ஆதித்யா சக்கரவர்த்தி-28(final episode part ii)

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 28"மியாவ் சீக்கிரம்... சீக்கிரம் ...டிபன் ரெடியா? இன்னைக்கு நான் ஆபீஸ்க்கு சீக்கிரமா போகணும் ...இன்னிக்கு பாஸ் மலர் கூட வெளியே போறாராம்... அவர் வேற ஆபீஸ்க்கு வரமாட்டார் ...நான்தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்" என்று கத்திக் கொண்டிருந்தான் சரத்.

கையில் தோசை கரண்டியை தூக்கிக்கொண்டு வியர்வை வடிய கிச்சனில் இருந்து வெளியே வந்த சௌமியா...
"கொஞ்சம் உள்ள வாங்க"என்று அவனை அழைத்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் சென்று விட்டாள்.

"ப்ச்ச்... இப்போ எதுக்கு என்ன கிச்சனுக்கு கூப்பிட்ட..." என்றவாறு கடுப்புடன் உள்ளே வந்த சரத்தை பார்த்து முறைத்த சௌமியா, "எனக்கு என்ன பத்து கையா இருக்கு... கூடமாட ஒத்தாசை பண்ணாம ஒய்யாரமா உட்கார்ந்துட்டு அதிகாரம் வேற ஐயாவுக்கு..." என்று எரிந்து விழுந்தாள்.

"நான் எதுக்குடி சமைக்கணும்.... நான் வேலைக்கு போறேன்... அங்கேயும் வேலை செய்யணும் இங்கேயும் வேலை செய்யணுமா?" என்று சரத்தும் பதிலுக்கு எகிற....

கண்ணிமைக்கும் நொடிக்குள் அவனின் இதழில் முத்தமிட்ட சௌமியா,
" ப்ளீஸ் மாமா எனக்கு கை வலிக்குது சட்னி அரைச்சு வச்சிருக்கேன்... அத மட்டும் தாளிச்சு குடுங்க" என்று அப்பாவி போல் கேட்க, மாய உலகில் சஞ்சரித்து இருந்த சரத்தும் பலியாடாக தலையை ஆட்டி வைத்தான்.

"ஹி ஹி ஹி ஹி தேங்க்யூ சோ மச் மாமா" கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு மற்ற வேலைகளை கவனித்தாள் சௌமியா....

"அடிக்கடி முத்தம் கொடுத்து ஆள மயக்கி வேலை வாங்குறா..." என்று முணுமுணுத்தாலும்... கைகள் அதன் பாட்டிற்கு சட்னியை தாளிக்க தேவையான பொருட்களை எடுத்தது.

சுவாதியின் வருகைக்குப் பிறகு ஆதித்யா மலர் இருவரிடமும் மனதளவில் நெருக்கம் அதிகரித்து இருந்தது.

நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பது போல் சுவாதியின் வருகை நன்மையில் தான் முடிந்தது.
சுவாதி வந்து சென்றதில் இருந்து நந்தன் என்ற சொல் ஆதித்யாவின் வாயில் இருந்து வரவே இல்லை.
அதுவே பெருத்த நிம்மதியை தந்தது மலருக்கு....

இதோ இன்று மனம் விட்டு பேச தனிமையை தேடி இருவரும் காரில் வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அன்று ஆதித்யா சுவாதியிடம் தனக்காக பேசியது இதமாக இருந்தது மலருக்கு... தனக்கென்று யாருமே இல்லையே ...என்ற நினைப்பு அந்த நொடியே தகர்ந்தது... என்று சொல்வதை விட ஆதித்யா தகர்த்தான் என்றுதான் சொல்லவேண்டும்.
காரில் வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்து கொண்டிருந்த மலரை, ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தான் ஆதித்யா...

தனியாக பேச வேண்டும் என்று அழைத்து வந்தது என்னவோ அவன்தான் ... எப்பொழுதும் போல் அவன் கிளம்பும் நேரத்தில் பின்னால் வந்த பாடி கார்ட்ஸை பார்த்த மலர் ஆதித்யாவை முறைத்துக்கொண்டே, "இதுதான் தனியா பேச போறதா? சூப்பர் அப்படியே பின்னால கட்டி வெச்சிருக்க பிளாக்கியையும் கூட்டிட்டு வந்துடுங்க" என்று கடுப்புடன் வாய்க்குள் முணங்க,

அவளைப் பார்த்து சிரித்து விட்டு,
"சூப்பர் ஐடியா தான்...ஆனா ஏற்கனவே நான் தாலி கட்டி கூட வச்சிருக்க சிகப்பி இருக்கும்போது பிளாக்கி எல்லாம் எதுக்கு?" என்று லந்து கொடுத்தவனை முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்...

மலரின் முகத்தைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த ஆதித்யா,
பாடி கார்ட்ஸ் புறம் திரும்பி அவர்களை வர வேண்டாம் என்று சொல்லி விட்டு தானே வண்டியை ஸ்டார்ட் செய்தான். அதன்பின்
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமைதியாகவே வந்தாள் மலர்.

இப்பொழுதெல்லாம் உரிமையாக அவனிடம் பேசுகிறாள் சிரிக்கிறாள் கோபம் கூட வருகிறது அவளுக்கு.. அவன்மீது மட்டும்தான்....
உரிமை இருக்கும் இடத்தில் தானே கோபத்தை கூட காட்ட முடியும்...?!

சிட்டியை விட்டு சற்றுத் தள்ளி இருந்த ஒரு குக்கிராமத்தின் தோப்பிற்கு அவளை கூட்டி வந்திருந்தான் ஆதித்யா.... உள்ளே அடர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்களை சுற்றி சுற்றி வாய் பார்த்தவாறு வந்துகொண்டிருந்த மலரை ஆதித்யாவும் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான்...

தோப்பிற்கு நடுவினுள் சிறியதாக ஒரு குடிசை வீடு இருக்க.... அதை சுற்றிலும் அழகாக முல்லை கொடிகளும் ரோஜா செடிகளும் வாழை மரங்களும் நேர்த்தியாக வளர்க்கப் பட்டிருந்தது...
"வாவ் சூப்பருங்க இந்த பிளேஸ் ரொம்ப அழகா இருக்கு "என்று ரசனையுடன் மலர் சொல்ல....
அவளின் முகத்தையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா...

"எனக்கு ஏதோ ஒரு பிக்னிக் வந்த ஃபீல் " என்று கண்களில் அபிநயம் பிடித்தவளை கைப்பற்றி உள்ளே அழைத்துச்சென்றான் ஆதித்யா.

மலர் தங்கள் வீட்டு தோட்டத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள். அதனால் அவளுக்கு அதை போன்ற இடங்கள் தான் பிடிக்கும் என்றுதான்... இந்த தோப்பிற்கு அழைத்து வந்திருந்தான் ஆதித்யா...

"நான் ஃபர்ஸ்ட்டே சொல்லிட்டேங்க... இங்க நீங்க நீங்களா இருக்கனும் அந்த ஆதித்யா எனக்கு வேண்டாம் என்னோட ஆதி தான் எனக்கு வேணும்" என்று குடிசைக்குள் நுழைந்ததும் சொன்ன மலரை அணைத்துக் கொண்டவன்...

"சரி ஃப்ரெஷ்ஷா இரண்டு இளநீரை குடிச்சிட்டு தெம்பா உட்கார்ந்து பேசுவோம் ..."அணைத்தபடியே சொல்ல,

"ஹலோ ஆதி நீங்க என்ன விட்டா தான்... ரெண்டு பேரும் வெளியே போக முடியும்" என்று சிரித்துக்கொண்டே மலர் சொல்ல....

"ஏன் இப்படி அணைச்சுகிட்டே வெளியே போக முடியாதா?" என்று கேட்ட ஆதித்யா அணைத்தபடியே அவளை தூக்கிப் பிடிக்க... "அய்ய்யோ ஆதி இறக்கி விடுங்க என்ன..." என்று முகம் சிவந்தவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன்,"அப்படியெல்லாம் இறக்கி விட முடியாது மலர் ...எனக்கு ஒரு கிஸ் வேணும் அதை குடுத்துட்டா உன்னை நான் இறக்கி விடறேன்" என்று டீல் பேசினான் ஆதித்யா.

அன்றொருநாள் தன்னை காரில் இருந்து இறங்க விடாமல் செய்து, முத்தம் வாங்கியது நினைவுக்கு வர.... "அவ்வளவுதானே தாரேன் தாரேன்..." என்றவள் அவனது கன்னத்தில் அன்றைக்கு போலவே பட்டும் படாமல் முத்தமிட.... "ஹலோ நான் ஒன்னும் குழந்தை இல்லை நான் கேட்டது இங்க.." என்று அவன் தன் இதழை சுட்டிக்காட்ட....
"முடியாது ஆதி" என்று சிணுங்கினாள் அவள்....
"சரி இப்படியே தோட்டத்துக்கு உன்ன தூக்கிட்டு போறேன்... அங்க வேலை செய்றவங்க... எல்லாரும் நம்மள தான் பார்ப்பாங்க" என்று பயமுறுத்த கண்களை உருட்டி அப்பாவி குழந்தையைப்போல் மலங்க மலங்க பார்த்தவளை பார்த்தவனின் மனம் கனிய அவளது நெற்றியில் முத்தமிட்டவன் அவளை இறக்கியும் விட்டான்.

சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தவள்... "இருந்தாலும் நீங்க ரொம்ப மக்கு ஆதி" என்று அவனுக்கு வலிப்பம் காட்டிவிட்டு குடிசையை விட்டு வெளியே ஓடினாள் மலர்...

"ஹேய் உனக்கு வாய் கூடிப்போச்சு உன்ன போய் பாவம்னு விட்டேன் பார்த்தியா..." என்று அவளைத் துரத்த ... மலரும் அவன் கையில் சிக்காமல் விடாமல் ஓடினாள்.

உண்மையில் ஆதித்யா தான் அவளை விட்டுப் பிடித்துக்கொண்டிருந்தான்.
அதற்குள் ஆட்கள் வேலை செய்யும் தென்னந்தோப்பு இருக்கும் பகுதிக்குள் வந்துவிட்ட இருவரும் சமத்தான தம்பதியாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்தனர். ஆதித்யா இந்த தென்னந்தோப்பை ஏற்கனவே மலரின் பெயரில் வாங்க திட்டமிட்டிருந்தான். இங்கிருந்து சென்றவுடன் தான் அவளிடம் அபிப்ராயம் கேட்டு அதன்பிறகு வாங்க கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தான்...

இருவருக்கும் இளநீர்கள் வெட்டி கொடுக்கப்பட, அதை குடித்தவர்கள் சற்று நேரம் அங்கு வேலை செய்பவர்களிடம் பேச்சுக் கொடுத்துவிட்டு பொடி நடையாக நடக்க ஆரம்பித்தனர்.

மலர் கவனமாக ஆதித்யாவை விட்டு ஐந்து அடிகள் நகர்ந்து தான் நடந்து வந்து கொண்டிருந்தாள்.திருட்டுப் பையன் ஆதி எப்ப வேணாலும் பிடித்து விடுவான் என்ற பயம்தான்....
ஆதித்யாவும் மலரை எப்படி பிடிக்க என்று ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டுதான் நடந்து கொண்டிருந்தான்....

"மலர் அங்க பாரு வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது..." என்று ஆதித்யா திடீரென்று கூவ,மலர் மறந்தும் அவன் காட்டிய திசையைப் பார்க்காமல் இன்னும் இரண்டு அடிகள் தள்ளியே நடந்தாள்....

"இப்படி பல்பு வாங்கிட்டியா டா ஆதித்யா வெளியே சொன்னால் வெட்க கேடு... மானக்கேடு...நம் ராஜ தந்திரங்கள் பழிக்கவில்லையே இன்னும் பயிற்சி வேண்டுமோ?"என்று வடிவேலு சொல்லும் பாணியில் ஆதித்யாவும் வாய்விட்டு புலம்ப.... மலர் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள். அவள் அசந்த சிங்கிள் கேப்பில் புகுந்து சிக்ஸர் அடித்தான் ஆதித்யா.....

அவளை அணைத்து பிடித்தவனிடம்...
"ஆதி ப்ளீஸ்" என்று சொல்லவந்தவளின் வாயை தன் கரத்தினால் மூடி ... அவளை தன் இரு கரங்களால் ஏந்தியவன்... "தனியா பேசுவோமா?" என்று ஹஸ்கி வாய்சில் கேட்க... மலருக்கு தான் வெட்கமாக வந்து தொலைந்தது....

"பேசத்தான் போறோம்... அதுக்கு எதுக்கு பூச்சாண்டி இவ்வளவு பில்டப்பு..." என்று உள்மனம் புலம்ப... கைகளோ அவனின் கழுத்தை சுற்றி மாலை ஆகியிருந்தது....
குடிசை வீட்டின் பக்கவாட்டில் இருந்த மண் மேட்டில் அமர்ந்தவன் அவளையும் தன் மடியின் மீது இழுத்து உட்கார வைத்திருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்திருந்தனர். ஆனால் பழைய விஷயங்களை மறந்தும் கிண்டவும் கிளறவும் இல்லை....
ஆனால் திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்... சில முக்கியமான விஷயங்களை இப்பொழுதே பேசி முடித்துவிட்டால் வருங்காலத்தில் பிரச்சனைகள் வராது என்று நினைத்த ஆதித்யா தனியாகப் பேசுவோம்... தனியாக பேசுவோம்... என்று மலரை தள்ளி கொண்டு வந்திருந்தான்....
ஆனால் பேசும் எண்ணமே இல்லை என்பது போல் அவளின் இடையை வருடியவாறு அவளைக் கூச வைத்து கன்னத்தோடு கன்னம் இழைத்து கொண்டிருந்தவனிடம்... "கொஞ்சம் கம்போர்டபுளா தள்ளி தள்ளி உட்கார்ந்து பேசுவோமா ஆதி..." என்று மலர் மெதுவான குரலில் கேட்க... "எனக்கு இதுவே கம்போர்டபுளா தான் இருக்கு" என்றவனை திரும்பி பார்த்து முறைத்தாள் மலர்.

அவளது முறைப்பு அவனை பாதிக்காதவாறு திரும்பிக் கொண்டவன்....
"நான் ரொம்ப கெட்டவன்" என்று ஆரம்பித்தவன் கண்களில் சிறு கலக்கம் தெரிந்தது....

"அன்னைக்கு குடிபோதையில் நான் என்ன சொன்னேன்னு எனக்கு ஞாபகமில்லை ஆனா இப்போ முக்கியமான விஷயம் ஒன்னு சொல்றேன்..."என்றவன்,

"அன்னைக்கு ஹோட்டல்ல ..."என்று ஆரம்பித்த சங்கரி பணம் தந்ததை மறுத்ததுவரை சொன்னவன்... "அன்னைக்கு நைட் கோபத்துல இவங்க எல்லாம் எதுக்கு இருக்கணும் சீக்கிரம் செத்து தொலைய வேண்டியதுதானே... அப்படின்னு நினைச்சேன்.... கரெக்டா இந்த இன்சிடென்ட் நடந்த இரண்டு மாசம் கழிச்சு பேப்பர்ல பிரபல தொழிலதிபர் ஈஸ்வர மூர்த்தியின் கார் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே அவரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.
நியூஸ பார்த்ததும் என் மனசுல அவ்வளவு சந்தோஷம்.... இப்பவும் சந்தோஷம்தான்... நான் என் சொந்த அம்மா செத்ததுக்கு சந்தோஷப்பட்ட கேடுகெட்டவன்...." என்று கண்கலங்கியவனை ஆதூரமாய் பார்த்தவள், "இதெல்லாம் நடந்து முடிஞ்சது அதைப்பற்றி யோசிக்காதீங்க" என்றாள் தேறுதலாக....

சற்று நேரம் அமைதியாக இருந்தவன்... "மலர் உனக்கு நந்தனை அவ்வளவு பிடிக்குமா? உன்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே நான் லவ் சொல்லும்போது நீ ஏன் ஏத்துக்கல?" என்று கேட்டான் அவனது குரலில் பொறாமை இல்லை வலி தான் இருந்தது....

தனது இடையை பிடித்து இருந்த அவனது கையில் அழுத்தம் கொடுத்தவள்,
"ஆதி எனக்கு எல்லாமே பார்த்துப்பார்த்து செய்றவங்க என்னோட அம்மாவும் அப்பாவும் தான்...சின்ன வயசுல இருந்து எனக்கு கஷ்டம்னா என்னன்னு தெரியாது எப்பவுமே சிரிச்சுகிட்டே இருப்பேன்...நான் கலகலன்னு வாய்விட்டு பேசுறது கூட என் அப்பா அம்மா கிட்ட மட்டும் தான் ...என் அப்பா அம்மா எனக்கு என்ன பண்ணினாலும் அது சரியா இருக்கும்னு என் மனசுல சின்ன வயசுல இருந்தே ஆழமா பதிஞ்சு போன ஒரு உணர்வு... என்னோட அப்பாவே நந்தன என்னோட மருமகன் அப்படின்னு சொல்லும்போது நான் எப்படி மறுப்பேன்...." என்றவள் சில நொடிகள் அமைதியாகி விட்டு... நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி கோவில்ல வச்சு என்கிட்ட லவ் பண்றேன்னு நந்தன் தான் சொன்னார் நான் சொல்லல.... எந்த பொண்ணுக்கும் தன்ன கட்டிக்கப் போறவன் தன்ன காதலிக்கணும்ன்னு மனசுல ஆசை இருக்கும் அதுதான் எனக்கும் நடந்துச்சு..." என்றவள் பெருமூச்சுவிட்டு விட்டு ,
"அப்பா அம்மா தவறினதுக்கு அப்புறம் அண்ணாவுக்கு நான் ரொம்ப பாரமாக இருக்கேன்னு எனக்குள்ளேயே ஒரு உறுத்தல் சோ டெய்லி நந்தன் சீக்கிரம் வந்துடனும்னு வேண்டுவேன்.... அவரும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அண்ணா வீட்ல எந்த பிரச்சனையும் வராதுன்னு நான் நினச்சேன்.... அதுக்கப்புறம் நந்தனும் திரும்பி வந்தார் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் உங்க வீட்டில இருக்கிறப்போ எனக்கு ஏனோ தனியா இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் அவர் வந்ததுக்கு அப்புறம் அது குறைஞ்சு போச்சு.... ஆனா அடுத்தடுத்த அவர் என் மேல சந்தேகப்பட்டது என்ன அவாய்ட் பண்றது எல்லாமே அவர் மேல இருந்த சின்ன ஃபீலிங்ஸ கூட தொடச்சு எடுத்துட்டு... நான் அவர என்னோட வாழ்க்கை துணையாக வரப்போறவர்னு நெனச்சு பார்த்தேனே தவிர அவர் மேல எனக்கு காதல் ஏக்கம் அப்படின்னு எதுவும் இல்லை... என்னோட அப்பா ஆசைப்பட்ட மாதிரி நந்தன கல்யாணம் பண்ணிக்க முடியலைனு நான் வருத்தப் பட்டது உண்மைதான்.... இதுல எந்த தப்பும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல நான் உறுதியா நந்தன காதலிக்கவே இல்ல... அதே மாதிரி ஏற்கனவே நிச்சயமான ஒரு பொண்ணு கிட்ட வந்து நீங்க லவ் பண்றேன்னு சொல்லும்போது அவ அத எப்படி ஏத்துக்குவானு நீங்க நினைக்கலாம்...?" என்று பொட்டில் அடித்தது போல் நந்தனை காதலிக்கவே இல்லை என்றும் தன் மீது உள்ள தவறையும் எடுத்து சொன்னவளை இன்னும் தன்னுடன் இறுக்கிக் கொண்டான் ஆதித்யா....

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்று புதிரோடு ஆரம்பித்த ஆதி...
மகேஷ் அவனோட குடும்பத்தோட சேர ஆசைப்படும் போது நான் சுவாதியை பிரிய முடியாம ....உங்க அப்பாவை ஒரு தடவை உன்னோட பையன வீட்டில சேர்த்துக்காதயானு மிரட்டிட்டு வந்தேன் அவர் இப்ப இல்ல அதனால உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று தலைகுனிந்தவாறு மன்னிப்பு கேட்டான் ஆதித்யா.....

அதனால்தான் அப்பா மகேஷ் மீது பாசம் வைத்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாரா? என்று நினைத்தவள், ஆதித்யாவின் புறம் திரும்பி... "என்னோட அப்பா மிரட்டுனா பயப்பட மாட்டார் ..."என்று கெத்தாக சொல்ல...
"நான் உன்ன வச்சு தான் மிரட்டினேன்" என்று உள்ளே போன குரலில் சொன்னான் ஆதித்யா...
"எப்படி?" என்று புரியாமல் கேட்டவளிடம் "உங்க பையன உங்க கூட சேர்த்துக்கிட்டா... உங்க மகள தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிப்பேன்னு தமாசுக்கு மிரட்டினேன்"என்றவனை பார்த்து விழிகளை உருட்டி முறைத்தாள் மலர்...
ஹிஹிஹி என்று இளித்து வைத்த ஆதித்யாவை பார்க்க இப்பொழுது சிரிப்பு வந்து விட்டது அவளுக்கு...
"ஆனா விதியை பாத்தீங்களா... லாஸ்ட் ல எங்க அப்பா கிட்ட சொன்ன மாதிரி என்னைய கல்யாணம் பண்ணிட்டீங்களே....." என்று மேலும் சிரித்தவளின் காதில் முத்தம் வைத்த ஆதித்யா....

"இப்பதான் நிம்மதியா இருக்கு உன்னோட காதல பிரிச்சு... கல்யாணம் பண்ணிகிட்டோம்னு மனசு ஓரத்துல உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்துச்சு இப்ப நீ சொன்னத கேட்டதுக்கு அப்புறம் தான் ரிலாக்ஸா ஃபீல் பண்றேன் ...." என்றவன் அவளின் உச்சந்தலையில் தாடையைப் பதித்து சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்....

"என்னால என் தங்கச்சிகளால நீ நிறைய அழுது இருக்க ..."என்றவன்...
சில நொடிகள் அமைதிக்கு பின்,
"சாரி மலர் ரியலி வெரி சாரி உன்னோட உணர்வோட விளையாட எங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்ல .... இனி அப்படி நடக்காம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு... இனி நீ இந்த ஆதித்ய ஓட பொறுப்பு" என்றவன்
அவளின் அமைதியை பார்த்து "என்னாச்சு?" என்று ஆதித்யா கேட்க,
"ஒன்னும் இல்லங்க பூச்சாண்டி பூச்சாண்டினு நான் நேம் வச்ச ஒருத்தர காணோம் நீங்க பார்த்தீங்க..." என்று நக்கலாக கேட்க, அவளின் இதழை பிடித்து திருகியவன்... வாய் வாய் என்று இதழில் முத்தமிட வர அவனை தள்ளி விட்டு விட்டு ஓடினாள் மலர்...
அவளைத் துரத்தி சென்ற ஆதித்யாவின் இதழில் புன்னகை உறைந்திருந்தது....
.................
தொடரும்....
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN