தாயுமானவன் 13

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனவிலே காதல் கொண்டேன்...
நினைவிலே உன்னை என் மனைவியாக கொண்டேன்...

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ....
பெண்ணே உன்னை நான் புரிந்தப்பின் யாதும் நீயே...

உன் தாயுமானவன்...

ஆதியின் கூற்றைக் கேட்டு நிம்மி புரியாமல் முழித்தாள்...

(உனக்கு எதுதான் புரியும் மாங்கா😂😂😂)

ஆகாஷ் தன் போக்கில் பேசிக் கொண்டே போக நிம்மியின் நிலைதான் பரிதாபமாக இருந்தது...

அவளின் திண்டாட்டத்தை உணர்ந்து கொண்டளாக மயூ "ஆகாஷ்...", என்றழைத்தாள்...

என்ன என்பதுபோல் அவன் அவளை நோக்க மயூ நிம்மியைக் கைக்காட்டினாள்...

நிம்மி பலியாடு போல் விழித்துக் கொண்டிருக்க "என்ன நிம்மி புரியலையா???"

"ஒரு மண்ணும் புரியல ஆகாஷ்... நீ எப்போல இருந்து இருந்து இப்டி பேச ஆராம்பிச்ச... உனக்கு பேய் எதாச்சும் புடிசிருச்சா... புரியாத மாதிரியே பேசுற... சும்மா சும்மா சிரிக்குற...", என்று ஆகாஷிடம் பதில் கூறினாலும் கண் என்னமோ மயூவின் மீதுதான் இருந்தது...

(உனக்கு புரிஞ்சா என்னா புரிலனா என்னா😏😏😏 எல்லாம் புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரி🤗🤗🤗 அப்புறம் வெள்ள தக்காளி நீ யான்டி அப்பப்ப மயூவ சைட் அடிக்குற🤔🤔🤔 அவ என்னா உன்னோட லவ்வரா😆😆😆)

"யான் நிம்மி பேய் புடிச்சாதான் இப்டிலாம் இருப்பாங்கலா... காதல் மனசுக்குள்ள வந்தா கூட இப்டிதான் இருப்பாங்க..." ஆகாஷ்

"ஹான்... ஆகாஷ் எதாச்சும் சொன்னியா???",என்றாள் கேள்வியாக..

"இல்லயே ஒன்னும் சொல்லையே...", என்றவன் மயூவோடு எப்படி தோழமையை உருவாக்கினான் என்ற கனவினில் மூழ்கினான்...

மயூ மித்ராவோடு தங்க சம்மதம் கூறி ஒரு சில நாட்கள் கடந்திருந்தது...

ஆகாஷ் மயூவைத் தள்ளி நின்றே கவனித்து வந்தான்...

அவளை நெருங்க எண்ணினால் அவனின் காதல் கண் முன்னே தோன்றி அவனை வதைத்தது...

மயூவுடனே இருக்க வேண்டும் ஆனால் காதலையும் வெளிப்படுத்த கூடாது...
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சந்தர்ப்பம் தன்னாலே அமைந்தது...

மயூவோடு சாரு என்னேரமும் ஒன்றாய் திரிய ஆகாஷ் கடுப்பாகி போனான்...

'என் செல்லத்த ஒழுங்கா சைட் அடிக்க கூட முடில😤😤😤 ஒன்னு இந்த வாயாடி(சாரு) கூட சேர்ந்துட்டுக் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்டுடு இருக்கா😒😒😒 இல்ல மித்து அக்கா கூட சேர்ந்துட்ட அந்த பெருசுக கலாய்ச்சிட்டு இருக்கா😣😣😣 என்னை மட்டும் இவ கண்ணுக்குத் தெரியவே தெரியாது 😥😥😥அத்தானையும் கொஞ்சமா கவனிச்சா நல்லாருக்குமே செல்லம்😔😔😔', ஆகாஷ் தனக்குள்ளே புலம்பி கொண்டான்...

(பார்ரா🙄🙄🙄 மிஸ்டர் ரோமியோ உன்னோட செல்லம் உன்ன கொஞ்சனும்னா நீ அவகிட்ட லவ்வ சொல்லனும் தங்கமே🤑🤑🤑 அதவிட்டுடு மயூ மயூனு பிணாத்திட்டு இருந்தா😒😒😒)

அன்று மயூ தனியே தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள்...
பல வண்ணத்தில் பூத்துக் குளுங்கிய மலர்க்கூட்டத்தின் நடுவே அழகு தேவதையாய் மயூ ஜொலித்தாள் ... ஆகாஷ் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்...

அவளது ஒவ்வொரு அசைவையும் செயலையும் தன் இதயக்கூட்டில் பத்திரமாய் சேமித்து வைத்தான்...

மலர்களிடம் விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென்று தலைச் சுற்றல் ஏற்பட்டு நிலை தடுமாறி விழ போனாள்... இதை கண்டு கொண்ட ஆகாஷ் அவளைத் தன் மீது தாங்கி கொண்டான்..

கீழே விழ போகிறோம் என்ற பயத்தில் மயூ கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்...

ஆகாஷ் கிடைத்த சந்தர்பத்தை நழுவ விடாது மயூவின் அழகை இரசித்துக் கொண்டிருக்க...

ஓரிரு நொடிகள் பொறுமை காத்தவள்.. கீழே விழவில்லை என்பதை உணர்ந்து கொண்டு கண்ணைத் திறக்க.. ஆகாஷ் அவள் முக வடிவை அளந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்...

இருவரின் பார்வையும் தங்களின் இணையைக் கவ்விக் கொள்ள... சத்தமின்றி யுத்தமின்றி அழகே ஒரு காதல் காவியம் நடந்தேறியது...

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருபேன் என்று நானும் சொல்லி வந்தேன்

என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லமா..?

உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே..
மறவேன் என்றும் உன்னையே

நான் பாலைவனத்தில் விதை போல்
நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே

உந்தன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை
இல்லை

உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம்
இல்லை

இதனையும் இனி கிடைக்குமா?


ஆகாஷ் பார்வை மயூவினுள் பல இரசாயின மாற்றத்தைத் தோற்றுவிக்க சூதாரித்துக் கொண்டு அவனைவிட்டு விலகி நின்றாள்...

அவளைக் கண்டு ஆகாஷ் கண்சிமிட்டி சிரிக்க...
மயூ அவனையே இமைக்காது பார்த்தாள்...

என்ன என்பதுபோல் ஆகாஷ் தன் ஒற்றை புருவத்தை தூக்க...

"ஆகாஷ் என்ன கொஞ்சம் கில்லேன்..."

"ஆஆ... வலிக்குது.. அப்ப உண்மைதானா???"

"என்ன உண்மை... என்ன பொய்..."
என்றான் ஆகாஷ் புரியாமல்...

(லூசாப்பா நீ😆😆😆 அவளே ஹிட்லருக்கு என்னாச்சினு ஷாக்ல இருக்கா☺️☺️☺️)

"ஆகாஷ் இது நீதான... "

"மயூ செல்லம் உன்னை இப்போ நான் கீழ தள்ளி விடனுமா என்ன.. ", என்றான் விளையாட்டாக...

"தெய்வமே ஆள விடு... ஸோ ப்ரெண்ட்ஸ்...", என்று மயூ கை நீட்டினாள்...

"ப்ரெண்ட்ஸ்...", என்றவாரு ஆகாஷூம் அவள் கையைப் பற்றி குலுக்க இருவருக்கும் இடையே நட்பின் ஊடே தன்னை ஒழிந்துக் கொள்ளும் ஓர் அழகிய காதல் கதை தொடங்கியது...

இப்படியாக ஆகாஷ் மயூவின் காதல் நல்ல நட்பில் தொடங்கியது...

மயூவிடம் தன் காதலை வெளிப்படுத்தி அவளைத் தனக்குச் சொந்தமானவளாய் மாற்றியிருந்தால் கூட ஆகாஷ் இவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பான என தெரியாது...

ஆனால் மயூவிடம் ஒரு தோழனாய் பழகும் பொழுது ஆகாஷ் உலகையே மறந்தான்...

ஒரு பெண்ணின் நண்பனாய் இருப்பதுதான் எவ்வளவு உன்னதம்... அதிலும் காதலியே தோழியாய் அமைந்துவிட்டால் வாழ்வில் என்றும் வசந்தமே...

ஆகாஷ் சுகமான கனவில் தத்தளித்து கொண்டிருக்க நிம்மியின் குரல் அவனைக் களைத்தது...

(அதான🙄🙄🙄 நீ தான இந்த இடத்துல நந்தி மாதிரி வருவ ஆப்ரிக்கா பப்பூன் குரங்கே🦍🦍🦍அமூல் பேபி எவளோ அழகா கனா காண்றன்👀👀👀 அவனோ போய் டிஸ்தப் பண்றியா பக்கி😡😡😡 உனக்கு நில்லு அழுக்கு மனிஷன ஜோடி சேர்த்து வெக்குறன்😤😤😤)

"ஆகாஷ் முழிச்சிட்டே கனவு காண்றியா... சரி எப்டியோ போ... நான் ஷாப்பிங் போனும் கிளம்புறன்... அண்ணகிட்ட பேசிட்டு சொல்லு... பாய்...", ஆகாஷிடம் குழைவாய் பேசியவள் மயூவை முறைத்துவிட்டுச் சென்றாள்...

நிம்மியை பார்த்து பெருமூச்சை வெளியிட்டவன்... மயூவைப் பார்த்துப் புன்னகைத்தான்...

"மயூ.. அவ என் குளோஸ் ப்ரெண்ட் சதீஸோட ஒரே தங்கச்சி... அப்பா அம்மா இப்போ உயிரோட இல்ல... அதுனால ரொம்ப செல்லமா வளர்த்துட்டான்... எனக்கும் நிம்மி தங்கச்சி மாதிரி தான்... பட் என்ன ரொம்ப வாய் பேசுவா...பேச ஆரம்பிச்சா காதுலேருந்து ரத்தமே வந்துடும்...", என்று சிரித்தவன் மயூவின் முகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா எனப் பார்த்தான்...

நிம்மி வந்தவுடன் மயூவின் முகத்தில் சூழ்ந்திருந்த சஞ்சலம் ஆகாஷ் அவளைத் தங்கை என்றவுடன் மெல்ல விலகுவது போல் இருந்தது...

'வாடி என் ஊட்டி தக்காளி... மாமா மேல அவ்ளோ லவ்வாடி செல்லம்... நீயா என்கிட்ட லவ்வ சொல்லுவியா இல்லையானு தெரிலடி... பட் நீ தான் என்னோட பொண்டாட்டி டி .... உலகத்துல உள்ள எல்லா சந்தோஷத்தையும் உனக்குக் குடுக்கனும்னு ஆசையா இருக்குடி... பட் என்ன பண்ணலாம்... உன்ன கடத்திட்டு போயிரட்டுமா... ஆனா பயமா இருக்கே... உள்ளதும் போச்சினா... இப்ப என்கூட சிரிச்சி பேசுற... உரிமையா நடந்துக்குற... என் பக்கத்துலையே இருக்க... உன்கிட்ட லவ் சொல்லிட்டா உன்ன சீண்டிப்பாக்க முடியாதுடி... உன்ன நான் கொஞ்சம் கொஞ்சமா லவ் பண்ணுவன்னாம்... அத நீ உன்னோட மனசுக்குள்ளையே பொத்தி பொத்தி வெச்சிக்கிவியாம்...
சரியாடி அம்மூக்குட்டி...',
ஆகாஷ் மனதிலையே மயூவோடு சண்டையிட்டுக் கொண்டான்...

அன்றைய நாள் ஆகாஷின் அருகாமையில் மயூவிற்கும் மயூவின் அருகாமையில் ஆகாஷிற்கும் இனிதே கழிந்தது...

இருள் மெல்ல வானத்தைக் கவ்வியது...

நட்சத்திரங்கள் வானில் கண்சிமிட்டி சிரிக்க...

மயூவும் ஆகாஷூம் தோட்டத்துத் தரையில் அமர்ந்து வானத்தை இரசித்துக் கொண்டிருந்தனர்..

மித்ரா இன்னும் மருத்துவமனையிலிருந்து வராத காரணத்தால் இருவர் மட்டும் தனியே இருந்தனர்...

"யான் ஆகாஷ் மித்ரா அக்கா லவ் பண்ணிருக்காங்களா???" என்றாள் மயூ கேள்வியாக...

'அது எப்டி செல்லம் என்னைத் தவற மத்தவங்க எல்லாத்தப் பத்தியும் ரைட்டா கேட்டுற...',

(ஆமா ஆமா😌😌😌 அவ கேட்டா மட்டும் சொல்லிடுவியா😒😒😒 மயூ ஐ லவ் யூனு😍😍😍 இல்ல உன்ன நான் சொல்லத்தான் விட்டுருவனா😂😂😂)

"அக்கா யாரையும் லவ் பண்ணல மயூ.. அப்டி எதாவது இருந்திருந்தா என்கிட்ட சொல்லிருப்பாங்க..."

"இல்ல ஆகாஷ்... மித்துக்கா யாரையோ லவ் பண்ணிருக்காங்க... இப்போ கூட சின்ஸியரா லவ் பண்றாங்கனு சொல்லலாம்... பட் உனக்கு ஏன் இதப்பத்தி ஒன்னும் தெரியல...", என்றாள் கேள்வியாக

(அவனுக்குதான் உன்னைப் பார்த்துட்டா மத்தது எல்லாம் மறந்து போயிருதே😚😚😚 அப்புறம் எங்கேருந்து மித்துவோட லவ்வ பத்தி ஆராய்ச்சி பண்ணுவான்
🤔🤔🤔)


"ஹாங்... அக்கா லவ் பண்றாங்களா... பட் எப்டி... யார...எப்போல இருந்து... ஒன்னும் புரிலையே... நான் அக்கா கூடதானே இருக்கன்... இப்டி எதாவது இருந்தா எனக்கு தெரிஞ்சிருக்கனுமே..." ஆகாஷ் ஒன்றன் பின் ஒன்றாக கேள்விகளை அடுக்கி கொண்டு சென்றான்...

"ஓகே எனக்கொரு டவுட்... அடுத்தவங்க டைரிய சுட்டு படிக்கிற பழக்கம் இருக்காடா...", என்றாள் புதிராக...

மயூவையே ஒரு மார்க்கமாக பார்த்தவன்... "அது அவங்களோட ப்ரைவசி அப்டிலாம் படிக்க கூடாதுடி தப்பு...", என்றான் நல்லப்பிள்ளையாக

"போடா லூசு... அதுல உள்ள கிக் உனக்கு தெரியல... சரி நான் ஒரு ரகசியம் சொல்றன் யாருகிட்டையும் போட்டுக் கொடுக்க கூடாது சரியா...
அது வந்து... நான் மித்து அக்காவோட டைரிய படிச்சன்...",
என்றாள் சிறுபிள்ளை தப்பு செய்துவிட்டு அன்னையிடம் மாட்டிக் கொள்ளும் பாவணையில்

ஆகாஷ் அவளைப் பார்த்து முறைக்க...

"நோ....நோ... நோ கோவம் ஐம் பாவம்... ", என்றவள் அவன் துரத்தும் முன் எழுந்து ஓட... ஆகாஷ் அவளைத் துரத்திக் கொண்டு சென்றான்...

ஆகாஷையே திரும்பி பார்த்துக் கொண்டு ஓடியவள் அவள் முன்னே நின்றிருந்த உருவத்தைக் கவனிக்க தவறினாள்...

அந்த உருவத்தின் மீது மோதி கீழே விழப் போனவளை ஆகாஷ் தாங்கி கொள்ள தன் முன்னே நின்றிருந்த அந்த உருவத்தை உற்று நோக்கினாள்... அந்த உருவம் அவளுள் பயத்தை உண்டுபண்ண ஆகாஷின் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்...

தன் அணைப்பில் இருப்பவளின் உடல் நடுக்கமும் சில்லிட்டு போயிருந்த அவள் கைவிரல்களும் எதிரே நின்றிருந்த அந்த உருவத்தின் மீது கொலைவெறியே உண்டானது...


தாய்மை மிளிரும்...💜💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN