தாயுமானவன் 11

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பெண்ணே எப்படி நீ என் வாழ்வில் நுழைந்தாய்...
சின்ன சின்ன சில்மிஷங்களைச் செய்து என் வாலிப திமிரினை வென்றாய்...
அந்தி பகலான நான் உன் தாய்மை நிழலில் குளிர்காய்தேன்...
நித்தமும் உன் காதலில் என்னை இழந்தேன்...

உன் தாயுமானவன்...

காலைத் தென்றல் உடலைத் தீண்டிச் சென்றது... மயூவினுள் மெல்லிய சிலிர்ப்பு மின்னி மறைந்தது... புடவையில் தன்னை மென்மேலும் புதைத்துக் கொண்டு அந்த தோட்டத்துப் பூக்களை இரசித்துக் கொண்டிருந்தாள்...

வண்ண வண்ண மலர் கூட்டத்தின் நடுவே அன்றலர்ந்த மலராக பூத்திருந்தாள்...

இந்த கிராமத்திற்கு வந்த நான்கு மாதங்களில் எவ்வளவு மாற்றங்கள் அவள் வாழ்வில்...

அன்று மித்ரா தான் கருவுற்றிருப்பதைக் கூறும் பொழுது தனக்கு தோன்றிய எண்ணங்களை மயூவால் இப்பொழுதும் கூட வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...

'மித்து அக்காவும் ஆகாஷூம் எனக்குப் பக்க பலமாய் இல்லாவிடில் எப்படி இந்த குழந்தையைத் தனியே சுமந்திருப்பேன்... ஹிட்லர் எப்படிதான் எனக்கு நல்ல ப்ரெண்டா மாறூனான்னு தான் தெரியல... அவன மோகினி பிசாசு தான் அடிச்சிருச்சி போல...

(மோகினி பிசாசு இல்ல செல்லம்😍😍😍 மயூ பிசாசு காதல்ல கவுத்துடுருச்சி😆😆😆)

இப்பலாம் சிரிச்சிட்டே இருக்கான்... சிடுமூஞ்சி ஆகாஷோட சிரிச்ச மூஞ்சி ஆகாஷ் தான் நல்லா இருக்கான்...',
மயூ தன் எண்ணங்களில் மூழ்கியிருக்க அவள் எண்ணத்தின் நாயகனே அங்கு பிரவேசித்தான்...

முதல் நாள் சந்திப்பின் போது இருந்தது போலவே அதே கம்பீர நடையுடன் வந்தவனை மயூ தன்னையறியாமல் இரசிக்க தொடங்கினாள்...

மயூவைப் பார்த்த ஆகாஷோ
'இவ மட்டும எப்டிதான் பிரஷா ஆப்பிள் மாதிரி இருக்களே... சும்மாவே இவ கண்ணுல விழுந்துட்டா என்னால எழ முடியாது... இதுல என்னையே பிச்சு திங்குற மாதிரி பார்த்து வைக்குறாளே... கடவுளே என்னை மட்டும் காப்பாத்து... லவ் பண்ற எவனுக்கும் என்னை மாதிரி ஒரு நிலமை வர கூடாதுடா சாமி...', ஆகாஷிடமிருந்து பெருமூச்சென்று வெளியிட்டது...

அன்று மித்ராவிடம் தன் முடிவை கூறிய மயூ அக்கிராமத்தை விட்டு வெளியேற போவதாக கூறினாள்... புதிய இடம் புதிய வாழ்க்கையென மீண்டும் தன் பயணத்தைத் தொடங்க போவதாக மயூ சொல்ல மித்ரா திருதிருவென விழிக்க தொடங்கினாள்...

'இப்பதான் ஒரு பிரச்சனை முடிஞ்சிருச்சினு சந்தோஷ பட்டேன்... இவ என்ன பெரிய அனுகுண்ட என் தலையில இறக்கிறா... சொன்னா இவ திட்டுவா சொல்லலனா அவன் திட்டுவான்... நல்ல வருவிங்கடா நீங்களாம்...', மித்ரா வடிவேலு பாணியில் புலம்ப தொடங்கினாள்.

(என்ன இது மித்து டார்லிங்🤔🤔🤔 காமெடி பீஸ் ஆகிட்டியே நீ😚😚😚)

"முடியாது மயூ... நீ இந்த கிராமத்த எங்கள (முக்கியமா ஆகாஷ) எல்லாம் விட்டுடு போவ நான் சம்மதிக்க மாட்டன்... உனக்கு யாரும் இல்லாம இருந்தா பரவலாடா... நான், ஆகாஷ், சாரு, அன்பு இல்லத்துல உள்ளவங்க இப்டி எல்லாம் உன் மேல அன்பு வெச்சிருக்கோம்... நீ எங்க குடும்பத்துல ஒருத்திடா...
( ஆகாஷ்க்கு உயிர் டா)... உன்னோட இந்த நிலமைக்கு நான் தான் காரணம்... ஸோ உனக்கு நல்லபடியா டெலிவிரி ஆகுற வரைக்கும் என் கூட நம்ம வீட்டலதான் இருக்க போற... இது ரிக்வஸ்ட் இல்ல ஓர்டர்",
படபடவென பொரிந்து தள்ளியவள் மயூவின் பதிலை எதிர்பார்க்காமல் அவ்வறையை விட்டு வெளியேறினாள்...

அங்கு நின்றிருந்தால் மயூ தன் வேண்டுகோளை மறுத்துவிடுவாளோ என்ற பயத்திலேயே அங்கிருந்து வெளியேறினாள்...

அவள் இதயம் தாருமாறாய் துடித்தது.

'என்ன என்ன வேலை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு' தனக்குள்ளே புலம்பினாலும் தன்னவர்களின் நல்வாழ்விற்காக எதையும் செய்யலாம் என்றே தோன்றியது...

பெருமூச்சிகளோடு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தவளின் தோள் மீது அழுத்தமாய் பதிந்தது ஒரு கை...

அதிர்ந்த முகத்தோடு திரும்பியள் அங்கு நின்றிருந்தவனைக் கண்டு கோபமுற்றாள்...

"டேய் உன்ன நான் என்னோட ரூம்ல வெய்ட் பண்ண சொன்னன்... இங்க என்ன செய்ற... ", மித்ரா ஆகாஷை முறைத்துப் பார்த்தாள்..

(அவனோட ஆளு இங்க இருக்குறப்ப அவன் எப்டி மித்து உன்னோட ரூம்ல வெய்ட் பண்ணுவான்😏😏😏தம்பியோட லவ்க்கு சப்போர்ட் பண்ணுடி செல்லம்😍😍😍 பாவம் அமூல் பேபி😔😔😔)

"ஈஈஈஈஈஈஈ.... அதிலக்கா.. மயூ இங்க இருக்காளா அதான்....",
ஆகாஷ் சமாளிப்பதாய் நினைத்து சிரித்து வைக்க மித்ராவின் முகம் அஸ்ட கோனலாய் வளைந்தது...

"ஆகாஷ் நீ என்ன வேணாலும் பண்ணு... பட் அப்டி சிரிச்சி மட்டும் வைக்காத ப்லீஸ்.. சகிக்க முடியல"

"சரி சரி விடுக்கா.. மயூ என்ன சொன்னா?"

(ஹீ..ஹீ..ஹீ.. கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலையா போஸ்😜😜😜 நல்லாவே சமாளிக்குற போ போ🤣🤣🤣)

"மயூ இந்த கிராமத்து விட்டு போக போறாலாம் டா... அவளோட சொந்தங்கள் கிட்ட போக போறா..."
வராத கண்ணீரைத் துடைத்தப்படி கூறினாள் மித்ரா...

"அதலாம் முடியாது... என்னோட பொண்டாட்டி என் கூடதான் இருப்பா... இருக்கனும்... என்ன நீ அவ போறன்னு சொன்னா நீ கேட்டுடு வந்துடுவியா...", ஆகாஷின் முகம் கோபத்தில் சிவந்தது...

"நான் என்ன பன்றது ஆகாஷ் அவ தனியா இருந்தா கஷ்டப்படுவா... தனிமை அவள ரொம்பவே வாட்டும்... அதனால"

"அதனால?"

"மயூவ..."

"மயூவ?"

"நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு போக போறன்",
மித்ரா சிரிக்காமல் சொல்ல அவளை முதலில் முறைத்தவன் பின் சந்தோஷத்தில் மித்ராவை தூக்கி இரண்டு சுற்று சுற்றினான்...

" டேய் எரும கீழ விடுடா... தலை சுத்துது..."

"அக்கா ஐ'ம் ஸோ ஸோ ஸோ ஹேப்பி...",
மித்ராவின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டவன்...

"என்னோட செல்லத்த நல்லபடியா வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துரு...", என்று கூறிச் சென்றான்...

பல வருடங்களுக்குப் பின் தனது அதே குறும்புக்காற தம்பியைக் கண்ட மித்ராவின் மனமும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது...

"ஹலோ மேடம் என்ன மலரும் நினைவுகளா??? கண்ண மூடாமலே கனவு காண்ற..." மயூவைப் பார்த்து ஆகாஷ் கிண்டல் தொனியில் கூற அவளோ அவனையே இமைக்காது பார்த்தாள்...

சிறு புன்னகையைப் பரிசாக கொடுத்தவன், ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்ன என்றான்...

ஒன்றுமில்லையென தலையசைத்தவள்...
"நீ ரொம்ப மாறிட்ட ஆகாஷ்...", என்றாள் சிறுபிள்ளை போல்..

என்றும் போல் இன்றும் அவளது குழந்தைதனம் அவனை வசிகரித்தது...

"அப்டியா....எவளோ மாறிட்டன்"

"ஹிட்லர் சைஸ்க்கு குட்டியா இருந்த உன்னோட ஹாட் இப்ப சாக்லெட் பாய் சைஸ்க்கு ரொம்ப பெருசா ஆயிருச்சு டா.. அது எப்டி"


(டா வா😲😲😲புருஷன டா சொல்லி கூப்ட கூடாதூமா😝😝😝)

'உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டன்ல அதான்...', என மனதில் நினைத்தவன்...
"அது யான்னு நீயே சொல்லன்.."

அவன் முகத்தையே இமைக்காது நோக்கிய மயூ தீவிரமாக யோசித்தாள்...

அவள் தலையில் லேசாக தட்டி
"இல்லாத மூளைய வெச்சி ரொம்ப யோசிக்காத... இருக்குற கலிமண்ணு எல்லாம் கீழ கொட்டிற போது... சீக்கிரம் போய் ரெடியாகுடி... என்கூட இன்னிக்கு ஆபிஸ்க்கு வரன்னு சொல்லிருக்க மறந்துறாத... போ...போ... சீக்கரம்...", மயூவை வீட்டினுள் தள்ளிக் கொண்டு போனான் ஆகாஷ்...

மடியேறி மேலேப் போனவளை...
"மயூ", என்ற ஆகாஷின் குரல் தடுத்து நிறுத்தியது...

"சொல்லு ஆகாஷ்...", என்றாள் கேள்வியாக...

"இல்ல ஆபிஸ்க்கு சுடில வா...", என்று மென்று முழுங்கினான்...

"யான்டா.. சாரினா இன்னும் நல்லாருக்குமே???"

'உனக்கு நல்லாதான் இருக்கும்... யாரு இல்லனு சொன்ன... அப்டியே பார்பி டோல் மாதிரி இருப்ப... உன்ன பக்கத்துல வெச்சிட்டு நான் வெர்க் பண்ண மாதிரிதான்... இராட்சசி எப்டிலாம் கோர்னர் பன்றா...',
மனதிலே புலம்பியவன்...

"இல்லப்பா சுடினா உனக்கு ஈஸியா இருக்கும்... அதான்...",

"ஓகே.. ஒரு டேன் மினிட்ஸ் வெய்ட் பண்ணு.."

மயூ சிட்டாய் கண்ணைவிட்டு மறைந்து போக ஆகாஷ் தான் திண்டாடி போனான்...

இந்த இரண்டு மாதத்தில் மயூவின் அருகாமை ஆகாஷை வெகுவாக மாற்றியிருந்தது... கடினமாக பாறையாய் இருந்தவனை அழகிய சிற்பமாய் செதுக்கினாள்...
சின்ன சின்ன செயலில் அவனது கவனத்தைக் கட்டி இழுத்தாள்...

மித்ராவிற்கு ஒருபுறம் ஆகாஷின் மாற்றம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மறுபுறம் அவளை வெகுவாக யோசிக்க வைத்தது... ஆகாஷ் தன் காதலை மயூவிடம் இன்னும் வெளிபடுத்தவே இல்லை...
அவளிடம் நல்ல நண்பனாகவே பழகினான்...

மித்ராவிற்கு தன் மனதில் எழும் கேள்விகளுக்கு உடனே அவளுக்குப் பதில் தேவைப்பட்டதால் ஆகாஷை நாடினாள்...

இருள் கவ்விய அழகிய பௌர்ணமி இரவு... ஆகாஷ் தோட்டத்தில் அமர்ந்து வானிலவை இரசித்துக் கொண்டிருந்தான்... மயூவோடு அவன் அலுவலகத்தில் செலவிட்ட நேரங்களைப் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான்...

சத்தமின்றி அவனை நெருங்கியவள் ஆகாஷின் அருகே புல் தரையில் அமர்ந்தாள்...

பக்கத்தில் ஆரவாரம் கேட்டு ஆகாஷின் மேன நிலை களைய அருகிலிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தான்...

"சொல்லுக்கா... என்ன வேணும்..." எப்போதும் புன்னகைக்கும் இந்த ஆகாஷ் மித்ராவிற்கு புதியவன்...

"ஆகாஷ் எனக்கொரு டவுட் டா.. " மித்ரா

"வாவ்....என் அக்கா கூட சிபிசிஐடி வெர்க்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே...", என்றவனின் குரலில் கேலி இழையோடியது...

"ஆகாஷ்... ஜோக் பண்ணாத..."

"ஓகே கா ... பீ சீரியஸ்... என்னனு சொல்லு"


"ஆகாஷ் நீ மயூவ பத்தி என்னதான் நெனச்சிட்டு இருக்க... அவகிட்ட உன்னோட லவ்வ சொல்லுவன்னு பார்த்தா... ப்ரெண்டுனு சொல்லிட்டு பழகுற.. நீ அவள லவ் பன்ற தான?? அப்புறம் ஏன் இப்படி???" அவளின் கேள்வியே மித்ராவின் மனக்கலக்கத்தை அழகாக சொல்லியது...

"ஐய்யோ... அக்கா நீ இவளோ மக்கா இருப்பனு நான் எதிர்பார்க்கவே இல்ல... மயூ என்னோட உயிர்கா... அவ இல்லாத வாழ்க்கை எனக்கு இனி இல்ல... பட் அதுக்காக இப்பவே அவகிட்ட காதல் வசனம் பேசிட்டுச் சுத்த முடியாது... யூ நோ கா... மயூக்கு இப்ப தேவையானது ஒரு தாயோட அன்பு... அவளுக்கு நான் ஒரு தாயா இருக்கனும்னு ஆச படுறன்கா...

நான் இப்பவே சொல்லிட்டா என்னோட குழந்தைக்காக மயூவ என்னோட லைப்ல ஒரு அங்கமா இணைக்கிற மாதிரி ஆகிடும்... மயூ என் குழந்தைக்கு அம்மாவா இல்லாம இருந்திருந்தாலும் அவ தான் என்னோட சரிபாதியா வந்துருப்பா... இந்த சம்பவம் நடக்காம இருந்திருந்தா நான் அவகிட்ட லவ்வ சொன்ன விதமே வேற மாதிரி இருந்திருக்கும்...

அவள திகட்ட திகட்ட லவ் பண்ணிருப்பன்... பட் நான் அந்த கட்டத்தலாம் தாண்டிட்டன் கா... மயூ கொஞ்ச கொஞ்சமா என்னோட மனசு முழுக்க நிறைஞ்சிட்டா...
ஸோ நான் மயூவ தள்ளி நின்னு காதலிப்பன்.. பக்கத்துல இருந்து தாயா பார்த்துப்பன் சரியா",
என்றான்..

"டேய் தம்பி ரொம்ப சந்தோஷம்டா.. மயூ ரொம்ப லக்கி... ", மித்ரா ஆகாஷை தனியே விட்டு சென்றாள்...

'அவ லக்கி இல்லக்கா.. நான் தான் லக்கி... ', ஆகாஷ் வானத்தை உற்று பார்க்க அங்கும் மயூ தேவதையாய் சிரித்துக் கொண்டிருந்தாள்...




தாய்மை மிளிரும்...💜❤️💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN