காதலின் வலி💔 சிறு கதை

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அவன் கண்ணீரில் மூழ்கி அழுதுக்கொண்டிருந்தான். தன் காதலி... தனக்காக பிறந்தவள் என்று நினைத்த அப்பெண், இன்று தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டு... தன்னை விட்டுச் சென்று அன்றுடன் ஆறு மாதங்கள் ஆனது.
"நீ என்மேல் அளவுக்கடந்த காதல் வைத்திருக்கிறாய். புரிகிறது. ஆனால் உன்னுடைய கோபம்... அந்த கோபம் தான் என்னை பயமுறுத்துகிறதடா... என் வீட்டில் என்னை அதட்டி கூட பேசமாட்டர். ஆனால் நீயோ, கோபம் வந்தால் என்ன பேசுகிறாய் என்று கூட தெரியாமல், வார்த்தைகளை அள்ளி வீசுகிறாய். என்னால் அது தாங்கிக்கொள்ள இயலவில்லை. உன்னையும் உன் காதலையும் நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால், உன்னுடைய அந்த கோபம் என்னை பயமுறுத்துகிறது. இது சரி வராது டா. பிரிந்து விடலாம்... இந்த பயத்துடன் என்னால் வாழ்நாள் முழுதும் உன்னுடன் வாழ முடியாது. புரிந்துக் கொள்வாய் என்று நம்புகிறேன்." தெளிவாகக் கூறிவிட்டு சென்றுவிட்டாள் அவள்.
அவள் கூறியதைப் போல் அவன் கோபக்காரன் தான். அடக்க முடியாத அளவிற்கு கோபம் அவனுக்கு வந்தாலும், ஒரு நாள் கூட அவளை அவன் கை நீட்டி அரைந்ததில்லை. ஆனாலும் அவன் கோபத்திற்கு பயந்து அவனை விட்டு அவள் முழுமையாகச் சென்றுவிட்டாள்.
எப்போழுதும் அவள் பிரிவை எண்ணி அழுபவன் தான். ஆனால் இன்று அவன் அதிகமாக அழக் காரணம், அன்று அவன் காதலியின் திருமண போஸ்டர்களைக் கண்டதால் தான்.
அப்போஸ்டரினைக் கண்டு தனது மனவலியினை அடக்கிக்கொண்டு வீடு திரும்பிய அவன், வீட்டில் தனது தமயன் தொலைக்காட்சியினை உயிர்பித்தான். அதில் அவனுடைய மிகவும் பிடித்தமான பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

"வலிக்கிறதே வலிக்கிறதே உன்னாலே
நனைகிறதே விழி கூட... ஓ..!!"

பாடலின் முதல் வரியை கேட்டவனின் மனம் கனத்தது.

ஏனென்றால் அது அவனது பிடித்த பாடல். காதலித்த நாட்களிலும் இப்பாடலை அடிக்கடி முணுமுணுப்பான் அவன்.
அவன் நண்பன் ஒருமுறை இவன் இப்பாடலை முணுமுணுத்த போது இது போன்ற சோகப் பாடல்களை அடிக்கடி பாட வேண்டாம் என்று கூறியிருந்தான். ஏனென்றால், இது போன்ற சோகப் பாடல்கள் பிடித்தவர்களின் வாழ்வில் அப்பாடலில் வருவதைப் போன்று தான் வாழ்க்கை அமையும் என்பது அவன் நண்பனின் நம்பிக்கை.
தன் நண்பன் ஏதோ மூடநம்பிக்கையில் உளறுகிறான் என்று நினைத்த அவன், தனது நண்பனின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இப்பொழுது....????
அவனுக்கு பிடித்த அப்பாடலில் வருவதைப் போன்று தான் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவன் காதலி இன்று வேறு ஒருவனுக்கு சொந்தமாகப் போகிறாள்...
வடிந்தக் கண்ணீரை துடைத்தவன், கூடத்திலிருந்த சோபாவில் அமர்ந்து அப்பாடலின் தொடர்ச்சியை கேட்கவும் பார்க்கவும் செய்தான்.

"நீயும் நானும் சேரும் அந்த நேரம்
கானல் நீர் போல் பொய்யோ பெண்ணே..."

"நாட்கள் நீண்டு போக வெறுபாச்சே நெஞ்சம்
கண்கள் மூடினால் கனவெல்லாம் நீ அடிக்கடி"

இவ்வரிகளை கேட்டவன் மெல்ல கண்களை மூடிக்கொண்டான். ஆம்.. அவன் கண்கள் மூடினாலும் அவள் வந்தாள். கண்ணீர் மேலும் வடிய, தன் தமையன் கண்டுக்கொள்ளாத வண்ணம் தன் கண்ணீரை மறைத்தான் அவன்.
தொலைக்காட்சியை நிமிர்ந்து பார்த்தவன் பாடலின் தொடர்ச்சியை பார்த்தான்.

"தாய் தந்தை எதிர்த்தே நான் பேச மாட்டேன்....
நீயில்லா வாழ்வை... நான் வாழ மாட்டேன்....
இதில் என்ன செய்வேன்??? அன்பே சொல்லு....
உயிர் நீங்காமலே தவிப்பேன்"

திருமண மண்டபத்திலே கல்யாண அலங்காரம் நடந்துக்கொண்டிருக்க... கண்களில் தன் கட்டுபாடில்லாமல் நீர் வழிந்தது அவளுக்கு.... அவள் தோழி அவள் மனம் தெரிந்து இப்பாடலை தன் மொபைலில் ஒலிக்க விட்டாளா? என்று தெரியவில்லை.. ஆனால் அப்பாடல் வரிகள் அவளுடைய தற்போதைய நிலையை சுட்டிக்காட்டியது.
ஆம்... அவனை பிரிந்ததற்கு அவன் கோபமும் ஒரு காரணம் தான். ஆனால் அது வெகு நாட்கள் நிலைக்கவில்லை. அவனைப் பிரிந்து அவளால் ஒரு வாரம் கூட இருக்கமுடியவில்லை. அவன் கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். இரணடு ரிங் அடிப்பதற்குள் அவள் தந்தை அவளருகில் அமர்ந்தார்...
"என்ன பண்ணுகிறாய் டா செல்லம்...?" அவள் தந்தை கேட்க..
"சும்மா தோழிக்கு போன் செய்தேன் அப்பா. சொல்லுங்க ப்பா என்ன விசயம்?"
"நான் பேசும் முன்பே நான் ஏதோ விசயத்தோடு தான் வந்திருக்கிறேன் என்று கண்டுக்கொண்டு விட்டாயா?" என்று சிரித்தார் அவள் அப்பா.
"உங்களைப் பற்றி எனக்கு தெரியாதா ப்பா...?" என்று வெள்ளந்தியாக சிரித்தவளுக்கு, தன் ப்ரியத்துக்குறிய அப்பா...தன் காதலை சுக்கு நூறாக உடைக்கப் போகிறார் என்று அவளுக்கு தெரியவில்லை.
"அது வந்து மா... அப்பா உனக்கு....மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் மா..." என்று தயங்கி தயங்கி அவள் தந்தை பேசவர... அதில் அதிர்ந்த அவள் அவரை வெறித்துப் பார்க்க... அவள் அதிர்ந்ததைக் கண்டுக்கொண்ட அவள் தந்தை,
"என்ன மா? ஏன் இந்த அதிர்ச்சி? யாரையேனும் விரும்புகிறாயா என்ன?" என்று அவர் கேட்டதற்கு அவள் பதிலளிக்காமல் விழிக்க..அவர் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
"அப்படியென்றால் கூறிவிடு மா. நானும் உன் அம்மாவும் மருந்து குடித்து இறந்துவிடுகிறோம். எங்களால் இந்த அவமானத்தை தாங்க இயலாதம்மா... சொல்.. யாரேனும் உன் மனதில் இருக்கிறாரா?" என்று குரல் நடுங்க சொன்ன தன் தந்தையின் வார்த்தைக்கு பயந்து , அவனை அவள் விரும்பும் விசயத்தை குழித்தோண்டி புதைத்தாள் அவள்.
இன்று அவளுக்கு திருமணம்... ஆனால் தன் உள்ளங்கவர் கள்வனோடு அல்ல... அவள் தந்தை அவளுக்காக பார்த்த டாக்டர் மாப்பிள்ளையோடு...
பாடலைக் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவனின் மனம் மிகவும் வலித்தது.. அவன் நண்பன் அவனுக்கு போன் செய்ய..அதனை எடுத்து அவன் காதில் வைத்தவனுக்கு, திருமண மங்கள வாத்தியத்தின் சப்தம் கேட்டது...
"மச்சான்... உன் காதலிக்கு அந்த டாக்டர் மாப்பிள்ளையுடன்..." என்று அவன் கூறி முடிக்கும் முன்னரே அழைப்பை துண்டித்தான்...
பைக்-ஐ எடுத்துக்கொண்டு வேகமாக வைகை ஆற்றங்கரைக்கு சென்றான். பைக்-ஐ விட்டு இறங்கிய அவன், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது...அவன் கையை பிடித்து அவனை அக்காரியம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியது ஒரு மெல்லிய கரம்...
அது அவனை பல வருடங்களாக ஒரு தலையாய் காதலித்த பெண்.
"என்னை விடு நான் சாகணும்..." அவன் கூற..
"எதற்காக? யாருக்காக..?" என்று கேட்டாள் அப்பெண் பொறுமையாக...
"யார் என் உயிரென்று நினைத்தேனோ, அவள் இன்று வேறு ஒருவனை திருமணம் செய்துக்கொண்டாள்.." வெடித்து அழுத அவனிடம்..
"உன்னை வேண்டாம் என்று விட்ட பெண்ணுக்காக உன் உயிரைத் தியாகம் செய்ய துணிந்துவிட்டாயா? ஒரு நிமிடம் உன்னை வேண்டும் என்று நினைக்கும் உன் குடும்பத்தை எண்ணினாயா? நீ இப்படி சாகவா உன் பெற்றோர் உன்னை பெற்றெடுத்தனர்? மனம் வலித்தால், என்ன வேண்டும்னாலும் முடிவெடுத்துவிடுவாயா? முட்டாள்... போய் உன் தாய் தந்தையிடம் பேசு. அவர்களை கைவிடாதே..." என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
மூன்று வருடங்கள் ஓடியது.. அவனை மறக்க முடியாமல் அவனின் ஒரு தலைகாதலியான அவள் திருமணமே செய்யாமல் காத்துக்கொண்டிருந்தாள். திடீரென அவளுக்கு ஒரு கால் வந்தது.. அழைப்பை ஏற்றாள்..
"என்னை திருமணம் செய்துக்கொள்வாயா?" அவனின் குரல் கேட்டு ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தினாள் அவனின் ஒரு தலைக்காதலி....
மன்னிக்கவும்... அவனின் உண்மையான காதலி...
அவன் நண்பன் கூறியதைப் போல் அவறுக்கு பிடித்த அப்பாடலைப் போல் அவன் வாழ்க்கை அமையவில்லை என்பதை உணர்ந்தவனாக அப்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் மணம் செய்துக்கொண்டான் அவன்.

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

P.A.ammu said:

Nice

Click to expand...

Nandrigal sis

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN