முகவரி 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“குக்கூ... குக்கூ... ம்மா... எந்திரி... குக்கூ... குக்கூ... ம்மா... எந்திரி...” வைகறை நான்கரை மணி… தன் மகளின் மழலைக் குரலின் ஊடே போனில் அலாரம் ஒலியாகத் தான் பதித்திருந்த மழலைக் குரல் ஒலித்து நம் நாயகி அனுதிஷிதாவை எழுப்பவும், உடனே தன் துயில் கலைய, பட்டென இமைகளைப் பிரித்தவள் படபடப்புடன் அவசரமாக அலாரத்தை நிறுத்தினாள் அவள்.

பக்கத்தில் உறங்கும் மகள் அலாரம் சத்தத்தில் விழிக்காமல் இருக்கத் தான் இவளிடம் இவ்வளவு படபடப்பு, அவசரம் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தான் இல்லை. பொதுவாகவே இயல்பில் எல்லா விஷயத்திலும் அனுதிஷிதாவுக்கு அவசரம் தான். அவசரமும் அவளும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

‘என் செல்லம்மா எப்போதும் மான் குட்டி தான்... தாவி வந்து என்னை அணைத்துக் கொள்வதில்....’ அவளின் அவசரத்தைப் பார்த்து எப்போதும் சொல்லும் கணவனின் ரசனையான வர்ணனையை நினைத்து அன்று போல் இன்றும் வெட்கத்தில் முகம் சிவந்தாள் அனு.

கணவன் இப்படி என்றால் இவள் தாய் உயிரோடு இருந்த வரை இவளின் அவசரத்தைப் பார்த்து சொன்ன வாக்கியம், ‘உன்னை நான் அவசரமா ஏழு மாதத்திலோ அல்லது எட்டு மாதத்திலோ பெத்து எடுக்கலையே டி... எல்லோரையும் போல பத்து மாதம் சென்று தானா நீ பிறந்த. பின்ன ஏன் உனக்கு எல்லாவற்றிலும் எதிலும் இந்த அவசரம்?’ என்பது தான்.

அப்போதெல்லாம் அதைக் கேட்டு பதிமூன்று வயதான அனுதிஷிதா வாய் கொள்ளா சிரிப்புடன் பாப் கட்டிங்கில் தன் கழுத்து வரை தவழும் முடிக் கற்றைகள் துள்ள அசட்டையாக ஓடி விடுவாள். ஆமாம் அவளுக்கு நடக்கத் தெரியாது. நாலு கால் பாய்ச்சலில் எப்போதும் ஓடத் தான் தெரியும். ஆனால் அவளின் அப்படியான ஓட்டத்தையும் நிறுத்தி வைத்தான் அவளின் கணவன்.

அவசரமாக அலாரத்தை நிறுத்தி விட்டு கண் மூடி ஏகாந்த நிலையில் படுத்திருந்தவளின் காதோரம் தன் மீசை முடியால் குறுகுறுப்பு மூட்டியவனோ பட்டும் படாமல் அவள் செவியைத் தீண்டி முத்தமிட்டு, “குட் மார்னிங் செல்லம்மா! எங்க… நீயும் மாமா ஸ்டைல்லயே குட் மார்னிங் சொல்லு பார்ப்போம்” குறும்பாய் கணவனின் குரல் செவியோரம் வருட, “ஊஹும்...” என்ற செல்லச் சிணுங்கலுடன் இமைகளை இன்னும் இறுக்க மூடிக் கொண்டாள் இவள்.

இந்த இன்ப கனவு எல்லாம் கடந்த ஐந்து வருடமாகத் இவளை தொடர்வது தான். எப்போதும் போல் கொஞ்ச நேரம் நீடித்த கனவைக் கலைத்தது மகளின் அசைவு. அதில் தலையைக் குலுக்கியபடி எழுந்து அமர்ந்தவள், உள்ளங்கை இரண்டையும் தேய்த்து விட்டு தன் முகத்தருகே கொண்டு வந்து, “ஓம் முருகா... ஓம் முருகா...” என்ற படி இவள் கண் விழிக்க…

அதே நேரம், “பாரு டா! நான் இல்லை என்றாலும் என் ஷிதா செல்லம் நான் சொன்னமாதிரியே நடந்துக்கிறாங்க” கணவனின் குரல் மறுபடியும் அவள் காதருகே மெல்லிய பூங்காற்றாய் தீண்டவும், “சும்மா இருடா திருடா.... காலையிலே என் கிட்ட வம்பு வளர்த்துகிட்டு...” என்று பொய்யாய் கோபப்படுபவளான இந்த அவசரக்காரியை இப்படி காலையில் விழித்ததும் செய்யச் சொல்லி அன்றைய தின வேலைகளை நிதானமாகச் ஆரம்பிக்க பழக்கப் படுத்தியதும் அவன் தானே? அதன் நினைவில்

கண் விழித்தும் கணவனின் குரலைத் தன்னுள் உள்வாங்கிய படி அமர்ந்திருந்தாள் அவள்.

“செல்லம்மா, எழுந்திரு... இன்றைக்கு நம்ம மகளுக்கு பிறந்த நாள் ஆச்சே. உனக்கு நிறையா வேலை இருக்குமே டா” மறுபடியும் கணவனின் குரல் அவள் காதில் ஒலிக்க....

“க்கும்... எங்க என்னை எழுந்திருக்க விடறீங்க?” என்று அலுத்துக் கொண்டவள் “நம்ம மகளுக்கு இன்று பிறந்த நாளுன்று எனக்குத் தெரியாதா? இதை நீங்க எனக்கு சொல்லணுமா என்ன?” என்று நிஜத்தில் இல்லாமல் அருவுருவமாய் இருக்கும் தன் கணவனிடம் நொடித்து கொண்டபடி

திரும்பி இவள் மகளைப் பார்க்க, அவளோ தவளை போல் குப்புறப் படுத்திருந்தாள். அதன் அழகில் தன்னை மீறி புன்னைகை மலர, “அப்படியே அப்பா மாதிரி. சிவந்த நிறத்திலிருந்து மூக்கு முழி, பேச்சு, சிரிப்பிலிருந்து. இதோ… இப்படி குப்புறப் படுத்து தூங்கற வரை எல்லாம் இவ அப்பா தான்!” என்று வாய் விட்டே மகளின் அழகை கணவோடு ஒப்பிட்டு ரசித்தவள் மகளைப் புரட்டி போட...

உடனே இவள் மனசாட்சியோ, ‘மகள் எல்லாம் அவள் அப்பாவா இருக்கலாம். ஆனா எது இல்லை என்றாலும் உன்னிடம் இருக்கிற அவசரம் உன் மகள் மான்வி கிட்ட அப்படியே இருக்கு’ என்று அவளுக்கு ஒரு குட்டு வைக்க

கலங்கிய முகத்துடன், “ம்ம்ம்...” என்று ஒற்றுக் கொண்டவளின் மண்டைக்குள்ளோ,

‘ஏன் டி உனக்கு இந்த அவசரம்? நீ இப்படி ஓடி வருவதைப் பார்த்து எங்க காலம் முழுக்க அழற மாதிரி உன் கை காலில் அடி பட்டு உட்கார்ந்து விடுவியோனு எனக்கு பயமா இருக்கு’ தாய் எப்போதும் கலக்கத்துடன் சொல்லும் குரல் இப்போதும் ஒலிக்க

“நீங்க சொன்ன மாதிரி காலம் முழுக்க அழற மாதிரி தான் மம்மி உட்கார்ந்துட்டேன். என்ன... உடலுக்கு பதில் மனசளவுல அடி வாங்கிட்டேன் மம்மி” என்று கண்ணீர் குரலில் முணுமுணுத்தவள் “ஆனா மம்மி உன் பேத்தியை என்னை மாதிரி இல்லாமல் சிறந்து வளர்ப்பேன் மம்மி” என்றபடி தன் மகளின் நெற்றியில் முத்தமிட்ட படி இவள் தன் தாய்க்கு உறுதி அளிக்கவும்

‘ஆமாம் செல்லம்ம்மா... நம்ம மகளை நாம் அப்படி தான் வளர்ப்போம் ஷிதா செல்லம்’ என்று ஆருடம் சொன்னது சாட்சாத் அவள் கணவனின் குரல்.

“இன்று என் மகளுக்குப் பிறந்த நாள். இப்படியே பழசை நினைத்த படி உட்கார்ந்து இருந்தா எப்படி?” என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டவள் ஒரு பெரு மூச்சை வெளியிட்ட படி பழையவைகளான அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இவள் பின்கட்டு சென்று பல் தேய்த்து கை கால் முகம் அலம்பி வந்தவள் பிரிஜ்ஜில் இருக்கும் பாலை எடுத்து காய்ச்ச ஆரம்பித்தாள் அனு.

ஆறு வருடம் முன்பு வரை சமையல் அறை எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் வளர்ந்தவள் தான் அனு. அவள் எழும்போது பெட் காபி கொடுக்கவும் அவள் படுத்த படுக்கையைச் சீர் செய்யவுமே இரண்டு வேலை ஆட்கள் அவள் துயில் எழும்போது பக்கத்திலே இருப்பார்கள். அவள் தந்தையின் ராஜ்ஜியத்திற்கு முடி சூடா ராணியே இவள் தான்.

ஆனால் இன்று… அதன் பின் தான் உடுத்தி இருக்கும் காட்டன் புடவையை இழுத்து சொருகிக் கொண்டு துடைப்பத்தை எடுத்துக் கொண்டு முன் வாசலைக் கூட்ட ஆரம்பித்தாள் அவள். இது தான் நம் கதையின் நாயகி அனுதிஷிதா!

அவளுடைய அவசரத்தால் அவளின் வாழ்வில் ஏதேதோ அசம்பாவிதங்கள் நடந்திருந்தாலும் அதையெல்லாம் தினந்தினம் அவள் நினைத்தாலும் உடனே அடுத்த நொடியே மறந்து தனக்கான வாழ்வை நோக்கிப் பயனிப்பாள் அவள். அதுவும் வீர நடையுடன்!

அனுதிஷிதாவின் தற்போதைய வீடு ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் வீற்றிருக்கும் ஓடு வேய்ந்த பண்ணை வீடு. பின்புறம் கிணற்றுடன் கூடிய சுற்றிழலும் பெரிய தோட்ட அமைப்பில் இருக்கும். முன்புறம் பல வகை வாசனை மலர்களுக்கான செடிகள் இருக்க, பின்புறம் மா, பலா, வாழை முதல் தென்னை, கொய்யா, மாதுளை என பல கனி வகை மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க... இடதுபுறம் காய்கறி, கீரை வகைகள் நிறைந்திருக்க... வீட்டின் வலதுபுறமோ வெற்றிலை, தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி என மூலிகை செடிகள் வளர்ந்திருக்க... அவள் வீடும் அந்த இடமும் எப்போதும் ஒரு வித ரம்மியத்துடன் குட்டி நந்தவனமாக திகழும் என்றால் அது உண்மையே.

இவள் முன் வாசலில் உள்ள சருகுகளை கூட்டிக் கொண்டிருக்க, தலைக்கு மேலே துண்டால் தலைப்பாகையை கட்டியபடி இடுப்பில் உள்ள வேட்டியையும் மடித்து கட்டிக் கொண்டு போருக்குச் செல்லும் போர் வீரனாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீர நடை இட்டு அனுதிஷிதா வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார் முனீஸ்வரன்.

பெயர் மட்டும் முனீஸ்வரன் இல்லைங்க. அவருமே பார்க்க இந்த ஐம்பது வயதிலுமே கட்டு மஸ்தான நிஜ முனீஸ்வரன் மாதிரி தான் இருப்பார். சூர்யா ஒரு திரைப்படத்தில் ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டா’ என்று ஒரு வசனம் சொல்லுவான். அதை நிஜத்தில் நிரூபிப்பவர் இந்த முனீஸ்வரன். ஆமாம்! இவர் அடி ஒவ்வொன்றும் ஒன்றரை டன் வெயிட் தான். கூடவே இவர் சிலம்பம் வாத்தியார் என்பதால் இந்த இருபத்தி மூன்று வயதில் மகளுடன் தனியாக இருக்கும் அனுதிஷிதாவிடம் வாலாட்ட நினைக்கும் இளவட்டங்கள் கூட இவரின் முறுக்கு மீசையையும் கட்டுக்கோப்பான தேகத்தையும் கண்டு எதுக்கு டா வம்பு என்று அவளிடமிருந்து தூர தான் நிற்பார்கள். பின்னே? அனுவிடம் யாராவது தவறாக ஒரு பார்வை பார்த்தால் பார்த்தவனின் எலும்பை உடைத்து சூப் வைத்து விட மாட்டாரா இவர்?

இது பங்குனி மாதம் என்பதால் விடியல் ஐந்தரை மணிக்கே சூரியன் தன் வெளிச்சத்தை பூமிக்கி செலுத்திக் கொண்டிருந்தான். வீட்டைச் சுற்றி முள் வேலிகள் போட்டிருக்க... தன் கையில் உள்ள சாவி கொண்டு முன்பகுதியில் இருந்த இரும்பு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே அவர் பிரவேசித்த நேரம் பின் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த அந்த வீட்டு காவல் தெய்வங்கள் {நாய்கள்} இரண்டும் குதூகலத்துடன் தாவி வந்து அவர் காலை நக்கியது. ஆனால் அவரோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் முறுக்கு மீசை துடிக்க,

“ஏய் பாரு கழுத! இன்னும் என்ன உனக்கு தூக்கம் கேட்குது? அனு புள்ள எழுந்து வேலை பார்க்குறது கூட தெரியாம நீ ஓய்யாரமா தூங்குறியா? எழுந்துருடி” இவர் நின்ற இடத்தில் இருந்த படியே அவர் மனைவியான பார்வதியை நோக்கி கூப்பாடு போட, அந்த வாயில்லா ஜீவன்களோ இவரின் அதட்டலில் ஓர் அடி பின்னே நகர்ந்து கொண்டன. அப்படி ஒரு உறுமல் அவரிடம்.

அவரின் கத்தலில் அனுவுக்கு கோபம் எழ, அதை அவரின் வயதைக் கொண்டு மறைத்தவள், “ஸ்ஸ்ஸ்.. ஷப்பா... எதுக்கு அங்கிள் விடியற்காலையே இந்த சத்தம்? ஆன்ட்டிக்கு உடம்பு அசதியா இருக்காதா? அவங்க தூங்கட்டும். எனக்கு என்ன இப்போ இந்த வேலை எல்லாம் புதுசா?”

அனுவின் பதிலுக்கு, “நீ மட்டும் சும்மாவா இருக்க அனும்மா? எழுந்ததிலிருந்து நாள் முழுக்க மண்ணு கூடவும் உரத்து கூடவும் மல்லு கட்டுற. பின் சமையல்... அதன் பிறகு நம்ம தோட்ட செடிகளை யாராவது கேட்டா அந்த கன்றுகளை எடுத்துட்டுப் போய் கேட்டவங்க வீட்டுக்கே போய் கொடுக்கிற {door delivery}. பிறகு இரவு படுக்கிற வரை நம்ம வீட்டு இளவரசி பின்னாடியே சுத்திகிட்டு இருக்க. இவ உனக்கும் எனக்கும் கை வேலை பார்க்கறதோட சரி. பிறகு என்ன இவளுக்கு அசதி கேட்குது?” என்று தன்மையாய் பதில் கொடுத்தவர், “அடி ஏய் பாரு! எழுந்துருடி. இன்னைக்கு நம்ம வீட்டு இளவரசிக்கு பிறந்தநாள். அதனால் இன்று காலையிலே கோவிலுக்குப் போகப் போறோம்னு அனு புள்ள நேற்றே நம்ம கிட்ட சொல்லுச்சா இல்லயா? கோவிலுக்குக் கிளம்ப வேண்டிய பிள்ளையை இப்படி வேலை செய்ய வச்சிட்டு நீ தூங்கறியா? பாரு எழுந்துருடி” மறுபடியும் இவர் ஓங்கி ஒரு அதட்டல் போட

உள்ளே கணவனின் குரல் தன்னை எட்டியதற்கு சாட்சியாக அந்த நாற்பத்தைந்து வயதிலும் இரட்டை நாடியான தன் உடலைத் தூக்கிக் கொண்டு தூக்க கலக்கத்துடன் எழுந்து ஓடி வந்து அனு முன்னாள் நின்ற பார்வதி, “நீங்க துடைப்பத்தை கொடுத்துட்டுப் போங்க. நான் எல்லா வேலையும் பார்த்துக்கிறேன் அனும்மா” என்று பார்வதி சிறு குரலில் அவளிடம் கெஞ்ச

அனுவுக்கோ அவரைப் பார்க்க பாவமாக இருந்தது கூடவே கோபமாகவும். ‘இந்த ஆன்ட்டி கொஞ்சம் நிமிர்ந்து இருந்தா தான் என்ன... குறைந்த பட்சம் அங்கிள் கிட்ட முகம் கழுவிட்டு வந்து வேலை செய்றேனு சொல்லலாம் இல்ல? என்னமோ அப்படியே எழுந்து வந்து துடைப்பத்தை கேட்கிறத பார். இந்த அங்கிளாவது இதைக் கொஞ்சம் அன்பா சொன்னா தான் என்ன? ஹும்ஹு... இரண்டு பேருமே தங்களை மாத்திக்கப் போகிறதுஇல்லை… இதில் நான் என்ன செய்ய’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்

“ஆன்ட்டி, முதலில் நீங்க காலைக் கடன் எல்லாம் முடித்து பிரெஷ்ஷாகி எனக்கு, உங்களுக்கு, அங்கிளுக்கு டீ போட்டு எடுத்திட்டு வாங்க. அதைக் குடித்ததும் நான் சமையலைப் பார்க்க போறேன். நீங்க தோட்ட வேலை பாருங்க. அது வரை நான் செய்திட்டு இருக்கேன்” என்று அன்பாய், அனுவின் சொல்லை ஏற்றுக் கொண்டு அதற்கும் சிட்டாய் பறந்தார் பார்வதி.
அதைப் பார்த்த அனுவுக்கு ஐயோ என்றானது. ‘அதீத அன்பு வைத்து விட்டால் இப்படி தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள தோன்றுமோ?’ அவள் மனதின் ஓட்டத்தை அவள் மனதிற்குள் குடியிருப்பவன் அறிந்து கொண்டதற்கு சாட்சியாக,

‘ஆமாம் ஷிதா, இந்த அன்பு ரொம்ப பொல்லாதது தான். அரண்மனையில் ராணியாக வாழ வேண்டிய நீ என்மேல் வைத்த காதலுக்காக இன்று இப்படி ஒரு இடத்தில் வாழ்ந்து துன்பப்படுகிறாயே... அது தான் எனக்கு கஷ்டமாக இருக்கு. உனக்கு ஏன் டி இந்த பிடிவாதம்?’ அவன் குரல் வழக்கம் போல் துயரத்தில் ஒலிக்கவும், அதை ஒதுக்கித் தள்ளியவள் மேற்கொண்டு அங்கிருக்க பிடிக்காமல் அன்றைய தன் வேலைகளைப் பார்க்க வீட்டிற்குள் விரைந்தாள் அனு.
 
Super Super Super maa.... Semma starting.... Anu தனியா இருக்காளா avanodaya மகள் oda... Ava husband ku enna aachi.... இளவரசி ah இருந்தவ இப்போ இப்படி இருக்கா... Ava husband ah avvallavu love 😍 panra போல... Super Super maa
 
M

Mrs. Sakthivel

Guest

Nice starting
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super Super Super maa.... Semma starting.... Anu தனியா இருக்காளா avanodaya மகள் oda... Ava husband ku enna aachi.... இளவரசி ah இருந்தவ இப்போ இப்படி இருக்கா... Ava husband ah avvallavu love 😍 panra போல... Super Super maa
நன்றிங்க சிஸ்... எப்போதும் போல்... இப்போதும் உங்க கமென்ட் எனக்கு பூஸ்ட் கொடுக்குது சிஸ்.... heart beat heart beat heart beat heart beat
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN