நீயே காதல் என்பேன் - 2

sizzling_saran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அடுத்த நாள் சாதனாவின் பிறந்தநாளாக இருக்க அதற்கு முன் இரவு மாதவியும் அனுவும் சாதனா வீட்டிற்கு சென்றிருந்தனர்...

சாதனா இன்னைக்கு என்ன புது சமையல்??எங்களைக் கொல்ல??என்று முனுமுனுத்தப்படி கேட்ட மாதவியை முறைத்த சாதனா....

இன்று உனக்கு எதுவும் கிடையாது!!!!அனுவிற்கு மட்டுமே என்று கூற முகம் மலர்ந்தவளாய் நான் தப்பித்தேனே என்கின்ற மாதிரி அனுவிற்கு பழிப்பு காண்பித்துவிட்டு டைனிங் டேபிளில் உள்ள பிரட்டை புன்னகைத்தவாரே உண்ண ஆரம்பித்தாள் மாதவி...

தான் மட்டும் இந்த சத்திய சோதனையில் மாட்டிக் கொண்டதை எண்ணி தன்னை தானே திட்டிக் கொண்டவளாய் சாதனா சமைத்த பருப்பு சட்னியை சுவைத்தால் அனு..😧

உப்பில் சட்னி குறைவாக இருப்பதை உணர்ந்த அனு மாதவி குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை அவசரமாக வாங்கி குடித்தால்...

அவள் முக பாவனையை பார்த்த மாதவி சத்தமாக சிரிக்க....அதை கேட்டு சமையல் அறையைவிட்டு வெளியே வந்த சாதனா அனுவை கேள்வியுடன் பார்க்க அனு அவளை பரிதாபமாக பார்த்தால்...

மாதவி சிரிப்பதை பார்த்து கடுப்பான அனுவும் சாதனாவும் அவனள அடிக்க விரைந்தனர்....மாதவி அவர்களிடம் இருந்து தப்பித்து சென்று குளியல் அறைக்குள் புகுந்தாள்

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மாதவியை மற்ற இருவரும் தண்ணீரால் குளிக்க வைத்தனர்...

இவர்கள் கிண்டல் கேலியில் நேரம் வேகமாக செல்ல...நேரம் நல்இரவு 12ஐ எட்டியது

அதற்காக காத்திருத்தவர்களாக மாதவியும் அனுவும் கேக் மற்றும் அவர்அவர்களின் பரிசு பொருளை எடுத்து வர....சாதனாவின் பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடி முடித்தனர்...கேக் பூசிய முகத்துடன் பல முக பாவனைகளோடு புகைப்படம் எடுத்தனர்...

அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து மகிழ்ந்தனர்....

அப்புகைப்படங்களை பார்த்த அவர்களின் நண்பர்கள் அனைவரும் சாதனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக குவித்தவண்ணம் இருந்தனர்...

1 மணி அளவில் மூவரும் கலைத்துப் போய் அமர்ந்தனர்...

சாதனாவின் முகத்தில் சிரிப்பு இருந்தும்....அதில் மறைந்துள்ள அவளின் கவலை இருவருக்கும் விளங்க அவளிடமே அதற்கான காரணத்தை கேட்டனர்...

சிறிது நேரம் அமைதிக்கு பின்னர் சாதனா...

அந்த காலத்தில் கூட ஒரு பெண்ணிற்கு சுயம்வரம் நடக்கும்பொழுது வந்திருக்கும் ஆடவர்கள் மத்தியில் அவளுக்கு பிடித்தமானவனய் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது

ஆனால் இன்றோ எவ்வளவு நூற்றாண்டு கடந்தும்...எத்தனை பேர் பெண்ணின் சுதந்திரத்திற்காக போராடியும் இன்றும் எல்லா பெண்களுக்கும் தன் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கிடைக்கவில்லையே!!!!

இது என்ன பெண்களின் முன்னேற்றமோ??என்ன பெண்களின் சுதந்திரமோ???!!
என்று சாதனா வெறுமையாக பேசி முடிக்க....மாதவியும் அனுவும் ஒருவரை ஒருவர் அர்த்தம் உணர்ந்தவர்களாக பார்த்துக் கொண்டனர்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN