ஆதித்யா சக்கரவர்த்தி-20

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 20

சுவாதியின் விருப்பத்திற்கேற்ப ஆதித்யாவும் மலருடன் சேர்ந்து வாழ்வதாக சொல்லிவிட... மலர்தான் அதிர்ச்சியில் நின்றாள்.

இவன் வா என்றால் வருவதற்கும்... போ என்றால் செல்வதற்கும்... தான் என்ன இவன் வீட்டில் வளர்க்கும் நாய் குட்டியா? என்று உள்ளுக்குள் கோபத்துடன் நினைத்தவள்,
"அண்ணி ரியலி வெரி சாரி.... இவர் கூட சேர்ந்து வாழறதுக்கு நான் தயாரா இல்ல..." என்று தன் மறுப்பை வெளிப்படையாக சொன்னாள் மலர்.

"அப்போ நானும் உன்னோட அண்ணனும் கடைசிவரை பிரிஞ்சு இருக்கணும்னு தான்... நீ நினைக்கிறியா?" என்று கண்களில் கொதிப்புடன் சுவாதி கேட்க...

"அப்படியெல்லாம் இல்ல அண்ணி" என்று பதறிய மலர்,
"எப்படியாவது அண்ணனையும் உங்களையும் சேர்த்து வச்சுருவேன். அண்ணி கவலைப்படாதீங்க.... அண்ணனும் நீங்க இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க ....அவங்க ஒன்னும் நீங்க இல்லாம சந்தோஷமா இல்லை... கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழத்தான் போறீங்க... ஆனா அதுக்காக எல்லாம் திரும்பவும் இவர் கூட என்னால வாழ முடியாது.... எனக்குன்னு வேலை இருக்கு. தங்க வீடும் இருக்கு. நானே என்ன பாத்துப்பேன்" என்று உறுதியாக சொன்னாள்....

'முடியாது' என்று கூறி பிடிவாதம் பிடிப்பவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சுவாதி கண் கலங்க ஆதித்யாவை பார்க்க ...

அவனோ, "நீ போ சுவாதி நான் அவகிட்ட தனியா பேசிட்டு வரேன்" என்று மலரை பார்த்துக்கொண்டே அழுத்தமாக சொல்லவும்...
மலருக்கு தான் மூச்சடைத்து விட்டது.

ஏதோ ஒரு தைரியத்தில் சொல்லிவிட்டால் தான்... வாழ விரும்பவில்லை என்று.... இப்பொழுது இவனிடம் தனியாக மாட்டினாள் என்ன செய்வானோ என்று நினைத்தவள், சுவாதியின் பின்னயே வேகமாக செல்ல போக, அவளது நீண்ட பின்னலை பிடித்து இழுத்தான் ஆதித்யா.
அவன் இழுத்ததும், அவன் மார்பில் முட்டி நின்றவளை ஆழ்ந்து பார்த்தவன்...
"என்ன டைவர்ஸ் பண்ணிட்டு,
அந்த நந்தன் சொன்ன மாதிரி அவன கல்யாணம் பண்ணிக்க போறியா?" என்று ஒற்றை புருவத்தை தூக்கி ஆதித்யா கேள்வியாக அவளின் முகத்தை பார்த்தான்.
அத்தனை நெருக்கத்தில் அவனின் முகத்தை பார்த்து விழிபிதுங்கி நின்ற மலருக்கு பேச நா எழவில்லை.
ஙே... என்று அவனை பார்த்து முழித்துக் கொண்டிருந்தாள்.

"நான் சொல்றது காதுல விழுதா?" என்று ஆதித்யா அரட்டி கேட்கவும், பயத்தில் வேகமாக... ஆமா என்பது போல் தலையாட்டினாள் மலர்.

அவள் தலையாட்டிய விதம் லேசாக சிரிப்பை வரவழைக்க, உதடுகளை அழுத்தமாக மூடி கொண்டவன்....
"அப்போ பதில் சொல்லு"என்று விடாமல் கேட்க...

"கொஞ்சம் தள்ளி நிக்குறீங்களா... பேச வாய்ஸ் வர மாட்டுக்கு" என்று மலர் தலை குனிந்தவாறே... தன் ஒட்டுமொத்த தைரியத்தைத் திரட்டி அவனிடம் சொல்ல...

"விட்டா ஓடலாம்னு பாக்குறியா?" என்று ஆதித்யாவும் அவளை விடாமல் கேட்க....

'உன்கிட்ட இருந்து தப்பிச்சு எங்கிருந்துடா நான் ஓட பூச்சாண்டி பயலே...' என்று மனதிற்குள் புலம்பியவள்...
"அப்படி எல்லாம் விட்டுட்டு ஓட மாட்டேன்" என்று முறுக்கிக்கொண்டு சொல்ல...
சட்டென்று அவளின் இடையில் கைவைத்து பொம்மை போல் தூக்கி தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தியவன்...
"ஹம்ம்... போதுமா? அதான் தள்ளி நிறுத்திட்டேன் ல.... இப்ப சொல்லு" என்று தன் மீசையை முறுக்கினான் ஆதித்யா

அவனது திடீர் செயலில் வெலவெலத்துப் போனவள்,
"நீ ...நீங்க.... நீங்கதான் என்ன வீட்டை விட்டு வெளியே போ... என்ன விட்டுப் போய்டு.... எனக்கு டைவர்ஸ் வேணும்னு அப்படி இப்படின்னு சொல்லி என்ன விட்டு பிரிஞ்சு போனீங்க.... இப்போ மட்டும் சுவாதி அண்ணி சொன்னதுக்காக என்ன சகிச்சுக்க வேண்டாம்... அண்ணன் கிட்ட பேசி சுவாதி அண்ணிய சேர்த்து வச்சுருவேன் சீக்கிரமே" என்று மெல்லிய குரலில் தலையை குனிந்து கொண்டே... மலர் கூற கூற ஆதித்யாவின் முகம் உஷ்ணமாக மாறியது.

"அப்போ நான் போ ன்னு சொன்னா ஹாயா போயிடுவ... திரும்பி வா ன்னு சொன்னா மட்டும் வர மாட்ட அப்படித்தானே... விட்டது தொல்லை னு சந்தோசமா இருக்கிற ஹான்ன்?" என்று அதற்கும் அவளையே திட்டி தீர்க்க ...
இதற்கு நான் என்ன சொல்வது? என்பது போல் மலர் விழித்தாள்.

மீண்டும் அவள் அருகில் வந்து அவளது கைகளை பற்றி தனக்கு அருகில் இழுத்தவன்,
"நல்லா கேட்டுக்கோ மலர்.... இனி நீ என் கூட தான் வாழ போற... உன்னோட மனசுல... நெனப்புல ஏன்? உன்னோட உடம்புல ஒவ்வொரு அணுவிலும் கூட ...இந்த ஆதித்யா மட்டும் தான் இருக்கணும். அத உன் குட்டி மூளையில நல்லா ஏத்தி வச்சுக்கோ.... என்ன தவிர வேற யாரையாவது நினைச்சுப் பார்த்த உன்ன கண்டதுண்டமா வெட்டி போடக்கூட தயங்கமாட்டேன்" என்று கர்ஜித்த ஆதித்யா மலரின் அதிர்ந்த முகத்தை பார்த்து,
என்ன நினைத்தானோ? அவளை இறுக்கமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு, "சீக்கிரமா நம்ம வீட்டுக்கு என்னோட மனைவியா வர தயாராகு..." என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டான்.

"என்ன டா நடக்குது இங்க?" என்று ஒன்றும் புரியாமல் திக்பிரமை பிடித்தது போல் அசையாமல் நின்றாள் மலர்.

மகேஷ் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி ஒரு வாரம் கடந்திருந்தது.
இந்த ஒரு வாரத்தில் மகேஷ் சற்று தெளிவாக பேச ஆரம்பித்து இருந்தான். மலர்தான் அண்ணன் உடனேயே இருந்து.... கண்ணும் கருத்துமாக அவனை பார்த்துக் கொண்டாள். சுவாதி அன்றைக்குப் பிறகு அவனை பார்க்க செல்லவில்லை. வானதியை மட்டும் அனுப்பினாள். ஆதித்யாவும் நேரம் கிடைக்கும் பொழுது மகேஷை பார்த்து விட்டு சென்றான். ஆனால் மகேஷ் தான் அவனிடம் பேசுவதில்லை. இடையில் நந்தன் இருமுறை ஹாஸ்பிடலுக்கு வந்து மலருடன் தனியாக பேச முயற்சித்தான். ஆனால் மலர் அவனுடன் பேசுவதை தவிர்த்து விட்டாள்.

அன்று ஹாஸ்பிடலுக்கு வந்த மலர், தான் ஆதித்யா உடன் சேர்ந்து வாழ போவதாக மகேஷிடம் அறிவித்தாள்.

மகேஷ் தங்கையே கூர்ந்து கவனித்து விட்டு, "யாராவது உன்னை மிரட்டி இப்படி சொல்ல சொன்னாங்களா?" என்று கேட்க, "இல்லை" என்று தலையாட்டினாள் மலர்.

"நானே விருப்பப்பட்டுதான் அண்ணா சொல்றேன்... அவருக்கும் இதுல சம்மதம் தான்... நாங்க ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசி தான்.... எங்க வாழ்க்கையை புதுசா வாழ ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்" என்றவள்
லேசாக தயங்கிக்கொண்டே,

"நீங்களும் சுவாதி அண்ணி கூட சேர்ந்து வாழனும் அண்ணா... வானதி ரொம்ப பாவம்" என்று முடித்தாள்.

மலரை ஒருமுறை ஆழ்ந்து பார்த்த மகேஷ், "நான் ஆதித்யா கூட தனியா பேசணும் அவன வர சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

"இன்னைக்கு ஈவினிங் உங்கள பாக்க வானதியை கூட்டிட்டு வரேன்னு நேத்தே சொன்னார்.... அண்ணா" என்று மலர் முயன்று வரவழைத்துக் கொண்ட உற்சாகமான குரலிலேயே சொன்னாள்.

அன்று மாலை ஆதித்யாவும் வானதியும் வர... வானதியை தூக்கி கொண்ட மலர், மகேஷ் சொன்னதை ஆதித்யாவிடம் சொல்ல...
அவனும், "சரி நான் மகேஷ பாத்துட்டு வரேன்... நீ வெளில இரு" என்று விட்டு உள்ளே சென்றான்.

ஆதித்யா உள்ளே சென்றதும், "மகேஷ் கேட்ட முதல் கேள்வி, என் தங்கச்சிய கட்டாயப்படுத்தி திரும்பவும்... அவள காயப்படுத்தலாம்னு நினைக்கிறியா?" என்பதுதான்...
அவனை அழுத்தமாக பார்த்த ஆதித்யா, எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க...
"அன்னைக்கு இன்டர்வியூ ல சுவாதிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொன்ன? என்னோட பொண்ண இன்னொருத்தனை அப்பான்னு கூப்பிட வைப்பேன்னு என்ன மிரட்டின...???இப்ப நீ திடீர்னு எப்படி மலர் கூட சேர்ந்து வாழ முடிவு பண்ணின ? எந்த மரத்துக்கு அடியில் போய் உட்கார்ந்து உனக்கு ஞானம் வந்துச்சு... சொல்லு??உன்னை நம்பி என் தங்கச்சிய நான் எப்படி அனுப்புறது?" என்று மகேஷ் தன் உடல் நலனையும் கருத்தில் கொள்ளாமல் ஆதித்யாவிடம் எரிந்து விழ,
அவ்வளவு நேரம் கைகளை கட்டிக்கொண்டு நின்ற ஆதித்யா,
மகேஷின் கைகளை பிடித்து, "என்னோட தங்கச்சி அழுதுட்டே இருக்கிறதா பார்க்கும்போது எனக்கு கோபமா வந்துச்சு.... அதான் அன்னைக்கு கோவத்துல ஏதேதோ சொல்லிட்டேன். இப்போ நான் மனசார மலர மனைவியா ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன்.... தேவையில்லாம வறட்டு கவுரவம் பார்த்து நீயும் சுவாதி கிட்ட இருந்த பிரிய வேண்டாம்" அமைதியாக சொன்னான்.

அவனது பதிலில் லேசாக நம்பிக்கை வந்தாலும், மகேஷ் முகத்தை இறுக்கமாக தான் வைத்திருந்தான்.

"திரும்பவும் என் தங்கச்சிய நட்டாத்துல விடமாட்டேன்னு என்ன நிச்சயம்?" என்ற மகேஷ் கேள்வியாக அவனை நோக்க...
அவனை உறுதியாக பார்த்த ஆதித்யா,
"இனி மலர் தான் என் மனைவி... என்னோட குடும்பம்... என் வாழ்க்கை... எல்லாமே நான் வேணா உன்னோட நம்பிக்கைக்காக ஒன்னு சொல்றேன். மலரை விட்டு இனி கண்டிப்பா பிரிய மாட்டேன்... இது நான் உனக்கு கொடுக்குற வாக்கு..." என்றவன்,
"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....
இனி நானும் மலரும் சேர்ந்து வாழ போற வாழ்க்கையில தேவையில்லாமல் நீ குறுக்க வரக்கூடாது. நானும் நீயும் சுவாதியும் வாழற வாழ்க்கைல்ல குறுக்க வரமாட்டேன்.... உனக்கு புரியறமாதிரி சொல்லனும்னா என் குடும்ப விஷயத்தில நீ தலையிட கூடாது. உன்னோட குடும்ப விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்...இந்த கண்டிஷனுக்கு ஓகேவா" என்று ஆதித்யா கேட்க...
மகேஷ் தன் தங்கை வாழ்க்கை சீரானால் போதும் என்று நினைத்து, ஒரு நீண்ட பெருமூச்சுடன் சரி என்று தலை அசைத்தான்.

இரவு தூக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டிருந்த சௌமியா தன் அருகில் படுத்திருந்த சரத்தை பார்த்தாள்... அதாகப்பட்டது அவனை சைட் அடித்தாள்....
தமிழ் மாந்தனின் நிறமான மாநிறம்தான். கிராமத்துக்காரன் என்பதற்கு அடையாளமாக அடர்த்தியான மீசை வைத்திருந்தான். எப்பொழுதுமே அவனது முகத்தில் லேசாக புன்னகை இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவு சீரியஸான தருணமாக இருந்தாலும் நகைச்சுவையாக தான் பேசுவான். அது முதலில் அவளை கோபப்படுத்தியது.... இப்பொழுது ரசிக்க வைக்கிறது....
அவனை லேசாக ஒட்டிப் படுத்துக் கொண்டவள், அவர்களின் திருமணம் நடந்த பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

அன்று....

சௌமியா பிரகாரத்தை சுற்றி விட்டு முன்பக்கம் வர, அங்கு நந்தன் மாப்பிள்ளை கோலத்தில் வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் சௌமியாவின் முகம் நொடியில் மாறி தன் பின்னே வந்து கொண்டிருந்தவர்களை பார்க்க... சுவாதி தான், "ஹேப்பி பர்த்டே சௌமி குட்டி....இன்னைக்கு உனக்கும் நந்தனுக்கும் கல்யாணம்... எப்படி எங்க சர்ப்ரைஸ்?" என்று ஆனந்த கூக்குரலிட.... சௌமியா முகம் வெளுத்து நின்றாள்.
ஆதித்யா தங்கை ஆனந்த
அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று நினைத்து அவளை சந்தோஷமாக பார்க்க ....சுற்றி சுற்றி அனைவரையும் பாத்துக்கொண்டிருந்த சௌமியா அண்ணனின் முகத்தை பார்த்து மேலும் முகம் வெளுத்தாள்.
மகேஷின் அருகே நின்ற சரத்,
"சார் இந்த கோவிலில் பாயசம் ரொம்ப டேஸ்டா இருக்கும்... நெய் அதிகமாக ஊத்தி முந்திரி பருப்பு போட்டு...ப்பா.... அவ்வளவு டேஸ்ட்... நம்ம போய் சாமி கும்பிட்டுட்டு பிரசாதம் வாங்கிட்டு வரலாம் வாங்க" அவனை அழைக்க....
ஏற்கனவே மூட் அவுட்டில் இருந்த மகேஷ்....
"எனக்கு தலைவலியா இருக்கு.... நீ போய் வாங்கி சாப்பிடு..." என்று அங்கிருந்த தூணின் அருகே அமர்ந்து விட ,
"நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான்" என்று முணுமுணுத்துக்கொண்டே பிரசாதம் வாங்க சென்றான் சரத்.

"சீக்கிரம் ரெடி ஆகணும்....உனக்கு கல்யாண சாரி.... நகைகள் எல்லாம் ரெடியா இருக்கு. மாப்பிள்ளை சார் கூட ரெடி தான். நீதான் கிளம்பனும் சீக்கிரம் வா... சௌமி... மலர் நீயும் வா" என்று சௌமியாவை இழுத்துக் கொண்டு கோவிலுக்கு பின்னாலிருந்த மண்டபத்திற்கு அழைத்துச் சென்றாள் சுவாதி.
அவர்களின் பின்னே வேறு வழியில்லாமல் வந்துகொண்டிருந்தாள் மலர்.

சௌமியா ஏதோ யோசனையிலேயே இருக்க, மலர் சுவாதி இருவரும் அவளுக்கு அலங்காரம் செய்தனர்.
சௌமியாவின் முகத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை என்பதை மலர் உணர்ந்து...
தனது மனக்கிலேசத்தை ஒதுக்கிவைத்துவிட்டு...
"உனக்கு கல்யாணத்துல சந்தோஷம்தானே... எதுக்கு ஒரு மாதிரி இருக்க? எதுவாயிருந்தாலும் சொல்லு" என்று கனிவாக கேட்க...
தான் அவளுக்கு இவ்வளவு கெடுதல் செய்தும் தன்னிடம் கனிவாக பேசிய மலரை பார்த்து கண்கலங்கிய சௌமியா....அவளிடம் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்குள் சுவாதி முந்திக்கொண்டாள்.

"ம்ம்க்கும்... பொறாமையால பொங்காத மலர்... அதான் உனக்கு கல்யாணம் ஆகிட்டே... கொஞ்சம் அடக்கி வாசி... சௌம்யாவுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நீ உன்னோட வேலையை மட்டும் பாரு"
என்றுவிட்டு சௌமியாவின் கண்களுக்கு ஐலைனர் போட்டுவிட ஆரம்பித்துவிட்டாள்.

சௌமியாவிற்கு பூவினால் செய்த ஜடை ஆரத்தை கட்டிக்கொண்டிருந்த மலர் ஒரு நிமிடம் அண்ணியை ஆழ்ந்து பார்த்துவிட்டு அமைதியாக நகர்ந்து விட்டாள்.
மலர் அங்கிருந்து நகர்ந்து சென்றதும்....

"பாவம் அக்கா மலர் ....எதுக்கு இப்படி பேசுற?" என்று சௌமியா கடிந்து கொள்ள...

"பின்ன என்னடி உனக்கு தான் நந்தன ரொம்ப பிடிக்குமே... அவ என்னமோ உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லாத மாதிரி பேசிட்டு போறா...எல்லாம் பொறாமை தான். பொறாமை புடிச்சவ" என்று சுவாதி மலரைக் கரித்துக் கொட்ட...

'தன்நெஞ்சு உணர்ந்து பொய்யற்க'என்னும் குறளுக்கு ஏற்ப
உண்மையில் யார் பொறாமை பிடித்தவள்... என்று யோசித்த சௌமியாவின் மனம் அவளையே சுட்டது.

தன் நெஞ்சில் உதித்த பொறாமை உணர்வு எவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டுவிட்டது.
மலரின் வாழ்வும்... தன் அண்ணனின் வாழ்வும் சேர்ந்து கெடுத்ததும் இல்லாமல், இப்பொழுது தன்னுடைய வாழ்வும் தனக்கு இஷ்டம் இல்லாதது போல் அல்லவா அமையப்போகிறது.

ஆம், நந்தனை திருமணம் செய்வதில் சௌமியாவிற்கு இப்போது சுத்தமாக விருப்பமில்லை
அன்று நந்தனின் வீட்டில் அவன் குடித்து இருப்பதை பார்த்து சௌமியாவின் நெஞ்சில் குற்ற உணர்வுதான் எழுந்தது.
மலரை மட்டும் அவனிடமிருந்து பிரித்து இருக்காமல் இருந்திருந்தால் அவன் நன்றாகத்தானே இருந்திருப்பான். அவனின் இந்த நிலைமைக்கு தான்தான் காரணம் என்று உணர்ந்தவள்.... அதற்கு பரிகாரமாக அவனைத் தானே நல்வழிப்படுத்தி நல்ல தோழியாக பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துதான் என்னை திருமணம் செய்து கொள் என்று ஒரு பெண்ணாக இருந்தாலும் வெட்கத்தைவிட்டு அவளாகவே அவனிடம் கேட்டது.
ஆனால் அவனோ அவளது தோற்றத்தை குறை கூறி அவளது தாழ்வு மனப்பான்மையை தூண்டி விட்டு விட்டான்.
அதன்பிறகு நடந்த விபத்து எல்லாம் இப்பொழுது நினைத்தாலும்....
அவளது உடம்பு பதற தான் செய்தது.
விபத்திற்கு பிறகு நிறைய விஷயங்களை தனக்குள்ளேயே போட்டு யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சௌமியாவிற்கு தான் எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறோம் என்பது அப்பொழுதுதான் புரிந்தது.
ஹாஸ்பிட்டலில் மலர் தனக்கு சேவகம் செய்யும் போதெல்லாம் அவளிடம் மன்னிப்பு கேள் என்ற மனதை அடக்கி வைத்துக்கொண்டிருந்தாள் சௌமியா.
அவளால் என்னமோ மலரின் முகத்தையே பார்க்கவே முடியவில்லை.... ஏதாவது பேச நினைத்தால் கூட வார்த்தைகளே வரவில்லை அவளுக்கு....
உண்மையைச் சொல்லப்போனால் அவளுக்கு நந்தா மேல் இருப்பது வெறும் நட்பும் சினேகிதம் தான். வேறு எதற்கும் அவள் மனதில் இடம் இல்லை. அதைப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நாள் ஆகிவிட்டதே...!!!
ஆனால் அன்று நந்தன் பேசிய ஒவ்வொரு கடுஞ்சொல்லும் இன்னும் அவளின் மனதின் ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டேதான் இருந்தது. இந்த நிலையில் தான் அவனை திருமணம் செய்தால் இருவரின் வாழ்க்கையும் நரகமாக மாறி விடுமே...! என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தாள் சௌமியா.

சௌமியாவை முழுவதுமாக ரெடி செய்து விட்டு அவளுக்கு திருஷ்டி கழித்தாள் சுவாதி....

தன் யோசனையில் இருந்து வெளிவந்த சௌமியா,
"அக்கா எனக்கு நந்தன் வேண்டாம்.... இந்த கல்யாணத்தை நிறுத்து" என்று சொல்லி சுவாதிக்கு ஹார்ட் அட்டாக் வர வைத்தாள்.

"என்னது...?" என்று வாயைப் பிளந்து விட்டாள் சுவாதி...
சௌமியா தலைகுனிந்து அமர்ந்திருக்க, அவளது தலையில் தட்டிய சுவாதி...
"ஏண்டி ஏன் உனக்குதான் நந்தன ரொம்ப பிடிக்குமே.... எதுக்கு இப்போ கேனத்தனமா பேசிகிட்டு இருக்க? அந்த மலர் ஏதாவது சொன்னாளா?" என்று கடுப்பாக கேட்க....

ஸ்ஸ்ஸ் என்று தலையை தேய்த்துக்கொண்ட சௌமியா,
"எதுக்கு இப்போ நீ தேவையில்லாம மலர இழுக்குற? இப்பவும் எனக்கு நந்தா மாஸ்டரை பிடிக்கும்... ஆனா ஒரு ஃப்ரெண்டா பிடிக்கும். கல்யாணம் எல்லாம் எங்களுக்குள்ள செட் ஆகாது அக்கா" என்று வாழ்நாளில் முதல் முறையாக தெளிவாகவும் உறுதியாகவும் பேசினாள் சௌமியா.

"அத முன்னையே சொல்றதுக்கு என்னடி? எல்லா ஏற்பாடும் பண்ணின அப்புறம் கடைசி நேரத்துல புடிக்கலைன்னு சொல்லி கழுத்தை அறுக்க..." என்று சுவாதி பதட்டப்பட....

அவளை முறைத்த சௌமியா,
"ஏதோ என் கிட்ட கேட்டுட்டு தான் எல்லா ஏற்பாடும் பண்ணின மாதிரி ரொம்ப துள்ளுற.... கடைசி நேரத்துல கல்யாணம்னு சொல்லி பெரிய குண்டு போட்டது நீதான்" என்றாள்.

"ஏய் சௌமி அப்ப எதுக்கு டி.... நீ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த அப்புறம் நந்தன் அடிக்கடி வந்து உன்ன பாத்து பேசிட்டு போனான்? அப்போ மட்டும் உனக்கு பிடிச்சதா அவன?" என்று பாயிண்ட் போட்டு பேசி மடக்கி விட்டதாக சுவாதி நினைக்க...

சௌமியா இப்பொழுது மெய்யாகவே கொலைவெறி ஆனாள்.
"ஒரு ஃப்ரெண்ட்க்கு உடம்பு சரி இல்லாம இருந்தா.... இன்னொரு ஃப்ரெண்ட் பார்க்க வர தான் செய்வாங்க... இது நார்மலான ஒரு விஷயம். இதுக்கு பேரு லவ் கிடையாது" என்று முகத்தை சுருக்கி கோபமாக சொன்னாள் சௌமியா.

"ஏண்டி ஏன்? என் உசுரை எடுக்கறதுக்குனே என் தங்கச்சியா வந்து பொறந்தியா? உனக்கு நல்லது தான் டி பண்றேன். நந்தன எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்னு தெரியுமா??இன்னைக்கு மரியாதையா கல்யாணம் பண்ணிட்டு உன் புருஷன் வீட்டுக்கு போய் சேர்ற இல்லனா அவ்ளோதான்" என்று சுவாதி மிரட்ட...

தன் அக்காவை அழுத்தமாக பார்த்த சௌமியா,
"நந்தா மாஸ்டர தவிர நான் யார வேணாலும் கல்யாணம் பண்ணிப்பேன் அக்கா...ப்ளீஸ்... நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா... எல்லோருக்கும் சங்கடம் தான் வரும்" என்றவள்,
முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, "அப்புறம் இப்படி மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுகாத... ஆதித்யா அண்ணா எனக்குதான் எப்பவும் சப்போர்ட் பண்ணுவான்.... ஒரு வார்த்தை சொன்னா இந்த நிமிஷமே கல்யாணம் நின்னுடும்" என்று தெனாவெட்டாக சொல்ல...
அதைக்கேட்டு அடக்கமாட்டாமல் சிரித்தாள் சுவாதி.

அதிர்ச்சியில் லூசாகி விட்டாளா ?
என்பது போல் சௌமியா அவளைப் பார்த்து வைக்க....
அவளோ, "என்னடி தெனாவெட்டா? இந்த தடவ அண்ணன் உன் பேச்ச கேட்கிறது கஷ்டம்தான்.... பிகாஸ் உனக்காக தான் அதாவது நீ நந்தன் கூட சேரனும் தான் விருப்பம் இல்லனாலும் மலர கல்யாணம் பண்ணினாங்க... இப்போ நீயே மாத்தி மாத்தி பேசினா எப்படி? அண்ணனுக்கு கோபம் வந்தா அவ்வளவுதான் அப்புறம் உன் நிலைமை?" என்று பயமுறுத்தினாள் சுவாதி.

அது கொஞ்சம் வேலை செய்தது.
சௌமியா, "அக்கா சொல்வது உண்மைதானோ தன் அண்ணன் தனக்கு சப்போர்ட் செய்ய மாட்டானா? இப்பொழுது இந்த திருமணத்தை நிறுத்த என்ன செய்ய?" என்று குழப்பமாக யோசிக்க ஆரம்பிக்க....
அவளது குழப்பத்தை கவனித்த சுவாதி, அப்படி வா வழிக்கு என்று உள்ளுக்குள் கருவி கொண்டு....
"நீ என்னதான் தில்லுமுல்லு பண்ணினாலும் இன்னைக்கு உன்னோட கல்யாணம் கண்டிப்பா நடக்கும். பேசாம வாய மூடிட்டு வந்த மணமேடையில உட்காரு. இல்லனா இருக்கிற மானம் மரியாதை எல்லாம் பறந்திடும்" என்று மிரட்டிய சுவாதி... சௌமியா கல்யாணம் வேண்டாம் என்று கெஞ்ச கெஞ்ச அதை கண்டுகொள்ளாமல் அவளை தரதரவென்று இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி நடந்தாள்...

திடீரென்று தங்களின் பின்னால் தடதடவென்று ஏதோ சத்தம் கேட்டு சுவாதி பயந்து நிற்கவும், அவர்களை மீடியா காரர்களின் கூட்டம் சுற்றி வளைக்கவும் சரியாக இருந்தது.
அதுவும் அந்தக் கூட்டத்தில் முக்கியமாக நின்றது ஆதித்யாவின் கையில் அன்றொருநாள் அடிவாங்கிய மீடியாகாரன் தான்.... அடிபட்ட பாம்பாக பழிவாங்கத் துடித்து.... நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவன் சந்தர்ப்பம் அமைந்தால் சும்மா இருப்பானா? எப்படியோ ஆதித்யா குடும்பத்தோடு இங்கு வருவதை மோப்பம் பிடித்து கோவிலின் பின் வாசல் வழியே தனது டீம் மெம்பர்ஸ் மற்றும் மற்ற சேனல் காரர்களுடன் இங்கு வந்துவிட்டான். அதுவும் இங்கு நடப்பது எல்லாம் அவர்களது சேனலில் டிவி ஷோவில் லைவ் ஆக டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டிருந்தது.
பாடிகார்ட்ஸ் எல்லாரும் கோயிலின் முன்னால் தான் நின்று கொண்டிருந்ததால், பின் வழியே மீடியாக்காரர்கள் நுழைந்தது தெரியாமல் போனது.
திடுதிப்பென்று தங்களைச் சுற்றி படை போல் வந்து நின்ற மீடியா காரர்களை பார்த்து சுவாதி சௌமியா இருவருமே அதிர்ந்தனர்.

சௌமியாவின் அழுத முகத்தைப் பார்த்து மீடியாக்காரர்கள் ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்தனர்....

"உங்களுக்கு இங்க கட்டாய கல்யாணம் நடக்குதா?" என்று ஒருவர் கேட்க...

"நீங்க லவ் பண்றீங்க தான ? ஏன் வீட்டுல அக்சப்ட் பண்ணல?ஏதாவது ஜாதி பிரச்சனையா? இல்ல ஸ்டேட்டஸ் பிரச்சனையா?" என்று மற்றொருவர் கேட்க...

"உங்க அண்ணன் உங்க லவ்வ அக்சப்ட் பண்ணலைனா என்ன? நீங்க மேஜர் தான நீங்க ஈஸியா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கலாமே...!! உங்கள ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சி இருந்தாங்களா? அதான் எதுவும் பண்ண முடியாம இருந்தீங்களா?"

"நீங்க சூசைட் அட்டென்ட் பண்ணி தான் ரொம்ப நாள் ஹாஸ்பிடல்ல இருந்தீங்களா? அதை ஏதோ ஆக்சிடென்ட் மாதிரி செட்டப் பண்ணிட்டாங்களா? உங்க லவ்வரா என்ன பண்ணாங்க? இருக்காரா? இல்லன்னா உங்க அண்ணன் ஏதாவது அவர பண்ணி..." என்று இழுத்தான் ஆதித்யாவிடம் அடி வாங்கிய மீடியாகாரன் சுதீப்.
அவனது நெற்றியில் இன்னும் பேண்டேஜ் இருந்தது. அப்படியும் அடங்காமல் அவன் கேள்விமேல் கேள்வி கேட்க... சுவாதியோ தங்கையை என்ன செய்வது? என்பது போல் பார்க்க,

அவளோ கூலாக சுவாதியை பார்த்து விட்டு... "ஆமா எனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்றாங்க எல்லாரும்...."என்றாள் பாருங்களேன் அடங்கொப்புரானே!! என்ற சுவாதிக்கு மயக்கமே வந்துவிட்டது.

"மேடம் உங்களுக்கு எங்க கட்டாய கல்யாணம் நடக்கப் போவது... உங்க லவ்வர் எந்த ஸ்டெப்பும் எடுக்காம இருக்கார்... ஒருவேளை உங்க அண்ணன் ஏதாவது பண்ணிட்டாரா அவர??"

"சேச்சே என்னோட லவ்வர் ரொம்ப ஸ்ட்ராங்.... அதலாம் அவர ஒன்னும் பண்ண முடியாது....
அவர் கரெக்டான டைம்க்கு என்டர் ஆகி கல்யாணத்தை ஸ்டாப் பண்ணிடுவார்... அதோ வந்துட்டாரே!!!" என்று கோவில் பாயாசத்தை சூப்பர் என்று விரலை சப்பிக் கொண்டு வந்து கொண்டிருந்த சரத்தை கை காட்ட, மீடியா காரர்களின் கூட்டம் வேகமாக அவனின் பக்கம் சென்றது.... தன்னை திடீரென்று சூழ்ந்த மீடியாவை பார்த்தவன், என்ன ஏதென்று யோசிக்கும் முன்பே சௌமியா சரத்தின் கையை பிடித்து இருந்தாள்.
"என்ன பாஸ் தங்கச்சி நம்ம கைய வந்து பிடிக்குது?" என்று தன் கையை உருவிக் கொள்ள முயன்றவனிடம், "கொஞ்ச நேரம் அமைதியா இரு.... அண்ணன்கிட்ட சொல்லி உனக்கு சம்பளம் கூட போட்டு தர சொல்றேன்" என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள் சௌமியா.

"இவளுக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு" என்று சரத் பார்க்க... அவளோ அவனின் கைகளை பிடித்துக் கொண்டே மீடியா கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

தனித்து விடப்பட்ட சுவாதி கோயிலுக்குள் சென்று தன் அண்ணனை அழைத்து வர,
ஆதித்யா தங்கை சரத் கையை பிடித்துக்கொண்டு நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தான்.

நந்தன் அங்கு நடப்பதை ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்க்க, மகேஷ் சரத்தை, "என்னடா நடக்குது இங்க? பாயாசம் தான சாப்பிடப் போன... அந்த கேப்புல என்னடா பண்ணி வச்ச?" என்ற கண்ணாலே கேட்டான்.

அதற்கு" எனக்கே ஒன்னும் புரியல..." என்று சைகை செய்தான் சரத்.

"சௌமியா என்ன பண்ற நீ.... அவன் கையை விடு" என்று ஆதித்யா கோபப்பட...
மீடியாக்காரர்கள் ஆதித்யாவை போக்கஸ் செய்தனர்.

"அண்ணா நான் லவ் பண்ற சரத்த தான்.... நான் கல்யாணம் பண்ணிப்பேன். என் முடிவுல மாற்றமே இல்ல. என்ன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி கொடுக்காதீங்க" என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தாள் சௌமியா.
நந்தன் சௌமியாவை பார்க்க, அவள் அவனை இறைஞ்சுதலாக பார்த்தாள்.
ஏனோ அந்த நிமிடம் எதிலிருந்துனோ விடுப்பட்ட உணர்வு வந்த நந்தனும், சரி என்பது போல் கண்களை சிமிட்டினான்.

அதை கவனித்த ஆதித்யா தங்கையை முறைக்க...
அவனையும் பாவமாக பார்த்து வைத்தாள் சௌமியா.

சரத்தின் ஒரு கையில் பாயாசம் இருக்க, மற்றொரு கையை இறுக்கிப் பிடித்திருந்தாள் அவள்....
அவனும் தன்னை வைத்துக்கொண்டு இந்த லூசு என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்று கோபத்துடன் அவளை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

மகேஷ் மலரை அப்பவே கண்காட்டி தூணின் பின்னால் மறைய வைத்திருந்தான். அவளும் வானதியும் அங்கு நின்றே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தனர்.

"சார் நாங்க ஜெட் ஒன் டிவி ல ஒர்க் பண்றேன்.... உண்மையே சொல்வதெல்லாம் ஷோ ல இங்க நடக்குறது லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டு இருக்கோம்... நிறைய மக்கள் பாத்துட்டு இருக்காங்க... இப்படி மேஜர் ஆன ஒரு பொண்ண இந்த கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியாது....
சோ இந்த பொண்ண அவங்க ஆசைப்படுற இந்தப் பையன் கூட கல்யாணம் பண்ணி வைங்க. இல்லனா எங்க டீம் போலீஸ் ஓட இப்போ இங்க வந்துகிட்டு இருக்கு நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி பெரிய ப்ராப்ளம் ஆகும் பாத்துக்கோங்க.... உங்க ஃபேமிலி நேம் கெட்டுப் போயிடும்" என்று கூட்டத்தில் வந்த ஒருவன் குரல் கொடுக்க,
ஆதித்யா ஆத்திரத்துடன் தங்கையை பார்க்க, சரத் பட்டென்று அவளின் கையை உருவிக்கொண்டு "நான் ஒன்னும் இவங்க..." என்று ஆரம்பிக்க...
ஆதித்யா, அந்த நிலையிலும் தங்கையின் பெயர் கெட்டுப் போய்விடும் என்று நினைத்து... சரத்திடம் வேண்டாம் என்பது போல் கண்ணால் எச்சரித்தான்.

ஆதித்யாவிடம் அடி வாங்கிய சுதீப் அதை கவனித்து விட்டு,
சரத்திடம், "உங்களை ஏதாவது பிளாக்மெயில் பண்றாங்களா சார்? கவலையே படாதீங்க... உங்களுக்கு துணையா நாங்க இருக்கோம்.... மீடியா எவ்வளவோ பவர்ஃபுல் னு இன்னிக்கி காட்றோம்" என்றான்.

" அடப்பாவிகளா உங்களால தான் டா நானே இங்க மாட்டி இருக்கேன்..." என்று மனதிற்குள் புலம்பிய சரத் சௌமியாவை கடுப்புடன் பார்க்க, அவளோ என்னதான் செய்ய நானும்? என்பது போல் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆதித்யா தங்கையிடம் திரும்பி,
" நீ இப்போ யார தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற?" என்று தெளிவாகக் கேட்க... அவளோ நொடியும் தாமதிக்காமல் சரத்தை கண் காட்டினாள்.

ஆதித்யா இறுகிய முகத்துடன்
"உன் ஆசைய அண்ணன் கண்டிப்பா நிறைவேற்றுவேன்" என்றவன் சுதீப் என்ற மீடியா காரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
"எல்லாரும் கோயிலுக்குள்ள போங்க" சென்றான்.

சரத் கையிலிருந்த பாயாசத்தை தட்டிவிட்ட சௌமியா, அவனை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் செல்ல அவனோ ஆதித்யாவை பார்த்தான்.

ஆதித்யாவின் முகம் சுருங்கி இருப்பதை பார்த்தவன்... ஆதித்யாவின் அனுமதி இன்றி அவளை எதுவும் சொல்ல முடியாமல் அவள் இழுத்த இழுப்பிற்கு அவள் பின்னே சென்றான்.

அத்தனை மீடியாக்காரர்களின்... முன்னே சௌமியாவை எதுவும் சொல்லமுடியாமல் சுவாதி பார்வையால் எரிக்க, அவளோ "பாத்தியா எப்படி நந்தன நான் கல்யாணம் பண்ணாம எஸ்கேப் ஆனேன்னு" என்பதுபோல் ஏளனப் பார்வை பார்த்தாள்.

ஆதித்யாவின் முகம் உணர்ச்சியற்று போல் இருக்க, மற்றவர்களுக்கோ சௌமியாவின் நடவடிக்கை குழப்பத்தையே தந்தது.

ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க,
ஹோம குண்டத்தின் முன்னே சௌமியா சரத் இருவரும் அமர வைக்கப்பட்டனர்.
சிறிது நேரத்திலேயே சரத்தின் கையில் மாங்கல்யம் கொடுக்கப்பட, அப்பொழுதும் சரத் ஆதித்யாவின் முகத்தைப் பார்க்க... அது கல்லென இறுதி இருந்ததே தவிர அதில் எந்த மாற்றமும் இல்லை.

சுற்றியிருந்த சொந்தங்களும் மீடியாகாரர்களும் அட்சதை தூவி வாழ்த்த......
சௌமியாவை எரிப்பது போல் பார்த்துக்கொண்டே வேண்டாவெறுப்பாக தாலியை எடுத்து கட்டினான் சரத்.
அப்பொழுதே சௌமியா சக்கரவர்த்தி.... திருமதி சௌமியா சரத் ஆக மாறிவிட்டாள்...
சுதீப் என்பவன் ஆதித்யாவை பழி வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அவனை ஏளனமாக பார்த்துவிட்டு நகர.... மற்ற மீடியா காரர்களும் தங்களால் தான் இவர்களின் காதல் சேர்ந்தது என்று பெருமையாக நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
அவர்கள் சென்றதும் குடும்பத்தினர் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சௌமியாவோ ஆதித்யாவின் அருகே வந்து,
"அண்ணா கவலைப்படாதீங்க... இது ஃபேக்(fake) மேரேஜ்தான் இப்பவே தாலியை கழட்டி.... என்று முடிக்கவில்லை அதற்குள் அவளது கன்னத்தில் அறைந்திருந்தான் ஆதித்யா.

சிறுவயதிலிருந்து இதுவரைக்கும் அவள் கேட்டது அனைத்தையும் வாங்கிக் கொடுத்து.... அவளை பாசமாகவும் பரிவுடனும் பார்த்துக்கொண்ட அவளது அண்ணன் அடித்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் சௌமியா பார்க்க,
"ஷட்டப் சௌமியா... இதுக்கு மேல ஒரு வார்த்தையும் பேசாத... இன்னைக்கு நீ பண்ண காரியத்துக்கு உன்ன வெட்டி பொலி போட்டு இருக்கணும்... ஆனா இந்த பாசம் வந்து தடுக்குது என்ன... என் கண்ணு முன்னாடி இனி வந்திராத... இங்கேருந்து போயிடு. சரத் இவளை இங்கிருந்து கூட்டிட்டு போய்டு...." என்று எல்லைமீறிய கோபத்துடன் கத்த, திருமணம் முடிந்ததும் அண்ணனிடம் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வான்... என்று எண்ணியிருந்த சௌமியாவிற்கு அவனின் கோபத்தை கண்டு அழுகைதான் வந்தது.

"அண்ணா..." என்று சௌமியா மீண்டும் ஆதித்யாவின் பக்கம் வர,
"இனிமே அண்ணன்னு சொல்லிட்டு வந்து என்கிட்ட பேசாத சௌமியா" என்று கடுகடுப்புடன் சொன்னவன், விடுவிடுவென்று கோவிலை விட்டு வெளியேறி விட்டான்.

ஒரு ஓரமாக நின்று அங்கு நடந்தவைகளை கவனித்துக் கொண்டிருந்த நந்தன்.... ஆதித்யா சென்றதும் சௌமியாவின் அருகில் வந்து, "எத நினைச்சும் கவலைப்படாத... உன்னோட அண்ணனுக்கு உன் மேல பாசம் அதிகம்... சீக்கிரம் உன்கிட்ட பேசிடுவார்" என்று ஆறுதலாக சொன்னவன்....
"ஹேப்பி மேரிட் லைப் சேமியா" என்று வாழ்த்தி விட்டு கிளம்பிவிட்டான்...

சரத் செல்லும் நந்தனையே வாயைப் பிளந்து பார்த்தான்... பின்னே அவன் தாலி கட்ட வேண்டியவள்... இன்னொருவனை திருமணம் செய்து கொண்டு நிற்கிறாள்...
இவளுக்கு போய் வாழ்த்தி விட்டுப் போகிறான் மடையன்....
மகேஷ் யோசனையாக நின்ற சரத்தின் முதுகில் தட்டி,
"அப்புறம் சகல பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்... இப்படி கோவில் சிலை மாதிரி நீக்காம என் கொழுந்தியாவ வீட்டுக்கு கூட்டிட்டு போ" என்று சொல்ல...
அவனை முறைத்துப் பார்த்த சரத், "எங்க அப்பா மீசைக்காரர்க்கு மட்டும் நான் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணினேன்னு தெரிஞ்சா தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவார் சார்..." என்று பயப்பட...
"அதெல்லாம் உங்க வீட்ல ஆதித்யா வந்து பேசி சரி பண்ணிடுவான்... என்னதான் கோபம் இருந்தாலும் தங்கச்சில்ல" என்று அவனை தேற்றி சௌமியா உடன் அனுப்பி வைத்தான் மகேஷ்.

செல்வதற்குமுன் சௌமியா மலரின் அருகே வந்து....
"சாரி அண்ணி" என்று முதல்முறையாக அண்ணி என்று கூப்பிட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டு கணவனுடன் கிளம்பி வந்து விட்டாள். மலர் பதில் செல்லவில்லை... அவளது கண்கள் மட்டும் கலங்கியிருந்தன....

சரத் வீட்டிற்கு வந்து சௌமியா போட்ட சீன் என்ன... எப்பா...
அவளை அடக்க சரத் எடுத்த ஆயுதம்... வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் அவள் தலையில் கட்டியது.... அவள் மறுத்தாள்... பிறந்த வீட்டிற்கு போக சொல்லிவிடுவான்... கண்டிப்பாக அவள் போக மாட்டாள் என்று தெரியும்... ஆதித்யா இன்னும் அவள் மேல் கோபமாக தான் இருந்தான்....
இல்லையென்றால் சரத் தங்களது கிராமத்து வீட்டிற்கு கூட்டி சென்று விடுவதாக சொன்னாலும் சற்று அடங்கினாள் சௌமியா.

பழைய நினைவுகளில் இருந்து... வெளி வந்தவள் சரத்தின் தலைமுடியை கோதிவிட்டு ... "உங்களோட விருப்பம் இல்லாமேயே நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு வீண் பாரமா இருக்கேனா? அதனாலதான் என்ன விட்டு விலகியே இருக்கீங்களா? மாமா" என்று கண் கலங்கியவள் அவனை அணைத்துக் கொண்டே தூங்கிப் போனாள் சரத்தின் மியாவ்.

அன்று காலையில், மகேஷ் டிஸ்சார்ஜ் ஆக இருந்ததால்,
அவனுக்கு தேவையான உடைகளையும் பொருட்களையும் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த மலருக்கு முன்னால் வந்து நின்றான் நந்தன்.

மலர் அவனை கண்டும் காணாதது போல்... "நகருங்க நான் போகணும்" என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல...
அவளது கைகளை பிடித்துக் கொண்டவன்...
"ஏன் மலர் இப்படி பண்ற ப்ளீஸ்... என்ன அவாய்ட் பண்ணாத ... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு ..." என்று ஆரம்பித்த நந்தனின் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்ட மலர்...
ஸ்கூட்டியை விட்டு இறங்கி... தன் கைகளை கட்டிக்கொண்டு
அவனை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவள்,

"நீங்களும் என் கேரக்டரை சந்தேகப்பட்டு...என்ன அவாய்ட் பண்ணும் போதும் எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு மிஸ்டர் நந்தன்..." என்றவள்,
அவன் முகம் வேதனையில் சுருங்கவும்... தன்னை சமாளித்துக்கொண்டு,
"உங்கள வருத்தப்பட வைக்கிறதுக்காக சொல்லல சாரி நந்தன்... நடந்த எதுக்கும் உங்களை மட்டும் குறை சொல்ல முடியாது... என் மேலேயும் தப்பு இருக்கு... ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். இனி தேவையில்லாம உங்க மனசுல எந்த ஆசையும் வளர்த்துகாதீங்க.. நீங்க என்ன உங்க மனசுல நினைச்சு இருந்தாலும் சரி.... இத மட்டும் நல்லா தெளிவா ஞாபகம் வச்சிக்கோங்க... எனக்கு கல்யாணம் ஆகிட்டு. எனக்குன்னு ஒரு புருஷன்... ஒரு குடும்பம் எல்லாம் இருக்கு... அத விட்டுட்டு எந்த நம்பிக்கையில் நான் உங்க கூட வரணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க ...ஹான்? ஆரம்பத்திலேயே நீங்க என் மேல நம்பிக்கை வச்சு இருந்தீங்கன்னா... இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. இப்போ நீங்க திரும்பவும் நீதான் வேணும் மலர்ன்னு வந்து நிற்கிறது சரியா?... அதுவும் ஒரு கல்யாணமான பொண்ணு கிட்ட?" என்று வெறுப்பாக பேசிய மலருக்கு கண்கள் கலங்கி அழுகை வர பார்க்க அதை உள்ளிழுத்துக் கொண்டவள்...
"என்னோட வாழ்க்கையே இதான்னு கடவுள் முடிவு பண்ணிட்டார் ... அத நானே நினைச்சாலும் மாத்த முடியாது... ஏத்துக்கிட்டு தான் ஆகணும் ...ஆனா உங்க வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கவே இல்லயே... உங்களுக்குன்னு கடவுள் முடிச்சு போட்ட ஒருத்தங்க கண்டிப்பா உங்களுக்கு கிடைப்பாங்க... அதுவரைக்கும் காத்திருங்க... தயவுசெஞ்சு இனி கல்யாண அது இதுன்னு பேசிட்டு என்கிட்ட வராதீங்க" என்று உறுதியான குரலில் சொன்னவள் அவனை திரும்பியும் பாராது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் நந்தனின் மனதிற்கு சரியன்று தோன்றினாலும் அவளை விடவும் மனம் வராமல்...
"மலர் நீ என்ன நினைச்சாலும் சரி உனக்காக இந்த நந்தன் காத்திருப்பேன்... உனக்கு ஏதாவது பிரச்சனைனா உனக்கு துணையா நான் இருப்பேன்..." என்று கத்தியவனின் குரல் மலரை பின் தொடர்ந்தது.

அது தன் காதில் விழுந்தாலும், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள் மலர்.

மலருக்கு நேரம் சரியில்லை போலும் ....
மலரின் சேஃப்டி காக அவளை கண்காணிக்க ஆதித்யா நியமித்திருந்த பாடிகார்ட் ஒருவன் மலரும் நந்தனும் பேசிக்கொண்டிருந்ததை தூரத்திலிருந்து தனது கேமராவில் பதிவு செய்து அதை ஆதித்யாவிற்கும் அனுப்பினான்.

"அடியே மியாவ்... என்னோட பெல்ட்ட பாத்தியா" என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தவன், ஏற்கனவே கிளம்பி யோசனையோடு அமர்ந்திருந்த சௌமியாவை பார்த்து,
"ஹே இல்லாத மூளையை வச்சுட்டு என்ன யோசனை மியாவ்... சீக்கிரம் மாமா பெல்ட்ட தேடி எடுத்துட்டு வா... இன்னைக்கு மகேஷ் சகல டிஸ்சார்ஜ் ஆகுறார்... அவர் தங்கச்சி வேற புகுந்த வீட்டுக்குப் போய் வாழ போறாங்க... நம்ம ரெண்டு பேரும் சீக்கிரம் போகணும்... இல்லாட்டி பாஸ் மூச்சு விடாம கத்துவார்" என்று கையில் வாட்ச் கட்டிக்கொண்டே அவளை அவசரப்படுத்தினான் சரத்.

"ஏங்க உங்களுக்கு தான் என்ன பிடிக்காதுல்ல... என் மேல வெறுப்பா வேற இருக்கீங்க... பேசாம நம்ம ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிருவோமா?" என்று திடீரென்று சௌமியா கேட்கவும்,
ஒரு நொடி ஸ்தம்பித்து நின்ற சரத், மறுநொடியே உதடுகளை இழுத்து சிரித்துக்கொண்டே,
"இங்க கொஞ்சம் வாயேன் மியாவ் செல்லம்" என்று பாசமாக அவளை அருகில் கூப்பிட, அவன் எதற்கு அழைக்கின்றான் என்று தெரியாமல், "என்னங்க..." என்று கேட்டுக்கொண்டே சௌமியாவும் அருகில் வர, அவள் தலையில் நறுக்கென்று கொட்டியவன்,
"ஏதோ குச்சி ஐஸ் சாப்பிடுவோமான்னு கேட்கிற மாதிரி டிவோஸ் பண்ணிப்போமா ன்னு கேக்குற? நீ அவ்வளவு சாதாரணமா போயிட்டா இதெல்லாம்? உங்களை எல்லாம் எதுவும் சொல்லக்கூடாது... ஆனா ஊனா கணவன் மனைவி பத்து தடவ டைவர்ஸ் பண்ணி பத்து தடவ கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி சீரியல் எடுக்கிற டைரக்டர்ஸ மொதல்ல தூக்கிட்டு வந்து உதைக்கணும்... அத பாத்து கெட்டுப்போய் அலையறீங்க எல்லாம்.... இனி நீ டிவி பக்கம் போ மண்டைய பொளக்குறேன்" என்று பொரிந்து தள்ளியவன்...
அவள் முகம் வாடி கண்களில் கலக்கத்துடன் அவனின் முகத்தை பார்க்கவும்...
"சரி இங்க வந்து கொஞ்சம் உட்காரு மியாவ்" என்று அவளை சோபாவில் அமர வைத்தவன், தானும் அமர்ந்து "உனக்கு என்ன மியாவ் இப்போ பிரச்சினை?" என்று கேட்க,
அவனின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டு,
"நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்... அதுக்கு பரிகாரம் பண்ண தயாராவும் இருக்கேன்..." என்றவள் ஒரு நொடி அமைதிக்குப் பின், "உங்கள போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டோம்னு எனக்கு கில்ட்டியா ஃபீல் ஆகுது மாமா... நீங்க என்ன கஷ்டப்பட்டு சகிச்சிக்கிட்டு என் கூட வாழ வேண்டாம். நான் போய்டுறேன் உங்களுக்கு நான் தேவையில்லாத பாரமாக இருக்க ..." என்று பேசிக்கொண்டே போனவளின் பேச்சு தடைபட்டது.

அவளின் இதழ்கள் அவன் வசம்...

முதல் முத்தத்தில் கண்களை மூடி கிறங்கி இருந்தவளை அணைத்துக் கொண்டவன்...
"என்ன விட்டு அவ்வளவு சீக்கிரம் போயிடுவியா மியாவ்... அப்புறம் என் டார்ச்சர் யார் தாங்குவா? உன்ன நான் விட்டுருவேனா சொல்லு... ஆரம்பத்துல எனக்கு நீ தேவையில்லாத தொல்ல மாதிரிதான் தெரிஞ்ச..." என்று உண்மையை ஒத்துக் கொண்டவன், அவளின் கன்னத்தை வருடி...
"ஆனா இப்போ..." என்று இழுக்கவும்
சௌமியா ஆவலுடன்,
"ஆனா இப்போ என்ன?" என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
"ஆனா இப்போ எனக்கு நீ தேவையான தொல்லையாகிட்ட மியாவ்" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சரத் சொல்ல....
"அப்போ நான் உங்களுக்கு தொல்லையா?" என்று கணவனை முறைத்து பார்த்தவள், அவனின் குறும்பு பார்வையில் சிரித்துக் கொண்டே அவனது மார்பில் தஞ்சம் ஆனாள்.
அவளை அணைத்துக் கொண்டவன், தனது கை கடிகாரத்தில் மணியை பார்த்துவிட்டு,
"என்னோட பெல்ட சீக்கிரம் எடுத்து தா மியாவ்... பாஸ் லேட்டா போனா என்னதான் கத்துவார்" என்று சொல்ல... வேகமாக அவனது பெல்டினை எடுத்துக் கொடுத்தாள் சௌமியா.
அவன் கிளம்பி வரவும், இருவரும் மனநிறைவுடன் மருத்துவமனைக்கு சென்றனர்.

இங்கு நந்தன் மலரின் கையை பிடித்துக்கொண்டு பேசுவது போல் இருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா....

நெஞ்சமெல்லாம் புண்ணாகிப் போன உணர்வுதான் அவனுக்கு... காதல் கொண்ட மனம் காயப்பட்டு விட்டது.

கண்களை இறுக மூடி கொண்டு நாற்காலியில் சாய்ந்தவன்.... தனது கடந்த கால நினைவுகளில் மூழ்கினான்.

சேலத்தின் அருகிலிருந்த புகலூர் என்னும் ஊரில் தான் ஆதித்யாவின் குடும்பம் இருந்தது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர் அது... அவர்களின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது தான்...
ஆதித்யாவின் அப்பா சக்கரவர்த்தி ஒரு அரிசி மில்லில் கணக்காளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்... அம்மா சங்கரி ஒரு பெரிய ஜவுளி கடையில் டெய்லராக வேலை செய்து கொண்டிருந்தார்....

ஆதித்யாவிற்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்து தன் பெற்றோர்கள் பேசிக்கொண்டதை அவன் பார்த்ததே இல்லை....
ஏனென்று கேட்டாலும் பதில் கிடைக்காது.... அந்த வீட்டில் அவனோடு சேர்த்து நான்கு குழந்தைகள்... முதல் வாரிசு ஆதித்யா... அடுத்த மூன்றும் பெண் குழந்தைகள்... இரண்டாவது குழந்தை சுவாதி மூன்றாவதாக இரட்டை பெண் குழந்தைகள் சௌமியா சௌபாக்கியா...
அதில் சௌபாக்கியாவிற்கு சிறுவயதிலிருந்தே அடிக்கடி உடல்நிலை சரியில்லாமலே இருந்தது. டாக்டர்கள் கொடுத்த மருந்தை மட்டும் நம்பி உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஜீவன் அவள்...
ஏழு வயது சிறுமியான சௌபாக்கியா அன்னையின் மீது உயிரையே வைத்திருந்தாள். சங்கரி இல்லாமல் ஒரு இடத்திற்கும் செல்ல மாட்டாள். மருந்து மாத்திரையை சாப்பிட மாட்டாள்.

சௌமியா, சுவாதி இருவரும் சிறு வயதிலிருந்தே சரியான சேட்டை காரிகள். பள்ளிக்கூடம் விட்டு வந்தாலும் வீட்டிற்கு வர மாட்டார்கள். ஊர் சுற்ற சென்றுவிடுவார்கள். வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவுதான்....

சங்கரி சற்று அமைதியானவர் என்பதால் தங்களிடம் கூட அதிகம் பேச மாட்டார் என்றே ஆதித்யா நினைத்திருந்தான்.
அந்த நாள் வரும் வரை...

ஆதித்யா பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை வெற்றிகரமாக எழுதி விட்டு சந்தோஷமாக வீட்டிற்கு வந்த சமயம்தான்... தன் அம்மா அப்பா பயங்கரமாக சண்டை போடுவதை முதல்முறையாகப் பார்த்தான்.

"என்னால உங்க கூட வாழ பிடிக்கல... நான் என்னோட ஈஸ்வர் கூட வாழப் போறேன்..." என்று ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டிருந்த அம்மாவை பார்த்த ஆதித்யாவிற்கு உலகமே தலைகீழாக சுற்றியது...

தொடரும்....
 
OP

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN