முன் ஜென்ம காதல் நீ - 12

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தர்மத்தின் சக்தி

முத்தூர் மக்கள் வெற்றியை கொண்டாட தொடங்கியிருந்தனர். தாங்கள் உயிரென மதிக்கும் இளவரசியின் உள்ளம் கவர்ந்தவன் இறந்து விட்டான் என எண்ணி இவ்வளவு நாள் துயரத்தில் இருந்தவர்கள். அவன் உயிரோடும் இருக்கும் விஷயம் கேட்டு மகிழ்ந்தனர். அந்த கொண்டாட்டம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.

அருள்வர்மன் உடன் ஒருவனை அழைத்துக் கொண்டு இளவரசி அறையை நோக்கி சென்றான் இளவரசி அறையின் உட்புறம் சென்ற அவன். அவளின் அறையை நோக்கி போகாமல் சுவரில் ஒரு ஆணியை நகர்த்தி ஒரு திட்டி வாசலை திறந்து கொண்டு சென்றான். அங்கே அதனுள் ஒரு மூலையில் கஜவர்மன் ஒரு பஞ்சணையில் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான். உள்ளே நுழைந்த அருள்வர்மன் கட்டுகளை அவிழ்த்து விட்டு " நண்பா பார்த்து நாள் ஆச்சு நல்லா இருக்கியா?" என்றான் புன்னகையுடன். அப்பொழுது அவனும் சாதாரணமாக பேச தொடங்கினான். அங்கிருந்த மூவர் முகத்திலும் போர் களைப்பு இருந்தது. அதனை லட்சியம் செய்யாமல் பேசிக் கொண்டனர்.
பதிலுக்கு அவன் " இந்த அறையிலேயே என் தோல்வி ஏற்படுத்தப்பட்டாதா? " என்றான். சற்று அப்பால் மர பலகையில் சிறிய மண் சிற்பங்களால் கோட்டை, புரவிகள், யானைகள் மற்றும் கப்பல்களின் உருவங்கள் செய்யப்பட்டு கிடந்தன. அப்பொழுது இந்திர ராணியும் உள்ளே நுழைந்தாள். அவள் புன்னகையுடன் வந்து பதில் சொன்னாள். " ஆமாம் முதலில் தான் இறந்து விட்டதாக வதந்தியை பரப்ப சொன்னார். அதன்படியே செய்தோம் அது பரவிய பின். என் அறையில் போர் காலங்களில் தப்பி செல்லும் ரகசிய அறையை தன் அறையாக்கி கொண்டார். இவர் உயிரோடிப்பதே என்னையும் என் தந்தையையும் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார். இந்த மரப்பலகையை போர்களமாக கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டினார். சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் இன்னும் புரியவில்லை.சொல்லப்போனால் முதல் போரில் வெற்றி பெறும் வரை இவர் மேல் முழு நம்பிக்கை கொள்ளவில்லை நாங்கள். எங்கள் அனைவரையும் வெறும் கருவிகளாக மட்டும் பயன்படுத்தினார். இவர் உருவாக்கிய யமபொறிகளை ஒழித்து வைக்கும் இடங்களையும். அவற்றை பயன் படுத்த வேண்டிய சூழல்களையும் சொன்னார். "
இராக்காலங்களில் என்னை இந்த அறையில் இருத்தி விட்டு என் போர்வையை சுற்றிக் கொண்டு பல காலங்கள் கோட்டை சுவர்களிலும், கடற்படைகளிலும் சென்று கவனித்து வந்தார் அதன்படியே திட்டங்களை வகுத்தார். இறுதியாக மூன்று தினங்களுக்கு முன்பு போர் திட்டங்களை வகுத்து கொடுத்தார். வெறும் இருபதாயினர் காலாட்படை வீரர்களையும் ஐயாயிரம் கடற்படை வீரர்களையும் கொண்டு எண்பதாயிரம் வீரர்களை எதிர்பது முட்டாள்தனம் என கூறினோம். ஆனால் அவர் இந்த திட்டத்தை பின்பற்ற வேண்டும் என கூறிவிட்டு தன் புரவி வீராவுடன் இங்கிருந்து சுரங்க பாதையில் சென்று விட்டார். அதன் காரணம் புரியவில்லை " என முடித்தாள்.

அருள்வர்மன் உயிரோடிருப்பதை பார்த்த அவனுக்கு போர்திட்டம் ஏறக்குறைய புரிந்து விட்டது. உறுதி படுத்தவே இவற்றை கேட்டு வந்தான். அவள் நிறுத்திய இடத்தில் இருந்து அவன் தொடர்ந்தான். " இவர் தான் ஏழு குன்ற நாட்டின் அரசர் சந்திரவர்மன் என் நண்பர் இவரிடம் உதவி பெறவே சென்றிருந்தேன். முதலில் நான் உன் சேனையை பார்த்த போது பல நாட்டு கொடிகள் இருந்தன. ஆனால் இவரின் நாவல் பழ மரக் கொடியை மட்டும் காணவில்லை ஆகவே இவர் உனக்கு உதவவில்லை என புரிந்தது. இவர் உதவியது நம் நல்ல நேரம் " என்றவனை இடைமறித்து.
" அப்படி சொல்லாதே நண்பா இந்த அரச பதவி உன்னால் கிடைத்தது " என்றான் மேலும் " தந்தை இறந்த பின் தம்பியின் சதியால் அரண்மனையை விட்டு விரட்டப்பட்டு என் சிறு படையுடன் காடுகளில் திரிந்தவனை சந்தித்து உதவி செய்து அந்த சிறு படையை கொண்டு என் தம்பியின் மாபெரும் படையை வெற்றி கொண்டு என்னை அரசனாக்கியவனுக்கு என் உயிரையையும் கொடுத்தாலும் தகுமா? " என்றான். அதனை கேட்ட இந்திர ராணி ஆச்சரியமாக பார்த்தாள்.
ஏற்கனவே முதலில் தாக்குதலை ஊகித்து சொன்னது. கடற்படையை கடற்கரையை விட்டு நகர்த்தி கடற்கரை அருகே உள்ள தீவு கூட்டங்களில் கடல் அலைகள் செதுக்கிய மறைவிடங்களில் மறைத்தது. எதிரிக்கு உள்ள நுழைய முதலில் இடம் கொடுத்து தாக்கியது. பிடிபட்ட வீரர்களை முத்தூர் வீரர்கள் என சொல்லி அனுப்பி வைத்தது. மேலுக்கு அலட்சியமாக சுற்றி திரிந்தாலும் உள்ளுக்குள் ஒவ்வொரு அணுவையும் ஆராய்ந்து திட்டம் தீட்டியது அவற்றை தன்னை முன்னிலை கொண்டே நிறை வேற்றி வெற்றி பெற செய்தது.போரின் சரியான நேரத்தில் உதவி சேனையில் முதல் ஆளாக மரண வேகத்தில் புயலாக உள்ளே புகுந்து எதிரிகளை சிதற அடித்தது என அனைத்தையும் தொகுத்து பார்த்தாள்

அவள் எத்தனை முன் யோசனையுடன் இவன் செயல்பட்டுள்ளான். இப்படியும் ஒரு விந்தை மனிதன் இருக்கிறானே என எண்ணினாள். அவன் இத்தனை அரும் பெரும் சாதனைகளை தனக்காகவும் தன் காதலலுக்காகவும் செய்து முடித்தான் என்பதை நினைத்து பெருமை கொண்டாள். அவன் மேல் காதல் கொள்ளையாக எழுந்தது. இந்த நினைவால் அவள் முகத்தில் சிறிது வெட்கத்தின் சாயை படர்ந்தது. பொதுவாக புகழ்ச்சியை விரும்பாத அருள்வர்மன் அந்த சூழலில் சற்று அசைந்து தன் நண்பனை நோக்கினான். அவன் முகத்தில் தோல்வியின் சாயையும் துயரமும் படர்ந்தது. உடனே கம்பீரமான குரலிலல் பேசி தொடங்கினான்.

" நண்பா உன்னை வெற்றி கொண்டது நானோ இந்த முத்தூர் சேனையோ அல்ல மாறாக உன் தோல்விக்கு காரணம் தர்மம். எங்கள் வெற்றிக்கும் அதுவே காரணம். போரில் சேனைகள் மட்டும் வெற்றியை கொடுப்பதில்லை தர்மமும் முக்கியம். நீ போரை தொடங்கியது பொய் எனும் அதர்மத்தின் கிளையில் அந்த அதர்மத்தை கொண்டே போருக்கு அஸ்திவாரம் இட்டாய் ஆனால் நாங்கள் உன்னிடமும் உன் வெறி தனத்திடம் இருந்து தப்புவதற்காகவே போரை நடத்தினோம். எங்களிடம் பெரிய சேனைகள் இல்லாமல் போனது ஆனால் தர்மம் இருந்தது. அது வெற்றியை தோல்வியாக்கும் தோல்வியை மாபெரும் வெற்றியாக்கும் அதனை நீ உணர மாட்டாய் அதுவே தர்மத்தின் சக்தி " என முடித்தான்.

நடந்தது அதிசயம்

போரில் ஏற்பட்ட வெற்றிக்கு பின் நாட்கள் விரைவாக ஒடின. வெற்றி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் அருள்வர்மனும் இந்திர ராணியும் தனித்தனி யானைகளில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். மக்கள் அனைவரும் வீதியில் இருபுறமும் நின்று மலர்களை தூவி அவர்களை வாழ்த்தினர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விசேஷமாக கொண்டாடினர். அந்த விழாவின் போது அரசர் இந்திரவர்மர் " இன்னும் சரியாக இருபத்தொரு நாட்கள் கழித்து வரும் நல்ல நாளில் அருள்வர்மனுக்கும் இந்திர ராணிக்கும் திருமணம் அதி ஆடம்பரமாக நடத்தி வைக்கப்படும் " என அறிவித்தார். அதனை கேட்ட அனைவரும் களிவெறி கொண்டு கூத்தாடினர். இந்திர ராணி வெட்க புன்னகை புரிந்தாள். அருள்வர்மனும் மகிழ்ந்தான்.
வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு அருள்வர்மன் தன் பிடிவாதத்தால் தன் நண்பனை விடுதலை செய்து அனுப்பினான். அரசர் மற்றும் இந்திர ராணி என எவர் சொல்லியும் கேட்காமல் கஜவர்மனை விடுதலை செய்தான். அவனுடன் சிறைப்பட்ட எதிரி நாட்டு வீரர்களையும் விடுதலை செய்து அனுப்பினான். சிறைபட்டவர்கள் வெறும் நூற்றுக்கணக்கில் தான் இருந்தனர். ஏனென்றால் மீதமானவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டிருந்தன. அவனது பொறிகளினாலோ இல்லை என்றால் வீரர்களின் மூலமாகவோ.
அத்துடன் பின்வருமாறு எச்சரிக்கையும் விடுத்தான். " நண்பா இப்பொழுது கூட என்னால் உன்னை பணயமாக கொண்டு கபாடபுரத்தினை எளிதாக வெல்ல முடியும் ஆனால் நான் அதனை விரும்பவில்லை. அமைதியாக சென்று நீ இராஜ்யம் நடத்து. மீண்டும் இந்த முத்தூரை வெல்ல நினைத்தால் நான் இங்கு தான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே. அப்படி ஒரு நிலை வந்தால் இப்படி பாதியில் விட மாட்டேன் " என எச்சரித்து அனுப்பி வைத்தான்.
அவனும் பேசும் சக்தியை இழந்து பிரம்மை பிடித்தவன் போல் சென்றான். ஏறத்தாழ இரண்டு லட்சம் வீரர்களுடன் பவனி வந்த பாதையில் வெறும் நூற்றுகணக்கான எஞ்சிய வீரர்களை கொண்டு திரும்பி செல்வது பெரும் கஷ்டமாக இருந்தது. எவ்வளவு பெரிய கவலை இருந்தாலும் அதனை காட்டாமல் முகத்தில் கம்பீரம் குறையாமல் சென்றான். தன்னால் தன் தாய் நாடு அதன் சேனையை இழந்து விட்டதை நினைத்து வருந்தி சென்றான்.
இங்கு அருள்வர்மனின் நிலையும் கஷ்டமாக தான் இருந்தது. அவன் மருத்துவரின் மகனாக பிறந்தவன். இளவரசனின் தோழனாக வளர்க்கப்பட்டவன். ஒருவர் பின் ஒருவராக தன் பெற்றோரை இழந்த பின் தன் இஷ்டப்படி நண்பனுடன் வாழ்ந்தவன். இளவரசனின் நண்பனாக இருந்தாலும் அரண்மனையில் அவன் தங்கியதில்லை. அந்த ஆடம்பர வாழ்வு என்ன காரணத்தினாலோ அவனுக்கு பிடித்தது இல்லை.
பெரும் போர்களங்களில் படை வீரர்களின் பயிற்சி ஒலியையும், போரில் ஏற்படும் மரண ஒலியையும், காட்டில் நாள் கணக்கில் வேட்டையாடி பாதை தவறிய பின் நெருப்பு மூட்டி அதன் அருகே காட்டில் உள்ள அடவியின் ஒலியையும், துஷ்ட மிருகங்களின் ஒலியையும் தாலாட்டாக கொண்டு உறங்கியவனுக்கு இந்த அமைதியான அரண்மனை அறை சுகப்படவில்லை. பறைகளையும், மண் தரைகளியும் தலையணையாக கொண்டு உறங்கிய போது வந்த சுகம் இப்பொழுது இந்த பஞ்சணைகள் தர வில்லை.
இவற்றிற்கு எல்லாம் ஒரே ஆறுதலாய் இருக்கும் இந்திர ராணியையும் காணக் கூடாது என கூறிவிட்டார்கள். திருமணத்திற்கு முன்பு 21 நாட்கள் மணமக்கள் தனித்தனியாக தான் இருக்க வேண்டுமாம். இது அந்த நாட்டின் பழக்கமாம். நாசமாய் போய்விட்டது என கூறிக் கொண்டான். இது அரண்மனை வாழ்வா? இல்லை சிறை வாழ்வா? எனக் கேட்டுக் கொண்டான். அறை வாயிலில் வீரர்கள் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் உடன் வருகிறார்கள். குதிரை சவாரி செய்ய வேண்டும் என்றாலும் அரண்மனை பயிற்சி திடலில் தான் செய்ய வேண்டுமாம். மூன்று நாட்கள் கூட தாங்க முடியவில்லை. வெறுத்து போய் விட்டது. என்ன செய்யலாம் என எண்ணிக் கொண்டிருந்தான்.

மூன்றாம் நாள் இரவு முதல் ஜாமம் முடிய போகும் தறுவாய். முதல் ஜாம காவலர்கள் கிளம்ப முற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வெளியே சென்ற அவன். அங்கிருந்த இருவரை பார்த்தான் அதில் குட்டையாக இருந்தவனை பார்த்து " நீ சென்று இரண்டாம் ஜாம கவலர்களை விரைவாக வந்து காவல் புரிய செய் " என அதட்டி அனுப்பினான். அவன் சற்று உயரமாக இருந்தவனை உடன் அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான். சில மணித்துளிகள் கடந்த பின் அந்த காவலன் வெளியே வந்தான். பின்னர் வேகமாக தான் கையில் வைத்து காவல் காத்த வேலை எடுத்துக் கொண்டு விரைவாக அரண்மனையை விட்டு வெளியே வந்தான்.
பின்னர் தன் புரவி நிற்கும் இடம் சென்று அதில் தாவி ஏறி.தெற்கு புற கோட்டை வாயிலை நோக்கி விரைவாக சென்றான்.அப்பொழுது கோட்டை காவலர்கள் அவனை தடுத்து நிறுத்தினர். " எங்கே செல்கிறாய்? சொல் " என்றனர். அவன் " ஐயா இளவரசர் அருள்வர்மன் ஒரு முக்கியமான வேலைக்காக அனுப்பி உள்ளார். ஆகவே விரைவாக செல்லுகிறேன். " என்றான். அருள்வர்மன் என்ற பெயரை கேட்டது சற்று மரியாதை கலந்த குரலில் அவன் " உண்மையா அவர் தானா? அதற்கு என்ன ஆதாரம்? அவர் அனுப்பியது என்ன வேலை? " என கேட்க. அவன் " இந்தாருங்கள் முத்திரை மோதிரம் " என கூறி ஒரு பொருளை தன் இடைக்கச்சையில் இருந்து எடுத்துக் காட்டினான்.
பின்னர் அதனை வாங்கி கொண்டான். அந்த மோதிரத்தை கண்டதும் அந்த காவலன் ஓடிச் சென்று அவர்களது தலைவனை அழைந்து வந்தான். " உண்மையாகவே அந்த தலைவர் தான் உன்னை அனுப்பினாரா? என்ன வேலை சொன்னார்? " என கேட்க அவன் " மன்னிக்க வேண்டும் பிரபு அதனை சொல்லுவதற்கு இல்லை. ஆனால் வேலை அவசரம் வேகமாக செல்ல வேண்டும் " என்றான். பின் அவர் அவனை அனுப்பி வைத்தான்.
இந்திர ராணிக்கும் நாழிகைகள் வேப்பங்காயாய் சென்றன. தன் மனம் விரும்பியவன் தனக்காக எதனையும் செய்ய துணிபவன். திருமணமும் முடிவு செய்து அதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அந்த நாட்கள் சங்கடமும் திருமணத்தை எண்ணி குதுகலமாகவும் சென்றன. திருமண நாளை எண்ணி நாட்கள் கழியும் பொழுதுகள் சுகமாக சென்றன. அருள்வர்மனை காணவும் முடியவில்லை. அதற்காக அவள் செய்த முயற்சிகளும் வீணாகின. இந்த நாட்களின் துயரத்தில் இருந்து மீள வழக்கம் போல் கடற்கரையை நோக்கி சென்றாள்.
வழக்கமாக ஏமாற்றும் முறைகளை கொண்டு அந்த வீரர்களை ஏமாற்றி சென்றாள். அந்த இடங்கள் தன் துயரத்தை குறைக்கும் என எண்ணி ஏமாற்ந்து போனாள். அந்த பழைய இடங்கள் அவர்கள் இருவரும் பழகிய அழகிய பொழுதுகளை நினைவு படுத்தி துயரப்படுத்தின. அந்த நினைவுகள் பிரிவின் துயரை அதிகப்படுத்தின. இந்த எண்ணங்களால் துக்கப்பட்டு நிற்க முடியாமல் அருகே உள்ள தென்னை மரத்தில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்தாள். சிறிது கண்களையும் மூடிக் கொண்டாள். சிறிது நேரத்தில் அப்படியே படுத்துக் கொண்டாள்.
அப்பொழுது சில கடற்கரை நண்டுகள் வந்து அவள் தலையில் ஏறின. அவை ஏறுவது கூச்சமாக இருந்தன. அதில் ஒரு நண்டு அவளை கடிக்க முயன்றது. அதனை உணர்ந்த அவள் " என்னவர் அருகே இல்லாத தைரியமா நண்டே அவர் எனக்காக ஒரு சேனையையே இருந்த இடம் தெரியாமல் அழித்தவர். நீ எனக்கு துயர் தருவது தெரிந்தால் உன்னை துண்டு துண்டாக பிய்த்து போடுவார் " என நினைத்தாள். அவனை பற்றிய நினைவு வந்ததும் வெட்கமும் மகிழ்ச்சியும் கொண்டாள் மேலும் "நான் இந்த மண் தரையில் படுப்பதையே அவன் இதயம் தாங்காது " என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். அப்பொழுது நடந்தது அந்த அதிசயம்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN