ஆதித்யா சக்கரவர்த்தி -29(epilogue)

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எபிலாக்


"உனக்குள் தொடங்கி உனக்குள் தானே...
எந்தன் உலகம் முடிகிறதே...
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே...
எந்தன் நாட்கள் விடிகிறதே...
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்...
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்....
நேற்றென்னும் 'சோகம்'
நெருப்பாய் வந்து தீ மூட்டும்...
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே..........."


ஆறு மாதங்களுக்குப் பிறகு,
நடுஇரவில் தன் கை அணைப்பிற்குள் படுத்திருந்த மலரின் முகத்தை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா..... அவளின் கன்னக் கதுப்பில் ஒட்டியிருந்த முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கியவன்...
இந்த ஆறு மாதத்தில் நடந்தவைகளை நினைத்துக் கொண்டிருந்தான்.

சுவாதி சௌமியா மீது கோபமாக இருந்த ஆதித்யாவை.... நமக்கு சொந்தபந்தங்கள் எல்லாரும் வேணும்.... நமக்கு பிறக்கப் போற புள்ளைங்களுக்கு அத்தை மாமா யாரும் வேண்டாமா? என்று பேசிப்பேசி கரைத்து... ஒரு பாடுபட்டு அவனை சரிகட்டி வீட்டிற்கு அவர்களை கூப்பிட சம்மதம் வாங்கி இருந்தாள் மலர்.

மலருக்கு நன்றாகத்தெரியும்... என்னதான் கோபம் என்ற போர்வையில் ஆதித்யா தன் மனதை மறைத்தாலும் அவனுக்கு தங்கைகள் என்றால் உயிர் என்று.....

சௌமியா ஏற்கனவே அண்ணனின் ஒதுக்கத்தினால் கவலையாகத்தான் இருந்தாள். அவளின் திருமணம் முடிந்து இவ்வளவு நாட்களாகியும் ஆதித்யா அவளின் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை என்பது போல் தான் இருந்தான்....
மகேஷ் ஹாஸ்பிடலில் இருந்த சமயத்தில் .... சௌமியா வந்திருக்கின்றாள் என்று கூட அவனது கருத்தில் பதியவே இல்லை...

என்னதான் கணவனுடன் சண்டை போட்டு ஜாலியாக வாழ்க்கை நகர்ந்தாலும்... பிறந்த வீட்டின் பாசத்தையும் சௌமியாவின் மனது எதிர் பார்க்கத்தான் செய்தது....
சௌமியா செய்த தவறை உணர்ந்து மனம் திருந்தி இருந்ததால்... மலர் அவளை வீட்டிற்கு அழைக்கும் போது சந்தோஷமாகவே உணர்ந்தாள் ...

சுவாதியோ அண்ணன் தன்னிடம் சொன்ன விஷயங்களை ஏற்க முடியாமல் தவித்துப் போனாள். முக்கியமாக மலர்தான்....மகேஷிடம் பேசி தன்னுடன் பேச சொல்லி சொல்லியிருக்கிறாள் எந்த தெரிந்த பின்...அவள் மனதிற்குள் ஏதோ செய்தது.

மலர் அவளது அண்ணனின் வாழ்க்கையை சீராக நினைத்தாள் தானோ தனது அண்ணனின் வாழ்க்கையை பாழாக்க அல்லவா நினைத்து இருக்கிறேன்... என்று உள்ளுக்குள் வெட்கி போனாள் சுவாதி. அதுவும் தன் அண்ணன் தன்னிடம் பேசிய பேச்சுகளை நினைத்து நினைத்து உள்ளுக்குள் நொந்து போய் இருந்தாள். அவளுக்கும் அவளது அம்மாவின் முகம் லேசாக நினைவில் நின்றது... தானும் அப்படியா? என்று அவளுக்கு அவளே பலமுறை கேட்டுக் கொண்டாள்....

சிறுவயதிலிருந்து தாங்கள் கேட்டது எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து அரவணைத்த அண்ணன்.... இன்று அவன் வீட்டிற்கு கூட வர வேண்டாம்... என்று சொன்னது மட்டுமல்லாமல் அவளிடம் பேசக்கூட முயற்சி செய்யவில்லை ...

ஆதித்யாவின் விலகலில்...ஓரளவு மனம் திருந்தி இருந்த சுவாதியை தொலைபேசியில் அழைத்து மலர் வீட்டிற்கு வர சொன்னவுடன் அவளுக்கு அங்கு போகவே சங்கடமாகத்தான் இருந்தது. இருந்தாலும் தனக்கும் தன் அண்ணனின் மீது பாசம் இருக்கிறது... என்பதை புரியவைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் சுவாதியும் கிளம்பி வந்து விட்டாள்...

இருவரையும் பார்த்து ஆதித்யா விறைப்பாகவே இருக்க.... மலர்தான் நாட்டாமை வேலை செய்து அண்ணன் தங்கைகளை சேர்த்து வைத்தாள்.
ஒருவகையில் குற்றம் செய்தவர்களுக்கு காலம் முழுவதும் நெஞ்சை அறுக்கும் தண்டனை தான் மன்னிப்பு.... அதை தாராளமாகவே வழங்கியிருந்தாள் மலர். அவளின் சிரித்த முகத்தை பார்க்கும் போதெல்லாம் ... சகோதரிகள் இருவருக்கும் உள்ளத்தில் குறுகுறுப்பு வராமல் இல்லை... சில பல நாட்கள் மலரின் வாழ்க்கையில் புன்னகை பறித்தது அவர்கள்தானே!!!

அதன் பிறகு வந்த நாட்களில் வாரம் ஒரு முறை சரத் ...சௌமியா ...மகேஷ் சுவாதி வானதி அனைவரும் ஆதித்யாவின் வீட்டிற்கு விஜயம் புரிய ஆரம்பித்தனர்....

குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மகிமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆதித்யாவிற்கும்... அவனின் சகோதரிகளுக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. இப்பொழுதெல்லாம் மகேஷை விட மலரை தாங்கு தாங்கு என்று தாங்குவது சுவாதி தான்... உளமார மலரின் நற்குணத்தை உணர்ந்து மனம் திருந்தி இருந்தாள் அவள்...
குடும்பத்திற்கு அடுத்த சந்தோசமாக....
சௌமியா கர்ப்பமாக இருந்தாள். சரத் அவனின் மியாவை ஒரு வேலையும் செய்ய விடாமல் தாங்கிக் கொண்டிருந்தான்... குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே விஷயமறிந்து மகிழ்ச்சிதான்....
ஆதித்யா தான் விஷயம் கேள்விப்பட்டு மகிழ்ச்சியில் கண்கலங்கி விட்டான்... அவனின் குட்டித்தங்கை ஒரு குழந்தைக்கு தாயாகப் போகிறாள் என்றால் அவனால் நம்பவே முடியவில்லை...
அவனது மாப்பிள்ளைகள், "அடுத்த நீங்கதானே அப்பா ஆக போறிங்க..." என்று கிண்டல் செய்ய ஆதித்யாவிற்கு கூட வெட்கம் வந்து தொலைந்தது.....

"பாஸ் பாஸ் போஸ் குடுங்க... பாஸ்... இதெல்லாம் வரலாற்றில் போடவேண்டிய போட்டோ" என்று ஆதித்யா வெட்கபட்டு சிரித்ததை தனது மொபைலில் கேப்சர் செய்தான் சரத்....

மலர் நிமிர்ந்து பார்க்கவில்லை அவளுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது....
மலரை சௌமியா ஓட்ட அவளுக்கு சப்போர்ட் செய்து கொண்டு வந்தாள் சுவாதி....
மகேஷ் சௌமியாவிற்கு சப்போர்ட் செய்ய... அங்கு கலகலப்பான உரையாடல் உருவாகியது...

மனக்கசப்புகள் குறைந்து உறவுகளுக்குள் ஒற்றுமை வந்திருந்தது. சின்ன சின்ன ஊடல்கள் வந்தாலும் அதை சரி செய்து... நிம்மதியாக வாழ்வதற்கு கற்றுக் கொண்டனர்.......

இன்னும் தங்களுக்குள் உள்ள காதலை வாய் வார்த்தையாக சொல்லாவிட்டாலும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தனர் ஆதித்யா மலர் தம்பதியினர்...

மலருக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தான் ஆதித்யா. மலருக்கு பிடித்த மீன் தொட்டி கூட ஆதித்யாவின் வீட்டில் குடியேறியது....
அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்த கோல்ட் பிஷ் கூட இடம்பெற்றிருந்தது....

மலரும் ஆதித்யாவை தாயாகவும்... தாரமாகவும் தாங்க தான் செய்தாள். சிறு பிள்ளை என அடம் பிடிக்கும் தருணத்தில் தாயாகவும்... சில்மிஷம் பண்ணும் நேரத்தில் தாரமாகவும் மாறுவாள் மலர்....

ஆதித்யா மலருக்கு என்று வாங்கிய அந்த தோப்பில் அவர்களுக்கென வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தான்... குடும்பத்தோடு அங்கு சென்று விடுமுறை நாட்களை அங்கேயே கழிக்கலாம் என்று மலர் சொல்லி இருந்தாள்.
அதற்காகத்தான் அந்த ஏற்பாடு....
நடந்ததையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த ஆதித்யா...

தன் அருகில் துயில் கொண்டிருந்த மலரின் முகத்தை பார்த்து, 'இவள் என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம்... எனக்கே எனக்கென்று வரமாய் வந்தவள் ...என்னவள்' என்று மனதிற்குள் நெகிழ்ந்து மலரின் பிறை நெற்றியில் மென்மையாக இதழை பதிக்க... தூக்கத்திலும் மலரின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. மூடியிருந்த கண்களில் கருமணி உருள்வது கூட நன்றாகவே தெரிந்தது

அதை கண்டுகொண்டவன்,
"ஹேய் கள்ளி தூங்குற மாதிரி நடிக்கிறியா..." என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டவன்... மெதுவாக அவளின் வெற்றிடையில் தன் மீசையால் குறுகுறுப்பு மூட்ட... அதைத் தாங்க முடியாமல் கலகலவென சிரித்துவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான் ஆதித்யா.

"என்கிட்டயே நடிக்கிறியா?" என்று புருவத்தை தூக்கி அவன் கேட்க...
அவனது மீசையை முறுக்கியவள், "ஆமா பூச்சாண்டி புருஷா" என்று கண் சிமிட்ட...
"கொழுப்புடி உனக்கு... என் மேல உள்ள பயம் போய்ட்டு..." என்று மிரட்ட,
"நீங்க மிரட்டினாலும் இனி எனக்கு இனிமே பயம் வராது... ஏன்னா......." என்று இழுத்தவள், அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் இருந்து ... லேசாக நகர்ந்து கொண்டே,
"நீங்க ஒரு முரட்டு முட்டாப் பீஸ்ன்னு எனக்கு எப்பவோ தெரிஞ்சு போச்சு ..." அவனின் கைகளில் இருந்து தப்பி ஓடிய மலரை இழுத்துப் பிடித்து தன் மேல் போட்டுக் கொண்டவன்... " உனக்கு தைரியம் இருந்தா அத இப்ப சொல்லு டி பாப்போம்..." என்று ஆதித்யா பொய்க் கோபம் காட்ட....
"அதுக்கு என்ன சொல்லிட்டா போச்சு..." என்ற மலரும் கண்களை உருட்டி ,
"ஆதி நீங்க ஒரு முரட்டு முட்டாப்ப்ப்......" என்று முடிக்கவில்லை அவளின் இதழை சிறைப்பிடித்து இருந்தான் மலர்விழியின் செல்ல பூச்சாண்டி....

மறுநாள் காலையில்....

அன்று ஆதித்யா அப்பாவின் நினைவு நாள்....
உடல் ஊனமுற்றோர் இருக்கும் கருணாலயத்திற்கும்... அனாதை ஆசிரமத்திற்கும் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....
அதற்கு தான் கிளம்பிக் கொண்டிருந்தனர் ஆதித்யாவும் மலரும்...

மற்றவர்கள் அனைவரும் நேரடியாக அங்கேயே வந்து விடுவதாக சொல்லியிருந்ததால் ஆதித்யாவின் வீட்டிலிருந்து இவர்கள் மட்டுமே கிளம்பி தயாராகினர்.

"என்னங்க நான் மாமா போட்டோவ பார்த்ததே இல்ல..." என்று குறைபட்டுக் கொண்ட மலரை பார்த்து சிரித்தான் ஆதித்யா....
"ப்ச்ச்... எதுக்கு சிரிக்கிறீங்க ஆதி" என்று முறைத்தவளிடம்....
" இப்ப என்ன அப்பா போட்டோவைப் பாக்கணும் அவ்வளவு தான..." என்றவன் வார்ட்ரோப்பைத் திறந்து சிறிய சாவி ஒன்றை எடுத்தான்.

மலர் ஏற்கனவே அந்த சாவியை பார்த்திருந்ததால், "இது எதுக்குள்ள சாவிங்க??" என்று சந்தேகம் கேட்டாள்.
"பொறுங்க மேடம்"என்ற ஆதித்யா அவர்களின் அறையின் ஒரு பக்க சுவரில் இருந்த ஸ்க்ரீனை நகர்த்த அங்கு ஒரு சிறிய அறையின் கதவு தெரிந்தது...
அதை திறந்து மலரை உள்ளே அழைத்து சென்றான் ஆதித்யா...
சிறிய அறைதான் என்றாலும்
அங்கு நிறைய பொருட்கள் இருந்தது.
சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரின் புகைப்படத்தை பார்த்த மலர்,
"இதுவா மாமா..." என்று கேட்க அந்த புகைப்படத்தில் இருந்து கண்ணை எடுக்காமலேயே... ஆம் என்பது போல் தலையசைத்தான் ஆதித்யா.

"எங்க வீட்ல இருந்து இந்த போட்டோவ மட்டும்தான் எடுத்துட்டு சித்தப்பா வீட்டுக்கு வந்தோம்"
"இத நீங்க நம்ம ரூமிலேயே மாட்டலாம்ல?" என்று கேட்ட மலரிடம் "என் அப்பா போட்டோவ பார்க்கும்போதெல்லாம் பழைய ஞாபகங்கள் வரும்... அதை என்னால தாங்க முடியாது" என்றவன்...
"எனக்கு எப்பவாவது அளவுக்கு மீறிய கஷ்டமோ... மன அழுத்தம் சோர்வு இருந்தா இங்க அப்பாவ பாக்க வந்துடுவேன்.... என்னோட கஷ்டம் குறைந்த மாதிரி ஃபீல் ஆகும்" என்று சொன்ன ஆதித்யாவை பரிவுடன் பார்த்த மலர், அவனின் மன நிலையை மாற்றுவதற்காக...
" நம்ம ரூம்லயே இப்படி ஒரு ரூம் இருக்குறத எனக்கு ஏன் சொல்லல...?" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவளிடம்,
"நான் தான் சொன்னேனே மலர் எனக்கு ஏதாவது கஷ்டம்... மன அழுத்தம்னா மட்டும் தான் இங்க வருவேன்.... நீ இருக்கிறதால இப்போ எனக்கு எந்த கவலையும் இல்ல" என்றான்....
"சரி நம்புறேன்..."என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே அறையை நோட்டமிட்டாள் மலர்.

அறையின் ஓரத்தில் ஒரு பெரிய பெட்டி இருக்க... அதை திறந்து பார்த்தாள் மலர்...
அதில் அவளின் துப்பட்டாவும் பழைய புகைப்படமும்...அவளின் சிறிய சிறிய பொருட்களும் கிடந்தன...
அவர்கள் அறையில் வார்ட் ரோப்பில் பார்த்த அதே துப்பட்டா தான்... ஆதித்யாவை திரும்பி பார்த்த மலர் "இதெல்லாம் என்ன?" என்று கேட்க,
"என் காதலின் ஞாபகச் சின்னங்கள் மொசக்குட்டி ..."என்று கண் சிமிட்டினான் ஆதித்யா...

அவனை பார்த்து முறைத்த மலர்... "இப்ப நம்ம சேர்ந்து தானே இருக்கோம் ...இதெல்லாம் என்கிட்ட காட்ட மாட்டீங்களா?" என்று கோபப்பட....
"நீ என்கிட்ட எப்ப ஐ லவ் யூன்னு சொல்றியோ... அப்பதான் காட்டணும்னு இருந்தேன்... அதுக்குள்ள நீ பார்க்க வேண்டிய நிலமை வந்திட்டு" என்று சொல்லிவிட்டு தோளை குலுக்கினான் ஆதித்யா...

"அதெல்லாம் பொறுமையா சொல்லிக்கலாம்..." என்று நழுவிய மலர், "டைம் ஆகுது பாருங்க...நம்ம சீக்கிரம் ஆசிரமத்திற்கு போகணும் எல்லாரும் நமக்காகத்தான் வெயிட் பண்ணுவாங்க"என்று அவனை கிளம்ப துரித படுத்தினாள்....

"நல்லா பேச்ச மாத்துற....லவ் யூ ன்னு சொன்னா சொத்தா குறைஞ்சு போய்டும்" என்று முணுமுணுத்த ஆதித்யா அறையை பூட்ட... மலர் சிரித்துக்கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

5 வருடங்களுக்குப் பிறகு,

"டேய் மாமா பேச்சு கேளுடா... நில்லு ஓடாத முகுந்த்" என்று தன் தங்கை மகனிடம் ஒரு வழி ஆகி கொண்டிருந்தான் ஆதித்யா...

"டேய் ஜட்டி போடுடா... "என்று கூவியவாறே அவனைத் துரத்த... அவனோ சந்து பொந்துகளில் எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டிருந்தான்.

அவனை துரத்திய வழியில் நின்றனர் சரத்தும் மகேஷும்...
"டேய் சரத் பிள்ளையாட பெத்து வச்சிருக்க...எங்க இருந்துடா கொண்டுவந்த இந்த வானரத்த... எல்லாரையும் அடக்குற என்னால இவனை அடக்க முடியலையே" என்று பாவமாக கேட்ட ஆதித்யாவை பார்த்து... கலகலவென சிரித்தனர் அவ்வீட்டின் மாப்பிள்ளைகள்.

"பாஸ் நீங்க பெட் கட்டி இருக்கீங்க... மறந்துடாதீங்க... அவனை சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சு மிஷின கம்ப்ளீட் பண்ணுங்க... ஐ மீன் ஜட்டியை போட்டு விடுங்க"என்று சரத் ஆதித்யாவிடம் சொல்ல...

"எல்லாம் என் நேரம் டா..."என்று தலையில் அடித்துக்கொண்டு அந்த குட்டி வாண்டை தேடிச் சென்றான் ஆதித்யா....

அனைவரும் விடுமுறையை கொண்டாட தோப்பு வீட்டிற்கு வந்திருந்தனர்..... முகுந்தன் சரத் சௌமியாவின் ஐந்து வயது தவப்புதல்வன்...

அன்று சரத் விளையாட்டாக ஆதித்யாவிடம், "என்னோட பையனுக்கு டிரஸ் மட்டும் மாட்டி விடுங்க பாஸ்... நூறு தோப்புக்கரணம் நான்
போடுறேன்" என்று தில்லாக சொல்ல ஆதித்யாவும், "இதென்ன பெரிய விஷயமா?" என்று விட்டு இப்பொழுது பாவம் முகுந்தன் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறான்...

ஆதித்யா தலையில் அடித்துக் கொண்டு சென்றதை பார்த்த மகேஷ், சரத்தை சந்தேகமாக பார்த்து... "டேய் சகல உண்மையை சொல்லுடா ...உன் பையனுக்கு நீதான வீட்டில ஜட்டி போட்டு விடுவ..." என்று கேட்க...
ஹிஹிஹி என்று இளித்த சரத் "எப்படி சகல கரெக்டா கண்டுபிடிச்சீங்க?" என்று கேட்க...
அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த மகேஷ்...
"அது ஒன்னும் இல்ல சகல... உன் முகராசி அப்படி அத பார்த்தாலே எல்லாம் தெரியும்..." என்றான்.
"அப்படியா சகல..." என்று கேவலமாக வெட்கப்பட்ட சரத்,
"எங்க வீட்டிலனா என் மகன் பிரிட்ஜ் குள்ள ...கட்டிலுக்கு அடியில... கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சுப்பான்.... அவன துரத்திப் பிடிக்கிறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே அது அந்த கடவுளுக்குத்தான் தெரியும்..." என்றவன்,
"ஆனா அவன் அம்மாகாரி இருக்காளே... எப்ப பார்த்தாலும் எல்லா வேலையும் என்ன வச்சு தான் செய்ய வைப்பா... முக்கியமா என் புள்ளைய பாத்துக்குற பொறுப்பு எனக்கு தான்... மியா ன்னு பேரு வச்சதும் தான் வச்சேன்... விட்டா கடிச்சு என்னையே தின்றுவா ராட்சசி" என்று சரத் சௌமியாவை பாராட்ட ....
அவனைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த மகேஷ், "என் கொழுந்தியா சமைச்சி போடுறத மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு தூங்கறியாம்... இப்போ என்னவோ வீட்ல பெரிய பெரிய வேலை பண்ற மாதிரி பில்டப் கொடுக்க?" என்று கேட்டான்.

"நீயே சொல்லு சகல சமைக்கிறது எல்லாம் ஒரு மேட்டரா சகல ... அதுக்கு தான் என் பொண்டாட்டி அவ்வளவு பில்டப் கொடுக்கா... உண்மையிலேயே என் மகனை சமாளிக்கிறது தான் பெரிய்யயயயய டாஸ்க்... "என்று சொன்ன சரத்தின் பின்னால், "அப்போ வீட்டுக்கு போனதும்... இனி நீங்களே சமைச்சு போடுங்க... நானே என்னோட பையன பாத்துக்குவேன்" என்று சொல்லிக்கொண்டே அவன்முன் வந்து நின்றாள் சௌமியா.
திடீரென்று தன்முன் கோப தேவியாக காட்சியளித்த மனைவியை பார்த்து அதிர்ந்த சரத், "அடப்பாவி சகல இப்படி என் குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சிட்டியே... இனி இரண்டு மாசத்துக்கு இதையே சாக்கா வச்சு என்ன சமைக்க வைப்பாளே ராட்சசி நா என்ன பண்ணுவேன்..." என்று மனதிற்குள் புலம்பியவன் மகேஷை பார்த்து முறைத்தான்.
அவன் முறைப்பதை கண்டு கொள்ளாதவாறு, விசில் அடித்துக் கொண்டே தன் சரி பாதியை தேடி நகர்ந்து சென்றுவிட்டான் மகேஷ்...

இங்கு சௌமியா விடாமல் சரத்திடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கு ஆதித்யாவோ.... தன் மருமகனை தேடி களைத்து விட்டான்.
"டேய் முகுந்த் எங்கடா போன... உனக்கு மாமா நிறைய சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கித் தரேன் இத மட்டும் போட்டுட்டு போய் தொலைடா... உசுர வாங்காத" என்று கடுப்பாகி கத்தினான் ஆதித்யா.

அப்பொழுது அவன் அருகில் வந்த ஒரு சின்ன மொட்டு ஒன்று அவனின் காலை சுரண்டியது...

யாரென்று கீழே குனிந்து பார்த்த ஆதித்யா அவளைப் பார்த்ததும்...
"லக்கி குட்டி அம்மா இல்லாம எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க ?"என்று கேட்டுக்கொண்டே
அவளை தூக்கிக் கொண்டான்.

முகத்தை சுருக்கி ஆதித்யாவை பார்த்தவள்,
"ப்பா நீ அந்த மூக்கன்ந் தான தேதுற" என்று மழலை குரலில் கேட்டாள் லக்ஷனா ஆதித்யா மலரின் மூன்று வயது தவப்புதல்வி...

ஆம் என்பது போல் தலையசைத்தான் ஆதித்யா.
"வாய்த் தொந்து சொல்ணும் தலை ஆத்த கூதாது..." என்று கண்களை உருட்டி அதட்டினாள் சின்னவள்...
ஆதித்யாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

தான் முன்னால் மலரை சொல்லிய அதே டயலாக்கை தன் மகள் தன்னிடம் சொல்கிறாள் என்று தான்......

குழந்தை உருவத்தில் மலரை ஒத்து இருந்தாலும் குணம் அப்படியே ஆதித்யாவிடம் இருந்து வந்ததுதான்....

"சரிங்க லக்கி குட்டி... இனி அப்பா வாயைத் திறந்து பதில் சொல்றேன்... இப்ப என்ன விஷயம் சொல்ல நீங்க வந்தீங்க?அதை சொல்லுங்க..." என்று சின்னவளிடம் கேட்டான் ஆதித்யா ...

"ப்பா அந்த மூக்கன்ந் பின்டி உள்ள ரூமுல இக்கான்...நா அவ்ன பூடி வச்ட்டு வந்ட்டேன் ...நீ அவ்ன தான தேதுத... நீ போய் பிதி" என்று தந்தையிடம் சொன்னாள் லக்ஷனா.
"ஐயையோ லக்கி குட்டி பாவம்டா முகுந்த்... ஏன் பூட்டி வச்சிட்டு வந்த.... அது மோட்டார் ரூம் ரொம்ப இருட்டா வேற இருக்குமே... அவன் பயந்து இருப்பான்... வா சீக்கிரம் அவன தொறந்து விடுவோம் "என்று மகளை தூக்கி கொண்டு வேக நடையில் சென்றான் ஆதித்யா...

ஆதித்யா மோட்டார் ரூம் வரும்பொழுது, ஏற்கனவே தன் மலர் அத்தையிடம் லக்ஷனாவை பற்றி புகார் செய்து கொண்டிருந்தான் முகுந்தன்...

தந்தையின் கைவளைவில் அமர்ந்திருந்த லக்ஷனா,
"ப்பா மூக்கன்ந் வெள்ல வந்ட்டான் போல" என்று தந்தையின் காதில் கிசுகிசுக்க...

"ஸ்ஸ்ஸ்... லக்கி குட்டி அமைதியா இரு... இல்லனா உன் அம்மா நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து வச்சு அட்வைஸ் பண்ணுவா" என்றான் ஆதித்யா.

அப்பொழுதுதான் அவர்களைப் பார்த்த மலர்,
மகளின் புறம் திரும்பி கோபமாக....
"இது என்ன பழக்கம் லக்கி... இப்படியா பூட்டி வச்சுட்டு போவ... பாவம்தான அவன்... நான் வந்து ஓபன் பண்ணி விடலனா என்ன ஆகியிருக்கும்? நீ தான் தப்பு பண்ணி இருக்க... முகுந்த் கிட்ட சாரி கேளு" என்று அதட்ட....

"முதியாது" என்று மூக்குக்கு மேல் வந்த கோபத்துடன் திரும்பிக் கொண்டது குட்டி...

மலர் அதற்கு ஆதித்யாவை முறைக்க.... நான் என்னடி பண்ணினேன் என்பதுபோல் அவன் பார்க்க.... "உங்கள மாதிரி தான் உங்க மகளும் திமிரு பிடிச்சவ" என்று முணுமுணுத்தாள் மலர்...

"கஷ்டகாலம்" என்று மனதுக்குள் புலம்பிய ஆதித்யா மகளிடம் திரும்பி...
"ஜஸ்ட் சே சாரி லக்கி குட்டி... ப்ராப்ளம் சால்வ்ட் ஆகிடும்...." என்று மகளிடம் செல்லம் கொஞ்சி சாரி கேட்க சொன்னான் ஆதித்யா...

"நோ ப்பா..." என்று முகத்தை தொங்கப் போட்டுகொண்டாள் மகள்.
ஆதித்யா பரிதாபமாக மலரை பார்க்க,அவளோ இன்னும் அவனைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஆதித்யா முகுந்தனை பார்க்க, அவனோ மலரின் சேலை முந்தானையை பிடித்துக்கொண்டு அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
"அடப்பாவி டேய் நான் ரெண்டு பேருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிட்டு இருக்கேன் நீ சிரிச்சு கிட்டா இருக்க" என்று நினைத்த ஆதித்யா...

"என்னோட பொண்ணு எதுக்கு சாரி கேக்கணும்... அவன பாரு நல்லா சிரிச்சுகிட்டு தான இருக்கான் ..."என்று ஆதித்யா முகுந்தனை கைகாட்ட...
மலர் கீழே குனிந்து முகுந்தனை பார்க்கும் பொழுது... அவளின் சேலை முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு நின்றிருந்தான் முகுந்தன்.

"பாவம் சின்ன பையன் பயத்தில முகத்தை மூடிட்டு நின்னுட்டு இருக்கான் நீங்க அவன குறை சொல்றீங்களா?"என்று மீண்டும் ஆதித்யாவை மலர் முறைக்க...

"அடப்பாவி முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ள என்னமா ஆக்ட் பண்ற... நல்லா பண்றடா நீ ... நல்லா பண்ற"என்று உள்ளுக்குள் நொந்து போன ஆதித்யா... மலரிடம் முகுந்தன் போட வேண்டிய உடைகளை கொடுத்து,
"இத இவனுக்கு போட்டுவிடு அதுக்கப்புறம் என் பொண்ணு அவன்கிட்ட சாரி கேப்பா..." என்று சொல்ல...
மலரும் சரி என்று சொல்லி உடையை வாங்கிவிட்டு கீழே குனிவதற்குள் சிட்டாக பறந்திருந்தான் முகுந்தன்...

"டேய் நில்லுடா ... " என்று அவன் பின்னாடியே சென்றாள் மலர்...

"அப்பாடி கிரேட் எஸ்கேப்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா... டேய் சரத் நீ 100 தோப்புக்கரணம் போடுவது உறுதி டா" என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆதித்யா...
மகளைப் பார்க்க... "ப்பா... யு ஆர் மை சூப்பர்மேன்" என்று பாசத்துடன் தந்தையை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள் அவனின் செல்ல மகள்....

இங்கு மலர் எப்படியோ முகுந்தனை பிடித்து அவனுக்கு உடை மாற்றி சௌமியாவிடம் அவனை கொடுத்துவிட்டு... தோட்டத்தை ரசிக்க ஏற்றவாறு வெளிக் கூடத்தில் இருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள் ....
சிறிது நேரத்திலேயே அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஆதித்யா... அவனைப் பார்த்து சிரித்தவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள......
அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்று அமர்ந்துகொண்டாள் அவர்களின் செல்ல புதல்வி லக்ஷனா...

மூவரும் சிரித்த முகத்துடன் இருக்க, "பாஸ் செம... செம... அப்படியே இருங்க" என்று தனது கேமராவில் அவர்கள் மூவரையும் பதிவு செய்து கொண்டான் சரத்....

"டாடி என்ன மட்டும் எடுக்கல ..."என்று சௌமியாவின் கை பிடித்து வந்த முகுந்த்... லக்ஷனாவை பார்த்து முறைத்துக் கொண்டே கேட்க....
"நீங்க மூணு பேரும் நில்லுங்க நான் எடுக்கிறேன் ..."என்று மகேஷ் சரத் இடமிருந்து கேமராவை வாங்கி அவர்களை வித விதமாக போட்டா எடுத்தான்.

"மகி நம்மளும் ஃபேமிலியா ஒரு போட்டோ எடுத்துக்கலாம்" என்று சொன்ன சுவாதி, வாசலில் அமர்ந்து சாக்லேட்டை சப்பிக் கொண்டிருந்த வானதியை கூப்பிட்டாள்.

"வந்துட்டேன் அம்மா...." என்று ஓடிவந்த வானதி பாவாடை தட்டி கீழே விழ பார்த்து உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டு நின்றுவிட்டாள் ... அனைவரும் அதை பார்த்து விட்டு,
"ஹேய் பார்த்து பொறுமையா வா வானதி" என்று அலறினர்.
அதற்குள் மலர் அவள் அருகில் வந்து, "பார்த்து வாடா தங்கம்" என்று முதுகை தட்டிக் கொடுத்தாள்.
"சரி அத்தை" என்று சிரித்துக்கொண்டே தலையசைத்தாள் வானதி...

அதன் பின் மகேஷ் சுவாதி வானதி மூவரும் குடும்பமாக புகைப்படம் எடுத்தனர்.

"இப்போ ஹோல் ஃபேமிலி பிக் எடுக்கலாம் ..."என்ற சரத்
"எல்லாரும் அழகாக வரிசையாக நில்லுங்க" என்று சொன்னான்.
நடுவில் ஆதித்யா நிற்க... அவன் அருகில் மலர் லக்ஷனாவை தூக்கிக்கொண்டு நின்றாள். மலருக்கு அடுத்ததாக மகேஷ் சுவாதி வானதி மூவரும் நிற்க... ஆதித்யாவிற்கு பக்கவாட்டில் சௌமியா முகுந்தனை தூக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.
அனைவரும் வரிசையாக நின்ற பின்னர்தான்... கேமராவை ஸ்டாண்டில் வைத்து டைமர் ஐ செட் செய்துவிட்டு சௌமியாவின் அருகே வந்து நின்று கொண்டான் சரத்.
அவர்களின் முழு குடும்பத்தையும் கேமரா அழகாக படம் பிடித்துக் கொண்டது....

அன்று இரவில் தனிமையில் மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருந்தாள் மலர்....
அவளின் பின்னே வந்து அணைத்துக்கொண்ட ஆதித்யா அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டே....
"என்ன மேடம் என்ன விட்டுட்டு தனியா வந்து இருக்கீங்க?" என்று கேட்டான்.

அவனைப் பார்த்து திரும்பியவள், "நீங்க உங்க மக கூட கதை பேசிட்டு இருந்தீங்க... அதான் நா தனியா வந்தேன்" என்று அவனை முறைத்துக் கொண்டே மலர் சொல்ல...
"ஐயோ பாருடா என் பொண்டாட்டிக்கு பொசசிவ்னஸ் வருது..." என்று கத்திய ஆதித்யாவின் வாயை தன் கைகளால் அடைத்தாள் மலர்.

"ஸ்ஸ்ஸ்...கீழ எல்லாரும் அவங்கவங்க ரூம்ல தூங்கிட்டு இருப்பாங்க... கத்தாதீங்க ஆதி" என்றாள் மலர் கிசுகிசுப்பாக....
தன் வாயை மூடி இருந்த மலரின் கையில் முத்தமிட்டான் ஆதித்யா...

"ஐயோ என்னங்க இது..." என்று கூச்சத்துடன் அவனின் வாயில் இருந்து கையை எடுத்து விட்டாள் மலர்.

அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த ஆதித்யா,
"சொல்லுங்க மேடம் எதுக்கு இங்க வந்தீங்க?" என்று மீண்டும் கேட்டான்.

"அது ஒன்னும் இல்லைங்க மனசு முழுக்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சா... அதான் தனியாய் இருக்கலாம்னு வந்தேன்..." என்ற மலரை சந்தேகமாக பார்த்த ஆதித்யா....

"ஓஹோ... அப்படிங்களா மேடம்.... அதை எதுக்கு என் கண்ண பாத்து செல்லாம சுத்தி சுத்தி பார்த்து சொல்றீங்க..." என்று கேட்டான்.

"அச்சோ ஆதி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல... வாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசலாம்..." என்று எப்படியோ சமாளித்து அவனை இழுத்து பிடித்து அமர வைத்தாள் மலர்.
இருவரும் சுவரில் சாய்ந்து அமர்ந்து வானில் தெரிந்த நிலவை ரசித்துக் கொண்டே கதைபேசி கொண்டிருந்தனர்...

சற்று நேரத்தில் ஆதித்யா மலரின் மடியில் படுத்து கண் மூடிக் கொள்ள, எப்பொழுதும்போல் அவனின் தலைமுடியை கோதியவாறு அமர்ந்திருந்தாள் மலர்.
மலரின் கைக்கடிகாரத்தில் சரியாக மணி பன்னிரண்டாக ... கண்களை மூடி தன் மடியில் படுத்திருந்த ஆதித்யாவின் நெற்றியில் முத்தமிட்டு, "ஹேப்பி பர்த்டே பூச்சாண்டி புருஷா" என்று அவனின் காதுக்குள் சொன்னாள் மலர்.
மலரின் குரலில் கண் விழித்த ஆதித்யா.... அவளின் வாழ்த்தை கேட்டதும் பெரியதாக புன்னகைத்தான்....

"ஓஹோ இன்னைக்கு என்னோட பர்த்டே வா... மறந்தே போயிட்டு... அது சரி...எனக்கு என்ன கிப்ட் இந்த வருஷம்" என்று ஒற்றை புருவத்தை தூக்கி கேட்ட ஆதித்யாவை பார்த்து சிரித்து விட்டு....
"ஐ லவ் யூ பூச்சாண்டி..." என்று ஆதித்யாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்து ஆழ்ந்த குரலில் சொன்னாள் மலர்விழி..,
"இதான் என்னோட கிப்ட் பூச்சாண்டி... எப்படி இருக்கு" என்று கண்ணடித்தாள்...

ஆதித்யாவும் மலர் லவ் யூ என்று சொன்னதில் இன்ப அதிர்ச்சி அடைந்தவன்...
"வாவ் மலர் இப்பவாது சொல்லனும்னு தோணுச்சே.... நமக்கு கல்யாணம் முடிஞ்சு வருஷக்கணக்கா காத்திருந்து கிடைச்ச வேர்ட்ஸ்...." என்று உள்ளம் மகிழ்ந்து படபடத்தவன் மலரின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.....

சில நொடிகள் கழித்து அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன்...
"இந்த வருஷம் என்ன ஸ்பெஷல் உன் வாயில இருந்து லவ் யூ என்ற வார்த்தை வந்து இருக்கு...?" என்று சந்தேகமாக கேட்ட ஆதித்யாவை பார்த்து புன்னகைத்த மலர்... "நீங்க ரொம்ப வருஷமா நான் லவ் யூ ன்னு சொல்லனும்னு ஆசைப்பட்டுட்டு இருக்கீங்கனு எனக்கு தெரியும்... பட் எனக்கு அந்த வார்த்தையை வாழ்ந்து காட்டிட்டு சொல்லனும்னு ஆசை ...இப்போ தான் எனக்கு நம்ம வாழ்க்கை நம்ம காதலால முழுமையடைஞ்ச மாதிரி தோணுது.... சோ டக்குன்னு உங்க பர்த்டே அன்னைக்கு சொல்லிட்டேன் திரும்பவும் சொல்லுவேன்... ஐ லவ் யூ வெரி மச் ஆதி" என்று உள்ளம் நெகிழ்ந்து சொன்னவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான் ஆதித்யா....

தன்னலம் கருதாத மலரைப் போன்ற மனம் உள்ள மங்கையை வென்று விட்ட மகிழ்ச்சியில் ஆதித்யாவின் இதயத்தில் மகிழ்ச்சி அலை பரவியது....

இனி என்றென்றும் .....
சுபம் சுபம் சுபம் சுபம்.....
............
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN