நீயே காதல் என்பேன் -3

sizzling_saran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சாதனாவின் பேச்சை கேட்டு சற்று மனம் கலங்கிய மாதவியும் அனுவும் அவளை அவர்கள் வழியில் சமாதானம் செய்தனர்

அவர்களின் கொஞ்சல்,கேலி,கலட்டா என்று எல்லாம் முடித்து அவர்கள் படுக்கையை அடைய நேரம் விடியற்காலை மூன்றை எட்டி இருந்தது....

அசதியாக படுக்கையில் அமர்ந்தவர்கள்,புதியதாக அடுத்த சண்டைக்கு தயாரானார்கள்...நான் தான்,நான் தான் நடுவில் என்று மூவரும் ஒருவர் மாற்றி மற்றொருவர் கூச்சலிட்ட வண்ணம் இருக்க,அவர்களின் சண்டை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது...

முதலில் அனு தலையணையை எடுத்து மாதவியை அடிக்க,உன்னால் தான் எல்லாம் என்று மாதவி சாதனாவை அடிக்க ஆரம்பித்தால்...

இவர்களின் சண்டை உச்சக்கட்டமாக நடந்துக் கொண்டிருக்க பக்கத்து அறையில் இருந்து சாதனாவின் அம்மா....

இப்போ 3 பேரும் அமைதியா தூங்கலனா வீட்டை விட்டு வெளில தொரத்திடுவ!!!அப்பறம் ப்ளாட்பாம்தா என அவர்கள் மிரட்ட மூவரும் அமைதி ஆனார்கள்...

சற்று நேர அமைதிக்கு பின்னர் அனு மெல்லிய குறளில்...என்னடி இன்னும் ஆண்டி நம்மல சின்னபிள்ளையாவே நெனச்சி இப்படி சிரிப்பு வர மாறி மிரட்டுறாங்க எனக் கேலியாக கேட்க மூவரும் தங்கள் சிறு வயது கலாட்டாவை எண்ணி சிரித்தனர்...

தீடிரென மாதவிக்கு ஒரு சந்தேகம் வர...அதை இருவரிடமும் கேட்டு இன்னும் இரண்டு அடி வாங்கிக் கொண்டாள்...

ஏய் என்னடி சும்மா அடிக்கிறிங்க....இப்பவும் ஆண்டிக்கு நைட்ல சத்தம் போட்ட டிஷ்டப் ஆகுதானுதான கேட்ட😟

அவள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் அவள் வாயை மூடி ஷ்ஷ் வாயை மூடு எரும😬அம்மாக்கு மட்டும் கேட்டா 10ஆவது படிக்கும் போது உனக்கு ஒரு மணி நேரம் உபதேசம் செய்ததுலாம் நியாபகம் இருக்கா அதோட பலமடங்கு இப்போ நடக்கனும்னு உன் விதியில் எழுதி இருந்தா நாங்க என்ன செய்யறது!!😛என்று இயல்பாக அவளிடம் இருந்து திரும்பி படுத்துக் கொண்டனர்...

அவர்கள் சொன்னதை நினைத்துப் பார்த்த மாதவிக்கு பீதி கிளம்ப,வேகமாக போர்வையை முகத்தில் போர்த்திக் கொண்டாள்....

காலை எட்டு மணிக்கு மாதவியின் கைப்பேசி ஒலி எழுப்ப,அதை அவசரமாக தேடுகிறேன் என்ற பெயரில் அவளின் இரு பக்கம் உறங்கிக் கொண்டிருந்த சாதனாவையும் அனுவையும் கட்டிலில் இருந்து உருட்டிவிட்டாள்...

கீழே விழுந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு எழ....எதுவும் நடக்காததுப் போல் மாதவி கைப்பேசியில் சிரித்தப்படியே பேசி முடித்தாள்

தன்னை இருவரும் கொலைவெறியோட பார்ப்பதை உணர்ந்த மாதவி தான் செய்ததை உணர்ந்து கட்டிலில் இருந்து குதித்து குளியலறையில் ஓடி ஒளிந்தால்...

ரித்விக் அலுவலக அழைப்பா மேடம!!!என சாதனா பல்லை கடித்தப் படி வெளியே இருந்து கேட்க...ஈஈஈ ஆமா என்று வழிந்தபடி பதில் அளித்த மாதவியை நினைத்து இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்...

2 ஆண்டுகளாக மாதவி க்ரேசியாக இருக்கும் ஒரே விஷயம் "ரித்விக்"

2 ஆண்டுகளுக்கு முன்பு.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN