நிரலி -1

அருண் தே கோ

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் முதல் வாரிசு கண்டிப்பாக ஆண் பிள்ளையாய் தான் இருக்கும் என்கிற ஆர்வத்தோடும் எதிர்பார்போடும் இருந்த நேரத்தில் எது செய்தாலும் உங்களுக்கு எதிர்மறையாய் தான் செய்வேன் என்ற நோக்கோடு கர்பத்திலே அனைவர்க்கும் போக்கு காட்டி பெண்ணாய் இவ்வுலகுக்கு பிறந்த பெண்ணிவள்... பெண் பிள்ளை என்றால் முகம் சுளிக்கும் காலத்தில் பிறந்ததால் தானும் பெண் தான் என்பதை மறந்து அந்த வீட்டின் பாட்டி கூட அவளை தொட்டு தூக்கவில்லை..


பிள்ளை பெற்றுடுத்த களைப்பில் தாயவள் மயக்க நிலையில் இருக்க செவிலியர் வந்து பெண் பிள்ளை பிறந்திருக்கு என கூற... பொட்ட புள்ள தானா போய் அவ பக்கத்திலே போடு வீட்டு வம்சத்தை தழைக்க வைக்க சிங்கக்குட்டி பெத்து போடுவானு பார்த்தா இப்படி சொத்தை அழிக்க பொட்ட புள்ளைய பெத்து போட்டு இருக்கா என .. பெண்பிள்ளை பெற்றெடுத்த ஆண் சிங்கத்தின் தாயார் கூற.... யாரும் என் பிள்ளைய தூக்க வேண்டாம் என் கையில் கொடுங்க என வந்து நின்றார் இனி வளர்ந்து அனைவரையும் ஆட்டி வைக்க போகும் பெண் சிங்கத்தை பெற்றெடுத்த ராஜா....


எனக்கு இன்னும் எத்துணை பிள்ளை பெண் பிள்ளை பிறந்தாலும் இதே கர்வத்தோடு நான் சுமப்பேன் என் வாரிசு என்று...பெண் பிள்ளை பிடிக்காத யாராக இருந்தாலும் என் பிள்ளையை ஒருநாளும் தூக்கி கொண்டு பாராட்டி சிரட்ட வேண்டாம்... வளர்ந்து என்னை கண்டிப்பாக தலைநிமிர வைக்க போகும் பெண் பிள்ளையே எனக்கு போதும் என கர்ஜித்தவர் யாரும் இங்கு நிற்க தேவை இல்லை உங்களையும் சேர்த்து தான் என தன் தாயாரை பார்த்து கூற அனைவரும் ஏதும் கூற முடியாமல் அப்படியே நின்றனர்...


தன் பிள்ளை தூக்கி உச்சி முகர்த்தவர்..குழந்தையை செவிலியரிடம் கொடுத்து விட்டு .. தன் மனைவியை பார்க்க சென்றார் அங்கு மயக்கம் தெளிந்து படுத்திருந்த சித்ரா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கொண்டிருந்தது.. அதை கண்ட ராஜாவின் மனம் கனத்து போனது.. என்ன டா ஏன் இப்படி கண்ணீர் விட்டுகிட்டு இருக்க என அவள் அருகில் மண்டியிட்டு தன் கரம் கொண்டு அவளது கண்ணீரை துடைக்க...


பெண் பிள்ளை பிறந்தா அவளோ பெரிய தவறாங்க... ஆண் பிள்ளை எத்துணை பிறந்தாலும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒரு பெண் பிள்ளைய தேடி தானே போகணும்.... என கண்ணீரோடு கேட்க ராஜாவிற்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை வெளியில் தன் தாயார் பேசியது தன் மனைவியின் காதில் விழுந்து விட்டது என்பது மட்டும் புரிந்து போனது..


தன் மனைவியின் கேள்வியால் கலங்கிய தன் மனதை மறைத்து கொண்டவர்.. இப்போது தன் ஆறுதல் மட்டும் தான் மனைவியின் சோகத்திற்கு மருந்து என்பதை உணர்ந்து... நாளைய தலைமுறைய தாங்கி நிக்க போற தங்கமகள பெத்தெடுத்துட்டு இப்படி கண்ணீர் விடலாமா... பிள்ளையை வளர்க்க போறது நாம அதுக்கு நல்லது கெட்டது சொல்லி எதார்த்தமான வாழ்க்கை சொல்லி தரப்போறது நாம.... இது மட்டும் இல்லை இன்னும் நமக்கு பொறக்க போற எத்துணை பிள்ளை பெண் பிள்ளையா இருந்தாலும் சந்தோசத்தோடு நாம தங்குவோம் அதுக்கு ஏன் நீ கலங்குற...


இன்னைக்கு இல்லை என்னைக்கும் நான் எனக்கு பையன் பொறந்து இருந்தா நல்லா இருக்கும்னு நான் நெனச்சு உங்கிட்ட ஒருநாளும் சொல்ல மாட்டேன்... இல்லை அது எல்லாம் மறந்து என்னைக்காவது என் வாயால நான் எதாவது சொல்லி உன்னை கஷ்ட படுத்தினா அன்னைக்கு நீ கண்ணீர் விடு... உனக்கு ஆம்பளை பிள்ளை பிறக்கலைனு இல்லை இப்படி ஒரு ஆம்பளைய கல்யாணம் பண்ணிட்டோமேன்னு நெனச்சு என ராஜா கூற சித்ரா மொத்தமாய் ஆடி போனால்..


என்னங்க நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க நான் ஏதோ மனசு கஷ்டப்படவும் அப்படி கேட்டுட்டேன் இது உங்க மனச இவளோ கஷ்ட படுத்தும்னு தெரில என கூற... சரி இத விடு இனி இதுபோல ரெண்டு பேருமே பேசக்கூடாது என கூறிவிட்டு மனைவி தூங்கும் வரை அவர் அருகில் இருந்து விட்டு வெளியில் கிளம்பினார்.....


வெளியில் சென்றவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை சந்தோசமா அனைவர்க்கும் இனிப்பு கொடுத்து கூறி மகிழ்ந்தார்... நண்பர்கள் சிலர் வாழ்த்து கூற சிலர் பெண் பிள்ளைக்கு ஏன் இவ்வளவு அலப்பறை என கேட்க கொஞ்சமும் அசராமல்... பெண் இல்லை என்றால் நீ இல்லை என்பதை மறந்து விடாதே என கூறி சென்றார்... வீட்டில் அனைவரும் ஏதோ பறிகொடுத்தது போல் அமைதியாய் இருக்க யாரையும் கண்டு கொள்ளாமல் தன் மகளின் பெயர் சூட்டு விழாவை விமர்சையாக கொண்டாட விரும்பினார்..


அதற்கு தேவையான எல்லாம் செய்து விட்டு சுற்றி உள்ளவர்களுக்கு முக்கியமான நபர்களுக்கும் அழைப்பு விடுத்தார்... அவரின் மகிழ்ச்சி கண்டு சித்ராவின் முகமும் மலர தான் செய்தது... ராஜா தன் மனைவியிடம் எனக்கு ஒரே ஒரு அனுமதி வேண்டும் என கூறி அவரை மடக்கி பிள்ளைக்கு பேர் மட்டும் நான் தான் வைப்பேன் என்று கூறி சம்மதம் வாங்கி கொண்டார்... ராஜாவிடம் சித்ரா எத்துணை முறை கேட்டாலும் பெயர் கூற மறுத்துவிட்டார் வைக்குற அன்னைக்கு பாரு என கூற... சித்ராவிற்கும் ஆர்வம் இருந்தாலும் கணவன் முகத்தில் இருக்கும் ஆர்வத்தையும் மகிழ்ச்சியும் கண்டு அதற்கு மேல் கேட்காமல் விட்டுவிட்டார்..


ராஜாவிற்கு அதிகம் இறை நம்பிக்கை இல்லாததால் ஐயர் அழைத்து புண்ணியதானம் செய்து பெயர் சூட்டுவதில் விருப்பமில்லை என்று கூற.. சித்ராவோ அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று மட்டும் ஒரு அபிப்ராயம் கூற எங்கு தன் கணவன் மறுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் அவரை பார்த்து கொண்டே கூற தன் மனைவியின் விருப்பபடியே செய்யலாம் தனக்கு நம்பிக்கை இல்லை என்று அவள் நம்பிக்கை அழிக்க வேண்டாம் என்று நினைத்து கொண்டு...


அமர்ந்து பேசி கொண்டிருந்தவர் சட்டென எழுந்து மஹாராணியரின் உத்தரவு ஏற்றுக்கொள்ள படுகிறது என்று வளைந்து கொண்டு கூற இருவரும் சிரிக்கலானார்.. தன் பெற்றோர்கள் சிரிப்பதை கண்ட பெண்ணவள் தன் கைகளை ஆட்டி ஆட்டி அவளும் தன் பொக்கை வாயால் சிரிக்க... ராஜா தன் மகளை தூக்கி மடியில் வைத்து கொண்டு கொஞ்ச தொடங்கினார்..


பெயர் சூட்டும் நாள் வர வந்தோர்கள் அனைவர்க்கும் திருப்தியாகா உணவு கொடுக்க எண்ணி ஆள் வைத்து தட புடலாக சமைக்க கூறிவிட்டார்.. மனைவியின் கட்டளை படி சைவம் மட்டுமே... அனைவரும் வந்து விட பெற்றோர்கள் மடியில் அமர்த்தி ஐயர் சொல்லும் மந்திரத்தை கூறி புண்ணியதானம் செய்து.. குழந்தை வாயில் இந்த சர்க்கரை தண்ணி ஒரு சொட்டு விட்டு காதில் பெயர் கூறுங்கள் என்று கூற..


கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொட்டு குழந்தையின் நாக்கில் வைக்க ராஜா தன் குழந்தையின் காதில் நிரலி என்று கூற அடுத்த முறை சித்ரா கூறி மீண்டும் ராஜா கூறி... மூன்று முறை குழந்தையின் காதில் கூறி பெயர் சூட்டினர்....... பெற்றோர்கள் பெயர் சூட்ட அவளுக்கு என்ன புரிந்ததோ தன் பல்லில்லா வாயை திறந்து சிரித்து கொண்டே இருந்தது....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN