தாயுமானவன் 12

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உயிர்களை படைத்த இறைவன் அவளுக்கொரு வரம் கொடுத்தான்....
தெய்வ மகன் ஒருவன் அவளின் நண்பனாவன் என்று...

தெய்வ மகனாய் வந்தவன் அவளின் ஆருயிர் தோழனாய் மாறினான்...
தாய் தந்தையை இழந்தவளுக்கு பக்கத் துணையாய் விளங்கினான்..

அவன் தாயுமானவன்..

ஆகாஷ் மயூவிற்காக கீழ்தளத்தில் காத்திருந்தான்...

மயூ மஞ்சள் நிற அனார்கலி சுடிதாரில் தேவதையாய் மடிப்படிகளில் இறங்கி வந்தாள்...

இப்பொழுதெல்லாம் அவளைக் காணும் பொழுது ஆகாஷ் அவளின் தாய்மையை உணர்ந்தான்...

பிறக்காத அந்த குழந்தையின் மீது மயூ வைத்திருக்கும் பாசம் அவனை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது...

அவன் வாழ்வில் அந்த அசம்பாவிதம் நடந்து தாயை இழக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என அவனின் பிள்ளை மனம் ஏங்கிற்று...

ஒரு தாயின் அன்பின் முன் வளர்ந்த வாலிபனும் சிறு குழந்தைதானே...

தான் இழந்த அன்பை தன் பிள்ளையும் இழந்துவிட கூடாது என்பதில் ஆகாஷ் கவனமாக இருந்தான்...

தன் சிறு சிறு செயல்களில் மயூ மீதிருக்கும் காதலை வெளிப்படுத்தினான்...

அதை அவள் அறியா வண்ணம் நட்பெனும் சித்திரத்தில் மறைத்தான்...

மயூ இப்பொழுதெல்லாம் மித்ரா சாருவைக் காட்டிலும் ஆகாஷிடம் தான் அதிக உரிமையோடு பழகினாள்...

அதை அவள் அறிந்து கொள்ளதான் இல்லை...

காலை தொடங்கி இரவு வரை ஆகாஷ் அவள் வாழ்வில் இன்றியமையாதவனாகி போனான்...

கடந்த கால துன்பத்தை மறந்து மகிழ்ச்சி கடலில் மூழ்கி முத்தெடுக்கும் மயூ சந்தோஷத்திற்கு ஆயுள் சில காலம் தான்...

மயூவை சோக கடலில் தள்ளப் போவது யார்???

ஆகாஷ் அவளுக்குப் பக்க பலமாய் இருப்பானா???

"வாவ் மயூக்கா.. செம்ம அழகா இருக்க போ... ஐ ரியலி லவ் யூ... ", கீழே இறங்கி வந்த மயூவை கட்டியணைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள் சாரு...

தன்னவளுக்கு சாரு எப்படி முத்தமிடலாம் என்று உரிமை போராட்டம் தொடங்க ஆகாஷ் சாருவை முறைத்துப் பார்த்தான்...

(யான் வேணும்னா நீயும் குடுக்க வேண்டிதானா அமுல் பேபி😚😚😚)

அவனை வெறுப்பேற்றுவது போலவே மயூவின் இன்னோர் கன்னத்திலும் முத்தமிட்டவள்...

"எங்கையோ கருகுன வாசம் வருது மயூக்கா.. இங்க ரொம்ப நேரம் நிக்காத அப்புறம் வாமிட் வந்துரும்... உனக்கு வேற மோர்னிங் சீக்னஸ் இருக்கு... ஸோ பார்த்து பத்திரமா போயிட்டுவா..." என்றாள் குறும்பாக...

'உன்ன வந்து பாத்துக்குறன் இரு...' என்று செய்கை செய்தவன்...

"மயூ டைம் ஆச்சி வா போலாம்...", என்று மயூவை துரிதப்படுத்தினான்...

ஆகாஷின் BMW கார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது...

மயூ அவனிடம் வம்பு வளர்த்தபடியே வந்தாள்...

மயூ பேச பேச அவள் அணிந்திருந்த ஜிமிக்கியின் அசைவு ஆகாஷின் மனதைக் கட்டி இழுத்தது...

தன் கவனம் முழுவதையும் சாலையின் மீது பதித்து லாவகமாக வானத்தைச் செலுத்தினான்...

மயூவையே பார்த்துக் கொண்டிருந்தால் எங்கே தன்னையும் மீறி தன் காதல் வெளிபட்டு விடுமோ என அஞ்சினான்...

ஆகாஷின் அலுவலகம் நான்கு மாடி கட்டிடத்தில் கம்பீராமாய் நின்றது. மயூ அதைக் கண்டு ஆகாஷை மெச்சினாள்...

"சூப்பர் ஆகாஷ்... செம்மயா இருக்கு... இங்கயாவது சிரிச்சி பழகுவியா இல்ல ஹிட்லர் லுக்தானா???" கண்சிமிட்டி கேட்டாள்...

மயூவை நோக்கி சிறு புன்னகையை வீசியவன் "பார்க்கதான போர... வா போலாம்...",என்றான்.

ஆகாஷ் கம்பீர நடையோடு அலுவகத்தில் நுழைய மயூ என்றும்போல் இன்றும் அவனை வியந்தவாரே பின்தொடந்தாள்...

(இன்னும் யார மயக்க இந்த கெத்து ஹிட்லர் ஜீ😎😎😎)

ஆகாஷைக் கண்டவுடன் அந்த அலுவலகமே மௌனம் காத்தது.

"குட் மோர்னிங் சார்...", என்று எழுந்த குரலுக்குச் சிறு தலையசைப்போடு
'மிஸ்டர். ஆகாஷ் MD' எனும் அறையில் நுழைந்தான்...

'சரிதான்... இவன் இங்கேயும் ஹிட்லராதான் இருக்கான்... பாவம் இவனோட வெர்கர்ஸ்... ',
புலம்பியவாரே அவனைப் பின் தொடர்ந்தாள்...

அழகிய மங்கையாய் ஆகாஷோடு உரிமையாய் உடன் வரும் மயூவை இருவிழிகள் குரோதத்தோடு நோக்கியது...

ஆகாஷின் அறையைச் சுற்றிலும் அளவெடுத்த மயூ அவனின் கலை நயத்தில் சொக்கித்தான் போனாள்...

ஒவ்வொரு இடத்திலும் அழகிய வேலைப்பாடுகளோடு கூடிய சிற்பங்களும் நலினங்கள் பொருந்திய ஓவியங்களும் கண்ணைப் பறித்தது...

ஆகாஷினுள் இப்படி ஒரு இரசிகன் மறைந்திருக்கிறானா? என வியந்தவள்...
தன் வியப்பினை அவனிடமும் பகிர்ந்து கொண்டாள்...

"ஏய்... ஆகாஷ் சூப்பர் டா... எப்டி ஜீ இப்டி... கலைய இரசிக்க கூட தெரியுமா உனக்கு... சொல்லவே இல்லை...", என்றாள் குறும்பாக கூறி உதடைச் சுழித்தாள்...

ஆகாஷின் பார்வை ஓரிரு நிமிடங்கள் அவள் உதடுச் சுழிப்பை அளவெடுத்து அகன்றது... இதனை உணர்ந்த மயூவின் கன்னங்கள் அவளறியாமலே நாணச் சிவப்பைத் தத்தெடுத்துக் கொள்ள ஆகாஷின் நிலைதான் திண்டாட்டமாய் போனது...

(சின்ன பிள்ளைக இருக்குற இடத்துல ரெண்டு பேரும் ரொமேன்ஸ் பண்ணிட்டு இருக்கிங்களே🙄🙄🙄இது நியாயமா😣😣😣)

ஆகாஷ் மயூவை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க அவள் நான்கடி பின்னே சென்றாள்...

"ஆகாஷ்...", என்று கூச்சலிட்டுக் கொண்டே அந்த அறையில் நுழைந்தாள் இளம் யுவதி ஒருவள்...

பார்த்தவுடன் முகத்தை சுழிக்க வைக்கும் உடை...

அழகைப் பெருக்குவதாக எண்ணி செயற்கை முகப்பூச்சியின் உதவியால் பாழடைந்த அரண்மனையைப் போல் மாறியிருந்த முகம்...

சற்றும் பொருந்தாத உதட்டுச்சாயம் ....

(மொத்ததுல சந்திரமுகி தங்கச்சி இந்திரமுகி மாதிரி இருப்பா போல😝😝😝 அச்சோ அச்சோ தக்காளி மாதிரி ஒரு பொண்ணு வரும்னு பார்த்த🙁🙁🙁 5 ரூபா கிரீம் மாதிரி பொண்ணு வந்துருக்காளே😌😌😌)

ஆகாஷைக் காண வந்தவளின் பார்வை ஒரு நிமிடம் மயூவை உரசிச் சென்றது...

பெண்களின் கவனத்தையே கட்டி இழுக்கும் அளவு வசிகரம் கொண்ட மயூவின் முகம் தாய்மையில் பூரித்து ரோஜா மலராய் காட்சியளித்தது...
மயூவைக் கண்டவளுக்கு மனதில் பகைமைத் தோன்றியது...

'என் ஆகாஷின் அருகே இவள் எப்படி இருக்கலாம்... எனக்கு மட்டுமானவனை இவள் அபகரிக்க வந்துள்ளாளோ... இயற்கையிலே பேரழகியாய் மிளிர்காராளே... அவள் பால் ஆகாஷின் மனது கவர்ந்திழுக்கப்பட்டால்... விட மாட்டன்...', அவள் மனதினுள்ளே தன் வில்லிதனத்திற்கு அடித்தளமிட....

(அடியே சப்ப மூக்கி😶😶😶 உன்னோட ஆகாஷா🤔🤔🤔 கொல விழும் பார்த்துக்கோ👿👿👿 கரப்பான்பூச்சிக்கு கை கால் மொழச்ச மாதிரி இருந்துட்டு😏😏😏 உனக்கு மைன்ட் வோய்ஸ் வேறயா டுபுக்கு 🙃🙃🙃)

"ஹேய்... நிம்மி... வா... வா... சதீஸ் எப்டி இருக்கான்... அந்த குரங்க பார்க்கவே முடில..."

"அண்ணன் மலேசியாக்கு ஒரு பிஸ்னஸ் டீலிங்காக போயிருக்கான் ஆகாஷ்... இன்னும் ஓன் வீக்ல வந்துருவான்... "

சதீஸ் ஆகாஷின் நண்பன் அவனைக் காட்டிலும் நான்கு வயது மூத்தவனாய் இருப்பினும் சரிசமமாய் பழகுவான்... ஆகாஷிற்கு அண்ணனாய் தோழனாய் இருப்பவனும் அவன்தான்...

"ஓ.. ஓகே.. ஓகே.. மகாராணி நீங்க இங்க யான் திடீர்னு வந்துருக்கிங்க... காரியம் இல்லனா வர மாட்டியே நீ...
அப்புறம் கேக்க மறந்துட்டன்... வர வழில நாய் எதாவது தொரத்துனுச்சா உன்ன
", என்றான் பாவமான பாவணையில்...

ஆகாஷ் என்ன கேட்க போகிறான் என புரிந்து கொண்ட மயூ வெடித்துக் கிளம்பிய சிரிப்பை உதட்டைக் கடித்து அடக்க பெரும் பாடு பட்டுபோனாள்...

மயூவைப் பார்த்துக் கண் சிமிட்டியவன்...

"சிரிச்ச கொன்றுவன்", என்று கண்களாலே மிரட்டிவிட்டு
நிம்மியை தீவிரமாக பார்த்தான்...

"நாய்லாம் ஒன்னும் வரலையே... யான் ஆகாஷ்..?", என்றாள் கேள்வியாக

"அது ஒன்னும் இல்ல நிம்மி... நாய் தொரத்த போய்தான் உன்னோட டிரஸ் அங்கங்க கிழிஞ்சி போச்சோனு நெனச்சன்", என்றான் குறும்பாக...

இப்போது மயூ வாய்விட்டே சிரிக்க தொடங்கினாள்...
அவளின் சிரிப்பு சலங்கை ஓசையாய் ஆகாஷைத் தீண்ட மயூவின் அழகை மனதில் நிரப்பிக் கொண்டான்...

சிரிக்கும் மயூவைப் பார்த்து முறைத்தவள்....
"ஆகாஷ்... சிரிப்பே வரல...", என்று சீரினாள்.

"சரிவிடு.. எதுக்கு வந்தன்னு கேட்டனே..."

"அது வந்து... எனக்கொரு வேல வேணும்"

"பார்ரா... உன் அண்ணனே ரெண்டு கம்பனிக்கு ஓனர்... இதுல உனக்கெதுக்கு இந்த விஷ பரிட்ச... சதீஸ் கூடவே மேனேஜ்மென்ட பார்த்துக்க வேண்டிதான??"

"இல்ல புது இடம்னா நல்லா வெர்க்க பழகிக்க முடியும்... ", என்று இழுத்தவள்
'உன்னையும் மயக்கி என் கைக்குள்ள போட்டுக்க முடியும்' என்று நினைத்தாள்...

(அடியே வெளுத்த கத்திரிக்கா உனக்கு கோழி முட்டை அடி கண்டிப்பா கிடைக்கதான் போது😵😵😵 அமுல் பேபி இவள என்ன பண்ணலாம்னு சொல்லு😒😒😒)

"சரி நிம்மி... நான் சதீஸ்கிட்ட கேட்டு சொல்றன்"

"ஹான் ஓகே ஆகாஷ்... இந்த பொண்ணு யாரு..",
என்றாள் மயூவை அளவிட்டப்படி...

"இவங்க பேரு மயூரி... எனக்கு மயூ.. என்னோட ஸ்வீட் ஹாட்",என்றான் குறும்பாக...

(மனசுல உள்ளது எல்லாம் வெளிய வருதா அமூல் பேபி🤓🤓🤓
நீ நடத்துடா செல்லம் நடத்து👻👻👻)


"டேய் லூசு...", என்றாள் மயூ மிரட்டும் தொனியில்.

"ஹா...ஹா...ஹா... கூல் டவுன் பேபி... மயூ என்னோட ஒரே பெஸ்டீ... தடுக்கி விழுந்து என்னோட தோழி ஆனாவ", என்றான் புதிராக..

நிம்மி புரியாமல் முழிக்க... ஆகாஷ் தொடர்ந்தான்...

"அது என்னனா மயூ தடுக்கி விழ போனாளா??? நான் தாங்கி புடிச்சென்னா... மயூ என்ன பார்த்தா.. நான் அவள பார்த்தன் ரெண்டு பேரும் ப்ரென்ட்ஸ் ஆயிட்டோம்", என்றான் கோர்வையாக....

(அமூல் பேபி என்ன சொல்றான்னு ஒன்னுமே புரிலையே... புரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்)


தாய்மை மிளிரும்...💜💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 12
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN