உன்னாலே உனதானேன் 12

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கொத்தாக பிடித்த சட்டையை விடாமல் தன்னருகே வினயை இழுத்த ரேஷ்மி

“ஏன்டா தினம் தினம் இப்படி என்னை டாச்சர் பண்ணுற??? உனக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ண வேற பொண்ணே கிடைக்காமலா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுற??? என்னை பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டேன் என்று சொன்னியே.... என்னை பற்றி என்னடா தெரியும் உனக்கு?? என்னுடைய வாழ்க்கையில் என்றுமே நான் வெறுக்கும் ஒரு வார்த்தை காதல்னு தெரியுமா உனக்கு??? என் பின்னாடி காதல்னு சுத்துன எல்லோரையும் அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தி ஓடவிட்டது தெரியுமா உனக்கு??? என் அம்மா அப்பா சந்தோஷத்துக்காக தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேனு தெரியுமா உனக்கு??? இதெல்லாம் உனக்கு தெரிஞ்சிருந்தா பஸ்ட்நைட்டில் நீ என்னை காதலித்தேன்னு சொல்லியிருக்க மாட்ட... நீ சொல்லியிருக்காட்டி இன்னேரம் நீயும் நானும் ஹனிமூன் கொண்டாடியிருப்போம்....” என்று ரேஷ்மி அவனிடம் பல கேள்விகளை கேட்டவள் அவன் சட்டையை விட்டுவிட்டு அவனை விட்டு விலகி சென்று மறுபுறம் திரும்பி நின்றுகொண்டாள்..

வினயோ பேச்சின்றி நின்றான்.... முதலில் அவளது கேள்விகளில் ஒன்றும் புரியாது நின்றவன் கடைசியில் அவள் கூறிய ஹனிமூன் விடயம் அவனது மனதை வருடிக்கொடுத்தது... மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் அவளது கேள்விகள் எதற்கானது என்று தெரிந்து கொள்வதற்கான அவசியம் உண்டு என்று உணர்ந்தவன்

“ஷிமி உனக்கு ஓகேனா சொல்லு... நாம இப்ப ஹனிமூன் கொண்டாடுவோம்...” என்று ரேஷ்மியிடம் உண்மையை அறிவதன் பொருட்டு ஹனிமூன் என்ற வார்த்தையை பயன்படுத்த அது சரியாக வேலை செய்தது...
மறுபுறம் திரும்பி நின்றவள் சட்டென திரும்பி வினய் அருகில் வந்து

“ஏன்டா நீ வாழ்க்கையை சீரியஸ்ஸாகவே எடுத்துக்க மாட்டியா?? நான் நம்ம வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருக்கேன்... நீ ஹனிமூன் கொண்டாட கூப்பிடுறியா?? என்னை நீ புரிஞ்சிக்கவே மாட்டியா??” என்று அவனை திட்டும் தொனியின் தொடங்கியவளின் குரல் முடிக்கும் போது கம்மியது.... அவளுள் ஏதோ ஒரு மனக்குழப்பம் என்று ஏற்கனவே கண்டு கொண்ட வினயிற்கு அதை தெரிந்து கொள்ள இது தான் சரியான சந்தர்ப்பம் என்று புரிந்தது... அதற்காக வேண்டி மீண்டும் ரேஷ்மியை வெறுப்பேற்றும் முயற்சியில் இறங்கினான் வினய்...

“இப்போ நான் என்ன புரிஞ்சிக்கலை... ?? நீ தான் ஹனிமூன் கொண்டாடவில்லைனு கவலை பட்ட... அதான் வா கொண்டாடலாம்னு கூப்பிட்டேன்... வார்த்தைக்கு வார்த்தை உன்னை புரிஞ்சிக்கலை சொல்லுறியே?? அப்படி என்ன நான் உன்னை புரிஞ்சிக்கலை?? உனக்காக தானே எல்லாம் செய்றேன்... நீ என்கிட்ட கொஞ்ச டைம் தாங்கனு கேட்டதால் தானே இன்னும் வரை நாம சேராமல் இருக்கோம்... உன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததால் தானே நான் இன்னும் தள்ளியே இருக்கேன்... இதை விட நான் என்ன புரிஞ்சிக்கனும்னு நீ எதிர்பார்க்குற??? அப்படி எதிர்ப்பார்க்குறவ அதை வாய் வார்த்தையால் சொன்னா தானே தெரியும்...?? நான் என்ன கடவுளா உன் மனசுக்குள்ள நுழைந்து நீ என்ன எதிர்பார்க்கிறனு கண்டுபிடிக்க???” என்று அவளை ஆழம் பார்க்க அவன் இட்ட கல் சரியாக தன் வேலையை செய்தது....

“ஆமா நீ என்னை புரிஞ்சிக்கலை.. நீ என்னை பற்றி இன்னும் சரியாக புரிஞ்சிக்கலை...”

“சரி விடு.. இப்போ நீயே உன்னை பற்றி சொல்லு.... எதனால் நான் உன்னை லவ் பண்ணேன்னு சொன்னது உனக்கு பிடிக்கலை... அதுக்கு முதலில் காரணத்தை சொல்லு...”

“புரிஞ்சிக்க முடியாத உனக்கு எதற்கு அதை பற்றிய கவலை???”

“இதென்னடா அநியாயமாக இருக்கு?? இவ்வளவு நேரம் புரிந்துக்கொள்ளவில்லைனு சண்டை போட்ட... சரி புரிந்துகொள்ளுவோம்னு கேட்டால் சொல்லமாட்டேன்னு சண்டை போடுற???? இப்போ நான் என்ன தான் பண்ணுறது??? ஒன்னு சொல்லு இல்லைனா கம்முனு இரு... அதை விட்டுட்டு புரிஞ்சிக்கலை வச்சிக்கலைனுகிட்டு புலம்பாத...” என்று கூறியவன் தனக்குள் புலம்புவது போல்

“லவ் பண்ணது ஒரு குத்தமாடா??? ஏன்டா லவ் பண்ணனு இப்படியா ஒரு மனிஷனை பந்தாடுவது?? காரணத்தையும் சொன்னாலாவது மனதை தேத்திக்கலாம்... காரணத்தை சொல்ல மாட்டாங்களாம்... ஆனா என்னை புரிஞ்சிக்கலை டாச்சர் பண்ணுறனு கத்தி கூப்பாடு மட்டும் போடுவாங்கலாம்...”

“யார்டா கத்தி கூப்பாடு போட்டா??? இப்போ உனக்கு காரணம் தெரியனும்... அதானே.. அதுக்கு தானே இப்படி ஓவர் ஆக்டிங் பண்ணுற???”

“ஹேய் யாரு ஓவர் ஆக்டிங் பண்ணா??இவ்வளவு நேரம் தங்கு தக்கா தனக்குனக்கானு நீ டான்ஸ் ஆடிட்டு என்னை சொல்லுறியா??”

“வேணாம் வினய்...... ஓவரா போறீங்க...??”

“நான் என்ன ஓவராப் போறேன்..?? நீ தான் ரொம்ப பண்ணுற.... ஏதோ தலையும் புரியாமல் வாலும் புரியாத மாதிரி கதை சொல்லி கன்பியூஸ் பண்ணுறது நீ.... நான் ஓவராப் பண்ணுறேனு சொல்லுறியா??? இதை விட கொடுமை பிரபோஸ் பண்ண பாவத்துக்காக அடி வாங்குனது... ஏன் ஷிமி நான் தெரியாமல் தான் கேட்குறேன்.... எதுக்கு நீ என்னை அடிச்ச??? பிரபோஸ் பண்ணதுக்காக அடிச்சியா இல்லை பிரபோஸ் பண்ணுறேன் பேர்வழினு ரொம்ப பேசுனதுக்காக அடிச்சியா??? இதுக்கு மட்டும் பதிலை சொல்லிரு.. நீ எதுக்கு அடிச்சனு புரியாமல் மண்டை காயுது....”

“வினய்.....” என்று அவள் பல்லைக்கடிக்க

“ஹேய் உனக்கு என்ன தான் பிரச்சினை எல்லாத்துக்கும் டென்ஷனாகுற?? நீ என்னதான் நினைச்சிட்டு இருக்க உன் மனசுல??? இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்னு நினைச்சிட்டு இருக்கியா?? எனக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவேன்னு தெரியுமா???அதுக்கு ட்ரயல் காட்டவா??” என்றவன் எதிரிலிருந்தவளை அவள் எதிர்பாராத நேரத்தில் இழுத்து அணைத்து அவள் முகம் முழுதும் முத்தங்களை பரிசாக வைத்தான்....

அவனது செயலில் அதிர்ந்தவள் தன்னிலை அடைய சில கணங்களானது... தன்னிலை அடைந்ததும் வினயை தன் முழுப்பலம் கொண்டு தள்ளியவள் குளியலறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.. குளியலறையில் ஷவரை திறந்து அதன் கீழ் நின்றவளின் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை... ரேஷ்மி தள்ளியதும் தடுமாறியவன் தன் பலம் கொண்டு நின்றதும் ரேஷ்மியை தேட குளியலறை மூடப்படும் சத்தமும் அதை தொடர்ந்து ஷவரில் இருந்து நீர் சிந்தும் சத்தமும் கேட்டது....

அவனது செயல் அவனது மனம் கவர்ந்தவளை கஷ்டப்படுத்தியிருக்கும் என்று புரிந்த போதிலும் அவளை சரிப்படுத்த அவனுக்கு இதைத்தவிர வேறு ஏதும் வழியிருப்பதாக தெரியவில்லை... ஏதேனும் அதிரடியாக செய்தால் தான் ரேஷ்மியின் மனதை அறிய முடியும் என்பதற்காகவே அவன் அவ்வாறு நடந்து கொண்டான்... அதை எண்ணி வருந்திய படி இருந்தவனுக்கு குளியலறைக்கு சென்று நெடுநேரமாகியும் ரேஷ்மி வரவில்லை என்று புரிந்தது..... குளியலறையில் இன்னும் ஷவரில் இருந்து நீர் கொட்டும் சத்தம் கேட்க குளியலறை கதவை தட்டினான் வினய்... கதவு திறக்கப்படாமல் இருக்க

“ஷிமி கதவை திற.... இன்னும் எவ்வளவு நேரம் தண்ணியில் இருப்ப..?? சீக்கிரம் வெளியில வா....இல்லைனா பீவர் வந்துரும்... வெளியில வா...” என்று கதவை தட்ட எந்தவித பதிலும் இல்லை...

“ஷிமி லேட் நைட்மா.. இந்த டைமில் ரொம்ப நேரம் தண்ணியில் இருக்கக்கூடாது மா... ஜன்னிவந்திடும்.. ப்ளீஸ் வெளியில வா... என் மேல் உள்ள கோபத்தில் உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத..... நான் அப்படி செய்தது தப்பு தான்... இனிமே உனக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டேன்.... ப்ளீஸ் வெளியில வா...” என்று கதவு உடையும் அளவிற்கு தட்டினான் வினய்...

கதவு திறக்கப்படாமல் இருக்க தன் பலம் கொண்டு தள்ளி கதவை திறந்தவன் கண்டது ஷவரின் கீழ் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு கண்ணீர் உகுந்து கொண்டிருந்தாள் ரேஷ்மி. விரைந்து சென்று ஷவரை அடைத்தவன் ஷவரின் கீழ் அமர்ந்திருந்தவளை தன் பலம் கொண்டு எழுப்பி வெளியே இழுத்து வந்தவனுக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தண்ணீர் சொட்ட நிற்கின்றாள் என்றும் பாராமல் ஓங்கி அறைந்து விட்டான்....
அவனது அறையின் வேகம் அவளை தூரச் சென்று விழச்செய்தது.... அறை வாங்கியவள் கன்னத்தை பிடித்தபடி விழுந்த இடத்தில் கிடந்தாள்... வினயோ தங்கள் வாட்ரோப்பை திறந்து அதிலிருந்த டவலை எடுத்து ரேஷ்மியின் முகத்தில் விட்டெறிந்தவன்

“உனக்கு பத்து நிமிஷம் தான் டைம்...அதுக்குள்ள ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரணும்... இல்லைனா என்னுடைய இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டி வரும்...” என்றவன் அறையிலிருந்து வெளியேறினான்...

ரேஷ்மிக்கு இந்த வினய் புதிது... அவனது கோப முகத்தில் அவளது சப்த நாடியும் ஒடுங்கிப்போனது... அதிலும் அவன் கைத்தடம் ஆழப்பதிந்த அவளது கன்னம் கணத்திற்கு கணம் எரிச்சலை வேறு அதிகப்படுத்தியது...
கன்னத்தை பிடித்தபடி மெதுவாக எழுந்தவள் மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றவள் வெளியே வரும் போது வினயும் அறைக்குள் நுழைந்தான்... அவளை நோட்டமிட்டவனின் கண்களில் கோபம் பீறிட்டது... அது அவளது கூந்தலில் நிலைகுத்தியிருக்க அதை உணர்ந்து கொண்டவள் தன் கையில் வைத்திருந்த டவலினால் ஈரம் சொட்டியபடி இருந்த கூந்தலை துவட்டத்தொடங்கினாள்...
வினயோ தன் கையில் வைத்திருந்த பால் கப்பினை அவளது கையில் திணித்துவிட்டு மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்...

ரேஷ்மியோ அவன் கொடுத்த பால் கப்பினுள் இருந்த பாலினை குடித்துவிட்டு காலி கப்பினை மேஜை மீது வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து தலையை துவட்டிக்கொண்டிருந்தாள்....
தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்த வினயின் கண்களுக்கு தென்பட்டது காலி கோப்பை.... அதை எடுத்து சென்று கிச்சனில் வைத்துவிட்டு வந்தவன் வாட்ரோப்பில் இருந்த பெரசிட்டமோல் டேப்லேட் இரண்டை ரேஷ்மிக்கு அருந்தகொடுத்துவிட்டு கட்டிலில் கிடந்த விரிப்பை எடுத்து கீழே விரித்தவன் அதில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்... ரேஷ்மியோ செய்வதறியாத அவனை பார்த்தபடி இருந்தாள்... அவனது கோபப்பார்வை அவளை தூர நிறுத்தியது மட்டுமல்லாமல் அவளது தைரியத்தையும் தூரநிறுத்தியது...
கட்டிலில் அமர்ந்தபடி அவனை பார்த்திருந்தவளை கலைத்தது வினயின் குரல்...

"நிம்மதியாக வாழத்தான் முடியலை... நிம்மதியாக தூங்கக்கூட விடமாட்டியா??? லைட்டை ஆப் பண்ணுறியா இல்லை நான் ஹாலில் போய் படுத்துக்கட்டுமா??"என்று அவன் குரல் கர்ஜித்த அடுத்த நொடி விளக்கை அணைத்தவள் கட்டிலில் சரிந்தாள்... ஆனால் தூக்கம் அவளை அண்டவிடாமல் வழி செய்தது அவளது கண்ணீர்...
படுக்கையை விரித்து படுத்து கண்ணை மூடியவனது கருமணிகள் ஓரிடத்தில் நில்லாது அலை பாய்ந்தது அவனும் உறங்கவில்லை என்பதை உணர்த்தியது....

அதிகாலை வேளையில் கண்ணயர்ந்த ரேஷ்மி கண்விழிக்கும் போது காலை ஒன்பது மணி... எழும்ப முயன்றவளுக்கு தலை பாரமாய் இருந்தது... எதனால் என்று யோசித்தவளுக்கு நேற்று இரவு தான் அடித்த கூத்தின் விளைவு என்று புரிய சுற்றும் முற்றும் வினயை தேட அவனது படுக்கை கட்டிலில் ஓரமாக மடித்து வைக்கப்பட்டிருந்தது...
அவள் கண்கள் அனிச்சயாய் கடிகாரத்தை தேட அது நேரம் ஒன்பது என்று காட்டியது...

வினயிற்கு அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று எழும்ப முயன்றவளை தடுத்தது அறையின் உள்ளே வந்துகொண்டிருந்த ரியாவின் குரல்...

“ஹேய் ரேஷ்மி.. எங்க போற??? இப்போ தலை வலி எப்படி இருக்கு???” என்ற ரியாவின் கேள்வியில் இவருக்கு எப்படி தெரியும் என்று ரேஷ்மி யோசிக்க

“என்ன ரேஷ்மி யோசிக்கிற?? நான் என்ன அவ்வளவு கஷ்டமான கேள்வியையா கேட்டேன்??? இப்படி யோசிக்கிற??”

“இல்ல அக்கா... உங்களுக்கு எப்படி எனக்கு தலைவலினு தெரியும்???”

“வேற யாரு சொல்லப்போறா?? என் கொழுந்தனாரு தான்...... அவர் பொண்டாட்டி தலைவலினு படுத்திருக்கா யாரும் டிஸ்டப் பண்ணாதீங்கனு ஸ்ரிக்டா சொல்லிட்டு போயிட்டாரு...”

“அய்யோ போயிருட்டாரா அக்கா??”

“ஆமா.... ஏன் என்னாச்சு???”

“அவருக்கு லன்சுக்கு ஏதும் கொடுத்து விடலையே??”

“கவின் ஆபிஸ் காண்டீனில் பார்த்துக்கிறேனு சொல்லுட்டு தான் போனான்... சரி இப்போ உனக்கு எப்படி இருக்கு?? பீவர் ஏதும் இருக்கானு பார்த்தியா??” என்றவாறு ரியா ரேஷ்மியின் முன்னுச்சியிலும் கழுத்திலும் கன்னத்திலும் கை வைத்து பார்த்தாள் ரியா....

“பெரிசா சூடு இல்லை... ஆனா உன்னுடைய முகம் தான் சோர்வாக இருக்கு... சரி நீ போய் ப்ரெஸ் ஆகிட்டு வா...நான் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்...” என்று ரியா ரேஷ்மியை குளியலறைக்கு அனுப்பிவிட்டு குடிப்பதற்கு சூடாக கஞ்சி எடுத்துவந்தாள் ரியா....
குளியலறையில் இருந்து ரேஷ்மி வந்ததும் அவளுக்கு தான் கொண்டு வந்த கஞ்சியை குடிக்கக்கொடுத்தாள் ரியா...

ரேஷ்மி கஞ்சியை குடித்து முடிந்ததும் கோப்பையை அவள் கையில் இருந்து வாங்கி அருகிலிருந்த மேசையில் வைத்த ரியா ரேஷ்மியிடம்

“இப்போ சொல்லு ரேஷ்மி... ஏன் நைட் அழுத??? உனக்கும் வினயிற்கும் என்ன பிரச்சனை...?? இரண்டு பேரும் நைட் சந்தோஷமாக தானே இருந்தீங்க.. அப்புறம் என்ன காரணத்திற்காக உங்க இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை வந்தது...??? எனக்கு எப்படி தெரியும்னு கேட்காத... எனக்கு எல்லாம் தெரியும்.. என்னை நீ உன்னுடைய அக்கானு நினைக்கிறனா மறைக்காமல் உன் பிரச்சினையை சொல்லு.... பிரச்சினையை நம்ம மனசுக்குள் வைத்துப் புழுங்குவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை.. இதை ஹஸ்பண்ட் என் வைப் செல்ல சண்டைனா நான் இப்படி உன்கிட்ட கேட்க மாட்டேன்... ஆனா நான் இங்க வந்ததில் இருந்து பார்க்கிறேன்.. உங்க இரண்டு பேரிடமும் புதிதாக திருமணமான தம்பதிகளிடம் இருக்கின்ற அன்னியோன்யம் இல்லை.... அதிலேயே புரிஞ்சுக்கிட்டேன்... நீங்க இரண்டு பேரும் இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லைனு... அதனால் தான் கேட்கிறேன்.... என்னை பிரச்சினைனு நீ சொன்னா தான் தெரியும்... இன்னொரு விஷயம் நேற்று உன்னை சப்ரைஸ் பண்ண போறேனு சொல்லிட்டு போன கவினோட முகத்தில் வரும் போது ஒரு சந்தோஷமும் இல்லை.... நானும் ஏதோ உங்க இரண்டு பேருக்கும் இடையில் ஊடல்னு நினைத்திருந்தேன்.... ஆனா இன்னைக்கு காலையிலேயும் கவினோட முகம் அதே வாட்டத்தோடு தான் இருந்தது...... அதிலேயே புரிஞ்சுகிட்டேன்.... உங்க பிரச்சினை பெரிசுனு.... சோ மறைக்காமல் என்னனு சொல்லு.... என்னால் முடிந்த சொலூஷனை நான் சொல்லுறேன்.... தீர்வு இல்லாத பிரச்சனை எங்கேயும் இல்லை....” என்று அவர்களது பிரச்சினையினை அறிய முயன்ற ரியாவிற்கும் ரேஷ்மியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை....

தலை வலியின் பலனாலும் மனதின் பலவீனத்தாலும் கண்கள் கலங்கியதே தவிர எந்த வித பதிலையும் கூற அவள் தயாராக இல்லை......

ரேஷ்மியின் கண்ணீரை பார்த்த ரியாவிற்கு விஷயம் ஏதோ பெரிது என்று புரிந்தது.... ஆனால் அதை ரேஷ்மி வெளிப்படுத்தாதவரை யாராலும் தீர்வுகாண முடியாது என்று உணர்ந்து கொண்ட ரியா இப்போதைக்கு ரேஷ்மிக்கு தேவையான ஆறுதலை தான் கொடுக்க வேண்டுமென நினைத்தவள் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள்....

அவளது அணைப்பில் மனதை அழுத்தியபாரம் இறங்கும் வரை அழுது தீர்த்தாள் ரேஷ்மி.... அழுது தீர்த்ததும் மனம் இலேசாகுவதை போல் உணர்ந்த ரேஷ்மி ரியாவின் அணைப்பில் இருந்து விலகி தன் கண்களை துடைத்துக்கொள்ள ரியாவோ

“இங்க பாரு ரேஷ்மி... உன்னோட அக்கா நான் இருக்கேன்...
உனக்கு என்ன பிரச்சனையினாலும் நான் உன்கூட இருப்பேன்... அதனால் நீ எதுக்கும் கவலைப்படக்கூடாது புரிந்ததா???” என்ற ரியாவின் கேள்விக்கு தலையை ஆட்டிய ரேஷ்மியின் தலையை வருடிக்கொடுத்தாள் ரேஷ்மி...

“சரி நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு..” என்றுவிட்டு ரியா அறையை விட்டு வெளியேற முனைகையில் அவளை நிறுத்திய ரேஷ்மி

“அக்கா ஈவினிங் அனுவை கூட்டிக்கிட்டு பக்கத்தில் உள்ள பார்க்கிற்கு போயிட்டு வருவோமா???”

“உனக்கு உடம்பிற்கு நல்லா இருந்தா போயிட்டு வரலாம்....”என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறிய ரியா நேரே சென்றது அவளது அத்தை வீரலட்சுமியிடம்...

ரியாவை பார்த்ததும்

“என்ன ரியா ரேஷ்மிகிட்ட பேசுனியா?? ஏதாவது சொன்னாளா???”

“பேசுனேன் அத்தை... அவள் ஏதும் சொல்ல மாட்டேன்குறா அத்தை....”

“நான் கேட்ட ஏதும் சொல்ல மாட்டானு தான் உன்னை அனுப்பி கேட்க சொன்னேன்... உன்கிட்டயும் எதையும் பகிர்ந்துக்காட்டி இவங்க இரண்டு பேர் வாழ்க்கையையும் எப்படி சரி பண்ணுறது???? இவ்வளவு நாள் இரண்டு பேரையும் அவங்க போக்கில் விட்டது தப்போ??? இரண்டு பேரும் இப்படியே இருந்தா அவங்க எப்போ சேர்ந்து வாழுறது??? ரேஷ்மியோட அம்மா இருந்திருந்தா அவங்களை ரேஷ்மியிடம் பேசச்சொல்லி இருக்கலாம்... பாவம் அந்த பொண்ணு அம்மாவோட துணை வேணும்கிற நேரத்தில் அவங்களை இழந்துட்டு நிக்கிறா... அவளுக்கு என்ன பிரச்சினைனு என்னால் நேரடியாய் கேட்க முடியலை... கவினிடமும் என்னிடம் கேட்க முடியலை.... ரியா நீ தான் அபிகிட்ட சொல்லி கவின் கிட்ட பேசச்சொல்லனும்..... நீயும் ரேஷ்மிகிட்ட பேசி அவங்க இரண்டு பேர் வாழ்க்கையையும் சரிப்பண்ணனும்... எனக்கு என் பிள்ளையும் மருமகளும் சந்தோஷமாக இருக்கனும்.. அது போதும்...”

“அத்தை கவலைப்படாதீங்க... கவினும் ரேஷ்மியும் சின்னப்பிள்ளைகள் இல்லை... உலக நடப்பு தெரிந்தவர்கள்... இரண்டு பேரும் புரிஞ்சு நடந்துக்கிறவங்க... அதனால் நீங்க பயப்படும் அளவுக்கு எதுவும் இருக்காது.... நாங்க இங்கேயிருந்து போறதுக்கு முதல்ல அவங்க கண்ணாம்பூச்சியாட்டத்தை முடித்து வைத்திட்டு போறோம்... இனி கவினையும் ரேஷ்மியும் எங்க பொறுப்பு... நீங்க கவலைப்படாதீங்க... “ என்றவள் தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்...

அங்கே அறையில் ரேஷ்மி தன் மொபைலுடன் போராடிக்கொண்டிருந்தாள்... அவள் வினயிற்கு அழைக்க அவன் அதனை துண்டித்துவிட்டான்.. இதே போல் இருமுறை நடக்க மூன்றாவது முறை அவனுக்கு வாட்சப்பில் சாரி என்ற மேசேஜுடன் 😞 இமோஜியை அனுப்பினாள்...
ப்ளு டிக் விழுந்த போதிலும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை...

மறுபடியும் "சாரி" என்ற மேசேஜுடன்"🙇" இமோஜியை அனுப்ப அதுவும் ப்ளூடிக்குடன் பதிலின்றி அந்த வாட்சப் சாட்டில் இருந்தது....
மறுபடியும் அதே முயற்சிக்க பதிலோ பூச்சியம்...
.
அவனை பேச வைக்கும் நோக்கில் "நான் மறுபடியும் குளிக்கப்போறேன்" என்று ஒரு மேசேஜை தட்டிவிட அது ப்ளூ டிக் விழுந்த அடுத்த நொடி வந்தது அழைப்பு....

அதை எடுத்து காதில் வைத்தவளுக்கு பரிசாய் கிடைத்தது அவனது வசவுகள்...

“உனக்கு அறிவே இல்லையா?? நேத்து நடுராத்திரி குளிச்சிட்டு வந்து நின்னு காய்ச்சலை இழுத்துக்க பார்த்த... இப்போ மறுபடியும் குளிக்கப்போறேனு சொல்லுற??? நைட் பெரசிட்டமோல் கொடுத்ததால் காய்ச்சல் ஏதும் வரலை... இப்போ குளிச்சனா காய்ச்சல் வந்திரும்...அப்புறம் நீ தான் கஷ்டப்படுவ... நீ எல்லாம் சொல்வதை கேட்கிற ஜென்மம்னா இப்படி கோல்ட் இருக்கும் போதே குளிக்கப்போறேனு கிளம்பமாட்ட... உன்கிட்ட கத்தி கத்தியே என் பாதி ஜூவன் போயிரும் போல இருக்கு..... வீட்டில தான் நிம்மதியில்லைனா ஆபிஸிற்கு வந்தும் மனுஷனுக்கு நிம்மதியில்லை... என்ன வாழ்க்கைடா இது..??” என்று வினய் அவன் பாட்டிற்கு பொறிய அதை காதில் வாங்கிக்கொள்ளாத ரேஷ்மி

“நான் கஷ்டப்பட்டா நீங்க என்னை பார்த்துக்க மாட்டீங்களா???”என்று அவன் சொன்னவற்றில் ஒரு பகுதியை மட்டும் கவனத்தில் கொண்டு அவனை எதிர்கேள்விகேட்க

“நான் என்ன பேசிட்டு இருக்கேன்... நீ என்ன கேட்டுட்டு இருக்க???”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க... என்னை பார்த்துப்பீங்களா இல்லையா???”

“பார்த்துப்பேன்...ஆனா நீ...” என்று அவன் தொடங்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது... காதிலிருந்து போனை எடுத்துப்பார்த்தவன் அதில் ரேஷ்மி

“ஓகே நீங்க உங்க வேலையை பாருங்க... லன்சிற்கு காண்டினில் இல்லாமல் வேறு எங்காவது ஒரு நல்லா ரெஸ்டோரண்ட் போய் சாப்பிடுங்க...பாய் டிசி....” என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்... அதை பார்த்தவன் இதழ்கள் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்தை கைவிட்டு புன்னகையை தத்தெடுத்திருந்தது....
இப்போது ரியாவிற்கு அழைத்து ரேஷ்மியின் உடல்நிலை பற்றியறிந்தவன் தேவையேற்படின் அவளை பக்கத்தில் உள்ள க்ளினிக்கிற்கு அழைத்து செல்லுமாறு ரியாவிடம் கூறிவிட்டு தன் வேலையை கவனிக்கத்தொடங்கினான்.
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 12
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN