தீராக் காதல் திமிரா-4

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 4

அதிதி ...."இந்த அப்பாடக்கரு எப்ப தான் வருவான்?" என்று வம்சியை எதிர் பார்த்து கடுப்புடன் அமர்ந்திருக்க....


அதேநேரம்.....


"எனக்கு இப்போ
கல்யாண வயசு தான்
வந்துடுச்சு டி...
டேட் பண்ணவா இல்ல...
சாட் பண்ணவா...
உன்கூட
சேர்ந்து வாழ ஆசை
தான் வந்துடுச்சு டி...
மீட் பண்ணவா....
இல்ல வெயிட் பண்ணவா....
அவ முன்னால நிக்குற
அவ கண்ணால சொக்குற
நான் தன்னாலே சிக்குற
பின்னால சுத்துற...
உன்னால சாவுற..."

என்று பாடிக்கொண்டே பிரேக் டான்ஸ் ஆடியவாறு கீழிறங்கி வந்தவன் சாட்சாத் சுஜித் தான்....

சற்று நேரத்திற்கு முன்பு சுஜித்தின் மொபைலுக்கு அழைத்த அவனின் அம்மா சௌந்தரவல்லி...
வம்சி கிருஷ்ணாவுக்கு பெண் பார்த்திருப்பதாகவும்...அந்தப் பெண்ணும் இவ்வூரில் தான் இருப்பதாகவும் சொன்னவர்... திருமணத்திற்கு வம்சி கிருஷ்ணாவை சம்மதிக்க வைத்து அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கும் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்து இருந்தார்.

அண்ணனுக்கு திருமணம் முடிந்து விட்டால் அடுத்து தனக்குத்தான் என்ற குஷியில் குளித்துவிட்டு துண்டுடன் ஆடிக்கொண்டே கீழிறங்கி வந்தவன்..... அதிதியை கவனிக்கவில்லை.


ஹாலுக்கு பக்கவாட்டில் சோபாவில் அமர்ந்திருந்தவள் மாடிப்படிகளில் ஆடிக்கொண்டே வந்தவனை பார்த்துவிட ..... "கருமம்... கருமம்"
என்று தலையில் அடித்துக் கொண்டாள்.


சுஜித் கீழே இறங்கி வந்தும்...
தன் அலப்பறையை நிறுத்தாமல் 'எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி' என்று ஆடிக்கொண்டே.... சமையலறையில் நின்றுகொண்டிருந்த பாட்டியிடம்... "கிராணி ஒரு காபி..." என்று நஸ்ரியா ஸ்டைலில் சொல்லிவிட்டு திரும்பி... அதிதியை பார்க்க அவளோ ஆர்யாவை போல் பல்லை காட்டாமல் உர்ரென்று முறைத்தாள்.


அவளை குறுகுறுவென்று பார்த்த சுஜித்.....
"ஏய் யார் மேன் நீ??? நடுவீட்ல உர்ருன்னு உக்காந்திருக்க...." என்று கேட்க....


சமையலறையில் இருந்து வந்த பாட்டியோ... "நம்ம பெரிய தம்பியை தேடி வந்து இருக்குப்பா தம்பி...." என்றுவிட்டு இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு சென்றார்.


"அண்ணா ஆபிஸ் ஒர்க் சம்பந்தமா யாரையும் வீடு வரைக்கும் கூப்பிட மாட்டானே?!..." என்று காபியை உறிஞ்சிக்கொண்டே சுஜித் சந்தேகமாக கேட்க....


அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உக்கிர பார்வை பார்த்தாள் அதிதி.


பின்னே ஆணோ பெண்ணோ யார் வீட்டிற்கு வந்தாலும் இப்படிதான் அரையும் குறையுமாக நின்றுகொண்டு கேள்வி கேட்பதா?


கையை முறுக்கிக் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் அமர்ந்திருக்க....


அவள் பொறுமையைச் சோதிப்பது போல்....
"என்ன மேன் இவ்வளவு கேக்குறேன் பதில் சொல்ல மாட்டேங்குற.. ஓஓ காது கேட்காதா? காது டமாரமா போயிட்டா??" என்று அவன் சைகையில் கேட்டது தான் தாமதம் .... எகிரி விட்டாள் அவள்......
"டேய் அர லூசு யாருக்குடா காது கேட்காது? அரைகுறையா நின்னுட்டு நீ கேள்வி கேட்டா நான் பதில் சொல்லனுமா? மூட வேண்டியத மூடிட்டு வந்து கேளுடா பரதேசி..."


"என்ன மேன் நீ இப்படி அசிங்கமா பேசுற???" என்று சுஜித் வாயை பிளக்க....


கொலைவெறியுடன் அவனை முறைத்த அதிதி.....
"டேய்ய்ய்ய் டோமர் தலையா... மாங்கா மடையா.. யார்டா மேன்? யாரு மேன்? என்ன பாத்தா எப்படி இருக்கு?? அவங்க வயசானவங்க... கண்ணு சரியா தெரியாது சரி.... உனக்கு கண்ணு நல்லா தானே தெரியுது ... இல்லன்னா அதுவும் பியூஸ் போயிட்டா??அட்லீஸ்ட் வாய்ஸ் வச்சு கூட உன்னால கண்டுபிடிக்க முடியலையா? வெண்ண" என்று தனது தொப்பியை கழற்றி விட்டு முடிந்து வைத்திருந்த தன் கூந்தலை விரித்து விட்டாள் அவள் ....


அவ்வளவு நேரம் தன் முன் நின்று கொண்டிருப்பது ஆண் என்று நினைத்து துண்டுடன் அசால்டாக நின்று கொண்டிருந்த சுஜித்.... தன் மார்பை இரண்டு கைகளாலும் மறைத்துக்கொண்டு....
"ஐயோ பொண்ணா நீ ...அச்சச்சோ இப்படி சேம் சேம் பப்பி சேம் ஆகிட்டே சுஜித்துஉஉஉ...." என்று கத்திகொண்டே உடைமாற்ற அறைக்கு ஓடினான்....


அவன் திரும்பி வரும் பொழுது வம்சி வந்திருக்க அவளைக் காணவில்லை ....


சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்த வம்சி அருகில் அமர்ந்தவன்....
"ப்ரோ இங்க ஒரு லாங் ஹேர் பொண்ணு உன்ன பார்க்க வந்திருந்தா..."என்று சொல்ல...
" ஆமா ஆமா வந்தா... வந்து உன்ன டேமேஜ் பண்ணிட்டுப் போயிட்டா..."


"ப்ரோ என்ன சொல்ற நீ..." என்று சுஜித் திருதிருவென்று முழிக்க....


"டேய் டேய் ரொம்ப நடிக்காதடா ...அவ ஆல்ரெடி உன்னோட வண்டவாளத்த தண்டவாளத்துல ஏத்திட்டு போயிட்டா அவளே ஒரு பஜாரி ..... அவ முன்னாடி போய் அரைகுறையா நின்னு டான்ஸ் ஆடி இருக்கியே...ஹா ஹா... உன்ன நல்லா கழுவி ஊத்திட்டு போறா" என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க.....


"ஓஹோ அப்போ அந்த பொண்ணு பஜாரியா ப்ரோ..." என்று சுஜித் கேட்க....
"ஆமாடா..." என்ற வம்சி..
மீண்டும் லேப்டாப் பக்கம் தலையை திருப்பி கொண்டான்.


"அப்ப பஜாரி கூட எல்லாம் உனக்கு என்ன கனெக்சன் ப்ரோ? உன்ன மீட் பண்ண வீடு வரைக்கும் வந்துட்டு போயிருக்கா..." என்று தன் அண்ணனை சந்தேகமாக பார்த்தான் சுஜித்.


இப்பொழுது திரு திருவென்று முழிப்பது வம்சியின் முறை ஆயிற்று.....


அவர்களது முதல் சந்திப்பைப் (சண்டையைப்) பற்றி சொன்னால்.... ஒரு வாரம் அதை வைத்தே கலாய்த்து தள்ளி விடுவான் என்று நினைத்த வம்சி மனதில் சட்டென்று ஒரு யோசனை தோன்ற.... அதிதி பணத்தை வாங்கிவிட்டு கொடுத்துவிட்டு சென்ற வாட்ச்சை அவனிடம் காட்டி...
"மிஸ் பண்ணிட்டேன்... குடுத்துட்டு போக வந்து இருக்கா..." என்று அப்போதைக்கு சமாளித்து வைத்தான்.
ஆனால் அதை சுஜித் நம்பவில்லை என்பது வேறு கதை....


*****************


அன்று ஞாயிற்றுக்கிழமை....


அந்தப் புகழ்பெற்ற ஷாப்பிங் மால் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக அதிதி அருணா இருவரும் உள்ளே வந்தனர்.


அருணாவின் ஒரே தம்பி திவாகருக்கு அந்த வார இறுதியில் பிறந்தநாள் அவனுக்கு பரிசு வாங்கத்தான் இருவரும் வந்ததே....


"லீவு நாள்னு இன்னிக்கு வந்தது தப்பா போச்சு... இவ்வளவு கூட்டத்துல என்னத்த வாங்க முடியும்?" என்று அருணா புலம்பிக்கொண்டே வர...


"அதெல்லாம் வாங்கிடலாம் அருணு பொலம்பாம வா.... "என்ற அதிதி அவளை இழுத்துக்கொண்டு முன்னே சென்றாள்.


இருவரும் திவாகருக்கு உடையும் பிறந்தநாள் பரிசாக வாட்சும் வாங்கிவிட்டு.... ஷாப்பிங் மாலின் அருகே இருந்த ஒரு உணவகத்திற்குள் நுழையும் பொழுது நேரம் மதிய உணவு நேரத்தை தாண்டியிருந்தது.


இருவரும் உணவை ஆர்டர் செய்து விட்டு டேபிள் பார்த்து எதிரெதிரான இருக்கைகளில் அமர.... அருணாவின் முகம் வாடிப்போய் இருந்தது.


"என்னடா அருணு ஒரு மாதிரி இருக்க... பசிக்குதா?" என்று அவளது தோள்பட்டையில் இடித்தாள் அதிதி.


"ப்ப்ப்ச்ச் அதெல்லாம் இல்ல மச்சி... எப்பவும் நான் போடுற பட்ஜெட் கரெக்டா இருக்கும்... ஆனா இந்த தடவ நான் போட்ட பட்ஜெட்ட தாண்டிட்டு மச்சி ... இவ்ளோ ஆகும்னு நான் நினைக்கல... உனக்கு வேற செலவு வச்சுட்டேன் சாரி.." என்று அருணா வருத்தப்பட


"ஓய் என்ன அருணு.... நம்மள பிரிச்சு பேசுற.... திவா பையன் எனக்கு தம்பி தான் ... அவனுக்கு தானே செலவு பண்ணி இருக்கேன் ஒரு பிரச்சனையும் இல்ல...." என்ற அதிதி


"அதெல்லாம் இருக்கட்டும்...இந்த சாரி பூரி கக்கூஸ் காரி எல்லாம் என்கிட்டயே கேக்க ஆரம்பிச்சுட்டியா? அந்தளவுக்கு தைரியம் வந்துட்டா...." என்று அருணாவின் மண்டையில் கொட்ட...


"ஸ்ஸ்ஸ்... வலிக்குதுடி ராட்சசி... தெரியாம கேட்டுட்டேன் விடு விடு" என்று தலையைத் தேய்த்துக் கொண்ட அருணா....


"ஏய் மச்சி அப்படியே உன் பின்னாடி திரும்பி லாஸ்ட் டேபில பாரேன்.... அது உன் தம்பி கௌதம் மாதிரி இல்ல...?" என்று அவர்கள் இருந்த டேபிளுக்கு கடைசி வரிசையில் இருந்த டேபிளை கைகாட்ட .... அதிதியும் திரும்பி பார்த்தாள்.


கௌதம் சாப்பிட்டுக் கொண்டிருக்க... அவனின் இருபுறங்களிலும் அமர்ந்திருந்த இளைஞர்கள் அவனிடம் எதுவோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தனர்....


அதிதியும் நண்பர்களுடன் வந்திருக்கிறான் என்று நினைத்து... "ஃப்ரெண்ட்ஸ் கூட வந்து இருக்கான்னு நினைக்கிறேன் அருணு.... என்ன மட்டும் இப்போ பாத்தான் .... வாயில முட்டைய வச்சுக்கிட்டு பயந்தடிச்சு ஓடிடுவான்.... நிம்மதியா சாப்ட்டு போட்டும்" என்று சிரிக்க ....
அருணாவும் சிரிப்புடன் சரிதான் என்பதுபோல் தலையசைத்தாள்.


அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்திருக்க இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்....


சாப்பிட்டுக் கொண்டே எதேச்சையாக அருணா மீண்டும் கௌதமை பார்க்கும்பொழுது... அவன் அருகிலிருந்த தடியன் ஒருவன் அவனது பின் மண்டையில் வேகமாக தட்டினான்....


அதைப் பார்த்துவிட்ட அருணா அதிதியிடம், "மச்சி உன் தம்பி கௌதம பக்கத்துல இருக்கிற ஒருத்தன் தலையிலேயே அடிக்கிறான்..." என்று சிறு குழந்தை போல் புகார் வாசிக்க...


அதிதியோ அருணாவை முறைத்துக்கொண்டே ...
"ஏண்டி அருணு நானும் தான் உன் மண்டையில கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொட்டினேன்.... ப்ரண்ட்ஸ்குள்ள இதெல்லாம் சகஜம் தானே... இதுக்கு போயி ஏன் ஓவர் பில்டப் பண்ற???" என்று சாதாரணமாக சொன்னாள்.


அருணாவும் அப்படி இருக்குமோ? என்று நினைத்து உணவில் கவனமாக முயற்சிக்க..... அவள் கண்கள் என்னவோ மீண்டும் மீண்டும் அங்கேயேதான் சென்றது.


இம்முறை கௌதம் அழுது கொண்டிருப்பது போல் இருந்தது. அருணா நன்றாக கூர்ந்து பார்க்க.... அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவில் அருகில் இருந்தவன் உப்பைக் கொட்டிக் கொண்டு இருப்பது தெரிந்தது.


"மச்சி என்னமோ நடக்குதுடி அங்க... உன் தம்பி அழுறான் பாரு" என்று அருணா சொன்னதும் ...அதிதி திரும்பி தன் கூர்மையான விழிகளால் தன் தம்பியை பார்க்க அவனது முகமோ அழுததால் சிவந்துபோய் இருந்தது. மேலும் அவன் சாப்பிட முடியாமல் விக்க விக்க உணவை அள்ளி வாய்க்குள் திணித்து போலும்
அவனுடன் இருந்தவர்கள் அனைவரும் அவனை கலாய்த்து சிரிப்பது போலும் இருந்தது.


தன் உணவை மூடி வைத்துவிட்டு எழுந்த அதிதி... "நீ சாப்டு அருணு நான் என்னன்னு பாத்துட்டு வந்தர்றேன்..." என்றுவிட்டு
தன் தம்பி இருந்த டேபிளின் அருகே வந்தாள்.


"மச்சான் குழந்தை அழுது டா ..."என்று ஒருவன் கௌதமின் பின் தலையில் தட்ட... மற்றவர்கள் சிரிக்க.... தடியன் ஒருவன் அவனை சாப்பிட சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான்....


அவர்களின் செய்கைகளை அமைதியாக கவனித்தவள் ....
"என்ன பண்றிங்க டா? தம்பிகளா" என்று கேட்டுக்கொண்டே அவர்கள் இருந்த டேபிளில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர... அங்கிருந்தவர்கள் யாரிவள்? என்பதுபோல் கேள்வியாக பார்த்தனர்.


கௌதம் அதிதியை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு முதல் முறையாக "அக்கா..." என்று முணுமுணுக்க..... தன் தம்பியை பரிவுடன் பார்த்தாள் அதிதி.


அவன் அக்கா என்று முணுமுணுத்ததை கேட்டவர்கள்... "டேய் இந்த பப்ளிமாஸ்க்கு இது அக்காவாம்டா ...." என்று பெரிய ஜோக் சொல்லிவிட்டது போல் சிரிக்க....


அதிதியும் அவர்களை நக்கலாக பார்த்துக் கொண்டே...
"டேய் கௌதமு தம்பிகள் எல்லாம் யாரு? உன்கிட்ட எதுக்கு விளையாடுறாங்க?" என்று கேட்க...
அவனோ அவர்கள் முன் சொல்வதற்கு தயங்கினான்....


அவனருகில் இருந்த ஒருவன்.... "எக்கா நான் சொல்றேன்... உன் தம்பி... தங்க கம்பி... எங்க ஜூனியர் தான்... எப்பவும் சும்மா டைம் பாஸுக்கு கேண்டீன்ல வச்சு லைட்டா அவன கலாய்ப்போம்... அவன் காசுல சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம் ... சும்மா ஜாலிக்கு டாய்லட்ல அவன பூட்டி வச்சி மஜா பண்ணுவோம்...... எங்க ரெக்கார்ட் நோட்ஸ் எல்லாம் அவன எழுதி தர சொல்லுவோம்.... காலேஜ் டைம்ல எங்க டைம் பாஸ் இவன்தான்... போனவாரம் கொஞ்சம் வித்தியாசமா எங்க காலேஜ்ல வேல பாக்குற ஆயாவுக்கு புரோபோஸ் பண்ண சொன்னோம்... சீனியர் பொண்ண கிஸ் பண்ண சொன்னோம்.... எல்லாம் ஜஸ்ட் ஃபார் ஃபன் தானே ... ஆனா உன் தம்பி என்ன பண்ணான்னு தெரியுமா? அடுத்த நாள் எங்க காலேஜ் ஓணான் மூஞ்சி பிரின்சி கிட்ட போய் எங்கள பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டான்... அந்த பிரின்சி சும்மா இருக்காம எங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க முடிவு பண்ணி.... ப்ரேயர்ல்ல எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்க வச்சதும் இல்லாம ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிட்டான்... எங்கள எப்பவும் கெத்தா பாக்குற ஒட்டுமொத்த காலேஜும் இப்போ எங்கள பார்த்து நக்கலா சிரிக்குது... இவ்ளோ பண்ண இவன சும்மா விடுவோமா ??சரியான டைம்க்கு வெயிட் பண்ணோம்.. தொக்கா இன்னைக்கு மாட்டிகிட்டான்" என்று முடிக்க....


"இவ்ளோ பண்ணானா என் தம்பி...." என்று பொய்யாக வியந்தாள் அதிதி....


அந்தக் கூட்டத்திற்கு தலைவன் போல் இருந்த ஒருவன்...
"ஆமா உன் தம்பி எங்க கிட்ட மோதி பெரிய தப்பு பண்ணிட்டான்... அதுக்கு தண்டனை அனுபவிச்சு தானே ஆகணும்.... நீ எடத்த காலி பண்ணு.... இல்லனா நீயும் உன் தம்பி எங்ககிட்ட கஷ்டப்படுறத கண்குளிர பாக்க வேண்டியதா இருக்கும்.... ஒருவேளை நீ கூட எங்ககிட்ட கஷ்டப்படலாம்" என்று கோணல் சிரிப்புடன் எச்சரிக்க ...


அவன் சொன்னதில் சிரித்துக்கொண்டே...
கால் மேல் கால் போட்டு அமர்ந்த அதிதி....
"ஸ்டார்ட் பண்ணுங்க தம்பிகளா.... கச்சேரிய.... அக்கா வெயிட்டிங்" என்றாள் கூலாக.


அங்கிருந்த நால்வருமே அவளை ஆச்சரியமாக பார்க்க...


கௌதமுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவன்...
"என்னடா பப்ளிமாஸ்.... உங்கக்கா இவ்ளோ தைரியமான ஆளா இருக்கு நீ என்ன பயந்தாங்கொள்ளியா இருக்க..?" என்று கிண்டலடிக்க...


மற்றொருவனோ ...
"ஹா ஹா ஹா மச்சான் ...அதுமட்டுமா இந்த பப்ளிமாஸ் அக்காவோட சாப்பாட்டையும் சேர்த்து சாப்டுவான் போல ....அதான் அக்கா குச்சியா இருக்கு தம்பி பலூன் மாதிரி வீங்கிப்போய் இருக்கு..." என்று சொல்ல...


"என்னவோ மச்சான்.... ஒல்லியாக இருந்தாலும் அக்கா சூப்பர் ஃபிகர் தான்... ஆனா இந்த பப்ளிமாஸ் பலூன் கொஞ்ச நாள்ல ஊதி வெடிச்சிடும் போலயே "என்று கௌதமின் உருவத்தை வைத்து கலாய்க்க ...


அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அதிதி ...
தனது சட்டைப் பையிலிருந்து பபுள்கம் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு....
"உன் மூஞ்சியும் தான் தார் டப்பா மாதிரி இருக்கு... அதுக்குன்னு வச்சு ரோடா போட முடியும்" என்றாள் நக்கலாக ...


"ஹேய் யாரப் பாத்து என்ன சொல்ற என் அப்பா யாருன்னு தெரியுமா??" என்று அவன் எகிற....


"ஓஹோ உன்னோட அப்பா யாருன்னு உனக்கே தெரியாதா? ஏன் உங்க அம்மா அப்பா யாருன்னு உன்கிட்ட சொல்லலையா தம்பி" என்று ஏளனமாக அதிதி கேட்டதும் அவனின் முகம் விழுந்து விட்டது.


அவன் அருகிலிருந்த மற்றொருவன்... "இவன் எக்ஸ் மினிஸ்டர் பையன் உயிர் மேல பயம் இருந்தா பார்த்து பேசு..." என்று கோபப்பட.


"அப்படிங்களா தம்பி.... ரொம்பபபப பயமா இருக்கு எனக்கு..... நீங்கதான் என்னோட உசுர காப்பாத்தணும்... என் உசுரே உங்க கையில தான் இருக்கு ... ப்ளீஸ் தம்பி காப்பாத்துங்க என்ன" என்று பயந்தது போல் நடித்த அதிதியின் குரலில் அநியாயத்திற்கு நக்கல் தெறித்தது.


மற்றவர்களோ அநியாயத்திற்கு கலாய்க்கும் அவளிடம் என்ன சொல்ல? என்று தெரியாமல் திருதிருவென முழிக்க... அவர்களைப் பார்த்த கௌதமுக்கு சிரிப்பு வந்துவிட்டது.


கௌதம் அருகிலிருந்த தடியன் அவன் சிரிப்பதை பார்த்ததும் ...
"ஹேய் என்னடா? உங்க அக்கா ஓவரா பேசுறா.... அதுக்கு நீயும் சிரிக்கிறியா ?"என்று அவன் பின் தலையில் ஓங்கி அடிக்க வர... இமைக்கும் நொடியில் அவன் கையைப் பிடித்து முறுக்கிய அதிதி...
"ஆனா ஊனா... நீ பெத்த புள்ள மாதிரி என் தம்பிய பின் மண்டையிலேயே அடிக்க... உனக்கு வலிக்கிற மாதிரி தானே அவனுக்கும் வலிக்கும்" என்றவள் ...


"இனி யாரையாவது இப்படி அடிப்பியா அடிப்பியா... "என்று கேட்டுக்கொண்டே மேலும் அவன் கையைத் திருக ....அவனோ வலி தாளாமல் ஆ.....ஆ...ஆஆஆ என்று அலறியவாறு மற்றொரு கையால் அதிதியின் தலை முடியை பிடித்து இழுக்க ....அவளின் கொண்டை அவிழ்ந்து விழுந்தது.


அப்பொழுதுதான் அங்கு சண்டை நடந்து கொண்டிருப்பது தெரிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களின் கவனம் அவர்கள் மேல் வந்தது. உணவகத்தின் பணியாளர்களும் என்ன பிரச்சனை என்று அங்கு வர ....அதற்குள்
அருணாவும் அதிதியின் அருகே வந்திருந்தாள்.


அந்த தடியனின் கையை விட்டு விட்டு முடியை கொண்டை இட்டு கொண்ட அதிதி.... "டேய் கௌதமு அருணு கிட்ட போ.... "என்று சொல்ல... அவனும் சுற்றி இருந்தவர்களை பயத்துடன் பார்த்துக்கொண்டே அருணாவின் அருகே சென்று நின்று கொண்டான்.


கைவிரல்களை மடக்கி சொடக்கெடுத்து கொண்டே.... "தம்பிகளா அக்கா ரெடி ...இப்போ அடி வாங்க வாரீங்களா...." என்று அதிதி நக்கலாக கேட்க.....


ஒரு பெண்ணிடம் போய் அத்தனை பேர் முன்னிலையில் அசிங்கப்பட்டு விட்டோமே என்று அவமானத்தில் கூனி குறுகி நின்ற தடியன் தான் அவளை முதலில் தாக்க வந்தது....


ஆனால் அவனை அதிதி தாக்குவதற்குள் மற்றொரு கையில் அடி வாங்கி கீழே விழுந்திருந்தான் அவன்.


தொடரும்....


போன பதிவிற்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.... :) :) :)
 
Last edited:

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
sujith payala rowdy bby innum kevalama kaluvi oothuvanu nenachen... thappichitan :LOL: :LOL: :LOL:
rowdy bby fight aa yaru vanthu disturb pannathu:confused::confused::confused:
waiting for next ud kolantha:ROFLMAO::ROFLMAO:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN