உன்னுள் என்னைக் காண்கிறேன் 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 4

ருத்திரமூர்த்தி பூபதி–விசாலாட்சி தம்பதிகளுக்கு தவப்புதல்வனாய் ஓரே புதல்வனாய் ஆஸ்திக்கும் ஆசைக்குமாய் பிறந்தவன் தான் தேவேந்திரன் என்கிற தேவேந்திரபூபதி.

அதனால் அவனைச் செல்லம் கொஞ்சி அவன் விருப்பத்திற்கு இசைந்து கொடுத்து பாராட்டி சீராட்டி வளர்த்தார்கள் பெற்றோரும் அவன் தாத்தா பாட்டி சொந்தங்களும். இப்படி வளர்ந்ததால் கெட்டவனாகவோ, ஊதாரியாகவோ, குடிகாரனாகவோ இல்லை மற்றவர்களை ஆட்டிப் படைக்கும் ரவுடியாகவோ அவன் வளர வில்லை.

தன் விருப்பத்திற்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பது போல் மற்றவர்களின் நியாயமான விருப்பத்திற்கு அவன் மதிப்புக் கொடுத்தே வளர்ந்தான்.

பேசி முடிக்கும் வரை அவன் உடல் விரைத்திருக்கப் பின் கைப்பேசியை அனைத்து டைனிங் டேபிளில் வைத்தவன் நிதானமாகத் தன் சட்டைக்காலரின் பட்டனையும் கைபட்டனையும் கழற்றி விட்டுக் கோபத்தினால் அடக்கியிருந்த தன் மூச்சை வெளியிட்டவன் நிமிர்ந்து “நான் சொன்னதை மணி செய்துட்டானா, கேம் ஓவர் என்றான் கண்களில் ஆயிரம் வாட் பல்பு எரியும் வெளிச்சத்தோடு.

“------- “

“என்ன விஷ்வா என்ன ஏதோ புதுசா பார்க்கற மாதிரி பார்க்கற.”

“ஆமாம் புதுசு தான் ஆனால் நீ பழைய தேவ். தன் எதிரிகளைப் பந்தாட வந்துவிட்ட தேவ்.”

“ஆஹா… அப்படியா” என்று ஒரு வசீகரப் புன்னகையுடன் கேட்டவன்,

“சரி வா அந்தப் பெண்ணப் பார்க்கலாம்”

“ஐ.சி.யூவில் பல வொயர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் படுக்கையில் இருந்தாள்அவள்.

“என்னடா எதுவும் இல்லனு சொன்ன ஆனா இவளப் பார்த்தா அப்படித் தெரியலையே எனிதிங்ராங்?”

“இல்ல தேவ்... முதல் முறையா இந்தப் பெண்ண உன் வீட்டில பார்க்கும் போது நான் பயந்தபடி எதுவும் இப்ப இல்ல. அவளை உச்சந்தலையில் இருந்து பாதம் வரை செக் பண்ணிட்டன். பின்புற மண்டையில் இருந்த காயத்துக்குக்கூட MRI ஸ்கேன் முதல் கொண்டு எடுத்துப் பார்த்தாச்சி. நத்திங் டூ வொரி ஷி ஸ் ஆல்ரைட்.”

“ம்ம்ம்ம்”

“லெட்ஸ் கோஅவுட்…”

“ஐ.சி.யூ.வின் உள்ளே பயன்படுத்தப்படும் ஓவர் கோர்ட்டையும் கை உறையையும் கழற்றி அங்குப் பணிபுரியும் நர்சிடம் கொடுத்துவிட்டு வந்தவர்கள் “சரி விஷ்வாநான் இப்போ ராஜாவதான் பார்க்கப்போறேன். நீ பிஸி இல்லனாவா ரெண்டு பேருமா போய்ப் பார்த்துட்டு வரலாம் எல்லோரும் ஒண்ணா இருந்து எவ்வளவு நாள்ஆச்சி“

“ஆமாடா முக்கியமான கேஸ் எதுவும் இல்லத்தான் சோ கிளம்பலாம் வா” என்றான் விஷ்வா.

அப்படி அவர்கள் சந்திப்பதற்குள் தேவ் வைப் பற்றி இன்னும் சிலவரிகள்...

தேவ் பணக்காரன் மட்டுமல்ல ராஜ பரம்பரையில் பிறந்தவன். அவன் பாட்டனார் விஜெயேந்திரபூபதி சிங்கமென வாழ்ந்தவர். சிரிக்கவே யோசிப்பவர். தன் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஆனால் அவர் மகன் ருத்திரமூர்த்தியோ நேர் எதிர் குணம்கொண்டவர். கூச்சசுபாவம், அதிர்ந்து பேச மாட்டார், வெகுளி. பாசத்துக்குக் கட்டுப்பட்டு பிறரை நம்பி ஏமாந்து போகும் ஒரு சராசரி மனிதர். குணத்தில் தாயின் பிரதிபலிப்பு. தன் மகன் தன்னைப் போல் இல்லாததில் சிறு கவலை அவருக்கு.

அந்தக் கவலையைப் போக்க வந்தவன் தான் தேவ். அவரின் உருவம் கெட்டிக்காரத்தனம் ஆளுமைத்திறன் என்று அவரைவிட இரு மடங்கு இருந்தவனை மேலும் வளர்த்து மெருகேற்றி அவனை ஓர் பட்டைத் தீட்டிய வைரமாக மாற்றினார்.

அதுவே அவனைத் தோல்வி என்பதே தன் வாழ்வில் இருக்கக்கூடாது என்றும் வெற்றி மட்டுமே தன் அடையாளம் என்று மாற்றியது. தேவ்வின் தாய் விசாலாட்சி இரண்டு அண்ணன் ஒரு தம்பி மற்றும் இரண்டு தங்கைகளுடன் பிறந்து வளர்ந்தவள். மிகவும் கெட்டிக்காரி. பாசமே என்றாலும் அதை அளவோடு பெற்றுத் திரும்பக் கொடுத்து வாழ்பவள்.

தம்பி தங்கை தாய் தந்தை அனைவருக்குமே அவள் சொல்லே வேதவாக்கு. ஆனால் அவள் மூத்த அண்ணன் குடும்பத்துக்கோ அவள் எதிரி நயவஞ்சகி துரோகி தன் தந்தையை ஏமாற்றி சொத்து முழுவதையும் அடைந்தவள். இதில் தேவ்வின் பங்கே அதிகம் என்பது அவர்களின் கூற்று.

இன்று...

அன்று மாவட்டக் கலெக்டரின் மேற்பார்வையில் நடந்த காவல் துறையினருக்கான ரகசியக் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஹோட்டல் புளூவேவ் தோட்டத்தில் நிழற் குடையின் கீழ் உள்ள இருக்கை ஒன்றில் தன் நண்பர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் ராஜசேகர்.

தத்தம் காரின் சாவிகளை அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கொடுத்து காரை பார்க் பண்ண சொன்னவர்கள் பிறகு நண்பனைக் காணச் செல்ல,

“வாங்கடா மாப்பிள்ளைகளா என்ன இரண்டு பேரும் ஒண்ணாவரீங்க? என்னால ஏதாவது காரியம் ஆகனும்னாதான என்னத் தேடுவீங்க. இல்லனா நான் உங்க கண்ணுக்குத் தெரிவேனா “ என்று குறைபட்ட ராஜசேகரை,

“அடேய் மச்சி நீ அடங்குடா. உனக்குஎன்னடா நீ தனிக் காட்டு ராஜா. நினைத்த நேரத்தில் எழுந்து நினைத்த இடத்தில் சாப்பிட்டு போலிஸ்காரன் என்ற அதிகாரத்தை வச்சிகிட்டு எல்லோரையும் மிரட்டிகிட்டு ஊர்சுற்றிட்டு வர. நாங்க எல்லாம் அப்படியா? குடும்பஸ்தர்கள்டா கொஞ்ச நேரம் வீட்டிற்கு வரலனா என் டார்லிங் போன் அடிச்சி எங்க இருக்கீங்க வர லேட் ஆகுமானு கேட்கும் போது எனக்கு உன் ஞாபகமா வரும் வீட்டுக்குப் போகத்தானே தோனும்” முகத்தில் அசடு வழிய விஷ்வாகூற,

“ஆமாம் ஆமாம் அவ்வளவு அவசரமா போய் நீ என்ன செய்வனு எனக்குத் தெரியாது? என் தங்கச்சித் தலையில் இருக்கும் பேனை இல்ல எடுத்துட்டு இருப்ப குரங்கு மாதிரி ராஜசேகர்.”

“விஷ்வா முறைக்க என்னடா நான் சரியா சொல்லிட்டேனா“ என்று மீண்டும் கொக்கரிக்க.

இப்படி இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டிருக்க இவர்களின் பேச்சில் எதிலும் கலந்து கொள்ளாமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் தேவ். அதைக்கண்ட ராஜா “என்னடா மாப்பிள்ள ஏதோ பேசனும்னு சொன்ன ஆனா எதுவும் பேசாம அமைதியா இருக்க, என்னடா ஏதாவது பிரச்சனையா”என்று அவன் சிந்தனையைக் கலைக்க…

“பிரச்சனை தான் ஆனா பெரிசு இல்ல. சின்னது தான். அதாவது நான் அதை சின்னதாக மாத்திட்டேன். இன்னும் சொல்லனும்னா அதை ஒண்ணுமில்லாமல் பண்ணிட்டேன்”

“எதுடா ஏதோ ஒரு பெண் விஷயம்னு சொன்னியே அதுவா?”ராஜா

“அது இருக்குதான்டா மச்சி. ஆனா இது வேற. அதான் உனக்கு முன்பே தெரியுமே, பிரபு போட்ட கேஸ்காக நான் இப்போ சென்னை வந்தது. இன்று தாண்டா தீர்ப்பு” எனக்குத் தீர்ப்புக் கொடுக்கயிருந்த தர்மசீலன் என் தந்தையுடனான பகைய மனசில் வச்சிகிட்டு எனக்கெதிரா தீர்ப்பு கொடுக்க இருந்தார்.

“ஆனா அதை நான் விட்டுடுவேனா” கண்களில் கூர்மையுடன் கேட்க

“அப்ப என்னடா செய்த“ கண்ணில் சுவாரஸ்யத்துடன் ராஜா கேட்க அவன் கண்களையே பார்த்தவன்,

“நான் ஒண்ணும் செய்யலடா எல்லாம் நம்ப பசங்க தான். பாட்டில் மணி ஆட்களை வச்சி மதியம் உணவுக்கு வீட்டிற்கு வந்து திரும்பக் கோர்ட்டிற்குப் போகயிருந்த தர்மசீலனை அப்படிப் போக முடியாதபடி செய்யச் சொல்லிட்டன்.”

அதைக் கேட்டு ஆளையே தூக்கிட்டியாடா என்பது போல் ராஜா தேவ்வைப் பார்க்க…

“ராஜா! நீ நினைக்கிற மாதிரி எதுவும் செய்யல. வெறும் ஒரு சின்ன ஆக்சிடன்ட்தான் தட்ஸ் ஆல். அதுவும் அவர் உயிருக்கு ஒண்ணும் இல்ல. உடலுக்கும் பெரிசா எந்தப் பிரச்சனையும் இல்ல. காலில் ஃபிராக்சர் அவ்வளவு தான். இரண்டு மாதத்திற்கு அவரால் நடக்க முடியாது. எனக்கு மட்டும் இல்ல இன்னும் இரண்டுமாதத்துக்குஅவர் வேற யாருக்குமே தீர்ப்புக் கொடுக்க முடியாது” என்று தான் செய்ததைக் கூறி முடிக்க,

விஷ்வாவும் ராஜாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பழைய தேவ் நமக்கு வந்து விட்டான் என்ற பார்வைப் பரிமாற்றம். சிறு அமைதிக்குப் பிறகு “இது எல்லாம் ஒரு விஷயமே இல்லடா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். அடுத்து என்ன செய்யனும்னு கூட யோசிச்சி வச்சிட்டன்.”

“சோ டோன்ட் வொரி ஃபிரண்டஸ். சியர் அப் கைய்ஸ்” என்று உற்சாகப்படுத்தியவன்

“இன்னொன்று சொல்ல மறந்துட்டேன். அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல் எதுவும் தெரியல. அந்த ஊர் தலைவனான ஜேம்ஸ்க்குக் கூட எந்த விவரமும் தெரியல. தகவல் கிடைத்தா சொல்லச் சொல்லியிருக்கன். அதே போல் உன் சர்க்கில்ல ஏதாவது கம்ப்ளைன்ட் என்ற பெயரில எதாவது தகவல் தெரிஞ்சா சொல்லு ராஜா” தேவ்.”

“ம்ம்ம்… பார்க்கறேன் ராஜா.”

பின் பொதுவான சில விஷயங்களைப் பேசியபிறகு மூவரும் பிரிந்து சென்றனர்.

அங்கிருந்தபடியே தன் போனில் மினிஸ்டர் பி.ஏவை அழைத்த தேவ் நாளைய தினம் அவரைச் சந்திப்பதற்கு அப்பாய்ன்ட்மென்டுக்கு ஃபிக்ஸ் பண்ணச் சொன்னவன் நாள் முழுக்க ஓடின ஓட்டத்தையும் மனதின் சஞ்சலத்தையும் போக்க இனி வரும் நேரத்தை வீட்டிற்குச் சென்று தன் மகளுடன் கழிக்க விரும்பி காரை வீடு நோக்கி விட்டவன் ஃபிரஷ் ஆகி மகளைத் தேடிச்செல்ல, அவளோ பிளே ரூமில் முனிக்கும் வள்ளிக்கும் பாடம் நடத்திக் கொண்டருந்தாள். ஒரு கையில் கோலும் மறுகையில் சாக்பீஸூமாகயிருந்தவள் கழுத்தில் போட்டிருந்த துப்பட்டா தோலின் இருபுறமும் தவழ்ந்துஅவள் பின்புற முதுகில் தொங்க தேவ் வாங்கிக் கொடுத்த விளையாட்டுக் கண்ணாடியை மூக்கின் கீழே விழாமல் இருக்க அடிக்கடி இடது கையால் சரி செய்த படியே வலது கையால் கரும்பலகையில் அ, ஆ என்று எழுதிக் கொண்டிருக்க.

நான்கு வயதே நிரம்பி தன் மகள் மிரட்டலோடு அவர்களுக்கு மழலையில் பாடம் சொல்லிக் கொடுக்கும் அழகை வெளியே நின்றுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த தேவ்வை.

முதலில் கண்டுவிட்ட வள்ளி எழுந்து அவனுக்குக் காப்பி கொண்டு வரச்செல்ல தன் தந்தையைப் பார்த்த ருத்திரா குதூகல கூவலுடன் ஓடியவள் அவன் கால்களை கட்டி கொண்டு “அப்புபுபூபூபூஉய்ய தூக் அப்பு. குட்டி உய்ய போனும், உய்ய தூக் அப்பு” என்று குதூகலிக்க..

எப்போதும் அவன் தன் மகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடுவது வழக்கம். அதைத் தான் இன்று அவன் செல்ல மகள் செய்யச் சொல்ல அதைச் செய்தவன் பின் ஓடிப் பிடித்து விளையாடிக் கதைச்சொல்லி இருவரும் தங்களுக்கான உலகத்தில் நேரம் போனதே தெரியாமல் மூழ்கிவிட,

முனி வந்து இரவு உணவுக்கு அழைத்தப் பிறகே தன் உலகத்தில் இருந்து வெளிவர பின் தேவ் மகளுக்கான உணவை ஊட்டி விட்டவன் பிறகு தானும் சாப்பிட்டு மகளை அணைத்தபடியே படுக்க அவன் வயிற்றின் மேல் ஒருகாலையும் கழுத்தைச் சுற்றி இன்னோர் கையைப் போட்டு அவனைக் கட்டிக் கொண்டு கதை கேட்டுக் கொண்டே தூங்கினாள் ருத்திரா.

மகள் உறங்கிய பிறகு நாளைய தினம் என்னசெய்ய வேண்டும் என்ற சிந்தனையில் உறக்கம் இல்லாமல் இருந்த தேவ் பிறகு எப்போது தூங்கினான் என்பது அவனுக்கே தெரியாது.

எந்த ராஜா தன் நாட்டை ஆண்டாலும் இல்லை இழந்தாலும் சரி யார் வந்தாலும் போனாலும் சரி நான் என் இயக்கத்தை நிறுத்தமாட்டேன் என் வேலையை நான்செய்து கொண்டு தான் இருப்பேன் என்ற கொள்கைப் படி மறு நாள் காலையில் தன் உதயத்தைத் துவங்கியிருந்தான் சூரியன்.

விடியற்காலையிலேயே தூக்கம் கலைந்த தேவ், மகள் உறக்கம் கலையாதபடி எழுந்தவன் பின் தன் உடற்பயிற்சியை முடித்து அன்றாட வேலையைப் பார்க்கப்போக,

சரியாகப் பத்து முப்பது மணிக்கு தான் கேட்ட அப்பாய்மெண்ட்படி லா மினிஸ்டரைச் சந்தித்து அவருக்கான உதவியை இவனும் இவனுக்கான உதவியை அவரும் பரஸ்பர ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.

பின் தன் வழக்கை விசாரிக்கத்தான் அமர்த்த விருக்கும் நீதிபதியைச் சந்தித்து வழக்கு சம்மந்தமாக பேச.

முன்பே அவனின் வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்தும் அவருக்குத் தெரியும் என்றாலும் இன்று கூறியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தன் வாழ்வில் நடந்த ரகசியத்தைக் கூறி முடிக்கஅனைத்தையும் மவுனமாகக் கேட்ட அவர் அதைத் தீர்க்கச் சில சட்ட ஆலோசனைகளைக் கூறினார்.

அதைக் கேட்ட அவனோ புலியின் உறுமலோடு “என்ன அங்கிள் என்ன நினைச்சிட்டு பேசுறிங்க இது நடக்கக் கூடியதா? நீங்கள் சொல்கிற படி எல்லாம் என்னால் நடக்க முடியாது. இது தீர்வே இல்லை. இப்படி இல்லாமல் வேறு மாதிரி முடிக்கப் பாருங்க. இல்லைனா... வேற வழி சொல்லுங்க. நான் அதன்படி செய்றன். இது மட்டும் முடியாது எப்போதும் முடியாது“ தேவ்.

“நீ செய்து தான் ஆக வேண்டும் தேவ். உனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவேண்டும்னா இந்தக் கேசில் உனக்கு முழுமையான வெற்றி கிடைக்க வேண்டும்னா நீ இதைச் செய்து தான் ஆகணும்”.

“நான் சொல்கிறபடி செய்தால் உனக்கு நிரந்தர தீர்வு. இல்லனா இப்போ நான் இங்கு முடித்தாலும் இந்தச் சிக்கல் அனைத்தும் பிறகு உனக்குத் தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்.”

“நீயே முடிவு செய். நிரந்தர தீர்வா இல்லை தற்காலிகத் தீர்வானு. முடிவு உன் கையில். எதுவாக இருந்தாலும் நான் உனக்கு உதவி செய்றன். யோசிச்சி உன் முடிவைச் சொல். ஆனா அதிக நாள் எடுத்துக்காதே என்ன புரிஞ்சிதா? “ என்று அவர் சொல்ல விருப்பமே இல்லாமல் தலையாட்டினான் தேவ்

வழக்கில் உள்ள பிரச்சினைகளையும் தீர்வையும் மறுபடியும் ஓர் முறை பேசித் தீர்த்துக் கொண்ட பிறகே கிளம்பியவன் எவ்வளவு யோசித்தும் அவனால் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை .தன் யோசனையில் இருந்தவனை விஷ்வாவின் தொலைபேசி அழைப்பு கலைக்க.

“சொல்லுடா விஷ்வா”

“அந்தப் பெண்ணுக்கு மயக்கம் தெளிச்சிடுச்சி தேவ்”.

“ஏதாவது விவரம் சொன்னாளா?”

“இல்லைடா... நான் கேட்கல”

“ஏன் ?”

“நீ வந்த பிறகு கேட்கலாம்னு விட்டுட்டேன்.”

“நவ் ஷிஸ் ஆல் ரைட்?

“எஸ்...தேவ் ஃபைன்.”

“அப்ப நான் சொல்றபடி செய். என்னைப் பற்றி விவரமோ இல்ல நான் தான் அவள சேர்த்தன் என்று சொல்லாத. அவள் யார் பெயர் ஊர் இப்படி எல்லாத்தையும் அவளிடமே கேட்டு வாங்கிக்கோ. இன்னும் சில பேப்பர்ஸ் மற்றும் பத்திரங்கள் தரேன் அதில் எல்லாம் கையெழுத்து வாங்கிக்கோ. ஆனா அந்தக் கையெழுத்து எல்லாம் அவள் உடல் நிலை சம்பந்தப்பட்டதற்குனு மட்டும் சொல்லு பிறகு நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் தேவ்.


 
Last edited:

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
V

Vasumathi

Guest
Apadi ena solli iruparu athuvum dev seiya2matten nu sollum level ku (marriage) super Dev nice epi 😍
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN