தாயுமானவன் 20

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

நிழலென வந்தாய்...
துணையென நின்றாய்...
மனதிலே நட்சத்திர பூக்களை விதைத்தாய்...
சட்டென்று வாழ்விருந்து மறைந்தாய்...
இன்று மீண்டும் உன்னை கண்டேன்...
இனி நீ என் வாழ்வில் யாரோ...
அவன் தாயுமானவன்...

மாடிக்குச் சென்றவளின் முகத்தில் கள்ள சிரிப்பொன்று உதித்தது...

'லூசு நான் கோவமா இருக்கன்னு நம்பிடுச்சு... ஒத்த லெட்ர படிக்க எப்படிலாம் நடிக்க வேண்டியிருக்கு... ஷபா... இவனுக்குத் தங்கச்சியா இருக்கறது ரொம்ப கஷ்டா சாமி...'
தன்னுள்ளே பேசிக் கொண்டாள் மயூரி...

"ஆமாமா... ரொம்ப கஷ்டம்தான்...", திடீரென்று விக்ரமின் குரல் நக்கலாய் ஒலிக்க மயூ திருதிருவென விழித்தாள்...

(மனசுக்குள்ள பேசறதா நினைச்சி சத்தமா பேசிட்டியாடி செல்லம்உன் அண்ணன் உன்ன சட்னி ஆக்கப்போறான் இரு)

"ஈஈஈஈ... அண்ணா அது வந்து நான் லெட்டர்...", ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் மயூ உளற...

"செய்றது எல்லாம் பூனை வேலை இதுல... இது வேறயா... சரி அந்த லெட்ர குடு..."

"முடியாது போ... நான் படிச்சிட்டுதான் குடுப்பன்... என் கிட்டேருந்து புடுங்கலாம்னு பார்த்த கிழிச்சி போட்றுவன் ஆன்...", என்றாள் தோரணையாக...

"சரிங்க மேடம் படிங்க...", என்றான் சிரிப்புடன்...

"ஹான் அது... அந்த பயம் இருக்கட்டும்...

அன்பே ஆருயிரே உன்னைக் கண்ட நாள் முதல் என்னை நான் இழந்து தவிக்கிறேன்...
ஒரு நிமிட இடைவெளியில் என் கண்ணில் மின்னி மறைந்தவளே உன்னை மீண்டும் எப்போது காண்பேனோ...
நித்தமும் உன் நினைவில்
நான் வாட...
என் இதயத்தைச் சுக்கு நூறாய் உடைத்தவளே நீ என் கரம் சேர்வது எப்போது???

ப்பா... டேய் அண்ணா இது நீ தான் எழுதுனியா இல்ல எங்கேருந்தாவது சுட்டதா..." என்றாள் நம்பாத பாவணையில்..

"நீ என்ன நினைக்குற..." விக்ரம்

"ஹம்.... நீ இந்த மாதிரி எழுதறனா ஒன்னு உனக்கு பையித்தியம் புடிச்சிருக்கனும்...

இல்லனா...

அண்ணா யாரையாவது லவ் பண்றியா...", என்று சந்தோஷத்தில் குதித்தாள் மயூ...

"அடியே கம்முனு இரு... அம்மாக்கு கேட்டுற போது..." என்றான் பதட்டமாக விக்ரம்

(கேட்டா கேட்டு போட்டும் டார்லிங் அவங்களாம் அந்த காலத்துலே லவ் மேரேஜ் தெரியுமா தூசிமா கிட்ட போய் எப்படி லவ் பண்றதுனு கேட்டு தெரிஞ்சிக்கோ சோட்டா பையா)

"எனக்கு அதலாம் தெரியாது... சீக்கிரம் சொல்லு... சொல்லு... சொல்லு... ", என்றாள் குதுகலத்தோடு...

"எனக்கே தெரிலையே..." புதிராக பதில் வந்தது விக்ரமிடமிருந்து...

"என்னது தெரிலையா... ஏன்டா இப்டி டியூப் லைட்டா இருக்க... உருகி உருகி கவிதலாம் எழுதுற... காதலா இல்லையானு தெரிலையா??? என்னை பார்த்தா என்ன லூசு மாதிரியா இருக்கு..." மயூ அவனோடு அடுத்து சண்டைக்கு தயாரானாள்...

"குட்டிமா கொஞ்சம் சும்மா இருடா... அவள ஒரே தடவதான் பார்த்தன்.. ஆனா மனசுல அவ முக அப்டியே பதிஞ்சி போச்சி... அவள பாக்கனும் பேசனும்னு ஆசையா இருக்குடா...", என்றான் மெல்லிய குரலில்..

அவன் குரலில் கொஞ்சமாக சோகம் எட்டி பார்க்க...

"டேய் அண்ணா... யான் பீல் பண்ற... அவங்க உனக்குனு இருந்தா கண்டிப்பா உன்கிட்ட திரும்பி வருவாங்க...

அன்ட் நீ லவ்வுல தாரு மாறா தடுக்கி விழுந்துட்ட... ஸோ புலம்பாம அண்ணிய தேடி கண்டுபிடிக்குற வேலய பாரு... ஓகேவா...ஆல் தி பெஸ்ட் டா அண்ணா...", என்றவள் விக்ரமின் தலையைக் களைத்துவிட்டுச் சென்றாள்...

விக்ரம் மித்ராவின் நினைவோடு தன் நாட்களை கடத்திக் கொண்டிருந்தான்...

அன்று விக்ரமும் அவனது கல்லூரி நண்பர்களும் இரத்த தான முகாம் ஒன்றில் கலந்து கொண்டனர்...

அனைவரும் இரத்த தானம் செய்ய தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள விக்ரம் மட்டும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்...

அப்பொழுது அவன் தோளில் மென்மையாய் ஒரு கை பதிய கேள்வியாய் திரும்பியவன் இனிமையாய் அதிர்ந்தான்...

(ஹீ ஹீ ஹீ உன் கனவு இராட்சசி சாரி சாரி தேவதை வந்துட்டாங்களோ நீ அப்படியே கனவுல மெதப்பியே செல்லம் நில்லு பேபி உனக்கு வெக்குறன் ஆப்பு)

மித்ராவைப் பார்த்ததும் விக்ரமின் பார்வைப் பளிச்சிட்டது...

எங்கெங்கோ தேடி காணாத தேவதை எதிர்பார சமயம் தன் முன்னே வந்ததால் அவன் மனம் துள்ளிக் குதித்தது...

(பார்த்து பார்த்து ஹார்ட் வெளிய குதிச்சி ஓடிற போது மித்ராகிட்ட குடுக்க வேண்டிய ஹாட்ர் அப்புறம் அத வேற தெரு தெருவா தேடி அலைய வேண்டி வந்துரும்)

"ஹலோ சார்... இங்க நின்னுட்டு என்ன பண்றிங்க... பிளட் டோனேட் பண்ண அங்க ரிஜிஸ்தர் செய்யனும்...", என்றாள் மித்ரா...

"ஓஓ... ஓகே மிஸ்... ரொம்ப தேங்க்ஸ்...", என்று தன் வசிகர சிரிப்பை உதிர்த்தவன் தன் நண்பர்களோடு இணைந்து கொண்டான்...

இரத்தம் கொடுத்து முடித்தவனது கண்கள் மித்ராவைத் தேடி அலைந்தது...

மகிழம் மரத்தடியில் யாரோடோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவனது தேடல் முடிவடைந்து காதல் விழித்துக் கொண்டது...

தன் இருபத்திமூன்றாண்டு தவத்தைக் களைக்க வந்த மேனகைதான் இவளோ என எண்ணியவன் சத்தமின்றி அவளை நெருங்கினான்...

மித்ராவை நெருங்கியவனுக்கு அவளிடம் என்ன பேசுவது... எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என தெரியவில்லை...

அதுவரை ஆண்களோடே அதிகம் பழகியதாலா இல்லை எந்தவொறு பெண்ணை இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை என்பதாலா... அவனுக்கே புரியவில்லை...

ஆகாஷிடம் பேசிக்கொண்டிருந்த மித்ரா அழைப்பைத் துண்டித்துத் திரும்பவும் விக்ரம் அவளை நெருங்கவும் சரியாய் இருந்தது...

சத்தமின்றி வந்தவனைக் கண்டு முதலில் திகைத்தாலும்... தன்னைச் சூதாரித்துக் கொண்டு என்ன என்பதாய் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தினாள்...

ஒரு சில நிமிடம் மித்ராவின் முகத்தையையே பார்த்துக் கொண்டிருந்தான்...

'இவன் என்னா என்னையே முழுங்கற மாதிரி பார்க்குறான்...', என்று எண்ணியவள் அவனின் முன் சொடுக்கினாள்...

அந்த ஒலியில் சுயநினைவுக்கு வந்தவன் மித்ராவைப் பார்த்து அசடு வழிந்தான்...

( லவ்வ சொல்லறதுக்கு முன்னாடியே இந்த நிலமையா உனக்குசரிதான் நீ எப்ப லவ்வ சொல்லி அதுக்கு மித்ரா எப்ப ஓகே சொல்லி சப்பா இப்பவே கண்ண கட்டுதே)

மித்ராவிடம் ஏதாவது பேசியாக வேண்டிய நிலையில் இருந்ததால்...

"ஹாய் மிஸ்... ஐ'ம் விக்ரம்... வாட் இஸ் யுவர் நேம்...",என்றான்..

"ஏன் மிஸ்டர் நானும் தமிழ் நீங்களும் தமிழ்... அப்புறம் எதுக்கு நடுவுல இங்கிலிஷ்..." என்றாள் கிண்டலாக...

(ஆரம்பமே சும்ம அதுருதுலஇன்னும் சில பல பல்புகளை நீங்கள் வாங்க என் ஆசிர்வாதங்கள் மக்கு மங்குனி அமைச்சரே)

"ஹீ...ஹீ... ஹீ... சாரிங்க... உங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா...", என்றான் ஆர்வமாக..

இவனின் ஆர்வமும் அவளிடம் பேசும் பொழுது பளிச்சிடும் கண்களும் மித்ராவின் மனதில் அபாய சங்கை ஊத விக்ரமை விட்டு விலகி எண்ணினாள்..

அவன் கேள்விக்கு இவள் பதில் சொல்லாமல் விலகவும் விக்ரமின் கை தன்னிச்சையாக அவள் கையைப் பற்றி இழுக்க மித்ரா விக்ரமின் மீதே மோதி நின்றாள்...

பூக்குவியலாய் பெண்ணவள் அவனைத் தீண்டியதும் விக்ரமிற்கு ஏதேதோ இரசாயண மாற்றம் நிகழ்ந்து உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது... இரசிகனாய் மாறி அந்த தருணத்தை விக்ரம் கண்மூடி இரசிக்க...

மித்ராவின் மனதோ ஏரிமலையாய் புகைந்து கொண்டிருந்தது...
அந்நிய ஆடவன் தன் கரத்தைப் பற்றியதும் வந்த கோபம் விக்ரமின் செயலில் அறுவெறுப்பைத் தத்தெடுத்தது...

கோபத்தின் உச்சியில் இருந்தவள் நிதானத்தை இழந்து விக்ரமின் கன்னத்தில் அறை ஒன்றைப் பரிசாக கொடுத்தாள்...

சிவந்திருந்த அவன் கன்னம் மேலும் சிவந்து போய் மித்ராவின் விரல்தடம் அழகாய் பதிந்தது...

தன் கனவிலிருந்து விடுப்பட்டவனின் முகம் இரசனையிலிருந்து கோபத்துக்கு மாறியது...

அவனது முக பாவணையில் மித்ராவிற்கு உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் தைரியமாய் இருப்பது போலவே காட்டிக் கொண்டாள்...

"முன்னபின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட இப்படிதான் இன்டீசன்டா பிஹேவ் பண்ணுவியா... பொறுக்கி மாதிரி கைய புடிச்சி இழுக்குற...", மித்ரா உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீச விக்ரமின் கோபம் இன்னும் அதிகரித்தது...

அதன் விளைவு விடாது பேசிக் கொண்டிருந்த அவளிதழைச் சிறை செய்தான்...

மித்ராவின் பேச்சு சுத்தமாய் நின்று போய் அவளது தளிருடல் நடுங்க தொடங்கியது...

விக்ரமிடமிருந்து வலுக்கட்டாயமாக தன்னைப் பிரித்தெடுத்தவள் மீண்டும் அவனை அறைய கை ஓங்க...
அதை முன்னமே அனுமானித்தது போல லாவகமாக தடுத்தான்...

மித்ராவை மகிழம் மரத்தோடு சாய்த்தவன் அவள் அப்படியும் இப்படியும் நகரா வண்ணம் அரணாய் தன் கைகளில் சிறைச் செய்தான்...

மித்ராவின் முகம் பேய் அறைந்ததைப் போலானது... விக்ரமைப் பயத்தோடு நோக்கினாள்...

அவளது விழிகள் பட்டாம்பூச்சியாய் படபடக்க பயத்திலும் கோபத்திலும் உதடு துடித்தது...

இதோ வந்துவிடுவேனென வம்பு செய்த கண்ணீரை உதட்டைக் கடித்து அடக்கியவள்... நிதானித்து நிமிர்ந்த பார்வையோடு விக்ரமை நோக்கினாள்...

மீண்டும் மீண்டும் அவளது ஒற்றை விழி வீச்சில் விக்ரமின் மனம் மித்ராவின் பால் சாய்ந்தாலும் இப்போது இளகிவிட்டால் மீண்டும் அவளை தன் வழிக்குக் கொண்டு வருவது கஷ்டமென நினைத்தவன்...

"நீ யாரு... என்னா... எதுவும் எனக்கு முக்கியம் இல்ல... பட் நீ எனக்குதான்... நல்லா ஞாபகம் வெச்சிக்கோ... நீ எங்க போனாலும் உன்னோட நிழலா... உனக்குத் துணையா இந்த விக்ரம் தான் வருவான்... ஆல்வேஸ் ரிமெம்பர் மை லேடி... யூ ஆர் மைன்...",
மிடுக்கான தொனியில் சொன்னவன் மித்ரா சூதாரிக்கும் முன்னமே அவள் கன்னத்தில் முத்தமென்றைப் பதித்து அந்த இடத்தைவிட்டு அகன்றான்...

தாய்மை மிளிரும்...

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN