😍💘உனக்காக வாழ நினைக்கிறேன் 💘😍 அத்தியாயம் -2

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
2



சம்யுக்தாவும் சந்தோஷும் புலம்பிக்கொண்டிருந்தனர்.
“ஏன் உங்க அப்பா இந்த வீட்ட விக்கும் உரிமைய, உன் தங்கச்சிக்கும் சமமா கொடுத்துருக்காரு? ச்சே.. பாரு, இப்போ நம்மனால ஒரு அவசரத்துக்கு கூட விக்க முடியல.” என்று கூறியவாறு தன் தலையில் கை வைத்தபடி அமர்ந்தான் சம்யுக்தாவின் காதலன் சந்தோஷ்.
“எனக்கு இது புரியல ஷாண்டி.. இப்போ என் வயித்துல நம்ம பிள்ள இருக்குறதுக்கும், இந்த வீட விக்குறதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று சம்யுக்தா கேட்க..
“அடியே... வாய மூடு டி.. இந்த விசயம் இப்போ உன் தங்கச்சிக்கு தெரியனுமா? ஏன் இத இவ்வளாவு சத்தமா சொல்லுற? அவ காதுல கேட்டு வைக்க போது..” என்றபடி அவள் வாயை மூடினான் சந்தோஷ்.
“சரி ஷாண்டி. அமைதியாவே கேக்குறேன்.. ரெண்டுக்கும் என்ன சம்மந்தம்?” என்று அவள் கிசுகிசுக்க.. தொண்டையை செறுமிக்கொண்டு அவள் காதுக்கு மட்டும் கேட்கும் வகையில் பேச ஆரம்பித்தான்.
“இந்த வீட்ட வித்து வர காசுல நான் சொந்தமா பிஸினஸ் பண்ண ஆரம்பிச்சுடுவேன். அப்பறம் நான் எங்க அப்பாவ நம்பி வாழாம இருப்பேன். உன்னய கல்யாணம் பண்ணிக்குறேன்-னு சொன்னாலும் வேண்டா-னு சொல்ல மாட்டாங்க. இதெல்லாம் எனக்கு இல்ல சம்யு... நமக்கு.. நீ, நான், நம்ம பிள்ளைக்கு டி.” என்றபடி அவள் கையைப் பிடித்தப்படி பேச்சைத் தொடர்ந்தான். “இப்போ இந்த வீட்ட ஏன் உன் தங்கச்சி ஷண்மதி விக்க மாட்டேன்-னு சொல்லுறா?” என்று பாசமிகு தொணியில் சந்தோஷ் கேட்க..
“இது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்ந்த வீடாம்.. அம்மா போன அப்பறம் இந்த வீட்டு ஒவ்வொரு சுவத்துலையும் அம்மா வாழ்றதா அப்பா சொல்வாராம்..இப்போ அப்பாவும் இல்லாம போன அப்பறம் அவரும் இந்த வீட்ல வாழ்றதா நம்புறாளாம்.” என்று சம்யுக்தா எந்தவித உண்ர்ச்சியும் இல்லாமல் கூற..சந்தோஷ் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

“இதெல்லாமா ஷண்மதி நம்புது?” என்று மீண்டும் தலையில் அடித்துக்கொள்ள..
“ஆமா ஷாண்டி..” என்று அவளும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டாள். அந்நேரம் பார்த்து ஷண்மதி அங்கே வந்து,
“ஹாய் சந்தோஷ்.. அக்காவும் நீங்களும் எப்போ எப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்-னு யோசிக்கிறீங்களா? அதுக்கு ஏன் இப்படி உம்முனு இருக்கீங்க? ஜாலியா இருங்க. காதலிக்கிற நேரத்திலேயே எல்லாத்தையும் என்ஜாய் பண்ணிடுங்க பா. கல்யாணம் பண்ண அப்பறம் குடும்பத்த பார்த்துக்குற மிக பெரிய பொறுப்பு உங்களுக்கு வந்துடும்.இப்பவே ஜாலியா இருக்க பாருங்க.” என்று அவர்களிடம் பேசியப்படி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகினாள். அவள் பேசியதை சட்டை செய்யாமல் அவள் காதில் விழாத வண்ணம் சம்யுக்தாவிடம் கிசுகிசுத்தான் சந்தோஷ்.
“நம்ம பேசுனத ஷண்மதி கேட்டுருப்பாளா?
“இல்ல ஷாண்டி.. கேட்டுருந்தா அவ வேற மாதிரி ரியாக்ட் பண்ணிருப்பா.”
“வேற மாதிரினா? கோபப்பட்டிருப்பாளா?
“ச்சே ச்சே..அது லூசு மாதிரி நடந்துக்குமே தவிர, அவ்வளவு சீக்கிரத்துல கோபப்படாது. நம்ம பேசுறத கேட்டுருந்தா மிஞ்சி போனா அழுதுருப்பா. அததான் ‘வேற மாதிரி ரியாக்ட் பண்ணியிருப்பா-னு’ சொன்னேன்.”

“ஓ..அப்படியா.. நான் கூட நம்ம பேசுனத கேட்டுருப்பாளோ-னு நினச்சு பயந்துட்டேன் டி சம்மு” என்றபடி அவன் செல்லம் கொஞ்ச..
“என்ன? ரெண்டு பேரும் ஒன்னும் சொல்லமாட்டேங்குறீங்க?” என்று கேட்டப்படி ஷண்மதி அவர்களிருவருக்கும் அருகில் உட்கார்ந்தாள். பேச்சை மாற்ற எண்ணிய சம்யுக்தா,
“ஹ..உன்ன நெனச்சு தான் ஷண் எந்நேரமும் வேலை வேலை-னு திரியுற உனக்கு ரெஸ்ட் எதுவும் இல்லையா-னு நாங்க கவலப்பட்டுடு இருந்தோம்.” என்று ஒருவாராக சம்யுக்தா நிலைமையை சமாளிக்க.. அதை கேட்ட சந்தோஷின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. ‘என்ன?’ என்பது போல் சம்யுக்த தன் புருவத்தை ஏற்றி இரக்க, ‘ஒன்றுமில்லை. பின்னே சொல்கிறேன்’ என்பது போல் சைகை காட்டினான் சந்தோஷ்.
மூன்று நாள் கழித்து சம்யுக்தாவை பார்க்க வருவதுபோல் அவளின் வீட்டிற்க்கு வந்த சந்தோஷ், ஷண்மதியின் கைகளில் மொரிஸியஸ் விமான டிக்கெட் மற்றும் மூன்று மாத விசாவும் கொடுத்தான்.
“இது என் ஆபீஸ்-ல எனக்கு வெகேஸன்-காக கொடுத்த டிக்கெட் மற்றும் விசா. வேலை வேலை-னு திரியுற உனக்கு இது கொஞ்சம் நிம்மதிய கொடுக்கும்-னு தான் உனக்கு கொடுக்குறேன் ஷண்மதி. எஞ்சாய் பண்ணு.” என்று கூறிவிட்டு சம்யுக்தாவைப் பார்த்து ஷண்மதி காணாதவாறு கண்ண்டித்தான்.
“இது எதுக்கு சந்தோஷ் எனக்கு? அதுக்கு, கூட ஒரு டிக்கெட் எடுத்துக்கிட்டு, நீங்களும் சம்யு-வும் போயிட்டு வரலாமே?” என்று ஷண்மதி கேட்கவும், சந்தோஷ் சம்யுக்தாவை தள்ளிவிட்டு நிலைமையை தங்களுக்கு சாதகம்மாக்கச் சொல்ல..ஷண்மதியின் தோளை ஆதரவாக பிடித்த சம்யுக்த்தா,
“நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல-னு நான் வந்து நின்னதும், இந்த வீட்டோட மொத்த வருமானத்தையும் நீ பார்த்துக்குறதா சொல்லி, தனி ஒரு பொண்ணா, ஆபீஸ் போய், வீடு திரும்பவே உனக்கு சாய்ந்தரம் ஆகிடுது. வர்றவ, அசந்து போய் சாப்பிட்டு தூங்கிடுற.. இந்த வயசுல இப்படி குடும்பத்தோட மொத்த பொறுப்பையும் உன் தலை-ல தூக்கி வச்சுட்டு இருக்குற உனக்கு ஒரு அக்கா-வா என்னால முடிஞ்ச சின்ன விசயம். இதையும் வேண்டா-னு சொல்லி, என்னைய கஷ்டப்படுத்திராத ஷண்..” என்று கூறவும் அதற்கு சம்மதம் கூறினாள் ஷண்மதி. டிக்கெட்-ஐ வாங்கிப்பார்த்த சம்யுக்தா. யோசனையுடன் சந்தோஷைப் பார்த்து,
“ஷாண்டி... டிக்கெட்,விசா-லாம் சரி.. இவ எங்க போய் தங்குவா?” என்று கேட்டுவைக்க, இதைப்பற்றி யோசிக்கத் தவறிய சந்தோஷ் திறுதிறுவென விழிக்க..
“பரவாயில்ல சம்யு.. நான், அங்கேப் போய் பார்த்துக்குறேன். எனக்காக நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் யோசிச்சதே பெரிய விசயம். நான் பார்த்துக்குறேன் சம்யு.” என்று கூறிவிட்டு டிக்கெட்டுகளை பெற்றூக்கொண்டாள் ஷண்மதி.
“என்னைக்கு ஃப்ளைட்?” என்று சந்தோஷப் பார்த்து ஷண்மதி கேட்க,
“நாளை இரவு 9.45 மணிக்கு..” என்று அவன் கூறினான்.
“அப்போ சரி.. நான் எல்லாத்தையும் பேக் பண்ண ஆரம்பிச்சுடுறேன்..” என்று கூறிவிட்டு தனது ரூமிற்க்கு சென்றாள் ஷண்மதி.
அவள் செல்லவும் சந்தோஷைப் பார்த்த சம்யுக்தா,
“இந்த மொரிஸியஸ் ட்ரிப் எதுக்கு ஷாண்டி?” என்று கேட்டாள்.
“ஷண்மதி மொரிஸியஸ்-ல இருக்குற அந்த நேரத்தில, நம்ம இங்க இந்த வீட வித்திடலாம். அப்பறம் என்ன? நான் தொழில் ஆரம்பிச்சுடுவேன். அதுக்கு அப்பறம் நம்ம கல்யாணம் தான்.” என்று கூறி சந்தோஷ் சிரிக்க.. அவனுடன் சேர்ந்து சம்யுக்தாவும் சிரித்தாள்.”
🌺🌺🌺🌺🌺🌺
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN