கண்டதும் காதல்

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செவிப்பறை அடைந்தும்
தாகம் தீரவில்லைபோல்
உடலெங்கும் சுழன்று
குருதியென பாய்ந்து
காட்சியிலும் இயைந்து
விழிதனையும் விடமால்
முடிவில்லா மோகத்தோடு
காற்றோடு கொண்டாடி
மூச்சோடு கலந்தோடி
அறிவோடு உறவாடி
உயிர்வரை தீண்டி
மெய்சிலிர்க்கும் அமுதத்தமிழே !
கருவகத்தில் உணர்வோடு
உரையாடிய தாயின்
முதல்மொழி கேட்ட முதல்
மழலை கிறுக்கல்களால்
தாளிடம் முத்தமிடும்
என் தமிழை
கண்டதும் காதல்
கொண்டேனே...
 
Back
Top