3
மொரிஸியஸ் விமானத்தில் அர்ஜூனும், ப்ரீத்தியும் நடு வரிசையில் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்தனர். நடு இருக்கையில் அர்ஜூனும், வலப்புற இருக்கையில் ப்ரீத்தியும் அமர்ந்தனர். அமர்ந்ததும் உறங்கிப்போயினர் தந்தையும் மகளும். சற்று நேரத்தில், அர்ஜூனிற்கு அருகில் உள்ள இருக்கையில் ஷண்மதி அமர,“ஹலோ..ஹலோ..என்ன நீங்கபாட்டுக்கு என் பக்கத்துல உட்கார்ந்துட்டீங்க? யாரு நீங்க? எதுக்கு என் பக்கத்தில உட்கார்ந்திருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு அந்த பக்கம் கடந்துச் சென்ற ஏர்ஹோஸ்டஸ்-ஐ நிறுத்தி..
“மேம்.. இவங்க யாருனே தெரியாது.. இவங்க இஷ்டத்துக்கு என் பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க.. நீங்க என்ன-னு கேளுங்க...” என்று கேட்டுக்கொண்டிருந்தவனை ஷண்மதியின் குரல் நிறுத்தியது.
“ஹேய் மிஸ்டர். மனசுல பெரிய மன்மதன்-னு நெனப்பா? இவர் பக்கத்துல உட்காரத்தான் எல்லா பொண்ணுங்களும் ஏங்கி போயிருக்காங்க பாரு..” என்று அவள் பொறிந்து தள்ள..
“ஹலோ..மேடம்..பார்த்து பேசுங்க..” என்று முகத்தை அர்ஜூன் திருப்பிக் கொள்ள..
“பின்ன என்ன மிஸ்டர்..? சும்மா என் இஷ்டத்துக்கு உட்கார இது என்ன சிட்டி பஸ்-ஸா? ஃப்ளைட்.. எங்கிட்ட பயணச்சீட்டு இருக்கு. அதுல இந்த இருக்கை எனக்கு கொடுத்துருக்காங்க..” என்று பொங்கினாள் ஷண்மதி. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அர்ஜூன் அமைதியானான்.
சற்று நேரத்தில் விமானம் வானில் பறக்க ஆரம்பிக்க.. அருகிலிருந்த ப்ரீத்தியின் கைகளை பிடித்துக்கொண்டு உறங்கிப்போனான். தூக்கம் வராத ஷண்மதிக்கு இது தான் முதல் விமான பயணம். உண்ண உணவுகளுடன் சென்ற ஏர்ஹோஸ்டஸை நிறுத்தினாள். அதற்கு ஏர்ஹோடஸ்,
“யெஸ் மேம்.. வெஜ் ஆர் நான்-வெஜ்?” என்று ஏர்ஹோஸ்டஸ் கேட்க..
“நான்-வெஜ்” என்று கூறவும் அந்த பெயர் தெரியாத உணவை எடுத்துக்கொண்டாள். வாயில் வைத்ததும் அது பச்சையாக இருப்பது தெரியவரவே குமட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. வாங்கிவிட்டோமே என்று அவள் சாப்பிட ஆரம்பிக்க.. பாதிக்கு மேல் சப்பிட முடியாமல் திணறிப்போனாள் ஷண்மதி. அவள் குமட்டிக்கொண்டிருப்பது அர்ஜூனின் காதில் விழ.. கண்விழித்தவன், ஷண்மதி தன்மேலே வாந்தி எடுப்பதுபோல் தெரிய..
“ஏய்..ஏய்..ஏய்.. அப்படியே பின்னாடி போ..போ.. வாஷ் பேஷின்-க்கு போ...” என்று கைக்காட்ட..அர்ஜூன் அணிந்திருந்த கோட் மேலேயே அவள் வாந்தி எடுத்தாள்.. பற்களை கடித்துக் கொண்டு பொறுமைக்காத்தவன், அவள் வாந்தி எடுத்து முடிக்கவும் அவனது கோட்டைக் கழற்றிக் கொண்டு எழுந்திரிக்க.. ஷண்மதி மேலும் குமட்டினாள்..அவளின் முகத்தைத் தட்டிப் பார்த்தவன், உடலில் திராணியே இல்லாததால் மயங்கும் நிலையில் இருந்த ஷண்மதியை பார்க்க அர்ஜூனுக்கு பாவமாக இருந்தது.
தன்னுடைய கோட்டை எடுத்துக்கொண்டு மயங்கும் நிலையிலிருந்த ஷண்மதியை இழுத்துக்கொண்டே போய் வாஷ்-பேஷினில் குனிய வைத்தான்.
ஷண்மதி முழுமையாக சரியாகும் வரை உடன் துணை இருந்துவிட்டு, தனது கோட்டை சுத்தம் செய்துவிட்டு, அவளை நகர்த்திக்கொண்டு தனது இருக்கையை நோக்கி சென்றான் அர்ஜூன். ஷண்மதிக்கு, அர்ஜூன் தண்ணீர் கொடுத்து அசுவாசப்படுத்த... மெதுவாக கண்விழித்தாள் ப்ரீத்தி.
“என்ன சப்பிட்ட? இப்படி வாந்தி வர அளவுக்கு?” என்று அர்ஜூன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்க.. அதற்கு ஷண்மதி ‘தெரியவில்லை’ என்பது போல் தலையசைக்க...ஏர்-ஹோஸ்ட்டஸை அழைத்து,
“இவங்க என்ன சாப்பாடு கேட்டாங்களோ, அதே சாப்பாடு எனக்கும் கொடுங்க..” என்று அர்ஜூன் கேட்கவும், ஷண்மதி கேட்ட அதே அசைவ உணவை அந்த பெண்மணி கொடுக்க.. அதை பார்த்தவுடன் அர்ஜூன் அது என்ன உணவு என்பதைக் கண்டுக்கொண்டான்.. அந்த ஏர்-ஹோஸ்டஸிடம் ‘வேண்டாம்’ என்று கூறியப்படியே அந்த உணாவை திரும்பக் கொடுத்தனுப்பினான். முகத்தில் கிண்டலுடன் மெல்லிய புன்னகை படர ஷண்மதியை நோக்கியவன்,
“நீ என்ன சாப்பிட்ட-னு தெரியுமா மொதல்ல?” என்று கேலியான முகபாவத்துடன் அவன் கேட்டான்.
“தெரியாதே..!!!” என்று யோசனையாகப் பார்த்தாள் ஷண்மதி.
“இது மீன்.. பச்சையா அறைச்சு வடை மாதிரி தட்டி கொடுத்துருக்காங்க.. அந்த வடையவும் அவங்க சமைக்ககூட இல்ல.. அவிச்சு இருக்காங்க.. இது தெரியாம, சப்பிட்டிருக்க நீ... ஹாஹாஹா...” என்று அவன் வெடித்து சிரிக்க.. ஷண்மதியும்...
“ஆ.. செம்ம காமெடி... செம்ம காமெடி.. ஹாஹாஹாஹா...” என்று அவளும் அர்ஜூனின் சிரிப்புடன் கலந்துக்கொள்ள.. இதை அனைத்தையும் கவனித்த ப்ரீத்தி, அர்ஜூனிடம்..
“அப்பா, நீங்க என் சீட்டுக்கு வர்றீங்களா?” என்கவும், அர்ஜூன் ப்ரீத்தியின் இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, ப்ரீத்தி அர்ஜூனின் இருக்கையில் அமர்ந்தாள்..(ஷண்மதிக்கு அருகில்) அவள் வந்ததுகூட தெரியாமல் சிரித்துக்கொண்டிருந்த ஷண்மதியை சொறண்டிய ப்ரீத்தி,
“இங்க அப்படி ஒன்னும் பெருசா காமெடி நடக்கலையே..?! பின்ன ஏன் இவ்வளவு சிரிப்பு?” என்று கேள்வியாக ப்ரீத்தி கேட்க...சிரிப்பதை நிறுத்திய ஷண்மதி, அவளைப் பார்த்து..
“சொல்லப்போனா இப்போ எனக்கு உங்க அப்பா சொன்னது சிரிப்பு வரல.. ஆனா, நான் சிரிக்கலைனா, எனக்கு புரியலைனு நெனச்சு மறுபடியும் அதையே சொல்லி அவரே சிரிச்சுப்பாரு.. அதான்..” என்று ஷண்மதி நமட்டு சிரிப்புடன் சொல்ல.. ப்ரீத்திக்கு சிரிப்பு தாங்கவில்லை. ஷண்மதி என்னவோ மெதுவாக தான் கூறினாள், ஆனால் எப்படியோ அது அர்ஜூனின் காதில் விழ, ‘அட க்ராதகி..’ என்று எண்ணியவன்..ப்ரீத்தியைப் பார்த்தான். அவள், இடைவிடாது சிரிப்பதைக் கண்டவனுக்கு முகத்தில் மென்மை பரவியது.. நன்றியுடன் ஷண்மதியை அவன் பார்க்க.. அவள் சீரியஸாக ப்ரித்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரின் கலகலப்பைக் கலைக்க விரும்பாதவன், அப்படியே உறங்கிப்போனான்.
அவர்களிருவரும் எவ்வளாவு நேரம் இப்படியே வாயடித்துக்கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், இருவரும் உறங்கிப்போக வெகுநேரமானது..
விமானம் தரையிரங்கும் நேரம் நெருங்க, விமானப்பெண் சீட் பெல்ட் மாட்டும்படி அறிவிப்பு விடுக்க.. கண் விழித்த அர்ஜூன், திரும்பி ப்ரீத்தியையும் ஷண்மதியையும் பார்த்தான். அவர்களிருவரும் நல்ல உறக்கத்திலிருக்க..ப்ரீத்தியை எழுப்பினான்.
“பாப்பு...மொரிஸியஸ் வந்தாச்சு. சீட் பெல்ட் போடுங்க..” என்று அவன் கூறவும் லேசாக கண் விழித்தவள், அர்ஜூனே தனக்கு சீட் பெல்ட் மாட்டிவிடுவதைக் கண்டு முறுவழித்தாள். ஷண்மதி இன்னும் விழிக்காமல் இருப்பதைக் கண்ட அர்ஜூன், ப்ரீத்தியிடம்..
“அவங்கள எழுப்பி சீட் பெல்ட் போட சொல்லு டா..” என்று கூறவும், ப்ரீத்தி ஷண்மதியை எழுப்ப.. அவள் கண்விழித்தாள். ப்ரீத்தி அவளை சீட் பெல்ட் போடும்படி கூற..வேகமாக அதைப் போட்டாள்.
சற்று நேரத்தில் விமானம் தரையிறங்க அவரவர் உடைமையை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் வாசலை அடைந்தனர். ப்ரீத்தி, ஷண்மதியைப் பார்க்க.. அவள் எங்கே செல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அர்ஜூனை தட்டி, ஷண்மதியைப் பார்க்கச் சொன்னாள். அவள் ஊர் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது அர்ஜூனுக்கு. ஷண்மதிக்கு அருகில் வந்தவன்,
“தெரியாத ஊரா மொரிஸியஸ்?” என்று அவன் கேட்க..
“ம்ம்ம்...” என்று பயந்த முகத்துடன் ஷண்மதி தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
“சரி.. நீ போக வேண்டிய இடத்தின் முகவரிய கொடு.. நானே என் ஃப்ரெண்ட்-ஒட கார்-ல கூட்டிப் போய் உன்னைய இறக்கிவிட்டுறேன்” என்று அர்ஜூன் கூற, அதற்கும் அவள் திருதிருவென்று விழித்தாள்.. ஷண்மதியின் கண்களுக்குள்ளேப் பார்த்த அர்ஜூன், அவளிடம் முகவரியே இல்லை என்பதை உணர்ந்தான். “சரி.. இந்தா என் மொபைல்.. இந்த ஊர பத்தி தெரிஞ்ச யாருட்டையாவது போன் பண்ணி போக வேண்டிய இடத்தோட முகவரிய கேட்டுச்சொல்லு.. நானே உன்னைய அங்க ட்ராப் பண்ணிடுறேன்.” என்று அவன் மொபைலை ஷண்மதியிடம் கொடுக்க, அதை வாங்கி தனது அக்கா சம்யுக்தாவிற்கு அழைப்புவிடுத்தாள். சம்யுக்தா போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னது தான் தாமதம்.. படபடவென்று பேசி முடித்தாள் ஷண்மதி..
“சம்யு.. நான் தான் ஷண்மதி பேசுறேன். எனக்கு இங்க எதுவுமே தெரியல சம்யு.. எங்க எப்படி போறது-னு கூட தெரியல பா. சந்தோஷ் அத்தான் கிட்ட கேட்டு இங்க ஏதாவது தெரிஞ்ச ஹோட்டல் இருந்தா அட்ரஸ் மட்டும் கேட்டு சொல்லேன்.” என்று அவள் கூறவும் மறுமுனையில் எந்த வித சத்தமும் கேட்காமல் போக.. “ஹலோ.. சம்யு.. சம்யு.. லைன்-ல இருக்கியா?” என்று பதட்டத்தில் ஷண்மதி பேச.. மெதுவாக வெறும் “ம்ம்..” என்று மட்டும் வர..அதற்கு ஷண்மதி,
“ என்ன சம்யு.. சந்தோஷ் கிட்ட கேட்குறியா?”
“நானே பார்த்துக்குறேன்-னு சொன்ன? இப்போ அங்க போயிட்டு எதுவும் தெரியல-னு சொல்லுற?” என்று கூறியவளின் குரலில் ஒட்டுதல் இல்லாமலிருப்பதை உணர்ந்த ஷண்மதிக்கு ‘எதுவோ சரியில்லை’ என்பது புரியவர..
“சம்யு..ஏன் இப்படி யாரோ மாதிரி பேசுற? சம்யு.. சம்யு..” என்று மேலும் ஷண்மதி பதறினாள்.
“யாரோ மாதிரிலாம் இல்ல. யாரோ தான்.. நீ அங்க போன அப்பறம் உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவு முடிஞ்சுடுச்சு.” என்று சம்யுக்தா கூறவும் அதிர்ந்த ஷண்மதி,
“ஹேய் சம்யு..!!! என்ன சம்யு இப்படி சொல்லுற? என்மேல ஏதாவது கோபம்னா சொல்லு.. பேசி தீத்துக்கலாம் பா. டக்குனு இப்படி யாரோ-னுலாம் சொல்லாத சம்யு..” என்று அவள் நா தழுதழுக்க..
“நான் சீரியஸா தான் சொல்லுறேன் ஷண்மதி.. இன்னைல இருந்து நீ யாரோ, நாங்க யாரோ.. ஷாண்டி வேணும்னே தான் உன்னைய மொரிஸியஸ் அனுப்பி வச்சான். எனக்கும் இந்த விசயம் தெரியும்.” என்று சம்யுக்தா படபடவென்று பொறிந்து தள்ளினாள். ஷண்மதிக்கு ஒரு நிமிஷம் உலகமே நின்றுவிட்டது போன்று தோன்ற.. கண்களில் கண்ணீர் தாரைத்தாரையாக கொட்டியது. பேச்சு வராமல் வார்த்தைகள் அவள் தொண்டையை தாண்டி வர மறுத்தது. ‘இவ்வளவும் விளையாட்டாகத் தான் செய்தேன்’ என்று ஒருமுறையாவது தனது தமக்கை சொல்லிவிடமாட்டாளா? என்று ஏங்கியவளாக ஷண்மதி,
“ஏய் சம்யு.. விளையாடாத பா. இது விளையாடுற நேரமில்ல சம்யு.” என்று கண்ணீரைத் தொடைத்த வண்ணாம் கூறியவளிடம் சம்யுக்தா,
“விளையாடலாம் இல்ல ஷண். நிஜமாவே சொல்லுறேன்” என்று சம்யுக்தா கூறவும் அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்துவிட்டாள் ஷண்மதி.
“சம்யு.. எனக்கு உன்னைய விட்டா யாரு இருக்கா? இப்படிலாம் சொல்லாத டி.. எனக்கு புரியல. ஏன்..? ஏன்..? ஏன் இப்படி பண்ணீங்க ரெண்டு பேரும்..? நான் என்ன பாவம் செஞ்சேன்?” என்று கண்களில் கண்ணீர் பொங்க அவள் கேட்க..
“நானும் ஷாண்டியும் எத்தனை முறை இந்த வீட வித்துடுவோம்-னு சொன்னோம்? கேட்டியா? ‘இந்த வீட்டுல அப்பா வாழுறாரு..’ அப்படி இப்படி சல்லி காரணத்த சொல்லி இத விக்க விடாம பண்ணுன.. இந்த வீட்ட வித்து வர்ற காசுல தான் ஷாண்டி சொந்தமா பிஸின்ஸ் ஆரம்பிக்கலாம்-னு இருந்தாரு. அப்படி அவர் பிஸின்ஸ் ஆரம்பிச்சா தான் எங்க கல்யாணம் நடக்கும். எங்களோட இந்த கனவுக்கு தடங்கலா இருக்குறது நீ..!! அதான் உன்னைய தூரமா அனுப்பி வச்சுட்டோம். இனி எங்கள கேட்டு போன் பண்ணாத. போன வை..” என்ற சம்யுக்தாவின் வார்த்தைகள் ஷண்மதிக்கு இடியே விழுந்தது போல் இருந்தது. தனது ஆசை அப்பா வாழ்ந்த வீடு விற்கப்படும் செய்தி அவளை அந்த நிலையிலும் கோபத்தை வரவழைக்க..
“அப்பா வீட்ட நான் இல்லாம விற்க முடியாது சம்யு.” என்று ஷண்மதி கூறவும் சம்யுக்தா,
“அதெல்லாம் நாங்க பார்த்துப்போம். நீ எங்கள தேடி மட்டும் வந்துடாத. நான் போன வைக்குறேன்.” என்று கூறிவிட்டு போனை கட் செய்தாள் சம்யுக்தா. போனை ஒரு தரம் பார்த்த ஷண்மதி, தனது முழங்காலில் முகம் புதைத்து அழத் தொடங்க, இவை அனைத்தையும் கவனித்த அர்ஜூனுக்கு அவளை எவ்வாறு சாமாதானம் செய்வது என்றுத் தெரியவில்லை.
முழங்காலில் முகம் புதைத்து அழுதுக் கொண்டிருந்தவளின் தோளில் ப்ரீத்தி ஆதரவாக கை வைத்தாள். நிமிர்ந்து அவளைப் பார்த்த ஷண்மதி எதுவும் கூறாமல் மீண்டும் அழத்த் தொடங்க, ப்ரீத்திக்கு மனக் கஷ்டமாக இருந்தது. கவலையுடன், தனது தந்தையை அவள் பார்க்க.. அவனோ ‘இரு.. நான் பார்த்துக்குறேன்’ என்பது போல சகை காட்டிவிட்டு, ஷண்மதிக்கு அருகில் முழங்காலிட்டு உட்கார்ந்தவன்.. ப்ரீத்தியிடம் பேசுவது போல ஷண்மதியிடம் பேசத்தொடங்கினான்.
“ப்ரீத்தி செல்லம்.. உனக்கு இந்த ஆண்டிய பிடிச்சிருக்கா?” என்று ஷண்மதியைப் பார்த்த வண்ணம் அர்ஜூன் கேட்க.. அவனை புரிந்துக் கொண்ட ப்ரீத்தி,
“ஆமா ப்பா. எனக்கு ஷண்மதி ஆண்டிய ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று ப்ரித்தியும் முழங்கலில் முகம் புதைத்து அழுதுக்கொண்டிருந்த ஷண்மதியைப் பார்த்தப்படி கூறினாள்.
“அப்போ இந்த ஆண்டிய நம்ம கூட கூடிட்டு போயிடுவோமா?” என்று அர்ஜூன் கூறவும் அதிர்ந்து நிமிர்ந்தவளின் கண்களில் அர்ஜூன் தென்பட, அவனைப் பார்க்காமல் தவிர்த்தவாறே ப்ரீத்தியைப் பார்த்தாள் ஷண்மதி. அவளோ,
“ஹைய்யா... ஜாலி.. அப்பா வாங்க ப்பா.. ஷண்ன்மதி ஆண்டிய நம்ம கூட கூட்டிடு போயிடுவோம்.” என்று ப்ரீத்தி துள்ளினாள். இவர்களிருவரின் உரையாடலில் ஷாக் ஆன ஷண்மதி ப்ரீத்தியிடம்,
“அம்மு.. என்ன சொல்லுறீங்க? நான் எப்படி உங்க கூட வர முடியும்?” என்று அழுகைப் போய் ஷாக்-கில் அவள் கேட்க..
“ஆமாம் ஆண்டி.. நீங்களும் எங்க கூட வாங்க ப்ளீஸ்..” என்று ப்ரீத்தி கெஞ்சலாக கேட்க.. அர்ஜூன் தொடர்ந்தான்.
“ஷண்மதி.. நீங்க எங்க கூட தாராலமா வரலாம். இங்க தான் என் ஃப்ரெண்ட் இருக்கான். அவன் வீட்டுல தான் தங்கப் போறோம். நீங்க எங்க கூட எங்க கெஸ்ட்-டா தங்கலாம். என் ஃப்ரெண்ட்-கிட்ட உங்கள என் பி.ஏ-னு சொல்லிக்குறேன். எங்கள நம்பி தாராலமா வரலாம்.”என்றவனைப்பார்த்த ஷண்மதிக்கு அவன் மேல் நம்பிக்கை வந்தது..
‘நேத்து ஒரு நைட் ஃபுல்லா, இவர் பக்கத்துல தான் உட்கார்ந்து வந்தோம். ஒரு நிமிஷம் கூட எங்கிட்ட தவறா இவர் நடந்துக்கல’ என்று எண்ணிய ஷண்மதி அவர்களுடன் வர சம்மதித்தாள். பிரபாகரன் அனுப்பிய அந்த காரில், மூவரும் ஏறினர்.