன்னும் ஒரு வாரத்துல அங்க போக போறேன்." என்பதை கூற.

வாவ்.... காங்ராட்ஸ்ணா செம எப்போ தெரிஞ்சிது? வீட்டுல சொல்லிட்டியா என்று சந்தோஷமாக கை குலுக்கி கட்டி அணைத்தவன் இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை ஏன்டா இப்படி தயங்கி தயங்கி சொல்ற இதுல
நான் தப்பா நினைக்க என்ன இருக்கு சூப்பர் சான்ஸ்டா என்று கேஷவ் கூற அமைதியாக இருந்தான் ஜெய்.

ஜெய்... நான் கேட்டேன் வீட்டுல சொல்லிட்டியான்னு என்று அழுத்தமாக அவனிடம் கேட்டும் எதுவும் பேசாமல் மறுபடியும் அமைதியாகிய அண்ணனை என்னடா அடிக்கடி கனவுக்குள்ள போயிடுற ஒரே யோசனையாவே இருக்கியே ! அதான் நீ நினைச்சது நடக்க போகுதே ஏன்டா இவ்வளவு சேடா ஃபேஸ வைச்சிகுற இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா ரொம்ப ஹேப்பியா இருக்கு டா சந்தோஷமா இருடா என்று ஜெய்யின் கன்னம் தட்டி கூற

அவன் கைகளை பிடித்த ஜெய் அது வந்து கேஷவ் உன்னால ஒரு ஹெல்ப் ஆகனும்.... உன்னால மட்டும் தான் அந்த ஹெல்ப் செய்யமுடியும் என்று அவனிடம் பீடிகை போட

கேள்வியாய் ஜெய்யின் முகத்தையே பார்த்திருந்தவன் ஷப்பா அப்போ நீ இன்னும் முக்கியமான விஷயத்தை பத்தி சொல்லலியா டா ? ப்ளிஸ் தயவு செய்து விஷயம் என்ன? என்னனு சொல்லிடு உனக்கு போய் மாட்டேன்னு சொல்வேனா சொல்லுடா என்ன செய்யனும் என்று முடியை கோதினான் கேஷவ்.

நீ ஒரு 2 மந்த் நம்ம ஃபேக்டரிய பாத்துக்கனும் என்று பட்டென்று கூறிவிட

அவன் கூறியதும் என்னது நானா? என்று அதிர்ந்து போய் அப்படியே நின்றான் கேஷவ் .

ம் நீதான் நீயேதான் என்று அழுத்தமாய் கூறினான் ஜெய்.

ஜெய் இறக்கிய குண்டில் தடுமாறிய கேஷவ் என்ன ணா நீதான் பாத்துக்குறியே அப்புறம் நான் என்ன செய்யனும் இன்னும் ஒன் வீக்ல எனக்கு wild life cover page contest வெச்சி இருக்கங்கணா என்றான் கேஷவ்.

இதுவரையிலும் ஜெய் ஜெய் என்று வார்த்தைக்கு வார்த்தை அதிக மாரியாதையுடன் அழைத்தவன். இப்படி ஒரு வேட்டை போட்டதும் இப்போழுது அண்ணாவாகி விட்டான். ஒரு வார்த்தை முடிப்பதற்க்குள் அடுத்த வார்த்தை அண்ணா வந்து விழுந்தது அதை கவனித்த ஜெய்யே அதிசயத்து போய் தம்பியை நினைத்தே உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். (பலே பலே நல்லா வருவிங்கடா நீங்க )

நீ செய்யறத்துக்கு அங்க நிறைய இருக்கு கேஷவ் இந்த 2 மாசத்துக்கு நீதான் முதலாளி பீளீஸ் எனக்காக டா என்று அவனிடம் இறங்கி பேச

அது இல்லடா காண்ட்டஸ்ட் இருக்கே

நீ அந்த காண்டஸ்டுல கலந்துக்கலாம் ஓகே பட் இந்த ஒன் வீக் என்னோட ஆபீஸ் பேக்ரில வந்து என்னன்னு எப்படின்னு கொஞ்சம் கவனிச்சிக்கிட்டா போதும் . எனக்கு உன்னை விட்டா வேற நம்பிக்கையான ஆள் யாரும் இல்லடா... டெய்லி 50 லாக்ஸ் வரை டர்ன் ஓவர் ஆகுர இடம் அப்பாவை பார்த்துக்க சொல்லாம்னா அவருக்கு வயசாகிடுச்சி ஓய்வும் தேவை யாரையும் நம்பி விட முடியாது இது நம்ம உழைப்பில உருவானதுடா அதனாலதான் உன்னை கேட்டேன்.

அண்ணனுக்காக மனம் மாறியவன் ஜெய் நல்லா நியாபகம் வைச்சிக்கோ ஒன்லி 2 மந்த் தான் அதுக்கப்புறம் நான் கிளம்பிடுவேன் புரியுதா?

எனக்காக இவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ண போற உனக்காக நான் சொன்ன வார்த்தைய காப்பத்துவேன் டா நிச்சயம் 2மாசத்துல திரும்பி வந்திடுவேன் என்றான் ஜெய் என்கின்ற ஜெயந்த்.

அவன் தம்பியிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவானா? காலம் பதில் சொல்லும்.

இருவரும் வீடு நோக்கி பயணம் ஆக ஜெய் எவ்வளவு பெரிய சேன்ஸ் கிடைச்சிருக்கு ஒரு டீரிட் கூட இல்லையா? என்று கேஷவ் கேட்டிட உனக்கு இல்லாததா உனக்கு என்ன வேணுமோ கேளு கேஷவ் என்றதும் ரொம்ப பெருசாலாம் வேனா வழியில் தென்பட்ட ஒரு காபிஷாப்பை காண்பித்து இப்போதைக்கு ஒரு காபி போதும்டா என்றதும் அந்த ஷாப்பிற்க்கு சென்றனர்.

பேசியபடி ஷாப்பிற்க்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த காலி டேபிலின் இருக்கையில் அமர்ந்து இருவருக்கும் காபி ஆர்டர் செய்து விட்டு அவனின் கான்டஸ்டை பற்றி பேசலாயினர்.

அப்புறம் கேஷவ் எப்போல இருந்து போட்டோ ஷூட் ஸ்டார்ட் பண்ண போற?

இன்னும் டூ டேஸ்ல ஜெய் .

சரி நல்லா பண்ணு நீ ஷூட் பண்ணி முடிச்சதும் சொல்லு ...கார்திக் கிட்ட சொல்றேன் உனக்கு என்ன தேவைனாலும் அவன் ஹெல்ப் பண்ணுவான் ஓகே.

ம் பாத்துக்குறேன் ணா நீ போறத பத்தி எப்போ வீட்டுல சொல்லபோற?

போனதும் சொல்லனும் டா அப்பாதான்டா எதிர்பார்த்துட்டே இருந்தார். அவருக்கு இது ரொம்ப சந்தோஷமான விஷயம் டா
என்றான்.

இவன் ஆர்டர் செய்த காபி வரவும் சர்வர் அதை டேயிளில் வைக்க அது கை தவறி ஜெய்யின் மீது சிதறியது .

ஹோ... ஷிட்

சாரி சாரி சார் என்று சர்வர் பதற

இட்ஸ் ஓகே இட்ஸ் ஒகே என்ற ஜெய் என் கை தவறிதான் பட்டுச்சி பரவயில்லை என்றான் .

கிளின் பண்ணிட்டு இப்போ வந்துட்றேன் கேஷவ் என்று ரெஸ்ட் ரூம் சென்றான்.

ஹே உனக்கு விஷயம் தெரியுமா நம்ம ஷீலா இன்னைக்கு காலைல நம்ம காலேஜ் சீனியர் ராஜீவ கல்யாணம் பண்ணிக்கிட்டாலம் என்றாள் ஒருவள்.

இவன் அமர்ந்திருந்த டேபிளின் பக்கத்தில் இருந்த பெண்கள் பேசிக்கொள்வது அவன் செவிகளில் நன்றாக விழுந்தது.

ஆமா இன்னைக்கு அவளுக்கு நிச்சயதார்த்தம்ல சொன்னாங்க கால்யாணம் எப்படி என்றாள் மற்றொரு பெண்.°

அதை பிடிக்காமதானடி இந்த கல்யாணமே நடந்துச்சி அவ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம் நல்ல வேள இன்னொருத்தர கல்யாணம் பண்ணிருந்தா அவ நிலமை என்ன ஆகியிருக்கும்.

என்னடி இப்படி பண்ணிட்டா நான் இதை எதிர்பாக்கவே இல்லடி என்றாள் மற்றொரு பெண்.

பின்ன என்னடி காதலிக்கும் போது இருக்க தைரியம் கல்யாணம் பண்ணும்போதும் இருக்கனும். அவ காலிச்சவனையே வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ சாதிச்சிட்டா இல்ல என்றது வேறு யாருமல்ல அவளுக்கு உதவி செய்த அதே கவி தான்.

இதை காதில் வாங்கிய கேஷவ்வின் முகம் இறுகியது .கண்கள் கோவத்தில் சிவந்தது .அவனுக்கு சொல்லமுடியாத வலி நேராய் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு கோவமாக சென்றான்.

ஹே இவன் அவன்ல ...என்று மனதிற்குள் ஒட்டிய பார்கவி சுதாரிபதிற்க்குள் பார்வையால் எரித்தவன்.

நீங்கள்ளாம் பொண்ணுங்க தானே என்றான் அவர்களை பார்த்து....

ஏய் மிஸ்டர் யாரா பாத்து இப்படி கேள்வி கேக்குறிங்க கவி கோவமாய் கேட்க

வேற யாரையும் இல்ல உங்களை பாத்துதான் கேக்குறேன் ... உங்களுக்கு நீங்க நினைச்சவனையே கல்யாணம் பண்ணிக்கனும்.... அப்படி பண்ணணும்னா எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவிங்கல்ல ஆதனால உங்கள நம்பி படிக்க வைச்சி ஆளாக்கின உங்க குடும்பம் என்ன ஆனாலும் பரயில்லை ...அது இருந்துச்சா செத்துச்சான்னு கூட பாக்கமாட்டிங்கல்ல... என்று ஆவேசமாய் பேசினான்.

தோழிகள் நால்வரும் அதிர்ச்சியாய் அவனை பார்த்திருக்க பார்கவியே வாயை திறந்தாள். ஹே மிஸ்டர் இது எங்க விஷயம் நாங்க எங்க பிரண்ட பத்தி பேசிட்டு இருக்கோம் இதுல நடுவுல உனக்கு என்ன வேலை.

நல்லத யாரு வேனுமாலும் சொல்லலாம். இவன் சொல்லனும் இவன் சொல்ல கூடாதுன்னு எதுவும் இல்ல சரி காதலிச்சி வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணயம் பண்ணிக்கறிங்க ...முதல்ல நீங்க நல்லா இருக்கிங்களா ? அவன் நல்லவனா கெட்டவனான்னுகூட தெரியாம அவனை நம்பி போயிட்டு சீரழிஞ்சி வரும்போது தான் புரியும் அவன் தப்பானவன்னு அதுக்கு அப்புறம் புரிஞ்சி என்ன லாபம்.

இதுக்கு மேல நீங்க பேசினிங்க மிஸ்டர் நல்ல இருக்காது. அது அவங்களோட இஷ்டம் உங்கள சுத்தி இருக்கவங்களையும் உங்களையும் நல்லா பாத்துக்கோங்க சரியா வாங்கடி இங்க இருந்தா ஏதாவது பேசிட்டே இருப்பான்.

அந்த இடத்தை விட்டு வெளியேற இருந்தவளை ஏய் நிறுத்துடி ...நீ நீதானே காலைல வந்து என்னை இடிச்சவ நீதான் இதுக்கு தலைவியா சரி அவங்க அதான் உன் பிரண்ட் போனாங்கல்ல அதுக்கு நீதான் காரணமோ என்று ஏற இறங்க அவளை பார்த்தான்.

அவன் பார்த்தும் அவனை கோபமாய் முறைத்தாள் பார்கவி.

என்ன முறைப்பு நீங்க போன பிறகு அந்த குடும்பமும் தலை நிமிர முடியாத அளவுக்கு இந்த சமூகம் உங்கள பத்தி தப்பா பேசுது . அந்த ஏச்சையும் பேச்சையும் தாங்கமுடியாம வீட்ட விட்டு வெளிய வர பயந்துக்கிட்டு தற்கொலை பண்ணிங்கிட்டவங்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும் உங்களோட சந்தோஷம் உங்க வாழ்க்கை தானே முக்கியம்ன்னு போறிங்க இதுல அவ செஞ்சது நல்லதுன்னு சப்போட்பண்ணி பேசுர நீயெல்லாம் ஒரு பொண்ணா
என்று அவன் வெறுப்பாய் பேசிட

இன்னும் இவளுக்கு கோபம் தலைக்கு ஏற ஹே மிஸ்டர் மைன்ட் யுவர் லாங்வேஜ் யாரோ பண்ணதை பத்தி பேசினா உனக்கு என்ன வந்தது உன்னை பத்தியோ உன் குடும்பத்தை பத்தியோ பேசலையே என்று இவளும் பேச..

நீ பேசி பாரு அப்புறம் தெரியும் .

என்ன தெரியும் சொல்லு என்ன தெரியும் ..... சரி காதலை வீட்டுல சொன்னா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களா ? ஜாதி மதம் அந்தஸ்த்துன்னு எதிர்ப்பு சொல்லி அவனை மறந்துட சொல்றாங்க இல்லன்ன தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டி வலுக்கட்டாயமா ஒரு கல்யாணம் என்ற பேர்ல சாக்கடையில தள்ளி விட்டுறாங்க சிலர் வாழ்க்கை நல்லா இருக்கலாம் ஆனா பலபேர் வாழ்க்கை நரகமாதான் இருக்கு . முதல் காதலை மறக்கவும் முடியாம இருக்கிற வாழ்க்கையில சாந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாம இருக்காங்க தெரியுமா? என்று இவளும் சண்டைக்கு போக

ஏய் வேனாம்டி எல்லாரும் பாக்குராங்க எதுக்கோ பேசபோய் எங்கயோ முடியுது பீளீஸ் வாடி என்று தோழிகள் அவளை அழைக்க..

ஏய் விடுடி சார் பாட்டுக்கு பேசிட்டே போறாரு அவர சும்மா விட சொல்லுறிங்களா அவருக்கு கொஞ்சம் அர்ச்சனையாவது பண்ண வேண்டாம் என்று அவர்களை அடக்க

சரி என்ன என்ன பண்ணுவ இங்க தான் இருக்கேன் என்ன பண்ணணுமோ பாண்ணு பாக்கலாம் என்று இவனும் அங்கயே அசராமல் நிற்க தோழிகள் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சென்றனர்.

அவர்கள் சென்ற திசையை பார்த்து இருந்தவனை பின்னிருந்து தொட்டான் ஜெய். திரும்பிய கேஷவ் ஜெய்யை கண்டதும் நீயா என்றான்... என்னடா இங்க நிக்கற யாரவது தெரிஞ்சவங்களா என்று வாசல் வழியை பார்த்தான் ஜெய்.

ஒன்னுமில்ல ஜெய் சும்மாதான் இங்க வந்தேன்.... என்றவன் அவர்களின் டேபுளின் அருகே சென்றான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN